நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
கிறிஸ்துமஸ் ஃபுரூட் கேக் கேக் என்று வரும் போது அதில் எத்தனை வெரைட்டிகள் இருந்தாலும், ஃபுரூட் கேட் தான் எப்போதுமே சிறந்தது. அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஃபுரூட் கேக்கிற்கு பழங்களை ரம் மற்றும் பிராந்தியில் 1 மாதத்திற்கு முன்பு ஊற வைத்து செய்தால், அதன் சுவையே தனி. அதற்கு நேரம் இல்லாவிட்டால், குறைந்தது 1 வாரத்திற்காவது ஊற வைத்து செய்யுங்கள். அதிலும் இந்த கேக்கை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு செய்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும். சரி, இப்போது அந்த ஃபுரூட் கேக்கை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: ரம் மற்றும் பிராந்தியில் ஊற வைத்த பழங்கள் - 3 கப் கேரமலுக்கு... சர்க்கரை - 1 கப் தண்ணீர் - 1 கப் கேக்கிற்கு.. மைதா - 2 1/2 கப…
-
- 4 replies
- 809 views
-
-
உள்ளி ரசம் அல்லது (இந்தியமக்கள் கூறும் பூண்டு ரசம்) கொலஸ்ட்ராலைக் குறக்குமுங்க ஆகவே இது நல்லமுங்க. தேவையானவை: -உள்ளி- 6 பீஸுகள் அல்லது பாகங்கள் -புளி- ஒரு எலுமிச்சை அளவு சைசு எடுத்துக்கொள்ல்ளுங்கள் -மிளகு-நற்சீரகம் ஒரு டீஸ்பூன் -உப்பு- தேவையான அளவு - மஞ்சள் பொடி- 2 தேக்கரண்டி -கடுகு- 1/2 டீஸ்பூன் -கொத்தமல்லி, கறிவேப்பில்லை- கொஞ்சம் - சிறிதளவு நெய் - புளியினை 2 டம்ளர் கொதிதண்ணீரில் இட்டு கரைத்துக் கொள்ளவும். - உப்பு, மஞ்சள் கலந்து தூள் போடவும். -மிளகு, சீரகம்,பூண்டு, 4 பீஸ் உள்ளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி முதலியவற்றை நன்கு இடித்துஅரைத்துக்கொள்ளவும். -மீதமுள்ள 2 பீஸ் உள்ளியை நசுக்கி 1/2 ஸ்பூன் நெய்யில் பிரட்டி எடுத்து புளி கரைத்த தண்ணீரில…
-
- 8 replies
- 3k views
-
-
ஆந்திரா ஸ்டைல் இறால் ப்ரை கடல் உணவுகள் அனைத்திலுமே ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் இருக்கிறது. எனவே சிக்கன், மட்டனை விட, கடல் உணவுகள் மிகவும் ஆரோக்கியமானவை. அதிலும் இறால் உடலுக்கு வலிமையைத் தரக்கூடியது. அத்தகைய இறாலை பலரும் மசாலா செய்து தான் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அதனைக் கொண்டு ஆந்திரா ஸ்டைலில் இறால் ப்ரை செய்து சாப்பிடலாம். இந்த ஆந்திரா ஸ்டைல் இறால் ப்ரை அட்டகாசமான சுவையில் இருக்கும். சரி, இப்போது அந்த ஆந்திரா ஸ்டைல் இறால் ப்ரையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: இறால் - 500 கிராம் வெங்காயம் - 2 (நறுக்கியது) பூண்டு - 3 பற்கள் இஞ்சி - 1 இன்ச் பச்சை மிளகாய் - 3 மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/…
-
- 0 replies
- 646 views
-
-
-
- 0 replies
- 719 views
-
-
சிக்கன், மஷ்ரூம் இரண்டும் சேர்த்து செய்யப்படும் சூப் மிகவும் சுவையாக இருக்கும். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் - 200 கிராம் மஷ்ரூம் - 50 கிராம் இஞ்சி - சிறிய துண்டு சிவப்பு மிளகாய் - 1 வெங்காயத்தாள் - 2 வினிகர் - 1/2 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன் சோளமாவு - 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் - 1/2 கப் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப சிக்கன் வேக வைத்த நீர் - 5 கப் செய்முறை : * சிக்கனை நன்றாக கழுவிய பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்து எலும்பில்லாமல் உதிர்த்துக் கொள்ளவும…
-
- 0 replies
- 473 views
-
-
https://youtu.be/Z2VEZPX2O0k
-
- 10 replies
- 1.1k views
-
-
வெஜிடபிள் ப்ரைடு ரைஸ் சுவையான, எளிதான வெஜிடபிள் ப்ரைடு ரைஸ் செய்வதற்கான செய்முறை குறிப்பு. தேவையான பொருட்கள் வேக வைத்து குளிர வைத்த சாதம் – 4 கப் பூண்டு பொடியாக நறுக்கியது – 1 பல் வெங்காயத்தாள் பொடியாக நறுக்கியது – 2 பொடியாக நறுக்கிய குடமிளகாய் – கையளவு பொடியாக நறுக்கிய காய்கறிகள் – கேரட், முட்டைக்கோஸ், பீன்ஸ், பட்டாணி – 1 கப் மிளகுத்தூள் – தேவையான அளவு வினிகர் – 3/4 மேசைக்கரண்டி உப்பு – தேவையான அளவு நல்லெண்ணெய் / ஆலிவ் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி செய்முறை சாதத்தை வேக வைத்து நன்கு ஆற வைத்துக் கொள்ளவும். காய்கறிகளை 2 நிமிடங்கள் மட்டும் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து பொன்னிறமாகு…
-
- 0 replies
- 3.8k views
-
-
வாங்க இண்டைக்கு நாம உடம்புக்கு ரொம்ப நல்ல, சத்தான வாழைக்காய் வைத்து ஒரு வறை, ஒரு பிரட்டல் கறி, மற்றும் இரு வகை பொரியல் எல்லாம் எப்படி இலகுவாவும் சுவையாவும் செய்யிற எண்டு பாப்பம். நீங்களும் இத மாறி செய்து பார்த்து எப்படி வந்த எண்டு சொல்லுங்க என.
-
- 3 replies
- 854 views
-
-
உணவு, உடல்நலம், சமையல்: புரத உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் என்னவாகும்? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு காலத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் பெண்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த உயர் அளவு புரதம் கொண்ட உணவுப் பழக்கங்கள் இப்போது பொதுவாக மாறிவிட்டன. பேலியோ, அட்கின்ஸ் போன்ற உணவு முறைகளில் எடையைக் குறைப்பதற்காக அதிக அளவு மீன், இறைச்சி, முட்டை, கொட்டை வகைகள், வெண்ணெய் ஆகியவை பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால் நினைத்த அளவுக்கு புரதம் சாப்பிடலாமா, எவ்வளவு புரதம் சாப்பிடுவது பாதுகாப்பானது? அதிக புரதம் சாப்பிட்டால் என்னவாகும் போன்ற பல கேள்விகள் எழுகின்றன. உடல் எடை பராமரிப்பிற்கு உணவில் 20…
-
- 0 replies
- 336 views
- 1 follower
-
-
புதினா மல்லி இறால் குழம்பு என்னென்ன தேவை? இறால் - 1/4 கிலோ (மீடியம் சைஸ்) பல்லாரி - 2 பூண்டு - 5 பல் பச்சை மிளகாய் - 2 புதினா - 1 சிறிய கட்டு கொத்தமல்லி - 1/2 கட்டு இஞ்சி - சிறிதளவு சீரகத்தூள் - அரை ஸ்பூன் மல்லித்தூள் - அரை ஸ்பூன் தேங்காய் பால் - 100 மி.லி. எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன் எப்படிச் செய்வது? முதலில் இறாலை நன்கு கழுவ வேண்டும். இத்துடன் உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து தனியாக வைக்கவும். அப்புறம் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகத்தூள், மல்லித்தூள், இஞ்சி, பூண்டு மற்றும் பொடியாக நறுக்கிய ஒரு பல்லாரி வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கவும். வாணலியில் 3 ஸ்பூன் எண்ணெய் வி…
-
- 1 reply
- 1k views
-
-
பூந்தி லட்டு கடலை மாவு - 1 1/2 கப் சீனி - ஒரு கப் பேக்கிங் பவுடர் - 1/4 தேக்கரண்டி நெய் - ஒரு மேசைக்கரண்டி முந்திரிப் பருப்பு - 10 ஏலக்காய் - 6 கிஸ்மிஸ் - 10 மஞ்சள் வண்ணப் பொடி - ஒரு சிட்டிகை தண்ணீர் - 1/2 கப் எண்ணெய் - அரை லிட்டர் மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு அடிக்கனமான பாத்திரத்தில் சீனியைக் கொட்டி அரை டம்ளர் தண்ணீர் விட்டு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்ச வேண்டும். கடலை மாவில் மஞ்சள் வண்ணப் பொடி, பேக்கிங் பவுடர், தண்ணீர் சேர்த்து விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சாதாரண கண் கரண்டியை வாணலியில் ந…
-
- 2 replies
- 4.1k views
-
-
-
- 3 replies
- 1.1k views
-
-
பாகற்காய் தொக்கு என்னென்ன தேவை? பாகற்காய் - ¼ கிலோ (1 பெரிய கப்), விருப்பமான எண்ணெய் - 2-3 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், கடுகு, வெந்தயத்தூள் - ½ டீஸ்பூன், புளி - ஒரு எலுமிச்சை அளவு, வறுத்து பொடித்த சீரகத்தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ½ டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, வெல்லம் - சிறிது. எப்படிச் செய்வது? பாகற்காயை சுத்தம் செய்து வட்டவட்டமாக நறுக்கி மஞ்சள்தூள் போட்டு கலந்து ஒரு நாள் முழுக்க காய விடவும். உலர்ந்ததும் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, இத்துடன் காய்ந்த பாகற்காயைப் போட்டு வதக்கவும். அது பாதி வதங்கியதும் உப்பு சேர்க்கவும். மீண்டும் வதக்கவும். புளியை கரைத்து விழுதாக எடுத்து இத்த…
-
- 2 replies
- 1.5k views
-
-
மட்டன் கட்லெட் செய்வது இவ்வளவு ஈசியா? #WeekEndRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பல வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான 'மட்டன் கட்லெட்' அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி. தேவையானவை: கொத்துக்கறி (அ) எலும்பு இல்லாத மட்டன் - கால் கிலோ உருளைக்கிழங்கு - 100 கிராம் பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - ஒன்று மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன் இஞ்சிப் - பூண்…
-
- 0 replies
- 656 views
-
-
-
-
லவ் கேக் தேவையான பொருட்கள் ரவை - 500 கிராம் சீனி - 1 கிலோ பட்டர் – 250 கிராம் முட்டை – 20 முட்டைகள் (10 முட்டைகளில் வெள்ளை கரு மட்டும்) கஜு – 600கிராம்ரோஸ் எசன்ஸ் – 2 தேக்கரண்டி வெனிலா – 2 தேக்கரண்டி பிளம்ஸ் - 200 கிராம் ஆமன்ட் எசன்ஸ் – 2 தேக்கரண்டி தேன் – ஒரு வயின் கிளாஸ் அளவு ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி கருவப்பட்டை தூள் – 2 தேக்கரண்டி கிராம்பு தூள் – சிறு துளி செய்முறை. ரவை மற்றும் பட்டரை ஒன்றாக கலக்கவு…
-
- 3 replies
- 1.8k views
-
-
தட்டை (அ) எள்ளடை தேவையானப் பொருள்கள்: புழுங்கல் அரிசி_2 கப்புகள் பொட்டுக்கடலை_1/2 கப் கடலைப் பருப்பு_1 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய்_6(காரத்திற்கேற்ப) பூண்டு_2 பற்கள் பெருங்காயம்_சிறிது உப்பு_தேவையான அளவு எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு செய்முறை: புழுங்கல் அரிசியை தண்ணீரில் நனைத்து ஊற வை.நன்றாக ஊறிய பிறகு கழுவிக் களைந்து கிரைண்டரில் போட்டு அரைக்கவும்.அரைக்கும் போதே அதனுடன் பூண்டு,காய்ந்த மிளகாய் சேர்த்து மைய அரைத்தெடு.மாவு மிகவும் கெட்டியாக இருக்க வேண்டும்.மாவு கெட்டியாக இருந்தால்தான் எண்ணெய்க் குடிக்காமல் இருக்கும்.அதே சமயம் மழமழவென அரைக்க வேண்டும்.அப்பொழுதுதான் எள்ளடை மொறுமொறுப்பாக இருக்கும்.இல்லை எனில் கடினம…
-
- 4 replies
- 3.3k views
-
-
மிகவும் புதிதான ஓர் உணவு இது. இணையத்தில் அடிக்கடி எண்ணெய்கத்தரிக்காய் என பலர் பேச கேட்டு, என் கண்ணில் கிடைத்த ஒரு செய்முறையை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். கவனிக்கவும் "கொல்கிறேன்" அல்ல.. தேவையானவை: கத்தரிக்காய் 250 கிராம் புளி கரைசல் 2 மே.க எண்ணெய் 4 மே.க மஞ்சள் தூள் - 1 தே.க வற்றல் மிளகாய் 5 கடலை பருப்பு 1 தே.க துவரம் பருப்பு 1 தே.க உளுத்தம் பருப்பு 1 தே.க பெருங்காயம் 1/2 தே.க உப்பு தேவைக்கேற்ப செய்முறை: 1. முதலில் தூளை செய்ய வேண்டும். ஒரு சட்டியை சூடாக்கி அதில் பருப்பு வகை, வற்றல் மிளகாயையும், பெருங்காயம், உப்பையும் சேர்த்து நன்றாக வறுத்தெடுத்து மாவாக அரைத்து கொள்ளுங்கள். 2. கத்தரிக்காயை சுத்தம் செய்து உங்கள் ஆட்காட்டி விரல…
-
- 14 replies
- 5.7k views
-
-
பயனுள்ள சமையல் குறிப்புகள்! 1. வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு இவைகளை சமைக்கும்போது இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு தாளித்தால், மிகுந்த மணத்துடன் இருக்கும். 2. சர்க்கரை பொங்கலின் சுவை மேலும் பிரமாதமாக இருக்க கொஞ்சம் மில்க்மெய்ட் சேர்த்தால் அற்புதமான சுவையை சுவைக்கலாம். 3. இட்லி கெட்டியாக இருந்தால் நாலு பச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் ஒரு நிமிடம் ஓட விட்டு மாவில் கலந்து வார்த்துப்பாருங்கள். இட்லி பூ மாதிரி இருக்கும். 4. உருளைக்கிழங்கு பொரிக்கும் முன்பு சிறிதளவு பயத்தம் மாவை தூவுங்கள். பொரியல் மொறு மொறுப்பாக, சுவை அசத்தலாக இருக்கும். 5. முந்திரி பருப்பை எறும்பு அழிக்காமல் இருக்க சிறிதளவு பச்ச…
-
- 1 reply
- 1k views
-
-
இங்கு எந்தவொரு இந்திய உணவகத்திற்கு சென்றாலும் எப்போதும் கிடைக்க கூடியது பாலக் பன்னீர். பன்னீரும், ஸ்பினச் கீரையும் சேர்த்து செய்திருப்பார்கள். சின்ன வயதில் எனக்கு பாலக் பன்னீரை கண்ணிலும் காட்டக் கூடாது. அதற்கு காரணம் பக்கத்து வீட்டு கிழவி தான். என் பெரியண்ணனும், அவரின் பேரனும் நண்பர்கள். ஆக அடிக்கடி கிழவியின் சமையலை சாப்பிட வேண்டிய கட்டாயம் இருந்தது. பச்சை களியில் பன்னீரை பார்த்தாலே எனக்கு பிடிக்காது. வளரும் பிள்ளைக்கு தேவை என சாப்பிட வைத்து வைத்து பின்னாளில் பலக் பன்னீர் பழகிப்போனது. அம்மம்மா, அப்பாச்சி என யாரும் கூட இல்லாததால், கிழவி மேல் அன்பு அதிகம் தான். கிழவி இப்போ இல்லை. நினைவு வரும் போதெல்லாம் பாலக் பன்னீர் நிச்சயம் செய்வேன். பொதுவாக கீரையும், பன்னீரும் சேர்ப்பார்…
-
- 9 replies
- 4.3k views
-
-
பேபி கார்ன் வெஜிடேபிள் நூடுல்ஸ் மாலையில் குழந்தைகளுக்கு பிடித்தவாறு ஏதேனும் சமைத்துக் கொடுக்க நினைத்தால், பேபி கார்ன் வெஜிடேபிள் நூடுல்ஸ் செய்து கொடுங்கள். இது நிச்சயம் குழந்தைகளுக்கு ஓர் ஆரோக்கியமான ரெசிபியாக இருக்கும். மேலும் இது அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். சரி, இப்போது பேபி கார்ன் வெஜிடேபிள் நூடுல்ஸை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: நூடுல்ஸ் - 1 பாக்கெட் பேபி கார்ன் - 1/2 கப் (ஓரளவு நீளமாக வெட்டியது) கேரட் மற்றும் முட்டைக்கோஸ் - 1 கப் (நறுக்கியது) குடைமிளகாய் - 1/4 கப் (நறுக்கியது) பூண்டு - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது) வெள்ளை வினிகர் - 1/2 டீஸ்பூன் சோயா சாஸ் - 1/2 டீ…
-
- 3 replies
- 812 views
-
-
இலைகளை காயவிட்டிருக்கு, செய்தபின் சுவையை அறியத்தருகின்றேன் - வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு நல்ல உணவு 👌👌
-
- 10 replies
- 1.6k views
-
-
சென்னையில் தெருவோர உணவை சுவைக்கும் வெளிநாட்டவர்
-
- 6 replies
- 1.1k views
-
-
பிரியாணி சைட்டிஷ் மட்டன் கறி தேவையானவை: மட்டன் - 500 கிராம் கொத்தமல்லித்தழை - கால் கப் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு மசாலா அரைக்க: பெரிய வெங்காயம் - 3 (தோல் உரித்து, பெரிய துண்டுகளாக நறுக்கியது) தக்காளி - 2 (பெரிய துண்டுகளாக நறுக்கியது) இஞ்சி - 2 இஞ்ச் அளவுக்கு (தோல் சீவியது) பூண்டு - 7 பல் (தோல் உரித்தது) கொத்தமல்லித்தழை - கால் கப் சோம்பு - ஒரு டீஸ்பூன் பட்டை - 3 சிறிய துண்டுகள் கிராம்பு - 3 ஏலக்காய் - 3 மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் - 2 சிட்டிகை தாளிக்க: கிராம்பு - 2 பட்டை - 2 சிறு துண்டுகள் பச்சை மிளகாய் - 2 (நீளமாகக் கீறியது) செய்முறை: மட்டனை நன்றாகக் கழுவி வைக்கவும். எலும…
-
- 10 replies
- 1.4k views
- 1 follower
-