நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
தக்காளி சாதம் செய்வது எப்படி ? எங்கே எங்கள் சமையல் தேவதை தூயா ?
-
- 12 replies
- 9k views
-
-
அனைவருக்கும் இனிய கொத்துரொட்டி வணக்கங்கள்... எனக்கு கொத்துரொட்டி எண்டால் நல்ல விருப்பம்.. வீட்டில பக்கத்தில சாப்பாட்டு கடை ஒண்டு இருக்கிது. அதில சிலது கொத்துரொட்டி வாங்கி சாப்பிடுறது. சிலது நான் வீட்டில சொல்லிறது என்ன நான் கடையில வாங்கி சாப்பிட்டது எண்டு. சிலது சொல்லிறது இல்ல.. அப்ப என்ன எண்டால் கொத்துரொட்டி ஆசை வந்த உடன நான் கடைசியா மாட்டு கொத்து ரொட்டி பார்சல் ஒண்டு வாங்கிக்கொண்டு வந்து வீட்டில வச்சு சாப்பிட்டன். கடையில மாட்டு கொத்து மாத்திரம்தான் இருக்கிது எண்டு சொல்லிச்சீனம். சரி எண்டு அத வாங்கினன். பிறகு என்ன எண்டால்.. வீட்ட போன உடன சாப்பாட்டு பார்சலப்பாத்து அம்மா கேட்டா உது என்ன எண்டு. நான் மாட்டுகொத்துரொட்டி எண்டு சொன்னன். ஆ... எண்டு சொல்லி கத்திப்போட்ட…
-
- 52 replies
- 12.5k views
-
-
தேவையானவை தயிர் 1/2 கப் வெள்ளரிக்காய் 1 வெங்காயம் 1 கரட் 1 மிளகு தூள் 3/4 தே.க உப்பு தேவைக்கேற்ப கொத்தமல்லி செய்ய வேண்டியது: 1. வெள்ளரிக்காயையும், வெங்காயத்தையும் சுத்தம் செய்து, சிறிதாக அரிந்தெடுக்கவும். கரட்டை துருவி எடுத்து வைக்கவும். 2. ஒரு பாத்திரத்தில் தயிர், மிளகு தூள், உப்பை சேர்த்து நன்றாக கலக்கவும். (அடிக்க வேண்டாம், தயிர் நீர்ப்பதமாகிவிடும்) 3. அதில் வெட்டிய வெள்ளரிக்காயையும், வெங்காயத்தையும் சேர்க்கவும். இந்த நேரத்தில் சிறிதளவு அரிந்த கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து கலக்கினால் தயிர் சலட் ஆயத்தமாகிவிடும். [சலட் என்பதற்கு என்ன தமிழ்?] செய்முறை: சுவையருவி தூயாவின்ட சமையல்கட்டு
-
- 19 replies
- 3.8k views
-
-
யாழ் உறவுகள் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள், நான் கடந்த இரு வருடங்களாக சமையல் வலைப்பூ ஒன்றை எழுதி வருவது நீங்கள் அறிந்த விடயம். வலைப்பூ உலகில் என்னை போல் பலரும் எழுதி வருகின்றனர். எங்கள் யாழை எடுத்தால் குளக்காட்டான் அண்ணாவும் சமையல் குறிப்புகளை எழுதி வருகின்றார். தமிழ்வலைப்பூக்களில் பல நல்ல சமையல் பதிவுகள் எழுதப்படுகின்றன. இருப்பினும் பலருக்கு பலரை தெரியவில்லை. கருத்தாடல்கள் நடப்பது குறைவாக உள்ளது. இந்த குறையை பற்றி என்னுடைய சமையல்கட்டில் விவாதித்ததின் பலனாக இந்த வலைப்பூவை ஆரம்பிக்கின்றோம். இது ஒரு திரட்டியாகவும், சமையல்கட்டுக்களை இணைக்கும் பாலமாகவும் இருந்து தமிழ் சமையலை வளர்க்கும் என நம்புகின்றோம். நம்மண்ணின் சமையல்குறிப்புகள் அப்படியே மறைந்துவிடாமல் இணையத்தின…
-
- 0 replies
- 2.1k views
-
-
சோயா இறைச்சி பொரியல் தேவையான பொருட்கள் 2 பேருக்கு 50 கிராம் - சோயா மீற்/ chunks/இறைச்சி 2- பெரிய சிவப்பு வெங்காயம் 3 தே.கரண்டி - யாழ்ப்பாண கறி தூள் (கனடாவிலை நிறைய வகை கறி தூள் இருக்கிறதாலை நம்ம ஊர் கறி தூளுக்கு யாழ்ப்பாண கறி தூள் எண்டு பெயர் போட்டிருக்கும்) சுவைக்கேற்ப - உப்பு 1/4 தே. கரண்டி - மஞ்சள் தூள் 5 மேசை கரண்டி - நல்லெண்ணேய்/ சூரிய காந்தி எண்ணேய் 3 கப் - சுடு நீர் 2 நெட்டு - கறி வேப்பிலை 1- தேசிக்காய் செய்முறை நன்கு கொதித்த சுடு நீரை மூடக்கூடிய ஒரு பாத்திரத்தில் இட்டு சுவைக்கு உப்பு சேர்த்து அதனுள் சோயா இறைச்சியை கொட்டி 10 நிமிடம் மூடி ஊற வைக்கவும் வெங்காயத்தை தோல் உரித்து, நீளம் நீளமாக வெட்டி கொள்ளவும் வெ…
-
- 14 replies
- 5.8k views
-
-
-
- 6 replies
- 2.3k views
-
-
ஓரு வீட்டில் சாப்பிடச்சென்றிருந்தேன். பால் விடாமல் தனியே புளியில் கறி வைத்திருந்தார்கள். எப்படி செய்தார்கள் என்று கேட்க வெட்கத்தில் வந்துவிட்டேன். உருளைக்கிழங்கும் வெங்காயமும் இருந்தது. நன்றாக வறண்ட கறியாக உறைப்பாக ருசியாக இருந்தது. எப்படி செய்வது தெரிந்தவர்கள் உதவுங்கள்
-
- 20 replies
- 8.4k views
-
-
வெந்தயக் குழம்பு - சசிகலா வியாழன், 26 ஜூன் 2008( 11:49 IST ) உடலுக்கு குளிர்ச்சியும், வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளையும் தீர்க்க மாதம் ஒரு முறையாவது வெந்தயக் குழம்பு செய்து சாப்பிடுவது நல்ல பலன்களைத் தரும். இரண்டு பேருக்கு தேவையான வெந்தயக் குழம்பு செய்வதற்கான வழி முறை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியவை வெங்காயம் - 2 தக்காளி - 2 புளி - எலுமிச்சை அளவு வெந்தயம் - அரை தேக்கரண்டி மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி தனியா தூள் - 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி தேங்காய் - 2 பத்தைகள் உப்பு - தேவையான அளவு இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி கொத்துமல்லி, கறிவேப்பிலை கடுகு, எண்ணெய் - தாளிக்க …
-
- 18 replies
- 11.4k views
-
-
Coconut Sorbet ரொம்ப நாட்களாக சமையல்கட்டிற்கு விடுமுறை விட்டாச்சு. இனிமேலும் விடுமுறை எடுத்தால் சமையல்கட்டிற்கே மரியாதை இல்லாமல் போய்விடுமே. இங்கு எங்களுக்கு நல்ல குளிர். குளிரில் குளிர்களி சாப்பிடுவது தானே எங்களுக்கு மிகவும் பிடித்த விடயம். எப்போதும் குளிர்களி சாப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. புதிதாக ஏதும் முயற்சிக்கலாமே என நினைக்கும் போது தான் என் அண்ணன் ஒருவர் கற்றுத்தந்த தேங்காய் சோர்பற் நினைவுக்கு வந்தது. தேவையான பொருட்கள்: சீனி 1 கப் தேங்காய் பால் 3/4 கப் தண்ணி 1 கப் துருவி காயவைத்த தேங்காய் பூ 1/2 கப் தேசிக்காய் புளி 1 தே.க மின்ற் இலை செய்முறை: 1. ஒரு பாத்திரத்தில் சீனியையும், நீரையும் சேர்த்து கொதிக்க வைக்கவும். சீனி நன்றாக க…
-
- 9 replies
- 3.1k views
-
-
உடாங் சம்பல் உடாங் என்றால் மலே மொழியில் "இறால்" என்று பொருள்படும்.இந்த சம்பலை செய்ய பலமுறைகள் உள்ளன.இது மிக சுலபமான ஒரு முறை. உறைப்பு அதிகம் பிடிக்காதவர்கள் செத்தல் மிளகாயை குறைத்து போடுங்கள். தேவையான பொருட்கள்: 300 இறால் (பெரியது) 3 - 4 மேசைகரண்டி தேங்காய் எண்ணெய் அரைக்க: 5 செத்தல் மிளகாய் (நீரில் 5 நிமிடங்களுக்கு ஊறவையுங்க) 2 சிகப்பு மிளகாய் 4 வெங்காய தடல் 2 உள்ளி பல்லு 2 கான்டில் நட் (இருந்தா போடுங்க, இல்லை என்றால் அவசியமில்லை) 1/2 தேசிக்காய் தூவ: 1/2 மேசைகரண்டி சீனி உப்பு தேவைக்கு ஏற்ப போடுங்க 1/4 மேசைகரண்டி சிக்கின் ஸ்டொக் தூள் செய்முறை: 1. ஒரு சட்டியில் எண்ணெய் விட்டு சிறிது சூடாக்கவும். 2. அரை…
-
- 52 replies
- 12k views
-
-
எங்க சொதி உலகத்தில் இத்தனை பிரபலம் என எனக்கு தெரியாது. சொதி செய்முறை தெரியுமா? சொதி என்றால் என்ன? சொதி செய்முறை எப்ப எழுதுறிங்க என பல உறவுகள் கேட்டுக்கொண்டேயுள்ளனர். எத்தனை நாளுக்கு தான் "விரைவில் எழுதுகிறேன்" என ஏமாற்றுவது. சொதியில் பல வகை உண்டு: சைவம் & அசைவம். சைவ சொதியில் வெள்ளைச்சொதி, மஞ்சள் சொதி என இருவகை உண்டு. அசைவத்தில்....அப்பப்பா எண்ணிலடங்கா..சுவையோ சொல்லில் அடங்கா...இதெல்லாம் அனுபவிச்சு பார்க்கணும்..செய்முறைய படிச்சமா, பதில் போட்டமா என இருக்காமல் ஒரு தடவை சமைத்து உண்டு தான் பாருங்களேன். அதன் பின்னர் நீங்களும் "சொதி ஸ்பெஸலிஸ்ட்" (யாராவது தமிழ்படுத்தி தாருங்கள்) ஆகிடுவிங்க. அசைவத்தில் முட்டை சொதி, மீன் சொதி, இறால் சொதி, இறைச்சி சொதி, கருவாட்டு சொத…
-
- 37 replies
- 9.9k views
-
-
ஹலோ எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா நண்பர்க$லே ....வீடு குடி போக பலகாரம் செய்வார்கள் தானே என்ன பலகாரம் செய்யணும் அதன் செய்முறையையும் கூற முடியுமா நண்பர்களே... அதோடு பால்ரொட்டி எப்படி செய்வார்கள் அதன் செய்முறையையும் ப்லீஸ் ஹெல்ப் பண்ணவும்.....னன்றி
-
- 8 replies
- 11.1k views
-
-
இடிச்ச சம்பலை பற்றி சொல்ல வேண்டும் என்றால், ஈழத்தவர்களிடையே மிகவும் பிரபல்யமான உணவு வகை என்பதை தான் முதலில் சொல்ல வேண்டும். இடி சம்பல் / இடிச்ச சம்பல் என செல்ல பெயர்களால் அழைக்கப்படும் இந்த சம்பல் ஈழத்தில் அனைத்து ஊர்களிலும் பிரபலம் (என்ன உறைப்பு தான் ஊருக்கு ஊர் கூடி குறையும்). அதே இது சமயம் தினமும் செய்யும் ஒரு சாதாரண உணவும் கூட. ஈழத்தில் தென்னை மரங்கள் அதிகம் இருப்பதால் சம்பல் தினமும் செய்வது அந்த காலங்களில் ஒரு பிரச்சனையாகவே இருந்ததில்லை. ஆனால் இந்நாளில் தலையில்லாமல் இருக்கும் தென்னை மரங்கள் தானே ஈழத்தில் அதிகம். இடிச்ச சம்பலின் சுவையறியாதவர்கள் (ஈழத்தவர்கள்) இருக்க முடியுமா? இடியப்பம், பிட்டு, பாண், தோசை, இட்லி, ரொட்டி என எந்த ஒரு உணவை எடுத்தாலும் இடிச்ச சம்பல் …
-
- 12 replies
- 7.3k views
-
-
-
Butter Chicken ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 2 replies
- 2.8k views
-
-
வணக்கம், இண்டைக்கு அப்பா நல்ல இனிப்புத் தோடம்பழங்கள் கொஞ்சம் கடையுல வாங்கி வந்தார். உறிச்சுச் சாப்பிட அந்தமாதிரி இருந்திச்சிது. நானும் கடையில் தோடம்பழம் வாங்கிறதுதான் ஆனால் நல்ல இனிப்பா கிடைக்காது. எப்பவாவது இருந்திட்டி நல்ல இனிப்பு தோடம்பழம் கிடைக்கும். கடையில தோடம்பழத்த வாங்கேக்க நல்ல இனிப்பானதா எப்பிடி பாத்து வாங்கிறது எண்டு உங்கள் யாருக்கும் தெரிஞ்சால் கொஞ்சம் சொல்லுங்கோ. ஹிஹி நல்ல இனிப்புத் தோடம்பழம் எண்டால் நல்ல செம்மஞ்சள் நிறத்தில இருக்குமோ? தோல் கொஞ்சம் பாரமாக இருப்பதோட உள் பழத்துடன் இறுக்கமாக ஒட்டிப்பிடிக்காமலும் இருக்குமோ? உங்கட ஊருகளில இனிப்புத் தோடம்பழம் வாங்க ஏலுமோ? நன்றி!
-
- 6 replies
- 2.6k views
-
-
வீட்டில் அடிக்கடி செய்யும் பதார்த்த என்பதாலேயே என்னமோ சீனிசம்பல் செய்முறை எழுதணும் என தோணவேயில்லை. யாழில் சகோதரன் லீ கேட்டுக்கொண்டதிற்காக செய்முறையை எழுதியே ஆகணும் என தோன்றி எழுதுகின்றேன். சீனிசம்பல் என்றதும் “அடப்பாவிகளா சக்கரையிலுமா சம்பல்?” என என்னிடமே பலர் கேட்டதுண்டு. யாரோ பேர் வச்ச மகராசன் இப்படி வச்சிட்டான். நாங்க இப்ப பதில் சொல்லிட்டு இருக்க வேண்டியிருக்கு. சீனிசம்பல் என பெயர் இருந்தாலும் இதில் வெங்காயம் தான் முதன்மை வகிக்கின்றது. உச்சரிக்கும் போது “சீனிச்சம்பல்” என சொல்லலாம். பொதுவா எந்த வித வெங்காயத்திலும் சீனிசம்பல் செய்யலாம். ஆனால் சின்ன வெங்காயத்தில் செய்வது போல சுவை வேறெதெற்கும் கிடையாது என்றத ஒத்துக்கொண்டே ஆகணும். எங்க அண்டை நாட்டுக்காரங…
-
- 14 replies
- 7.1k views
-
-
இது எங்கள் அண்டை நாடான இலங்கையில் மிகவும் பிரச்சித்தம் பெற்ற ஒரு உணவு பதார்த்தம். மஞ்சள் சாதமும், அசைவ கறி என்றால் நிச்சயம் இது இருக்கும் என்றே சொல்லலாம் என நினைக்கின்றேன். காரணம் இதன் சுவை தான். பல தடவை இதை சாப்பிட்ட அனுபவத்தில் தான் சொல்கின்றேன். சில மாற்றங்களுடன் இந்த செய்முறையை அமைத்துள்ளேன். விருந்தாளிகளுக்கு சமைக்கும் போது இது நிச்சயம் ஒரு சுவையான பதார்த்தமாக இருக்கும். தேவையானவை: கத்தரிக்காய் 250 கிராம் வினிகர் 2 மே.க அரைத்த கடுகு 2 தே.க அரைத்த மிளகு 1 தே.க மஞ்சள் தூள் 1/2 தே.க உப்பு தேவைக்கேற்ப பொரிப்பதற்கு எண்ணெய் செய்முறை: 1. கத்தரிக்காயை சுத்தம் செய்து இரண்டு இஞ்சிற்கு நீளவாக்கில் வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். 2. சட்டியில் எண…
-
- 25 replies
- 8.6k views
-
-
பொதுவா நாம முட்டை பொறியல் செய்யும் போது வெங்காயம், மிளகாயை சின்னதா அரிந்து அதை முட்டையுடன் போட்டு நல்லா அடிச்சு பொரிப்பம். ஆனால் இதில தனி தனியா செய்யனும். அவ்வளவு தான் வித்தியாசம். ஆனால் சுவையில் வித்தியாசம் கட்டாயம இருக்கு. தேவையானது: 3 முட்டை 1 வெங்காயம் 2 பச்சை மிளகாய் 1 தே.க மிளகுத்தூள் 1/2 தே.க உள்ளி+இஞ்சி விழுது உப்பு தேவைக்கேற்ப கறிவேப்பிலை கொத்தமல்லி இலை [வேணும்னா போட்டுக்கலாம். தப்பில்லை] செய்ய வேண்டியது: 1. ஒரு சட்டியில் எண்ணெயை சற்றே சூடாக்கி அதில் வெங்காயம், பச்சை மிளகாயை 2 நிமிடன்ங்களுக்கு வதக்குங்க. வதங்கிட்டு இருக்கிற நேரத்தில முட்டையை உடைத்து ஒரு சட்டியில் போட்டு நன்றாக அடித்து வையுங்க. உப்பு உப்பும், மிளகுத்தூளும் முட்டையோடவே ச…
-
- 27 replies
- 5.6k views
-
-
இங்கு எந்தவொரு இந்திய உணவகத்திற்கு சென்றாலும் எப்போதும் கிடைக்க கூடியது பாலக் பன்னீர். பன்னீரும், ஸ்பினச் கீரையும் சேர்த்து செய்திருப்பார்கள். சின்ன வயதில் எனக்கு பாலக் பன்னீரை கண்ணிலும் காட்டக் கூடாது. அதற்கு காரணம் பக்கத்து வீட்டு கிழவி தான். என் பெரியண்ணனும், அவரின் பேரனும் நண்பர்கள். ஆக அடிக்கடி கிழவியின் சமையலை சாப்பிட வேண்டிய கட்டாயம் இருந்தது. பச்சை களியில் பன்னீரை பார்த்தாலே எனக்கு பிடிக்காது. வளரும் பிள்ளைக்கு தேவை என சாப்பிட வைத்து வைத்து பின்னாளில் பலக் பன்னீர் பழகிப்போனது. அம்மம்மா, அப்பாச்சி என யாரும் கூட இல்லாததால், கிழவி மேல் அன்பு அதிகம் தான். கிழவி இப்போ இல்லை. நினைவு வரும் போதெல்லாம் பாலக் பன்னீர் நிச்சயம் செய்வேன். பொதுவாக கீரையும், பன்னீரும் சேர்ப்பார்…
-
- 9 replies
- 4.3k views
-
-
அதென்ன கத்தரி சாம்பார் என்று கேட்பிங்களே? நீங்க கேட்காட்டியும் நான் சொல்லிதான் தீருவேன். வீடுகளில் பொதுவாக வெங்காய சாம்பார் அடிக்கடி வைப்பார்கள். அதே செய்முறையில் வெங்காயத்திற்கு பதில் கத்தரிக்கயை போட்டால் எப்படி இருக்கும் என ஒரு கேள்வி என்னுள்ளே. உடனே அதை பரிசோதித்து தான் பார்த்திடுவமே என ஆரம்பித்தேன். [நீ சமைப்பதே ஒரு பரிசோதனை தானே என்ற கேள்வியெல்லாம் இங்கே வேலைக்காகாது] தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் 1 துவரம் பருப்பு 1/2 கப் மிளகாய் வத்தல் 5 துருவிய தேங்காய் 2 மே.க வெந்தயம் 1/2 மே.க மல்லி 1 மே.க கடலை பருப்பு 1 மே.க மஞ்சள்தூள் 1/2 தே.க புளிகரைசல் 1 மே.க கடுகு 1/2 தே.க கறிவேப்பிலை 1கெட்டு எண்ணெய் 1/2 மே.க பெருங்காயம் - கொஞ்சமா உப்பு [தேவ…
-
- 2 replies
- 2.7k views
-
-
தேவையான பொருட்கள் 10 லீற்றர் தண்ணீர் 6 சித்திரோன்(மஞ்சள் எலுமிச்சை) 6 லெமன் ( பச்சை எலுமிச்சை) 6 ஒறேன்ஞ்( சாத்துக்குடி/ஒறேன்ஞ் தோடம்பழம்) சிறிதளவு மின்ஸ் இலை 10 லீற்றர் தண்ணீருக்கு தேள்வையான அளவு தேயிலை தூள். 500 g சீனி/சர்கரை. செய்முறை முதலில் சித்திரோன்,லெமன்,ஒறேன்ஞ் மூண்றினது தோலையும் சீவி, துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் இட்டு, நன்று கசக்கவும். இத்தோடு மின்ஸ் இலையையும் துண்டாக நறுக்கி கசக்கவும். தண்ணீரை அடுப்பில் வைத்து நன்று கொதிக்கவைக்கவும், கொதித்தவுடன் தேயிலை தூளை போட்டு, சீனியுடன் கலக்கவும், சாயம் இறங்கியபின்னர் வடித்து, பழங்களை கசக்கிவைத்த பத்தித்திரத்துக்குள் கொதிக்க கொதிக்க ஊற்றவும், சிறிது நேரத்தின் பின் அதனை மீண்டும் வடித்து…
-
- 6 replies
- 2.8k views
-
-
மீன் முருங்கைக்காய் குழம்பு தேவையான பொருள்கள் மீன் - 1/2 கிலோ முருங்கைக்காய் நறுக்கியது - 150கிராம் மல்லித்தூள் - 100கிராம் சிவப்பு மிளகாய் - 8கிராம் மஞ்சள் தூள் - 2கிராம் மிளகுத்தூள் - 4கிராம் வெந்தயம் - 2கிராம் தேங்காய் எண்ணெய் - 50மிலி தேங்காய் - 1 வெங்காயம் - 300கிராம் கொடும்புளி(Cocum) - 15கிராம் உப்பு - தேவையான அளவு தக்காளி - 80கிராம் இஞ்சி, பூண்டு கலவை - 10கிராம் கடுகு - 3கிராம் கருவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு சமையல் குறிப்பு விபரம் செய்வது: எளிது நபர்கள்: 4 கலோரி அளவு: NA தயாராகும் நேரம்: 20 (நிமிடம்) சமைக்கும் நேரம்: 30 (நிமிடம்) முன்…
-
- 9 replies
- 4.7k views
-
-
மலேசியா, சிங்கப்பூருக்கு செல்லும் நேரங்களில் எல்லாம் நான் அதிக நேரம் செலவு செய்வது புத்தகக்கடைகளில் தான். அதுவும் செய்முறை புத்தகங்களில் ஐந்தையாவாது வாங்காமல் வீடு திரும்புவதில்லை. இரு நாட்டிலும் மலே சமையல், சீன சமையல், இந்திய சமையல், இது அனைத்தும் கலந்த ரீ-மிக்ஸ் சமையல் என கிடைக்கும். அதிலும் உடாங் சம்பல் (இறால் சம்பல்), நசி லமக், முட்டை சம்பல் என்றால் யாருக்கு தான் ஆசை இருக்காது. இதில் முட்டை சம்பல் மிக விரைவில் செய்துவிடக்கூடியது. பல முறைகளில் ஒரு முறை இது. தேவையானவை: முட்டை - 5 செத்தல் - 3 ஸ்ப்ரிங் ஒனியன் - 3 தடல் உள்ளி,இஞ்சி விழுது - 1 மே.க புளி கரைசல் - 1/2 மே.க சோயா சோஸ் - 3/4 மே.க Prawn Paste - 3/4 மே.க எண்ணெய் - 1 மே.க சீனி - 1 தே.க உப்பு…
-
- 15 replies
- 7.5k views
-
-
மிகவும் இலகுவாக, உடனே தாயாரிக்க கூடிய பக்க உணவு என்றால் அது வெங்காய சம்பல் தான். இதையே onion salad / onion raita என்றும் அழைக்கிறார்கள். நாங்க வெங்காய சம்பல் என அழைப்போம். "சம்பல்" என்ற வார்த்தையை மொத்தமா குத்தகைக்கு எடுத்திருக்கமே! அசைவ உணவு வகைகளுக்கு இந்த வெங்காய சம்பல் சுவையை அதிகமாக்கும். பிரியாணி, சப்பாத்தி, ரொட்டி, பூரி என எதுவாகினும் சேர்த்து உண்ண அசைவம் இருக்கும் வேளையில், இந்த வெங்காய சம்பல் போல ஒரு உற்ற தோழன் கிடைக்கமாட்டுது. தேவையானவை: வெங்காயம் 1 மிளகாய் 1 மிளகு தூள் 1 தே.க தயிர் 3 மே.க உப்பு தேவைக்கேற்ப செய்முறை; 1. வெங்காயத்தின் தோலை உறித்து, நீரில் கழுவி, நீளவாக்கில் மெல்லியதாக அரிந்துகொள்ளுங்கள். [என் நேரம் இதையெல்லாம் எழுதிட்டு…
-
- 11 replies
- 9.1k views
-