கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
நமஸ்காரம், ஷேமம், ஷேமத்திற்கு எழுத வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். நீங்களோ எனக்குக் கடிதம் எழுதப் போவதில்லை. உங்களுக்கே அந்த எண்ணமே இருக்கிறதோ இல்லையோ? இங்கே இருக்கும் போதே, வாய் கொப்புளிக்க, செம்பில் ஜலத்தை என் கையிலிருந்து வாங்க. சுற்றும் முற்றும் திருட்டுப் பார்வை, ஆயிரம் நாணல் கோணல். நீங்களா கட்டின மனைவிக்கு கடிதம் எழுதப் போகிறீர்கள்? அதனால் நானே முந்திக் கொண்டதாகவே இருக்கட்டும். அகமுடையான் உங்கள் மாதிரியிருந்தால்தானே, என் மாதிரி பெண்டாட்டிக்குப் புக்ககத்தில் கெட்ட பேரை நீங்களே வாங்கி வைக்க முடியும்? “அவள் என்ன படிச்ச பெண், படிச்ச படிப்பு எல்லாம் வீணாய்ப் போகலாமா? ஆம்படையானுக்குக் கடிதம் எழுதிக்கிறாள்!” என்று வீட்டுப் பழைய பெரியவாள், புதுப் பெரியவாள் எல்லாம் என் கன்னத…
-
- 1 reply
- 698 views
-
-
அவர்கள் வித்தியாசமானவர்கள்! உஷா தைரியமாக புரொபசர் திருமதி பிரமீளா கபூரிடம், ’பிராஸ்டிடூஷன் அண்ட் ஸ்டூடன்ஸ்’ பற்றி எழுதி அடுத்த மாத கருத்தரங்கிற்குச் சமர்பிப்பதாகச் சொன்னாள். ஒரு கணந்தான் அப்புறம் பயம் வந்து விட்டது. தன்னிடமிருந்து அவ்வார்த்தைகள் எவ்வாறு வெளிப்பட்டன என்று யோசித்துப் பார்த்தாள். நிறைய அம்மாதிரிப் பெண்களைப் பற்றி ஒரு சூழலில் சிக்கிக் கொண்டு பரிதவிக்கும் பெண்களைப் பற்றி தமிழில் உஷா நிறையவே படித்திருந்தாள். அந்தப் படிப்பு அவளுக்கு ஓர் எல்லையைக் கடந்து சென்று துயரம் அடையும் பெண்கள் பால் இரக்கமும், பச்சாதாபமும் கொள்ள வைத்திருந்தது. அதுவே அவளையும் அறியாமல் அவர்களைப் பற்றி இன்னும் நெருக்கமாகப் பழகி ஒ…
-
- 1 reply
- 698 views
-
-
இன்னொரு தடவை மனிதர்களுடன் வந்தால்….!!! வருகிறேன்....- Jeya Sellappah ஊர்விட்டு ஓடோடிப் போனவர்கள்… கடைசிப்பிள்ளையும் கட்டுநாயக்கா தாண்டியபின் விடுதலை மோகத்தில் விழுந்தெழும்பியவர்கள்..... பிள்ளைகள் மூவரையும் பான்ரோம் காரில் Fபப்புக்கு அனுப்பிய பின் பொடியளின் வீரத்தில் புல்லரித்துப் போனவர்கள்…. நேற்று வந்திருந்தனர்… என்ன வரமாட்டன்..வரமாட்டன் என்டீங்கள்.. கடைசியில இந்தப்பக்கம்? இனியென்ன வரலாந்தானே…பிள்ளைக்கும் விடுமுறை… ஒரே “Bore” என்றான்… அதுதான் ஒருக்கா சுத்திப் பாத்... திட்டுப் போவம் என்று….. ஓ…. எங்க போறதா உத்தேசம்? நிறைய இடம் plan பண்ணித்தான் வந்தனாங்கள்… தம்பி list ஐ எடு.. ஓ… பிறந்த இடம்….. தவழ்ந்த இடம்…. அப்பா படித்த பள்ளிக்கூடம்… அம்மாவுக்கு அ…
-
- 4 replies
- 698 views
-
-
அண்ணாச்சி ரிஷபன் அண்ணாச்சி கடை போட்டது எங்கள் ஏரியாவின் பணப்புழக்கத்தை நம்பித்தான். பெரும்பாலான நபர்கள் மாதக் கணக்கில்தான் வாங்கினார்கள். ஒரு சிலர் காசு கொடுத்து வாங்கியது அண்ணாச்சியின் பட்ஜெட்டில் எந்த மாற்றமும் உண்டாக்கவில்லை . ஒரு நாளைக்கு நூறு ரூபாயைத் தாண்டாது. அண்ணாச்சியின் முகத்தில் எப்போது மலர்ச்சி தான். 'வாங்க' என்று வாய் நிறைய கூப்பிடுவதில் ஆகட்டும். சின்னப் பசங்களுக்கு கை நிறைய பொட்டுக்கடலை அள்ளித் தருவதிலாகட்டும். பெரிய மனசுதான். முண்டா பனியனும் தொப்பைக்கு கீழ் விழாமல் நிற்கும் வேட்டியும் எப்போதும் பளிச் தான். 'அண்ணாச்சி.. நீங்க மளிகைக் கடை வச்சிருக் கீங்கன்னு சொன்னா நம்ப முடியாது. வெள்ளையும் சொள்ளையுமா இருக்கீங்க' என்றால் பளீரென்று சி…
-
- 3 replies
- 696 views
-
-
சிறுகதை / நன்றி காணிநிலம் காலாண்டிதழ் அர்த்தநாரிஸ்வரி எஸ். சங்கரநாராயணன் இடது மார்பில் லேசாய் ஒரு கல் தன்மை இருந்தது போல் தோன்றியது பார்வதிக்கு. உடம்பில் நரம்புகள் முறுக்கி முடிச்சிட்டுக் கொண்டு சில இடங்களில் இரத்தம் சீராகப் பாயாமல் சதை இறுகிப் போவது உண்டு. அவளுக்குத் தொடையில் அப்படி ஒர் சதைக்கட்டி இருக்கிறது. மருத்துவரிடம் காட்டியபோது, கொழுப்பு அப்படிச் சேர்ந்து கொள்கிறது, அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், என்றுவிட்டதில் அவளும் அதை அலட்சியப் படுத்தி விட்டாள். குளிக்கும்போது சோப்பு தேய்க்கையில் இப்போது இதை கவனித்தாள். இடது மார்பின் சதைத் திரளில் அவள் கைக்கு சற்று அந்தக் கல், நெகிழ்ந்து கொடுக்காத களிமண்ணாய் நிரடியது. எழுந்த ஜோரில் குதிரையின்…
-
- 0 replies
- 696 views
-
-
முடியாட்டம் அஜிதன் கொல்லத்திலிருந்து பத்து மைல் கிழக்கே அஷ்டமுடி காயலின் கரையில் இருக்கும் அந்தப் படகுத்துறை ஆரம்பத்தில் ’பிராந்தன் தம்புரான் கடவு’ என்றே அழைக்கப்பட்டது. பின்னர் ஊர் மக்களின் வழக்கொலியில் அது வெறும் ’பிராந்தங்கடவு’ என்றானது. இப்போது அதை யாரும் எப்படியும் அழைக்க வேண்டியத் தேவை இல்லை. கொல்லத்தில் படகுச் சேவை நிறுத்தப்பட்டுப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அருகிலேயே ஐந்து கோடி செலவில் அரசாங்கம் நிர்மானித்த மாபெரும் கான்கிரீட் பாலம் ஒன்று இடைவெளிகள் விழுந்த தன் ராட்சதப் பற்களால் காயலைக் கவ்விப்பிடித்தது போல் குறுக்கே சென்றது. அதில் விரையும் வாகனங்களுக்கும் அவற்றின் பரபரப்புக்கும் தொடர்பே இல்லாதது போல நண்பகலிலும் இறுக்கமான அமைதியில் பிராந்தங்கடவு மூழ…
-
- 0 replies
- 696 views
-
-
றாகிங் – ஒரு வன்முறை “நான் இனி பல்கலைக் கழகம் போகாமல் இருந்துவிடுகிறேன். அவர்களை தண்டிக்க வேண்டாம். மன்னித்து விட்டுவிடுங்கள்” சொன்னவன் இப்போ இறந்து போய்விட்டான். பல நூற்றுக் கணக்கான தோப்புக்கரணங்கள் போட்டே செத்துப்போனான் அவன் என்றால், அதிர்ச்சியடையாதார் யார்?. இதற்குப் பெயர் “பகிடிவதை”. “பகிடிப்பட்டவன்” வரப்பிரகாஷ். “எனது மகனின் மரணச் சடங்கில் எந்த மாணவனும் பங்குபற்றக்கூடாது”. தட்டியில் துயரமும் கோபமும் கலந்து எழுதிவைத்தார் விதுரா இன் தந்தை. சிறுநீரகம் சிதைக்கப்பட்டு செத்துப்போனவன் விதுரா. செயற்கைச் சிறுநீரகம் பொருத்தி இயங்கவைக்க செய்யப்பட்ட முயற்சிகளெல்லாம் தோல்வியில் முடிந்தது. இவன் பலியாகியதும் “பகிடிவதைக்குத்தான்”. இவையெல்லாம் அண…
-
- 2 replies
- 696 views
-
-
"கோச்சிக்காத மச்சி.. வேற வழியே இல்ல.. இங்கே இருந்து நடந்துதான் போகனும். வெறும் மூணே கிலோமீட்டர்தான். அரை மணிநேரத்துல நடந்துடலாம்" என்ற கோபுவிடம், "விடுப்பா... இப்பயென்ன, நடந்தா போச்சு" என்று கூறி சமாதானப்படுத்தினேன். அவனுக்கு ஒரு உறுத்தல்.. முதன்முதலில் தன் நண்பனை நடக்க வைத்தா வீட்டிற்கு அழைத்துச் செல்வதென்று. அவன் என்ன செய்வான் பாவம்... அவங்க ஊருக்கு நேரடியா காலையிலே ஒரு முறையும் சாயங்காலம் ஒரு முறையும் தான் பஸ் வருமாம். மத்த நேரத்துல வந்தா இப்படித்தான்.. அதாங்க நடராஜா வண்டியிலே நடையக்கட்ட வேண்டியதுதான். ஆமா சொல்ல மறந்துட்டேன் பாருங்க.. கோபும் நானும் ஒன்னாதான் படிக்கிறோம் காலேஜ்ல. இந்த சினிமா படத்துல காட்டறமாதிரியெல்லாம் கற்பனை பண்ணிக்காதீங்க. அது இல்லாதவன், பொல்லா…
-
- 0 replies
- 693 views
-
-
நிலையழிதல் இராதா கிருஷ்ணன் “இரண்டு வழி இருக்கு, ஒன்னு நரகம், இன்னொன்று சொர்க்கம், நம் நோக்கமும் செய்லபாடும்தான் நம் வழியை தீர்மானிக்குது, இறைவனை உதறினால் நரகம், அவனை நம்பினால், அவன் சொல்படி நடந்தால் சொர்க்கம்…. “ நீண்ட நேரம் அமர்ந்து கொண்டிருந்ததால் உடல் அசவுகர்யம் கொள்ள ஆரம்பித்திருந்தது, கால்களை மாற்றியபடி அசவுகர்யத்தை வெளிக்காட்டாதபடி அமர்ந்திருந்தேன், என்னை சுற்றி 300 பேருக்கு மேல் அமர்ந்திருக்கிறோம், மேடையில் எம் மதவழிகாட்டி பேசி கொண்டிருக்கிறார், நினைவு தெரிந்த நாள் முதல் இந்த பிரசங்கங்களை கேட்டு கொண்டிருக்கிறேன், அம்மா, அப்பா, அப்பாவின் நண்பர்கள், சுற்றி இருக்கும் பெரியவர்கள் எல்லோருமே இந்த பிரசங்கங்களைதான் தங்கள் அறிவுரைகளாக …
-
- 0 replies
- 693 views
-
-
[ A+ ] /[ A- ] பெயர் : நரேன். தொழில் : பாண் போடுவது. தகுதி : இலங்கை அகதி . தந்தை பெயர் :வல்லிபுரம் . தொழில் :பாண்போடுவது. உபதொழில் :கள்ளு அடிப்பது . ************************************************************* 1997 ஆம் ஆண்டின் நடுப்பகுதி ஒன்றில் பிரான்சின் புறநகர் பகுதி ஒன் று காலை விடியலின் ஆரம்பத்தைக் காணத் தயாராகிக்கொண்டிருந்தது. வசந்த காலத்தின் மொக்கவிழ்க்கும் காலமாகையால் அந்த தொடர்மாடிக்குடியிருப்பின் முன்பு நின்றிருந்த அனைத்து மரங்களும் தங்கள் தவம் கலைந்து தங்களை பச்சை பூசி அலங்கரிக்கத் தொடங்கியிருந்தன. அவற்றின் மேலே இருந்த குருவிகள் வெளிச்சத்தைக் கண்ட சந்தோசத்தில் கிலுமுலு கிலுமுலு என்று துள்ளித்துள்ளி சத்தம் இட்டுக்கொண்டிருந்ததன. தூரத்தே தெ…
-
- 0 replies
- 693 views
-
-
சிறு கதை - 124 / "தற்கொலை தீர்வாகுமா?" காவியா தனது ஸ்கூட்டரில் அரசடி சந்தியால் திரும்பி, வைமன் வீதியால், அத்தியடி புது வீதியூடாக, யாழ் போதனா வைத்திய சாலைக்கு வேலைக்கு காலை புறப்பட்டாள். அவள் ஒரு இளம் செவிலியாக அண்மையில் தான் பணிக்கு சேர்ந்தவள். அவள் முகத்தில் புன்னகையைக் காணவில்லை. எதோ ஏக்கம் துக்கம் அவளை வாட்டுவது அப்படியே தெரிகிறது. அதை அவளால் மூடி மறைக்க முடியவில்லை. அத்தியடி புதுவீதியால் போகும் பொழுது, அந்த வீட்டில் பலர் கூடியிருப்பதைக் கண்டு, செவிலி தானே, என்ன ஏது என்று தன்னை யறியாமலே விசாரித்தாள். தானே தற்கொலை செய்து, வாழ்வை முடிக்க திட்டமிட்டவளுக்கு, இப்ப அது உண்மையில் தேவையில்லாத ஒன்றுதான். தன் வேலையிடத்தில…
-
- 1 reply
- 693 views
-
-
வீட்டுக்கு விருந்தாளி வந்தாலே……! பகீரென்கிறது மனசு… அய்யோ……! கூரைமீதிருந்த…… காகம் கரைகிறதே…! இதயத்துடிப்பு இன்னும் அதிகரிக்கிறது.. ! நிச்சயம் இன்றைக்கு விருந்தாளி யாராவது வருவாங்க….! என் சுற்றத்தை சுற்றும் முற்றும் வாஞ்சையடன் பார்க்கிறேன்…! ஆபத்து நெருங்குகிறது…! இன்று- யாரோ ஒருவர் காலி நிச்சயமாகத் தெரிந்துவிட்டது ..! விருந்தாளி வந்தேவிட்டார்…! வீட்டில் ஏற்பட்ட களேபரத்தின் மூலம் தெரிந்து கொண்டேன்…! நன்றி முகநூல் பக்கம்
-
- 3 replies
- 692 views
-
-
நாம் எல்லோருமே குழந்தைகளாக இருந்தவர்கள்; பெற்றோர் எப்படி இருப்பார்கள் என்பது நமக்குத் தெரியும். இந்த ஒரு தகுதியே போதும், குழந்தைகளுக்கான புத்தகங்களை நாம் எழுதுவதற்கு. குழந்தைகள் புத்தகத்தில் குழந்தைகளுக்காக எழுது வதைவிட, குழந்தைகள் உலகத்துக்கும் வளர்ந்தவர் களுக்கான உலகத்துக்கும் இடையிலான இடைவெளியை இட்டு நிரப்புவதுதான் முக்கியம். ஏதாவது ஒரு வகையில், குழந்தைகளுக்கான எல்லாப் புத்தகங்களும் இந்த இடத்தைக் கடந்தாக வேண்டும். பெரியவர்களுக்கான உலகில் நமக்கான இடம் எது, நாம் எப்படி நடத்தப்படு கிறோம் என்று குழந்தைகளும் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் குழந்தையாக இருந்ததற்கும் இப்போதுள்ள குழந்தைகளுக்கும் இடையே சுவாரசியமான பல வேறு பாடுகள் இருக்கின்றன. குழந்தைகளுக்காகப் புத்தகம் எழுதும்…
-
- 0 replies
- 690 views
-
-
புது நாத்து நம்மூர்ல இப்ப மயிலுங்க நடமாட்டம் அதிகமாயிடுச்சுடி. மொதல்ல ரெண்டு மயிலு வந்திருக்குன்னு கோதை சொன்னா. நான் நம்பவேயில்ல. நாலுநாளு கழிச்சு நம்ம கொல்லை மூங்கிகுத்து பக்கம் ரெண்டு நின்னத நானே என் கண்ணால பாத்தேன். ரெண்டும் அம்புட்டு அழகு. மயிலு இங்க நின்னா தோகைங்க அங்க கெடக்கு. அம்மாம் பெரிசு. அதுங்க கழுத்தை பாத்துகிட்டே இருக்கலாம் போலிருக்கு. பளபளன்னு அப்புடி ஒரு நெறம். திருபுவனம் பட்டை வெட்டி தச்சு விட்டது மாதிரி அப்படியொரு நெகுநெகுப்பு. அடுத்த ஒருவாரத்துல ஏகப்பட்ட மயிலுங்க வந்துடுச்சு.'' லட்சுமி போனில் கதையளக்க, பவித்ரா ஜன்னல் கம்பிகளைப் பிடித்தபடி ஆர்வத்துடன் கேட்டு கொண்டிருந்தாள். …
-
- 0 replies
- 690 views
-
-
-
ராஜபுதனத்தில் ஆழ்வார் என்று ஒரு சமஸ்தானம் இருந்தது. ஒரு தடவை சுவாமி விவேகானந்தர் அந்த சமஸ்தான மன்னரின் அழைப்பை ஏற்று அங்கு சென்றிருந்தார். விவேகானந்தரின் ஆன்மிகப் பெருமையையும், அவருடைய அறிவாற்றலையும் கேள்விப்பட்டிருந்த மன்னர் விவேகானந்தரை தனது அரண்மனையிலேயே தங்கவைத்து மிகுந்த உபசாரம் செய்தார். அந்த சமஸ்தான மன்னருக்குப் பொதுவாக இந்து மதத்தின் மீது பற்றும், நம்பிக்கையும் இருந்தாலும் பலவிதமான மூட நம்பிக்கைகளால் இந்து மதத்தின் சிறப்புக்கு மாசு ஏற்படுகிறது என்ற கருத்தைக் கொண்டிருந்தார். இந்து மதத்தில் வழக்கமாக உள்ள கடவுள்களின் திருவுருவ வழிபாடு என்பது ஓர் அர்த்தமற்ற மூடநம்பிக்கை என்பது மன்னரின் அழுத்தமான எண்ணம். ஒருநாள் மன்னரும், விவேகானந்தரும் இந்து மதத் த…
-
- 2 replies
- 690 views
-
-
"மாட்டு வண்டிக்காரன்" வேலன் ஒரு விவசாயி. அவன் எங்க பெரியம்மா வீட்டிற்கு அருகில் இடைக்காடு என்ற ஊரில் வாழ்ந்து வந்தான். அது ஒரு தோட்டங்கள் நிறைந்த அச்சுவேலிக்கும் செல்வச் சன்னதிக்கும் இடைப்பட்ட கிராமம். அவன் தன்னுடைய தோட்டத்திலும் மற்றும் அந்த கிராமவாசிகளின் தோட்டத்திலும் விளையும் மரக்கறிகளை காலையில் அச்சவேலி சந்தைக்கு, தனது மாட்டு வண்டியில் எடுத்துச் சென்று விற்பது வழக்கம். வேலன் என்று சொல்வதை விட, 'மாட்டு வண்டிக்காரன்' என்றால் அந்த ஊரில் உள்ள எல்லோருக்கும் தெரியும். ஒருமுறை வழமையாக செய்வது போல, மரக்கறிகளை சுமந்து கொண்டு, அவனின் மாட்டு வண்டி சந்தையை நோக்கி போய்க் கொண்டு இருந்தது. முதல் நாள் பெய்த மழையால், அந்த மண் வீதி சேறும் ச…
-
- 0 replies
- 690 views
-
-
ஒரு நிமிடக் கதை: யார் மனசிலே என்ன...? ராமன் சற்றே பெரியதாகிப்போன குரலில் பேசத்தொடங்கினார். "இந்த வரன் சரியாவரும்போல தான் இருக்கு...அதான் கொஞ்சம் கவலையாக இருக்கு" ஒன்றும் புரியாமல் மீனாட்சி விழித்தாள். "கவலையா....இது என்ன புதுக்கதை. இருந்து இருந்து உங்க ஒரே பொண்ணு கல்யாணத்துக்கு படிஞ்சு பையனை பிடிச்சிருக்கு சொன்னாலும் மறுபடியும் முருங்கமரம் ஏறாமல் இருக்கணுமேன்னு நான் கவலைப்பட...நீங்க மாத்தி இல்ல கவலைப்படறீங்க....?" பக்கத்துரூமில் இது வரை கேட்ட சத்தம் நின்று போனதோடு ஒரு அமானுஷ்ய நிசப்தம் குடி கொண்டது. …
-
- 0 replies
- 689 views
-
-
http://sinnakuddy1.b...-post_8635.html
-
- 1 reply
- 689 views
-
-
பெலிசிற்றா : ஜே.கே ஜே.கே ஏழு பதினொன்றுக்கு வரவேண்டிய தொடருந்து தாமதமானதால் பயணிகள் மேடை அலுவலகப் பணியாளர்களாலும் பாடசாலை மாணவர்களாலும் நிறைய ஆரம்பித்தது. தலைக்கு பீனித் தொப்பி, கழுத்துச்சால்வை, முழங்கால்வரை நீளும் குளிர் ஜாக்கட், சுடச்சுடக் கோப்பி என அத்தனை போர்வைகளையும் மீறிக் குளிர் அவர்களை உறைய வைத்துக்கொண்டிருந்தது. இந்தக் குளிரிலும் காற்சட்டை அணிந்து மேலே வெறுமனே ஒரு சுவெட்டரை மாத்திரம் மாட்டியிருக்கும் மாணவர்களைப் பார்த்து பெலிசிற்றா பொறாமைப்பட்டாள். அவர்களில் பலரும் இந்திய நிறத்தைச் சூடியவர்கள். சிலருக்குச் சீனத்து முகம் இருந்தது. பெலிசிற்றா அவுஸ்திரேலியாவுக்கு வந்த இந்த நாற்பது வருடங்களில் நிகழ்ந்த பெரும் மாற்றம் இது. இந்த நிலத்தில் வாழ்ந்த ஆதிக்குடிக…
-
- 1 reply
- 689 views
-
-
விக்டர்ஹியூகோ சுற்றுவட்டம் -நெற்கொழு தாசன் | கனலி http://kanali.in/wp-content/uploads/2021/01/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AF%8B-1-1300x769.jpg “ரஷோந்தி மூசு” என்ற குரல் கேட்டபோது திரும்பிப் பார்த்தேன். இராசேந்திரம் அய்யா புன்னகையோடு,தலையாட்டியபடி உள்ளே வந்துவிட்டிருந்தார். எனக்கும் அவருக்கும் இடைப்பட்ட பகுதியில் கிறிஸ்தோப் நின்று கொண்டிருந்தார். மூன்றாவது தலைமுறையாக இந்த உணவுவிடுதியை நடத்திக் கொண்டிருப்பவர். நிமிர்ந்த உருவம். பழுப்பு நிறம். கல்லூரிக்கால குத்துச்சண்டை சாம்பியன். நடக்கும்போது ஒரு துள்ளல் எப்போதும் இருக்கும். சிரிக்கும்போது கண்களிலொன்று இறுக மூடியும், மற்றையது அரைவா…
-
- 2 replies
- 687 views
-
-
வழி (தமிழீழப் பெண்களின் சிறுகதைகள்) e-book வடிவில் http://www.padippakam.com/document/ltte/Book/book00042.pdf
-
- 0 replies
- 684 views
-
-
மேஜர் சபர்வால் என்பவர் இந்திய இராணுவத்தின் ஓர் உயர் அதிகாரி. வெடிகுண்டு, வெடிமருந்துத் துறையில் முக்கிய வல்லுனரும் கூட. இவர் தனது அறிக்கையில், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் புலிகளின் பயிற்சி முகாம்கள் இயங்கிவந்தன’ என்றும் ராஜீவ்காந்தியைப் புலிகள்தான் கொன்றனர் என முடிவு செய்துகொள்ள இதுவும் ஒரு காரணம்’ எனவும் குறிப்பிட்டு உள்ளார். ஸ்ரீபெரும்புதூர் என்பது வனத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிய பகுதி என்று அவர் நினைத்திருப்பார் போலும்! ஆனால், ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலைய ஆய்வாளரும், இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர். தாக்கல் செய்தவருமான மதுரம் என்பவர், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஒருபோதும் புலிகளின் பயிற்சி முகாம் இருந்தது கிடையாது என உறுதியாக எனது குறுக்கு விசாரணையில் கூறி இருக…
-
- 0 replies
- 682 views
-
-
ஒரே விகிதம்! "உங்களுக்கு யார் யாரிடம் என்னென்ன பேசணுமென்று தெரிவதே இல்லை!'' என்று குற்றம் சாட்டினாள் சுபத்ரா - ஓய்வு பெற்ற பேராசிரியை. அவள் பெயருடன் இணைந்து வரும் பட்டங்கள் கொஞ்சம் நீளமானவை. (இடத்தை அடைக்கும்) சொன்னதோடு இல்லாமல் அசோக்கை உறுத்துப் பார்த்தாள். "எல்லாம் உன்னால தான்' என்று அவள் பார்வை சொல்லியது. அவள் கணவர் பாலகோபால் எங்கோ யோசித்தபடியிருந்தார். "ஏன்தான் பேச்சை ஆரம்பித்தோமோ?' என்று அவருக்குத் தோன்றிற்று. இருந்தாலும் அசோக்கின் நிலைமை உறுத்திக் கொண்டுதானிருந்தது. ஏதோ எம். ஏ., படிக்கிறேனென்று தொடர்ந்து பயிற்சிக்குப் போனான். ஒரு "குரூப்' தேர்வு பெறுவதற்குள் போது…
-
- 0 replies
- 682 views
-
-
*நண்பரொருவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிகாலை நான்கு மணிக்கு ரயிலில் வந்து இறங்கினார். வடபழனி தாண்டிப் போகவேண்டும். ஆட்டோ பிடித்தார். நான்கரைக்கெல்லாம் அவர் வீட்டு வாயிலுக்கு ஆட்டோ வந்துவிட்டது. ஆட்டோ கட்டணம் ரூ 230. பர்ஸை எடுத்துப் பார்த்தார். என்ன சங்கடம். ஐநூறு ரூபாய் நோட்டுத்தான் இருந்தது. சில்லரை இல்லை. ஆட்டோ ஓட்டுநரிடம் ஐநூறு ரூபாயைக் கொடுத்து மீதியைக் கேட்டார். `நீங்கள்தான் முதல் சவாரி ஐயா. என்னிடமும் சில்லரை இல்லையே?` என்றார் ஓட்டுநர். அதிகாலை நான்கரை மணிக்கு எந்தக் கடையும் திறந்திருக்காது. யாரிடம் போய்ச் சில்லரை வாங்குவது? யோசித்த நண்பர், பெருமூச்சுடன், `சரி. மீதி உன்னிடமே இருக்கட்டும்` எனச் சொல்லிவிட்டார். ஆட்டோ ஓட்டுநர் அவரின் ச…
-
- 1 reply
- 681 views
-