நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
போன ஞாயிற்றுக் கிழமை ரொரன்டோவில் இருக்கும் Finch & Tapscot பகுதியில் உள்ள Greenland தமிழ் கடைக்கு சேவல் இறைச்சி வாங்கப் போயிருந்த போது அங்கு 'மான் வத்தல்' விற்கப்படுவதை பார்துவிட்டு வாங்கி வந்தேன்...ஆனால் எப்படி அதை சமைப்பது இங்கு ஒருவருக்கும் தெரியுது இல்லை மான் வத்தலை எப்படி சமைப்பது? கறியாக; குழம்புக் கறியாக சமைக்கு முடியுமா? தெரிந்தவர்கள் எழுதி என் வயிற்றில் மான் வார்க்கவும் நன்றி
-
- 36 replies
- 8.1k views
-
-
1970 / 1980 களில்... யாழ்ப்பாணத்தில்... இருந்த, Restaurant களின் பெயர் விபரமும், விலைப் பட்டியலும். *கோட்டை முனியப்பகோயில்* தேங்காய்ச் சொட்டு. *பரணி ஹோட்டல்* அப்பம். *சிற்ரி பேக்கறி* கால், றாத்தல்... பாணும், பருப்பும்.... *சுபாஸ் கபே* ஐஸ்கிரீம். *றிக்கோ கோப்பி பார்* றோல்ஸ், கோப்பி. *மலாயன் கபே* உளுந்து வடை / போளி. *தாமோதர விலாஸ்* நெய் தோசை. *சந்திரா ஐஸ் க…
-
- 56 replies
- 8.1k views
-
-
முட்டை தொக்கு செய்யும் முறை தேவையான பொருட்கள் முட்டை - 5 பெரியவெங்காயம் - 6 தக்காளி {பெரியது எனின் } - 3 இஞ்சி - 1 துண்டு உள்ளி - 4 பல்லு மிளகாயப்பொடி - தேவையான அளவு எண்ணை - தேவையான அளவு உப்பு -தேவையான அளவு வெங்காயத்தை நீள வாக்கில் சீவி பொன்னிறமாக வதக்கவும் .வதங்கி வரும்போது தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டி அதனுடன் சேர்த்து வதக்கவும் .தக்காளி வதங்கியதும் இஞ்சி உள்ளி இரண்டையும் நன்றாக இடித்து இதனுடன் சேர்த்து வதக்கவும் .பின் மிளகாயப்பொடி உப்பு போட்டு கிளறவும் .இதனுடன் ஒரு தம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் .நன்றாக கொதித்து வரும்போது அவித்த முட்டையை நாலாக கீறி {துண்டாகாதபடி } இதனுடன் சேர்த்து கிளறி மூடிவிடவும் . …
-
- 8 replies
- 8k views
-
-
-
பற்றீஸ் தேவயான பொருட்கள் உருளைக்கிழங்கு : 1 கி. கிராம் ரின் மீன் : 1 சிறியது 155 கிராம் சிறிதாக வெட்டிய வெண்காயம் : 5 மே. கரண்டி(நிரப்பி) சிறிதாக வெட்டிய பச்சைமிளகாய் : 3 மே. கரண்டி(நிரப்பி) சிறிதாக வெட்டிய உள்ளி : 1 தே.கரண்டி(நிரப்பி) சிறிதாக வெட்டிய கறிவேப்பிலை: 1 மே. கரண்டி(நிரப்பி) கடுகு : சிறிதளவு பெரும்சீரகம்: சிறிதளவு கறிமிளகாய்த்தூள்: 1 மே. கரண்டி(நிரப்பி) மிளகு தூள் : 1 மே. கரண்டி(நிரப்பி) உப்புத்தூள் : அளவிற்கு தேங்காய்ப்பால்(தடித்த) : 1/2 தம்ளர் தேசிப்புளி: 1 தே.கரண்டி மாப்பசை தாயாரிப்பு கோதுமைமாவு: 1/2 கி.கிராம் தண்ணீர் : அளவிற்கு மாஜரின் : 2 மே.கரண்டி(நிரப்பி) உப்புநீர் : அளவிற்கு எண்ணெய் …
-
- 7 replies
- 8k views
-
-
தேவையான பொருட்கள் எக் பீட்டர் கோதுமை மா அல்லது அரிசிமா வெந்நீர் அளவுகேற்ப உப்பு தேங்காய் பூ கோதுமைமா புட்டினை அவிப்பம் ஓகேயா :P போதுமானவளவு கோதுமை மாவினை 5 நிமிடங்கள் ஒரு கோப்பையில் போட்டு மைக்ரோவேயில் வைக்க பின் அந்த மாவினை அரிந்தெடுத்து புட்டு குழைக்கும் பாத்திரத்தில் இடுக.அளவுகேற்ப உப்பு வெந்நீர் சேர்த்தபின் எக்பீட்டரை உபயோகித்து ஒரு 30 செக்கண் மாவினை குழையுங்க.ஊரில பேணியால குத்திற மாதிரி புட்டு குழைக்கப்பட்டுவிடும்.பின் புட்டு குழலிலோ அல்லது ஸ்ரிமரிலோ தேங்காய்பூவினை கலந்து அவித்து எடுத்து பரிமாறுங்கள் Copyright 2002-2007 eelavan85, All Rights Reserved. :P எக் பீட்டர்
-
- 33 replies
- 8k views
-
-
சுவையான முறுக்கு... செய் முறை: 2 சுண்டு அவித்த ஆட்டா மா/ வெள்ளை மா 1 சுண்டு கடலை மா சிறு துண்டு இஞ்சி 1 உள்ளிப் பல்லு சிறிதளவு நச்சீரகம் சிறிதளவு வெள்ளை எள்ளு சிறிதளவு உப்பு. துருவலான செத்தல் மிளகாய்த் தூள் சிறிதளவு முதலில் இஞ்சியையும் உள்ளிப் பல்லையும் நன்றாக நசியும் வரை இடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுள் ஒரு கப் கொதி நீரை ஊற்றி 5 - 10 நிமிடம் வரை விடவும். பின்னர் 5 - 10 நிமிடத்துக்குள் அந்த தண்ணீர் ஆறி விட்டிருக்கும். பின்னர் ஒரு பாத்திரத்தில் இரண்டு மாவையும் போட்டு அதனுடன் நச்சீரகம், தேவையான அளவு உப்பு, வெள்ளை எள்ளு, துருவலான செத்தல் மிளகாய்த் தூள் அனைத்தையும் போட்டு இஞ்சி, உள்ளி போட்டு வைத்திருந்த பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை மாத்…
-
- 4 replies
- 7.9k views
-
-
கோழிக்குழம்பு வகைகளில் எனக்கு மிகவும் பிடித்த மிளகுக்கோழி குழம்பின் செய்முறையை சற்றேறக்குறைய 25 நிமிடங்கள் என் அம்மாவிடம் தொலைபேசி வழியாக கேட்டு குறிப்பெடுத்து, இன்று அலுவலகத்திற்கும் 2 மணி நேரம் காலந்தாழ்த்தி வருவதாக கூறி விட்டு வெற்றிகரமாக செய்துமுடித்தேன். நண்பர்களும் முயற்சித்து பார்க்கலாம் முதலில் நாம் செய்முறைக்கான பொருட்களை எடுத்துகொள்வோம். தோல் நீக்கிய கோழி 500 கிராம் மிளகு : 25( காரம் குறைவாக விரும்புவோர் 15 மிளகுகள் போட்டால் போதும்) இஞ்சி : 1 பெரிய துண்டு மஞ்சள் தூள் : 2 தேக்கரண்டி மல்லி தூள் : 1 மேசைக்கரண்டி மிளகாய் தூள் : 1 தேக்கரண்டி பெரிய வெங்காயம் : 1 வெண்ணெய் : 100 கிராம் உங்களின் தேவைக்கேற்ப உப்பிட்டு கொள்ளவும் எலுமிச்சம…
-
- 22 replies
- 7.8k views
-
-
பாரம்பர்ய உணவுப் பயணம் - ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர் உடல் பலமிழந்து சோர்ந்து கிடப்பவர்களுக்கு கார், நாவறட்சியால் தவிப்பவர்களுக்கு குண்டு சம்பா, வாதக் குறைபாடு கண்டவர்களுக்கு குன்றுமணிச் சம்பா, பசியில்லாமல் உடல் மெலிவோருக்கு சீரகச்சம்பா, சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களால் வதைபடுவர்களுக்கு செஞ்சம்பா, வாதம், பித்தம், சிலேத்தும நோய் கண்டு தவிப்பவருக்கு கோடைசம்பா, பார்வைக்கோளாறு உள்ளவர்களுக்கு ஈர்க்கு சம்பா... இப்படி மருந்தாகவே விளங்கிய அரிசி ரகங்களை விளைவித்துச் சாப்பிட்டு நெடுவாழ்வு வாழ்ந்த சமூகம் நம்முடையது. உணவே மருந்து என்பதுதான் நம் வாழ்வியல் கோட்பாடு. ஆனால், அத்தகைய வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து, பின்பற்றி வந்த உணவு வழிகளில் இருந்து வெகு…
-
- 10 replies
- 7.7k views
-
-
சரக்குக் கறி நற்சீரகம் - 100 கிறாம் கொத்தமல்லி - 100 கிறாம் உள்ளி(வெள்ளைப் பூண்டு) - பெரிய முழுப்பூண்டு வெங்காயம் - 50 கிறாம் மிளகு - 20 கிறாம் மஞ்சள் - 1 துண்டு(10 கிறாம்) கடுகு - 10 கிறாம் உப்பு - தேவையானளவு கறிவேப்பிலை - தேவையானளவு பழப்புளி - 50 கிறாம் இவற்றை நன்றாக(பட்டுப்போல்) அரைத்து வைத்துக் கொள்ளுங்கள் பிஞ்சு முருக்கங்காய் - 500 கிறாம் தேங்காய்ப்பால் - பாதி கரைத்த புளியைப் பிழிந்த பாலுடன்கலந்து துண்டங்களாக்கப்பட்டவற்றை பிஞ்சு முருக்கங்காய் அதனுடன் அரைத்த சரக்கையும் சேர்த்துக் கொதிக்கவையுங்கள். கறியாக வந்ததும் இறக்கி சாப்பிடலாம்
-
- 5 replies
- 7.7k views
-
-
எள்ளுப்பா செய் முறை 1)இரண்டு கப் வெள்ளை எள்ளு 2)ஒரு கப் கோது அகற்றிய உழுந்து 3)ஒரு கப் சீனி எள்ளு கொஞ்சம் முறுகலாகும் வரை வறுத்து கோப்பி அரைக்கும் மெசினில் மாவாக அரைக்கவும் உழுந்தையும் அதே மாதிரி வறுத்து மாவாக அரைக்கவும் பூட்பிரசரில் இரண்டையும் கொட்டி சீனியையும் போட்டு(சீனி உங்கள் அளவுக்கு கூட்டி குறைக்கவும்) ஒரு நிமிடம் அரைத்த பின் ஓரளவு கொதித்த நீர் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்(கூட நீர் விட்டால் கழியாகி விடும்) அப்படியே கொஞ்ச நேரம் அரைக்க பதம் வந்ததும் நிற்பாட்டி எடுத்து உருண்டையாக உருட்டி வைத்தால் விரும்பிய நேரம் சாப்பிடலாம். வேறும் வழி முறைகள் தெரிந்தால் இணைக்கவும்.
-
- 9 replies
- 7.7k views
-
-
[size=4]தேவையான பொருள்கள்:[/size] [size=4]ரவை – 1 குவளை[/size] [size=4]தண்ணீர் – 1 1/2 குவளை[/size] [size=4]கெட்டியான பால் – 1 குவளை[/size] [size=4]சர்க்கரை – 1 3/4 குவளை[/size] [size=4]நெய் – 3/4 குவளை[/size] [size=4]கேசரி வண்ணம்[/size] [size=4]ஏலப்பொடி[/size] [size=4]முந்திரிப் பருப்பு[/size] [size=4]உலர்ந்த திராட்சை[/size] [size=4]செய்முறை:[/size] [size=4]2 மேசைக் கரண்டி நெய் விட்டு உலர்ந்த திராட்சையை, முந்திரியை நன்கு வறுத்து தனியாக எடுக்கவும்.[/size] [size=4]மீண்டும் 2 மேசைக் கரண்டி நெய் விட்டு ரவை வாசனை போகும் வரை வறுக்கவும்.[/size] [size=4]கெட்டியான பால், தண்ணீரைச் சேர்த்து ரவையை நிதானமாக நன்குவேகவைக்கவும்.[/size] [size=4]ர…
-
- 5 replies
- 7.7k views
-
-
சொக்லெட் கேக் (Chocolate Cake) இது முட்டை இல்லாமல் செய்யக்கூடிய சொக்லெட் கேக். தேவையானப் பொருட்கள் கோதுமை மா (மைதா)- 1 1/2 கப் சீனி - 3/4 கப் பால் - 1 கப் (அல்லது பால் 3/4 கப் தண்ணீர் 1/4 கப் சேர்த்து) கொக்கோ பவுடர் - 2 மேசைக்கரண்டி பொடித்த கஜு - 1/4 கப் (விரும்பினால்) ரெய்சின் - 25 (விரும்பினால்) பட்டர் - 1/2கப் பேகிங் சோடா - 1 1/2தேக்கரண்டி உப்பு - 1/4 டீஸ்பூன் 8" கேக் பான் - 1 பேகிங் ஸ்பிரே செய்முறை கேக் பானிற்கு பேகிங் ஸ்பிரே தடவி வைக்கவும். அவனை 350 F இல் முன்சூடு பண்ணவும். கோதுமை மா, கொக்கோ பவுடர், உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து 3 - 4 தடவை அரிக்கவும் (சலிக்கவும்) சீனி, உருக்கிய பட்டர் சேர்த்து கிரைண்டரில் நன்கு அடிக்கவ…
-
- 17 replies
- 7.7k views
-
-
சில வருடங்களாக நண்பர்கள்/உறவுகளாகிவிட்டோமே எப்போதும் தொந்தரவு குடுப்பது நியாயம் இல்லை என நினைத்து சில வாரங்களாக செய்முறைகள் எழுதுவதை தவிர்த்து வந்தேன். ஆனால் விதி வலியது என்பது எனக்கு சில நாட்களாக புரிகின்றது. காரணம் தொடர்ந்து என்னை சமையல் செய்முறைகளை எழுத சொல்லி வரும் கருத்துக்களும், மின்னஞ்சல்களுமே. இனிமேல் உங்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என சொல்லியபடியே மறுபடி சமையல்கட்டிற்குள் போகின்றேன். புதிதாக சமையல்கட்டிற்குள் நுழைந்திருக்கும் அன்பு அண்ணன் ஜோசப் பால்ராஜுக்காக [யாழ் கள சகோதரர்]ஒரு செய்முறை. [இந்த வாய்ப்பை விட்டால் ஜோண்ணா சமைக்க ஆரம்பித்திருப்பதை எப்படி தான் உலகிற்கு சொல்வது! கிகிகி] இச்செய்முறை விரைவில் செய்யக்கூடியது மட்டுமில்லாது உடலிற்கும் சத்துள்ள ஒர…
-
- 35 replies
- 7.7k views
-
-
தேவையான பொருட்கள் பெரிய மக்கரல் மீன் - 2 (சிறிய துண்டங்களாக வெட்டிக்கொள்ளவும்) மிளகாய் தூள் - 3 மேசைக் கரண்டி சின்ன வெங்காயம் - 10 (சிறிய துண்டுகளாக அரியவும்) பச்சை மிளகாய் - 3 (சிறிய துண்டுகளாக அரியவும்) பழப் புளி கரைசல் - கால் கப் (ஒரு தேசிக்காய் உருண்டை அளவு) உள்ளி - 1 பூண்டு தேங்காய்ப் பால் - அரை கப் (கொழுப்பென்பதால் தவிர்ப்பத நல்லது. ஆனால் சுவை.) தண்ணீர் - ஒரு கப் தேசிக்காய் - 1 சின்ன சீரகம், பெருஞ்சீரகம், வெந்தயம் - ஒவ்வொன்றும் ஒரு தேக்கரண்டி அளவு உப்பு /…
-
- 55 replies
- 7.6k views
-
-
நான் உங்களுக்கு சொல்லட்டுமா? பழைய புதிய சமையல் முறைகள் என் சமையல் அனுபவமும் நான் பல வருடங்களாக சேமித்த தகவல்களும். 1. இட்லி மாவுடன் சிறிது நல்லெண்ணை கலந்து வார்க்கவும். இட்லி கட்டியாக இருக்காது பஞ்சு மாதிரி வருமுங்க. 2.தக்காளி ரசம் செய்யும் போது தக்காளியை அப்படியே சேர்க்காமல் தக்காளி, கொஞ்சம் சீரகம், கொத்தமல்லி இலை யாவற்றையும் அரைத்துச் செய்தால் சுப்பராய் இருக்கும். விரதம் இல்லாத நாட்களில் இதனுடன் 2, 3 பற்கள் பூண்டும் சேர்த்து அரத்துச் செய்தால் மிக ருசியாகவும், மணமாகவும் இருக்கும். சொல்லி வேலையில்லீங்க.
-
- 46 replies
- 7.6k views
-
-
-
- 16 replies
- 7.6k views
-
-
கேழ்வரகு ரொட்டி (குரக்கன் ரொட்டி) கேழ்வரகு மாவு - 500 கிராம் சீனி - 250 கிராம் உப்பு - ஒரு சிட்டிகை எண்ணெய் - 1/2 லிட்டர் முதலில் கேழ்வரகு மாவு, சீனி, உப்பு மூன்றையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். பின்பு நீரை விட்டு சப்பாத்திக்கு மா பிசைந்து கொள்ளவது போல் பிசைந்து நன்கு அடித்து கொள்ளவும். பிசைந்த மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். பின்பு கையில் சிறிதளவு எண்ணெய் பூசிக் கொண்டு அவற்றை அப்பள வடிவில் தேய்த்துக் கொள்ளவும். மிகவும் தடிப்பாகவும் மெல்லியதாகவும் இல்லாமல் சற்று நடுத்தரமாக தேய்க்கவும். வாணலியில் எண்ணெயை கொதிக்க விட்டு ஓவ்வொன்றையும் இரு புறமும் திருப்பி போட்டு பொரித்து எடுக்கவும். மாலை நேரங்களில் சாப்பிட நன்றாக இருக்கவும். Note: மி…
-
- 1 reply
- 7.5k views
-
-
-
தேவையான பொருட்கள்: முள் இல்லாத மீன் துண்டுகள் - 4 இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன் கரம் மசாலா - 1ஸ்பூன் மக்காச்சோள மாவு - 1ஸ்பூன் மஞ்சள் தூள் - சிறிது உப்பு - தேவைக்கு கொத்தமல்லி - சிறிது மிளகுத்தூள் - 3ஸ்பூன் புளி - ஒரு சிறு உருண்டை செய்முறை: புளி கரைத்து வைத்துக் கொள்ளவும். மீதி உள்ளஅனைத்தையும் கலந்து கொண்டு இந்தக் கலவையில் மீன் துண்டங்களைப் போட்டு ஊற வைக்கவும். ஊறிய மீனை எடுத்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைக்கவும். மீன் வெந்ததும் தண்ணீரை வடிக்கவும். புளி தண்ணீர் 10 நிமிடம் சூடு செய்து வெந்த மீனை போடவும் மேல் கொத்துமல்லித்தழையைத் தூவி பரிமாறவும் ................
-
- 48 replies
- 7.5k views
-
-
மலேசியா, சிங்கப்பூருக்கு செல்லும் நேரங்களில் எல்லாம் நான் அதிக நேரம் செலவு செய்வது புத்தகக்கடைகளில் தான். அதுவும் செய்முறை புத்தகங்களில் ஐந்தையாவாது வாங்காமல் வீடு திரும்புவதில்லை. இரு நாட்டிலும் மலே சமையல், சீன சமையல், இந்திய சமையல், இது அனைத்தும் கலந்த ரீ-மிக்ஸ் சமையல் என கிடைக்கும். அதிலும் உடாங் சம்பல் (இறால் சம்பல்), நசி லமக், முட்டை சம்பல் என்றால் யாருக்கு தான் ஆசை இருக்காது. இதில் முட்டை சம்பல் மிக விரைவில் செய்துவிடக்கூடியது. பல முறைகளில் ஒரு முறை இது. தேவையானவை: முட்டை - 5 செத்தல் - 3 ஸ்ப்ரிங் ஒனியன் - 3 தடல் உள்ளி,இஞ்சி விழுது - 1 மே.க புளி கரைசல் - 1/2 மே.க சோயா சோஸ் - 3/4 மே.க Prawn Paste - 3/4 மே.க எண்ணெய் - 1 மே.க சீனி - 1 தே.க உப்பு…
-
- 15 replies
- 7.5k views
-
-
-
- 8 replies
- 7.5k views
-
-
வணக்கம் உறவுகளே (முக்கியமாக பெண்கள்) எனக்கு சுசியம் செய்யும் முறையை ஆங்கிலத்தில் தர முடியுமா? அதாவது ஒரு சமையல் குறிப்பு. செய்வதற்கு தேவையான பொருட்கள், செய்முறை போன்றவை தேவை. என்னோடு வேலை செய்யும் பெண் எங்கயோ சுசியம் சாப்பிட்டு விட்டு ஒரே உயிரை எடுக்கிறார். தயவு செய்து உங்களால் முடிந்தால் உதவி செய்யவும். நன்றி
-
- 11 replies
- 7.4k views
-
-
-
தேவையான பொருட்கள் கழுவி ஒரு அங்குல நீளத்திற்கு வெட்டிய வெண்டிக்காய் - 10 அல்லது 12 காய்கள் உரித்து, கழுவி, வெட்டிய சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடிகருவேப்பிலை கழுவி, வெட்டிய பச்சை மிளகாய் - 4 அல்லது 5 உடைத்து, சிறிதாக வெட்டிய உள்ளி - 10 பல் வெந்தயம் - ஒரு கைப்பிடி பெருஞ்சீரகம் - தாளிப்பதற்கு சிறிதளவு கடுகு - தாளிப்பதற்கு சிறிதளவு தேங்காய் - பாதி ( முதல் பால் , இரண்டாம் பால் ஆகியவற்றை பிழிந்து எடுத்து வைக்கவும் ) புளி - ஒரு பாக்கு அளவு ( மூன்றாம் தேங்காய்ப்பாலில் கரைத்து வைத்துக்கொள்ளவும்) கருவேப்பிலை - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு யாழ்ப்பாணத்து மிளகாய்த் தூள் - காரத்திற்கு ஏற்ற அளவு செய்முறை 01) ஒரு தாச்சியை…
-
- 24 replies
- 7.4k views
-