கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3080 topics in this forum
-
ஒட்டகத்தாரும் ஓசிப்பேப்பரும் நாட்டுநடப்புகள் தந்த மனஅழுத்தத்தில சோம்பலோட சோபாவிலை சாய்ந்திருக்க கிணிங்ங்ங்................................ அழைப்புமணி. சலிப்போடபோய் கதவைத்திறந்தால் வழமைபோல ஒட்டகத்தார்தான். நான் என்னவாக்கும் இந்த நேரத்திலை என்று யோசிக்க ஒட்டகத்தாரே விசயத்தைச் சட்டென்று போட்டுஉடைச்சார். இரண்டு மூன்று நாளாக் காலமையளிலை கவனித்தன் உங்கட வீட்டு வாசலிலை பேப்பர்போடுறவன் நிண்டதை அதுதான் நீங்கள் படிச்சு முடிச்சிருந்தால் நானும் ஒருக்கால் இன்றையப் பத்திரிகையை படிப்பமென்று வந்தனான். அதுசரி மணி பதினொன்றாகுது இன்னமும் வீட்டு உடுப்போட நிக்கிறியள், இன்றைக்கு லீவோ? என்று அடுக்கிக்கொண்டுபோனார். நான் கூடுதலாக இரவிலைதான் வேலை செய்கிறனான் எ…
-
- 0 replies
- 939 views
-
-
தங்கமயில் – சிறுகதை -சி.புஷ்பராணி- வெளியிலே நாய்கள் குரைக்கும் சத்தம் அமளியாகக் கேட்டது. தட …தடவென்று யாரோ ஓடிவரும் ஓசை. ‘இது வழக்கமான ஒன்றே… ‘ திரும்பிப் படுத்தேன். எங்கள் வீட்டு ஜெஸியும் குரைக்கும் சத்தம் காதை அறுத்தது. யாரோ கதவைப் பலமாக இழுப்பது போல் இருந்தது… சிறு சத்தமென்றாலே உடனே எழும்புவது நான்தான். தூக்கம் கண்ணைத் திறக்கவிட மறுக்க ”யாரது” என்று குரல் கொடுத்துப் பார்த்தேன்…..பதில் வராததால் கையில் டோர்ச்சை எடுத்துக் கொண்டு கதவடிக்குப் போனேன். ஜெஸியும் பின்னாலேயே வந்தாள். இணைப்புச் சங்கிலியைத் திறந்து பார்த்தால், மகளைத் தோளில் சாய்த்துக்கொண்டு மிரட்சியுடன் தங்கமயில…
-
- 1 reply
- 939 views
-
-
கதை சொல்லவா? 10/ தியா காண்டீபன் - பவா செல்லத்துரை அவர்கள் எழுதிய "நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை" சிறுகதை.
-
- 2 replies
- 938 views
-
-
ஒருநிமிடக் கதை: டைம்..! அங்கே இருந்த இருக்கைகள் யாவையும் யாரோ ஒருவரால் இறுக்கிப் பிடிக்கப்பட்டிருந்தது. மணிக்கணக்காக இப்படித்தான் இருக்கிறது. எழுந்து, இருக்கையில் கைக்குட்டை அல்லது கையில் இருந்த ஃபைல் என்று இடத்தை பத்திரப்படுத்தி பின் ரிசப்ஷனுக்குச் சென்று, ஏதோ விசாரித்து வந்தார்கள். என்ன கேட்கப்பட்டது என்பதை அறிய கம்பசூத்திரம் தெரிய வேண்டாம், கேட்டது காதுகளில் விழவும் வேண்டாம். வேறு வேறு தொனிகளில், வேறு வேறு மொழிகளில், வேறு வேறு டெசிபலில் இது ஒன்றுதான் கேட்கப்பட்டிருக்கும் … “ டாக்டர் என்னை எப்போ கூப்பிடுவார்?” காத்திருப்பின் …
-
- 0 replies
- 937 views
-
-
கற்கனைக்கதை ஒன்று (ஒன்றா?) சொல்வேன் கேளுங்கள் உங்கள் வீட்டில் உட்கார்ந்து கொள்ளுங்கள் இப்பொழுது கண்களை இறுக மூடிக்கொள்ளுங்கள் .... ....... ...... உங்கள் வீட்டின் அசையாப்பொருள் அனைத்துக்கும் (சுவர் கதவு உட்பட) கண் காது உள்ளது என்று நினைத்துக்கொள்ளுங்கள் .... ...... ..... உங்களது வீட்டில் நடந்தவைகளை அசை போடுங்கள் .... .... ... இப்போ கதை சொல்லி நானல்ல நீங்கள் ... .... யாவும் கற்பனை அல்ல நிஐம் ... ... முற்றும்🤣🙏
-
- 3 replies
- 936 views
-
-
இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்துகொண்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. கூட்டுக்குள் தலையை நுழைத்தது. கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்துவிட்டு, "குருவி அக்கா. எங்கள் வீட்டில் நுழைந்து எனக்கு இடமில்லாமல் பண்ணிவிட்டாயே. தயவுசெய்து வெளியே போய்விடு" என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது. "போடி போ. உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு. நான் இதை விட்டுப் போகமாட்டேன்" என்று குருவி மறுத்து விட்டது. தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனு…
-
- 0 replies
- 935 views
-
-
ஒரு நிமிட கதை: கண்டிஷன் “மணி! நம்ம வீட்டுல குடியிருக்கிறவங்க அடுத்தவாரம் வீட்டைக் காலி பண்ணிடுவாங்க. வேற ஆள் யாராவது இருந்தா கூட்டிட்டு வாப்பா!” வீட்டு புரோக்கர் மணியின் கடைக்குள் ஏறி வந்த பழனியப்பன் சொன்னார். கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பழனியப்பனின் வீட்டு மாடி போர்ஷனுக்கு வாடகைக்கு ஆள் கூட்டி வருவது மணிதான். பழனியப்பனின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி இதுவரை ஐந்து குடும் பங்களுக்கு மேல் வாடகைக்கு வந்து போய் விட்டார்கள். “அதுக்கென்னங்கய்யா… பார்த்துட்டாப் போச்சு. இந்தப் பத்து வருஷத்துல எத்தனை பேரை கூட்டிட்டு வந்திருக் கிறேன். யாராவது எந்தப் பிரச்சனையாவது பண்ணினாங் களா? சர…
-
- 0 replies
- 935 views
-
-
லதா ரகுநாதன் பரத்திற்கும் அனந்திற்கும் மிகவும் சிரமமாகத்தான் இருந்தது. " இந்த அப்பா காது டமாரமாகத்தான் போயிடுத்து" ஆம் என்று அனந்த் அவசரமாகத் தலையசைத்தான். "நேற்று இந்த மாதச் செலவு சற்றே அதிகம் ஆகும். அதனால் அதிகமாக பணம் தேவைப்படும் என்பதைச் சொல்ல முயன்று என் தொண்டைத்தண்ணி வத்திப்போனதுதான் மிச்சம்" அனந்த், தன் பக்கக் கதையைச்சொன்னான். "ஆமாண்டா.. ஹியரிங் ஏய்டெல்லாம் ஒரு பிரயோசனமும் இல்லை" பரத் அதோடு நிறுத்தாமல் செவிடு, கிழம், பணப்பிசாசு, சனியன் போன்ற அழகிய தமிழ் வார்த்தைகளுடன் அப்பாவின் பல கதைகளை அவிழ்த்துவிட்டான். ராமலிங்கம் காது கேட்காதவர்களுக்கான பிரத்தியேக அசட்டுப் புன…
-
- 0 replies
- 935 views
-
-
என்ர ராசாவுக்கு கிறிஸ்டி நல்லரெத்தினம் யன்னலருகே இருந்த மேசையின் மூலையில் சிறு தொட்டியில் வைக்கப்பட்டிருந்த ரோஜா செடிக்கு கிளாசில் இருந்த தண்ணீரை ஊற்றிவிட்டு, அதன் மிருதுவான இலைகளை தடவிக்கொடுத்தார் முருகேசர். ஊற்றிய நீரை உறுஞ்சிய தொட்டிமண்ணை விரலினால் கிளறி ஈரப்பதத்தை பரிசோதித்த திருப்தியுடன் வெற்று கிளாசை மேசையில் வைத்தார். அந்த அறையில் உயிர்ப்புடன் இருந்தது அவரும் அந்தச் செடியும்தான்! அவரது அறை அத்தனை பெரியது அல்ல. ஒரு கட்டில் மூலையில் அவரது உடமைகளையும் உடைகளையும் வைக்க ஒரு கப்போர்ட், சாய்ந்திருக்க ஒரு சாய்மனைக்கதிரை, சுவரில் பதித்திருக்கும் 15″ டி.வி, அதன் கீழ் ஒரு மேசை, மூலையில் உறங்கும் அவர் கைத்தடி, குளியலறையையும் டொயிலெட்டையும் இணைக…
-
- 1 reply
- 934 views
-
-
மனிதம் ரிஷபன் வாசல் கதவு திறக்கும் சப்தம் கேட்டது. சுப்ரமணியாகத்தான் இருக்கும். சொன்ன நேரத்திற்கு வந்து விட்டான். 'ஞாயிறு காலை பத்து மணிக்கு' என்றால் மிகச் சரியாக ஹால் கடிகாரம் சங்கீதம் எழுப்புகிற நேரத்தில். "வாடா.. கன் டைம். நீ வரலேன்னா என்ன செய்யறதுன்னு டென்ஷன்ல இருந்தேன்" என்றேன். மிக நிதானமாய் அரசு முறை பயணத்தில் வந்தவன் மாதிரி நடந்து சுற்றுப் பிரதேசங்களைப் பார்வையால் அலசினான். "கேசட் கொண்டு வந்தியா" குரல் என்னையும் மீறி பரபரத்தது. வீட்டில் என்னையும் இப்போது வந்த சுப்ரமணியையும் தவிர வேறு யாரும் இல்லை. ஊஹூம். இன்னொரு நபரும் இருக்கிறார். வீட்டுக்குள் இல்லை. வெளியில்.. "பிளாஸ்க்குல காப்பியா" என்றான் மேஜை மீதிருந்ததைப் பார்…
-
- 0 replies
- 934 views
-
-
பயணங்களின் முடிவில்! சுமிக்கு, சோர்வாக இருந்தது. நாள் முழுவதும் ஓயாத வேலை; பண்டிகை தினம் என்பதால், சோளிகளும், சுடிதார்களும் வந்தபடி இருந்தன. ஒரு பக்கம் மகிழ்ச்சி தான் என்றாலும், தோள்பட்டையும், கையும் தேய்ந்துவிட்டது போன்று வலித்தன. உதவிப் பெண் கூட சொன்னாள்... 'அக்கா... டிசைனர் சோளி, பிரைடல் சோளி ரெண்டுக்கும் உங்க கையால கட்டிங் செய்தா தான், பர்பெக்ட்டா இருக்கு...' என்று! உண்மை தான்; நான்கு ஆண்டுகளுக்கு முன், குருட்டு தைரியத்தில், 'சுமி ஸ்டிச்சஸ்' என்று ஆரம்பித்தது, இன்று பெயர் விளங்கும் கடையாக வளர்ந்து வருவதில் பெருமை தான். மகன் மழலையாக மடியில் இருக்க, கண…
-
- 0 replies
- 933 views
-
-
(பிரித்தானியாவில் அகதி புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட சுமார் நூற்றுக்கும் அதிகமான தமிழர்கள் அந்நாட்டு அரசாங்கத்தினால் இலங்கைக்கு நேற்று நாடு கடத்தப்பட்டுள்ளனர். - நன்றி: புதினம் 17.01.2009) "என்ன கண்ணெல்லாம் சிவப்பாய்க் கிடக்கு? சுகமில்லையே?" என்று சந்திரனிடம் கேட்டான் சோதி. "ஆள் "றெயினா"லை வந்து இறங்கின உடனை நல்லாய் அழுதுபோட்டார்...." என்று முந்திக்கொண்டு கூறினான் குமார். சந்திரன் பொங்கியெழுந்த துயரத்தை அடக்க முற்பட்டவனாய் புன்னகைக்க முயன்றான். அவனால் முடியவில்லை என்பது அப்பட்டமாகவே தெரிந்தது. புகையிரத நிலையத்தில் இருந்து சந்திரனை குமார்தான் அழைத்து வந்திருந்தான். சந்திரன் கிழக்கு ஜேர்மனியிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் குடியிருப்புகளை விலத்தி தனிய…
-
- 1 reply
- 932 views
-
-
"தனிமை" தனிமை என்பது எதோ தனிய காலம் கழிப்பது அல்ல, சிலவேளை எம்மை சுற்றி பலர் இருப்பார்கள், என்றாலும் சில காரணங்கள் எம்மை அவர்களில் இருந்து மனதளவில் தனிமை படுத்துவதும் உண்டு. வெளியில் பேசி கதைத்தாலும் உள்ளுக்குள் தனிமை வாட்டிக்கொண்டுதான் இருக்கும். ஒவ்வொருவருக்கும் சில கருத்துக்கள், நடவடிக்கைகள், நம்பிக்கைகள் இருக்கும். அதற்கு புறம்பானவர்கள் உன்னை முழுதாக சூழ்ந்து இருக்கும் பொழுது நீ தனிமையாகி விடுவாய்!. அப்படித்தான் என் பாடசாலை வாழ்வும் அமைந்தது. நான் யாழ் மத்திய கல்லூரியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது, அதற்கு முன்னால் அமைந்து இருந்த யாழ் நூலகத்திற்கு போவது வழமை. இது தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாக அன்று திகழ்ந்தத…
-
- 0 replies
- 932 views
-
-
உதிரம் - அனோஜன் பாலகிருஷ்ணன் *** “ஹாய் ஹரி, எல்லாம் நன்றாகச் செல்கிறதா?” “இப்போதைக்கு ஒன்றும் சிக்கலில்லை” என்றேன். கை குலுக்கிவிட்டு அவர் புன்னகைக்குப் புன்னகைத்தேன். முப்பது வயதுக்குள் இருக்கக்கூடிய ஒடிசலான உடல் தோற்றம் கொண்ட பெண்மணி. கோதுமை நிறம் கொண்ட தேகத்தில் மணிக்கட்டு வரை நீள்அங்கி அணிந்திருக்க கைகள் மட்டும் வெளித்தெரிந்தன. அவர் சாய்ந்து பார்த்த விதத்தில் ஒரு மனநல மருத்துவருக்கு உரிய தொழில் நேர்த்தியிருந்தது. பொன்னிறமான முடியை வாரிக் கொண்டையாக முடிந்திருந்தார். வெண்ணிற சட்டகங்கள் இடப்பட்ட மூக்குக்கண்ணாடி விளிம்பில் வெளிச்சம் பட்டு ஒளிர்ந்து துடித்தது. அந்த அறை நாலடிக்கு குறைவான அகலத்தில் இருந்தது. பழுப்பு நிறத்தில் வர்ணம் தீட்டப்பட்ட சுவரில், கடற்கர…
-
- 2 replies
- 931 views
-
-
. சாவித்திரி ஒரு ஸ்ரீலங்கன் அகதியின் குழந்தை! - - வ.ந.கிரிதரன் - புகலிட அனுபவ சிறுகதை இந்த அப்பா எப்பொழுதுமே இப்படித்தான். Harry Potter and The Goblet of fire புத்தகத்தைக் கடைசியில் ஒரு மாதிரி வாங்கித் தந்து விட்டார். ஜெ.கெ.ராவ்லிங்கின் ஹரி பாட்டர் தொடர் புத்தகங்கள் எனக்குப் பிடித்த தொடர்களிலொன்று. ஆனால் இந்தப் புத்தகத்தை மட்டும் அப்பா ஒவ்வொருமுறையும் வாங்குவதற்குச் சாக்குப் போக்குச் சொல்லி இழுத்தடித்துக் கொண்டு வந்தார். காரணம் இதன் விலைதான் தான். முப்பத்தைந்து கனடியன் டொலர்கள். சென்ற முறை சாப்டர்ஸ்ஸிற்குக் கூட்டிப் போனபோது இந்தப் புத்தகத்தை வாங்கித் தருவதாகத் தான் கூட்டிப் போனார். ஆனால் வழக்கம் போல் இறுதியில் கையை விரித்து விட்டார். 'உனக்கம்மா இந்த ஒரு ப…
-
- 0 replies
- 930 views
-
-
அரசனும் குதிரைவீரனும் அழியுங்காலத்தின் சனங்களும் ஜெகன் அபூர்வன் பாழடைந்த நூலகத்தின் படிக்கட்டில் அவன் அமர்ந்திருந்தான். புதர்களும் குப்பைகளுமாக சிதறிக்கிடக்கும்; அந்த இடத்தில் சற்றுக்கு முன்புதான் மௌனம் கலையாமல் மரத்தின்கிளைகள் சலசலக்க அந்தப் பட்ஷி பறந்திருந்தது. அவன் நூலகத்தைப் பார்த்தான் புராதன சுவர்களில் எண்ணற்ற வெடிப்புக்களிடையே பசுமை படர்ந்திருந்தது. எல்லா சந்தர்ப்பங்களிலும் கண்டுவிடத்தவறும் ஓவியங்கள் சுவர்களில் மறைந்திருந்தன. ஏராளமான காலடிகளின் ஓசை படிக்கட்டுக்களில் கேட்டுக் கொண்டிருந்தது. யார் வருகிறார்கள்? அவன் திரும்பிப் பார்த்தான் எவருமேயில்லை. ஆனாலும் இடைவிடாத ஓசை கேட்டபடியிருந்தது. அவன் மேலேறிச் சென்றான். புத்தகங்கள் எங்கும் …
-
- 3 replies
- 930 views
-
-
வாதாபியை விழுங்கிய அகத்தியனின் தொப்பையாக.. ஆலகால விடத்தையுண்ட சிவனின் தொண்டைக்குழி போல மேனி கறுத்து.. பகலை விழுங்கி ஏப்பம் விட்டபடி இருண்டு கிடந்தது இரவு. ஆங்காங்கே சில்வண்டுகளின் சிங்கார ராகம்.. பாம்புகளின் ‘கிறிச்..கிறிச்’ சத்தம். ஊமத்தங்கூவைகளின் உறுமல் ஓசை.. அவள் தன் வாழ்நாளில் தனியாக இருளில் நடந்ததே கிடையாது. இன்று… தன்னந் தனிவழியே காட்டு நிலமேறி.. சுடலை வழிதாண்டி குளங் குட்டை - கோயில் வெளி கடந்து நின்று நிதானிக்க நேரமின்றி வேகமாக… மிகவேகமாக குன்றுங் குழியும் குறுக்கு வழியுமாக… இத்தனை இடம் தேடியும் கண்ட பலன் ஏதுமில்லை. குளக்கரையில் விழி அகலத் திறந்தாள் சுற்றிலெங்கும் நோட்டம் விட்டாள். மருதமரத்தின் அடி முதல் …
-
- 1 reply
- 929 views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியம்: ஸ்யாம் அழைப்பு “ஒரு நாளைக்காவது வீட்டுக்கு வந்துட்டுப்போங்க” என மகன்களை அழைத்தார் அப்பா. - பெ.பாண்டியன் நவீன தலைமுறை ஸ்மார்ட் போன்களுக்குக் கீழே பிரிக்கப்படாத ஒரு வாரத்து நியூஸ் பேப்பர். அப்பா ஊருக்குப் போயிருக்கிறார். - நந்த குமார் வளர்ப்பு குழந்தை அதட்டி, கண்டித்து வளர்த்தது பொம்மையை! - பர்வீன் யூனுஸ் அட்டெண்ட் வீட்டிலும், ``இதை யாராவது அட்டெண்ட் பண்ணுங்களேன்'' எனக் கத்திக்கொண்டே இருந்தாள் பிரசவ வார்டு நர்ஸ் கோகிலா. - கே.சதீஷ் சண்டை `வீட்டுல நடக்கிற சண்டையை எல்லாம் ஃபேஸ்புக்ல போடுறா' என, மனைவியைப் பற்றி நண்பர்களிடம் ட்விட்டரில் ஆதங்கப்பட்டான் ஆதவ். - பெ.பாண்டியன் மீட்டிங் `இன்று எந்த ஏ.டி.எ…
-
- 1 reply
- 929 views
-
-
கதையல்லாத கதைகள் 02-யோ.கர்ணன் “ரைகர்ஸ்” யாழ்ப்பாணத்திலிருக்கும் நாற்பதினாயிரம் சிங்களப்படைகளையும் உயிருடன் பிடித்து வைத்துக் கொண்டு பேரம் பேசி தமிழீழத்தையடையப் போகிறார்களா அல்லது நாற்பதினாயிரம் சிங்களச் சிப்பாய்களின் சடலங்களை வைத்துக் கொண்டு பேரம் பேசி தமிழீழத்தையடையப் போகிறார்களா என உலகின் திசையனைத்திலுமிருந்த தமிழ் ஆய்வாளர்கள் அனைவரும் தலையைப்பிய்த்துக் கொண்டிருந்த பொழுதது. உச்சபட்சமாக, வன்னியிலிருந்த ஆய்வாளரொருவர் ஈழநாதம் பத்திரிகையில் பின்வருமாறு எழுதியிருந்தார்- ‘நமது குறைநிர்வாக இராச்சியத்தை சில வல்லரசுகள் பயங்கரவாத இயக்கமாக தடை செய்துள்ளன. நல்ல கூடைப்பந்து விளையாட்டு வீரன்தான் பந்தை எப்பொழுதும் தனது கையில் வைத்திருக்க வேண்டும். சாணக்கியம் மிக்க இரா…
-
- 4 replies
- 928 views
-
-
இக்போ இனத்தவர் சொல்வதுண்டு - ‘முதிர்ந்த கழுகின் இறகு எப்பொழுதுமே அப்பழுக்கற்று இருக்கும்’ என. சிறுகுறிப்பு; நைஜீரிய, பெண் எழுத்தாளர் சிமமாண்டா அடிச்சீயின் நாவலுக்கு (சொல்வனத்தில் அவரைப்பற்றியும் அவரது நாவல் பற்றியும் வந்த கட்டுரை இங்கே) முன்னோடியாக அவரே எழுதிய சிறுகதை இங்கே மத, இன வேறுபாட்டில் தொடங்கும் பிரிவினைக் குரல், போராட்டத்தில் இறங்கி, இழப்புகளுக்கும் துயரங்களுக்கும் பின்னே பல்லாயிரக்கணக்கானோர் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு வேடிக்கை பார்க்கிறது. பெருந்துயரத்தினூடே வளரும் குழந்தைகள் எதிர்கொள்ளும் சுயநலத்தையும் துவேஷத்தையும் லட்சியவாதத்தையும் அவர்கள் பார்வையினூடே விவரிப்பது மட்டுமல்லாமல், மனித மனங்கள் இந்த சுயநலத்தை நியாயப்படுத்துவதையும் கூட அடிச்சீ கதையில் விவரித்த…
-
- 0 replies
- 928 views
-
-
ஆடாத நடனம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது வரும் செல் அழைப்பு எரிச்சல் ஊட்டுகிறது. கதிர்கதறிக் கொண்டிருந்த செல்லின் வால்யூமை குறைத்தான். எதிர் சுவரில் மணி பார்த்தான். “ஆறு”. இந்த அதிகாலையில் அழைப்பது யார்? குன்றத்தில் இருந்து மோகன். சோம்பலாக எடுத்து “சொல்டா..” என்றான் ஒரு சின்ன மௌனத்தின் பின் மோ கன்விசும்புவது தெரிந்தது. “கதிரு….சித்தப்பு இறந்துட்டாப்ளடா..” என்றான். ஒருகணம் தலை சுற்றுவது போல இருந்தது கதிருக்கு. சித்தப்புவின் சிரித்தமுகம் நிழலாடியது. நாக்கு லேசாய்க் குழறியது. “என்னடா சொல்றே..? எப்படா..?” “ கதிரு. . . ரூம்லேருந்து ரெண்டு நாளா இறங்கிவரவே இல்லையாம். ஏதும் உடம்புக்கு முடியலையான்னு கேக்க நேத்து நைட்டு நம்ம டீக்கடை பன்னீரு பார்த்துருக்காரு. கதவு அடை…
-
- 0 replies
- 928 views
-
-
-
- 0 replies
- 927 views
-
-
ஒரு நிமிடக் கதை: நம்பிக்கை! ஒன்றாம் வகுப்பு படிக்கும் என் மகனையும், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகளையும் அழைத்துக்கொண்டு உள்ளூர் பள்ளிக்குச் சென்றபோதுதான் அதைப் பார்த்தேன். மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் தன் மகளைப் பள்ளி வேனில் ஏற்றிவிட காத்துக்கொண்டிருந்தார் தேவி டீச்சர். இவர் என் பிள்ளைகள் படிக்கும் அரசுப் பள்ளியின் ஆசிரியை. அவரைப் பார்த்ததும் எனக்கு எரிச்சல் வந்தது. பிள்ளைகளைப் பள்ளிக்குள் அனுப்பிவிட்டு, தேவி டீச்சரின் வருகைக்காக பள்ளிக்கூட வாசலில் காத்திருந்தேன். சரியான நேரத்துக்கு அவர் வந்துவிட்டார். கொப்பளித்து வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு, சிரித்தபடியே கேட்டேன்,…
-
- 0 replies
- 927 views
-
-
பிடித்தவர்களுக்கு மட்டும் **************************************************************** பகலும் நிசப்தமாகத்தான் இருக்கிறது. இரவும் நிசப்தமாகத்தான் இருக்கிறது. முதல் நாள் நினைத்தது போல் இரைச்சலாக இல்லை. கார் ஓடுகிறது. குழாய்ச் சண்டை கூச்சலிடுகிறது. எருமை ஓயாமல் கத்துகிறது. கடல் இரவெல்லாம் சீறுகிறது. கூர்க்காக்காரன் தடியால் இரவைத் தட்டித் தட்டி எழுப்பிக்கொண்டேயிருக்கிறான். கொளகொளவென்று குழாய் நீர் குறை சொல்லிக் கொண்டேயிருக்கிறது. எதிர்வீட்டுப் பையன் திண்ணையில் உட்கார்ந்து ஊர்ப் பையன்கள் எல்லாம் ஒரு குரலாகக் குவித்தது போல பாடத்தைக் கத்திக் கொண்டேயிருக்கிறான். அப்பா மொலு மொலு வென்று வேதமோ சுலோகமோ சொல்லிக்கொண்டு சுவாமியைக் கிச்சுக் கிச்சு மூட…
-
- 0 replies
- 927 views
-
-
மாணிக்கம் ஒரு ஏழை விவசாயி. தினமும் காலையில் எழுந்து தனக்குச் சொந்தமான வயற்காட்டுக்குச் சென்று கீரை வகைகளைப் பறித்து, அதைச் சந்தைக்கு கொண்டு சென்று விற்று, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு தன் குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தான். அவன் தினமும் கீரைகளைப் பறிக்க, வயற்காட்டுக்குப் போகும் வழியில், ஒரு குடிலில் முனிவர் ஒருவர் ஒரு சிறிய பெருமாள் விக்கிரகத்தை வைத்து, அதைத் துளசி இலைகளால் பூஜைகள் செய்வதை பார்த்துக்கொண்டே போவான். அப்போதெல்லாம் முனிவரின் மீது ஒரு பக்தி கலந்த மரியாதை ஏற்படும். ஒருநாள் மாணிக்கம் கீரைகளைப் பறிக்கும் போது, அதன் அருகே சில துளசிச் செடிகள் வளர்ந்திருப்பதைக் கண்டான். அப்போது அவனுக்கு அந்த முனிவர் ஞாபகம்தான் வந்தது. உடனே ‘நாமும் அந்த …
-
- 1 reply
- 926 views
-