நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
அதிசய உணவுகள் 1 தாய்வான் தலைநகர் டைபியில் உள்ள ‘ஷிலின்’ இரவு உணவுச் சந்தை இந்த உலகத்தில் வாழ்கிற ஒவ்வோர் உயிருக்கும் உண்ணுவதும் இனவிருத்தி செய்வதுமே முக்கியத் தொழில். வயிறே பிரதானம் என்றும் நம் முன்னோர் சொல்லியுள்ளனர். ‘ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்/ இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்/என்நோ(வு) அறியாய் இடும்பை கூர் என் வயிறே/ உன்னோடு வாழ்தல் அரிது’ - இது வயிற்றுப் பசியின் கொடுமையைப் பற்றி ஒளவையார் சொன்னது. வயிற்றுப் பசிக்கு உணவு கிடைத்துவிட்டால் போதுமா? நாக்கு ருசிக்கு மனிதர்கள் அடிமையாகி கிடக்கிறார்கள்தானே! ஒரு வேடிக்கையான சம்பவத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். என் கணவரின் கிளினிக்கிற்கு, …
-
- 1 reply
- 1.2k views
-
-
பாசிப்பருப்பு பொரித்த முட்டை : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் பாசிப்பருப்பு (சிறு பருப்பு) - 100 கிராம் தக்காளி - ஒன்று (சிறியது) வெங்காயம் - 2 (நடுத்தரமான அளவு) இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி பச்சை மிளகாய் - ஒன்று மிளகாய்த் தூள் - கால் மேசைக்கரண்டி மஞ்சள் தூள் - கால் மேசைக்கரண்டி சீரகத் தூள் - கால் மேசைக்கரண்டி மல்லித் தழை - சிறிது முட்டை - 2 மிளகுத் தூள் - கால் மேசைக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - 2 தேக்கரண்டி கடுகு - கால் மேசைக்கரண்டி காய்ந்த மிளகாய் - 2 நெய் - 2 தேக்கரண்டி செய்முறை: பாசிப்பரு…
-
- 1 reply
- 662 views
-
-
வாழைக்கிழங்கு பொரியல் நல்ல சுவை தட்டில் மிகுதியில்லை, பிள்ளைகள் விரும்பி சாப்பிட்டார்கள், பாதி இன்னும் குளிர்சாதன பெட்டியில் இருக்கு, கீழே உள்ள முறையில் நாளை மீண்டும் சின்ன சின்ன துண்டா வெட்டி முறுக பொரிக்கனும், நல்ல சுவை
-
- 1 reply
- 581 views
-
-
(ஆந்திரா ஸ்டைல் ஸ்பைசி சிக்கன்) தேவையானவை: சிக்கன் – 250 கிராம் (துண்டுகளாக நறுக்கவும்) காய்ந்த மிளகாய் – 4 பச்சை மிளகாய் – 5 (பொடியாக நறுக்கவும்) காஷ்மீரி மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன் வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் சாஸ் – ஒரு டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு எண்ணெய் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு சிக்கன் துண்டுகள், காஷ்மீரி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து சிக்கனை வேகவிடவும். சிக்கன் மி…
-
- 1 reply
- 654 views
-
-
வாங்க இண்டைக்கு நாம உணவகங்களில செய்யிற மாறி ஆனா எந்த செயற்கை சுவையூட்டிகளும் சேர்க்காம சுவையான மரக்கறி நூடுல்ஸ் செய்வம். நீங்களும் இத மாதிரி செய்து பார்த்து எப்படி வந்த எண்டு சொல்லுங்க.
-
- 1 reply
- 986 views
-
-
அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்று தான் வேர்க்கடலை. பொதுவாக வேர்க்கடலையை வறுத்து அப்படியே தான் சாப்பிடுவார்கள். ஆனால் அதில் சில மசாலாக்களை சேர்த்து பக்கோடா போன்று செய்து சாப்பிட்டால், அதன் சுவையே தனி. முக்கியமாக வேர்க்கடலை பக்கோடாவானது குழந்தைகளால் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இங்கு வேர்க்கடலை பக்கோடாவை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: வேர்க்கடலை – 1 1/2 கப் கடலை மாவு – 1/2 கப் …
-
- 1 reply
- 748 views
-
-
மல்வானி ஸ்டைல் இறால் குழம்பு செய்வது மிகவும் எளிமையானது. மேலும் இதனை செய்தால், வீட்டில் உள்ளோரிடம் நல்ல பாராட்டைப் பெறலாம். சரி, இப்போது அந்த மல்வானி இறால் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: இறால் - 500 கிராம் புளிச் சாறு - 2 டேபிள் ஸ்பூன் பூண்டு - 4 பற்கள் (தட்டியது) தேங்காய் பால் - 1 கப் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்ழுன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் - 1/2 கப் (துருவியது) வெங்காயம் - 2 (நறுக்கியது) மல்லி - 1 டேபிள் ஸ்பூன்ன சோம்பு - 1/2 டீஸ்பூன் வெந்தயம் - 1/2 டீஸ்பூன் பச்சை ஏலக்காய் - 2 …
-
- 1 reply
- 863 views
-
-
இறால் - கால் கிலோ பெரிய வெங்காயம் - 2 பாஸ்மதி அரிசி - ஒன்றரை கப் தக்காளி - ஒன்று கறிவேப்பிலை - ஒரு கொத்து கொத்தமல்லித் தழை - ஒரு கொத்து புதினா - 2 கொத்து இஞ்சி, பூண்டு விழுது - ஒன்றரை மேசைக்கரண்டி எண்ணெய் - கால் கப் ஏலக்காய் - 2 சோம்பு - கால் தேக்கரண்டி பட்டை - ஒன்று கிராம்பு - 3 பிரிஞ்சி இலை - பாதி கல் உப்பு - 2 தேக்கரண்டி மல்லித் தூள் - ஒன்றரை மேசைக்கரண்டி மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி நெய் - 2 தேக்கரண்டி பெரிய வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இறாலின் தலையை நீக்கி விட்டு தோலுரித்து சுத்தம் செய்து கொள்ளவும். கொத்தமல்லித் தழையை ஆய்ந்து வைக்கவு…
-
- 1 reply
- 789 views
-
-
ரம்ஜான் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது நோன்பு கஞ்சி தான். இத்தகைய நோன்புக் கஞ்சி நாள் முழுவதும் நோன்பிருந்த பின், செரிமான மண்டலம் நன்கு செயல்படுவதற்கு உறுதுணையாக இருக்கும். இந்த நோன்பு கஞ்சியை எப்படி வீட்டில் செய்யலாம் என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பச்சரிசி - 100 கிராம் பயத்தம் பருப்பு - 25 கிராம்சின்ன வெங்காயம் - 100 கிராம்கேரட் - 1 தக்காளி - 1 வெந்தயம் - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 பிரியாணி இலை - 1 கொத்தமல்லி - சிறிது புதினா - சிறிது தேங்காய் பால் - அரை கப் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் நெய் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவுசெய்முறை : * கேரட், சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக …
-
- 1 reply
- 997 views
-
-
உண்ணும் உணவுவகைகள் ஜீரணிக்க எத்தனை மணி நேரம் பிடிக்கும்? [sunday 2014-12-07 22:00] சைவம் : * பழச்சாறு - 15 முதல் 20 நிமிடங்கள் * கெட்டியான பழச்சாறு காய்கறி சூப், தர்பூசணி, ஆரஞ்சு, திராட்சை - 20 முதல் 30 நிமிடங்கள் * ஆப்பிள், செர்ரி பழங்கள் மற்றும் தக்காளி, வெள்ளரிக்காய், காய்கறி சாலட் - சுமார் 40 நிமிடங்கள் * காலிஃப்ளவர், சோளம் - சுமார் 45 நிமிடங்கள் * கேரட், பீட்ரூட் போன்ற வேர்க்கிழங்குகள் - சுமார் 50 நிமிடங்கள் * அரிசி, ஓட்ஸ் - சுமார் ஒன்றரை மணி நேரம் * சோயா பீன்ஸ் மற்றும் பால், பாலாடைக்கட்டி - சுமார் 2 மணி நேரம் அசைவ உணவுகள் : * மீன் - அரை மணி நேரம் * முட்டை - 45 நிமிடங்கள் * கோழி - 2 மணி நேரம…
-
- 1 reply
- 494 views
-
-
திருநெல்வேலி ஒரிஜினல் சாந்தி அல்வா இந்த கடை 1977ஆம் ஆண்டு உதயமானது. இவர்கள் சுவை இருட்டு கடை அல்வாவில் இருந்து மாறுபடும். அல்வா என்ற சொல் அரேபிய மொழியாகும். தாமிரபரணி ஆற்று தண்ணீரில் தாமிர தன்மை அதிகம் இருப்பதே இந்த சுவைக்கு காரணம். இவர்கள் சொக்கம்பட்டி ஜமீன் பரம்பரை அவர்களுக்கு இந்த அல்வாவை செய்து வழங்கி வந்துள்ளார்கள் பின்னர் சாந்தி பலகாரகடை ( மிட்டாய் கடை ) என்ற பெயரில் ஆரம்பித்து இன்றுவரை அவர்கள் தரத்தில் ஒரு குறையையும் கூற இயலாது. இருட்டுக்கடை அல்லாவும் சாந்தி மிட்டாய்கடை அல்வாவும் தான் சுவையில் கொஞ்சம் மாறுபடும். ஆனால் இரண்டுமே தரத்திலும், சுவையிலும் நம்பர் 1 தான். தேவையான பொருட்கள் சம்பா கோதுமை 1/2 கப் அஸ்கா சர்க்கரை 1 1/2 கப் ( வெள்ளை ) முந்திரி பரு…
-
- 1 reply
- 2.3k views
-
-
சைனீஸ் இறால் தேவையான பொருட்கள் உரித்த இறால் -500g தக்காளி சோஸ் .- 2 மேசைக்கரண்டி பச்சைமிளகாய் - 2 (நறுக்கியது) கோன்பிளவர் - 4 மேசைக்கரண்டி இஞ்சி , பூண்டு - 2 மேசைக்கரண்டி ( நசித்தது ) முட்டை வெள்ளைக்கரு - 1 உப்பு , எண்ணெய்- தேவையான அளவு தண்ணீர் - சிறிதளவு செய்முறை முட்டை வெள்ளைக்கரு , 3 தேக்கரண்டி கோன்பிளவர் , உப்பு , தண்ணீர் என்பவற்றை ஒரு கலவையாக தயாரிக்கவும். அக்கலவையில் இறாலை 20 நிமிடங்கள் ஊற விடவும். தக்காளி சோஸ் ,கோன்பிளவர் , இஞ்சி , பூண்டு , மிளகாய் என்பவற்றை ஒன்றாக கலக்கவும். தேவையான அளவு எண்ணெயில் ஊற வைத்த இறாலை பொரிக்கவும். சிறிதளவு எண்ணெயைச் சூடாக்கி தக்காளி சோஸ் கலவையினை ஒரு நிமிடம் வதக்க…
-
- 1 reply
- 2.6k views
-
-
பருப்பு முள்ளங்கி வறுவல் தேவையானப் பொருள்கள் முள்ளங்கி - 2 கடலைப்பருப்பு - அரை கப் கொத்துமல்லி, கறிவேப்பிலை -பொடியாக நறுக்கியது மிளகாய், தனியா, மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி சர்க்கரை - அரை தேக்கரண்டி புளி - தேவையான அளவு எண்ணெய், பெருங்காயம், கடுகு, சீரகம் - தாளிக்க உப்பு - தேவையாள அளவு செய்முறை 1.முதலில் கடலைப் பருப்பை கழுவி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் முள்ளங்கியை தோல் சீவி சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 2.வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, கொத்துமல்லி போட்டு தாளிக்கவும். மேலும் வாணலியில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அதில் உப்பு, மஞ்சள், தனியா, மிளகாய் பொடிகளை சேர்க்கவும். 3.த…
-
- 1 reply
- 1.9k views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
பன்னீர் ரெசிபிக்கள் மிகவும் ருசியாக இருக்கும். அந்த பன்னீருடன், குடைமிளகாயை சேர்த்து, ஒரு மசாலா செய்து சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் எவ்வளவு அருமையாக இருக்கும். சரி, இப்போது அந்த குடைமிளகாய் பன்னீர் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: பன்னீர் - 1/4 கிகி (சிறிதாக வெட்டியது) குடைமிளகாய் - 1/4 கிகி (நறுக்கியது) பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது) தக்காளி - 3 (அரைத்தது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் மல்லி தூள் - 2 டீஸ்பூன் கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, அதில் சிறிதாக வ…
-
- 1 reply
- 1k views
-
-
அபார சுவை கொண்டது ‘வெடி தேங்காய்’ அதை வீட்டில் தயார் செய்வது எப்படி? வாழ்வில் ஒருமுறையாவது வெடி தேங்காய் சாப்பிட்டிருக்கிறீர்களா? இதுவரை இல்லாவிட்டாலும் இனி அப்படியொரு ஆசையிருந்தால் மெனக்கெட்டு நமது சொந்த கிராமங்களுக்குச் சென்று அங்கே தோப்புகளில் நெருப்பு மூட்டம் போட்டு அதில் தேங்காயைச் சுட்டுத் தான் வெடி தேங்காய் சாப்பிட்டாக வேண்டுமென்பதில்லை. நகரங்களில் கேஸ் அடுப்புகளிலும் கூட வெடி தேங்காய் தயாரித்து சுவையாக சாப்பிடலாம். இன்று நகரங்களில் கேக் ஷாப்புகள், பேக்கரிகள், இனிப்பகங்கள், எல்லாம் பெருகி இங்கிருக்கும் ஒவ்வொரு மனிதனும் எதை உண்பதென அவை தீர்மானிக்கும் நிலை வரினும் அன்றொரு காலத்தில…
-
- 1 reply
- 1.1k views
-
-
தேவையான பொருட்கள் : புழுங்கரிசி -1 கப் பச்சரிசி – 1 கப் உளுந்து – ¼ கப் இவை மூன்றையும் நன்கு ஊறவைத்து, அதனுடன் ½ கப் சாதம், ½ கப் துருவிய தேங்காய் சேர்த்து , நன்றாக தோசைமாவு பதத்திற்கு அரைத்து, உப்பு சேர்த்து, புளிக்க விடவும். சுத்தம் செய்த இறாலில் சிறிது இஞ்சிபூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சதூள், உப்பு சேர்த்து ஊறவைத்து கொள்ளவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 தக்காளி - 1/2 இறால் - 1/2 கப் தயாராக வைத்து கொள்ளவும். செய்முறை : 1.பின் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை வதக்கி, பின் தக்காளி வதங்கியதும் , நறுக்கிய இறாலை சேர்த்து வதக்கவும். 2.அதனுடன் 1/4 ஸ்பூன் மிளகாய்தூள், 1/2 டீ.ஸ்பூன் மல்லி தூள், 1 துளி சீரக தூள்…
-
- 1 reply
- 837 views
-
-
-
அபார சுவை மட்டன் குருமா! #WeekEndRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான மட்டன் குருமா அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி. தேவையானவை: மட்டன் - அரை கிலோ நீளவாக்கில் நறுக்கிய சின்ன வெங்காயம் - 150 கிராம் இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் மல்லித்தூள் - 3 டீஸ்பூன் கசகசா - 2 டீஸ்பூன் முந்திரிப் பருப்பு - 10 கிராம் தேங்காய் விழுது - 25 கிராம் ஏலக்காய் - 2…
-
- 1 reply
- 1.5k views
-
-
கேழ்வரகு ரொட்டி (குரக்கன் ரொட்டி) கேழ்வரகு மாவு - 500 கிராம் சீனி - 250 கிராம் உப்பு - ஒரு சிட்டிகை எண்ணெய் - 1/2 லிட்டர் முதலில் கேழ்வரகு மாவு, சீனி, உப்பு மூன்றையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். பின்பு நீரை விட்டு சப்பாத்திக்கு மா பிசைந்து கொள்ளவது போல் பிசைந்து நன்கு அடித்து கொள்ளவும். பிசைந்த மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். பின்பு கையில் சிறிதளவு எண்ணெய் பூசிக் கொண்டு அவற்றை அப்பள வடிவில் தேய்த்துக் கொள்ளவும். மிகவும் தடிப்பாகவும் மெல்லியதாகவும் இல்லாமல் சற்று நடுத்தரமாக தேய்க்கவும். வாணலியில் எண்ணெயை கொதிக்க விட்டு ஓவ்வொன்றையும் இரு புறமும் திருப்பி போட்டு பொரித்து எடுக்கவும். மாலை நேரங்களில் சாப்பிட நன்றாக இருக்கவும். Note: மி…
-
- 1 reply
- 7.5k views
-
-
தேங்காய் பால் முட்டை குழம்பு முட்டை குழம்பையே பலவாறு செய்வார்கள். அதில் ஒன்று தான் தேங்காய் பால் சேர்த்து செய்யும் முட்டை குழம்பு. இந்த வகை முட்டை குழம்பானது ருசியாக இருப்பதுடன், செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும். ஏன் பேச்சுலர்கள் கூட இதனை செய்யலாம். இங்கு தேங்காய் பால் முட்டை குழம்பை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அதன்படி செய்து சுவைத்து எப்படி இருந்து என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேங்காய் பால் முட்டை குழம்பு தேவையான பொருட்கள்: முட்டை - 2 வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 மஞ்சள் தூள் - 1 சிட்டிகை மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன் கொத…
-
- 1 reply
- 944 views
-
-
தேவையான பொருட்கள் : இறால் - 1/2 கி வெங்காயம் - 2 தக்காளி - 1 (பெரியது ) இஞ்சி ,பூண்டு விழுது - 1 ஸ்பூன் மிளகுப்பொடி - 2 ஸ்பூன் (உங்கள் காரத்துக்கு ஏற்ப ) மிளகாய் தூள் - 1 ஸ்பூன் மல்லித்தூள் - 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் உப்பு - தேவைக்கு தாளிக்க : கடுகு - 1/4 ஸ்பூன் பட்டை - 1 கிராம்பு - 1 பிரிஞ்சி இலை - 1 சீரகம் - 1/4 ஸ்பூன் சோம்பு - 1/4ஸ்பூன் கருவேப்பிலை - 2 கொத்து எண்ணெய் - தாளிக்க செய்முறை : முதலில் எண்ணெய் விட்டு , தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும் . பிறகு வெங்காயம் மிக பொடியாக நறுக்கி யது சேர்த்து வதக்கவும் . வெங்காயம் பொன் நிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கி ,அதனுடன் மிளகுத்தூள்,மல்லித்தூள் ,மஞ்சள்தூள் , மிளகாய்த்தூள் ,உப்பு சேர்த்து …
-
- 1 reply
- 1.3k views
-
-
(தேவைகேற்ப அளவை மாற்றிக்கொள்ளுங்கள்) தேவையான பொருட்கள்: (10 கிலோ மஸ்கோத் அல்வா தயாரிக்க) சர்க்கரை - 5 கிலோ, தரமான தேங்காய் - 30, மைதா மாவு - ஒன்றரை கிலோ, முந்திரிப் பருப்பு - 400 கிராம். செய்முறை: முதல் நாளே, மைதா மாவில் தண்ணீர் ஊற்றி பரோட்டா பதத்துக்கு உருட்டி உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள். கைகள் இரண்டிலும் கிளவுஸ் அணிந்து கொள்ளுங்கள். இனி உருட்டி வைத்திருக்கும் மாவு உருண்டைகளில் இருந்து ஒன்றை எடுத்து, தண்ணீர் இருக்கும் பாத்திரத்தில் போட்டு, ஐந்து நிமிடம் இரண்டு கைகளாலும் மாவை நன்றாக பிசைய வேண்டும். அதிலிருந்து பால் மெதுவாக வெளியேறும். தண்ணீர் கலந்த இந்த பாலை, வேறு ஒரு பெரிய பாத்திரத்தில…
-
- 1 reply
- 2.8k views
-
-
-
பொதுவாக தோசை என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் வேலைக்கு செல்பவர்களுக்கு என்றால் சொல்லவே வேண்டாம். ஏனெனில் இதனை செய்து சாப்பிடுவது என்பது மிகவும் எளிதானது அல்லவா? இத்தகைய தோசையில் பல வகைகள் உள்ளன. இப்போது அதில் ஒரு வகையான கார தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: புழுங்கலரிசி - 3 கப் துவரம் பருப்பு - 1 கப் வர மிளகாய் - 10 புளி - சிறிய நெல்லிக்காய் அளவு பூண்டு - 10 பல் உப்பு - தேவையான அளவு பெருங்காயத் தூள் - சிறிது கொத்தமல்லி - சிறிது எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: முதலில் அரிசி மற்றும் துவரம் பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதனை கிரைண்டரில் போட்டு, அத்துடன் வரமிளகாய், புளி, பூண்டு, பெருங்காயத்தூள் சேர…
-
- 1 reply
- 894 views
-