கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
ஒரு நிமிடக் கதை: தடுமாற்றம் சுந்தரம் அன்று காலையிலிருந்தே முடிக்கு டை அடித்து, சவரம் செய்துகொண்டு புத்துணர்ச்சி யோடு யாருக்காகவோ காத்திருந்தார். அவருக்கு தொந்தி இல்லாததால், டீ ஷர்ட்டை இன் செய்து, லேசாக சென்ட் அடித்துக்கொண்டார். முகத்துக்கு கிரீம் தடவி அதன் மேல் பவுடர் மணக்க பூசியிருந்தார். அடிக்கடி எழுந்து தன்னை கண்ணாடியில் பார்த்துக்கொண்டார். இருபது வருஷங்களுக்கு முன் ஆபீஸூக்கு பைக்கில் போகும்போது எப்படி இருந்தாரோ அப்படியே தன் தோற்றம் இருப்பதைப் பார்த்து திருப்திப் பட்டுக் கொண்டார். அவருக்கு அறுபத்தி ஐந்து வயசு ஆகிறது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்! அன்று காலையில் அவர் மனைவி சகுந்தலா பேரனுக்கு உடம்பு சரியில்லை என்று இ…
-
- 1 reply
- 1.6k views
-
-
நகர்வலம் காலை 5:30 மணிக்கெல்லாம் பையைத் தோளில் மாட்டிக்கொண்டு பறக்கும் கூட்டத்தைக் கடக்கையில் , வண்டியை நிறுத்தி ஒவ்வொருவரிடமும் , “இந்த நேரத்துலயும் இவ்ளோ அவசரமா எங்கதான் போறீங்க?” என்று கேட்க வேண்டும் போல் இருந்தது. கதிரவனது உறக்கம் கலைவதற்கு முன்னான இருளில் அப்பெருநகரை ரசித்தவாறே தியோசஃபிகல் சொசைட்டியை அடைந்தோம். மரங்களும் செடிகொடிகளுமாய் மலர்களின் சுகந்தத்தைக் காற்றில் குடிகொள்ளச் செய்த அந்த அழகிய வனம் மனதிற்கு அமைதியையும் முற்றிலும் வேறோர் உலகத்தில் இருப்பதைப் போன்ற உணர்வையும் தந்தது. மனோகரன் மாமா நடைப்பயிற்சியைத் துவக்க, அவர்களுக்கு ஈடு கொடுக்க அண்ணன், மதினி, நான் – மூவரும் ஓட வேண்டியிருந்தது. 58 வயதின் நடைவேகத்தை 26 வயதின் ஓட்டம் கூட…
-
- 0 replies
- 369 views
- 1 follower
-
-
தேர்!…. எஸ்.பொ. சிறப்புச் சிறுகதைகள் (8) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – எஸ்.பொன்னுத்துரை எழுதிய ‘தேர்’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும் . முகத்தார் என்றழைக்கப்படும் ஆறுமுகம் துயிலெழுவது ஒரு திருக்காட்சி. தலையணையையும் போர்வையையும் உட்திணித்துப் பாயைப் பக்குவமாகச் சுருட்டி வைப்பது ஒரு கலை. கொட்டாவியை மறைபொருளெதுவுமின்றி ஊளையிட்டு, கைகளை நீட்டி மடக்கி, உடலை உலுப்பிச் சோம்பலை முறித்தால், துயிலெழு படலத்தின் ஓரம்சம் நிறைவுறும். தலைமாட்டில் நெருப்புப் பெட்டியும், தாவடிப் புகையிலைச் ‘சுத்து’ம் எப்பொழுதும் தயாராக இருக்கும். ‘சுத்தை’ நேர்த்தியாகப் பற்றவைத்தால், கால்கள் தம்…
-
- 2 replies
- 8.9k views
-
-
காளிமுத்துவின் பிரஜாஉரிமை அ-செ-முருகானந்தன் இலங்கையின் சமூக பொதுவாழ்வில் காளிமுத்து பிரமாத சேவைகள் புரிந்துவிட்டதாக அப்படி ஒன்றும் பிரமாதப்படுத்தவில்லை. அதனால் இலங்கையின் கௌரவப் பிரஜையாக அரசாங்கம் அவனை ஏற்றுக்கொள்ளவுமில்லை. ஒரு சாதாரண தோட்டத் தொழிலாளியாகத்தான் இலங்கை மண்ணில் அவன் வாழ்ந்தான். காளிமுத்துவின் குடும்பம் ஒரு தலைமுறையல்ல, பல தலைமுறையாக இலங்கையில் வாழ்ந்து மலைநாட்டை வாழவைத்தது. அந்த மூதாதைகளின் வியர்வையில் செழித்து வளர்ந்துதான் இன்று ராஜகிரித் தோட்டம் கம்பீரத்தோற்றங்கொண்டு குளு குளுவென்று நிற்கிறது. ஏன், உண்மையைச் சொன்னாலென்ன, மலைநாடு இன்றைக்கெல்லாம் மலைபோல நிமிர்ந்து நிற்பது இந்தியப்பாட்டாளிகளின் உழைப்பின்மீதுதான். பிரிட்டிஷ்காரன் இலங்கையில் …
-
- 2 replies
- 1.7k views
-
-
சாமிமாடு எப்பவோ முடிவு செஞ்சதுதான்னாலும் கூட இன்னக்கி ஏதோ ஒன்னு கைநழுவி போறாப்புல மனசு மருவி நிக்கிது சின்னசாமி குடும்பம். யாரு போறதுன்னு பேசிக்கிட்டு இருந்தப்பவே, பெரியவனே போயிட்டு வரட்டுமேன்னு அப்பா சின்னசாமி சொல்ல, ‘என்னாலல்லாம் மாட்ட வுட்டுட்டு திரும்பிவர முடியாது. அது என்ன பாத்து ‘ம்மா’ன்னு கத்துச்சின்னா சாமிமாடாவுது ஒன்னாவுது திரும்ப புடிச்சிக்கிட்டு வந்துடுவன்’னு ராமசாமி மறுக்கவும், ‘யப்போ நீயும் அம்மாவுமே போயி மாட்ட வுட்டுட்டு அப்படியே தேரு பாத்துட்டு வந்துடுங்க’ இது நல்லுவன் மேகநாதன். போனா ஒத்தப்படையில போவனுமுன்டானு அப்பா சொல்ல... இந்தா சின்னவன் அருளுக்கு பள்ளிக்கூடந்தான் இல்லையே அவனையும் அழச்சிக்கிட…
-
- 1 reply
- 1.2k views
-
-
படிச்சன் பிடிச்சிருந்தது எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை) செருப்பைப் போட்டுக்கொண்டு வாசல் தாண்டி தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். நாம் எதிர்பார்ப்பதை விட காலம் வெகு வேகமாகத்தான் சென்றுவிடுகிறது, 2 வருடங்கள் கழித்து சொந்த ஊருக்கு வந்திருப்பதால், ஊருக்குள் நிறைய மாற்றங்கள் தெரிகிறது. பாவாடை சட்டையோடு வீட்டு வெளித்திண்ணையில் பல்லாங்குழி விளையாடிய பெண்கள் தாவணி பாவாடையோடு ஓரக்கண்ணில் பார்ப்பது போல இருந்தது எங்க ஊர் எனக்கு. காமாட்சி அம்மன் கோவில் தெரு தாண்டி பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவில் நுழைந்ததுமே "வா மாப்ள எப்ப வந்த..?" என்ற குரல் சற்றே துரத்தில் இருந்து வந்தது . குரல் வைத்தே அது கதிர் மாமாதான் என என்னால் யூகிக்க முடிந்தது, துரத்தில் இருந்து எ…
-
- 3 replies
- 1.2k views
-
-
இங்கிவனை யான் பெறவே ஆர் வி சுப்பிரமணியன் கர்ணனின் உடல் ஆறு நாழிகையாகக் காத்துக் கொண்டிருந்தது. துச்சாதனனுக்கு கொள்ளி வைத்துவிட்டு அதற்குப் பிறகுதான் துரியோதனன் கர்ணனின் சிதைக்கு வந்திருந்தான். சிதைக்கருகே வந்ததும் அவன் சரிந்து தரையில் உட்கார்ந்தான். அவன் நோக்கு எங்கேயோ வெற்றிடத்தில் நிலைத்திருந்தது. 17 நாட்களில் எத்தனையோ உடல்கள் எரிக்கப்பட்டதில் எலும்புகளின் சாம்பல் வெண்பூச்சாக தரை மேல் படிந்திருந்தது. இன்றைய சிதைகள் அணைந்து கொண்டிருந்தன. மெல்லிய சிவப்பொளியில் இடுகாடு வினோதக் காட்சியாகத்தான் இருந்தது. துரியோதனன் அணிந்திருந்த கறுப்பு உடை அந்த வெண்பூச்சு தரைக்கு பெரிய மாற்றாகத் தெரிந்தது. அவன் தலைமுடியில் அங்கங்கே கரி படிந்திருந்தாலும் அங்…
-
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-
-
வட துருவத்துப் பயணங்கள் - குரு அரவிந்தன் - - குரு அரவிந்தன் - பயணங்கள் 11 ஏப்ரல் 2025 நடு இரவில் தெரியும் சூரியன்! ஐஸ்லாந்திற்குச் சென்ற போது நடுநிசியில் சூரியனைப் பார்த்திருக்கிறேன். அதே அனுபவம் மீண்டும் அலாஸ்காவில் கிடைத்தது. கனடாவின் வடக்குப் பக்கத்தில் அலாஸ்கா இருந்தாலும், ரஸ்யாவிடம் இருந்து அமெரிக்கா அதை விலைக்கு வாங்கியிருந்தது. தெற்கே ஹவாயும் வடக்கே அலாஸ்கா மகாணமும்தான் அமெரிக்காவுடன் நிலத்தொடர்பு இல்லாத மாகாணங்களாக இருக்கின்றன. அலாஸ்காவின் வடபகுதி பனிசூழ்ந்த பனிப்புலமாக இருந்தாலும், 776,000 மக்கள் இங்கே வசிக்கின்றார்கள். ஆதிகாலத்தில் ஆசியாவுடன் நிலத்தொடர்பு இருந்ததால், பழங்குடி மக்கள் முதன் முதலாக அலாஸ்கா வழியாகத்தான் உள்ளே வந்தார்கள். பழங்குடி மக்களின் சுமார் …
-
- 0 replies
- 446 views
-
-
ஆன்டன் செகாவ் 'பந்தயம்' மரண தண்டனை வேண்டுமா என்று உலகம் முழுவதும் விவாதங்கள் இருந்து கொண்டிருக்கின்றன. மூன்று பேரின் முடிவை தள்ளி போட தமிழர்கள் தவித்து வருகின்றோம். ஒருவரின் உயிரை எடுக்க யாருக்கு உரிமை உள்ளது என்ற வாதத்தை எழுப்பிக் கொண்டிருக்கும் வேளையில், அந்தக் கேள்விக்கான பதிலை தனது எழுத்தின் மூலம் சிறுகதையாக்கி முடிவை காவியம் போல் செதுக்கியிருக்கிறார் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவ். எப்போதோ படித்த இந்தக் கதை எப்போதும் துரத்திக் கொண்டிருக்கிறது வாழ்ந்தே ஆக வேண்டிய நம் வாழ்க்கையைப் போல. அந்தக் கதையின் ஆங்கில வழி தமிழாக்கம் இது. பந்தயம் பனி பொழியும் ஓர் இரவில் தன…
-
- 1 reply
- 1.1k views
-
-
வணக்கம் வாசகர்களே!! கள உறவுகளே!!! இத்துடன் எனது தென்கிழக்குச்சீமையிலே வரலாற்றுத் தொடர் கதையை நிறைவுக்குக் கொண்டு வருகின்றேன் . அதிகரித்துவிட்ட பணிச்சுமையினால் இந்தத்தொடர் அவ்வப்பொழுது தடங்கல்களைச் சந்தித்தது . அதற்கு நான் உங்கள் முன் மன்னிப்புக் கேட்கின்றேன் . ஒரு வரலாறையும் கதையும் சேர்ந்து சொல்லும்பொழுது , இருபக்கமும் சுவைகுன்றாமல் இருப்பதற்கும் எனக்குச் சிறிதுகால அவகாசம் தேவைப்பட்டது . உங்கள் எல்லோரையுமே என்னால் முடிந்த அளவிற்கு தென்கிழக்குச் சீமையை சுற்றிக்காட்டினேன் . இதில் வரலாற்றுத் தவறுகள் எங்காவது உங்கள் கண்ணில் தட்டுப்பட்டால் உரிமையுடன் சுட்டிக்காட்டுங்கள், திருத்திவிடுகின்றேன் . எனது முந்தைய தொடர்களை வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் . உங்கள் விமர்சனங்களை…
-
- 29 replies
- 3.1k views
-
-
கடமை ‘‘டேய்... மாதவா! முதல்ல இந்தக் காபியைக் குடிடா. அப்பா வந்தபிறகு ஸ்கூல் ஃபீஸ் விஷயமா பேசிக்கலாம்...’’ வேண்டா வெறுப்பாக காபியை வாங்கிக் குடித்தான் மாதவன். அப்போது வெளி வாசலில் நுழைந்துகொண்டிருந்தார் அப்பா. ‘‘அப்பா வந்தாச்சு! ஸ்கூல் ஃபீஸ் பத்தி கேட்கணும்னு சொன்னியே... இனி உன் பாடு, உன் அப்பா பாடு...’’ என சொல்லிவிட்டு சமையலறைக்குச் சென்றாள் கலா. தயங்கியபடி அப்பாவிடம் பேச்சுக் கொடுத்தான் மாதவன். ‘‘அப்பா! ஃபர்ஸ்ட் டேர்ம் ஸ்கூல் ஃபீஸ் இருபதாயிரம் ரூபா கட்டணும். ஒரு செக் தந்தா போதும்...’’ மாதவனை முறைத்தார் அப்பா. ‘‘என்னாலே ஸ்கூல் ஃபீஸ் எல்லாம் தரமுடியாது. அதெல்லாம் நீயே பாத்துக்க வேண்டியதுதான்...’’ கறாராகச் சொன்னார் அப்பா. ‘‘இப்படிச் சொன்னா எப்படிப்பா? உங்களுக…
-
- 0 replies
- 1.4k views
-
-
பாஷை பிரபல இசை அமைப்பாளர் சந்துருவின் மகளுக்குத் திருமணம். அதற்கான ஏற்பாடுகளை அவர் மனைவி ரேணுகா மும்முரமாக கவனித்துக்கொண்டு இருந்தாள்.சமையல் பொறுப்பை ஒரு வட இந்திய கான்ட்ராக்டரிடம் ஒப்படைத்துவிட்டு அவரிடம் பாதி ஆங்கிலம் பாதி தமிழில் பேசி புரிய வைத்துக்கொண்டிருந்த மனைவியைப் பார்த்து திகைத்துப் போனார் சந்துரு. பந்தல் போட ஒரிசாக்காரர்களிடமும், மேடை அலங்காரத்துக்கு டெல்லியிலிருக்கும் ஒரு நிறுவனத்தின் நிர்வாகியிடமும் பாஷை புரியாமல் விளக்கிக் கொண்டிருந்த மனைவி மீது சந்துருவுக்கு ஆத்திரமே வந்துவிட்டது. மகளுக்கு மெகந்தி வைக்க மும்பையிலிருக்கும் யாரோ ஒரு நிபுணருடன் மொபைலில் தட்டுத்தடுமாறி பேசிக்கொண்டிருந்த ரேணுகாவிடம் இருந்து மொபைலைப் பிடுங்கினார். ‘‘எதுக்கு இப்பட…
-
- 1 reply
- 678 views
-
-
புதுக்குடியிருப்பு மாவீரர் மயானத்தை அடைந்ததும். விறு விறுவென என் கால்கள் காந்தி அக்காவின் கல்லறையை நோக்கி நடைபோட்டது. பையினில் இருந்த மலர்கள் அவளிற்கு அஞ்சலி செலுத்த மலர்ந்து கொண்டன. இங்கு வருகிறோம் என்று தெரிநதவுடன். அவசர அவசரமாய் பறித்த மலர்கள். இதைப்போல ஒரு நாள் தான் நான் விரும்பாத அந்த நிகழ்ச்சி நடந்தேறியது. அன்று மழை பெய்து கொண்டிருந்தது. மாவீரர் துயிலும் இல்லம் நோக்கி எங்கள் 'வான்' நகர்ந்து கொண்டிருக்கிறது. 'பாண்ட்' வாத்திக்குழுவில் நானும் இணைந்ததில் இருந்து ஒவ்வொரு முறை இங்கு வரும்போது என் வயிற்றிற்குள் புதுப்புது நோய்களை உணர்வேன். மாவீரர் வித்துடல்களிற்கு அஞ்சலி செலுத்தும் போது என் நெஞ்சம் எதையோ நினைத்து ஏங்கும். இது காந்தியக்காவாய் இருக்கக…
-
- 1 reply
- 603 views
-
-
நான்காம் தோட்டா - சிறுகதை “பாதுகாப்புடன் வாழ விரும்புபவர்கள், உயிர்வாழவே உரிமையற்றவர்கள்.” பொக்கை வாய் அவிழ்த்துப் புன்னகை உதிர்த்தார் காந்தி. எதிராளியை வாதிட முடியாமற்செய்யும் புன்னகை; துப்பாக்கியுடன் வரும் ஒருவனை, தயங்கச்செய்யும் புன்னகை. டெல்லி டி.ஐ.ஜி-யும், காந்தியின் உதவியாளர் கல்யாணமும் பதிலற்று நின்றிருந்தார்கள். நேற்று போலீஸ் சூப்பரின்டெண்டென்ட், காந்திக்குப் பாதுகாப்பு வழங்குவதைப் பற்றிப் பேசிச் சென்றிருந்தார். காந்திக்கு அதில் விருப்பமில்லை. இது இரண்டாவது முயற்சி. ஏற்கெனவே அல்புகர்க் சாலையில் அமைந்துள்ள அந்த பிர்லா இல்லத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ்காரர்கள் சீருடையின்றி ஆங்காங்கே திரிகிறார்கள் என்பதை காந்தி க…
-
- 0 replies
- 2.9k views
-
-
பாதிக் குழந்தை!… பித்தன். October 14, 2018 சிறப்புச் சிறுகதைகள் (15) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – காதர் மொகைதீன் மீரான் ஷா எழுதிய ‘பாதிக்குழந்தை’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். “உலகமெல்லாம் தேடினேன். ஒரு மனிதனைக் கூடக் காணவில்லை!” என்று யாராது சொன்னால், அவனைப் பைத்தியக்காரன் என்றோ, குருடன் என்றோதான் உலம் முடிவு கட்டும். ஆனால், மனிதனைப் போல் அலங்காரம் செய்து கொண்ட பயங்கர மிருகங்கள்தான் உலகத்தில் அதிகம் என்று சொன்னால் அதை யாரும மறுக்க மாட்டார்கள். நல்ல பாம்பு என்று சொல்வதனால் அதனிடம் விஷம் இல்லை என்று சொல்ல முடியுமா? அது பாம்பு, மனிதன் ஏன் படமெடுத…
-
- 6 replies
- 2.8k views
-
-
ஆண்கள் உலகம் நமகெல்லாம் அறிமுகபடுத்தப்படுவது அப்பா மூலம் தான். இருப்பினும் அதை இன்னும் சுவாரஸ்யமாக்குவது சகோதரனே. ரிக்கி மார்டினையும், WWF ராக்கையும், கிரிகெட்டின் சகல சூட்சுமங்களையும் நமக்கு அறிமுகப்படுத்துவது அவனே! நிலைக்கண்ணாடி முன் AXE வாசனையை தருவதற்கும், கண்ணாடியில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கர் பொட்டுக்காக கடுப்படிபதற்காகவும் எனக்கு ஒரு தம்பி இருக்கிறான். எண்ணிலடங்கா நினைவுகள் என் தம்பியோடு இருக்கின்றன எனினும் இந்த பதிவு அதில் ஒரு துளி - மத்திய தர வர்க்கத்துக்கே உரிய கோட்பாட்டின் படி பொறியியல் படித்து, கொஞ்ச காலம் சில பல உப்புமா கம்பெனிகெல்லாம் கோடு எழுதிக்கொடுத்து ஒரு வழியாக ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ப்ராஜெக்ட் லீடர் ஆனான். அவர்கள் அதோடு விடாமல் H1B யும், அமெரிக்க கன…
-
- 0 replies
- 564 views
-
-
பா. இராகவன் எழுதிய கொசு என்னும் தொடரை வாசிக்க கிடைத்தது. அதனை உங்களுடன் கீழே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். *************** அத்தியாயம் ஒன்று கழுதையின் முதுகிலிருந்து மூட்டையை இறக்கிக் கீழே போட்டாள் பொற்கொடி. அனந்தபுரி எக்ஸ்பிரஸ் பாலத்தில் தடதடத்துக் கடந்துபோனது. கீழே நகர்ந்துகொண்டிருந்த நீரில் துண்டை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்த நான்கு பொடியன்களும் அண்ணாந்து பார்த்துக் கையசைத்தார்கள். ஓடும் ரயிலின் ஜன்னல் வழியே யாரோ கழுவித் தெளித்த நீரின் துளிகள் காற்றில் அலைந்து ஆற்றில் உதிர்ந்தன. "பொற்கொடி, முத்துராமனுக்குப் பொண்ணு பாக்கப் போறாங்களாம்டி. வூட்டு வாசல்ல குவாலிஸ் வந்து நிக்குது. அல்லாரும் கெளம்பிக்கினு கீறாங்ங்க. பெர்சு நம்மாண்டல்லாம் சொல்லிச்ச…
-
- 9 replies
- 2.3k views
-
-
எதுவரை சஞ்சிகையில் இருந்து நன்றியுடன் கதையல்லாத கதைகள்-01, யோ.கர்ணன் தோழர் சான் சடாட்சரத்தை நான் முதன்முதலாக சந்தித்த பொழுது எனக்குச் சரியாக இருபது வயதும் நாற்பத்தியெட்டு நாட்களும் சில மணித்துளிகளும் ஆகியிருந்தன. அப்பொழுது நான் விடுமுறையில் வந்திருந்தேன். நான் இயக்கத்தில் இருந்த காலத்தில் கிடைத்த ஒரே ஒரு விடுமுறை அதுவாகத்தானிருந்தது. எனக்கு அப்பொழுது வன்னியில் போவதற்கு ஒரு வீடும் இல்லாதிருந்தது. கதிர் தனது வீட்டிற்கு வரச் சொன்னான். அவன் திருகோணமலைப் பொடியன். அவனது வீட்டுக்காரர்கள் கன வருசத்துக்கு முதலே இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் வந்திருந்தனர். பிறகு யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து விசுவமடுவிலிருந்தனர். சரி. ஏன் அபூர்வமாகக் கிடைக்கிற விடுமுறையை …
-
- 2 replies
- 1.1k views
-
-
வணக்கம் உறவுகளே! அனைவரும் நலம் தானே! எமது குழந்தைப் பருவத்தை யாராலும் மறக்க முடியுமா? இல்லைத் தானே! நாம் சிறுவர்களாக இருக்கும் போது நாம் செய்த குறும்புகள் எவையுமே என்றுமே எம் மனதை விட்டு அகலாது! அது போல, நாம் உடுத்திய உடைகள், பழகிய நண்பர்கள், பாடிய பாடல்கள் என்று எவையுமே மறக்க முடியாதவை! இன்று நான் உங்களுடன் பகிர்ந்துகொள்வது நாம் சிறிய வயதில் பாடித் திரிந்த பாடல்கள் பற்றி! நான் சிறுவனாக இருக்கும் போது, எங்கள் வீட்டில் நிற்பதில்லை! அம்மம்மா வீட்டில்தான் போய் நிற்பேன்! அங்கு மாமாக்கள், சித்திமார், அத்தைமார் எல்லோரும் நிற்பார்கள்! என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரர்கள், மச்சாள்மார், மச்சான்மார் என்று எல்லோரும் சேர்ந்து விளையாடுவோம்! அப்போது நாங்கள் பல பாடல்கள் படிப்ப…
-
- 5 replies
- 1.9k views
-
-
அன்று ஒரு நாள் நான் எனது விட்டு அருகில் நடந்து போயுட்டு இருந்தேன்.என் பின்னால் ஒரு அழைப்பு கிர்த்தீ என்று நானும் யாரு என்று திரும்பி பார்த்தேன் என் பின்னால் ஒரு அழகனா வாலிபன் அவன் வேற யாரும் இல்லை என் பள்ளி நண்பன்..என்ன புதுசாய் பார்வை இருக்கே நான் ஜோசித்து கொண்டே அவன் முகத்தை பார்த்தேன்.. நானும் என்ன என்பது போல் அவன் முகத்தை பார்த்தேன்.என்ன மாதவா என்ன வேணும் ஏன் என்னை அழைத்தாய்.கிர்த்தீ நான் ஒன்று சொல்லுவன் நீ கோப பட கூடாது..இல்லை சொல்லு... நான் உன்னை காதலிக்கிறேன்..உன்னிடம் வெகு நாளாய் சொல்லணும் என்று வருவேன் ஆனால் என்னால் பேச முடியல.என்னை மண்ணிச்சுடு.. என்னால் துங்க முடியல சாப்பிட முடியல..அதான் இன்னைக்கு சொல்லிவிட்டேன்...மாதவ நீ சொல்லுறாய்.. நான்…
-
- 1 reply
- 1.6k views
-
-
வேலையால் வந்த களைப்பு தீர ,தேனீர் குடிப்பதற்காக கேத்தலின் பட்டனை அழுத்தியவன் ,கப்பை கழுவி சமையலறை மேசையில் வைத்து விட்டு தேயிலை பாக்கை தேடினான்.வழமையாக பாவிக்கும் லிப்டன் தீர்ந்து போயிருந்தது.டில்மா தேயிலை பெட்டி அவனைபார்த்து சிரித்து"ஆபத்துக்கு பாவமில்லை என்னை குடித்து பார்" என்பது போல் தோன்றியது. எத்தனை தரம் சொன்னாலும், உவள் சிங்களவனுக்கு பிழைப்பு காட்டுறது என்றே அடம் பிடிக்கிறாள் என புறுபுறுத்தபடியே அக்கம் பக்கம் பாரத்தவன் ,தன்னை ஒருத்தரும் கவனிக்கவில்லை என்று உறுதிபடுத்திக்கொண்டு டில்மா தேயிலை பக்கற்றை கோப்பையினுள் போட்டு சுடுதண்ணியை ஊற்றி ஊற வைத்து பிளிந்தெடுத்த தேயிலை பக்கற்றை குப்பை தொட்டியில் எறிந்தவன், பாலை கலந்து ருசிக்கத் தொடங்கினான்,மனம் குணம் எல்லாம…
-
- 9 replies
- 2k views
-
-
-
அந்த நகர மைய குறீயீடாக அமைந்திருக்கின்ற மணிக்கூட்டு கோபுரமடியில் இருந்து அந்த பிராந்தியத்தையே அலறவைத்து வந்தது ஒரு சத்தம்..சத்தம் என்றால் வெறும் சத்தமல்ல ஊரிலுள்ள கெட்டவார்த்தைகளுக்கு எல்லாம் அலங்காரம் செய்த மாதிரி அது. மிஞ்சினால் ஒன்றோ இரண்டோ மூன்றோ மூல தூசண வார்த்தைகள் இருந்திருக்கும் . அதை பல வடிவத்தில் மாற்றி பல வார்த்தை ஜாலங்களில் தொடர்ச்சியாக அந்த பிரதேசத்தையே ரீங்காரமிட்டு கொண்டிருந்தது. அந்த கல்லூரி வாசலினூடாக சந்தையில் இருந்து காய்கறி வாங்கி கொண்டு பையோடு ஏதோ யோசனையுடன் செல்லும் நடுத்தர வயது மனிதர் கூட இச்சத்தத்தின் அர்த்தத்தை மனதுக்குள் ரசித்து உதட்டில் சில கணம் புன்னகையை வைத்து எடுத்து விட்டு செல்லுகிறார்..நூலகம் நோக்கி செல்லும் பருவ பெண்கள் கூட ஒருவரை ஒருவர…
-
- 18 replies
- 3.1k views
-
-
சுஜாதாவுக்கு பிடித்த சிறுகதைகள் by RV மேல் நவம்பர் 4, 2010 இது ஒரு மீள்பதிவு, சில அப்டேட்களுடன். என் வழக்கமான சிறு ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள். படித்தவை: புதுமைப்பித்தன் – மனித இயந்திரம் :கணக்குப்பிள்ளை பணம் திருடிக்கொண்டு ஓட முயலும் கதை. Brilliant! புதுமைப்பித்தன் உலகின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்பதற்கு இந்த ஒரு கதை போதும். கதை பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் இந்த கதையை படிக்கலாம். கு.ப.ராஜகோபலன் – விடியுமா?: ஒரு காலத்தில் புரிந்த மாதிரி இருந்தது. சமீபத்தில் யாரோ சிபாரிசு செய்யவே மீண்டும் படித்துப் பார்த்தேன். அத்திம்பேர் இருக்காரா போய்ட்டாரா என்று குழப்பம். அப்புறம் திருப்பி படித்தேன். போய்ட்டார் என்று புரிந்தது. நன்றாகத்தான் எழுதி இருக்கிற…
-
- 2 replies
- 3.9k views
-
-
வர்ணகலா by ஷோபாசக்தி இந்தச் சிறிய கதையின் முடிவு எப்படி அமையப்போகிறது என்பதைத் தேர்ந்த வாசகரான நீங்கள் இதற்கு அடுத்தடுத்த பத்திகளில் நிச்சயமாகவே ஊகித்துவிடுவீர்கள். அய்நூறுக்கும் அதிகமானவர்கள் உட்கார்ந்திருந்த அரங்கில், மிதுனா பாலப்பா இந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்ததுமே நானும் முடிவைச் சட்டென ஊகித்துவிட்டேன். ஆனால், அந்த முடிவை நோக்கி கதை எவ்வழியால் அசையப்போகிறது என்று எனக்குப் புரியவில்லை. எனவே நான் பொறுமையாக உட்கார்ந்திருந்து மிதுனா பாலப்பா சொன்ன கதையை முழுவதுமாகக் கேட்டே பாரிஸிலிருந்து முந்நூற்றைம்பது கிலோமீற்றர்கள் தொலைவிலிருந்த ‘ரென்’ பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்து, அரசறிவியல் படித்துக்கொண்டிருந்த மிதுனா பாலப்பாவுக்கு அன்றைய கா…
-
- 4 replies
- 1.1k views
-