நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
இது வீட்டில் அடிக்கடி செய்யும் ஒரு ரெசிபி, உண்மையிலேயே மிகவும் சுவையானது. மனைவியும் மகனும், ஒவ்வொரு கிழைமையும் செய்து தரச்சொல்லி கேட்பார்கள், எனவே அடிக்கடி செய்வதுண்டு. என்ன இந்த மீனின் விலைதான் கொஞ்சம் கையை கடிக்கும். முதலில் Youtubeஇல் சும்மா மேயும் போது பார்த்து செய்தேனா அல்லது இங்கு யாராவது இணைத்ததை பார்த்து செய்தேனா என்று நினைவில்லை. இங்கு யாரவது இதை முதலில் இணைந்திருந்தால் மன்னிக்கவும். இதில் White Wine இற்கு பதிலாக Chicken Broth போடலாம் என்று வேறு எங்கோ பார்த்துவிட்டு, Chicken Broth தான் நான் பாவிப்பதுண்டு, நன்றாகவே இருக்கும். செய்முறை கீழே உள்ளது:
-
- 15 replies
- 1.3k views
-
-
மிக்ஸ்டு வெஜிடபிள் பராத்தா செய்ய... தேவையான பொருட்கள்: கோதுமை மாவு - கால் கிலோ உருளைக்கிழங்கு (வேக வைத்தது மசித்தது) வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது) நறுக்கிய தக்காளி - ஒன்று கொத்தமல்லி, புதினா - சிறிதளவு நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன் எண்ணெய் - கால் கப் உப…
-
- 1 reply
- 591 views
-
-
மிக்ஸ்டு ஸீ ஃபுட் பிரியாணி தேவையானவை: பாஸ்மதி அரிசி - 1 கிலோ வஞ்சிரம் மீன் - 150 கிராம் (சிறு துண்டுகளாக்கவும்) இறால் - 150 கிராம் நண்டு சதை - 150 கிராம் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 200 கிராம் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 5 தக்காளி - 100 கிராம் (பொடியாக நறுக்கவும்) மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன் மல்லித்தூள் - 1 டீஸ்பூன் சீரகத்தூள் - 1 டீஸ்பூன் கரம்மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் தயிர் - 50 மில்லி மல்லித்தழை - 50 கிராம் புதினா இலை - 50 கிராம் எலுமிச்சைப்பழம் - 2 சாறு எடுக்கவும் இஞ்சி பூண்டு விழுது - 50 கிராம் பட்டை - 2 கிராம்பு - 4 ஏலக்காய் - 4 அன்னாசிப்பூ - 1 பிரிஞ்சி இலை - 1 எண்ணெய் - …
-
- 3 replies
- 909 views
-
-
அண்ணையவை, அக்காவை, அப்புமார், ஆச்சிமார் எல்லாருக்கும் ஒண்டு சொல்லிறன். என்னடா இந்தப் பெடியன் எப்ப பாத்தாலும் சாப்பாட்டப் பற்றித்தான் எழுதிறான் எண்டு சொல்லக்கூடாது. சாப்பாட்டுக்காகத் தானே பாருங்கோ எல்லா வேலையும் வெட்டியும். அதால சாப்பாட்டப் பற்றி எழுதிற என்னை நீங்கள் திட்டக்கூடாது... சரியோ!! இப்ப நாங்கள் மிதிவெடி பற்றிக் கதைக்கப் போறம். கொஞ்சப் பேர் என்னடா இந்தப் பொடி சாப்பாட்டப் பற்றிக் கதைக்கிறன் எண்டுட்டு வெடியப் பற்றிக் கதைக்குது எண்டு நினைக்கிறவை கொஞ்சம் பொறுங்கோ. இஞ்ச பாருங்கோ, நான் ஏ. லெவல் படிக்கேக்க, அப்பரிண்ட காசிலை நல்லா சாப்பிட்டுக் குடிச்சுத் திரிஞ்சனான் பாருங்கோ. அடிக்கடி நாங்கள் போற இடம் 'லவ்லி கூல்பார்' எண்டு நெல்லியடீக்க ஒரு இடம். போனா அண்டைக்கு ஒர…
-
- 6 replies
- 1.2k views
-
-
-
மிதிவெடி திருமதி. துஷ்யந்தி அவர்களின் மிதிவெடி குறிப்பினை பார்த்து இமா அவர்கள் முயற்சி செய்த குறிப்பு இது. தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு - 500 கிராம் பச்சைமிளகாய் - 2 முட்டை - 5 + 1 தேங்காய்ப் பால் - கால் கப் வெங்காயம் - ஒன்று கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு - ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - சிறிதளவு இஞ்சி விழுது - அரை தேக்கரண்டி லெமன் சாறு - ஒரு மேசைக்கரண்டி பூண்டு - 2 பற்கள் உப்பு - சுவைக்கு ஏற்ப ஸ்ப்ரிங் ரோல் ஷீட்ஸ் - 20 ரஸ்க் தூள் - ஒரு கப் எண்ணெய் - பொரிக்க செய்முறை தேவையானவற்றை அனைத்தையும் தயார்படுத்தி எடுத்து வைக்கவும். 5 முட்டைகளை மட்ட…
-
- 1 reply
- 923 views
-
-
-
- 5 replies
- 1.3k views
-
-
(ஆந்திரா ஸ்டைல் ஸ்பைசி சிக்கன்) தேவையானவை: சிக்கன் – 250 கிராம் (துண்டுகளாக நறுக்கவும்) காய்ந்த மிளகாய் – 4 பச்சை மிளகாய் – 5 (பொடியாக நறுக்கவும்) காஷ்மீரி மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன் வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் சாஸ் – ஒரு டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு எண்ணெய் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு சிக்கன் துண்டுகள், காஷ்மீரி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து சிக்கனை வேகவிடவும். சிக்கன் மி…
-
- 1 reply
- 657 views
-
-
மிளகாய் சட்னி இட்லி, தோசை எல்லாம் நாம மறக்கறதுக்கு முன்னாடி =;) அதுக்கு ஏத்த ஒரு சைட் டிஷ் இன்னிக்கு பார்க்கலாம். தேவையான பொருட்கள், செய்முறை எல்லாமே ரொம்ப எளிது. சிறுவயதில் இந்த சட்னி வீட்டில் வைத்தால், இட்லி, தோசை எல்லாம் கணக்கில் அடங்காமல் உள்ளே இறங்கும். இப்பவும் ஒன்றும் குறைவில்லை ) ஒரு சில நாட்கள் வரை கெடாமலும் இருக்கும். இந்த அவசர யுகத்தில் ஒரு நாலைந்து நாட்களுக்கு வருமாறு செய்து வைத்துக் கொள்ளலாம். தேவையானவை: வரமிளகாய் - 10 - 12 பூண்டு - 4 பல் சின்ன வெங்காயம் - 10 - 15 தக்காளி - 2 புளி - சிறிதளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். வானலியில் நல்லெண்ணெய் (5 டீஸ்பூன்) விட்டு, காய்ந்த எண்ண…
-
- 4 replies
- 5.2k views
-
-
மிளகாய் சிக்கன் தேவையான பொருட்கள் : சிக்கன் - அரை கிலோ (எலும்பு, தோல் நீக்கியது) சின்ன வெங்காயம் - 50 கிராம், கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன், சிக்கன் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு தாளிக்க : எண்ணெய் - தேவையான அளவு, சோம்பு - 1/2 தே.கரண்டி அல்லது சோம்பு தூள் - 1/4 தே.கரண்டி காய்ந்த மிளகாய் - 8 (காரத்திற்கு ஏற்ப) பூண்டு - 5 பல். செய்முறை : சிக்கனை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொ…
-
- 0 replies
- 1.6k views
-
-
தேவையான பொருட்கள்: நண்டு 2 சிவப்பு மிளகாய் 3-4 தக்காளி கூழ் [Tomato Paste] உள்ளி+இஞ்சி விழுது சீனி சிக்கன் ஸ்டொக் [Chicken Stock] சோளமா லெமன் க்ராஸ் [Lemon Grass] உப்பு செய்முறை: நண்டை சுத்தமாக்கி, நீரினால் கழுவி எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் நண்டை பேப்பர் டவலில் போட்டு நீரை ஒற்றியெடுங்கள். சிறிதளவு சோளமாவில் போட்டு பிரட்டி எடுங்கள். ஒரு சட்டியில் எண்ணெய் விட்டு சூடாக்கி நண்டு துண்டுகளை போட்டு வறுக்கவும். பின்னர் மிளகாய் & லெமன் கிராஸை நன்றாக அரைத்தெடுத்து வைத்துக்கொள்ளுங்கள். வேறு ஒரு சட்டியில் எண்ணெய் போட்டு சூடாக்கி அதில் உள்ளி, இஞ்சி விழுதை போட்டு பச்சை வாசம் போகும் வரை கிளறவும். [2 நிமிடங்கள்] அதில் அரைத்த விழுதை சேர்…
-
- 10 replies
- 4.2k views
-
-
மிளகு கறிவேப்பிலை மீன் வறுவல் : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள்: மீன் 500 கிராம் கறுப்பு மிளகு – 2 தே.க மிளகாய் தூள் 2 தே.க உப்பு –- தே.அளவு இஞ்சி – 2 தே.க பூண்டு – 2 தே.க எலுமிச்சை சாறு –3 தே.க கறிவேப்பிலை – சிறிதளவு கொத்தமல்லி – சிறிதளவு தண்ணீர் – தே.அளவு அரிசி மா/கட.பருப்பு – 2 தே.க தேங்காய் எண்ணெய் – தே.அளவு செய்முறை: முதலில் ஒரு மிக்ஸியில் அரிசி மா மற்றும் எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் எடுத்து ஒரு மென்மையான பேஸ்ட் போல தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். பிறகு அதில் கறுப்பு மிளகு, மிளகாய் தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். அத்துடன் சிறிது அரிசி மா…
-
- 1 reply
- 714 views
-
-
-
-
- 0 replies
- 1.5k views
-
-
தேவையான பொருட்கள் : சிக்கன் – 250 கிராம், வெங்காயம் – 2 சீரகத் தூள் – 1 தேக்கரண்டி மிளகு தூள் – 1 டேபிள் ஸ்பூன் மிளகு – அரை ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 5, மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் உப்பு – சுவைக்கு கொத்தமல்லி தழை – சிறிதளவு தண்ணீர் – தேவையான அளவு செய்முறை : 1 சிக்கனை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும் 2.கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும் 3. சிக்கனில் மஞ்சள் தூள் போட்டு நன்றாக பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். 4.குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாய், மிளகு போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும். 5.வெங்காயம் நன்றாக வதங்கியதும் சிக்கன், சீரகம் தூள், மிளகு தூள…
-
- 2 replies
- 707 views
-
-
மிளகு சீரக மெதுவடை தேவையானப்பொருட்கள்: உளுத்தம் பருப்பு - 1 கப் சாம்பார் வெங்காயம் - 5 முதல் 6 வரை மிளகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் இஞ்சி - ஒரு சிறு துண்டு உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு எண்ணை - பொரித்தெடுப்பதற்கு செய்முறை: உளுத்தம் பருப்பை சுமார் 2 முதல் 3 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் அதை நன்றாகக் கழுவி, நீரை ஒட்ட வடித்து விட்டு கிரைண்டரில் போட்டு, உப்பு மற்றும் இஞ்சியை சேர்த்து மைய அரைக்கவும். அவ்வப்பொழுது சிறிது நீரைத் தெளித்து அரைத்தால் உளுந்து நன்றாக அரைப்பட்டு மென்மையாக இருக்கும். சிறிது மாவை எடுத்து நீரில் போட்டால், அது மிதக்கும். அதுதான் சரியான பதம். அரைத்த மாவில், பொடியான நறுக்கிய வெங்காயம், கொரகொரப்பாக பொ…
-
- 0 replies
- 1k views
-
-
மிளகு பூண்டு குழம்பு பூண்டு உடல் நலத்திற்கு ஏற்ற உணவுப் பொருள். பூண்டின் மணத்திற்குக் காரணமான சல்ஃபர் அதில் உள்ள ஈதர் மனிதர்களின் நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும். எனவே அடிக்கடி நாம் உண்ணும் உணவில் பூண்டு சேர்த்துக் கொள்வது அவசியமாகும். மிளகு பூண்டு குழம்பு சற்றே காரமான உடலுக்கு ஏற்ற சைவ குழம்பாகும். தேவையான பொருட்கள்: மிளகு – 4 டீ ஸ்பூன் சீரகம் – 1 டீ ஸ்பூன் மல்லி - 2 டீ ஸ்பூன் பூண்டு - 20 பல் சின்ன வெங்காயம் - 10 தேங்காய் துருவல் - 3 டீ ஸ்பூன் கடுகு - 1/2 டீ ஸ்பூன் பெருங்காயம் - 1 டீ ஸ்பூன் புளி - எலுமிச்சையளவு கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவையான…
-
- 8 replies
- 10.2k views
-
-
தென்னிந்தியா முழுவதும் பிரபலமான உணவு வகை இது. தமிழர் உணவு பழக்கத்தில் சாம்பாருக்கு அடுத்தபடியாக ரச உணவு என்பது எழுதப்படாத விதி. நேரம் கிடைக்காதவர்கள் அவசரத்திற்கு ஒரு ரசம் வைத்தேன் என்று சொல்லுமளவிற்கு செய்வதற்கு மிகவும் எளிமையானது. அதிக மூலப் பொருட்கள் தேவையில்லை. தக்காளி வதக்கி புளிக்கரைசலில் மிளகு சீரகம் தட்டிப்போட்டு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து எளிய முறையில் சுவையான ரசம் தயாரித்துவிடலாம். உணவு செரிமானத்திற்கு ரசம் அவசியமாகின்றது. பல நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பது ரச உணவுதான். திரவ உணவு என்பதால் எளிதில் ஜீரணம் ஆவதுடன், இதில் சேர்க்கப்படும் மிளகு, சீரகம் போன்றவை உடல் நலத்திற்கும் பெரிதும் உதவுகின்றன. மிளகு ரசம், பருப்பு ரசம், பூண்டு ரசம் ஆகியவை ரச வக…
-
- 3 replies
- 4.3k views
-
-
-
கோழிக்குழம்பு வகைகளில் எனக்கு மிகவும் பிடித்த மிளகுக்கோழி குழம்பின் செய்முறையை சற்றேறக்குறைய 25 நிமிடங்கள் என் அம்மாவிடம் தொலைபேசி வழியாக கேட்டு குறிப்பெடுத்து, இன்று அலுவலகத்திற்கும் 2 மணி நேரம் காலந்தாழ்த்தி வருவதாக கூறி விட்டு வெற்றிகரமாக செய்துமுடித்தேன். நண்பர்களும் முயற்சித்து பார்க்கலாம் முதலில் நாம் செய்முறைக்கான பொருட்களை எடுத்துகொள்வோம். தோல் நீக்கிய கோழி 500 கிராம் மிளகு : 25( காரம் குறைவாக விரும்புவோர் 15 மிளகுகள் போட்டால் போதும்) இஞ்சி : 1 பெரிய துண்டு மஞ்சள் தூள் : 2 தேக்கரண்டி மல்லி தூள் : 1 மேசைக்கரண்டி மிளகாய் தூள் : 1 தேக்கரண்டி பெரிய வெங்காயம் : 1 வெண்ணெய் : 100 கிராம் உங்களின் தேவைக்கேற்ப உப்பிட்டு கொள்ளவும் எலுமிச்சம…
-
- 22 replies
- 7.8k views
-
-
மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் ஃபிஷ் மொய்லி! #WeekEndRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான ஃபிஷ் மொய்லி அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைப் பேராசிரியர் கெளசிக். தேவையானவை: மீன்(ஏதாவது ஒரு வகை) - அரை கிலோ நீளமாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 50 கிராம் கீறிய பச்சை மிளகாய் - 5 இஞ்சி-பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன் எலுமிச்சைசாறு - ஒன்றரை டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் கடுகு - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதள…
-
- 0 replies
- 472 views
-
-
வாங்க இண்டைக்கு எப்பிடி மீன் வாங்கி அதில இருக்க தொப்பிளை வெட்டி எடுக்கிற எண்டும், அந்த தொப்பிள் வச்சு ஒரு பொரியல் செய்யிற எண்டும் பாப்பம், இப்போ மீன் சந்தைகளில் இது தனியாவே விக்கவும் தொடங்கீட்டாங்க, நீங்களும் வாங்கி செய்து பாருங்கோ எப்பிடி வந்தது என்றும் சொல்லுங்கோ என
-
- 3 replies
- 1.1k views
-
-
மீன் - உருளைக்கிழங்கு குருமா இந்த குருமாவிற்கு முள் அதிகமில்லாத மீன் துண்டுகள் சேர்த்து செய்தால் அருமையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மீன் துண்டுகள் - 500 கிராம் உருளைக்கிழங்கு - 2 சிறியது பச்சை மிளகாய் - 2 பெரிய வெங்காயம் - 1 தக்காளி - 2 கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - தேவைக்கு சோம்பு - அரை டீஸ்பூன் பட்டை - மிகச் சிறிய…
-
- 0 replies
- 533 views
-
-
சமையல் என்பது முறை அல்ல, .தொழில் அல்ல..அது ஒரு கலை... என்றுமே எவருக்கும் அம்மாவின் சமையல் சுவைக்கும். உலகம் முழுதும் சுற்றினாலும், பல் நூறு உணவு உண்டாலும், நாக்கின் அடியில் அம்மாவின் உணவின் சுவை என்றுமே ஒட்டியிருந்து, நினைக்கும் நேரத்தில் இனிமை தரும். நான் பல இடங்களில் கை கழுவினாலும் இன்றும் அம்மாவினதும் யாழ்ப்பாண உணவினதும் சுவை என் நாக்கு முழுதும் ஒட்டியிருக்கு. சமையல் கலையில் ஈடுபாடு இருப்பதால், அம்மா எப்படி யாழ்ப்பாண முறையில் சமைத்தார் என்ப்தை அறிய ஆவலாக இருக்கின்றேன் உங்களில் யாருக்கேனும் பின்வரும் உணவை யாழ்பாண முறையில் தயாரிக்கும் முறை தெரிந்தால் தரவும்....வீட்டில் வார இறுதி நாட்களில் சமைத்து பார்க்க ஆவலாக இருக்கின்றேன் 1. மீன் பொரியல் (மிக இலகுவானது …
-
- 25 replies
- 11.7k views
-
-
மீன் ஊறுகாய் தேவையான பொருட்கள் மீன் (முள் நீக்கியது) - 1 கிலோ இஞ்சி - 125 கிராம் பூண்டு - 125 கிராம் கடுகு - 60 கிராம் மஞ்சள் பொடி - 1 மேஜைக்கரண்டி சர்க்கரை - 1 கோப்பை வினிகர் - 400 கிராம் மிளகாய் வற்றல் - 60 கிராம் சீரகம் - 35 கிராம் உப்பு - 2 மேஜைக்கரண்டி கடலை எண்ணெய் - 1/2 கிலோ மிளகாய்தூள் - 1 மேஜைக்கரண்டி செய்முறை 1. மீனை ஒரு அங்குல துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 2. உப்பு, மிளகாய்த்தூள் தடவி 1 மணிநேரம் ஊர வைக்கவும். 3. எண்ணெயை நன்றாக சூடாக்கி மீன் துண்டுகளை பொறித்தெடுக்கவும். 4. இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், சீரகம், கடுகு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். 5. எண்ணெயை சூடாக்கி அரைத்த மசாலாவை நன்றாக வதக…
-
- 0 replies
- 1.5k views
-