கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3080 topics in this forum
-
வீட்டுக்கு விருந்தாளி வந்தாலே……! பகீரென்கிறது மனசு… அய்யோ……! கூரைமீதிருந்த…… காகம் கரைகிறதே…! இதயத்துடிப்பு இன்னும் அதிகரிக்கிறது.. ! நிச்சயம் இன்றைக்கு விருந்தாளி யாராவது வருவாங்க….! என் சுற்றத்தை சுற்றும் முற்றும் வாஞ்சையடன் பார்க்கிறேன்…! ஆபத்து நெருங்குகிறது…! இன்று- யாரோ ஒருவர் காலி நிச்சயமாகத் தெரிந்துவிட்டது ..! விருந்தாளி வந்தேவிட்டார்…! வீட்டில் ஏற்பட்ட களேபரத்தின் மூலம் தெரிந்து கொண்டேன்…! நன்றி முகநூல் பக்கம்
-
- 3 replies
- 698 views
-
-
நாம் எல்லோருமே குழந்தைகளாக இருந்தவர்கள்; பெற்றோர் எப்படி இருப்பார்கள் என்பது நமக்குத் தெரியும். இந்த ஒரு தகுதியே போதும், குழந்தைகளுக்கான புத்தகங்களை நாம் எழுதுவதற்கு. குழந்தைகள் புத்தகத்தில் குழந்தைகளுக்காக எழுது வதைவிட, குழந்தைகள் உலகத்துக்கும் வளர்ந்தவர் களுக்கான உலகத்துக்கும் இடையிலான இடைவெளியை இட்டு நிரப்புவதுதான் முக்கியம். ஏதாவது ஒரு வகையில், குழந்தைகளுக்கான எல்லாப் புத்தகங்களும் இந்த இடத்தைக் கடந்தாக வேண்டும். பெரியவர்களுக்கான உலகில் நமக்கான இடம் எது, நாம் எப்படி நடத்தப்படு கிறோம் என்று குழந்தைகளும் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் குழந்தையாக இருந்ததற்கும் இப்போதுள்ள குழந்தைகளுக்கும் இடையே சுவாரசியமான பல வேறு பாடுகள் இருக்கின்றன. குழந்தைகளுக்காகப் புத்தகம் எழுதும்…
-
- 0 replies
- 697 views
-
-
"சாதனைகள் தூரத்திலில்லை" இன்று நவராத்திரி விழாவின் முதல் நாள். நான் எங்கள் சிறு குடிசையின் தூணை பிடித்துக்கொண்டு 'செல்வம், கல்வி, வீரம்' பற்றி என் அறிவுக்கு எட்டியவரை யோசித்தேன். நான் இப்ப சாதாரண வகுப்பு மாணவன். என் அப்பாவும் அம்மாவும் பாலர் பாடசாலையுடன் தங்கள் படிப்பை நிற்பாட்டி விட்டார்கள். அப்பா ஒரு நாட்கூலி தொழிலாளி, கிடைக்கிற எந்த வேலையும் செய்வார். இல்லா விட்டால் குடும்பத்தை நடத்த முடியாது. அம்மா அப்பாவின் அந்த அந்த நாள் கூலியின் படி வாழ்க்கையை ஓட்டுவார், அதில் எப்படியும் ஒரு சிறு தொகை உண்டியலில், ஒரு அவசர தேவைக்கு என்று சேகரித்தும் வைப்பார். நவராத்திரியில் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள்…
-
-
- 2 replies
- 697 views
- 1 follower
-
-
"கோச்சிக்காத மச்சி.. வேற வழியே இல்ல.. இங்கே இருந்து நடந்துதான் போகனும். வெறும் மூணே கிலோமீட்டர்தான். அரை மணிநேரத்துல நடந்துடலாம்" என்ற கோபுவிடம், "விடுப்பா... இப்பயென்ன, நடந்தா போச்சு" என்று கூறி சமாதானப்படுத்தினேன். அவனுக்கு ஒரு உறுத்தல்.. முதன்முதலில் தன் நண்பனை நடக்க வைத்தா வீட்டிற்கு அழைத்துச் செல்வதென்று. அவன் என்ன செய்வான் பாவம்... அவங்க ஊருக்கு நேரடியா காலையிலே ஒரு முறையும் சாயங்காலம் ஒரு முறையும் தான் பஸ் வருமாம். மத்த நேரத்துல வந்தா இப்படித்தான்.. அதாங்க நடராஜா வண்டியிலே நடையக்கட்ட வேண்டியதுதான். ஆமா சொல்ல மறந்துட்டேன் பாருங்க.. கோபும் நானும் ஒன்னாதான் படிக்கிறோம் காலேஜ்ல. இந்த சினிமா படத்துல காட்டறமாதிரியெல்லாம் கற்பனை பண்ணிக்காதீங்க. அது இல்லாதவன், பொல்லா…
-
- 0 replies
- 697 views
-
-
புது நாத்து நம்மூர்ல இப்ப மயிலுங்க நடமாட்டம் அதிகமாயிடுச்சுடி. மொதல்ல ரெண்டு மயிலு வந்திருக்குன்னு கோதை சொன்னா. நான் நம்பவேயில்ல. நாலுநாளு கழிச்சு நம்ம கொல்லை மூங்கிகுத்து பக்கம் ரெண்டு நின்னத நானே என் கண்ணால பாத்தேன். ரெண்டும் அம்புட்டு அழகு. மயிலு இங்க நின்னா தோகைங்க அங்க கெடக்கு. அம்மாம் பெரிசு. அதுங்க கழுத்தை பாத்துகிட்டே இருக்கலாம் போலிருக்கு. பளபளன்னு அப்புடி ஒரு நெறம். திருபுவனம் பட்டை வெட்டி தச்சு விட்டது மாதிரி அப்படியொரு நெகுநெகுப்பு. அடுத்த ஒருவாரத்துல ஏகப்பட்ட மயிலுங்க வந்துடுச்சு.'' லட்சுமி போனில் கதையளக்க, பவித்ரா ஜன்னல் கம்பிகளைப் பிடித்தபடி ஆர்வத்துடன் கேட்டு கொண்டிருந்தாள். …
-
- 0 replies
- 696 views
-
-
இருட்டுப் பூச்சிகள் : நெற்கொழுதாசன் by நெற்கொழுதாசன் “என்ர மனுசி ஐயர் ஆக்கள். நான் வெள்ளாளன். நாங்கள் உதெல்லாம் சாப்பிடுறதில்லை.”இயல்பாக சொல்லியபடி, நான் வெட்டிக்கொடுத்திருந்த மாட்டிறைச்சியை கிறிலில் சூடாகிக்கொண்டிருந்தான். அவன் கூறியதைக் கேட்டதும் ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்குப் பிறகு எனக்குள் ஒரு சிறிய அதிர்வு எழுந்து அடங்கியது. என்ன இழவடா இது!, எங்கபோனாலும் முன்னால சனி போகுதென எனக்குள் சொல்லிக்கொண்டேன். செய்துகொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு நிமிர்ந்து அவனைப் பார்த்தேன். நான், தன்னைப் பார்ப்பதை உணர்ந்ததும் அவனில் ஒருவிதமான அசாதாரண உடல்மொழி வெளிப்பட்டு அடங்கியது. உலகைமுடக்க…
-
- 3 replies
- 695 views
-
-
12/21/2022 மனத்தடை எல்லாமே கைகூடி வரும்; செய்துவிடலாமென்கின்ற துணிவிருந்தால். மாந்தனுக்குத் தடையாக இருப்பது அவனுடைய சொந்த மனத்தடைதான். நம்மில் எல்லாருக்குமே மனத்தடை இருக்கின்றது; நம்மால் இவ்வளவுதான் செய்ய முடியும், இதனைச் செய்ய முடியாது எனப் பலவாறாக. மனம் அனுமதிக்குமேயானால் முயற்சிகளுக்கு எல்லையே இல்லை. What you believe, why you are! What you eat, how you are! What you think, what you are! எப்போதெல்லாம் தாயகம் செல்கின்றேனோ அப்போதெல்லாம் ஈரோட்டு உறவினர்களைச் சந்திப்பது வழக்கம். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகச் சொல்லிக் கொண்டு இருந்ததுதான். தோட்டத்தைச் சென்று பார்க்க வேண்டுமென்பது. கைகூடி வ…
-
- 0 replies
- 694 views
- 1 follower
-
-
அமரசிறி : கருணாகரன் 01 உளநல மருத்துவர் மேகதாஸ் ஒரு புதன்கிழமை என்னை அழைத்திருந்தார். அவரிடம் சென்றபோது இளைய மருத்துவ அணியினருக்கு உளநிலை விரிவுரை நடந்து கொண்டிருந்தது. அது முடியட்டும் என்று அங்கேயிருந்த புத்தக அடுக்கிலிருந்து புத்தகங்களை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். மாணவர்களில் சிலர் பாடங்களைக் கடந்து என்னைப் பார்ப்பதாக உணர்ந்தேன். அதைக் கண்டு கொள்ளாத மாதிரிப் புத்தகங்களிலேயே கவனம் செலுத்துவதாகப் பாவனை செய்தேன். இருந்தாற்போல ஒரு மாணவன், “சேர், உடலுறவுக்கும் உளவியலுக்கும் உள்ள தொடர்பு என்ன?” என்ற கேள்வியை மேகதாஸிடம் கேட்டான். என்னுடைய பார்வை சட்டென, துடிப்பான அந்த மாணவன் யார் என அறிய விழைந்தது. அந்தக் கூட்டத்தில் அவனை அடையாளம் காண முடியவில்லை. எல்லோரும் சிரித்து…
-
-
- 5 replies
- 693 views
-
-
"துரோகம்" நான் கொழும்பில் பொறியியலாளராக வேலை பார்த்துக்கொண்டு இருந்த காலம் அது. எனக்கு உதவி பொறியியலாளராக, வெற்றிநாயகன் என்ற ஒருவன் பதவி பெற்று, என்னுடன் நல்ல நண்பனாகவும் பழகத் தொடங்கினான். எமது நட்பு பலமாக, நாம் எம் தனிப் பட்ட விடயங்களையும் எமக்கிடையில் பகிரத் தொடங்கினோம். இருவரும் அப்பொழுது திருமணம் ஆகாத வாலிபர்கள். ஆகவே பெண் நண்பியை பற்றியும் தாராளமாக கதைப்போம். எமக்கிடையில் எந்த ஐயப்பாடும் இல்லை. ஒரு முறை, விடுதலையில் ஊர் போய், திரும்பிய வெற்றிநாயகன், முதல் முதல் தன் காதல் அனுபவத்தை, அன்று மாலை இருவரும் பொது விடுதியில் [pub] சந்தித்த பொழுது சொல்ல தொடங்கினான். தான் ஒரு முறை தன் கிராமத்தில், ஒட்டப்பயிற்சி செ…
-
- 0 replies
- 693 views
-
-
வழி (தமிழீழப் பெண்களின் சிறுகதைகள்) e-book வடிவில் http://www.padippakam.com/document/ltte/Book/book00042.pdf
-
- 0 replies
- 692 views
-
-
*நண்பரொருவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிகாலை நான்கு மணிக்கு ரயிலில் வந்து இறங்கினார். வடபழனி தாண்டிப் போகவேண்டும். ஆட்டோ பிடித்தார். நான்கரைக்கெல்லாம் அவர் வீட்டு வாயிலுக்கு ஆட்டோ வந்துவிட்டது. ஆட்டோ கட்டணம் ரூ 230. பர்ஸை எடுத்துப் பார்த்தார். என்ன சங்கடம். ஐநூறு ரூபாய் நோட்டுத்தான் இருந்தது. சில்லரை இல்லை. ஆட்டோ ஓட்டுநரிடம் ஐநூறு ரூபாயைக் கொடுத்து மீதியைக் கேட்டார். `நீங்கள்தான் முதல் சவாரி ஐயா. என்னிடமும் சில்லரை இல்லையே?` என்றார் ஓட்டுநர். அதிகாலை நான்கரை மணிக்கு எந்தக் கடையும் திறந்திருக்காது. யாரிடம் போய்ச் சில்லரை வாங்குவது? யோசித்த நண்பர், பெருமூச்சுடன், `சரி. மீதி உன்னிடமே இருக்கட்டும்` எனச் சொல்லிவிட்டார். ஆட்டோ ஓட்டுநர் அவரின் ச…
-
- 1 reply
- 690 views
-
-
கதை சொல்லவா? (06)/ சிறுகதை/ யாழ் சுமந்த சிறுவன்- தீபச்செல்வன்/ திரு தியா காண்டீபன் தீபச்செல்வன் எழுதிய "யாழ் சுமந்த சிறுவன்" சிறுகதை
-
- 0 replies
- 690 views
-
-
மேஜர் சபர்வால் என்பவர் இந்திய இராணுவத்தின் ஓர் உயர் அதிகாரி. வெடிகுண்டு, வெடிமருந்துத் துறையில் முக்கிய வல்லுனரும் கூட. இவர் தனது அறிக்கையில், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் புலிகளின் பயிற்சி முகாம்கள் இயங்கிவந்தன’ என்றும் ராஜீவ்காந்தியைப் புலிகள்தான் கொன்றனர் என முடிவு செய்துகொள்ள இதுவும் ஒரு காரணம்’ எனவும் குறிப்பிட்டு உள்ளார். ஸ்ரீபெரும்புதூர் என்பது வனத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிய பகுதி என்று அவர் நினைத்திருப்பார் போலும்! ஆனால், ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலைய ஆய்வாளரும், இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர். தாக்கல் செய்தவருமான மதுரம் என்பவர், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஒருபோதும் புலிகளின் பயிற்சி முகாம் இருந்தது கிடையாது என உறுதியாக எனது குறுக்கு விசாரணையில் கூறி இருக…
-
- 0 replies
- 688 views
-
-
ஒரே விகிதம்! "உங்களுக்கு யார் யாரிடம் என்னென்ன பேசணுமென்று தெரிவதே இல்லை!'' என்று குற்றம் சாட்டினாள் சுபத்ரா - ஓய்வு பெற்ற பேராசிரியை. அவள் பெயருடன் இணைந்து வரும் பட்டங்கள் கொஞ்சம் நீளமானவை. (இடத்தை அடைக்கும்) சொன்னதோடு இல்லாமல் அசோக்கை உறுத்துப் பார்த்தாள். "எல்லாம் உன்னால தான்' என்று அவள் பார்வை சொல்லியது. அவள் கணவர் பாலகோபால் எங்கோ யோசித்தபடியிருந்தார். "ஏன்தான் பேச்சை ஆரம்பித்தோமோ?' என்று அவருக்குத் தோன்றிற்று. இருந்தாலும் அசோக்கின் நிலைமை உறுத்திக் கொண்டுதானிருந்தது. ஏதோ எம். ஏ., படிக்கிறேனென்று தொடர்ந்து பயிற்சிக்குப் போனான். ஒரு "குரூப்' தேர்வு பெறுவதற்குள் போது…
-
- 0 replies
- 688 views
-
-
பாஷை பிரபல இசை அமைப்பாளர் சந்துருவின் மகளுக்குத் திருமணம். அதற்கான ஏற்பாடுகளை அவர் மனைவி ரேணுகா மும்முரமாக கவனித்துக்கொண்டு இருந்தாள்.சமையல் பொறுப்பை ஒரு வட இந்திய கான்ட்ராக்டரிடம் ஒப்படைத்துவிட்டு அவரிடம் பாதி ஆங்கிலம் பாதி தமிழில் பேசி புரிய வைத்துக்கொண்டிருந்த மனைவியைப் பார்த்து திகைத்துப் போனார் சந்துரு. பந்தல் போட ஒரிசாக்காரர்களிடமும், மேடை அலங்காரத்துக்கு டெல்லியிலிருக்கும் ஒரு நிறுவனத்தின் நிர்வாகியிடமும் பாஷை புரியாமல் விளக்கிக் கொண்டிருந்த மனைவி மீது சந்துருவுக்கு ஆத்திரமே வந்துவிட்டது. மகளுக்கு மெகந்தி வைக்க மும்பையிலிருக்கும் யாரோ ஒரு நிபுணருடன் மொபைலில் தட்டுத்தடுமாறி பேசிக்கொண்டிருந்த ரேணுகாவிடம் இருந்து மொபைலைப் பிடுங்கினார். ‘‘எதுக்கு இப்பட…
-
- 1 reply
- 687 views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: ஸ்யாம் ரேட்டிங் அம்மா சொன்ன வீட்டு வேலையைச் செய்து முடித்துவிட்டு, `ரேட்டிங்' கேட்டது குழந்தை. - எஸ்.ராமன் ரகசியம் `இதை யார்கிட்டயும் சொல்லிடாதே. ரகசியமா வெச்சுக்கோ' என்று வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பினாள் லதா. - கே.சதீஷ் பணம் ``ரெண்டு நாளா ஒரே காய்ச்சல், சளி, இருமல்...'' என்ற முதியவரிடம், ``கார்டா... கேஷா?'' என்றாள் நர்ஸ். - சி.சாமிநாதன் தயவு ``தயவுசெஞ்சு இன்னிக்காவது வாக்கிங் போயேன்'' - ஆளுயரக் கண்ணாடியைப் பார்த்துச் சொன்னான் அவன். - டி.ஏ.சி.பிரகாஷ் ஹீரோயின் கிராமத்துக் கதைக்கு, மும்பையில் அழகான ஹீரோயின் தேடினார் டைரக்டர். - பெ.பாண்டியன் எச்சரிக்கை ``அந்த ஆன்ட்டியோட மிய…
-
- 0 replies
- 687 views
-
-
உன்னை அறிவேன் மாதத்தின் முதல் வாரம் என்பதால், அந்த டிபார்ட்மென்ட் ஸ்டோரில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. வித்யா டிராலியை தள்ளியபடி வர, அவள் மாமியார் சாரதா, பருப்பு பாக்கெட்டுகளை எடுத்து டிராலியில் போட்டாள். ''வித்யா... நீ போய் சோப்பு, பவுடர் எல்லாம் எடுத்து வை; நான், பூண்டு நல்லதா பார்த்து எடுத்துட்டு வரேன்,'' என்றதும், டிராலியை தள்ளிக் கொண்டு போனாள், வித்யா. வித்யாவுக்கு திருமணமாகி, மூன்று மாதம் தான் ஆகிறது. படித்து முடித்தவுடன் திருமணம் என்பதால், இன்னும் அவளுக்கு எதுவும் பிடிபடவில்லை. அமைதியாக இருப்பாள், சாரதா. வேலைக்காரியிடம் அன்பாக நடந்து கொள்வாள். மனதுக்கு தப்பு என்று தெரிந்தால், 'படபட'வென்று பேசி, கோபப்படுவாள். இதுவரை அவளிடம் அப்படி நடந்…
-
- 0 replies
- 685 views
-
-
குறையொன்றுமில்லை! பாலகிருஷ்ணன் குட்டி போட்ட பூனை போல இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தார். ஆயிற்று கிட்டத்தட்ட இரண்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஓட்டமாய் ஓடிவிட்டது. ரிடையர்டு ஆன பிறகு பென்ஷன் பணம் அருகில் உள்ள வங்கிக் கணக்கில் சேர்வதற்கான என்னென்ன வேலைகள் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்து முடித்தாகிவிட்டது. இனி ஒரு வேலையும் கிடையாது. காலையில் எழுந்தவுடன் காப்பி சாப்பிட வேண்டியது, தினசரிகளைப் படிக்க வேண்டியது, குளிக்க வேண்டியது. சில ஸ்தோத்திரங்களையும் சொல்ல வேண்டியது. பிறகு சாப்பிட வேண்டியது. மீண்டும் சாப்பிட வேண்டியது. தூங்க வேண்டியது. மாலையில் நடைப்பயிற்சி, பிறகு வீடு, சாப்பாடு, தூக்கம்....மூன்…
-
- 2 replies
- 685 views
-
-
தாய்மையே வெல்லும்! "அவன் வந்துவிடுவானோ எனும் அச்சத்துடன் தேவகியும் கோமதியும் ரயில்நிலைய இருக்கையில் நிலை கொள்ளாமல் அமர்ந்திருந்தார்கள். "நான் பொறந்தப்பவே கழுத்தை நெறிச்சோ வாயில நெல்லைப் போட்டோ என் கதைய முடிச்சிருந்தா இப்ப இந்தக் கஷ்டம் வந்திருக்காதில்லம்மா'' என்ற தேவகி வானத்தை நோக்கினாள். வானம் இருண்டு கிடந்தது. இடி முழக்கங்களும் மின்னல் வீச்சுக்களும் பூமியை துவம்சம் செய்யப்போவது போல் தொடர் தாக்குதல் நடத்தத்தொடங்கி இருந்தன.. மெல்ல மெல்ல மழையும் இறங்கிற்று, பயணிகள் ஆங்காங்கே ஒதுங்கி, ஒண்டிக் கொண்டு நின்றார்கள். "ரயில் எப்ப வரும்?'' "வருமோ வராதோ.. வந்தாதான் தெரியும்'' இத்தகைய …
-
- 0 replies
- 684 views
-
-
சாதல் என்பது... பொ. கருணாகரமூர்த்தி ஓவியங்கள்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி பெர்லினில் கேப்பர்னிக் என்கிற பசுமையான பகுதியில் அமைந்திருக்கிறது எங்கள் வளமனை. பின்பக்கச் சாளரத்தைத் திறந்தால் மரங்கள் செறிவான காடு, அதற்குள் ஐதான இழைகளுடையதும் தொய்வானதுமான, ஒரு சிலந்திவலைபோல குறுக்கும் நெடுக்குமாக சிறுசிறு பாதைகள் (புறோமினேட்ஸ்) காலாற உள்ளே நடப்பவர்களுக்கும் குதிரைகளில் சவாரி செய்பவர்களுக்குமாக உள்ளவை. காட்டின் எல்லைவரை நடந்தால் இறுதியில் கேப்பர்னிக் ஸ்ப்றே (கடலேரி) வரும். கோடைகாலத்தில் ஏரியின் தீரத்தின் முழுநீளத்துக்கும் முகாம் வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும், மக்கள் தனித்தனியாகவும் சிறு சிறு கூடாரங்கள் அமைத்தும் முகாமிடுவர், கிறில் போடுவர், நீச்சலடிப்பர். காட்டினுள் இருந்து இரவில் …
-
- 0 replies
- 683 views
-
-
காக்கா! பெரியவர் அண்ணாமலையின், 60ம் கல்யாணத்தை, மிகவும் சிறப்பாக கொண்டாட முடிவு செய்தனர், அவரது குடும்பத்தினர். அதற்கு காரணமில்லாமல் இல்லை. ஊரின் பெரும்புள்ளி, அண்ணாமலை; அவரது மகள் அமெரிக்காவிலும், மகன் கனடாவிலும் இருந்தனர். பிள்ளைகள் பக்கத்தில் இல்லாதது, உள்ளூர அவருக்கு கவலை தான். ஆனாலும், அதை வெளிக்காட்டி, தன் கம்பீரத்தை குறைத்துக் கொள்ள மாட்டார். ஆனால், அவர் மனைவியோ, மனதில் பட்டதை சொல்லி, 'அந்த நாள்ல, எங்கய்யா, ஆயிரம், ரெண்டாயிரம் ஏக்கர்ன்னு சொத்தை சேர்த்து வச்சாரு... ஆனா, என்னைய படிக்க வைக்கல. அது, என் மனசுக்குள்ள பெரிய கொறையா மண்டிக் கிடந்ததால, புள்ளைங்கள பெரிய படிப்பா படிக்க வச்சேன்; என்ன பிரயோஜனம்...' என, …
-
- 0 replies
- 682 views
-
-
துரோகி ஒரு ஊரில், சிறு தொழில் செய்யும் வியாபாரி பறவைகளைப்பிடித்து சந்தையில் விற்கும் தொழில் செய்து கொண்டு இருந்தான். வழக்கமாக சந்தை கூடும் ஒரு நாளில் தன் விற்பனைக்காக ஐந்து கெளதாரி பறவைகளை கொண்டு சென்று இருந்தான் . நான்கினை ஒரு கூட்டிலும் ஒன்றை தணிக் கூட்டிலும் வைத்திருந்தான். அந்த வழியே வந்த ஒருவன் பறவைகளின் விலை என்ன என்று கேட்க நான்கு பறவைகள் இருந்த கூட்டினை காட்டி ஒன்று நான்காயிரம் ரூபா என்றான் . மாற்றியதை காட்டி ஐந்தாயிரம் ரூபா என்றான். என் அதற்கு விலை அதிகம் என்று கேட்க்க ..எல்லாவற்றுக்கும் உணவு கொடுப்தேன் அதற்கு விசேடமாக தயாரித்து உணவு கொடுக்கிறேன் . என்றான் ..ஏன் அப்படி என்று கேட்க இதை தனியே வைத்து பழக்கி ஒரு கூட்டிலை விட அது தன் குரல் எழு…
-
-
- 2 replies
- 681 views
- 1 follower
-
-
[size=4]தாங்களே கடவுளாக மாற விரும்பிய சில விஞ்ஞானிகள் ஒன்றாக சேர்ந்து கடவுளை சந்தித்து. 'முதியவரே, இதுவரை நீங்கள் நன்றாக படைப்புத்தொழிலை செய்து வந்தீர்கள், நாங்களும் உயிரை உருவாக்க முடியும், எதை விரும்புகிறோமோ, எதை விரும்புகிறோமோ அதை எங்களால் உருவாக்க முடியும், எனவே நீங்கள் ஓய்வு பெறுவதற்கு இது தான் சரியான நேரம்' என்றார்கள்.[/size] [size=4] [/size] [size=4]அதற்கு கடவுள், 'அப்படியா, உங்களால் எதை வேண்டுமானாலும் உருவாக்க முடியுமா? எங்கே ஒரு உயிரை உருவாக்கிக் காட்டுங்கள் பார்க்கலாம்' என்றார். விஞ்ஞானிகள் கொஞ்சம் மண்ணை எடுத்து, எதேதோ செய்து அந்த மண்ணை ஒரு சிறு குழந்தையாக மாற்றி விட்டார்கள். உடனே கடவுள் சொன்னார் 'இதெல்லாம் சரி தான், முதலில் உங்களுடைய சொந்த மண்ணை உருவாக்குங…
-
- 2 replies
- 680 views
-
-
கைப்பாவை வெள்ளிக்கிழமை என்றாலே குதூகலம்தான். எப்படியும் காலை நேரம் முழுக்க அடுத்த வாரத்திற்கான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் கூட்டங்கள் இருக்கும். அவை நடந்து முடிந்து தத்தம் இருக்கைகளுக்குச் செல்லும் போது நண்பகல் உணவு வேளை வந்து விடும். வார ஈறில் நீ என்ன செய்யப் போகிறாய் எனக் கேட்பதும், நான் என்ன செய்யப் போகிறேன் எனச் சொல்வதிலுமாக ஓரிரு மணி நேரங்கள் கழியும். பிறகென்ன? வார ஈறும், அதையொட்டிய விடுமுறை நாட்களும்தான். மகிழ்ச்சி! அந்நினைப்பினால் மேலிட்ட மனத் துள்ளாட்டத்தினூடாக வந்து கொண்டிருந்த என்னை, அலேக்காகத் தூக்கியது கமகம வாசனை. தகவல் தொழில்நுட்பப் பொறியாளராக நான் வேலை பார்க்கும் நிறுவனத்திலிருந்துதான் கமழ்ந்தடிக்கிறது அந்த நறுமணம். நான் குடியிருக்கும் மி…
-
- 3 replies
- 678 views
-
-
வழிகாட்டிய வா(ரி)சு அது ஒரு தனியார் தொழிலகம். அந்த நிறுவனத்தில் பேண்ட் ஜிப், லெதர் பேக் ஜிப் முதலியன உற்பத்தி செய்யப்படுகின்றன. சிப்காட் தொழில் வளாகத்தில் இந்த நிறுவனம் இயங்குகிறது. ஐநூறு தொழிலாளர்கள் ஜிப் ஆலையில் வேலை பார்க்கிறார்கள். ஐம்பது பேர் நிர்வாகப் பிரிவில் மேனேஜர், உதவி மேனேஜர், உதவி அலுவலர், உதவியாட்கள், கணக்காளர் போன்ற பதவிகளில் அங்கம் வகிக்கிறார்கள். நிர்வாகப் பிரிவில் பணிபுரியும் அலுவலர்களில் முக்கியமானவர்களை அழைத்து தலைமை அலுவலகம் அவ்வப்போது பயிற்சிகள் தரும். இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள நமக்கு வாய்ப்புக் கிடைக்காதா..? என்று எல்லோருமே ஆவலாய் எதிர்பார்ப்பார்கள். "ஆபீஸில் உள்ள உதவி மேன…
-
- 1 reply
- 678 views
-