கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
கப்ரன் வாசு (கண்ணாடி வாசு.ஜடியா வாசு)வல்வெட்டிதுறை 1984 ம் ஆண்டு ஒரு கோடைகாலத்தின் மாலை நேரத்தில் யாழ் அராலி வீதி கல்லுண்டாய் வெளியில் ஒருவர் மட்டுமே அமரகூடிய ஒரு சிறிய விமானம் உள்ளே அதனை இயக்க தயாராய் வாசு அமர்ந்திருக்கிறான். அதனருகே மாவீரர்களான லெப்.கேணல்அப்பையா அண்ணை குட்டிசிறி. கப்ரன் பாரத் மேஜர் சுபாஸ் இவர்களுடன் மேலும் பல போராளிகள் நிற்கிறார்கள். வாசு மற்யை போராளிகளை பார்த்து எல்லாம் சரி எல்லாரும் சேர்ந்து வேகமா தள்ளுங்கோ இந்த முறையாவது பிளேன் பறக்கவேணும் என்று சொல்லவும் எல்லா போராளிகளும் சேர்ந்த்து விமானத்தை தள்ள அது வீதியில் உருள ஆரம்பிக்கவும் வாசு மற்றவர்களிடம் இன்னும் இன்னும் வேகமா என்று கத்தியபடி அந்த விமானம் மேலே கிழம்ப வசதியாய் அதன் இறக்கைகளை …
-
- 4 replies
- 1.5k views
- 1 follower
-
-
ஆளுமை லலிதா மிகவும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது பன்னாட்டு வங்கியின் அலுவலகம். நீண்டு கிடந்த அந்த அறை முழுவதும் வாடிக்கையாளர் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆண்களும் பெண்களுமாக அலுவலக ஊழியர்களும் பணி மும்முரத்தில் தம்மை மறந்து சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். மதியநேரம் வருவதற்குள்ளாகவே பரபரப்பு மெல்ல அடங்கி மாலை நேரம் நெருங்கிய போது அலுவலகம் இயல்பு நிலைக்குத் திரும்பி இருந்தது. அவ்வலுவல் அறையில் தனக்குண்டான இருக்கையில் அமர்ந்து பைல்களைப் புரட்டிக் கொண்டிருந்த இளங்கோ அலுவலகம் வெறுமையாவதை உணர்ந்து, நேரத்தை அறிந்து கொள்ள இடது கையின் மணிக்கட்டினைப் பார்க்க அந்த இடம் வெறுமையாக இருந்தது. கைக்கடிகாரம் என்னவாயிற்று? அப்போதுதான் அவனுக்கு நினைவு வந்தது. நேற்றிரவு…
-
- 19 replies
- 4.5k views
-
-
அலைகள் மணிப்பூர், கடலும், வயலும் சேர்ந்த ஒரு அழகிய சிறிய ஊர். ஊரின் கடற்கைரையை அண்டி முத்துச் சேரி என்னும் மீனவக் கிராமமும், கடற்கரையில் இருந்து கிட்டத்தட்ட ஒரு மைல் தொலைவில் வண்ணார்மலைக் கிராமமும் இருந்தது. வண்ணார்மலைக் கிராமத்தில் அநேகமாக ஏழை விவசாயிகளே இருந்தனர் மற்றும் ஒன்று, இரண்டு பிராமணர்கள் இருந்தனர். அவர்களே அந்தக் கிராமத்தில் செல்வாக்கு மிகுந்தவர்களாக இருந்தனர். மணிப்பூர் தமிழ் மகாவித்தியாலயம். அதுதான் அந்த ஊருக்கு பொதுவான பாடசாலை, அங்கேதான் ராகேஷ் மற்றும் அவனது நண்பர்களான அர்விந், குகன்,பீற்றர் மற்றும் ஜோர்ஜ் ஆகியோர் உயர்தரம் இறுதியாண்டில் படித்தனர். ராகேஷ் வண்ணார்மலைக் கோவிலின் தலமைக் குருக்களின் ஒரே மகன்.அர்விந் மற்றும் குகனும் அதே ஊரைச் சேர்ந்தவர…
-
- 19 replies
- 2.7k views
-
-
லெப்.கேணல் ஜொனி(விக்கினேஸ்வரன்: விஜயகுமார்) பருத்திதுறை(குட்டலை) இவர் பேராதனை பல்கலை கழகத்தில் பெளதீக விஞ்ஞான மாணவகாய் கல்வி கற்று கொண்டிருந்த காலத்தில் தன்னை விடுதலை போராட்டத்திற்காய் இணைத்த ஒரு போராளி.இந்தியா விடுதலை புலிகளிற்கும் பயிற்சி வழங்க முன்வந்த போது தலைவர் தொலை தொடர்பு மற்றும் அது சம்பந்தமான தொழில்நுட்ப பயிற்சிகளிற்கு ஜொனியை தெரிவு செய்து அனுப்பிருந்தார். அப்போது புலிகளிடம் தொலை தொடர்பு வசதிகள் அவ்வளவாக இல்லாத கால கட்டம் யாராவது மிக நம்பிக்கையான ஒருவர்தான் செய்திகளை காவிசென்று மற்றைய போராளிகளிற்கு தெரிவிப்பது வழைமை அப்படி புலிகளின் ஆரம்பகாலத்தில் இருந்தே பல இரகசிய செய்திகளைதாங்கி எடுத்து செல்பராக இருந்தவர்களில் முக்கியமானவர் ஜெனி. …
-
- 2 replies
- 1.1k views
-
-
நாளைக்கு எக்கொனொமிக்ஸ் எக்ஸாம் எனக்கு, லைபிரரில புத்தகத்தோட சண்டை போட்டுக்கொண்டிருந்தன். எப்பவும் கடைசி நேரத்தில கஸ்டப்பட்டுகொண்டு நிற்கிறதுதான் என்டபழக்கம். இந்த பழக்கத்தை மாத்தணும் எண்டு விருப்பம்.. பல நாள் முயன்றும் முடியாமை.. இப்போது முயற்சியே செய்வதில்லை. தோல்விகளை சந்திக்க விருப்பம் இல்லை... அதுதான் என்ட வழமையான பழக்கங்களை மாத்த முயற்சிக்கிறதும் இல்லை. என்னை போலவே ஒரு ஆள் முன்னால புக்கோட சண்டை போட்டுகொண்டிருந்ததை பார்த்தன். எங்கேயோ பார்த்த கைகள் அவை.. முன்னால புக்கஸ்ட் இருந்தபடியால் முகம் தெரியல... ஆர்வக்கோளாறு எனக்கு... ஏன் வீணா கஸ்டப்படுவான். எழும்பி மேலால பார்த்தன். ம்ம்ம்.. மன்னிக்கவேணும். இந்த இடத்தில ஒரு சின்ன பிளாஸ் பாக். நாலு வருசத்துக்கு முன்னால…
-
- 35 replies
- 6k views
-
-
-
மனவலி யாத்திரை.....! - சுதந்திரா - அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அவனது குரல் என்னை அழைக்கிறது. விழிப்புலனில் சிக்காத முகம் ஆனால் அந்தக்குரல் மட்டும் தெளிவாகக் கேட்டது. திடுக்கிட்டு விழித்த எனக்கு அந்தக்குரல் சொன்ன சேதி ஞாபகத்தில் இல்லை. எழுந்து போய் விறாந்தை மின்குமிழைப்போட்டு அதன் ஒளியில் என் விழிக…
-
- 12 replies
- 2.2k views
-
-
காதலர் தினத்திற்காக எழுதிய கதை சற்றுக் காலதாமதாக வருகிறது. வாசிச்சப் போட்டு அப்படியே போகாமல் உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கள். தெளிவு முற்றத்தில் வேப்ப மரத்தின் கீழே போடப்பட்டிருந்த சாய்மணைக் கதிரையிலே சாய்ந்திருந்த றஜீவன் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். வளர்ப்பு நாய் அவனருகே வந்து தன் முன்னங் கால்களால் சுரண்டி அவனை விளையாட அழைத்தது. வழமை போல அதனுடன் சேர்ந்து விளையாடவோ அல்லது அதன் செயற்பாட்டை ரசிக்கும் மனநிலையிலோ றஜீவன் இல்லை என்பது அந்த ஐந்தறிவு ஜீவனுக்கு எப்படித் தெரியப் போகிறது. தகப்பனார் காலையில் பேசிய விடயம் தொடர்பாக அவன் ஒரு தீர்மானத்தை மேற்கொள்ள முடியாது குழம்பிப் போயிருந்தான். மீண்டும் மீண்டும் அந்த வார்த்தைகள் றஜீவனின் மனத்திரையில் தோன்றிக் கொண்டிர…
-
- 1 reply
- 1.1k views
-
-
யார் சொந்தம்? மாசிமாதப் பனிக்குளிரின் பிடியில் சிக்கி ஊரே நடுங்கிக் கொண்டிருக்கிறது. உடம்பை உதற வைக்கின்ற, மூக்கில் நீர் சிந்த வைக்கின்ற, பற்களை ரைப் அடிக்க வைக்கின்ற அந்தக் குளிருக்குள்ளும் எங்கோ ஒரு கோடியிலிருந்து தன்னுடைய 'கடமையைச்' செய்துகொண்டிருந்த சேவலொன்று நான்கு தடவைகள் கூவி ஓய்கின்றது. அவசரமாகப் படுக்கையை விட்டு எழுந்த தர்சன் பாயிலே ஆங்காங்கே தலைகாட்டியிருக்கின்ற சிலும்பல்கள் மேலும் பெரிதாகிவிடாதவாறு அவதானமாகச் சுருட்டி அசவிலே வைத்துவிட்டு கொல்லைப் புறத்தை நோக்கி நடக்கிறான். முற்றத்திலே தெருநாயொன்று தன்னுடைய உடம்பை வளைத்து கால்களுக்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டு படுத்துக் கிடக்கிறது. இந்தப் பனிக்குளிருக்கு நன்றாகக் கம்பளியால் போர்த்துக் கொண்…
-
- 7 replies
- 2k views
-
-
என் கைபிடித்தவன் - புதிய தொடர்கதை -------------------------------------------------------------------------------- -மோகன் கோடம்பாக்கம் பாலத்தை கடந்து சட்டென்று ஒரு வளைவு எடுத்து சேகர் எம்போரியத்தின் முன் தனது யமாஹாவை நிறுத்தினான் ரிஷி. பிசிஏ, எம்சிஏ முடித்த கையோடு ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் கணினி துறையில் முப்பதாயிரம் சம்பளத்தோடு முதல் வேலையில் அமர்ந்தான் ரிஷி. வண்டியை அணைத்து காலை பின் பக்கமாக தூக்கி நின்றபோது எதோ மென்மையாக படவே திரும்பி பார்த்தான். பத்திரகாளியாக மாறி நின்றிருந்தாள் ரம்யா. இளங்கலை கடைசி ஆண்டு. கோடம்பாக்கத்தில் உள்ள பெண்கள் கல்லூரியில். அழகாக இருந்தாள். ஆத்திரத்தில் இருந்தாள். ரிஷி காலால் எட்டி உதைத்தபோது இடர்பட்டவள் தான் ரம்ய…
-
- 7 replies
- 4.1k views
-
-
வானம் எங்கும் கரிய பெரிய மேகங்கள் உருண்டு திரண்டு நகர்ந்து கொண்டு இருந்தன. அப்பப்போ கண்ணைப் பறிக்கும் வெளிச்சத்துடன் மின்னலும் அதைத் தொடர்ந்து இடியும் கேட்டுக்கொண்டே இருந்தது. மழை சாதுவாகத் தூறத் தொடங்கிவிட்டது. அந்தப் பழைய சுண்ணாம்பு வீட்டிலிருந்து சலிப்புடன் ஒரு உருவம் எட்டிப்பார்த்தது. இன்றும் இப்படிப் சில பழைய சுண்ணாம்பு வீடுகளை யாழ்பாணத்தின் புறநகர்ப்பகுதிகளில் காணலாம். அந்தக் கலைந்த கேசமும் இளமையிலேயே முதுமை தோன்றிய அந்த முகமும் முதற் பார்வையிலேயே காட்டிக்கொடுத்துவிடும் இவள் ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தலைவியென்று. கண்களை சுருக்கி மழைத் தூறலூடு யாரையோ தேடினாள். அவளுக்குத் தெரியும் மழையென்றால் இவன் நனையவென்றே வெளியில் ஓடிவிடுவான். “டேய்! சின்னத்தம…
-
- 2 replies
- 1.4k views
-
-
நெஞ்சின் ஆசை நனவாக... செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் தாயகம் சென்று சேவை செய்ய இருக்கும் தன் முடிவை உறுதி செய்திருந்தாள் மோகனா. மூன்று பெண்களும், நான்கு ஆண்களுமாக ஒருவருட உடன்படிக்கையின் பேரில், அதில் இந்த நாட்டைச்சேர்ந்தவர்களும் அடங்களாக அவளின் பயணம் வெற்றிகரமாக பதியப்பட்டிருந்தது. முதன் முதலாக அவளின் தாயக பயணம் இது. மனதுக்குள் சோடாக் குமிழ் போல் நுரையாய்ப் பொங்கும் சந்தோஷம். கூடவே மனதிற்குள் ஒரு சின்னப்பயம். அதையும் மீறிக்கொண்டு அவள் உள்ளத்தில் இருந்த மனஉறுதி தன்னால் முடிந்த சேவையை தன் தாய்நாட்டிற்காக செய்ய வேண்டும் என்ற திடமான உணர்வு அவளின் நாடி நரம்பெங்கும் வியாபித்து, அந்த பயத்தினை முறியடித்து இருந்தது. வீட்டுக்கு வந்து தன் பயணம் பற்றிக் கூறியபோது அ…
-
- 4 replies
- 1.6k views
-
-
நானும் என் ஈழமும் - 4 தினமும் ஏதோ ஒரு செயல், ஒரு பொருள், ஒரு மனிதர்...என் நினைவுகளை ஊருக்கு கொண்டு செல்ல தவறுவதில்லை. எதிலும் சொந்த ஊரை காண்பது எம்மவருக்கு புதிதல்லவே. "சொர்க்கமே வந்தாலும் அது நம்மூரை போல வருமா" என்ற பாடலை கானாபிரபா அண்ணாவே எத்தனை தடவை வானொலியில் போட்டிருப்பார். அடுத்த மாதம், என் பல்கலைக்கழக நண்பன் ஒருவருக்கு திருமணம். அதே நண்பன் 3 வருடங்களுக்கு முன்னர் வந்த காதலர் தினத்திற்கு எனக்கு தந்த வாழ்த்து மடலை பார்த்தே ஆக வேண்டும் என அவரின் வருங்கால துணைவியார்ஆசைப்பட்டார். என் விலை மதிக்க முடியாத கடிதப்பெட்டியை எடுத்த பொழுது கண்ணில்பட்ட ஒரு மடல்..... இந்த பாகத்தை எழுத தூண்டியது! --------------------------------------------------------…
-
- 10 replies
- 2.1k views
-
-
முதலே சொல்லிடுறன்.இது கதைக்குள்ள வருமா தெரியேல்ல.வேற ஒரு பகுதியும் சரியாப்படேல்ல அதான் கதை என்ற பகுதில போடுறன். ஆம்பரலங்காயும் அணிஞ்சில் பழமும் மலைநாடான் பாலைப்பழத்தைப் பற்றி எழுதினாரா நான் அதைப்போய் வாசிச்சனா இப்ப எனக்கும் நான் ரசிச்சு ருசிச்சு சண்டைபிடிச்சு பிச்சுப் பிடுங்கி சாப்பிட்ட பழம் காய் பற்றியெல்லாம் எழுதவேணும் போல இருந்திச்சா அதான் எழுதினா என்ன குறைஞ்சிடுவன் என்று எழுத வெளிக்கிட்டிட்டன். பாலர் வகுப்புப் படிச்ச காலத்தில இருந்தே பள்ளிக்கூடம் போற வழியில ரியூசன் போற வழியில இப்பிடி எப்பெல்லாம் நண்பர்களோட சேர்ந்து வீட்டை விட்டுப் போறனோ அப்பெல்லாம் ஆற்றயும் வீட்டுக்காணியிலோ அல்லது தோட்டத்துக்காணியிலோ கைவைக்காமல் வீடு திரும்பினதா ஞாபகம் இல்லை. என…
-
- 8 replies
- 2.3k views
-
-
அப்பலேர்ந்து அந்தக் கயவாணிப் பயபுள்ள ஒரு மாதிரியா என்னய உத்து உத்துப் பாக்குறான். மூஞ்சி முச்சூடும் தழும்ப வைச்சுக்கிட்டு சண்டைக்கோழி ராஜ்கிரண் ஸ்டைலுல ஒரு லுக்கு. எதோ அவம் பொண்டாட்டி தாலிய நான் அறுத்தா மாரி ரவுசு காட்றான். எங் காலக்கொடுமை அவனயும் என்னயும் ஒரே றூம்புக்குள்ளாறதான் போட்டு அடைச்சிருக்கு. நா ரீஜண்டான ஆளுதான். இந்த ஈ.சீ.ஆர். றோட்டாண்ட ஒரு பில்டிங் கட்றாங்க இல்ல… அங்ஙன காட்டுவெயாரோ சாப்டுவெயாரோ என்னா கசுமாலமோ… அங்ஙனதா நமக்கு வேல. வேலன்னா இன்னா சும்மாவா… ஒரு நாளிக்கு எத்னை கல்லு தூக்கணும் தெர்யுமா… கல்லுத் தூக்கித் தூக்கியே ஒடம்பு கல்லு மாரி ஆய்ப் போய்ச்சு. எம் பொண்டாட்டி தேவியும் அங்ஙனதாம் வேலை பாக்குறா. என்னய மாரி நல்ல கலர்ரா ரெண்டு பசங்க. கறுப்புத்தா நைன…
-
- 7 replies
- 1.8k views
-
-
<span style='font-size:30pt;line-height:100%'><span style='color:blue'>காமம் அதில் காதல் இல்லை காதல் அதில் காமம் இல்லை</span> வீட்டின் முன்புறம் இருந்து பார்த்தால் மாடி வீடு போல தெரிந்தாலும் அங்கே இரண்டு அறைகள்தான் மீதமெல்லாம் மொட்டை மாடி அதில் ஒருபுறம் மாமரக்கிளை வளைந்து தண்ணீர் தொட்டிக்கு குடை பிடிப்பதுப்போல் இருக்கும்.வீட்டிற்க்கு உள்ளே ஒரு அறையில் இருந்து பார்த்தால் கீழே முன்புறம் தெருவே பளிச்சென தெரியும்.இப்போ இந்த வீட்டுக்கு என்னாச்சு?, அது தான் நான் தங்கியிருக்கும் வீடு. கீழே வீட்டுகாரர் அவர் மனைவி நான்கு வயது பையன் என்று சிறு குடும்பம் மிகவும் அமைதியாக இருக்கும்.நான் வழக்கமாக விடியல் காலை 6.30 மணிக்கு எந்திருச்சு பக்கத்தில உள்ள டீக்கடை போக…
-
- 9 replies
- 5.8k views
-
-
பொய் சொல்லலாம் பொய் சொல்லலாம் ஆற்றங்கரையடியில் ஒருவர் மரம்வெட்டிக்கொண்டு இருந்தாராம்.அப்ப அவற்ற கோடரி தண்ணிக்குள்ள விழுந்திட்டுதாம்.அவருக்கு மரம் வெட்டுறதுதான் தொழில் அப்ப கோடரி இல்லாமல் வாழ்க்கையே பெரும்பாடாயிடுமே அதால கடவுளிட்ட முறையிட்டாராம்.கடவுள் டாண் என்று வந்து நின்றாராம் அந்த விறகு வெட்டுறவருக்கு முன்னால.(ம் ம் நானும்தான் இண்டைக்கு எக்ஸாம் ஹோல்ல ஒருக்கா கூப்பிட்டுப் பார்த்தன் கடவுள் வந்தாத்தானே.) பக்தா ஏன் அழுகிறாய்? கடவுளே என் கோடரி ஆத்தில விழுந்திட்டுது.அது இல்லாம நான் எப்பிடி விறகு வெட்டுவன் எப்பிடி என்ர குடும்பத்தைக் காப்பாற்றுவன். சரி அழவேண்டாம் நான் இப்பவே கோடாரியோட வாறன் என்று தண்ணிக்குள்ள குதிச்சு ஒரு பொற்கோடாரியோட வந்தாராம். இதுவா…
-
- 61 replies
- 7.1k views
-
-
நீ அங்கே நான் இங்கே -சினேகிதி- அம்மா அப்பான்ர கடிதம் வந்திருக்கு இந்தாங்கோ. கொண்டா கொண்டா என்னடா இன்னும் இந்த மாசம் கடிதம் வரேல்ல எண்டு பார்த்தன்.சுஜி கவி இங்க பாருங்கோ அப்பா கவிக்கு பிறந்தநாள் வாழ்த்து அனுப்பியிருக்கிறார். அம்மா முதல் என்னட்டதான் தரோணும். இன்னொரு சந்தோசமான செய்தி என்னெண்டால் அப்பா வாற மாசம் ஸ்பெயின்ல இருந்து இங்க வாறாராம்ம்ம்ம். ஐ ஜாலி. சின்னவா கவி அப்பாட்ட என்னத்துக்கெல்லாம் சொல்லிவிடலாம் என்று அம்மாட்ட நச்சரிக்க மூத்தவ சுஜி 10ம் வகுப்புக்குப் பரீட்சைக்குப் படிக்கப் போட்டா.அப்பா வரப்போறார் என்று தெருவால போற வாற எல்லாருக்கும் சொல்றதுதான் கவின்ர வேலை. அப்பா வந்தவுடனே அம்மா ஓடிப்போய் அப்பாவைக் கட்டிப்புடிச்சிட்டா.சுஜி …
-
- 27 replies
- 4.5k views
-
-
-
அப்பா எங்கே? எனது அப்பா எங்களுடன் இல்லையே என்ற கவலை என் மனதை எப்போதும் வாட்டிக்கொண்டிருந்த போதும் இன்று எனது நண்பியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்று வந்ததிலிருந்து எனக்கு அப்பாவை உடனே காணவேண்டும்போல இருந்தது. எனது மனவாட்டத்தைக்கண்ட அம்மாவின் முகத்திலும் சோகத்தில் சாயல் பரவத்தொடங்கியது. "அம்மா, எனக்கு அப்பாவைப் பாரக்கவேண்டும்போல் இருக்கிறது" என்று கூறினேன். அம்மா பதில் எதுவும் சொல்லாமல் தனது வேலைகளிலேயே கவனமாக இருந்தார். மீண்டும் நானே அம்மாவின் அருகில் சென்று "இன்று எனக்கு அப்பாவைப் பார்க்கவேண்டும்போல இருக்கிறது என்றேன்" என்றேன். "அப்படிப்பார்க்க முடியாது என்று உனக்குத் தெரியும்தானே, பிறகு ஏன் என்னைக்கேட்கிறாய்?" என்றார். அம்மா கூறியது சரிதான். …
-
- 8 replies
- 3.4k views
-
-
கவுண்டிங் இன்னும் அரைமணி நேரத்தில் முடிந்து விடும்.... க்ரிஷ், காதர், ஹனி மூவரும் டென்ஷனாக இருந்தார்கள்.... அவர்கள் இருந்தது ஒரு விண்கலம்... விண்வெளி உடையில் இருந்தார்கள்.... க்ரிஷ் அந்தக் கலத்தின் கமாண்டர்.... கலத்தின் பெயர் ராம்-பாபர்.... காதர் ராம்-பாபரைச் செலுத்தப் போகிறவன்... ஹனி கமாண்டரின் வலதுகை.... இந்தியாவின் நிலவுப் பயணத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மூவர் இவர்கள் தான்.... ராக்கெட் ஒன்று பூமியின் புவியீர்ப்பு எல்லை வரை இவர்கள் கலத்தை இழுத்துச் செல்லும்.... அதன் பின்னர் காதர் தான் கலத்தைச் செலுத்த வேண்டும்... மூன்று பேரின் உயிரும் அவன் கையில் இருக்கிறது.... சுமார் 5 ஆண்டுக்கால அசுரப் பயிற்சி அவன் கண்களில் தெரிந்தது.... க்ரிஷ்-ன் சிறுவயது கனவு நிறைவேறப் போக…
-
- 13 replies
- 2.6k views
-
-
அவனுக்குக் குழப்பமா இருந்தது, ஒருவகை பயம் கலந்த ,எண்ணங்கள் மாறி மாறி வந்தன.கிராமத்தின் புதிய சூழல், முதல் முதலாக தனியாக ஒரு வீட்டுக்குள், எவரது கண்காணிக்கும் பார்வைகள் அற்ற நிலையில்.அவனுக்கு, எழும் உணர்வுகளை அதன் சூழலை அலசுவது அதன் பின்னரே நிதானமாக செயற்படுவது என வயசுக்கு மீறிய சிந்தனைகள் அந்த விடலைப் பருவத்திலும்.விடலைப் பருவத்திற்கே உரிய உணர்வுகள் எழுந்த போதெல்லாம் அதே அலசல் அதே நிதானம்.ஆனால் இப்போ அந்த நிதானத்தை ,இவள் விழுங்கி விடுவாளோ என்று மனசு படபடத்தது. அவள் பக்கத்து வளவுக்குள் இருந்து பனை ஓலையினால் வேயப்பட்ட கதியால் வேலிக்குள்ளால் மறைந்திருந்து இவன் என்ன செய்கிறான் என்று நோட்டம் விடுவது.ஒவ்வோரு நாள் காலையிலும் இவன் பக்கத்து வீட்டு அண்ணையிடம் இருந்து அன்றைய ப…
-
- 1 reply
- 1.5k views
-
-
இது தமிழ்நதி எழுதிய கவிதைக்கதை. http://tamilnathy.blogspot.com/2007/02/blog-post.html நிர்வாகத்துக்கு! தமிழ்நதிக்கு படைப்புக்களத்தில் அவரது படைப்புகளை பதிவு செய்ய அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அவன்: நீ ஒரு ராட்சசி! அவள்: உனது தேவதை எங்குதானிருக்கிறாள்? அவன்: எனக்குள் இருக்கிறாள். அவள் எனது இனிய கனவு! பால்யத்தைப் பசுமை செய்தவள்…! கிராமத்தின் பின்புறமாய் பாசிப்பச்சை நிறத்தில் துவைத்துப் போடப்பட்ட சேலையைப் போல ஓடிக்கொண்டிருந்த வாய்க்கால் கரையோரம் அவளை முதன்முதலில் சந்தித்தேன். தோழிமாரெல்லாம் வீதியை ஒட்டிய உயரமான பாலத்திலிருந்து குதிக்கஇ இவள் மட்டும் விழிகளில் ஆசையும் பயமும் கலந்திருக்க தண்ணீரைப் பார்த்துக்கொண்டிருந்தாள். பதின்மூன்று வயதிருக்கு…
-
- 1 reply
- 1.1k views
-
-
"ஒரு பேஷண்ட் நர்ஸை லவ் பண்ணுறாரு. அவரு நர்ஸ் கிட்டே எப்படி ப்ரபோஸ் பண்ணுவாரு?" "சிஸ்டர் ஐ லவ் யூ" - இது எஸ்.எம்.எஸ்.களிலும், மேடை நாடகங்களிலும் பரிமாறிக் கொள்ளப்படும் ஒரு ஜோக். கிட்டத்தட்ட இதே மாதிரியான ஒரு துரதிருஷ்டவசமான நிலை நான் பத்தாம் வகுப்பு படித்தபோது எனக்கு ஏற்பட்டது. பானு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பார்த்தாலே போதும், பசங்களின் உள்ளங்கள் பற்றிக் கொள்ளும். கயல் விழியாள். கொடி இடையாள். தாவணித் தென்றல். என் வகுப்பில் இருந்த 48 பேரில் குறைந்தபட்சம் 48 பேராவது அவளைக் காதலித்திருப்பார்கள். செம காம்பெடிஷன். வேறு பிகரை டாவடித்துக் கொண்டிருந்தவர்கள் கூட ஒரு கவுரவத்துக்கு இவளை காதலித்தார்கள். என் நண்பன் செந்திலும் (இவனால் தான் நான் குட்டிச்சுவரானேன்) நான…
-
- 18 replies
- 5.3k views
-
-
மூன்றாவது பாகத்தை எழுத முதல், என்னை எழுத ஊக்குவிப்பவர்களுக்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியாது. புலத்தில் தமிழ் கற்ற எனக்கு ஆரம்பத்தில் இருந்த தயக்கத்தை தூக்கி எறிய வைத்து, தொடர்ந்து "நீங்க எழுதுங்க பபா" என சொல்லும் உறவுகளுக்கு என் அன்பு எப்பொழுதும் உண்டு. முதல் இரண்டு தொடரும் எழுதும் போது, நினைவுகள் பல மனதில் வர கண்ணீருடன் தான் எழுதினேன். இந்த பாகத்தில் எமை காக்க களத்தில் நிற்கும் போராளிகளை பற்றியதாக இருக்கும். அவர்களுடான என் உறவு, அவர்களை பற்றி என் மனதில் இருப்பவை. ஊரில் எங்கட வீட்டுக்கு முன்னால போராளிகளின் வீடு. எங்கள் வீடு அவர்கள் வீடு என பிரிப்பது பாவம் என்பேன். காலையில் கண் முழித்ததில் இருந்து இரவு படுக்க போகும் வரை "அண்ணாக்கள்" என்று அவர்கள் பின்னாலே…
-
- 16 replies
- 2.7k views
-