நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
தேவையான பொருட்கள்: கேரட் – 1 குடைமிளகாய் – 1 வெங்காயம் – 1 வெங்காயத்தாள் -1 பிடி அஜினோமோட்டோ – 1 டீஸ்பூன் வெள்ளை மிளகுத் தூள் -1 டீஸ்பூன் நெய் அல்லது எண்ணெய் – 3 டீஸ்பூன் பாசுமதி அரிசி – 200 கிராம் உப்பு – தேவையான அளவு செய்முறை: காய்கறிகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பாத்திரத்தில், எண்ணெய் விட்டு, காய்கறிகள், வெங்காயம், அஜினோமோட்டோ, வெள்ளை மிளகுத்தூள், உப்பு கலந்து மூடி, அவனில் 3 நிமிடங்கள் ஹையில் வைக்கவும். காய்கறிகள் வெந்ததும் தனியே எடுத்து வைத்துக் கொண்டு, அதே பாத்திரத்தில் சுத்தம் செய்த பாசுமதி அரிசியைப் போட்டு, 300 மி.லி. தண்ணீரை ஊற்றி மூடி, 5 நிமிடங்கள் ஹையில் வைக்கவும். சாதம் வெந்ததும், வெந்த காய்கறிகளை சாதத்தில் கலந்த…
-
- 3 replies
- 1.8k views
-
-
நெத்திலி மீன் தொக்கு பலருக்கும் மீனை எப்படி சமைத்து சாப்பிடுவதென்று தெரியாது. அப்படியே தெரிந்தாலும் சுவையாக சமைக்க தெரியாது. அதிலும் குட்டியாக இருக்கும் நெத்திலி மீனை பலரும் குழம்பு தான் செய்து சுவைத்திருப்பார்கள். ஆனால் அதனை தொக்கு செய்தால், இன்னும் சுவையாக இருக்கும் என்பது தெரியாது. உங்களுக்கு நெத்திலி மீன் தொக்கு எப்படி செய்வதென்று தெரியாவிட்டால் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு நெத்திலி மீன் தொக்கின் செய்முறை தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து இந்த விடுமுறையன்று செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். \ தேவையான பொருட்கள்: நெத்திலி மீன் - 300 கிராம் எண்ணெய் - 1/4 கப் + 1/4 கப் வெந்தயம் - 1 டீஸ்பூன் பூண்டு - 2 பற்கள…
-
- 10 replies
- 1.8k views
-
-
ஞாபக சக்தியை அதிகரிக்கும் ஒரு கீரை தான் வல்லாரை கீரை. இந்த கீரையை குழந்தைகளுக்கு கொடுத்தால், அவர்களின் ஞாபக சக்தியானது அதிகரிப்பதோடு, உடலும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். சில குழந்தைகள் கீரைகளை சாப்பிட மறுப்பார்கள். அத்தகைய குழந்தைகளுக்கு கீரையை சட்னி போன்று செய்து கொடுத்தால், நிச்சயம் சாப்பிடுவார்கள். இங்கு வல்லாரைக் கீரையைக் கொண்டு எப்படி சட்னி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அதனை குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். தேவையான பொருட்கள்: வல்லாரைக் கீரை - 1 கட்டு (சுத்தம் செய்து, நீரில் அலசியது) வெங்காயம் - 1 (நறுக்கியது) தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது) வர மிளகாய் - 3 பூண்டு - 5 பற்கள் கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்…
-
- 2 replies
- 1.8k views
-
-
கேழ்வரகு மிச்சர் (தினம் ஒரு சிறுதானியம்-16) இன்றைய குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் வசியப்படுத்திவிட்டது நொறுக்குத் தீனி. உணவைக் காட்டிலும் நொறுக்குத் தீனியை அதிகம் திண்பதில் ஆர்வம் காட்டுவது ஆரோக்கியத்துக்கே வேட்டு வைக்கக்கூடும். கண்ட எண்ணெயில் செய்து விற்பனைக்கு வரும் கடைகளில் வாங்கி சாப்பிடுவதைக் காட்டிலும், உடலுக்கு நன்மையை தரக்கூடிய நம் பாரம்பரிய உணவுகளான கேழ்வரகு, சோளம், தினை, கம்பு என சிறுதானியத்தில் செய்யும் நொறுக்குத் தீனியை வீட்டிலேயே செய்து சாப்பிட்டால்... சுவைக்கு சுவை... சத்துக்கும் சத்து! பலன்கள் கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் என அனைத்து சத்துக்களும் இருப்பதால் உடலுக்கு …
-
- 0 replies
- 1.8k views
-
-
சுவையான வெஜிபிரியாணி செய்யும் முறை (கானொளியில்) http://youtu.be/OhEcjC4eI0w
-
- 6 replies
- 1.8k views
-
-
உருளைக்கிழங்கு ஜிலேபி தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு 1/2 கிலோ தயிர் 1 கப் ஆரோரூட் பவுடர் 50 கிராம் எலுமிச்சம்பழம் 1 சிறிது நெய் 1/2 கிலோ சர்க்கரை 1/4 கிலோ குங்குமம்பூ 1 சிட்டிகை சதுரமான வெள்ளைத் துணி செய்முறை : 1. உருளைக்கிழங்கை வேக வைத்து, மேல் தோலை உரித்து ஒரு பாத்திரத்தில் போடவும். 2. அத்துடன் ஆரோரூட் பவுடர், தயிர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ள வேண்டும். 3. ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சர்க்கரையை அதில் கொட்டி அடுப்பில் வைக்கவும். 4. சர்க்கரை கரைந்து, பாகாகக் கொதித்து வரும் 5. பாகு இருகி வரும்போது குங்குமம்பூவை சிறிது தண்ணீரில் கரைத்து, அதில் ஊற்றி இறக்கவும்…
-
- 0 replies
- 1.8k views
-
-
இந்த இணைப்பில் வேறும் பல உணவு வகைகளின் செய்முறைகள் இருக்கின்றன. https://www.youtube.com/playlist?list=PLMFLgBNDQhNCN1duIaIcLNMzHeGZyKUWp
-
- 2 replies
- 1.8k views
-
-
மீல் மேக்கர் பக்கோடா தேவையான பொருள்கள் : மீல் மேக்கர் - 20 கடலைப் பருப்பு - ஒரு கிண்ணம் வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 2 தேங்காய்த் துருவல் - ஒரு தேக்கரண்டி மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி பிரெட் - 3 எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி கொத்துமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு செய்முறை : மீல் மேக்கரை கொதி நீரில் போட்டு, ஐந்…
-
- 0 replies
- 1.8k views
-
-
சிவானந்தா ஆச்சிரம ஆரோக்கிய மான சாப்பாட்டு முறைகள். சிவானந்தா சைவச்சாப்பாட்டுக் கடை ஆக்கங்கள் கைகளில் உண்டு ஒவ்வொருநாளும் தொடர்ச்சியாக உங்களுக்கு தந்து கொண்டு இருப்பேன். தற்போது தமிழில் அதனை மொழிபெயர்த்துக்கொண்டு உள்ளேன். மீண்டும் நாளை வருக. நன்றிகள்.
-
- 0 replies
- 1.8k views
-
-
உருளைக்கிழங்கு பொரியல் தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு: 300 கிராம் சாம்பார் பொடி: 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு: 1 தேக்கரண்டி புளி: கைப்பிடி அளவு கடுகு: அரை தேக்கரண்டி நல்லெண்ணெய்: சிறிதளவு நெய்: அரை தேக்கரண்டி கறிவேப்பிலை, கொத்தமல்லி: சிறிதளவு உப்பு: தேவையான அளவு செய்முறை: உருளைக்கிழங்கினை கழுவி தோலோடு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி நீரில் போட்டு வைக்கவேண்டும். புளியினை சிறிது நீர் விட்டு ஊற வைத்து கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, ஒரு தேக்கரண்டி உளுத்தம்பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவைகளைப் போட்டு தாளித்து, நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு புரட்டிக் கொடுக…
-
- 1 reply
- 1.8k views
-
-
உள்ளிக் குழம்பு என்னவேணும் ??? உள்ளி 6 பிடி உரிச்ச சின்னவெங்காயம் 5 பச்சைமிளகாய் 3 கறிவேப்பமிலை ( தேவையான அளவு ) தனி மிளகாய் தூள் 2 தே கறண்டி பழப்புளி ( தேவையான அளவு ) மிளகு தூள் அரை தேக்கறண்டி முதல் தேங்காய் பால் 1 அரைக் கப் நல்லெண்ணை தேவையான அளவு உப்பு தேவையான அளவு கூட்டல் : உள்ளியை உடைச்சு முழுசாய் ஒரு பாத்திரத்திலை சேருங்கோ . வெங்காயம் பச்சை மிளகாயை வெட்டி வையுங்கோ . ஒரு மண்சட்டியிலை நல்லெண்ணை விட்டு எண்ணை கொதித்த உடனை வெட்டின சின்னவெங்காயத்தை போடுங்கோ . வெங்காயம் பொன்னிறமாய் வர பச்சைமிளகாய் கறிவேப்பிலையை போடுங்கோ . கொஞ்ச நேரத்தாலை தனிமிளகாய்த் தூள் மிளகு தூள் எல்லாவற்றையும் போடுங்கோ . கரைச்ச பழப்புளியைவிட்டு கொஞ்ச தண்ணி சேருங்கோ . தூள…
-
- 13 replies
- 1.8k views
-
-
மீல் மேக்கர் பக்கோடா செய்ய...! தேவையான பொருட்கள்: மீல் மேக்கர் - 20 உருண்டைகள் கடலைப் பருப்பு - ஒரு கப் சின்ன வெங்காயம் - 100 கிராம் பச்சை மிளகாய் - 2 தேங்காய் துருவல் - ஒரு மேஜைக்கரண்டி மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி பிரெட் ஸ்லைஸ் - 3 எலுமிச்சை…
-
- 12 replies
- 1.8k views
- 1 follower
-
-
கூத்தா நல்லூர் தம்ரூட் தேவையான பொருட்கள் ரவை - 2 1/2 டம்ளர் சீனி - 3 டம்ளர் முட்டை - 12 நெய் - 250 கிராம் கண்டன்ஸ்ட் மில்க் - 150 கிராம் ஏலக்காய் - 7 முந்திரி -12 உப்பு - ஒரு தேக்கரண்டி செய்முறை : தேவையான பொருட்களை தயாராக வைக்கவும். முட்டையை மிக்ஸியில் உடைத்து ஊற்றி நன்கு நுரை பொங்க அடித்துக் கொள்ளவும். வானலியில் ரவையை நிறம் மாறாமல் லேசாக வறுத்து கொள்ளவும்.(நன்றாக வறுத்து விட கூடாது). அடித்து வைத்திருக்கும் முட்டையை ஒரு பாத்திரத்தில் வடிக்கட்டி விட்டு அதில் உப்பையும் சீனியையும் சேர்த்து கைகளினாலோ அல்லது மரக்கரண்டியாலோ நன்கு கரைத்து கொள்ளவும்.(பீட்டரால் வேண்டாம்) முட்டையில் சீனி கரைந்ததும் ரவை, கண்டஸ்ட்மில்க் மற்றும் ஏலக்காய் பொடியையும் ச…
-
- 2 replies
- 1.8k views
-
-
கிராமத்துச் சமையல் விறகு அடுப்பு தகதகவென எரிந்துகொண்டிருக்கும்போது சூடான பணியாரக்கல்லில் மாவை ஊற்றி, சுற்றிலும் நெய்யைவிட்டால் அந்த வாசனை ஊரையே தூக்கும். புட்டுக்கு மாவு இடிக்க உலக்கையை உரலில் போட்டால் அந்த வீட்டில் விசேஷம் என்று அர்த்தம். இப்படி கிராமத்துச் சமையல் ஒவ்வொன்றுமே தனித்துவம் வாய்ந்தது. இங்கே, உடலுக்குக் கேடு இல்லாத மண்மணம் கமழும் சுவையான ரெசிப்பிகளை வழங்குகிறார் கரூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் சரஸ்வதி அசோகன். சுரைக்காய் கடலைக் கூட்டு தேவையானவை: சிறிய சுரைக்காய் - ஒன்று (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்) வறுத்த வேர்க்கடலை - 2 கைப்பிடி அளவு (தோல் நீக்கி, ஒன்றிரண்டாகப் பொடிக்கவும்) தோலுரித்த சின்ன வெங்காயம் - 10 மஞ்…
-
- 0 replies
- 1.8k views
-
-
புடலங்பழ பிரட்டல் வீட்டில் இந்த முறைதான் புடலங்காய் கன்று நட்டனான். விதை எடுப்பதற்காக ஒரு புடலங்காயை முற்றவிட, அது இன்று பழமாகியிருந்து. விதையை எடுத்தபின் மிகுதியை எறிய மனமில்லை, என்ன செய்யலாமென்று யோசித்துவிட்டு, தாழித்து பிரட்டல் ஆக்கி இப்பதான் சாப்பிட்டேன், சுவை பரவாயில்லை. என் கேள்வி - நீங்கள் யாராவது புடலங்பழத்தில் கறி வைத்திருக்கின்றீர்களா, அப்படியாயின் செய்முறையை தரமுடியுமா? இன்னும் ஒன்று விட்டுள்ளேன், அடுத்த கிழமை பழுத்துவிடும். இதுமாதிரிதான் என் வீட்டுத்தோட்ட கன்று
-
- 11 replies
- 1.8k views
-
-
உள்ளிச் சட்ணி . இந்தப் பக்குவத்துக்கும் செஃப் எனது மனைவிதான் . இலகுவான உடலுக்கு மருத்துவரீதியில் நன்மை பயக்கக்கூடிய பக்குவத்தை நீங்களும் செய்து பார்க்கலாமே ? தேவையான பொருட்கள் : உள்ளி 10 - 12 பல்லு . செத்தல் மிளகாய் 6 - 7 . **** தக்காளிப்பழம் 2 . கறிவேப்பமிலை 4 - 5 இலை. கல்லு உப்பு ( தேவையான அளவு ) . எண்ணை 5 தேக்கறண்டி . கடுகு கால் தேக்கறண்டி . பக்குவம் : தோல் நீக்கிய உள்ளி , செத்தல் மிளகாய் , வெட்டின தக்காளிப்பழங்கள் , கறிவேப்பமிலை , உப்பு எல்லாவற்றையும் கிறைண்டரில் அரைத்துக்கொள்ளவும் . ஒரு தாச்சியில் எண்ணையை விட்டு கொதித்தவுடன் கடுகைப் போட்டு வெடிக்க விடவும் . கிறைண்டரில் அரைத்த கலவையைத் தாச்சியில் கொட்டி 2 - 4 நிமிடங்கள் கொதிக்…
-
- 8 replies
- 1.8k views
-
-
நத்தை கிரேவி... உலகம் முழுவதும் பல்லாண்டுகளாக இது மிக ருசியான ஸ்பெஷல் ரெஸிப்பிகளில் ஒன்று! ‘வாகை சூட வா’ திரைப்படத்தில், ஒரு பாடல்காட்சியில் இனியா, வாத்தியார் விமலுக்கு நத்தை அவித்து சாப்பிடத் தருவார். முதல்முறை அந்தக் காட்சியைக் காணும் போது வியப்பாக இருந்தது. அட நத்தையைக் கூடவா சாப்பிடுவார்கள்? என்று ஒரே அதிசயமாகக் கூட இருந்தது. ஆனால் இணையத்தில் நத்தை கறி என்று தேடிப்பார்த்தால் உலகம் முழுதும் மக்கள் விதம் விதமாக நத்தையை ரசித்துச் சமைத்து ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள் எனத் தெரிய வருகிறது. நத்தை வேண்டுமானால் மெதுவாக ஊர்ந்து செல்லலாம் ஆனால் அதன் கறியோ தொண்டைக்குள் வழுக்கிக…
-
- 5 replies
- 1.8k views
-
-
-
- 12 replies
- 1.8k views
-
-
சிறிது தேங்காய்ப் பூ உங்கள் உறைப்புக்கேற்ப மிளகாய்த் தூள் உப்பு புளி தேவைக்கேற்ப பச்சை வெங்காயம் முடிந்தளவு சிறிதாக வெட்டி போடுங்கள் எல்லாவற்றையும் போட்டு நன்றாக பிசைந்து பாணுடன் சாப்பிட நன்றாக இருக்கும். சிறிய வயதிலிருந்தே எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.
-
- 12 replies
- 1.8k views
-
-
-
கார நண்டுக் குழம்பு தேவையான பொருட்கள்: நண்டு - 500 கிராம் பெரிய வெங்காயம் - 100 கிராம் சிறிய வெங்காயம் - 5 எண்ணம் தக்காளி - 100 கிராம் மிளகாய் - 3 எண்ணம் பூண்டு - 5 பல் புளி - 25 கிராம் இஞ்சி - சிறிது மிளகாய்த்தூள்- 2 தேக்கரண்டி மல்லித்தூள் - 3 தேக்கரண்டி மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி சோம்பு - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி மிளகு - 1 தேக்கரண்டி தேங்காய் - 1 மூடி நல்லெண்ணெய் - 50 மி.லி உப்பு - தேவையான அளவு தாளிக்க பட்டை - சிறிது கிராம்பு - சிறிது பிரிஞ்சி இலை - சிறிது கடுகு-உளுந்து, வெந்தயம் - 1 தேக்கரண்டி. செய்முறை: 1. நண்டைச் சுத்தம் செய்து சுடுநீரில் சிறிது மஞ்சள் தூ…
-
- 9 replies
- 1.8k views
-
-
இந்த உணவை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அவர்கள் மிகவும் விரும்பி உண்பர். தேவையான பொருட்கள் பச்சை அரிசி 1 கப் உளுந்து 1/2 கப் இஞ்சி 1 இன்ச் பூண்டு 3 பற்கள் சோடா உப்பு 2 சிட்டிகை பச்சை மிளகாய் 4 தயிர் 2 மேஜைக்கரண்டி சீரகம் 1/2 தேக்கரண்டி மிளகு 1/2 தேக்கரண்டி உப்பு தேவையான அளவு பெருங்காயம் 1 சிட்டிகை கறிவேப்பிலை 1 கொத்து தேங்காய் எண்ணெய் பொறிப்பதற்கு தேவையான அளவு செய்முறை 1. அரிசியையும் உளுந்தையும் தனி தனியாக 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். 2. உளுந்தை நன்கு அரைத்து கொள்ளவும் உளுந்து வடைக்கு ஆட்டுவது போல். தண்ணீர் அதிகம் விட கூடாது. 3. அரிசியை நன்கு அரைத்து கொள்ளவும். இதற்கு நான் கொஞ்சம் அதிகமாக தண்ணீர் ச…
-
- 0 replies
- 1.8k views
-
-
-
லவ் கேக் தேவையான பொருட்கள் ரவை - 500 கிராம் சீனி - 1 கிலோ பட்டர் – 250 கிராம் முட்டை – 20 முட்டைகள் (10 முட்டைகளில் வெள்ளை கரு மட்டும்) கஜு – 600கிராம்ரோஸ் எசன்ஸ் – 2 தேக்கரண்டி வெனிலா – 2 தேக்கரண்டி பிளம்ஸ் - 200 கிராம் ஆமன்ட் எசன்ஸ் – 2 தேக்கரண்டி தேன் – ஒரு வயின் கிளாஸ் அளவு ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி கருவப்பட்டை தூள் – 2 தேக்கரண்டி கிராம்பு தூள் – சிறு துளி செய்முறை. ரவை மற்றும் பட்டரை ஒன்றாக கலக்கவு…
-
- 3 replies
- 1.8k views
-
-