கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
ஸ்ரீவாணி மேடம் பொத்தூரி விஜயலட்சுமி மூலம் : பொத்தூரி விஜயலட்சுமி தமிழாக்கம் : ராஜி ரகுநாதன் பத்மாவும் சாவித்திரியும் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தார்கள். அவர்கள் இருவரும் ஒரு கவர்ன்மென்ட் அண்டர்டேக்கிங் கம்பெனியில் பணி புரிகிறார்கள். கம்பெனி பேருந்துக்காகக் காத்திருந்தார்கள். பொழுது போவதற்காக ஏதேதோ கதை பேசிக் கொண்டிருந்தார்கள். பத்மா திடீரென்று பேச்சை நிறுத்திவிட்டு, “அதோ அங்கே வருவது ஸ்ரீவாணி மேடம் தானே?” என்றாள். “எங்கே?” என்று கேட்டாள் சாவித்திரி. “அதோ, நடந்து வர்றாங்க பார்” என்றாள் பத்மா. “சீ சீ அவுங்களாக இருக்காது. ஸ்ரீவாணி மேடம் ஏன் நடந்து வரப் போறாங்க? காரில் தான் வருவாங்க. யாரையோ …
-
-
- 1 reply
- 837 views
- 1 follower
-
-
சோதனை மாலதி தன் வீட்டிலுள்ள பூஜை அறைக்குள் உட்கார்ந்திருந்தாள். கண்களை மூடியபடி இறைவனிடம் பிரார்த்தனைகளைக் கூறத் தொடங்கினாள். பொதுவான வழிபாடு முடிந்ததும் ஒவ்வொருவர் சார்பிலுமான வேண்டுதலைத் துவங்கினாள். ‘‘அம்மாவுக்கு மூட்டு வலி தொடங்கி இருக்கு. அது அதிகமாகாமல் சரியாயிடணும். இதற்கு உன் அருள் வேண்டும்...’’ கூடத்தில் அம்மா வாய்விட்டு எதையோ அரற்றிக் கொண்டிருந்தாள். ‘‘இப்ப பார்த்து இந்த மாலதிக்கு நொய்டாவுக்கு மாற்றலாகியிருக்கே. அது எங்கேயோ தில்லியைத் தாண்டி இருக்காமே. பதவி உயர்வு இப்ப ரொம்ப அவசியமா? சோதனைகளைத்தான் வேண்டிய மட்டும் அனுபவிச்சாச்சே...’’ கூடத்தில் அம்மா இப்படி தனக்குத்தானே அடிக்கடி உரத்துப் பேசிக் கொண்டிருப்பதும் அதனால் பூஜை அறையில் மாலதிய…
-
- 0 replies
- 835 views
-
-
காதலில் விழுவது. [நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் ஜான் ஸ்டீன்பெக் எழுதிய கடிதங்கள் மிகவும் புகழ் பெற்றவை. அவரது மகன் தோம் உறைவிட பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது தனது புதிய காதலைப் பற்றி தனது தந்தைக்கு கடிதம் ஒன்றை எழுதுகிறான். அந்தக் கடிதத்திற்கு ஜான் ஸ்டீன்பெக் எழுதியுள்ள பதில் கடிதம் காதலின் அழகை, மேன்மைகளை அழகாக படம்பிடித்துக் காட்டுகிறது. உலகப்புகழ் பெற்ற அக்கடிதத்தின் மொழிபெயர்ப்பு இது.] நியூயார்க் நவம்பர் 10,1958 அன்புள்ள தோம்: உன் கடிதம் இன்று எங்கள் கைவசம் கிடைத்தது. நான் என் பார்வையிலிருந்து பதிலளிக்கிறேன் நிச்சயம் எலைன் அவள் பார்வையிலிருந்து எழுதுவாள். John steinback with his son முதலில் நீ காதலிக்கிறாய் என…
-
- 0 replies
- 835 views
-
-
உங்கள் வாழ்க்கையில் இறைவனை உணர்ந்து உள்ளீர்களா? சிறு கதைதான் பேருண்மையை உணரவைக்கிறது. அன்றைக்கும் வழக்கம் போல் பாட புத்தகங்களை எடுத்து வைத்து கொண்டு பள்ளிக்கு கிளம்பினேன்.உடலில் ஏதோ ஒரு மாற்றம் ஆங்காங்கே உடலில் அரிப்பு ஏற்படுவதை போன்ற உணர்வு.பள்ளிக்கு கிளம்ப வேண்டிய அவசரத்தில் எதையும் கண்டுகொள்ளாமல் பள்ளிக்கு சென்று விட்டேன். சரியாக ஒரு மணி நேரம் கழித்து உடலில் மீண்டும் அரிப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்துக்கு மேல் என்னால் பொறுக்க மு…
-
- 1 reply
- 835 views
-
-
ஒரு பயணப்பொழுது - ஆதிலட்சுமி சிவகுமார் பனைவெளியூடாக நாங்கள் சென்றுகொண்டிருந்தோம். மணற்தரையில் வாகனச் சில்லுகள் நகர்வதற்கு அடம்பிடித்தன. ‘யோகன் ரைக்கரர் பாதையைவிட்டு விலகாம ஓடு...” ஓட்டுநருக்கு எங்களோடு வந்தவர் சொன்னார். “ஏன் அப்பிடிச் சொல்லுறியள்...” “;அப்பாவித்தனமாகக் கேட்ட என்னைப் பார்த்து அவர் புன்னகைத்தார்.”இந்தப்பக்கம் எல்லாம் ஆமி இருந்தவன்... ஏராளமான புதைவெடிகளட இருக்கும்... பாரத்துக்கு ஏற்றமாதிரி வெடிக்கிறதுக்கு வைச்சிருப்பான்” கண்ணாடியூடாக வெளியே பார்த்தான். எங்கும் பனைமரங்கள் காயப்பட்டவை. கருகியவை, கழுத்துமுறிந்தவை.. போரின் வடுக்களை அவையும் சுமந்திருந்தன. வீடுகள் அதிகமாய் இல்லை.... இருந்தவைகளும் கற்குவியல்களால் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து இந்தப்ப…
-
- 1 reply
- 833 views
-
-
Voracious in my appetite for the uncertain and unknown, I do not whine for paradise as Ovid did, expelled from Rome .-Baudelaire. சபிக்கப்பட்ட கவிஞன் ஷார்;ஸ் போதலயர். 'புல்லின் இதழ்கள்' (Leaves of grace) என்ற தலையங்கம் எவ்வாறு வோல்ட் விற்மனை உடனடியாக நினைவுக்குக் கொண்டுவருகிறதோ , அவ்வாறே 'துன்பத்தின் பூக்கள்' (Fleurs du mal) என்று கூறியவுடன் ஷார்ல் போதலயர் என்ற நாமம் ஞாபகத்தின் மேற்பரப்பில் மிதக்கவாரம்பிக்கிறது. ஏழு வயதில் தந்தையை இழந்து, தாயே தன் பிரபஞ்சமென்று அடங்காத பாசங்கொண்டு வாழ்ந்த சிறுவன் ஷார்ல் அவளின் இரண்டாந்தாரத் திருமணத்தின் போது தான் இரண்டாந்தரம் அனாதையாக்கப்பட்டதாக உணர்கிறான். தனக்கும் தாய்க்குமான பிரத்தியேகப் பாச உறவில் வேறொரு உறவு புகுந்து…
-
- 0 replies
- 833 views
-
-
படிக்கப்படாத கடிதம் அலுவலக நேரம் முடிந்து விட்டதால் பஸ்ஸில் கூட்டம் அதிகமில்லை. ஆளுக்கு ஒரு சீட்டில் அமர்ந்திருக்க எனக்குக் காலியான இருக்கை ஒன்று கிடைத்தது. ""ரெண்டு ரூபாய் சில்லறையாகக் கொடுங்க'' என்றபடி கண்டக்டர் எச்சில் தொட்டு டிக்கெட்டுகளைக் கிழித்துக் கொடுத்தபடி வந்தார். முப்பது செகண்டு முன்னால் பஸ்ûஸக் கிளப்பி விட்டால் முதலாளியின் சொத்து திவால் ஆகிவிடும் என்ற ரேஞ்சில் சண்டையிட்டுக் கொள்ளும் தனியார் நிறுவன பஸ் கம்பெனி டிரைவர்களின் கூச்சலைக் கடந்து பேருந்து மெதுவாக நிலையத்தை விட்டு வெளியேறியது. கூட்ட நெரிசலை விலக்கி ஹென்றி வுல்சி சிக்னலை அடைவதற்குப் பத்து நிமிடம் ஆனத…
-
- 0 replies
- 832 views
-
-
ஒரு நிமிடக் கதை: நம்பிக்கை! ஒன்றாம் வகுப்பு படிக்கும் என் மகனையும், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகளையும் அழைத்துக்கொண்டு உள்ளூர் பள்ளிக்குச் சென்றபோதுதான் அதைப் பார்த்தேன். மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் தன் மகளைப் பள்ளி வேனில் ஏற்றிவிட காத்துக்கொண்டிருந்தார் தேவி டீச்சர். இவர் என் பிள்ளைகள் படிக்கும் அரசுப் பள்ளியின் ஆசிரியை. அவரைப் பார்த்ததும் எனக்கு எரிச்சல் வந்தது. பிள்ளைகளைப் பள்ளிக்குள் அனுப்பிவிட்டு, தேவி டீச்சரின் வருகைக்காக பள்ளிக்கூட வாசலில் காத்திருந்தேன். சரியான நேரத்துக்கு அவர் வந்துவிட்டார். கொப்பளித்து வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு, சிரித்தபடியே கேட்டேன், ‘‘உங்க மீது எனக்கு நம்பிக்கை இருக…
-
- 0 replies
- 831 views
-
-
படிச்ச பொண்ணு! ஜன்னல் ஓரம் உட்கார்ந்து, தெருவை வெறித்து பார்த்தபடி இருந்தாள், நிர்மலா. பிரச்னையை பற்றி யோசித்ததில், மனம் வெறுமையானது தான் மிச்சம். ''ஏய் நிர்மலா... ஆஸ்பத்திரிக்கு சாப்பாடு கொண்டு போகலயா... நேரமாச்சு; அப்புறம், உன் மாமியார் கத்தப் போறாங்க...'' என்று அம்மா கூறியதும், அவளுக்கு சிரிப்பு வந்தது. 'மாமியார் கத்தப் போறாங்களாம்... அவ கத்தாம இருந்தாத்தான் அதிசயம்...' என்று நினைத்துக் கொண்டாள். பெண்ணை பெத்தவங்க சம்பந்தியின் சத்தத்துக்கு பயப்பட்டுதான் ஆகணும் என்பது விதி. படித்தவர்களாக இருந்தாலும், படிக்காத குடும்பமாக இருந்தாலும் எல்லாருக்கும் இது பொருந்தும். ஒரு கணம், அவளது மனதில், மாமியாரின் …
-
- 0 replies
- 830 views
-
-
கொட்டில் இலக்கம் 13, வலயம் 3.0 இனை சேர்ந்த......எழுதாத கவிதைகள்.... Submitted by natham_admin on ஞாயிறு, 30/08/2009 - 04:21 "கண்மணி...கண்மணி...எடி பிள்ள கண்மணி..." வீர மரத்தின் கீழ் இருந்த முருகேசர் பேத்தியை அழைத்தார். "எடி மோனை...சாப்பாட்டுக்கு மணி அடிச்சிட்டு..." மீண்டும் அவரது குரல். கண்மணிக்கு கோபம், அழுகையும் கூட. "எத்தனை தடவை சொல்லுறனான், என்னை கண்மணி எண்டு கூப்பிட வேண்டாம் எண்டு டச்சுக்காலப்பெயர். அக்கம்பக்கத்துப் பிள்ளைகள் கேலி செய்யிறதுகள்..." சொல்லியவாறு கிண்ணம் எடுத்தாள். அவள் வாய் மூடவில்லை. "கண்மணியே...கண்மணியே...சொல்லுவதைக்கேளு..." முன் தறப்பாளுக்குள் இருந்து சிறிரங்கன் பாடினான். "செருப்பு பிய்யும்..." பல்லை நெருமிக்கொண்டு கண்மணி சொன்னாள். "என் கண்மணி…
-
- 0 replies
- 830 views
-
-
உடல் எனும் இயந்திரம். இந்த பிரபஞ்ச உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் இயங்கி ஓடிக் கொண்டிருக்கிறோம். எதை நோக்கி ?? பிறந்த ஒவ்வொரு குழந்தையும் அழுகிறது பாலுக்காக, தன் தேவைகளுக்காக. ஒவ்வொரு குடும்பத்திலும் உறுப்பினர்கள் எதையோ நோக்கி ஓடுகிறார்கள். . குடும்ப தேவைகளுக்காக . அப்படி ஓடும் போது தன் சுகம், தூக்கம், பசி மறந்து இயற்கையின் சவால்களை சமாளித்தபடி. செல்ல வேண்டி இருக்கிறது. விரைவாக ஓட ஒரு வாகனம் அதற்கு பராமரிப்பு , ஆயில் மாற்றம் ரயர் மாற்றம் , பராமரிப்புக்கு விடுதல் (service ) என்பன செய்யும் மனிதன் தன்னைக் கவனிக்க மறந்து விடுகிறது..நம் உடல் எனும் இயந்திரம் சில(சிக்னல்களை )உடல் உபாதைகளை கொடுக்கிறது . அதைக் கவனித்து மருத்துவ பரிசோதனை செய்தால் பிழைத்த…
-
-
- 4 replies
- 829 views
- 1 follower
-
-
-
புதிய மனுசி - ஆதிலட்சுமி சிவகுமார் - நிலவின் ஒளியில் கூரைத்தகரங்கள் பளபளத்தன. அவள் தன் உள்ளங்கைகளை ஒருதரம் தடவிப் பார்த்தாள். கரகரப்பாய் காய்த்தபடி கைகள். தன் கைகளால் மண்வெட்டியும் பிக்கானும் பிடித்து அவள் உழைத்த உழைப்பின் அறுவடைதான் இந்தக் தகரங்கள் என நினைத்துப் பெருமைப் படுபவளாய்.. அவள் முகம்.. 'இந்தப் பிஞ்சுகள் ரெண்டும்.. மழையிலையும்.. குளிரிலையும் விறைக்கக் குடாது.." குழந்தைகளைத் திரும்பிப் பார்த்தாள். பாயைவிட்டு விலகிப்போய் ஓரமாய் தூங்கிக்கொண்டிருந்தார்கள்... மூத்தவள் ஐஸ்வர்யா அச்சில் வார்த்த மாதிரி தகப்பனையே போன்று அகலிகா கொஞ்சம் கறுப்பு. ஆனால் இவளைப்போல கம்பி கம்பியாய் நீளமான தலைமுடி. "மூத்தபிள்ளை சரியாய்த் தேப்பனையே மாதிரி... நல்ல நேரம் பொம்பிளைப் பிள…
-
- 1 reply
- 829 views
-
-
காலப்பயணம் காதலை வாழ வைக்குமா? - சயின்ஸ் ஃபிக்ஷன் சிறுகதை #LetsLove இப்போது மட்டும் வாழ்வோம்! ஒரு படைப்பு தன்னைத்தானே படைத்துக் கொள்ளுமா? ஒரு கதை தன்னைத்தானே எழுதிக் கொள்ளுமா? ஒரு நிகழ்வு தன்னைத்தானே நிகழ்த்திக் கொள்ளுமா? பிரபஞ்ச இருள் சூழ, முப்பத்து முக்கோடி கோள்கள் சுழல, காலம் மட்டும் தன்னைத்தானே கடத்திக்கொண்டிருக்கிறது! காலந்தானே கடவுள்? அந்த அறையின் ஜன்னல் அரைகுறையாக மூடப்பட்டிருந்தது. வெளியே மண்டி கிடக்கும் இருள், அந்த ஜன்னல் வழியே வெளிச்சத்தைப் போலவே அந்த அறைக்குள் பரவியதா, இல்லை அந்த இருள் அந்த அறைக்குள் முன்னரே இருந்ததா என்பதெல்லாம் அறிவியலாளர…
-
- 0 replies
- 828 views
-
-
மெல்லுணர்வு (சிறுகதை) 13/01/2014 நடேசன் குவான்ரஸ் விமானத்தின் எக்கணமி வகுப்பு இருக்கைகள் நெருக்கமாக இருந்தன. யன்னலருகே அவனது இருக்கையின் கைப்பிடியை உயர்த்திவிட்டு அடுத்த இருக்கையில் உட்கார்ந்திருந்த சேராவோடு மேலும் நெருக்கமாக சாய்ந்தான் ஆனந்தன். அவளது உடலின் நெருக்கம் மனதில் சிலிர்ப்பை ஏற்படுத்தி உடலின் உள்ளே இரசாயன மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அந்தக் கிளர்ச்சி மதுவின் போதைபோல் மேலும் மேலும் அவனுக்கு தேவையாக இருந்தது. அவனது போதை கொண்ட மனம் விமானத்தின் வேகத்துக்கு மேலாக ஆகாயவெளியில் இறக்கைகட்டிப் பறந்தது. இரத்த நாடிகளில் வேகமாக ஓடும் குருதியின் ஓட்டத்தை நாடித் துடிப்பில் கை வைத்து பார்த்துக் கொண்டான். அவனது இதயத்தின் துடிப்பு பல மடங்கு அதிகமானத…
-
- 2 replies
- 827 views
-
-
பாங்காங்கிலி ருந்து டெல்லி நோக்கி அந்த ஏர் இந்தியா விமானம் பறந்துகொண்டிருந்தது. அதன் முதல் வகுப்பு இருக்கையில் அமர்ந்திருந்த அவனது கண்கள் கலங்கியிருந்தன. அவன் பாங்காங்கின் மிகப்பெரும் போதைப் பொருள் வியாபாரி. ஆனால் அவன் தாய்லாந்து நாட்டுக்காரன் அல்ல. இந்தியாவின் ஒரு பிரபலமான அரசியல் புள்ளியின் வாரிசு. சில மணி நேரங்களுக்கு முன்பு தொலைபேசியில் வந்த தகவல் அவனை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. ``அவனுடைய தந்தை பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில், தலையில் பலத்த அடிபட்டுவிட்டது. பிழைப்பது கடினம்"என்ற செய்தி அவனை உலுக்கியது. தந்தை மீது அவனுக்கு அதீத பாசமெல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால், அவன் தனது போதை மருந்து வியாபாரத்தில் இதுவரை சம்பாதித்த பணம் முழுக்க அவனுடைய தந்தையின் பொறுப்பில்தான்…
-
- 1 reply
- 827 views
-
-
உங்களுக்குத் தெரிந்த மனிதர் யாராவது உயிர் வாழ்ந்த போதிலும் பார்க்க ஒரு இறந்தபின்பு அழகாக தோற்றமளித்தாரா? அப்படி ஒரு ஏதாவது சந்தர்ப்பத்தில் இறந்து போன ஒருவரை பார்த்தவுடன் அவ்வாறு நீங்கள் நினைத்திருக்கிறீர்களா? இது சிக்கலான கேள்வி நான் நினைப்பதை நீங்கள் புரிந்து கொள்ள விரும்பினால் அதுபற்றி விரிவாக கூறவேண்டும். எனது வேலைத்தலத்துக்கு அருகே பெரிய மயானம் இருக்கிறது. அது நமது ஊர் மயானம் போல் அல்ல யாழ்ப்பாணத்து கோம்பயன்மணல் மாதிரியாக நாலு ஆலமரங்கள் சில அலரிமரங்கள் இடைக்கிடையே ஆமணக்கு பற்றை என்பன வளர்ந்திருக்கும் இடமாக ஒரு சில ஏக்கர் விஸ்திரணத்தில் இல்லை. அதற்கு மாறாக இது பல கிலோமீட்டர் அகல நீளமான அழகிய பூந்தோட்டம். யுகலிக்கப்ரஸ் மரங்களில் இருந்துவரும் கற்பூரவள்ளி நறுமணம் நிறைத்…
-
- 0 replies
- 821 views
-
-
முல்லா எல்லா விஷயங்களையும் ஆழ்ந்து ஆராய்ச்சி செய்பவர், எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மிகுந்த ஆர்வம் கொண்டவர். இப்படித்தான் ஒரு நாள் அவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது…. வழியில் எதோ ஒன்று கிடப்பதைக் காண்கிறார், அவர் அதனருகில் குனிந்து பார்த்தார். அவருக்கு அது என்ன வென்று தெரியவில்லை. அதை கையில் எடுத்து வைத்து கொண்டு ஆராய்ந்தார் அப்போதும் அவருக்கு விளங்கவில்லை. அதை தனது மூக்கின் அருகில் எடுத்துச் செனறு முகர்ந்து பார்த்தார். அவருடைய சந்தேகம் சிறிது தெளிவுபெற்றது. ஆனாலும் அவரால் அதை உறுதியாக்கிக் கொள்ள முடியவில்லை. பிறகு அதிலிருந்து சிறிது பகுதியை எடுத்து தனது வாயில் போட்டு கொண்டார் அவருடைய முகம் ஒரு தெளிவு பெற்றதைப் போல் பிரகாசித்தது. …
-
- 0 replies
- 821 views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் பேசாத பேச்சு! ``வந்திருப்பவர்களிடம் முதலில் பேசு... வராதவர்களிடம் அப்புறம் பேசலாம்’’ - மணப்பெண்ணின் செல்போனை வாங்கிவைத்தார் தாத்தா! - கி.ரவிக்குமார் ஞானம் கணவன் வாங்கிவந்த காய்கறிகளைப் பார்த்த மனைவி, “பரவாயில்லையே... நீங்களும் காய்கறி வாங்கக் கத்துக்கிட்டீங்களே! எல்லா காய்கறியிலயும் பூச்சி அரிச்சிருக்கு. கெமிக்கல் பூச்சிக்கொல்லி தெளிக்காத நல்ல காய்கறிதான்” – மனம்விட்டுப் பாராட்டினாள்! - கீர்த்தி நடிப்பு `ஐ லவ் திஸ் லவ்வபிள் இடியயயட்...’ - செல்போன் வீடியோவில் கத்திக்கொண்டிருந்த மகளைப் பார்த்து விக்கித்து நின்றவரின் பக்கத்தில் வந்தவள் ``டப்ஸ்மாஷ் சூப்பரா பண்ண…
-
- 1 reply
- 821 views
-
-
அவளை நீங்களும் அறிவீர்கள்! - ச.பாலமுருகன் ச.பாலமுருகன் நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... அவளை நீங்களும் அறிவீர்கள்! நடுப் பகலில்கூட சூரிய ஒளியை மட்டுப்படுத்தி அனுமதிக்கும் அடர் வனம் அது. மாலையில் பொழிந்த ஆலங்கட்டி மழையால் நிலம் நன்கு குளிர்ந்திருந்தது. வனத…
-
- 0 replies
- 820 views
-
-
மைக்ரோ கதை தினம் தினம் அம்மா - மனைவியிடையே நடக்கும் போராட்டத்தில் இருந்து விடுபட்டு, அலுவலக வேலையாக வெளிமாநிலம் வந்தான் சேகர். மாமனார் வீட்டில் விட்டுவிட்டு வந்த மனைவிக்கும், தன் வீட்டில் இருக்கும் அம்மாவுக்கும் கைபேசியில் பேச மனமில்லாமல், தனித்தனியே கடிதங்கள் எழுதினான். "என் அம்மாவின் மோசமான குணம்தான் உனக்குத் தெரியுமே... இன்னும் கொஞ்சம் காலம்தான் அவர்கள் வாழ்வு. அதுவரை பொறுமையாக இரு' என மனைவிக்கும், "என்ன செய்ய? இவளைக் கட்டித் தொலைச்சாச்சு. கொஞ்சநாள் பார்ப்போம். சரி வரவில்லையென்றால் அவள் வீட்டிற்கே விரட்டிவிடுவோம். அதுவரைக்கும் பொறுமையா இருங்க'' என்று அம்மாவுக்கும் எழுதிய கடித…
-
- 0 replies
- 820 views
-
-
யுகக்குருதி: சித்தாந்தன் “நீ எங்கே இருந்து வருகின்றாய்” “நான் இன்மையிலிருந்து வருகின்றேன்” “இன்மையிலிருந்தா” “ஆம் இன்மையிலிருந்துதான்” அவர்களின் உரையாடல் எனக்கு விசித்திரமாகப்பட்டது. அந்த மண்டபத்துள் அவர்கள் மட்டுந்தான் அமர்ந்திருந்தனர். அவர்களை எனக்கு யார் என்றே தெரியாது. ஊருக்குப் புதியவர்களாக இருக்க வேண்டும். அவர்களின் வார்த்தைகள் ஒன்றிலிருந்து ஒன்று இழை பிரிந்த, முற்றிலிலும் புதியதான சங்கீதம் போல அந்த மண்டபம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருந்தன. இன்னும் நாகரீகம் தீண்டாத இடங்களிலிருந்து வந்தவர்கள் போல இருக்க வேண்டும். ஆதிமனிதச் சாயலோடு இருந்தார்கள். ஒருவரை ஒருவர் வியப்பு மேலிடப் பார்க்கும் ஒவ்வொரு கணத்தையும் நான் பார்த்துக் கொண்டி…
-
- 2 replies
- 818 views
-
-
திருவனந்தபுரம் வண்டி வந்தால் தெரிந்திருக்கும் கோவை ரயில் நிலையத்திற்கு வெகு சீக்கிரமாகவே வந்து விட்டேன். சென்னை செல்லும் என் ரயில் வர இன்னும் ஒரு மணி நேரத்துக்கும் மேல் இருந்தது. வழக்கம் போல வேடிக்கை பார்க்க வசதியாக ஒரு இடத்தைப் பிடித்து உட்கார்ந்து கொண்டேன். முதலாம் நடைமேடையில் வேறேதோ ஒரு ரயில் புறப்படத் தயாராய் நின்று கொண்டிருந்ததால், அந்த ரயிலுக்கான அவசரம் நடைமேடை முழுவதும் நிரம்பி வழிந்தது. ஒரு மணல் கடிகாரத்தைப் போலவே நடைமேடைகள் இயங்குகின்றன. ஒவ்வொரு ரயிலும் வந்து சேர்வதற்கான அறிவிப்பு ஒலிக்கவும், ஒரு அமானுஷ்யமான கை கடிகாரத்தை நிமிர்த்தி வைத்து விடுகிறது. மேல் குப்பியில் இருக்கும் மணல் சீராகக் கீழே இறங்கி நிரம்பும் காலத்தில் வருகைகளும், புறப்பாடுக…
-
- 0 replies
- 818 views
-
-
எனக்கு நீ வேணும் ரிஷபன் கீழிருந்து அழைப்பு மணியை இரண்டு முறை விட்டு விட்டு அழுத்தினேன். இது தான் சங்கேதம் . பத்மா எட்டிப் பார்த்தாள். மாடிப் போர்ஷனில் குடியிருக்கிறாள். ஒரே மகன்; ஷ்யாம். "உங்களுக்கு ஃபோன்..." "தேங்கஸ்... இதோ வரேன்..." ஃபோனில் பேசும் போது பத்மாவின் குரல் திடீரென உரத்துக் கேட்டது. "அதெல்லாம் முடியாது...." "வேணாம்... எனக்குப் பிடிக்கல..." மறுபடி தணிந்து போனது யாராக இருக்கும், பத்மாவிற்கு தொலைபேசி அழைப்பு வருவது மிக அபூர்வம்.பேசி முடித்திருக்க வேண்டும். அறைக்குள் எட்டிப் பார்த்தாள். "ஸாரி. டிஸ்டர்ப் பண்ணிட்டேனா.." "சேச்சே... அதெல்லாம் இல்லே..." மேஜை மீது வெள்ளைத் தாள்களும். பேனாவும்.இரண்டு வாரங்களாய்…
-
- 2 replies
- 817 views
-
-
இமயம் நோக்கி மீண்டும்… மழைப்பாடல் எழுதிக்கொண்டிருந்தபோது ஆரம்பித்த எண்ணம். அர்ஜுனன் பிறந்ததாகச் சொல்லப்படும் புஷ்பவதியின் சமவெளிக்குச் செல்லவேண்டும் என்று. உடனே, இக்கணமே, கிளம்பிவிடவேண்டும் என மனம் எழுச்சிகொண்டது. ஆனால் உடனே செல்லமுடியாது. ஜூலை ஆகஸ்ட் மாதங்களில்தான் அச்சமவெளிக்குச் செல்லமுடியும். அரங்கசாமிதான் துடிதுடித்தார். உடனே விமானப்பயணச்சீட்டு போட்டோம். ஆனால் இந்த ஜூலையில் பருவமழை தள்ளிவந்து இப்போது உக்கிரமாகப் பெய்துகொண்டிருக்கிறது. உத்தரகண்டின் பல இடங்கள் மூடப்பட்டுவிட்டன. பல இடங்களில் பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. ஆகவே புஷ்பவதிக்கரை உட்பட நாங்கள் திட்டமிட்ட இடங்களுக்குச் செல்லமுடியவில்லை. ஆனால் பயணத்துக்கான மனநிலை வந்துவிட்டது. கொஞ்சநாள் மலையேற்றத்துக்…
-
- 3 replies
- 816 views
-