கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
அழகென்ற குற்றத்திற்கான தண்டனை மரணமாகும் பிரேமவதி மனம்பேரியின் கதை தமிழில் : ஃபஹீமாஜஹான் ஹெந்திரிக் அப்புஹாமி கதிர்காம வனப் பாதுகாப்புத் திணைக்களத்தில் காவல் உத்தியோகத்தராகப் பணிபுரிந்து தனது சீவனோபாயத்தை நடத்திச் சென்றார். பத்து பிள்ளைகளைக் கொண்ட ஹெந்திரிக் அப்புஹாமி - லீலாவதி தம்பதியினர் 1951ம் ஆண்டில் பிறந்த தமது முதலாவது குழந்தைக்கு 'பிரேமவதி மனம்பேரி' எனப் பெயர் சூட்டினர். அவர்களது ஏழைக்குடிசையினுள் காண்போரைக் கொள்ளை கொள்ளும் மலரொன்றாக 'பிரேமவதி மனம்பேரி' நாளுக்கு நாள் வண்ணம் பெற்று வளர்ந்தாள். இளமைப் பருவம் அவளது அழகை மென்மேலும் கூட்டியது. 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கதிர்காமத்தில் இடம்பெற்ற புத்தா…
-
- 25 replies
- 3.2k views
-
-
ஆம்பளைங்களை நம்பாத..! ------------------------------------------------ தீபாவிற்கு ஒரு நொடியில் உடல் நடுங்கி விட்டது. சித்தியினை அவள் இங்கு எதிர்பார்க்கவில்லை. என்ன பேசுவது எனத் தெரியாமல் உறைந்து நின்றிருந்தாள். சித்தியேதான் “என் தங்கம்” என்று அழுதபடி வந்துக் கட்டிக் கொண்டாள். உணர்வு திரும்பவும் தானும் அழத் தொடங்கிய தீபா சித்தியைக் கட்டிக் கொள்ள, சத்தம் கேட்டு வீட்டினுள் இருந்து வந்த ராஜேஸ்வரி நிலைமையைப் புரிந்துக் கொண்டு இருவரையும் வீட்டினுள் அழைத்து சென்றாள். சித்திக்கு குரல் அடங்கவில்லை. “இப்படி யாருமில்லாத அனாதை மாதிரி ஓட வச்சுட்டானுகளே பாவிங்க” அந்த வார்த்தை தீபாவிடம் அடங்கி இருந்த அழுகையை மேலும் தூண்டியது. அதைப் புரிந்துக் கொண்ட ராஜேஸ்வரி அதை திசை திருப…
-
- 8 replies
- 2k views
- 1 follower
-
-
நாவல் எழுதும் கலை - அபிலாஷ் ஜெயமோகனின் பெரும்பாலான எதார்த்த நாவல்கள் படிக்க சுவாரஸ்யமானவை, இரண்டு மூன்று முறைகள் மீளப் படித்தாலும் அலுக்காதவை; அதற்குக் காரணம் அவரது மொழியோ விவரணையோ மட்டுமல்ல அல்ல, மாறாக அவரது வடிவ நேர்த்தியே. அவருடைய எந்த 300 பக்கங்களுக்கு உட்பட்ட நாவலை எடுத்துக் கொண்டாலும் கதை முதல் சில அத்தியாயங்களுக்குள் ஒரு தீவிரமான சம்பவத்துடன் ஆரம்பித்து வேகமெடுத்து பிறகு நிலைகொண்டு பல விசயங்களில் லயித்து, சிக்கல்களை வளர்த்து இறுதியில் மீண்டும் தீவிரமாகி ஆடிக்களைத்து பொட்டில் அடித்தாற் போல ஒரு முடிவுக்கு வரும். “ஏழாம் உலகம்”, “ரப்பர்”, “காடு” போன்றவற்றை உதாரணமாகக் காட்டலாம். இந்நாவல்களின் கிளைமேக்ஸ் காட்சிகள் மறக்க முடியாதவை! இக்காட்சிகள் – ஒரு மரணம், துரோ…
-
- 0 replies
- 1.3k views
-
-
முன்னொரு காலத்தில் ஜப்பான் நாட்டில் சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்தது. அதாவது வேலை செய்ய முடியாத முதுமைப் பருவத்தினை அடையும் வயதானவர்களை தூக்கிச் சென்று, மலைப் பகுதியில் விட்டு விட வேண்டும். இதனால் வயதானவர்களைப் பராமரிக்க வேண்டிய சுமை நாட்டு மக்களுக்கு இல்லை என்பது அரசனின் எண்ணம். அந்தச் சட்டம் நடைமுறையில் இருந்த போது ஒரு தந்தையும் மகனும் ஒருவரிடம் ஒருவர் மிகுந்த அன்பு கொண்டவர்களாக விளங்கினர். நாளடைவில் அந்தத் தந்தை வேலை செய்ய இயலாத முதுமைப் பருவத்தை அடைந்தார். ஆதலால் அந்நாட்டின் சட்டப்படி அவரை மகன் மலைப்பகுதியில் கொண்டு விட்டு விட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானான். தந்தையைப் பிரிய அவனுக்கு மனமே வரவில்லை. எனினும…
-
- 4 replies
- 1.1k views
-
-
■ ஒரு தாய் அப்போதுதான் ஒரு குழந்தையை பிரசவித்திருக்கிறாள். அந்தக் குழந்தையின் தந்தை ஒரு வாரத்துக்கு முன்னால்தான் இறந்து போனான். எமதர்மன் ஒரு எமதூதனை அனுப்பி அந்த அம்மாவுடைய உயிரை எடுத்துக் கொண்டு வந்துவிடு" என்கிறான். இந்த எமதூதன் நினைக்கிறான், "ஐயோ பாவம் அப்பாவும் இல்லை, அம்மாவையும் நான் எடுத்துக்கொண்டு போய்விட்டால் இந்த குழந்தைக்கு யார் கதி" என்று எடுக்காமல் திரும்பி விட்டான். ஆக, எமதூதன் அந்த குழந்தைக்கு யார் கதி என்று நினைத்து பரிதாபப்பட்டதனில் உயிரை எடுக்காமல் போய்விட்டான். ஆனால், அங்கே எமன் சொல்லிவிட்டார், "உனக்கு தேவலோக ரகசியங்கள் தெரியவில்லை. கடவுளுடைய அருளாட்சி எப்படி நடக்கிறது என்று தெரியவில்லை. அது தெரிகிற வரைக்கும் பூமியில் போய் கிட" என்று அவனை…
-
- 0 replies
- 897 views
-
-
அப்பாவா இப்படி? கதையாசிரியர்: எஸ்.கண்ணன் கதைத்தொகுப்பு: குடும்பம் என்னோட பெயர் ப்ரியா. வயது பதினெட்டு. பெங்களூர் மவுண்ட்கார்மல் காலேஜ்ல படிக்கிறேன். என் அப்பா அம்மாவுக்கு நான் ஒரேகுழந்தை. தினமும் காலையில் என்னோட அப்பாதான் என்னை அவரோட கார்ல காலேஜுக்கு கூட்டிகிட்டுப் போவார். என்னை செல்லமா ‘டுப்பி’ன்னு கூப்பிடுவார். நானும் அப்பாவும் பிரண்ட்ஸ் மாதிரிதான் பழகுவோம். எனக்கு அப்பான்னா ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அம்மா என்னிடம் ஸ்ட்ரிக்டா இருப்பாங்க. ப்ரதோஷம், சங்கஷ்ட சதுர்த்தி, அமாவாசை, ஆடின்னு அடிக்கடி கோவிலுக்குப் போவாங்க. பூஜை, புனஸ்காரம் என்று நேம நிஷ்டைகள் அதிகம். கோபம் வந்தா ஹிஸ்டீரியா வந்தமாதிரி கத்துவாங்க. …
-
- 2 replies
- 958 views
-
-
கணவன் தன் மனைவியிடம் ஒருமுறை ₹250 கடன் வாங்கினான். சில நாட்கள் கழித்து மறுபடியும் இன்னுமொரு 250 ரூபாய் வாங்கிக்கொண்டான் . சிலநாட்கள் சென்றபின் தன் கணவனின் மணிப்பர்ஸில் பணம் இருப்பதைப் பார்த்த மனைவி தான் கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டாள். . மனைவியிடம்..நான் உனக்கு எவ்வளவு பணம் தரவேண்டும் என்று எதார்த்தமாகக் கேட்டான். மனைவி சொன்னாள் ரூபாய் 4100 தரவேண்டும் என்று...... கணவனின் பல மன்றாடுதலுக்குப்பிறகு மனைவி கொடுத்த கணக்கு வழிமுறை . 1). *Rs. 2 5 0* 2). *Rs. 2 5 0* ------------------ *Rs. 4 10 0* ------------------ ஆக மொத்தம் ர…
-
- 0 replies
- 544 views
-
-
“கொழும்பும் கொரோனாவும்” - அரசியல் அலசல் கொரோனா வந்ததும் வந்தது இன்னும் மனிசர பாடாய்ப் படுத்திக் கொண்டு இருக்கு’ முன் வீட்டு பரமேஸ் அக்கா முணங்கிக் கொண்டே கதவடியில் வந்து நின்றாள். கொழும்பில் அரசாங்கம் கட்டிக் கொடுத்திருக்கும் தொடர் மாடி வீடுகளில் அவரவர் கதவடியில் வந்து நின்றாலும் நமது வீட்டுக் கதவடியில் வந்து நிற்பது போல் தான் இருக்கும். முகத்தினை துணியினால் பொத்திக் கொண்டு நின்ற பரமேஸ் அக்காவைப் பார்க்க பாவமாகக் கிடந்தது. ‘ஏன் அக்கா என்னாச்சு’ என்று கேட்ட என்னை மேலேயும் கீழேயும் பார்த்துவிட்டு ‘ஏன் உமக்கு கத தெரியாதே… நம்மட மல்காந்தி இப்போ கோல் எடுத்தவா. அவவும் மற்ற பிளட் ஆக்களோட சேர்ந்து கீழே போய் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணப் போறாவாம். நியூஸ்ல காட்றவை தா…
-
- 0 replies
- 570 views
-
-
எங்கள் சிப்பாய்களில் எவனும் உன்னைக் காதலித்து ஏமாற்றிவிட்டானா?” என் குரலிலிருந்த பரிகசிக்கும் தொனிக்கும் அவளது திடுக்கிடும் பாவத்திற்கும் துளியும் பொருந்திப் போகவில்லை. படுக்கை விரிப்பின் மறுமுனையில் கிடந்த எனது இடுப்புவாரைக் கையிலிடுத்து வினோதமாக உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பவளின் கவனத்தைக் கோரவே அக்கேள்வியைக் கேட்டிருந்தேன். “என்ன கேட்டீர்கள்?” ஏற்கனவே சிவந்திருந்த கன்னத்தில் புது இரத்தம் பாய்ந்திருந்தது. “ஒன்றுமில்லை.. என்னவோ குறிப்பற்று சொன்னேன்”. அறைக்குள் நான் நுழைந்ததிலிருந்து அவளது பார்வையில் அத்தனை ஆழம் இருக்கவில்லை. சிமிட்டாத இமைகள் அவள் அந்தப் பேச்சை அப்படியே விடப்போவதில்லை என்பதாகவோ மேற்கொண்டு என்னிடம் எதுவுமே பேசப்போவதில்லை என்பதாகவோ எதையோ அறிவித்தன…
-
- 4 replies
- 1.6k views
-
-
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
கடவுள் காத்திருப்பார்! மிகவும் பழமையான வீடு, 60 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது, அந்த காலி இடம் வாங்கும்போது அந்த இடத்தில ஒரு சிறிய மாமரம் இருந்தது, அந்த வீட்டை கட்டிய தொழிலாளர்கள் அந்த மரத்தின் கீழ் அமர்ந்துதான் மதிய உணவு உண்பார்கள். அந்த வீட்டு முதலாளிக்கு அந்த மாமரத்தின் மீது தனி பாசம், அந்த மரத்தை போலவே அவரது வாழ்வும் குழந்தை குட்டியென சந்தோஷமாக வளர்ந்தது அவருக்கு இப்போது 90 வயது, மகன்களுக்கு திருமணம் ஆகி பின் பேரப்பிள்ளைகளுக்கும் திருமணம் ஆகி குழந்தைகளுடன் வெளிநாட்டில் வசிக்கிறார்கள். இந்த பாரம்பரிய வீட்டை இடித்து அதே இடத்தில் ஒரு Apartment கட்டி ஆளுக்கொரு flat எடுத்துக்கொள்ளலாம் என்கின்ற முடிவோடு ஒன்று கூடி இருக்கிறார்கள், தாத்தாவும் ஒப…
-
- 0 replies
- 532 views
-
-
நீ அமைதியாக உறங்க… நவம்பர் 24, 2020/தேசக்காற்று/சிறுகதைகள்/0 கருத்து நீ அமைதியாக உறங்க… வியர்த்தது. காலதரை நெட்டித் திறந்தான். நிலவு அறைக்குள் விழுந்தது. கம்பியில் பிடித்து விளிம்பில் கால் வைத்து எட்டிப் பார்த்தான். சாய்ந்து கிடந்த வேலிக்கு மேலாக அந்த வெளி தெரிந்தது. இருட்டில் பார்த்தால் எதுவுமே தெரியாது. நெஞ்சத்தை ஏதோவொன்று அழுத்தும். ஆனால் நிலவில் இனிமைதான். எங்கும் வெண்ணிறப் படிமங்கள். மரங்களின் நிழல்கள் மறைக்க முயன்றன; முடியவில்லை. நாலாவது வரிசையில் கடைசியா…. இடம் அடையாளம் தெரிந்தது. அங்குதான் அவனின் அண்ணன் உறங்குகின்றான். பின்பக்கம் சத்தம் கேட்டது. சமையற்கட்டைவிட்டு அம்மா இப்போதைக்கு வரமாட்டாள். இண்டைக்…
-
- 0 replies
- 650 views
-
-
ஒரு ஊர்ல ஒரு அறிவாளி ஆள் இருந்தார் . அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம் . அடிக்கடி கோவிலுக்கு போவார். கடவுளை வேண்டிக்குவார் .அதுக்கப்புறம் காட்டுக்கு போவார் . விறகு வெட்டுவார் .அதை கொண்டு போய் விற்பனை செய்வார் . ஓரளவுக்கு வருமானம் வந்தது . அதை வச்சிக்கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தார் . ஒரு நாள் அது மாதிரி அவர் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தார் . அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை . எதோ விபத்துல இழந்துட்டது போல இருக்கு.. ! அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு.. அதை இவர் பார்த்தார் .. அப்போ இவர் மனசுல ஒரு சந்தேகம் "இந்த…
-
- 3 replies
- 1.6k views
-
-
*நண்பரொருவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிகாலை நான்கு மணிக்கு ரயிலில் வந்து இறங்கினார். வடபழனி தாண்டிப் போகவேண்டும். ஆட்டோ பிடித்தார். நான்கரைக்கெல்லாம் அவர் வீட்டு வாயிலுக்கு ஆட்டோ வந்துவிட்டது. ஆட்டோ கட்டணம் ரூ 230. பர்ஸை எடுத்துப் பார்த்தார். என்ன சங்கடம். ஐநூறு ரூபாய் நோட்டுத்தான் இருந்தது. சில்லரை இல்லை. ஆட்டோ ஓட்டுநரிடம் ஐநூறு ரூபாயைக் கொடுத்து மீதியைக் கேட்டார். `நீங்கள்தான் முதல் சவாரி ஐயா. என்னிடமும் சில்லரை இல்லையே?` என்றார் ஓட்டுநர். அதிகாலை நான்கரை மணிக்கு எந்தக் கடையும் திறந்திருக்காது. யாரிடம் போய்ச் சில்லரை வாங்குவது? யோசித்த நண்பர், பெருமூச்சுடன், `சரி. மீதி உன்னிடமே இருக்கட்டும்` எனச் சொல்லிவிட்டார். ஆட்டோ ஓட்டுநர் அவரின் ச…
-
- 1 reply
- 679 views
-
-
மொழிபெயர்ப்புச் சிறுகதை : மூன்று வேண்டுகோள்கள் – குமாரி (தமிழில் – எம். ரிஷான் ஷெரீப்) ரிஷான் ஷெரீப் ஒவ்வொரு விதமாக வேண்டுகோள்களை முன் வைக்க முடியும். அவற்றுக்கான மறுமொழிகள் – அவை மிகவும் மாறுபட்டதாகவும் அமையலாம் இல்லையா? வேண்டுமென்றால் கைவிட்டுவிடவும், கண்டு கொள்ளாமலிருக்கவும் கூட முடியும். இவை மூன்று தாய்மார்களின் வேண்டுகோள்கள்… I என்டயா? என்ட பேர் ஸ்ரீநாச்சி. காவன்னா ஸ்ரீநாச்சி. என்ட பேர்ல என்ன இருக்கப் போகுது? மனுஷனா வாழச்சுதந்திரம் இல்லண்டா பேருல மட்டும் என்ன பயனிருக்கப் போகுது? மண்ணோட முட்டி மோதி ஏலுமான விதத்தில எதையாவது வேக வச்சுத் திண்டுபோட்டு யாருக்கும் எந்தத் தீங்குமில்லாம சீவிச்சு வந்த சனங்கள் நாங்கள். தெரிஞ்ச காலத்து…
-
- 1 reply
- 845 views
-
-
அழகான வயல் வெளிகளும் உயர்ந்த மரங்களும் நிழல் பரப்பி நிற்க ,சிறு நீரோடைகளும் , விவசாயத்தை நம்பி வாழும் மக்களும் கொண்ட அந்தக்குக் கிராமம். சொக்கனும் அவன் மனைவியும் ஆணும் பெண்ணுமாக இரு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தான். அவ்வூர் மக்கள் மிகுந்த முயற்சி உள்ளவர்கள். ஆடு மாடுகள் மேய்ப்பதும் , தென்னையின் ஓலைகள் பின்னி வியாபாரத்துக்கு அனுப்புவதும் , சிலர் குளங்குட்டை களில் மீன் பிடிப்பதையும் கொண்டவர்கள். சொக்கனும் நெற்பயிர்ச்செய்கையில் மிகுந்த அனுபவமும் ஆர்வமும் உள்ளவன். ஓலையால் வேயப்படட ஒரு வீடும் , சில மாடு கன்றுகளும் தான் அவனுக்கு சொந்தம். அவ்வூரில் சற்று வசதிபடைத்த ஒரு நிலச்சொந்தக் காரரிடம் நாலு வயல் காணிகளை குத்தகைக்கு எடுத்து அவனும் மனைவியும் நெற்பயிர…
-
- 2 replies
- 768 views
-
-
அண்ணாச்சி ரிஷபன் அண்ணாச்சி கடை போட்டது எங்கள் ஏரியாவின் பணப்புழக்கத்தை நம்பித்தான். பெரும்பாலான நபர்கள் மாதக் கணக்கில்தான் வாங்கினார்கள். ஒரு சிலர் காசு கொடுத்து வாங்கியது அண்ணாச்சியின் பட்ஜெட்டில் எந்த மாற்றமும் உண்டாக்கவில்லை . ஒரு நாளைக்கு நூறு ரூபாயைத் தாண்டாது. அண்ணாச்சியின் முகத்தில் எப்போது மலர்ச்சி தான். 'வாங்க' என்று வாய் நிறைய கூப்பிடுவதில் ஆகட்டும். சின்னப் பசங்களுக்கு கை நிறைய பொட்டுக்கடலை அள்ளித் தருவதிலாகட்டும். பெரிய மனசுதான். முண்டா பனியனும் தொப்பைக்கு கீழ் விழாமல் நிற்கும் வேட்டியும் எப்போதும் பளிச் தான். 'அண்ணாச்சி.. நீங்க மளிகைக் கடை வச்சிருக் கீங்கன்னு சொன்னா நம்ப முடியாது. வெள்ளையும் சொள்ளையுமா இருக்கீங்க' என்றால் பளீரென்று சி…
-
- 3 replies
- 694 views
-
-
சுகுணாவை கேட்காதே ரிஷபன் சுகுணாவைப் பார்க்கவே தயங்கினேன். என்ன பதில் சொல்லப் போகிறேன் "ஹலோ ரவி.." என்றாள் "ஹலோ.." என்று முனகினேன் "என்ன.. உடம்பு சரியில்லையா" "நத்திங். சும்மா" அவள் போய் விட்டாள் பக்கத்து இருக்கை முகுந்தன் என்னைப் பார்த்து கண்ணடித்தான் "என்னடா அமுக்கமா இருந்துகிட்டு அவ வலையிலே மாட்டிகிட்டியா..." போச்சு இனி அலுவலகம் முழுக்க இவனே செய்தியைப் பரப்பி விடுவான். நான் பதில் சொல்லத் தயங்குவது அவனுக்கு வேறு யூகங்களைக் கொடுத்திருக்கும் உண்மையில் என்ன நடந்தது என்று எனக்குத் தானே தெரியும் சுகுணாவைப் பற்றி எங்கள் மத்தியில் பரவலாய் ஒரு பேச்சு உண்டு. யாராவது மாட்டினால் விடமாட்டாள். சுத்தமாய் 'மொட்டை'யடித்து விடுவாள…
-
- 1 reply
- 604 views
-
-
அத்தியாயம் 1 ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு கொலை வழக்கை இந்த 21ம் நூற்றாண்டில் போஸ்ட் மார்ட்டம் செய்ய காரணமிருக்கிறது.ம்ஹும். அமரர் கல்கி எழுதிய என்றும் பெஸ்ட் செல்லர் பட்டியலில் இருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை மணிரத்னம் இப்போது இரு பாகங்கள் கொண்ட திரைப்படமாக எடுக்க முயற்சி செய்கிறார் என்பதால் அல்ல!பிறகு எதற்காக இப்போது..? சுவாரஸ்யத்துக்காகத்தான்! பின்னே... தமிழகத்தின் பெருமை வாய்ந்த வரலாறாகச் சொல்லப்படும் பிற்காலச் சோழ அரசின் காலத்தில், இளவரசராக பட்டம் ஏற்று மன்னராக முடிசூட இருந்த ஆதித்த கரிகாலன் தன் 28வது வயதில் படுகொலை செய்யப்பட்டார் என்பதும், அதற்கான காரணம் இன்று வரை மர்மமாகவே இருக்கிறது என்பதும் எப்பேர்ப்பட்ட க்ரைம் ஸ்ேடாரி!முதலில் அமரர் கல்கிக்க…
-
- 23 replies
- 10.2k views
- 1 follower
-
-
இப்படி ஓர் எதிரொலியா - சிறுகதை - தேவகி கருணாகரன் அந்த ஞாயிற்றுக் கிழமை தான் முகுந்தனுடைய வாழ்க்கையை தலைகீழாக்கின நாள் மதிய சாப்பாட்டுக்குப் பின் முகுந்தனின் அப்பா, சின்னத்தம்பி நித்திரை கொள்வது வழக்கம். அந்நேரம் வீட்டில் எல்லோரும் மெள்ளமாகத் தான் பேச வேண்டும். வீட்டுக்குள் ஓடிப் பிடிக்கக் கூடாது என்பதும் சட்டம். சரியான கோவக்காரர், அவர் நித்திரையைக் குழப்பினால் வீட்டில் எல்லோருக்கும் ஏச்சும் அடியும் தான். அன்று முகுந்தனின் அம்மா ராசு, நல்லூர்க் கந்தசாமி கோவிலுக்குப் போயிருந்தார். அண்ணன்மார் தங்கள் கூட்டாளிகளோடு சினிமாவிற்குப் போயிருந்தனர். முகுந்தனுக்கு அப்போது பத்து வயது தான். இன்றைக்கு எப்படியாவது அப்பாவிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என எண்ணி போட்டிக…
-
- 0 replies
- 610 views
-
-
அந்த ஒரு நிமிடம் - சிறுகதை - விமல் பரம் அதிகாலை ஐந்து மணிக்கு வழமைபோல் விழிப்பு வந்து விட்டது. அவசரமாய் படுக்கையை விட்டு எழுந்து ஓடத் தேவையின்றி கண்களை மூடியபடி படுத்திருந்தேன். எனக்கு வேலையில்லை மகனுக்குப் படிப்பில்லை. வேலைக்கும் பள்ளிக்கும் போவதால் அமளிப்படும் காலைப்பொழுது சத்தமின்றி உறங்கிக் கொண்டிருந்தது. நாடு விட்டு நாடு பரவி அனைவரையும் கதிகலங்க வைக்கும் கண்ணுக்குத் தெரியாத வைரஸினால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் காலமிது. இப்படியொரு நிலமை வரும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க முடியாது. அன்றாட வருமானத்துக்காக ரெஸ்றோரண்டில் வேலை செய்யும் என்னைப் போன்றவர்கள் தொடர்ந்து வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம். படிக்க வேண்டிய காலங்களை அலட்சியமாகக் கட…
-
- 0 replies
- 752 views
-
-
நெடுநல்வாடை வையகம் பனிப்ப, வலனேர்பு வளைஇப் பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென ஆர்கலி முனைஇய கொடுங்கோற் கோவலர் ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப் புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல் நீடிதழ்க் கண்ணி நீரலைக் கலாவ மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன் கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க மாமேயல் மறப்ப மந்தி கூரப் பறவை படிவன வீழக் கறவை கன்றுகோ ளழியக் கடிய வீசிக் குன்றுகுளிர்ப் பன்ன கூதிர்ப் பானாள் புன்கொடி முசுண்டைப் பொறிப்புற வான்பூப் பொன்போற் பீரமொடு புதற்புதல் மலரப் பைங்காற் கொக்கின் மென்பறைத் தொழுதி இருங்களி பரந்த ஈர வெண்மணற் செவ்வரி நாரைய டெவ்வாயுங் கவரக் கயலறல் எதிரக் கடும்புனற் சாஅய்ப் பெய…
-
- 3 replies
- 3.8k views
-
-
திருமதி. பெரேரா: இஸுரு சாமர சோமவீர පෙරේරා මහත්මිය | ඉසුරු චාමර සෝමවීර | தமிழில்: எம்.ரிஷான் ஷெரீப் திருமதி. பெரேரா விழித்துக் கொண்ட போது விடிந்து விட்டிருந்தது. மின்விசிறியின் காற்றுக்கு நுளம்பு வலை இலேசாக அசைந்து கொண்டிருந்தது. முற்றத்தில் பறவைகள் கீச்சிடுவது கேட்டது. ஜன்னல் அருகேயிருக்கும் பிச்சிக் கொடியின் கிளைகள் தோற்றுவித்த நிழலானது அறையினுள்ளே ஒரு சுவரில் படிந்து ஆடிக் கொண்டிருந்தது. அலாரம் வைக்காவிட்டாலும் கூட ஏனைய நாட்களிலென்றால் இந் நேரத்தில் திருமதி. பெரேரா விழித்தெழுந்து வீட்டில் நிறைய வேலைகளை செய்து முடித்திருப்பார். இப்போது என்ன நேரமிருக்கும் என்பதை திருமதி. பெரேராவால் யோசித்துப் பார்க்க முடியவில்லை. ஜன்னலின் கண்ணாடி வழியே மிகக் கடுமையான வெயில் உள்ளே …
-
- 2 replies
- 835 views
-
-
-
- 2 replies
- 973 views
-
-
பாவ மன்னிப்பு | சாதனா சகாதேவன் புனித லூசையப்பு தேவாலயத்தின் பாதிரியார் ஆஸ்திரோவ்ஸ்கிக்கு பெருத்த சங்கடமாகப் போயிற்று. படபடத்த தேகத்தோடு கூண்டுக்குள் கைகளை நுழைத்து தன் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு ஒருசிறுவனைப் போல் அழுதுகொண்டிருக்கும் துர்கனேவ்வின் கைகளை விலத்திக் கொள்ள அவர்முயன்றார். முடியாமற் போகவே அவனைச் சமாதானப்படுத்த எண்ணி, ‘தண்ணீர் குடிக்கிறாயா?’ என்றார். தலையை ஒரு வேகத்தோடு உலுப்பி, வேண்டாமென்றவன், மேலும் அழுதான். அப்படி அவன்அழும்போது அவன் கண்களிலிருந்து கண்ணீரானது பெருகிற்று. ஆஸ்திரோவ்ஸ்கி தோற்றுப் போனார். அவரால் எவ்வளவோ முயன்றும் துர்கனேவ்வின் அழுகையை நிறுத்த முடியவில்லை. அவனை எப்படித்தேற்றுவது என்றும் அவருக்குத் தெரியவில்லை. சில நிமிடங்கள் கழித்து, …
-
- 0 replies
- 537 views
-