நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
634 topics in this forum
-
சமூகவிரோதிகளிடமிருந்து ஈழபதீஸ்வரரை மீட்க மாபெரும் ஆர்ப்பாட்டம்! இடம்: ஈழபதீஸ்வரர் ஆலய முன்பாக ஈலிங் ரோட் வெம்பிளி காலம்: 27ஃ05ஃ2006, சனி முற்பகல் 11.00 மணி தொடக்கம், பிற்பகல் 1.00 மணி வரை அருகிலுள்ள புகையிரத நிலையங்கள்: அல்பேட்டன், வெம்பிளி சென்ரல் லண்டன் வாழ் சைவத்தமிழ் அடியார்களே! கடந்த எட்டு வருடங்களாக வெம்பிளி ஈலிங் ரோட்டில் எழுந்தருளியிருக்கும் ஈழபதீஸ்வரர் ஆலயம், "உண்டியலான்" ஜெயதேவன் உட்பட்ட சில சமூகவிரோதிகளின் கைகளில் சிக்கித் தவிக்கின்றது. எம்மக்களுக்காக, எம்மக்களின் பணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வாலயம், இன்று லிமிட்டெட் கம்பனியாக மாற்றப்பட்டு, உண்டியல் கணக்கு, வழக்குகள் மறைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுக் கொண்…
-
- 5 replies
- 2.1k views
-
-
"மெட்ராஸ் ஸ்டேட்" (சென்னை ராஜ்ஜியம்) என்ற பெயரை அடியோடு ஒழித்து, "தமிழ் நாடு" என்று பெயர் சூட்ட வகை செய்யும் தீர்மானம், தமிழ் நாடு சட்டசபையில் நிறைவேறியது. காங்கிரஸ் ஆட்சியின்போது, தமிழில் மட்டும் "தமிழ் நாடு" என்று அழைக்கப்பட்டாலும், ஆங்கிலத்தில் "மெட்ராஸ் ஸ்டேட்" என்றே குறிப்பிடப்பட்டது. "மெட்ராஸ் ஸ்டேட்" என்ற பெயரை அடியோடு ஒழித்து, "தமிழ் நாடு" என்று பெயரைச் சூட்ட வேண்டும் என்று தி.மு.க. அரசு முடிவு செய்தது. இதற்காக அரசியல் சட்டத்தை திருத்தவேண்டும் என்ற தீர்மானத்தை, தமிழக சட்டசபையில் 18-7-1967 அன்று முதல்_அமைச்சர் அண்ணா கொண்டு வந்தார். கூட்டத்துக்கு சபாநாயகர் சி.பா.ஆதித்தனார் தலைமை தாங்கினார். "தமிழ் நாடு" என்று பெயர் சூட்ட அனைத்துக்கட்சியினரும் ஆதரவு தெரிவித…
-
- 5 replies
- 3.6k views
-
-
இளையவர்களின் திறமைக்கான மேடையாக அமைந்த "தமிழ் காத்து -2013" தமிழிதழ் இணைய ஆதரவில் சுவிஸ் - பாசெல் மாநகரில் "TRX தமிழ் காற்று" வானொலியின் ஐந்தாவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஐரோப்பா வாழ் ஈழத்து கலைஞர்களை ஒன்றிணைத்து அரங்கம் நிறைந்த பார்வையாளர்களுடன் 10.02.2013 அன்று மாபெரும் நிகழ்வாக நடைபெற்றது TRX இன் "தமிழ் காத்து - 2013" நிகழ்வு. வருடாவருடம் நடைபெறும் இந்நிகழ்வானது இவ்வருடம் மிகச்சிறப்பாக நடைபெற்றதனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. "TRX "தமிழ் காத்து - 2013" நிகழ்வில் ஈழத்தமிழ் கலைஞர்களின் திறமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் பல்வேறு கலை இலக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன. குறிப்பாக.... மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக "அரும…
-
- 5 replies
- 923 views
-
-
யாழ்.இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கெளரவிப்பு விழா.! யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் Covid-19 இடர்காலத்தில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர்களுக்கான கெளரவிப்பு விழா தமிழர் தலைநிமிர் கழகமாம் யாழ் இந்துவின் மற்றொரு வரலாறு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படுகின்ற நாளாக 12.07.2020 அமைந்தது. கொரோனா இடர்காலத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இந்துவின் சமூகம் பழையமாணவர் சங்கத்தினால் கௌரவிக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் கிரீன் கிறாஸ் மண்டபத்தில் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இவ்விழாவானது கல்லூரி சமூகத்தின் ஒன்றுகூடல் மற்றும் மதியபோசன விழாவுடன் நடைபெற்றது.அத்துடன் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட 94 பேர் கௌரவிக்கப்பட்டனர். கொரோனா இட…
-
- 5 replies
- 1.2k views
-
-
"இளைய மகளுக்கு அகவை திருநாள் வாழ்த்துக்கள்!" / "Happy Birthday to our youngest daughter!" [02/02/ 2025] "பெப்ரவரி இரண்டாம்நாளில் நீலவானத்தின் கீழ்பிறந்தவளே அதிசயமாக வந்தவளே இன்று கொண்டாடுகிறோம்! பெருமைக்குரிய இளையமகளே கலங்கரை விளக்கே அம்மாவின் வாழ்த்து விண்ணில் ஒலிக்கிறேதே!!" "அன்னை வளர்ப்பில் அறிவோடு வளர்ந்து இன்பம் துன்பம் இரண்டையும் அனுபவித்து உன்னை அறிந்து பிறரை உணர்ந்து இன்று கொண்டாடுகிறாய் அகவை நாளை!" "உறுதியான கைகளுடனும் அன்பான இதயத்துடனும், மகிழ்வான புன்னகை ஆறுதல் தருகிறதே! கணவரும் மூன்று மழலைகளும் வாழ்த்த அன்பிலும் சிரிப்பிலும் நீங்கள் செழிப்பீர்களே!!" "பிறந்த நாள் இன்று உனக்காம் பிரகாசமாய் வாழ்வு…
-
-
- 5 replies
- 409 views
-
-
லண்டனில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் மாதம் 14 ம் 15 ந் திகதிகளில் காண்பதற்கு ஆயத்தமாகுங்கள்.
-
- 5 replies
- 2.5k views
-
-
சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் கூடிய பூரணையே சித்திரா பூரணையாகும். அன்று சித்திரகுப்த விரதம் நோற்பார்கள். அந்த நாளில் பொங்கி வழியும் பால் நிலவைப் போல் மக்கள் உள்ளமும் மகிழ்ச்சியில் பொங்கித் திளைக்கும். அந்நாளில் பொங்கலிட்டுத் தெய்வங்களை மக்கள் வழிபட்டு விழாவாற்றி வந்தார்கள். ஏழைகளுக்கு கஞ்சி காய்ச்சி ஊற்றுவார்கள். இதற்கு சித்திரைக் கஞ்சி என்று பெயர், மாலையில் சித்திரகுப்தருடைய கதையை ஒருவர் வாசிக்க மற்றவர்கள் எல்லாரும் பயபக்தியுடன் கதையைக் கேட்டு அனுபவிப்பார்கள். பொன், வெள்ளி இவைகளாலான பதுமையில் சித்திர குப்தனை இருத்தி நியமப்படி வழிபாடு செய்ய வேண்டும். அன்னம், வெல்லத்துடன் கலந்த எள், பால். நெய் முதலியவை படைத்து வழிபாட்டின் முடிவில் பாயாசம் நிறைந்த வெண்கலப் பாத்திரம் …
-
- 5 replies
- 1.4k views
-
-
யாழ்.கள மூத்த உறுப்பினராகிய.. தமிழ்சூரியன், (இரா. சேகர்) ஐரோப்பிய இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து நடத்தும் நிகழ்ச்சி. வருகின்ற சனிக்கிழமை (16.06.18) காணத் தவறாதீர்கள்.
-
- 5 replies
- 1.7k views
-
-
செஞ்சோலை சிறுவர் படுகொலை செய்யபட்ட ஒராண்டு நினைவை ஓட்டி சிட்னி தமிழ் இளைஞர் அமைப்பு செஞ்சிலுவைசங்கதிற்கு இரத்த தானம் கொடுகிறார்கள் இது நாளை ஞாயிற்றுகிழமை காலை 8 மணி முதல் நடைபெறும் பரமத்தா செஞ்சிலுவைசங்க வளாகத்தில் நடைபெறும்,விரும்பிய அவுஸ்ரெலிய உறவுகள் பங்குபற்றி அவர்களிற்கு வலுசேர்கலாம்.
-
- 5 replies
- 2.5k views
-
-
France புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் + பாரதி விளையாட்டுக்கழகம் = முத்தமிழ்விழாவின் முன்னோடி நிகழ்வான அறிவுத்திறன் போட்டி அறிவித்தல்
-
- 5 replies
- 951 views
-
-
தாய், தந்தையருக்கு.... அடுத்த இடத்தில் மதிக்கப் படுபவர்கள் ஆசிரியர்கள். இன்று நாம்... உலகத்தை புரிந்து கொள்ளவும், சமூகத்தில் நல் மதிப்புள்ள மனிதராக வாழவும்... அவர்கள் கற்றுத் தந்த படங்களே... வழி காட்டியாக உள்ளன. எம்மை... இந்த நிலைக்கு, கொண்டு வந்த.. ஆசிரிய பெரு மக்களை, இந்த நாளில் நினைவு கூருவோம். உங்களுக்கும், ஆசிரியருக்கும் இடையில் நடந்த... சுவையான, சம்பவங்களையும் எழுதுங்களேன்.
-
- 4 replies
- 985 views
-
-
ஆனந்தி சூர்யபிரகாசம் தலைமையில் சர்வதேச தமிழ் செய்;தியாளர் ஒன்றியம் உதயம் [புதன்கிழமை, 19 ஏப்ரல் 2006, 01:06 ஈழம்] [ம.சேரமான்] இலண்டனைத் தலைமையகமாகக் கொண்டு சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் கடந்த 9ஆம் நாள் உதயமாகியுள்ளது. இது தொடர்பாக சர்வதேச தமிழ் செய்;தியாளர் ஓன்றியம் விடுத்துள்ள அறிக்கை: உலகெங்கும் வாழும் தமிழ் செய்தியாளர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் நோக்குடன் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் என்ற அமைப்பு இலண்டனில் தொடங்கப்பட்டுள்ளது. பத்திரிகை, சஞ்சிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையத் தளங்கள் முதலான அனைத்து செய்தி ஊடகங்களிலும் பணியாற்றுபவர்களும் செய்தி ஊடகங்களுடன் தொடர்புள்ள செய்தியாளர்களும் எழுத்தாளர்களும் இந்த அமைப்பில் இணைந்து …
-
- 4 replies
- 2k views
-
-
யாழில் இரு நூல்கள் அறிமுகமும் கலந்துரையாடலும் மரணம் இழப்பு மலர்தல் & பிரக்ஞை ஒரு அறிமுகம் தலைமை - யாழ் பல்கலைக்கழ நூலகர் - சிறிஅருள் உரையாற்றுபவர்கள் படைப்பாளரும் விமர்சகரும் - தமிழ் கவி எழுத்தாளரும் விமர்சகரும் - கருணாகரன் --------------------------------------------- - நிலாந்தன் மனநல வைத்திய நிபுணர் - சிவயோகன் இடம் - தியாகி அறக்கட்டளை மண்டபம் (TCT) (நாவலர் மண்டபத்திற்கு முன்பாக) நாவலர் வீதி - யாழ்ப்பாணம் திகதி - 08.12.2013 நாள் - ஞாயிற்றுக் கிழமை நேரம் - மாலை 4.00 மணி வழமையாக தாமதாமாக வருகின்றவர்களுக்கு மாலை 4.00 மணி வழமையாக குறிப்பிட்ட நேரத்திற்கு வருகின்றவர்களுக்கு மாலை 4.30 மணி அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
-
- 4 replies
- 1.1k views
-
-
"உண்டியலான்" ஜெயதேவனுக்கு எதிராக மனைவி போர்க்கொடி! இரண்டாவது மனைவி சாந்தாவை சந்திக்க முடியாத நிலையில் உண்டியலான்! கடந்த சில வாரங்களாக லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தை உண்டியலானிடமிருந்து மீட்க நடைபெற்றுவரும் தொடர் போராட்டங்களின் வரிசையில் இம்மாதம் 28ம் திகதி சனிக்கிழமை மதியம் 11.00 மணி தொடக்கம், பிற்பகல் 2.00 மணி வரை பாரிய ஆர்ப்பாட்டம் பிரித்தானிய பாதுகாப்புத்துறையினரின் அனுமதியுடன், வெம்பிளி ஈலிங் றோட்டில் அமைந்திருக்கும் ஆலய முன்றலில் நடைபெற இருக்கின்றது. * ஆலயத்தை பொதுமக்களிடம் ஒப்படை! * கடந்த 8 வருடங்களாக உண்டியலில் கொள்ளையடித்த பணங்களை திருப்பி ஒப்படை! * ஆலயத்தை சமூக விரோதிகளின் சரணாலயமாக்காதே! * பிறர் மனைவிகளை அபகரிக்காதே! * ஆலயத்தில் காமலீலைகளை உடன் ந…
-
- 4 replies
- 2.1k views
-
-
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி நீலதட்சாயணர் சிவன் ஆலயத்தின் தேர் நிலத்தில் புதையுண்டது. இதனால் சில மணி நேரம் தேர்ப் பவனி தடைப்பட்டது. இன்று காலை பெய்த கடும் மழையின் மத்தியில் நீலதட்சாயணர் சிவன் ஆலயத்தின் தேர்த் திருவிழா இடம்பெற்றது. சுவாமி தேரில் உலா வந்து கொண்டிருந்த போது வெள்ளம் நின்ற நிலத்தில் தேரின் சில் புதையுண்டது. தேரை மீண்டும் இழுக்க பக்தர்கள் போராடிய போதும் அது பலனளிக்கவில்லை. இறுதியில் கிரேன் மூலமாக தேர் மீட்கப்பட்டுத் தொடர்ந்து தேருலா இடம்பெற்றது. www.yarlosai.com
-
- 4 replies
- 1.1k views
-
-
தீபாவளி தெற்காசிய சமூகத்தின் மிக முக்கியமான பண்டிகையாக இன்று மாறிவிட்டது. ஆனால் தீபாவளி குறித்துப் பலருக்கும் ஒன்றும் தெரியாமலேயே இருக்கின்றது. ஒரு தமிழ் பெண்மணியிடம் உரையாடும் போது அவர் கூறினார் தீபாவளி முருகன் சூரனை வதம் செய்த நாள் தானே என்றார், அடப் பாவமே, இந்த லட்சணத்தில் தான் பல இந்துக்கள் தீபாவளி கொண்டாடுகின்றார்கள். ஊரோடு சேர்ந்து கும்மியடிப்பது போலவே திக்கு திசையின்றி ஒட்டுமொத்தமாக ஊருக்கு கிளம்பி போவது, புத்தாடை, இனிப்பு, பட்டாசு, எதாவது ஒரு கோவிலுக்குக் கடமைக்காக ஒரு விசிட், பிறகு புதுப் படம், தொலைக்காட்சிகளில் மீதி நாள் எல்லாம் இடுப்பாட்டம் பார்ப்பது. சற்றே சிலர் குடி, ஆட்டு இறைச்சிக் கறி என ஒரு ஒதுக்குப்புற பார்ட்டி. [size=4]இதனைத் தாண்டி தீபாவளி குறித்த…
-
- 4 replies
- 6.6k views
-
-
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா கொடியேற்றம்! வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந் திருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 13ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும், மறுநாள் 14ஆம் திகதி காலை தீர்த்த திருவிழா இடம்பெற்று, அன்றைய தினம் மாலை கொடியிறக்க திருவிழா இடம்பெறும். https://athavannews.com/2023/1345998
-
- 4 replies
- 388 views
- 1 follower
-
-
-
- 4 replies
- 2.6k views
-
-
எங்கள் அன்பு மகன் கலாநிதி பிரணவனுக்கு' / 'To Our Dear Son, Dr Piranavan [16/09/2025] யாழ் மண்ணிலும் லண்டன் வானிலும் நம்பிக்கைக் கனவில் உறுதியாக நீந்தி இழப்புகள் தாண்டி உயர்ந்த மகனே கலங்கரை விளக்காய் வாழ்க வாழ்கவே! அறிவியலில் மனதைப் பறி கொடுத்து பொறியியலில் வாழ்வை திறம்பட அமைத்து மகன் மகளென இரு குழந்தைகளுடன் மகிழ்வாக வாழ்பவனே வாழ்க வாழ்கவே! விண்ணில் இருந்து அம்மா வாழ்த்த மண்ணில் இருந்தது நாம் வாழ்த்த எண்ணம் என்றும் உயர்வாக அமைந்து வண்ண மயமாக வாழ்வு ஒளிரட்டும்! ஆரோக்கியம், அமைதி வாழ்வை நிறைக்க அன்பு ஆசிகள் உனைச் சுற்றிக்கொள்ள பூச்சொரிந்து தீபம் ஏற்றி வாழ்த்துகிறோம் அன்புடன் உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! [அப்பா, கந்தையா தில்லைவிநாயகல…
-
-
- 4 replies
- 290 views
- 1 follower
-
-
கற்பகா திட்டம் – ஒரு மில்லியன் பயன் தரும் விதைகள் கிளிநொச்சி நிலத்தில் .. கிளி மக்கள் அமைப்பினால் கற்பகா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு மில்லியன் பயன்தரும் விதைகளை கிளிநொச்சி பிரதேசங்கள் எங்கும் நடும் திட்டமாகும். இத்திட்டமானது கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவையின் ஒருங்கிணைப்புடன் முன்னெடுக்கப்படுகின்றது. "உன் தலைமுறைக்காக ஒரு மரம் நடு.." "அடுத்த தலைமுறைக்காக ஒரு விதை நடு.." கட்டம் 1 – 24/10/2020, வட்டக்கச்சி இராமநாதபுரம் பிரதேசங்களில் 10,000 பனம் விதைகள் நடும் நிகழ்வு இடம்பெறுகிறது . http://kilipeople.org/கற்பகா-திட்டம்-ஒரு-மில்ல/
-
- 4 replies
- 1.1k views
-
-
சுதந்திர தமிழீழத்திற்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு பிரித்தானியா
-
- 4 replies
- 2.1k views
-
-
நோர்வேயில் வாழும் தமிழர்கள் வியாழனன்று தீப்பந்தப் பேரணி! அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்தாகி 5 வருடங்கள் பூர்த்தியடையும் தினமான நாளை மறுதினம் வியாழக்கிழமை நோர்வேயின் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் பெரும் தீப்பந்தப் பேரணி ஒன்றை நடத்துகின்றனர். சமாதானத்துக்கான 5 ஆண்டுகளில் இனப்படுகொலைகள், இடம்பெயர்வுகள், பொருளாதாரத் தடை என பெரும் மனிதப் பேரவலங்களையே ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதம் தமிழ் மக்களுக்கு கொடுத்துள்ளது என்பதை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்துவதற்காகவே இந்தத் தீப்பந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக இதன் ஏற்பாட்டாளர்களான நோர்வே தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்தினர் தெரிவித்திருக்கின்றனர். ""அனைத்துலக சமூகமே! எமது…
-
- 4 replies
- 1.6k views
-
-
இயேசுவை சிலுவையில் அறைந்த நாளானஇன்று பெரிய வெள்ளிக்கிழமை தினமாககிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். இதையொட்டி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது. இயேசு நாதர் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட நாளை புனித வெள்ளி என்றும்,பெரிய வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறது.இந்த நாளை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் துக்க நாளாக கடைப்பிடிக்கிறார்கள். மாலையில் கோவிலில் பிரார்த்தனை முடியும் வரை விரதம் இருப்பார்கள். இந்த பிரார்த்தனையின் போது இயேசு நாதர் சிலுவையை தூக்கி கொண்டு செல்லும் போதும், அதில் அறையப்பட்டு கொல்லப்பட்ட நேரத்திலும் 7 திருவசனங்களை கூறினார் என்று `பைபிளில்' கூறப்பட்டுள்ளது. அந்த வசனங்களை அடிப்படையாக வைத்து தேவாலயங்களில் பிரசங…
-
- 4 replies
- 1.3k views
-
-
எதிர்வரும் 15ம் திகதி ஞாயிறு மாலை கிழக்குவெளுத்திடும் நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியுள்ளது.இந்நிகழ்வு கனடாகந்தசுவாமி ஆலய மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.இன்நிகழ்வு
-
- 4 replies
- 2k views
-
-
15/01/2025: "83வது பிறந்தநாள் வாழ்த்துக்கள், அன்பு அண்ணா" / "Happy 83rd Birthday, dear elder brother" 83வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு அண்ணா! கலாநிதி கந்தையா சுந்தரலிங்கமே! ஒளிரும் விண்மீனே! எங்கள் நேசத்துக்குரிய அத்தியடியின் வாரிசே புகழ் சூழ பெருமையுடன் வாழ்ந்தவரே! யாழ் மத்திய கல்லூரியில் வேர்கள் நாட்டப்பட்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் வளர்ந்து மலர்ந்து டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் ஞானப் பழமாகி அறிஞன் வாழ்க்கை ஒளிர்ந்து வீசியதே! இயற்பியல் விரிவுரையாளராக கனிந்த பழமாகி சரியான இடத்திற்கு மாணவர்களை வழிநடத்தி மெல்போர்னில் பெருமையுடன் ஓய்வு பெற்றவரே ஞானம் நிறைந்த வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டதே! உங்கள் இரக்கமும் நக…
-
-
- 4 replies
- 378 views
- 1 follower
-