Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. பாடசாலை விட்டு வந்த சுஜீவன் அறையின் மேசையில் கிடக்கும் கடிதத்தைப் பார்க்கிறான். இது அண்ணன் கையெழுத்தாச்சே என்று எதிர்பார்ப்பை வளர்த்தபடி அவசர அவசரமாக கடிதத்தை பிரித்துப் படிக்கிறான். படித்தவன் கண்களில் நீர் வடிய மூலையில் சாய்கிறான். சுஜீவன் 12 வயசுச் சிறுவன். போரின் விளைவால் அனாதையாகிவிட்டவன். உறவினரோடு தங்கித்தான் வாழ்கிறான். எதிர்காலம் என்பது அவனைப் பொறுத்தவரை நிச்சயமில்லாததாகி விட்டது. சசி சுஜீவனின் அண்ணன். அவர்கள் இருவருமே குடும்பத்தில் மிஞ்சி உள்ளனர். தாயும் தகப்பனும் சில ஆண்டுகள் முன்னர், யாழ் குடாவில் கிளாலிக் கடற்பரப்பில் பயணிக்கும் போது, சிங்களக் கடற்படை பயணிகள் படகுமீது நடத்திய தாக்குதலில் படகோடு காணாமல் போனவர்கள் தான். இன்று வரை அவர்களின் கதி என்னவென்று யாருக…

  2. 1. கடல் கொண்ட கோவில் நான் கிழக்குக் கோபுர வாசல் திண்ணையில், 'முருகா' என்ற கொட்டாவியுடன் துண்டை உதறிப் போட்டுக் கொண்டு சாய்ந்தேன். கிழக்குக் கோபுர வாசல் கதவு எப்பொழுதும் சாத்தித்தான் இருக்கும். ஆனால், அதே மாதிரி எப்பொழுதும் அதன் திட்டிவாசல் திறந்தே இருக்கும். திட்டிவாசல் வழியாக சமுத்திர கோஷமும் சமுத்திர அலைகளும் புலன்களில் உராய்ந்துகொண்டு இருக்கும். நான் உள்ளிருப்பதைக் கவனியாமல் அர்ச்சகர்கள் கதவைத் தாளிட்டுப் பூட்டிக்கொண்டு சென்றுவிட்டார்கள். அன்றிரவு நான் கன்னியின் சகபாடியாக அவளுடன் தனிமையில் கழிக்க வேண்டியதாயிற்று. பொச்சாப்பும் குரோதமும் புகையும் மனிதர் வாழ் சமாதிகளுக்குள் ஒன்றில், என்னை இவ்வாறு நிச்சிந்தையாக ஒரு கன்னியுடன் இராப் பொழுதைக் கழிக்க விட…

  3. “சேர் உதால போகலாமோ” என நான் கேட்க, ம், ம் போங்க போங்க என அந்த ஆமிக்காரன்; கூறினான். நானும் நண்பனும் மோட்டார் சைக்கிளில் வெள்ளந்தியாய் சிரித்தபடி , “தாங்கியூ சேர்” என்று கூறியபடி கஸ்தூரியார் வீதியால் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை நோக்கி விரைகின்றோம். யாழ். இந்து மைதானத்தை நெருங்கும்போது மைதானத்தில் ஒரே கூட்டம். வழமையாகப் பூட்டிக் கிடக்கும் மைதானத்து வைரவர் கோவில் கேற்றுக்கள் திறந்து விடப்பட்டிருந்தன. உள்ளே ஏகப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள் சகிதம் நிறைய பேர் கவலை தோய்ந்த முகத்துடன் கால் கடுக்க நின்று கொண்டிருந்தார்கள். ஏதோ விபரீதம் நடக்குது என்று, நானும் நண்பனும் மின்னல் நேரத்தில் மோட்டார் சைக்கிளை நீராவியடி பிள்ளையார் கோவிலடி வீதிக்கு திருப்பினோம். சந்திய…

  4. ஆழத்தில் ஆறாத ரணம் (தொடர்ச்சி ) தலை நகரில் இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் காலத்தில் ,ஒரு நாள் அவளையும் குழந்தைகளையும் முகவர் மூலம் எடுக்க இருப்பதாக சொன்னான். ஊரவரின் வக்கனை கதை களுக்கு மத்தியில் வாழ்வதை விட ,அப்பாவிடம் போய் சேரும் ஆர்வத்தில் நாளை எண்ணி காத்திருந்தார்கள். நாளும் வந்தது, முகவருடன் விமான நிலையம் சென்ற போது ,அதிகாரிகளின் கேள்விகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் திருப்பி அனுப்ப பட்டு விட்டார்கள் . ராஜிக்கு ஏமாற்றமும் , மேலும் தலையிடியும் ஆகியது,மீண்டும் முகவர் காசை தர மறுப்பதாகவும் அவளை தன் தாய் தந்தையுடன் குழந்தைகளை விட்டு வர சொல்லி ராகுலன் சொல்லவே ராஜி மறுத்து விட்டாள். பல வித மனப்போராடங்களுக்கு மத்தியில் ,பயணத்தை தொடர்ந்தாள். விமான…

  5. திருவேட்கை by ப.தெய்வீகன் 01 லண்டனிலுள்ள கப்பல் கட்டுமானத் துறையில் உயர் பதவி வகித்தவர் மோர்கன். அவருடைய ஒரே மகன் அல்பேர்ட் தன்னுடைய வீட்டுப் பணிப்பெண் கரோலினாவுடன் பள்ளி முடித்து திரும்பி வந்து கொண்டிருந்தான். வீதியோரச் சந்தை கடையொன்றில் சரிகை வைத்த சிறிய கைக்குட்டைகள் பல வண்ணத்தில் தொங்கின. நெரிசலான கடை தெருவில் கூடத் தொடங்கிய பலரும் பெறுமதியான கைக்குட்டைகளை ரசித்து வாங்கினார்கள். ஆசிர்வதிக்கப்பட்ட நூலால் நெய்யப்பட்டதைப் போன்று சிலர் உளம் கனிந்து ஆனந்தப் பெருக்கு அடைந்தனர். கரோலினாவின் கைகளைப் பிடித்தபடி, கைக்குட்டைகளையும் அங்கே கூடியிருந்தவர்களையும் வியந்து பார்த்துக் கொண்டிருந்தான் அல்பேர்ட். வீட்டில் தகப்பனும் தாயும் வைத்திருந்த கைக்க…

      • Thanks
    • 2 replies
    • 762 views
  6. என்னாங்க... "சொன்னது எல்லாம் ஞாபகமிருக்கா...?? நான் ரயிலேறின பிறகு எதையும் மறந்துட மாட்டீங்களே"...!! "மாட்டேன்"... "எதச் சொன்னாலும் பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டுங்க"... "கவலை படாம போயிட்டு வாம்மா, நாலே நாளுதானே நான் பாத்துக்கிறேன்"... "உங்கள நம்ப முடியாது, எதுக்கும் இன்னொரு தடவ பாயிண்ட் பாயிண்ட்டா சொல்லிடுறேன்".... பாயிண்ட் நம்பர் 1... "வீட்ல வச்சது வச்சபடி இருக்கணும். எதாவது எடம் மாறியிருந்ததுன்னா எக்கச்சக்கமா கடுப்பாயிடுவேன்". பாயிண்ட் நம்பர் 2... "சமையல் கட்ட நீட்டா தொடச்சி வச்சிருக்கேன், காபி, டீ போட்டு சாப்ட்டா... டம்ளரையும், பால் காய்ச்சுன பாத்திரத்தையும் காய விடாமா, உடனே கழுவி கவுத்தி வச்சிடணும்"... "உத்தரவு"... பாயிண்ட…

    • 1 reply
    • 762 views
  7. 1911-யில் தஞ்சை ஜில்லாவில் நடந்த மர்மம்! | 21 அக்டோபர் 1911 ஆம் ஆண்டின் முற்பகுதியில் தஞ்சை ஜில்லாவில் நடந்த மிகப்பெரிய மர்ம சம்பவம் தான் தனபகாயம் மரணம்!. வைத்தியநாத பிள்ளையின் மருமகளான தனபகாயம் எப்படி படுகொலை செய்யப்பட்டார், கொலையாளி எப்படி சிக்கினார் தெரியுமா? தொடரும்..

  8. Started by கோமகன்,

    நாலைந்து நாட்களாக மண்டை பிளக்கும் வெயில். மத்தியான வெயிலில் சன சந்தடி குறைந்துவிட்டது. சின்னப் பெடி பெட்டைகளுக்கு மட்டும் வெயில் என்று ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. புதிதாக விழுந்த கமுக மடல் ஒன்று அவர்களிடம் அகப்பட்டுவிட்டது. கமுகம் மடலை இழுத்துக் கொண்டு இரண்டு பொடிசுகள், மடலின் அடிப்பகுதியில் மூன்றுபேர் நெருக்கியடித்துக் கொண்டு இருந்தார்கள். "பீப் பீப்" என்று சத்தமிட்டுக் கொண்டு கற்பனைக் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.ஒருவன் மட்டும் வேலிக்கரையில் நிழலில் நின்றுகொண்டு பூவரசம் இலையிற் செய்த குழலை ஆனந்தமயமாக ஊதிக்கொண்டிருந்தான். அவன் பாவனைகளும் அங்க சேஷ்டைகளும் முந்தநாள் அம்மன் கோவிற்திருவிழாவில் நாதஸ்வரம் வாசித்த வித்துவானை ஞாபகப்படுத்தியது. திடீரென வாயில் இருந்…

  9. அழியாக் கோலம் “பார்த்தவுடனே டெலீட் பண்ணிடணும். ”“பண்ணிடறேன்டி. ப்ராமிஸ்! ”மௌனம்.அந்த டிஎம்மின் (Direct Message) மௌனம் உடைவதற்குள் அவர்களின் பயோவை பார்த்து வரலாம்.அவள் அப்ஸ‌ரா. நிஜப் பெயர் அதுவல்ல; எம்.ப்ரியதர்ஷினி. அவள் தலைமுறையில் எல்லா வகுப்புகளிலும், எல்லா அலுவலகங்களிலும், எல்லா வீடுகளிலும் அப்பெயரில் ஒரு பெண் இருப்பாள் என்பதால் ட்விட்டரில் கணக்கு துவக்கியபோது அப்ஸ‌ரா என்று பெயர் வைத்துக்கொண்டாள். தவிர, அவள் அப்படித்தான் கருதிக்கொள்கிறாள். உதடுகள் கோணல் என்பதைத் தவிர்த்துப்பார்த்தால் அது ஓரளவு உண்மையும்தான். ஏதோ ஓர் ஊரில் ஏதோ ஒரு கல்லூரியில் கணிப்பொறியியல் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் அவளுக்கு இன்னும் உருப்படியாய் ஜாவாவில் பேலிண்ட்ரோம்…

  10. என்னுடைய கடிகாரத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் படையினன் மிகவும் இளமையாகவும் என்னை விட குள்ளமாகவும் இருந்தான். முகத்திலும் ஒரு அப்பாவித்தனம் தெரிந்தது. யுத்தத்தில் என்னவெல்லாம் செய்திருப்பான் என்பதை முகத்தை வைத்துக் கணிப்பது கடினமாக இருந்தது. „இதிலே ஓடுவது ஜேர்மனிய நேரமா' என்று அவன் என்னிடம் ஒரு புன்னகையோடு கேட்டான். அப்பொழுதுதான் கவனித்தேன். நான் இலங்கை நேரத்திற்கு கடிகாரத்தை மற்றாமல் விட்டிருந்தேன். ஆம் இது ஜேர்மன் நேரம்தான் என்று அவனுக்கு பதிலளித்தேன். அவன் மணிககூட்டை இன்னும் நெருக்கமாக வந்து பார்த்தான். புலம்பெயர்ந்தவர்களிடம் படையினர்கள் அன்பாகப் பேசி அன்பளிப்புகளை பெறுகின்ற செய்திகளை ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். இவனும் அன்பாக வேறு இருக்கின்ற…

  11. இன்னும் எத்தனை நிர்பயாக்களையும், வினோதினிகளையும் பலி கொடுக்க இருக்கிறோம்? #MustWatchShortFilm "ம்மா... வயிறெல்லாம் ரொம்ப வலிக்குதும்மா... தாங்கவே முடியல. சீக்கிரம் வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிடும்மா. நான் காலேஜ் போகணும். படிச்சு டாக்டராகிட்டா, நம்ம கஷ்டமெல்லாம் தீர்ந்திரும்மா..." என்று சொன்னபடி தன் அம்மாவின் கையை இறுகப் பற்றிக் கொள்கிறார். ஆனால், அவர் வீடு திரும்பவில்லை. கல்லூரிக்குச் செல்லவில்லை. படிக்கவில்லை. டாக்டராகவில்லை. அந்தக் கிழிந்த வயிற்றின் வலியோடும், தான் சார்ந்த சமூகத்தை நோக்கிய ஒரு பெரும் கேள்வியோடும், உயிர் கொடுத்த பெற்றோரைப் பார்த்தபடியே உயிரிழந்தாள் அந்த "பயமற்றவள்". நான்காண்டுகளுக்கு முன்னர் இன்றைய தினத்தில் தான், நிர்பயா பாலியல் வன்ப…

  12. என் நண்பனின் கல்யாண ரிசப்ஷன். தாமதமாக சென்றேன்.மண்டபம் கிட்டத்தட்ட காலியாக இருந்தது. மணமக்களின் குடும்பத்தினர் இருந்தார்கள்."இப்போ தான் சாப்பிட்டோம். நீங்க சாப்பிட்டு வாங்க"மாடியை காட்டினார்கள். மணமக்களை வாழ்த்திவிட்டு, போட்டோக்கு நின்றுவிட்டு படி ஏறிச்சென்றேன். வரிசைகள் காலியாக இருந்தது. கேட்டரிங் பணியாளர் ஒருவர் இலை போட்டார்.போட்டோ , வீடியோக்காரர்கள் 4 பேர் என் பக்கத்தில் வந்து அமர்ந்தார்கள்."சும்மா வெக்கப்படாம வாடா "ஒரு சிறுவனை அழைத்தார்கள். அவன் தயங்கி தயங்கி உட்கார்ந்தான்.அவன் வய…

  13. ஒரு மிஸ்டர் இரண்டு மிஸ் அது ஒரு பிரபல அமெரிக்கக் கம்பெனி. அந்தக் கம்பெனியின் அக்கவுண்ட்ஸ் பிரிவில் வேலை பார்த்து வந்தான் ரகு. அந்தக் கம்பெனியின் அதே அக்கவுண்ட் பிரிவில்தான் அவனுடைய அப்பாவும் வேலை பார்த்து ரிடையர் ஆனார். அவர் காலத்திலேயே இந்த எஃகு மேசை நாற்காலிகள், ஃபைலிங்க் காபினெட்டுகள் ஆகியவை வந்துவிட்டன. கால்குலேட்டிங் மெஷின்கள் வந்துவிட்டன. இன்டர்காம் வந்து விட்டது. சென்ட்ரல் ஏர் கன்டிஷினிங் கூட. ஆனால் ஒன்று அவர் காலத்தில் கிடையாது. புடவையுடுத்திய பெண்கள். அப்போதெல்லாம் ஆங்கிலோ இந்தியப் பெண்கள் தான் ஆபிஸ் வேலைகளுக்கு வருவது வழக்கமாக இருந்தது. அப்படி இரண்டு மூன்று பேர் அந்தக் கம்பெனியிலும் இருந்த…

  14. நானும் சைக்கிளும் (சிறுகதை) நான் எட்டாவது படிக்கிறவரை சைக்கிள் ஓட்டக்கத்துக்கல. இது எனக்கு ரொம்ப அசிங்கமா இருந்துச்சு. காரணம் பழக ஒருத்தரும் சைக்கிள் குடுக்கல. எங்க அப்பா சைக்கிள தொடைச்சி வைக்கிற உரிமை மட்டும்தான் எனக்குத்தந்திருந்தாரு. ஓட்டக்கேட்டா ஒதைதான் விழும்... வாடகைசைக்கிள் கடைக்கிப்போனா சின்னபசங்களுக் கெல்லாம் சைக்கிள் கெடையாதுன்னு வெரட்டுவாரு எங்க தெருவில வாடகைசைக்கிள் வைச்சிருந்த ஒரு அண்ணன் ரவி. அவர்கடையில புத்தம் புது சைக்கிள் வரிசையா நம்பர் போட்டு நிறுத்தியிருப்பா…

  15. சுருக்குப் பை By சிந்துஜன் நமஷி ஒரு கார்காலத்தின் இரவில் இடி, மழை, மின்னலொடு என் வாழ்க்கைக்குள் வந்தவன் காந்தன் அண்ணா. காட்டாறு தாண்டிப் போன நிலம் போல என் தளத்தின் நியாயங்களை எல்லாம் கலைத்துவிட்டு போனவன் . ஒரு கள ஆய்விற்காக அப்போது நான் பியகமவில் இருந்தேன். அழகான மலையடி வார கிராமம் அது. ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயம் என்ற பெயரில் பல தொழில்சாலைகள் அந்தக் கிராமத்தைச் சுற்றி இருந்ததால் தூர இடங்களில் இருந்து வேலைக்கு வருபவர்களுக்கு உணவும், தங்குமிடமும் வழங்குவது பெரும் வியாபாரமாக மாறிப்போய் இருந்தது. ஆட்டோக்காரன் தான் என்னை ‘மெனிக்கே’ வீட்டிற்குக் கூட்டிச் சென்றான். சிங்களத்தில் ‘மெனிக்’ என்றால் மாணிக்கம் தவிர அவளுக்கும் பெயருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை…

    • 1 reply
    • 757 views
  16. செக்கு மாடு (குறுநாவல் ) பற்றிய குறிப்புகள் வ.ஐ.ச.ஜெயபாலன் 1990 களின் ஆரம்பத்தில் எழுதபட்ட குறுநாவல். திண்ணை வாசகரின் மீழ் வாசிப்புக்காக பதுசெய்வதில் மகிழ்ச்சி செக்குமாடு குறுநாவல் ஒஸ்லோ பல்கலைக் களகத்தில் மானிட இயலில் கலாநிதிப் பட்ட (Phd) ஆய்வுகள் மேற்கொண்டிருந்தபோது கலாநிதி ஒய்விண்ட் புக்ளரூட்டால் எனது வாய்மொழி ஆங்கிலம் பெயர்பின்மூலம் நோர்வீஜிய மொழியில் மொழி பெயர்க்கப் பட்டது. அது அவரது (Life on the Outside - Oivid Fuglerud) ஆய்வில் விரிவாகப் பயன்படுத்தப் பட்டது. கனடாவைச் சேர்ந்த மானிடவியலாளரான தோழி றொபின் ஓக்லே என் வாய்மொழி ஆங்கில மொழிபெயர்ப்பினூடாக செக்குமாட்டை மொழியாக்கம் செய்தார்.(Beast of Burden (Chekku Madu): The Power of the Wandering Poet Among th…

    • 0 replies
    • 756 views
  17. அன்று: மச்சி நூறு ரூபாய்க்கு வாங்கின ஸ்டாக்கின் இப்போதைய மதிப்பு தெரியுமா? ங்... ஒன்று ஆயிரம் ரூபாய்... வாவ்... எப்படிடா உட்கார்ந்த இடத்தில் இருந்தே இப்படி சம்பாதித்தே? இன்று: மச்சி என்ன சோகமா இருக்கெ? ம்... ஆயிரம் ரூபாய்க்கு வாங்கின ஸ்டாகின் விலை இப்போ என்ன தெறியுமா? என்னடா.... வெறும் ஒரு ரூபாய்! எல்லாம் இந்த "லேமேன் பிரதர்ஸ்" உடைந்ததால் வந்த வினை. ங்... ஓக்கே, எப்படி நூறு ரூபாய்க்கு வாங்கின ஸ்டாக் ஆயிரம் ரூபாவாகி, ஒரே இரவில் ஒரு ரூபாய்க்கு வந்தது? யார் அவ்வளவு கோடான கோடி ரூபாய்களால் லாபம் அடைந்தது? உங்களுக்கும் இதுபோன்ற கேள்விகள் எழுந்திருந்தால், தெளிவுபெற இந்த "குரங்கு வியபாரி" கதையைப் படிக்கவும். * * * ஒரு …

  18. அந்த ஒரு நிமிடம் - சிறுகதை - விமல் பரம் அதிகாலை ஐந்து மணிக்கு வழமைபோல் விழிப்பு வந்து விட்டது. அவசரமாய் படுக்கையை விட்டு எழுந்து ஓடத் தேவையின்றி கண்களை மூடியபடி படுத்திருந்தேன். எனக்கு வேலையில்லை மகனுக்குப் படிப்பில்லை. வேலைக்கும் பள்ளிக்கும் போவதால் அமளிப்படும் காலைப்பொழுது சத்தமின்றி உறங்கிக் கொண்டிருந்தது. நாடு விட்டு நாடு பரவி அனைவரையும் கதிகலங்க வைக்கும் கண்ணுக்குத் தெரியாத வைரஸினால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் காலமிது. இப்படியொரு நிலமை வரும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க முடியாது. அன்றாட வருமானத்துக்காக ரெஸ்றோரண்டில் வேலை செய்யும் என்னைப் போன்றவர்கள் தொடர்ந்து வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம். படிக்க வேண்டிய காலங்களை அலட்சியமாகக் கட…

  19. எனது முகப்பு புத்தகத்தினூடாக பேராசிரியர் காலமாகிய செய்தி அறிந்து நீண்ட காலமாக தொடர்புகள் இல்லாத எனது பள்ளி தோழனுக்கு தொலைபேசி செய்தேன். தொலைபேசி அழைப்பு அமைந்த பொழுது எனது குரலை அறிந்து கொண்ட அவனது குரலும் வறண்டு கர கரத்தது . அவன் எனது பெயரை விளித்து நீ அறிந்தியோ தெரியாது .என்று தொடங்க. விசயம் அறிந்து தான் எடுத்தேன் என்று சொல்வதுடன் சம்பாசணை தொடங்கியது.சம்பாசணையில் அவரை பற்றிய நினைவுகளும் விவரங்களும் வேறு விடயங்களும் தொடர்ந்தது.அவன் வேறு யாருமல்ல சிவத்தம்பி அவர்களின் நெருங்கிய உறவினன்.அவன் ஹாட்லி கல்லூரியில் உயர்தர வகுப்பில் என்னோடு ஒன்றாக படித்தவன்.உயர்தர, வகுப்பு படிக்கும் பொழுது தான் அவனுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. எங்களுக்கு 16 அல்லது 17 வயதுகள் தான் …

    • 0 replies
    • 755 views
  20. டெலிபோன் கால் - எஸ்.கே. மூர்த்தி பாழாய்ப் போன டெலிஃபோன் அடிக்கொரு தரம் கைகடிகாரத்தைப் போர்ட்டிகோவில் நின்று கொண்டிருந்த சியாமளாவின் இனிய கற்பனைகளை அதன் காரசாரமான ஒலி கலைத்தது. அவளது அழகு முகத்தில் ரவுஜ் மெருகையும் கலைத்துக் கொண்டு எள்ளும் கொள்ளும் வெடித்தன. வேண்டா வெறுப்போடு விரைந்து சென்று ரிஸீவரை எடுத்தாள். ‘ஹலோ’ ‘டியர் சியாமள்! வில் யூ ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் மீ?’ போலியான பரிவு ததும்பும் அந்த வார்த்தைகளைக் கேட்டதும் அவளுக்குச் சப்பென்றாகிவிட்டது. ஒரேடியாய்த் துள்ளிக் கொண்டிருந்த மனம் சோர்ந்து போய்விட்டது. ‘டோண்ட் பீட் எபெளட் த புஷ்! சினிமாவுக்கு வர முடியாதபடி ஒரு கேஸ் …

  21. ராமாயண பரிசயமுள்ளவர்களுக்கு இந்தக் கதை பிடிபடாமல் (பிடிக்காமல் கூட) இருக்கலாம் 1 சாலையிலே ஒரு கற்சிலை. தளர்ந்து நொடிந்துபோன தசைக் கூட்டத்திலும் வீரியத்தைத் துள்ளவைக்கும் மோகன வடிவம்; ஓர் அபூர்வ சிற்பி பூலோகத்தில் இதற்காகவென்றே பிறந்து தன் கனவையெல்லாம் கல்லில் வடித்துவைத்தானோ என்று தோன்றும் அவ்வளவு லாகிரியை ஊட்டுவது. ஆனால் அந்தப் பதுமையின் கண்களிலே ஒரு சோகம் - சொல்லில் அடைபடாத சோகம் - மிதந்து, பார்க்கிறவர்களின் வெறும் தசை ஆசையான காமத்தைக் கொன்று அவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. அது சிற்பியின் அபூர்வக் கனவு அன்று. சாபத்தின் விளைவு. அவள்தான் அகலிகை. அந்தக் காட்டுப் பாதையில் கல்லில் அடித்துவைத்த சோகமாக, அவளது சோகத்தைப் பேதமற்ற கண் கொண்டு பார்க்கும் துறவி போ…

  22. "ஏமாற்றம்" நாம் எதிர் பார்த்தது போல ஒன்று நடைபெறவில்லை என்றால் எமக்கு ஒரு ஏமாற்ற உணர்வு தானாக தோன்றி விடுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு மனிதரிலும் எதோ ஒரு வேளையில் இப்படியான ஒரு உணர்வு ஏற்படுகிறது. என்றாலும் அதன் வலிமை தாக்கம் வேறு படுகிறது. சில பெரிதாகப் பேசப்படுவதில்லை. அவை விரைவில் மறந்து விடப் படுகின்றன. ஆனால் சில, வாழ் நாள் முழுவதும் மறக்க முடியாமல் கவலையையும் கோபத்தையும் கொடுத்தவாறே இருக்கிறது. நான் இந்த இரண்டையும் கண்டவன். …

  23. எத்தியோப்பிய எலியும் நானும் எனது எத்தியோப்பிய வதிவிடத்தில் நீண்ட காலம் எலிகளும் இல்லை அவற்றின் தொல்லையும் இல்லை. சமீபத்தில் அவனோ அவளோ தெரியாது இந்துவோ கிறிஸ்தவமோ தெரியாது எலி ஒன்று வந்து சேர்ந்தது. நிச்சயமாய் நாலுகால் எலிதான். பைட் பைப்பர் என்னும் குழலூதிக் கலைஞன் போல் எலிகளை இசையால் வசியம் பண்ணும் இசையாற்றல் எனக்கில்லை. ஜெர்மனியின் கீழச் சக்சோனியில் 13 ம் நூற்றாண்டில் தோன்றிய கிராமியக் கதையின் கதாபாத்திரமே பைட் பைப்பர். எலியை விவசாயிகளின் நண்பன் என்பார்கள். அதனாற்தான் என்னவோ பின்னே வந்த ஆரியக் கடவுள் பிள்ளையாரின் வாகனமாயும் வலம் வருகிறது. “யானை” முகக் கடவுளுக்கு எலி வாகனம் என்று சில வட இந்தியர்கள் எத்தியோப்பியர்களுக்கு “அறிவியல்” விளக்கம் கொடுக்கும் போது …

    • 6 replies
    • 752 views
  24. மாயக்கிளிகள் ஜீ. முருகன் தனது இனத்துடன் வனங்களில் திரிந்து கொண்டிருந்தவளிடம் பிரேமைகொண்டு பட்டமகிஷியாக்கிக் கொண்டான் அரசன். மலைநாட்டுக்காரி ராணியாகி விட்டாள். அவள் இங்கே வரும்போது சீதனமாகப் பாடல்களைக் கொண்டு வந்திருந்தாள்; ஏராளமான பாடல்கள். அவள் பாடத்தொடங்கிய கணத்திலேயே நறுமணம் கமழ்ந்தது. துரிதமாக வளர்ந்து பூத்தன செடிகளெல்லாம். அவள் வருகைக்குப் பின்னர் அந்தப்புரத்திற்கு விதவிதமான பறவைகள் வரத்துவங்கின. புதுப்புது வண்ணங்களில் பட்டாம்பூச்சிகள் காணக்கிடைத்தன. வேட்டைக்குப் போனவன் இப்படி மணக் கோலத்துடன் திரும்பி வருவானென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சூன்யக்காரி என்று குமைந்தார் கிழட்டு மந்திரி. ஒரு மலைநாட்டுக்காரி கீர்த்திமிக்க இந்நாட்டின் மகாராணியாவதை அவருட…

  25. அப்பா.. ஐவர்.. ஆழம்... - நீலவன் அப்பாவின் போக்கு யாருக்கும் பிடிக்கவில்லை. விளங்கினால் தானே பிடிக்கும்? போனவாரம் ஒருநாள் இரவு பத்துமணிக்குத் திடீரென்று சொல்லிக் கொள்ளாமல் போனவரை இன்னும் காணோம். ஆறுமாதங்களில் அப்பா இப்படி ஒரேயடியாய் மாறிப்போய் விட்டார். அதற்கு முன்னால்? அவரது 'டியர்' இருந்தாள்- அம்மா தான்! அவள் கிழித்த கோட்டை அவர் தாண்ட மாட்டார். அவள் போவதற்குப் பத்து தினங்களுக்கு முன்புதான் தன்னுடைய உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றார். வாழ்க்கையில் எது தான் கவனமும், முன்னெச்சரிக்கையும் கலந்த ஒத்திகை போல் நிகழ்கிறது? …

    • 1 reply
    • 752 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.