கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் சல சலப்புடன் இருந்த வகுப்பு அறை அமைதியாகின்றது. ஆனாலும் நம்மிடையே அடக்க முடியாத சிரிப்பு. அந்த மாணவனோ ஏதும் அறியாத மாதிரி எழும்பி நின்று "குட் மோர்னிங் சேர்" என்று கூற வாயை பொத்தியபடி நாமும் எழுந்து நின்றோம். பதில் வணக்கத்துடன் வந்தவர் இருங்கள் என்று சொல்லாமல் தான் மட்டும் கதிரையில் இருந்தார். எல்லோரையும் வடிவாக பார்த்தார். அவரின் பூனைக்கண்ணை பார்க்க நமக்கு பயம் என்றபடியால் தலையைக் குனிந்து கொண்டு இருந்தோம். கடைசியாக எல்லோரையும் இருத்திவிட்டு "நீ மட்டும் நில்லு" என்று என்னை சுட்டிக்காட்டிச் சொன்னார். என் மனதுக்குள் போராட்டம் என்ன இந்த வாத்தி என்னை மட்டும் எழுப்பி விட்டிருக்கு, நான் ஒன்றுமே செய்யலையே என்று யோசித்தபடி குழ…
-
- 41 replies
- 7.2k views
-
-
என்னை உங்களுக்கு ஆரெண்டு தெரியாது. நான் ஒரு சின்னப்பிள்ளை. தமிழ்ச் சின்னப்பிள்ளை.. தமிழ்ச் சின்னப்பிள்ளையெண்டதை நான் அழுத்திச் சொல்ல வேண்டியிருக்கு. ஏனெண்டால் தமிழ் எண்ட படியாலைதான் நான் சாகப் போறனாம். ஆனா எனக்கு அது ஏனெண்டு விளங்கேல்லை. பள்ளிக்குடத்தில எனக்கு கணக்குப் பாடத்தை விட, விஞ்ஞான பாடத்தை விட தமிழ்ப் பாடம் நிறைய விருப்பம். இதனாலை ஏன் சாகப்போறன் எண்டும் இதுக்காக என்னை எதுக்கு அவையள் சாக்கொல்ல வேணும் எண்டும் எனக்கு விளங்கேல்லை. எனக்கு சாகிறதெண்டால் சரியான பயம். செத்தால் பேயா வந்து அலைவனாம். எனக்கு பேயெண்டாலும் சரியான பயம். ஆனால் அம்மா சொல்லுறா பேய்கள் தானாம் உந்தப் படங்களில இருக்கிற மாதிரி மனிசரை கொல்லுமாம். அதோடை அம்மா இன்னொண்டையும் …
-
- 5 replies
- 5.8k views
-
-
வணக்கம் சகோதரர்களே, இத்துடன்"புபாள ராகங்கள் சிறுகதைப் போட்டியிலே பரிசுபெற்ற என்னுடைய அக்கரைப் பச்சை என்ற சிறுகதையை இணைக்கிறேன். உங்களுடைய கருத்துக்களை ஆஆஆஆவலுடன் (அடேயப்பா எவ்வளவு ஆவல்) எதிர்பார்க்கிறேன் அன்புடன் மணிவாசகன் அக்கரைப் பச்சை இருளரக்கனை விரட்டியடிப்பதற்கான கதிரவனின் இறுதிக் கட்டத் தாக்குதல் அரங்கேறிக் கொண்டிருக்கும் அதிகாலை நேரம். விடிந்தும் விடியாத அந்தப் பொழுதின் குளுமையை, அமைதியை, அழகை ஒரே நொடியில் அஸ்தமிக்கச் செய்த அந்தச் சத்தம் ஊரையே பரபரப்படையச் செய்கிறது. உயிர்ப்பலி எடுப்பதற்காய் யமதர்மன் 'பொம்மர்' உரு எடுத்து வந்து விட்டான். "தம்பி சத்தம் கேக்குது. எழும்பி பங்கருக்கை ஓடடா" சொல்லிக் கொண்டே ஓட்டப் பந்தயத்தில் ஒலிம்பிக் வீராங…
-
- 27 replies
- 5.6k views
-
-
நிழலாடும் நினைவுகள்..! போனவாரம் எனது பாடசாலை நண்பனொருவன் இங்கிலாந்திலிருந்து என்னிடம் வந்திருந்தான். அப்போது வழமை போல எங்கள் பாடசாலைக் காலங்கள் பழைய விடயங்கள் என்று கதைத்துக் கொண்டிருந்த போது அவன் என்னிடம் கேட்டான்." டேய் உனக்கு யாழ்தேவி றைவர் கந்தையாவை ஞாபகம் இருக்கா ??" என்றான் எனக்கு உடனேயே ஞாபகம் வந்தது காரணம் எங்கள் பாடசாலை நாட்களின் சில சம்பவங்களை எப்படி வாழ் நாள் மழுதும் மறக்க முடியாதோ அப்படியே எனக்கு அந்த யாழ்தேவி றைவர் கந்தையாவும். மானிப்பாய் இந்துவில் எண்பதுகளில் படித்தவர்களிற்கும் மற்றும் அந்த பகுதிகளில் வாழ்ந்தவர்களிற்கும் யாழ்தேவி கந்தையா என்றால் தெரியாமல் இருக்க முடியாது. ஆனால் நீங்கள் நினைப்பது போல அவர் யாழ்தேவி என்கிற புகைவண்டி ஓட்டுனராக…
-
- 43 replies
- 10.4k views
-
-
"தி இராவணன் கோட்" (The Ravana Code) - சிறுகதை அயோத்தி மன்னன் இராமன் மாலை நேரம் ஆகியும் அந்தப்புரம் போகாமல், தனது அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். அவனது முகம் பேயறைந்த மாதிரி இருந்தது. இப்படி நடக்கும் என்று அவன் கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை. அக்னி தேவன் மீது அவ்வளவு நம்பிக்கை அவனுக்கு. இராவணனைக் கொன்று சீதையை மீட்டு வந்து மகிழ்ச்சியாகத்தான் அயோத்தியை ஆண்டு கொண்டிருந்தான். இன்று தலையில் இடியை இறக்குகின்ற மாதிரி அந்த செய்தியை பணிப்பெண் வந்து சொன்ன பிறகு இராமனுக்கு உலகமே இருண்டு விட்டது. அக்னி தேவன் தன்னை இப்படி ஏமாற்றுவான் என்று இராமன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. "அவள் அக்னி தேவனையும் மயக்கி இருப்பாள்". இராமன் சந்தேகப்படவில்லை. உறுதியாகவ…
-
- 9 replies
- 4.5k views
-
-
............................................................................... இன்னும் விடியவில்லை. அதற்கான ஏற்பாடுகள் தடல் புடலாக நடந்துகொண்டிருக்கின்றன. சூரியனைத் துயிலெழுப்ப வேண்டுமே என்ற அங்கலாய்ப்பில் அடிக்கடி தன் கடமையைச் செய்து கொண்டிருக்கும் பக்கத்து வீட்டுச் சேவல், இருளரக்கன் அகலப் போகிறான் என்ற குதூகலத்தில் பாடிக் களிக்கும் புள்ளினங்கள், சாதகம் பண்ணுவதாகக் கூறிக்கொண்டு அக்கம் பக்கத்தாரின் வசவுகளை வாங்கிக் கட்டிக் கொள்ளும் முன்வீட்டுப் பென்சனியர் .... எல்லாம் வழமை போலத் தானிருக்கின்றன. "எழும்பித் தேத்தண்ணியைக் குடியுங்கோவன். விடிஞ்செல்லே போச்சுது" சாந்தியின் அதட்டலுடன் தான் எனக்கும் விடிகிறது. நான் கைப்பிடித்தவள் தான் சாந்தி. இன்னும் சரியாகச் ச…
-
- 18 replies
- 3.8k views
-
-
-
'என் ஞாபகப் பதிவிலிருந்து' என்ற தலைப்பில் 'சுதந்திரா' ஒரு பேப்பருக்கு வழங்கிய உண்மைச்சம்பவம். குப்பிளானில் இலங்கை அரஜகாத்தினால் 86ல் நடந்த உண்மைச் சம்பவம். http://www.orupaper.com/issue47/pages_K__Sec3_34.pdf
-
- 28 replies
- 7.6k views
-
-
வணக்கம் அனைவருக்கும் மீண்டும் ஒரு தொடர் கதையுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி நெடுக அவலம் எழுதி அடிவாங்கிய காயத்தை இடைக்கிடை இப்படியும் ஏதாவது எழுதிஆற்றி கொள்ளுறன். இதுவும் எனது வழைமைபோல உண்மை சம்பவமே. எனது நண்பனாகிய கதையின் நாயகனும் யாழின் ஒரு உறுப்பினரே எனவே அவனது சம்மதத்துடன் எனது வழைமையான கற்பனை கலந்து ஊத்துறன் எல்லாரும் வாங்கி பருகுங்கோ அதோடை உங்கள் கருத்துக்களையும் கட்டாயம் வையுங்கோ . இந்த கதையை கதையின் நாயகனே சொல்வது போல நகர்த்தி செல்கிறென். இதில் வருகின்ற பெயர்கள் யாவும் கற்பனையே . சரி கதைக்கு போகலாம். ஒரு மணம் பலமனம் அனைவருக்கும் வணக்கம் நான்தான் இந்த கதையின் நாயகன். எனது கதையை கவனமாக கேளுங்கள் கேட்டு விட்டு நான் செய்தவை நான் எடுத்த முடி…
-
- 151 replies
- 22.7k views
-
-
இனிம குழப்படி செய்வியா...பளார்.. சளார்.. சடீர்.. சின்ன வயசில கட்டாயம் எல்லாரும் குழப்படி செய்திருப்பம்.செய்த ஒவ்வொரு குழப்படிக்கும் முறையா வாங்கிக் கட்டியிருப்பம்.அடி வாங்கி அழுதழுது கண்ணு மூக்கெல்லாம் சிவந்து சாப்பிடாமலெல்லாம் நித்திரையாயிருப்பம் பிறகு அன்றைக்கு இரவு அடி விழுற மாதிரி கனவு கண்டு திரும்ப விக்கி விக்கி அழுது போட்டு படுத்திருப்பம்.அடுத்தடுத்த நாள் நடந்த மண்டகப்படியெல்லாம் மறந்து அம்மாவாவோடய அப்பாவோடய செல்லம் கொஞ்சியிருப்பம்.இதெல்லாம் ஒரு பத்து பதினொரு வயசு வரைக்கும் தான் பிறகு அடியெல்லாம் விழாது.இதையெல்லாம் நினைச்சுப் பார்க்கிற சந்தர்ப்பம் இன்று எனக்கு வாய்த்தது.அதால நான் என்னென்ன குழப்படி செய்து எப்பிடியெல்லாம் அடி வாங்கினான் என்று சொல்றன் நீங்களும் சொ…
-
- 49 replies
- 11k views
-
-
ஓத்துழைக்க மறுக்கும் கணணியுடன் மல்லுக்கட்டியபடியே எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவிற்கு ரெலிக்கொம்மை திட்டிக்கொண்டிருந்தேன் இணையத்தொடர்புக்கான வசதிகளில் அவர்கள் குளறுபடிகளுக்கு அவர்கள் இடம் கொடுத்திருந்தனர் அதுவும் வேலையை முடித்து வீடுதிரும்பும் நேரத்தில்! நேரம் அபாயக்கட்டத்தினை தாண்டியிருந்தாலும் அப்படியே விட்டு விட்டுப்போகமுடியாது. அலுவலகத்தில் இரவுப்பணியாளர்கள் போட்டுத்தாக்கி விடுவார்கள்! dOWNLOAD1 dOWNLOAD2
-
- 2 replies
- 1.9k views
-
-
மௌனத்தின் எல்லையிலே வீடு ஒரே கும்மிருட்டாக இருந்தது. உள்ளே போவதற்காக எட்டிப் பார்த்தவளின் மனதிலே அதை எப்படி எடுப்பது என்ற எண்ணமே தோன்றியது. அவளுக்கு உதவுவது போல் அந்தக் கூரையில் இருந்த ஓட்டைகள் மூலம் வந்த நிலவின் ஒளி, வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தது. பானைக்குள் கையை விட்டு துளாவினாள் சரசு. கையில் கிடைத்த சில்லறைகளை அந்த நிலா வெளிச்சத்தில் பிடித்து உற்றுப் பார்த்து உறுதி செய்தவள் ஒருவித திருப்தியுடன் தனது முந்தானையிலே முடிந்து தன் இடையிலே செருகினாள். நாளை நேரத்திற்கே போகவேண்டும் என்ற நினைவு உந்தவே கயிற்றிலே தொங்கிக் கொண்டிருந்த ஒரு பழந் துணியை நிலத்திலே போட்டவள் சுருண்டு படுத்துவிட்டாள். ஆனால் அவளால் நித்திரை கொள்ள முடியாதவாறு நினைவு அலைகளிலே சிக்கித் தவித்துக…
-
- 2 replies
- 2.3k views
-
-
<span style='font-size:30pt;line-height:100%'><span style='color:blue'>காமம் அதில் காதல் இல்லை காதல் அதில் காமம் இல்லை</span> வீட்டின் முன்புறம் இருந்து பார்த்தால் மாடி வீடு போல தெரிந்தாலும் அங்கே இரண்டு அறைகள்தான் மீதமெல்லாம் மொட்டை மாடி அதில் ஒருபுறம் மாமரக்கிளை வளைந்து தண்ணீர் தொட்டிக்கு குடை பிடிப்பதுப்போல் இருக்கும்.வீட்டிற்க்கு உள்ளே ஒரு அறையில் இருந்து பார்த்தால் கீழே முன்புறம் தெருவே பளிச்சென தெரியும்.இப்போ இந்த வீட்டுக்கு என்னாச்சு?, அது தான் நான் தங்கியிருக்கும் வீடு. கீழே வீட்டுகாரர் அவர் மனைவி நான்கு வயது பையன் என்று சிறு குடும்பம் மிகவும் அமைதியாக இருக்கும்.நான் வழக்கமாக விடியல் காலை 6.30 மணிக்கு எந்திருச்சு பக்கத்தில உள்ள டீக்கடை போக…
-
- 9 replies
- 5.8k views
-
-
மகளும் மருமகனும் இப்பதான் கிளம்பி வீட்டை போறாங்க. ரண்டுபேரையும் அனுப்பிட்டு மரத்தடியில கிடந்த சாய்மனைல வந்து உக்காந்தன். என்ட மகளோட நான் பழகிற வாய்ப்பு எனக்கு கிடைச்சதில்லை. அது எனக்கு ஒரு கவலையாகப்பட்டது இல்லை. ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு கிட்டினதுக்காக நான் சந்தோசப்படுறன். அதுக்காக 'இந்தவாய்ப்பை எனக்கு தந்தது கடவுள் தான், கடவுளுக்கு நன்றி' என்று சொல்ல மாட்டன். எனக்கு கடவுளை எனக்கு பிடிக்கிறதில்லை. அப்படி நன்றி சொல்லுறது என்றால் ஆமிக்காரங்களுக்கு சின்ன நன்றி சொல்லலாம். மகள்ட இடத்தில ஆமிபிரச்சினையாம். ஆமி உள்ள வந்தால் இளமாக்களுக்கு பிரச்சினை என்று இடம் பெயர்ந்ததால தான் எனக்கு இந்த குறுங்கால சந்தோசம் என்றாலும் கிடைச்சுது. மகளும் மருமகனும் மகள்ட குட்டி மகனும் இங்க இருந்த 6.…
-
- 16 replies
- 3.6k views
-
-
"அம்மா நான் போயிட்டு வாறேன்" என்று கூறிவிட்டு நாக்கை கடித்து கொண்டாள் வித்தியா. அம்மா தான் இப்போது இல்லையே! பழக்கத்தில் சொல்லிவிட்டேன் என்று நினைத்து அண்ணியிடம் என்றாலும் சொல்லிவிட்டுப் போகலாம் என்று அவர்களின் அறையை நோக்கினாள். வழக்கம்போல் அது பூட்டித்தான் இருந்தது. அண்ணிக்கு இப்போதுதான் சாமம் மாதிரி இருக்கும் என்று நினைத்துவிட்டு கீழே இறங்கி வந்தாள். வெளியில் போகும்போது "அம்மா நான் போயிட்டு வாறேன்" என்று சொல்லிப் பழகியவளுக்கு அன்று எதையோ இழந்தது மாதிரி இருந்தது. ஆம் வித்தியாவின் தாய் இறந்து 10 நாட்களுக்குப்பின் இன்று தான் முதல்முதலாக அலுவலகத்திற்கு புறப்படுகிறாள் வித்தியா. அம்மாவின் பிரிவை தாங்குவதற்கும், மனம் ஆறுதல் அடைவதற்கும் அவளுக்கு இன்னும் பல நாட்கள் தேவைப்பட…
-
- 40 replies
- 109.1k views
-
-
-
சில்லென்ற மழைத்தூறல் முகத்தில் பட சுய நினைவுக்கு வந்தாள் விது. அன்பான அம்மா கண்டிப்பையே முகத்தில் வைத்திருந்தாலும் பாசத்தை மழையாக பொழியும் அப்பா. குட்டி என்று செல்லமாக நுள்ளியும் கிள்ளியும் விளையாடும் மூன்று அண்ணாமார்கள். பூத்துக்குலுங்கும் மல்லிகை பந்தலின் கீழ் நாற்காலியை இழுத்து போட்டு விட்டு நிலா ஒளியிலே ஆயிரம் ஆயிரம் செல்லங்கள் பொழிந்தவள் இந்த விது. அப்பா சாப்பிடும்போது ஓரு வாய் அம்மா சாப்பிடும்போது இன்னொரு வாய் சோறு அம்மம்மா சாப்பிடும்போது இன்னொரு முறை. ஏன் நாய்க்கு சாப்பாடு போடும் போதும் ஓரு முறை சாப்பிடவேண்டியது தானே? என்ற அண்ணான்மார்களின் நக்கல். இப்படியாக இன்பத்தையே கண்டு பழகியவளுக்கு வாழ்க்கையின் மறு பகுதியில் துன்பம் என்று ஒன்று இருக்கு என்பது அப்போது தெரியவில்…
-
- 26 replies
- 5k views
-
-
மறதி.....மறதி...எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கடைக்குச் சாமான்கள் வாங்கப்போனால், சாமானை வாங்கிக்கொண்டு, சைக்கிளை கடையிலேயே மறந்து வைத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடுகிறேன். ரேஷன் கடைக்குப் போனால், சாமான் வாங்கி விட்டு, ரேஷன் காட்டை கடையிலேயே வைத்து விட்டு வந்து விடுகிறேன்....நண்பனிடம் சொல்லி வருத்தப்பட்டபோது, அவன் அருமையான யோசனை ஒன்றைச் சொன்னான். சிரமத்தைப் பார்க்காமல் என்னென்ன சாமான்களை விட்டிலிருந்து கொண்டு போகிறோம் என்பதை எழுதிக்கொண்டு, வரும்போது அதைச் சரி பார்' என்று. அப்படிச் செய்தபோது, இரண்டு நாட்களாக எதையும் மறக்கவில்லை. என் மனைவியே ஆச்சரியப்பட்டாள். அன்றும் அப்படித்தான். கடைக்குப் போனேன் போய் விட்டு வந்தவன், நடுவழியிலேயே வீட்டில் எழுதிக் கொண்டு வந்த த…
-
- 15 replies
- 3.8k views
-
-
அட நம்ம குருவியார் கவிதையில் தான் கொடி கட்டி பறக்கிறார் என்டால் கதையுமா............... ம்.ம். பாராட்டுக்;ள் குருவிகள் வேண்டுகோளிற்கிணங்க கருத்தை பிரித்து புதியபிரிவில் போடப்பட்டுள்ளது - யாழினி
-
- 2 replies
- 1.5k views
-
-
இறுதிக்கட்ட சோதனைகள் நடக்கிறது... புரொவ் சங்கர் ( திட்டத் தலைவர்) : வணக்கம். எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது ஆய்வு..?! புரொவ் சுதர்சன் ( வடிவமைப்புக் குழுத் தலைவர்) : நல்ல முன்னேற்றம் தெரிகிறது. இன்னும் 5 மாதத்தில விண்ணுக்கு செலுத்திடலாம் சங்கர். அதன் பிறகு உங்கள் கனவு நனவாகிடும். இவர்கள் இப்படி பேச்சை ஆரம்பிக்க..சைரனும் ஒலிக்கிறது.. சங்கர் : என்னது சைரன் சத்தம் வருகிறது... சுதர்சன் வோக்கிடோக்கி மூலம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்கிறார்... கலோ கலோ....மீண்டும் கலோ கலோஓஓஓஓ சங்கர்: என்ன தொடர்பு கிடக்குதில்லையோ....??! சுதர்சன் : ஆமாம் சங்கர். ஒரே இரைச்சலா இருக்குது.. அப்போது அவர்களை நோக்கி ஓடி வருகிறது ரோபோ திலீபன்.. அத…
-
- 2 replies
- 1.7k views
-
-
புத்துணர்ச்சி பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டியபடியே சோபாவிலே சாய்ந்திருந்த ரம்யாவின் கண்களிலே அந்த மரண அறிவித்தல் பட்டது. அதிலே அவள் கண்கள் அப்படியே நிலை குத்தி நின்றன. இது நிச்சயமாக அவள்தான். கடவுளே.. .. அப்படி இருக்கக்கூடாது கண்களை அகலத் திறந்தபடி பெயர் ஊரைக் கவனமாக உற்று நிதானமாக வாசித்தாள். ஆமாம் அவள் என் மாணவி தான். அமைதி, அடக்கம், பொறுமையின் சிகரமான அவளுக்கா இக்கதி? நெஞ்சிற்குள் ஏதோ செய்வது போலிருந்தது. இவளால் எப்படி போராட்டத்தில் இணைய முடிந்தது? எப்படி அவள் இறந்திருப்பாள்? தனக்குத்தானே கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தவள் கண்களில் இருந்து கண்ணீர்த்துளிகள் அவள் கன்னங்களில் வடிந்தோடின. ரீட்டா ஒரு ஏழை. அவள் தந்தையார் அன்றாடம் தோட்ட வேலை செய்பவர். ஆறு …
-
- 5 replies
- 1.9k views
-
-
புலிகளின் குரல் வானொலியில் சிந்திக்கத்தூண்டும் வரலாற்று நாடகம் "உயிர்த்தெழுகை". நாடகத்தை கேட்கும் பொழுது நமது அன்றாட வாழ்க்கையில் நடைபெறுகின்ற நிகள்வுகள்போல இருக்கின்றன. சில நேரங்களில் மயிர்கூற் செரியவும் வைக்கின்ற ஓர் அற்புத நாடகம். கேட்கத்தவறாதீர்கள் உறவுகளே..
-
- 1 reply
- 1.4k views
-
-
வெண்புறா எல்லோரும் இரவோடிரவாக நடந்தார்கள். தங்களால் கைகளில் எடுத்துக்கொள்ளக் கூடிய பொருட்களை எடுத்துக் கொண்டு நடந்தார்கள். அவர்களில் ஒருத்தியாக ரம்யாவும் நடந்துகொண்டிருந்தாள். அவள் கைகளிலும் சிறிது பொருட்கள் இருந்தன. அவள் எங்கே போகின்றாள்? யாரிடம் போகின்றாள்? அது அவளிற்கு மட்டுமல்ல அதில் போகின்றவர்களிற்கே தெரியாத ஒன்று. அவர்கள் எல்லோருக்கும் ஒரே பெயர். அது தான் அகதி. அங்கே நான் பெரியவன் நீ சிறியவன் என்ற பேதம் கிடையாது. அங்கு யாவரும் ஓரினம் அதுதான் தமிழினம். அகதித் தமிழினம். கும்மிருட்டு வேளையிலும் கொட்டும் மழையினிலும் அவர்கள் யாவருக்கும் தேவையாயிருந்தது ஒதுங்க ஓரிடம். எல்லோரும் தங்கள் தங்கள் இஷ்ட தெய்வங்களைக் கூப்பிட்டனர். எப்படியாவது உயிர் பிழைக்க வ…
-
- 6 replies
- 2.7k views
-
-
நாளைக்கு எக்கொனொமிக்ஸ் எக்ஸாம் எனக்கு, லைபிரரில புத்தகத்தோட சண்டை போட்டுக்கொண்டிருந்தன். எப்பவும் கடைசி நேரத்தில கஸ்டப்பட்டுகொண்டு நிற்கிறதுதான் என்டபழக்கம். இந்த பழக்கத்தை மாத்தணும் எண்டு விருப்பம்.. பல நாள் முயன்றும் முடியாமை.. இப்போது முயற்சியே செய்வதில்லை. தோல்விகளை சந்திக்க விருப்பம் இல்லை... அதுதான் என்ட வழமையான பழக்கங்களை மாத்த முயற்சிக்கிறதும் இல்லை. என்னை போலவே ஒரு ஆள் முன்னால புக்கோட சண்டை போட்டுகொண்டிருந்ததை பார்த்தன். எங்கேயோ பார்த்த கைகள் அவை.. முன்னால புக்கஸ்ட் இருந்தபடியால் முகம் தெரியல... ஆர்வக்கோளாறு எனக்கு... ஏன் வீணா கஸ்டப்படுவான். எழும்பி மேலால பார்த்தன். ம்ம்ம்.. மன்னிக்கவேணும். இந்த இடத்தில ஒரு சின்ன பிளாஸ் பாக். நாலு வருசத்துக்கு முன்னால…
-
- 35 replies
- 6k views
-
-
இனிய நினைவுகளின் வாசம். நன்றி - தமிழமுதம் - http://tamilamutham.net/amutham/index.php?...id=245&Itemid=1
-
- 5 replies
- 2k views
-