Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 13 JUL, 2024 | 10:07 AM முல்லைத்தீவு மாவட்டத்தின் அம்பகாமம் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை அமெரிக்க தூதரக அதிகாரிகள் பார்வையிட்டதுடன், வெடிபொருள் அகற்றலில் இருக்கின்ற நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் கிளிநொச்சியில் கலந்துரையாடியுள்ளனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை (12) விஜயம் செய்த அமெரிக்க தூதரக அதிகாரிகள் குழு முன்னதாக முல்லைத்தீவு அம்பகாமம் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பகுதிகளை சென்று பார்வையிட்டு, அதன் நிலைமைகள் தொடர்பில் கிளிநொச்சியில் அமைந்துள்ள டாஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் கலந்துரையாடினர். https://www.virakesari.lk/…

  2. அரசியல்வாதிகளின் பாதுகாப்பும் பொதுமக்களின் தொல்லைகளும் [30 - November - 2007] [Font Size - A - A - A] பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ற பெயரில் பொலிசாரும் முப்படையினரும் மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகளின் விளைவான கெடுபிடிகள் இன்று மக்கள் எதிர்நோக்குகின்ற முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகிவிட்டது. சாதாரணமக்கள் எங்குசென்று முறையிட்டாலும் தீர்வுகாண முடியாததாக இருப்பதே இந்தப் பிரச்சினையின் பிரத்தியேகமான அம்சமாகும். தற்போதைய சூழ்நிலையில் இக்கெடுபிடிகள் மேலும் மேலும் அதிகரிக்குமே தவிர, தணிவதற்கான சாத்தியப்பாடு எதுவுமே கிடையாது. வீதிக்கு வீதி சோதனைச் சாவடிகளில் பொலிஸாரும் படையினரும் மேற்கொள்கின்ற சோதனைகளுக்குப் புறம்பாக, அதிமுக்கிய பிரமுகர்களின், அரசியல்வாதிகளின் வாகனத்தொடர…

    • 0 replies
    • 1.1k views
  3. இலங்கை அரசு – தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்றுக் கொண்டிருந்த இறுதி யுத்தத்தை அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் செய்மதி மூலம் பார்த்து இருக்கின்றன. வன்னியில் பாதுகாப்பு வலயத்துக்குள் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர் என அந்நாட்களில் குற்றச்சாட்டுக்கள் பெரிதும் முன்வைக்கப்பட்டன. இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அமெரிக்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உட்பட இலங்கை அரசுத் தரப்பினரிடம் விளக்கம் கேட்டு இருந்தது. அப்போது செய்மதிப் புகைப்படங்களை இக்குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களாக அமெரிக்கா இலங்கைத் தரப்பிடம் கொடுத்து இருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மே 05 ஆம் திகதி இலங்கைக்கான தூதுவர்களுடன் சந்திப்பு மேற்கொண்டு மதிய போசன விருந்தும் வழங்கி இருந்தார். …

  4. வரலாறாய் வாழும் தமிழச்செல்வன். அன்பு உறவுகளே, அண்மையில் வீரச்சாவைத் தழுவவிக்கொண்ட பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களைப்பற்றி "விடுதலைப்புலிகள்" பத்திரிக்்கையில் வெளியான கட்டுரையின் இணைப்பை இங்கே தந்துள்ளேன். http://www.viduthalaipulikal.com/file/docs...7/12/138-08.pdf http://www.viduthalaipulikal.com/file/docs...7/12/138-09.pdf http://www.viduthalaipulikal.com/file/docs...7/12/138-10.pdf http://www.viduthalaipulikal.com/file/docs...7/12/138-11.pdf http://www.viduthalaipulikal.com/file/docs...7/12/138-07.pdf நன்றி மறவன்

  5. தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனை ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பான யுனிசெஃப்பின் புதிய பிரதிநிதி பிலிப்பி நிமாலி இன்று சந்தித்து கலந்துரையாடினார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 805 views
  6. இந்திய இராணுவம் இலங்கைக்கு வருகை! மித்ரசக்தி கூட்டு இராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்தியப் படையினர் நேற்று நாட்டை வந்தடைந்துள்ளனர். இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையே பரஸ்பர நட்புறவை மென்மேலும் விருத்தி செய்யும் முக்கிய படிமுறையாக, வருடந்தோறும் ஏற்பாடு செய்யப்படுகின்ற இந்த மித்ரசக்தி போர்ப் பயிற்சியானது, எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிவரை மாதுரு ஓயா பிரதேசத்தில் நடைபெறவுள்ளன. இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கும் இந்திய இராணுவ வீரர்களே நேற்று மத்தள விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்தனர். இந்திய இராணுவ படையினரை காலாட்படை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வஜிர வெலகெதர, மித்ர சக்தி இராணுவ பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் தினேஷ் உடுகம, இலங்கை…

  7. ரஷ்ய, இந்திய, இத்தாலிய உயர்மட்ட இராணுவக் குழு கொழும்பில் ஒரே நேரத்தில் முக்கிய சந்திப்புக்கள் ரஷ்ய, இந்திய மற்றும் இத்தாலிய உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது இலங்கையில் முக்கிய சந்திப்புகளை நடத்தி வருகின்றனர். மூன்று முக்கிய நாடுகளின் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட படை அதிகாரிகள் ஒரே நேரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்தமை இதுவே முதல் தடவையாகும். இலங்கைப் படையினருக்கான போர்த்தளபாட மற்றும் இராணுவ உதவிகளை வழங்குவது தொடர்பாகவே மேற்படி மூன்று நாட்டுக் குழுவினரும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரையும் முப்படைத் தளபதிகளையும் சந்தித்துப் பேசி வருகின்றனர். ரஷ்ய இராணுவ பிரதம தலைமை அதிகாரி கேணல் ஜெனரல் விளாடிமிர் மொல்பென்ஸ் கோய் தலைமையில…

  8. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் மீள்குடியேற்றங்கள் தவறாக நடைபெறுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர். தேவையற்ற பிரச்சனைகளைக் கதைத்துக் கொண்டு மக்களைத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறது. பொலிஸ் அதிகாரங்கள் இடமதிகாரங்கள் என்றெல்லாம் கூறிக்கொண்டிருக்கிறது என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நடைபெற்ற மீழ்குடியேற்ற நிழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே விநாயகமூர்த்தி முரளிதரன் இதனைக்குறிப்பிட்டுள்ளார். வவுனியா, புதுக்குடியிருப்பு கொம்பாவில் பகுதியில் அமைக்கப்பட்ட 206 வீடு களை மக்களிடம் கையளிப்பதற்காக இந்த நிகழ்வு நடைபெற்றது. செட்டிக்குளம் மற்றும் கதிர்காமர் இடைத்தங்கள் முகாம்களிலிருந்த 206 குடும்பங்களுக்கு இந்த வீடுகள் வழ…

  9. சுமந்திரன் உள்ளிட்டவா்களுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பாா்கள் – சுரேஸ்! சுமந்திரன், சாணக்கியன், சிவஞானம் போன்ற சிலா் தனிப்பட்ட காரணங்களுக்காகவே பொது வேட்பாளரை எதிர்ப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடா்பாக அவர் மேலும் தெரிக்கையில், தமிழ்ப் பொது வேட்பாளருக்கு தமிழரசுக்கட்சியில் மிகப் பெரும்பாலானவர்கள் ஆதரவாக இருக்கின்றாரகள். சுமந்திரன், சாணக்கியன், சிவஞானம் போன்ற ஒரு சிலரைத் தவிர கட்சியின் ஏனைய மேல் மட்டங்களும் சரி, ஏனைய கட்சியின் கீழ் மட்ட தொண்டர்களும் சரி பொத…

  10. ஒக்டோபர் முதல் நவீன கடவுச்சீட்டு – மக்களிடம் நெருக்கடி நிலைக்கு மன்னிப்பு கோரிய ஜனாதிபதி. கடவுச்சீட்டு பெறும் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள நெரிசலை விரைவில் தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். அத்துடன், கடவுச்சீட்டு தொடர்பில் மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு அரசாங்கம் என்ற ரீதியில் மக்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு விரைவில் நாம் மாறாவிட்டால், 2035 முதல் 2040 வரையா…

  11. வடமாகாணம் எதேச்சாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது. என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் இன்று காலை 9 மணிக்கு சேதனப் பசளைப் பிரயோகத்தினை ஊக்குவிப்பதற்கான நிகழ்ச்சி இடம்பெற்றது. அந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தென்னைப் பயிர்ச்செய்கை சபையானது தெங்குப் பயிர்ச் செய்கையை ஊக்குவிக்க பல திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தி வருகின்றது. இன்றைய இந்த நிகழ்வும் அப்பேர்ப்பட்டதே. அதாவது தெங்குப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுபவர்களிடையே சேதனப் பசளைப் பிரயோகத்தினை பிரபல்யப்படுத்தி ஊக்குவிக்கவும், மக்களிடையே சேதனப் பசள…

  12. 1915 இல் தூக்கிலிடப்பட்டவருக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு! கடந்த 1915 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் திகதி தூக்கிலிடப்பட்ட தியுனுகே எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸுக்கு மரணத்திற்குப் பின் ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1915 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதி, அப்போதைய இலங்கை ஆளுநரால் நியமிக்கப்பட்ட இராணுவ நீதிமன்றத்தின் நியாயமற்ற விசாரணையைத் தொடர்ந்து,எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரங்களுக்கு அமைவாக இந்த ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த தீர்மானத்தை அறிவிக்கும் வர்த்தமானி அறி…

  13. சிறீலங்கா அரசாங்க சமாதான செயலகத்தின் செயலர் தனபால பதவியை ராஜஸனாமா செய்துள்ளார். சிறீலங்கா அரசாங்கம்போர்நிறுத்த ஒப்பந்த நடைமுறையில் இருந்து விலகியதையடுத்து சிறீலங்கா ஜனாதிபதியின் செயலரும் சிறீலங்கா அரசாங்க சமாதான செயலகத்தின் செயலருமான ஜயந்த தனபால அவர்கள் பதவிவிலகியுள்ளதாக தெரியவருகிறது. ஜெயந்த தனபால அவர்கள் சிறீலங்கா அரசாங்கம் இராணுவத்தீர்வை நோக்கி செயற்படுவதையிட்டு அதிருப்தியடைந்துள்ளதாகவும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் ஏ.பி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. யூன் மாதம் 2004 ம் ஆண்டு சந்திரிக்கா குமாரதுங்கா அவர்களினால் சமாதான முயற்சியினை மேற்கொள்வதற்காக ஐநாவில் பணியாற்றிக் கொண்டிருந்த இவர் அழைக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே. இ…

    • 0 replies
    • 759 views
  14. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஏற்பட்ட பொதுமக்கள் உயிர்ச் சேதவிபரங்கள் தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட வேண்டுமென சர்வதேச அனர்த்தக்குழுவலியுறுத்தியுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் காணாமல் போன மற்றும் உயிரிழந்தவர்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளது. யுத்தம் நிறைவடைந்து மூன்றாண்டுகள் கடக்க உள்ள நிலையிலும் சரியானபுள்ளி விபரத் தரவுகள் வெளியிடப்படவில்லை என தெரிவித்துள்ளது. உயிர்ச் சேத விபரங்கள் தொடர்பில் சரியான தகவல்கள் வெளியிடப்படவேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் உறுப்பு நாடுகள், இலங்கையை வலிறுத்தப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புக்கள் உயிர்ச் சேதவிபரங்கள் தொடர்பில் …

  15. விரைவில் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் : எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் அரசியல் கைதிகளை காலத்தை இழுத்தடிக்காது விரைவில் விடுதலை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச அளவிலும் பேசப்பட்டு வருகின்றது. ஜெனீவா மனித உரிமைகள் ஆணையாளரின் கவனமும் இந்த விடயம் குறித்து திரும்பியிருக்கும் நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களின் விவகாரத்தில் அரசாங்கம் ஏன் காலதாமதம் செய்கிறது? புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வ…

    • 9 replies
    • 1.1k views
  16. ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம்! இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க இன்று (23) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அநுரகுமார திஸாநாயக்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி ஏக்கநாயக்க மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர். நேற்று முன்தினம் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப் பெற்று சஜித் பிரேமதாசவை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. h…

  17. தாய்மண்ணின் விடிவிற்காக இன்னுயிர்களை ஈந்த போராளிகளின் விபரங்கள் [sunday January 13 2008 11:57:15 PM GMT] [யாழ் வாணன்] தாய்மண்ணின் விடிவிற்காக இன்னுயிர்களை ஈந்த போராளிகளின் விபரங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்டுள்ளன. மணலாறு சிலோன் தியேட்டர் களமுனையில், நேற்று சிறீலங்கா படைகளுடன் நிகழ்ந்த நேரடி மோதல்களின் பொழுது, மேஜர் இளமகள் என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த ஏரம்பு சிவகலை என்ற போராளி களப்பலியாகியுள்ளார். மன்னார் பெரியபண்டிவிரிச்சான் களமுனையில் கடந்த 11ஆம் நாளன்று இடம்பெற்ற மோதல்களின் பொழுது, லெப்ரினன்ட் அணியிசை என்றழைக்கப்படும், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த கோபாலகிருஸ்ணன் சுரேதா, லெப்ரினன்ட் ஈழமலர் என்றழைக்கப்படும், ய…

    • 5 replies
    • 1.6k views
  18. மன்னார் ஆயர் சுகயீனம் அடைந்திருப்பது எமக்கு மிகப்பெரிய இழப்பு: அரசியல் கைதிகளின் ஏக்கம் மன்னார் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை சுகயீனம் அடைந்திருப்பது எமக்கு மிகப்பெரிய இழப்பு என அரசியல் கைதிகள் தெரிவித்ததாக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசை தெரிவித்துள்ளார். பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் நேற்றைய தினம் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், மன்னார் மாவட்ட குருமுதல்வர் விக்டோர் சோசை உள்ளிட்டவர்கள் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். இதன்போது கருத்து தெரிவித்த அவர், நாம் இவர்களை சந்தித்…

  19. கந்தப்பளை கோர்ட்லோஜ் முனுசாமி ஆலயம் முன்னால் புத்த விகாரை அமைப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது என நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான எழுத்துமூல கோரிக்கையினை தான் முன்வைத்ததாக நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் உப தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார். இதேவேளை, திருகோணமலை கன்னியா வெந்நீருற்று பிள்ளையார் கோவில் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் தொல்பொருள் திணைக்களம் எந்தவித அகழ்வு பணிகளையும் முன்னெடுக்க முடியாது என தெரிவித்து இன்று திருகோணமலை மேல் நீதிமன்றால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாரியம்மன் ஆலயத்தின் நம்பிக்கை பொறுப்பாளரான கோகிலரமணி அம்மையாரால்…

    • 0 replies
    • 427 views
  20. 'கலப்பு நீதிமன்ற' பரிந்துரையை கூட்டமைப்பு வரவேற்கிறது போர்க் காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள், இறுதிப் போரின்போது நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் என்பவை தொடர்பில் விசாரணை செய்ய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ள கலப்பு நீதிமன்ற விசாரணையை நாம் வரவேற்கிறோம். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தனது விசாரணை அறிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்றுமுன்தினம் கையளித்தது. இது தொடர்பில் தமிழ்த் தேசிய…

  21. தந்தையின் வழியிலேயே தானும் பயணிக்கவுள்ளதாக சஜித் பிரேமதாச கூறி வருகின்றார். அவ்வாறானால் அவருக்கு அதோ கதிதான். தயவு செய்து அவரது தந்தையின் வழியில் செல்ல வேண்டாம் என்று அந்த அரசியல் இளைஞனுக்கு கூறிக்கொள்ள விரும்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான கூட்டணியை தோல்வியடைய செய்யவும் தற்போது அரசியல் சதிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இச் சதிகளை அனைவரும் ஒன்றினைந்து தோற்கடித்தால் உத்தேச தேர்தல்களில் அமோக வெற்றிப் பெறலாம். ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தை ஏற்படுத்த 2015 ஆம் ஆண்டு சர்வதேச நாடுகள் பாரிய ஒத்துழைப்பினை வழங்கியது…

    • 0 replies
    • 399 views
  22. 07 Oct, 2024 | 06:21 PM நாடாளுமன்ற தேர்தலில் ஆறு கட்சிகள் போட்டியிடமுடியாது என தெரிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக தேர்தலில் போட்டியிட முடியாத அரசியல் கட்சிகளின் விபரங்களை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஈழவர் ஜனநாயக முன்னணி ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு ஐக்கிய இலங்கை பொதுஜன கட்சி ஐக்கிய லங்கா மகா சபை லங்கா ஜனதா கட்சி இலங்கை முற்போக்கு முன்னணி உட்பட ஆறு கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடியாது என தேர்தல் ஆணைக்குழு வர்த்…

  23. வணக்கம் நாதம்செய்திகள் : சனல்-4 தொலைக்காட்சியின் புதிய ஆவணப்பட நேரஞ்சல்..... தொடர்ந்து ஒளிபரப்பில்...... http://naathamnews.com/?p=4425

    • 4 replies
    • 1.5k views
  24. நீண்டு கொண்டே போகும் இனவாதிகளின் கரங்கள் ஜ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான தீர்மானத்துக்கு எதிராகப் பெரும்பான்மையின மக்களை அணி திரட்டுகின்ற செயற்பாடுகள் தெற்கில் வலுப்பெற்று வருகின்றன. இதன் பின்னணியில் மகிந்த அணியினர் செயற்பட்டு வருகின்றமை தெளிவாகத் தெரிகின்றது. "புதியதொரு சிங்கள தேசத்தை உருவாக்குவோம்'' என்ற தொனிப்பொருளில் பரப்புரை நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. போர்க்குற்றங்கள் தமிழர்களுக்கு எதிராகவே நிகழ்த்தப்பட்டுள்ளதால் அவை தொடர்பான நீதியான விசாரணைகள் இடம்பெறுவதை இனவாதிகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. மேலும் நீதியானதும், நேர்மையானதுமான விசாரணைகள் இடம்பெறுமாயின் முன்னாள் ஆட்சியாளர்களும், படையினரும் குற்றவாளிகளென …

  25. அரசியலில் இருந்து ஓய்வு பெறும் கெஹலிய? முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறத் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தனது எதிர்கால அரசியல் பயணம் குறித்து ஆதரவாளர்களுக்கு அறிவிப்பதற்காக கண்டியில் நேற்று (13) நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு எதிரான வழக்கில், நீதிமன்றத்தின் மூலம் நீதி கிடைக்கும் என தான் உறுதியாக நம்புவதாகவும், நிரபராதியாக அரசியலுக்குத் திரும்புவேன் எனவும் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1403969

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.