நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
இந்த வகை சிக்கன் கோயமுத்தூர் பகுதியில் மிகவும் பிரபலம். அனைத்து ஓட்டல்களிலும் கிடைக்கும். அதிகம் மசாலா இல்லாத உணவு. தேவையான பொருட்கள் சிக்கன் 500 கிராம் நல்லெண்ணை 3 மேஜைக்கரண்டி கடுகு 1/2 தேக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது 2 மேஜைக்கரண்டி கறிவேப்பிலை 2 கொத்து சிவப்பு காய்ந்த சீனி மிளகாய் 15 வெங்காயம் 2 பெரியது கொத்தமல்லி இலை 1 கைப்பிடி மிளகாய் தூள் 2 மேஜைக்கரண்டி செய்முறை 1. சிக்கனை மிகவும் சிறிய துண்டுகளாக வெட்டி வாங்கி கொள்ளவும். 2. சிக்கனை நன்றாக கழுவி வைக்கவும். 3. வடசட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும், பின்னர் வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். 4. பிறகெ…
-
- 8 replies
- 4.5k views
-
-
உள்ளி ரசம் அல்லது (இந்தியமக்கள் கூறும் பூண்டு ரசம்) கொலஸ்ட்ராலைக் குறக்குமுங்க ஆகவே இது நல்லமுங்க. தேவையானவை: -உள்ளி- 6 பீஸுகள் அல்லது பாகங்கள் -புளி- ஒரு எலுமிச்சை அளவு சைசு எடுத்துக்கொள்ல்ளுங்கள் -மிளகு-நற்சீரகம் ஒரு டீஸ்பூன் -உப்பு- தேவையான அளவு - மஞ்சள் பொடி- 2 தேக்கரண்டி -கடுகு- 1/2 டீஸ்பூன் -கொத்தமல்லி, கறிவேப்பில்லை- கொஞ்சம் - சிறிதளவு நெய் - புளியினை 2 டம்ளர் கொதிதண்ணீரில் இட்டு கரைத்துக் கொள்ளவும். - உப்பு, மஞ்சள் கலந்து தூள் போடவும். -மிளகு, சீரகம்,பூண்டு, 4 பீஸ் உள்ளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி முதலியவற்றை நன்கு இடித்துஅரைத்துக்கொள்ளவும். -மீதமுள்ள 2 பீஸ் உள்ளியை நசுக்கி 1/2 ஸ்பூன் நெய்யில் பிரட்டி எடுத்து புளி கரைத்த தண்ணீரில…
-
- 8 replies
- 3k views
-
-
என்னென்ன தேவை? சின்ன வெங்காயம் - 1 கப், தக்காளி - 1, பூண்டு - 2 பல், காய்ந்த மிளகாய் - 6 முதல் 8, புளி - 1 சிறு துண்டு, உப்பு - தேவைக்கேற்ப. தாளிக்க... கடுகு, உளுந்து - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன். எப்படிச் செய்வது? வெங்காயம் முதல் உப்பு வரையிலான அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். தாளித்து, அதை சட்னியின் மேல் கொட்டவும். தாளிப்பின் மேல் சட்னியை விட்டுக் கொதிக்க விடக்கூடாது. http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=1546&Cat=502
-
- 8 replies
- 4.1k views
-
-
யாழ்ப்பாணத்து மீன் குழம்பு யாழ்ப்பாணத்தில் உள்ள அசைவ உணவுப் பிரியர்கள் வீடுகளில் பொதுவாக புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் கட்டாயமாக அசைவ உணவு சமைப்பார்கள்.ஆனாலும் பொதுவாக தாங்கள் வணங்கும் தெய்வங்களைப் பொறுத்தும், அத்தெய்வங்களின் திருவிழாக் காலங்களைப் பொறுத்தும் அவர்களின் உணவு முறையில் மாற்றம் உண்டாகும். மீன் குழம்புக்குத் தேவையான பொருட்கள் வெட்டிக் கழுவிய மீன் துண்டுகள் – 500 கிராம் உரித்து, கழுவி, வெட்டிய சிறிய வெங்காயம் – 100 கிராம் கழுவி, வெட்டிய பச்சை மிளகாய் – 4 யாழ்ப்பாணத்துத் தூள் – காரத்துக்குத் தேவையான அளவு உப்பு – தேவையான அளவு பழப்புளிக் கரைசல் – 1 கப் தேங்காய்ப்பால் – முதற்பால் 1 கப் – 2 ம் 3ம் பால் ஒ…
-
- 8 replies
- 2.2k views
-
-
இப்போ என்னோட சமையல் வரலாறை [வல்லாரைன்னு எழுதிட்டேன்] எடுத்து கொண்டால் இன மொழி சாதி மத வேறுபாடு அற்று செய்முறைகள் அமைந்திருக்கும். அதில் குறிப்பாக கடலுணவை எடுத்து கொண்டால், எந்த நாட்டு செய்முறை என்றாலும் சமைப்பதுண்டு. பார்க்க நன்றாக இருந்து, சுவையும் நல்லாயிருக்கும் என காதுவழி கதைகள் வந்தால் சமைப்பதுண்டு. ஆனால் மீனை/நண்டை/இறாலை வெட்டுவதோ, சுத்தம் பண்ணுவதோ என் வேலையில்லை. அதுக்கு ஒரு காரணம் இருக்கு......ஒரு சின்ன ப்ளாஸ்பக் டொய்ங்க்க்க்க்க்க்க்க்க்க்
-
- 8 replies
- 3.9k views
-
-
சீலா மீன் வடை தேவையான பொருட்கள்: சீலா மீன் - 600 கிராம் ( சீலா மீன் கிடைக்காத போது முள் இல்லாத மீன் எதையும் தேர்வு செய்து கொள்ளவும்) உளுந்து - 300 கிராம் பெரிய வெங்காயம் - 100 கிராம் முட்டை - 3 எண்ணம் மிளகாய் - 25 கிராம் மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி பூண்டு - 8 பல் மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு இஞ்சி - சிறிது மல்லித்தழை - தேவையான அளவு நல்லெண்ணெய் - தேவையான அளவு செய்முறை: 1. மீனை ஆவியில் வேகவைத்து முள்ளை அகற்றி உதிர்த்து மசித்து வைத்துக் கொள்ளவும். 2. இந்த மீனுடன் நறுக்கி வைத்த பெரிய வெங்காயம், மிளகாய், பூண்டு, மல்லித்தழை, இஞ்சி ஆகியவற்றைச் சேர்க்கவும். 3. இதில் முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு, மிளக…
-
- 8 replies
- 1.5k views
-
-
பிறிங்ஜோல் பாய் ( brinjal palya or Egg plant palya ) என்னவேணும்: சின்னக் கத்தரிக்காய் கால் கிலோ. பெரிய வெங்காயம் சிவப்பு ( பம்பாய் ) 1 அல்லது சின்ன வெங்காயம் 4 . உள்ளி 3 பல்லு . வினிகர் 2 மேசைக்கரண்டி. சீனி அரைத் தேக்கரண்டி . தனி மிளகாய்த் தூள் அல்லது அரைநொருவல் மிளகாய்த் தூள் 2 மேசைக் கறண்டி. எண்ணை ( தேவையான அளவு ). உப்பு ( தேவையான அளவு ). மஞ்சள் தூள் ( சிறிதளவு ) . பச்சை மிளகாய் 4 கூட்டல்: கத்தரிக்காயை தண்ணியிலை கழுவி அரைவாசியாய் வெட்டி நீளப்பாட்டுக்கு வெட்டுங்கோ . தாச்சி சட்டியிலை பொரிச்சு அள்ளுங்கோ . வெங்காயம் ,பச்சை மிளகாய் , உள்ளி எல்லாவற்றையும் நீளப்பாப்பாட்டுக்கு வெட்டுங்கோ . பொரிச்ச கத்தரிக்காயினுள் வெட்டியதையும் உப்பு , தூள் , மஞ…
-
- 8 replies
- 1.5k views
-
-
கணவாயை.... சுத்தப் படுத்தி, வெட்டுவது எப்படி?
-
- 8 replies
- 1.9k views
-
-
நவதானிய தோசை தேவையானவை: பாசிப்பயறு - கால் கப், கருப்பு உளுத்தம்பருப்பு - கால் கப், கொண்டைக்கடலை - கால் கப், பச்சரிசி - கால் கப், துவரம்பருப்பு - கால் கப், கொள்ளு - கால் கப், சோயா - கால் கப், வெள்ளை சோளம் - கால் கப், எள்ளு - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 3, காய்ந்த மிளகாய் - 6, இஞ்சி - ஒரு துண்டு, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி - சிறிதளவு. செய்முறை: எல்லா தானியங்களையும் ஒன்றாக போட்டு நன்றாகக் களைந்து சுமார் 5 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய பிறகு தானியங்கள், தேங்காய்…
-
- 8 replies
- 3.5k views
-
-
-
-
வணக்கம், ஒஸ்திரேலியாவில் குளிர்காலம் என்பது உலகறிந்த செய்தி. அதனால் வரும் துன்பங்கள், அனுபவிப்பவர்கள் மட்டுமே அறிந்த செய்தி. பின்ன என்ன?, காலையில் எழுந்து வேலைக்கு போவதே பெரிய கடினமான வேலை, இதில் நேரத்திற்கு சமைப்பதெங்கே, சாப்பிடுவதெங்கே! ஆயினும் சாப்பிடாமல் வேலைக்கு சென்று, அம்மாவிடம் பொய் சொல்ல தெரியாமல் உண்மையை உளறி, பேச்சு வாங்குவதற்கு, எதையாவது சில நிமிடத்தில் சமைத்து உண்பது எவ்வளவோ மேல்!! பாண்(ரொட்டி) இல்லாத இடம் உலகில் உண்டா?! அதனால் பாணை வைத்து ஒரு காரமான சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: பாண் துண்டு 2 வெங்காயம் 1/4 பச்சை மிளகாய் 1/2 மிளகு தூள் 1/4 தேக்கரண்டி வெண்ணெய்/நெய்/மாஜரின் சிறிதளவு செய்முறை…
-
- 8 replies
- 1.9k views
-
-
ஈழத்தில் மிக பிரபல்யமான காலை உணவு என்று இதை சொல்லலாமா? பெயர் கூட ஊருக்கு ஊர் மாறி இருக்கலாம்.. ஆரம்பத்தில் நான் இந்த பதார்த்தத்தை அப்பப்பா வீட்டில் சாப்பிட்டு இருக்கிறேன். ஒரு தடவை வரணி சென்ற போது, பனாட்டுடன் சாப்பிடுவதை கண்டேன். சிலர் சுட்ட கருவாடுடனும் சாப்பிடுவார்களாம். அடுத்து ஊறுகாய், வற்றல் மிளகாயுடனும் சாப்பிடுவதுண்டு. இதை சமைப்பது மிக மிக இலகு. சோறு/சாதம் சமைக்க தெரிந்தவர்களுக்கு, இது ஒரு பெரிய விடயமே அல்ல. செய்முறையை பார்க்க: http://www.yarl.com/weblog/suvaiaruvi/2006...st_27.html#more
-
- 8 replies
- 3.7k views
-
-
ஈழத்து கேபாப் கொத்து'' தேவையான பொருட்கள்! கோழிச்சதை500கிராம் தக்காளி 1 வெங்காயம்2 குடமிளகாய்2 முட்டை 3 உப்பு -தேவையான அளவு எண்ணை தேவையான அளவு மிளகாய்தூள் தேவையன அளவு மஞ்சள் கொஞ்சம் கறிப்பவுடர் கொஞ்சம் சீனி கொஞ்சம் 300கிராம் மாவில் ரொட்டி செய்யவும் "ரொட்டியை பெரிதாக செய்யவும்" செய்முறை எண்ணையை சட்டியில் ஊற்றி சுட்ட பின் கோழியை போட்டு வதக்கவும். பின் மரக்கறிகளை சேர்த்து வதக்கவும் கொஞ்ச தண்ணி சேர்க்கவும் உப்பு மஞ்சள் சீனி, தூள்களை சேர்கவும்.நன்றாக வெந்தபின் 1முட்டையை சேர்க்கவும் சட்டியை இறக்கவும் பின் சுட்ட ரொட்டியில் ஒரு பக்கத்துக்கு முட்டை பூசி திரும்ப சூடாக்கவும் பின் கோழிக் கறியை முட்டை பூசிய ரொட்டி பக்கம் தேவை…
-
- 8 replies
- 3.7k views
-
-
கத்தரிக்காய் டிக்கா தேவையான பொருட்கள் கத்தரிக்காய் - 4 எண்ணெய் - 2 டீஸ்பூன் தண்ணீர் - 1/2 கப் நெல்லிக்காய் பவுடர் - 1 தேக்கரண்டி மிளகுத்தூள் - 2 டீஸ்பூன் கரம் மசால– - 1/2 டீஸ்பூன் வெங்காய - 1 உப்பு தேவையான அளவு செய்முறை கத்தரிக்காயைக் காம்பை வெட்டாமல் அடிப்புறத்தில் லேசாக நான்காகப் பிளந்து, எண்ணெயில் பிரட்டி கொஞ்சமாய் தண்ணீர் சேர்த்து மூடி அவனில் 5 நிமிடங்கள் வேக விடவும். வெங்காயம், உப்பு, நெல்லிக்காய் பவுடர், மிளகு, கரம் மசாலாவைக் கலந்து கத்தரிக்காய்க்குள் ஸ்டஃப் செய்து, அவனில் 3 நிமிடங்கள் வைக்கவும். பிறகு 2 நிமிடங்கள் விட்டு, பாத்திரத்திலுள்ள சுவையான கத்தரிக்காய் டிக்காவை சாம்பார் அல்லது ரசம் சாதத்திற்கு மே…
-
- 8 replies
- 2.1k views
-
-
தேவையான பொருட்கள் : மட்டன் கலவை: மட்டன் – 400 கிராம் தயிர் – 1 டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள் – ஒரு டேபிள்ஸ்பூன் மல்லி தூள் – ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன் உப்பு – 1/2 டீஸ்பூன் * மேற்கூறிய அனைத்தையம் ஒன்றாக கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். பாசுமதி அரிசி – 2 கப் பாசுமதி அரிசியை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து, அலசி பிறகு வடிகட்டவும். நெய் – 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் – 6 டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1 நீளவாக்கில் நறுக்கிய தக்காளி – 1 இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள் – 1 டேபிள்ஸ்பூன் மல்லி தூள் – 1 டேபிள்ஸ்பூன் கரம் மசாலா – 1 டீஸ்பூன் தயிர் – 1 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி …
-
- 8 replies
- 3.5k views
-
-
-
- 8 replies
- 7.4k views
-
-
தேவையானப் பொருட்கள் அரிசி - 2 கப் கத்திரிக்காய் - கால் கிலோ பெரிய வெங்காயம் - 4 தக்காளி - கால் கிலோ பச்சை மிளகாய் - 5 தயிர் - 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன் தேங்காய்பால் - 1/2 கப் சோம்பு - 1/2 ஸ்பூன் பட்டை - 1 கிராம்பு - 1 மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன மல்லித்தூள் - 3 ஸ்பூன கடலைப்பருப்பு - 50 கிராம முந்திரி - 10 கிராம் எண்ணெய் – தேவையான அளவு நெய் - 50 கிராம் கறிவேப்பிலை - 1 கொத்து உப்பு - தேவையான அளவு செய்முறை: அரிசியை சிறிது நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து அத்தனுடன் இஞ்சி பூண்டு விழுத…
-
- 8 replies
- 3.6k views
-
-
காரசாரமான காளான் உருளைக்கிழங்கு ஃபிரை அசைவ உணவுகளைப் போன்றே சுவையைக் கொடுக்கும் காளானுக்கும் நிறைய பிரியர்கள் உள்ளனர். இன்று காளான், உருளைக்கிழங்கை பயன்படுத்தி பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: காளான் - 2 கப் உருளைக்கிழங்கு - 2 வெங்காயம் - 1 கப் கிராம்பு - 2 பூண்டு - 2 எண்ணெய் - தேவைக்கு மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: * காளானை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். * உ…
-
- 8 replies
- 947 views
-
-
மீன் தலை கறி என்னென்ன தேவை? மீன் தலை - 4 நல்லெண்ணை - 5 டீஸ்பூன் கடுகு - 1 தேக்கரண்டி வெந்தயம் - 1/4 தேக்கரண்டி கறிவேப்பில்லை - தேவையான அளவு சாம்பார் வெங்காயம் - 10 இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி தக்காளி - 1 மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி மல்லி தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு தேங்காய் - 1/2 கப், புளி - தேவையான அளவு எப்படிச் செய்வது? முதலில் சாம்பார் வெங்காயம் மற்றும் தக்காளியை வெட்டவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் வெந்தயம் சேர்க்க பின் அதில் கறிவேப்பிலை, சாம்பார் வெங்காயம் சேர்த்து நன்கு வ…
-
- 8 replies
- 2.8k views
-
-
-
அவல் லட்டு செய்யும்முறை தேவையான பொருட்கள் அவல் - 1 கப் தேங்காய் துருவல் - 1/4 கப் சக்கரை -1 கப் ஏலப்பொடி -1 சிட்டிகை அவலை சுத்தம் செய்து ரவைபோல் உடைக்கவும் .இதனுடன் சக்கரை சேர்த்து அரைக்கவும் .பின்பு தேங்காய் துருவல் , ஏலப்பொடி சேர்த்து மெதுவாக அரைத்து எடுக்கவும் .சட்டியில் சிறிது நெய் விட்டு சூடாகியதும் இந்த கலவையை அதில் கொட்டி கிளறி பின் உருண்டை பிடிக்கவும . அவல் லட்டு தயார் .
-
- 8 replies
- 3.4k views
-
-
காரைக்குடி மட்டன் நெய் ரோஸ்ட் காரைக்குடி மட்டன் நெய் ரோஸ்ட் சூடான சோற்றில் போட்டு சாப்பிடவும், இட்லி, சப்பாத்தி போன்றவற்றுக்கு தொட்டுக்கொள்ளவும் மிக மிக சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள் : மட்டன் - 1 கிலோ நெய் - 100 கிராம் வரமிளகாய் - 10 மல்லி - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி சோம்பு - 1 தேக்கரண்டி மிளகு - 2 தேக்கரண்டி முந்திரி பருப்புகள் - 15 பூண்டு இஞ்சி பேஸ்ட் - 1 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் பட்டை - இரண்டு விரல் அளவு கிராம்பு - 4 …
-
- 8 replies
- 917 views
-
-
எல்லாருக்கும் வணக்கம்! 🙏 எனக்கு ஒரு உதவி வேணும். இரண்டு கிழமையாய் நல்லநாள் பெருநாளுகள் வந்துபோனது எல்லாருக்கும் தெரியும் தானே.சரசுவதி பூசை அது இதெண்டு....... இப்ப பிரச்சனை என்னவெண்டால் வீட்டிலை எக்கசக்கமான வாழைப்பழங்கள் மிஞ்சிப்போச்சுது.அரைவாசிக்குமேலை கறுக்க வெளிக்கிட்டுது.கனக்க சாப்பிடவும் எல்லாமல் கிடக்கு...குப்பையிலை கொட்டவும் மனமில்லை.அதாலை உங்களிட்டை இந்த வாழைப்பழங்களை என்ன செய்யலாம் எண்டு ஏதாவது ஐடியா இருந்தால் சொல்லுங்கோ. வாய்ப்பன் எனக்கு கண்ணிலையும் காட்டக்கூடாது.வேறை ஏதும் பலகாரங்கள் சாப்பாட்டு செய்முறைகள் தெரிஞ்சால் சொல்லுங்கோ.
-
- 8 replies
- 1.6k views
-
-
வேர்கடலை சட்னி வேர்க்கடலை சட்னியை விரைவாகவும் ருசியாகவும் செய்து இட்லி, தோசை போன்ற அனைத்து டிபன் வகைகளுடனும் சேர்த்து சாப்பிடலாம்.. தேவையான பொருட்கள்: வேர்க்கடலை - 100 கிராம் (வறுத்து தோல் உரித்தது) தேங்காய் - 4 பத்தைகள் காய்ந்தமிளகாய் - 4 எண்கள் உப்பு - தேவைக்கேற்ப புளி - பட்டாணி அளவு தாளிக்க - கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் - 3 டீஸ்பூன் செய்முறை: ஒரு கடாய் வைத்து அதில் சில சொட்டு எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய்களைப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காயை பல்பல்லாக நறுக்கி மிக்சி ஜாரில் போடவும். அத்துடன் வேர்க்கடலை, வறுத்த மிளகாய், உப்பு, புளி அனைத்தை…
-
- 8 replies
- 8.2k views
-