கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
ஆவி எதை தேடியது ? - நடேசன் நத்தை தனது ஓட்டையும் பாம்பு தனது தோலையும் புதுப்பித்துக்கொள்வது போன்று, அவுஸ்திரேலியர்களும் தாங்கள் வாழும் வீட்டை ஏழு வருடங்களுக்கு ஒரு தடவை மாற்றிக்கொள்கிறார்கள். அதனால் அவர்கள் வாழ்ந்த வீடுகள் ஏழு வருடங்களுக்கு ஒரு முறை விற்பனைச் சந்தைக்கு வரும். வயதானவர்கள் பெரிய வீட்டை விற்றுவிட்டு, மற்றும் ஒரு சிறிய வீட்டைத் தேடுவார்கள்.அதேபோன்று குடும்பம் பெருகுவதால் மட்டுமன்றி, குடும்பம் பிரிவதாலும் வீடுகள் மாறுகின்றன. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து இங்கு வாழ வந்தவர்களால் அவுஸ்திரேலியர்களின் இந்த மனப்பான்மையை நம்ப முடியாது. நமது நாடுகளில் நூறு வருட வீடுகள் இடிந்து உடையும்வரை, பல தலைமுறைகளாக வாழ்வார்கள். அப்படிப் பல த…
-
- 0 replies
- 555 views
-
-
Where are you from? - - வ.ந.கிரிதரன் - "டாக்ஸி கிடைக்குமா?" வார்டன் பாதாள ரயிலிலிருந்து வந்திருந்த அந்தக் கனடிய வெள்ளையினப் பெண்மணி கேட்டபோதுதான் அமைப்பியல் பற்றிய தமிழ் நூலொன்றினை வாசித்துக் கொண்டிருந்த நான் இவ்வுலகிற்கு வந்தேன். "தாராளமாகக் கிடைக்கும். எங்கு போக வேண்டும்?" என்றேன். " பேர்ச்மவுண்ட்/ லாரண்ஸ்" என்று அதற்குப் பதிலிறுத்தபடியே கதவைத் திறந்து டாக்ஸியினுள் ஏறி அமர்ந்தாள் அந்தப் பெண்மணி. வயது முதிர்ந்த, நன்கு பருத்த உடல் வாகுடன் கூடிய தோற்றத்திலிருந்தாள் அவள். முகத்தில் ஒருவித கடுமையுடன் கூடிய பாவம் விரவிக் கிடந்தது. பாதாளரயில் வாகனத் தரிப்பிடத்திலிருந்து வார்டன் வீதிக்கு வந்து கிழக்காக சென்ற்கிளயர் அவென்யுவில் பேர்ச்மவுண்ட் நோக்கித் திரும்பினேன். "Wher…
-
- 1 reply
- 442 views
-
-
பிலாக்கணம் பூக்கும் தாழி - அகர முதல்வன் July 1, 2020 அகர முதல்வன் ஓவியம்: வல்லபாய் அ “பிலா இலை ஆச்சிக்கு தலைமுழுக்க பேன், ஆனா பார்க்க விடுகுதில்லையண்ணே” என்று கோள்மூட்டிக் கொண்டிருந்தாள் மாலா. அப்பா சுருட்டின் அடிப்பக்கத்தை எச்சிலால் பதப்படுத்தியபடி “ஏனணை அவளைப் பேன் பாக்கவிடன், அது தலைமுழுக்க பெருகிப் புழுத்தால் பிறகு மலத்தியோன் வைச்சுத்தான் முழுக வேண்டி வரும்” ஆச்சியின் கொட்டிலுக்கு கேட்குமளவிற்கு குரல் கொடுத்தார். “உந்தக் கொண்டோடி வேசய இஞ்சவரச் சொல்லு” என்று ஆச்சி கத்தினாள். “என்ன சொல்லுங்கோ” என்று இருந்தவிடத்திலிருந்து பதிலுக்கு கேட்ட மாலாவை பொருட்படுத்தாமல் ஓலைப்பெட்டியில் இருந்த குறைச்சுருட்டை எடுத்து மூட்டினாள் ஆச்சி. வாங்கின் அடியில்…
-
- 2 replies
- 1.1k views
-
-
சார் ! இந்த ரோடு தாம்பரம் போகுங்களா ?" வார்த்தை பாதியும், வறுமை மீதியுமாய் வந்து சேர்ந்த வார்த்தைகள் சட்டென என்னைத் திரும்பி பார்க்க வைத்தது, கெச்சலான தேகம், உழைத்து உழைத்தே உள்ளே போன கண்கள், அடி பைப்புகளில் துவைத்து கட்டியே அழுக்கேறிய வேட்டி சட்டை, கையில் ஒரு பிளாஸ்டிக் பை சகிதம் ஒரு பெரியவர் நின்றிருந்தார். மறுபடியும் ஒரு முறை கேட்டார், "தம்பி இந்த ரோடு தாம்பரம் போவுமுங்களா ?” “ஐயா, இது கோயம்பேடு ரோடு, ரைட் சைடு போகுது பாருங்க, அதான் கிண்டி, தாம்பரம் ரோடு, எதித்தாப்ல போய் நில்லுங்க, தாம்பரம் பஸ் வரும் ! " என்றேன். சரி என்பது போலத் தலையாட்டிவிட்டு, எதிர்புற ரோட்டில் நுழைந்து, பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் கிண்டியை நோக்கி விறு விறு வென நடக்க…
-
- 16 replies
- 2k views
-
-
எம்பாவாய் September 5, 2020 அகரமுதல்வன் இளமஞ்சள் நிறத்தில் சீலை உடுத்தியிருந்தாள். அணையாத காதலின் வாசனை அவளுடலில் இருந்து உபரியாய் கசிந்தது. மெருகேறிய பிருஸ்டத்தின் சிறியதான அசைவு குகை ஓவியம் வண்ணமாய் நகர்வதைப் போலிருந்தது. விரல்கள் ரகசிய வீரர்களைப் போல கூந்தலுக்குள் ஊடுருவி ஈரத்தை உலர்த்துகின்றன. மது சுரக்கும் கூந்தல் அவளுடையது. அதிரகசியமாக வடிவு தழுவும் இந்தப்பெண்ணின் பேர் என்ன என்று அறிய ஆவல் தோன்றிற்று. மூச்சின் குமிழ்களில் காமம் கொதித்தது. களிப்பின் ஜன்னலில் இருந்து ஏகாந்தம் வேகம் கொண்டிருந்தது. இவனால் தாமதிக்கமுடியவில்லை. எழுந்து அவளைப் பின்தொடர்ந்து நடந்தான். அவள் அமர்ந்த கதிரைக்கு பக்கத்தில் இருந்தான். மணவறையில் ஐயர் மந்திரங்களை ஓதிக்கொண்டிருக்கிறா…
-
- 1 reply
- 835 views
-
-
உறுப்பு - அனோஜன் பாலகிருஷ்ணன் ஏதோவொரு வாசம் கமழ்ந்துகொண்டிருந்தது. சன்னலைத் திறந்து வெளியே வேடிக்கை பார்த்தேன். பலாமரத்தில் அணில்கள் குறுக்கும் மறுக்குமாக ஓடிக்கொண்டிருந்தன. சிறிய ஆசுவாசம் பரவியது. அவசர அவசரமாக என் பாடசாலை உடைகளைக் களைந்து, மாற்றுடை மாற்றிவிட்டு சாப்பாடு மேசைப்பக்கம் சென்றேன். ஏற்கெனவே போட்டு மூடிவைத்திருந்த மதியத்து சோறு, கறிகளுடன் ஆறிப்போய் இருந்தது. சுவரிலிருந்த மணிக் கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தேன். இரண்டு நாற்பது. இன்னும் இருபது நிமிடங்கள் இருக்கின்றன வகுப்புத் தொடங்க. பாதிவரை சாப்பிட்டுவிட்டு, கொப்பிகளோடு லுமாலா சைக்கிளில் ஏறி மிதித்தேன். வெயில் முதுகில் ஊடுருவிச் சுட்டது. செம்மண் பாதை வளைந்து நெளிந்து சென்று தார் வீதியில் ஏறியது. இருப…
-
- 3 replies
- 1.5k views
- 1 follower
-
-
” அரோகரா “-அலெக்ஸ் பரந்தாமன் ” யாழ்ப்பாணம்… வாங்க…வாங்க… யாப்பனய…. என்ட … என்ட… என்ட…” கொழும்பு- கோட்டை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பேருந்து ஒன்றின் நடத்துனர் இருமொழிகளிலும் மாறிமாறிப் பயணிகளை அழைப்பது ஆரியசிங்கவுக்குத் தெரிந்தது. உடனே அவன் அந்த இடத்தை நோக்கி நடந்தான். இரவு ஏழு மணியளவில் குறிப்பிட்டதொகைப் பயணிகளுடன் பேருந்து யாழ். நோக்கிப் புறப்படு கிறது. இடையில் சில இடங்களில் நிறுத்தப்பட்டு, மீண்டும் புறப்பட்ட பேருந்து, அதிகாலை நான்கு முப்பது மணியளவில், கொடிகாமத்தை வந்தடை கிறது. ஆரியசிங்க பேருந்தைவிட்டுக் கீழே இறங்கினான். அன்று சந்தைநாளாகையால், வியாபாரிகளின் நடமாட்டமும் விற்பனைப்பொருள்களைக் கொண்டுவருவோர் எண்ணிக்கை அதிகமா…
-
- 3 replies
- 1.2k views
-
-
நமஸ்காரம், ஷேமம், ஷேமத்திற்கு எழுத வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். நீங்களோ எனக்குக் கடிதம் எழுதப் போவதில்லை. உங்களுக்கே அந்த எண்ணமே இருக்கிறதோ இல்லையோ? இங்கே இருக்கும் போதே, வாய் கொப்புளிக்க, செம்பில் ஜலத்தை என் கையிலிருந்து வாங்க. சுற்றும் முற்றும் திருட்டுப் பார்வை, ஆயிரம் நாணல் கோணல். நீங்களா கட்டின மனைவிக்கு கடிதம் எழுதப் போகிறீர்கள்? அதனால் நானே முந்திக் கொண்டதாகவே இருக்கட்டும். அகமுடையான் உங்கள் மாதிரியிருந்தால்தானே, என் மாதிரி பெண்டாட்டிக்குப் புக்ககத்தில் கெட்ட பேரை நீங்களே வாங்கி வைக்க முடியும்? “அவள் என்ன படிச்ச பெண், படிச்ச படிப்பு எல்லாம் வீணாய்ப் போகலாமா? ஆம்படையானுக்குக் கடிதம் எழுதிக்கிறாள்!” என்று வீட்டுப் பழைய பெரியவாள், புதுப் பெரியவாள் எல்லாம் என் கன்னத…
-
- 1 reply
- 695 views
-
-
புலரியில் மறைந்த மஞ்சள் கடல் – ப.தெய்வீகன் மயானத்துக்குப் பின்னாலிருந்த மஞ்சள்நிற கடுகு வயலிலிருந்து வந்த காற்று கருங்கல் மதிலின் மேலால் பாய்ந்து உள்ளே நுழைந்தது. அந்தியின் சூரியக்கதிர்களில் அசைந்துகொண்டிருந்த பெருமரங்களில் மோதியது. படர்ந்துநின்ற கொரம்பியா மரங்கள் சின்னதொரு ஆட்டத்தோடு அசைவை நிறுத்திக்கொண்டன. கல்லறைகளுக்கு அருகில் வரிசையாக நின்ற எப்கரிஸ் பூக்கள் தங்கள் இதழ்களை தரையில் சொரிந்தன. பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சித்திர வட்டக்கற்களுக்கு கீழே பிறப்பும் இறப்பும் இரங்கற் கவிதைகளும் பதித்த கல்லறைகளின் மீது சில இலைகள் பறந்துசென்று விழுந்தன. நான் அந்த மயானத்தின் தென்கிழக்கு மூலையிலிருந்த கல்குடிசைக்கு முன்னால் வேலைக் களைப்போடு அமர்ந்திருந்திருந்து எச்சிலில் மு…
-
- 2 replies
- 926 views
-
-
அம்மா எப்போ தூங்குவான்னு தெரியாது, காலைல எந்திரிச்சுப் பாத்தா சாமி படத்துக்கு முன்னாடி நின்னு கண்ண மூடிக்கிட்டு நிப்பா, வாய் மட்டும் முணுமுணுக்குறது தெரியும், சாமிக்கிட்ட என்ன வேண்டுவான்னு தெரியாது, அநேகமா ஊர்லயே சாமிக்கிட்ட அதிக நேரம் பேசுறது அம்மாவாத்தான் இருக்கும்...... கோயில் பூசாரி கூட சாமியவிட மத்தவங்ககிட்டத்தான் அதிக நேரம் பேசிப் பாத்திருக்கேன், கிட்டத்தட்ட 10 வருஷத்துக்கு மேல அம்மாவும் சாமிகிட்ட ஏதோ வேண்டிக்கிட்டேதான் இருக்கா, ஆனா, அவ வாழ்க்கைல வேண்டுறது எதுவும் நடந்த மாதிரித் தெரியல.... அம்மாவோட வாழ்க்கை ரொம்ப நீளமானது, அம்மாவோட கதைய சின்ன வயசுல கேக்குறப்பவெல்லாம், கண்ணு விரிச்சு படம் பாக்குற மாதிரி இருக்கும், வெள்ளக்காரங்கிட்ட கணக்கு எழுதுற வேல…
-
- 4 replies
- 1k views
-
-
சரசு மருந்து குடிச்சிருச்சு.. ஆசுபத்திரிக்கு கொண்டு போறாங்களாம்” தகவல் சொன்னவன் காத்திருக்கவில்லை. வண்டியைக் கிளப்பிக் கொண்டு போய் விட்டான். மணிவேல்தான் பதறினான். ”நான் போறேன்” சண்முகம் விடவில்லை. “நீ நில்லு.. யாவாரத்தைக் கவனி. நான் போயிட்டு என்னான்னு பார்த்திட்டு வரேன்.” கல்லாவைத் திறந்து கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பும்போது பார்வை தன்னிச்சையாய் பெற்றோர் படத்தின் மீது பதிந்தது. ‘கூட வரீங்களா’ சரக்கு எடுக்கப் போகும்போது.. வங்கியில் பணம் கட்டப் போனால்.. எந்த முக்கிய வேலை என்றாலும் ‘அம்மா.. அப்பா’ படம். மனசுக்குள் வேண்டுதல். ‘கூட வாங்க’. தடங்கல் இல்லாமல் வேலை முடியும் என்ற நம்பிக்கை. மணிவேல் தணிந்த குரலில் சொன்னான். “உடன…
-
- 3 replies
- 1.6k views
-
-
#படித்ததில்_பகிர்ந்த்து 2500/- தண்டப்பணத்தை செலுத்த முடியாத வயோதிபர் 07 ஆண்டுகள் சிறையில்....!!! எனது மூத்த மகன் கொழும்பில் மேசன் வேலை செய்து கொண்டிருந்தார். அவருடைய மனைவி அவரை விட்டுச் சென்றதன் பின்னர் அவரது பிள்ளைகளை நானும் எனது மனைவியும்தான் பராமரித்து வந்தோம்... ஏழு வருடங்களுக்கு முன்னர் அன்றொருநாள் செய்தி வந்து சேர்ந்தது... " மூத்தமகன் வேலை செய்யும் போது பலஞ்சியிலிருந்து விழுந்துவிட்டார் என்று " ! நான் அணிந்திருந்திருந்த ஆடையுடன் மகனிற்கு என்ன நடந்ததோ என்று பதறிப்போய் கொழும்பு வரும் ரயிலில்த் தொற்றி ஏறிக் கொண்டேன். அப்போது என்னிடம் பணம் இல்லை என்பது கூட எனது நினைவிலிருக்கவில்லை. என்னுடைய துரதிர்ஷ்டம் ரயில் டிக்கெட் பரிசோதணைக்க…
-
- 2 replies
- 967 views
-
-
சற்றே நீண்ட கதை.. நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது ஞாயிறு காலை பத்து மணிக்கு கைபேசி சிணுங்கியது. அலாரம் என்று நினைத்து அணைத்து விட்டு திரும்பிப் படுத்தேன். மறுபடியும் அழைப்பு. "யா..ழு" "டேய்.. எனக்கு பொண்ணு பார்க்கப் போறோம்" கணேசனின் குரல் பயங்கர டெசிபலில் கேட்டது. அவ்வளவுதான். தூக்கம் கலைந்து விட்டது. "டேய்.. வேணாம்டா" என்று சொல்ல முயற்சிப்பதற்குள் கணேசன் மறுபடி அலறினான். "ரெண்டு மணிக்கு ரெடியா இரு. நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்" வைத்து விட்டான். போச்சு. ஒரு லீவு நாள் அவுட். அதை விடவும் கொடுமை அவனுடன் பெண் பார்க்கப் போவது. விஷம், துப்பாக்கி, தூக்குக் கயிறு, கணேசனுடன் பெண் பார்க்கப் போவது இதில் எது கொடுமை என்றால் கணேசன்! ஒவ்வொரு தரமும் என்னை ஏ…
-
- 4 replies
- 1.2k views
-
-
பூஞ்சிறகு ரிஷபன் திரையரங்கின் சுவர் ஒட்டிய கடைசி இருக்கையில் நான். பக்கத்தில் புஷ்பா. வரிசையாய் இரு தம்பிகள். மணமான அவள் அக்கா, அவள் கணவன். "பாபு.. நீயும் வா" அழைப்பை ஏற்று உடன் வந்தவனுக்கு புஷ்பா பக்கத்தில் அமர்வாள் என்ற எதிர்பார்ப்பு இல்லை. எல்லோரும் திரையில் பிம்பங்களின் பொய் சோகத்தில் ஆழ்ந்திருந்தபோது என் மீது மெத்தென்ற விரல்கள் படிந்தன. திடுக்கிட்டு திரும்பினேன். புஷ்பாவின் கவனமும் திரையில்தான். விரல்கள் மட்டும் சுதந்திரம் பெற்று என் கை விரல்களுடன் கூட்டணி தேடின. ஜுரம் வந்தபோது கூட இத்தனை நடுக்கம் வந்ததில்லை. தயக்கம், பயம், ஆசை என்று உணர்ச்சிக் கலவையின் மத்தியில் சுத்தமாய் படம் என்ன என்பதே புரிபடாமல் போனது. …
-
- 2 replies
- 902 views
-
-
"குஞ்சம்மா" ரிஷபன் சாருமதி சட்டென்று திரும்பிப் பார்த்தாள். அவளை யாரோ கூப்பிட்ட மாதிரி. அப்புறம்தான் ஞாபகம் வந்தது. அந்தப் பெயரில் அழைக்கிற ஒரே ஒருத்தரைப் பார்க்கத்தான் இன்று ஸ்ரீரங்க விஜயம். ரெயில்வே ஸ்டேஷனில் சிறு பெட்டியுடன் தனியே இறங்கியவளை அந்த அதிகாலை இருட்டில் யார் கவனிக்கப் போகிறார்கள்.. ரொம்ப நாளாச்சு. இப்படி விஸ்ராந்தியாய் வெளியே வந்து. எப்போது ஏசி கார். கூடவே தம்பூர் போடுகிற பெண். சுருதிப் பெட்டி.. சில சமயங்களில் கணவர் ராஜகோபாலன்.. எப்போதாவது மகள் மதுவந்தி.. இன்று யாரும் வேணாமென்று தனியே. 'நிஜமாத்தான் போறியா..' "ஆமா' 'ஒரு வாரத்துக்கா' 'ஆமாப்பா' கேள்வி மேல் கேள்வி கேட்ட கணவரைக் குழந்தை போலப்…
-
- 2 replies
- 1.3k views
-
-
❤️ அந்த வெள்ளைக் காகிதத்தைப் பிரித்துப் படித்தான் ரவீந்தர். அதில், `தயவுசெய்து ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…’ என்ற பாடலைப் பாடவும்' என ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. கையெழுத்தைப் பார்த்தவுடனேயே தெரிந்துவிட்டது. அதே நபர்தான். ரவீந்தர் சுற்றிலும் தேடினான். சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும், ஒரு ரிசார்ட் பார் அது. வழக்கமான ஈ.சி.ஆர் பார்களைப்போல் இளைஞர்கள் கும்மாளமிடும் பார் அல்ல. பணம் சம்பாதித்துச் சம்பாதித்துக் களைத்துப்போன, `வீட்டுக்குக் கிளம்பிட்டீங்களா?' என போன் அடிக்கும் மனைவிகளால் அலுத்துப்போன, ஆண்டுக்கு ஒருமுறை ஐபோனை மாற்றும் பிள்ளைகளால் வெறுத்துப்போன... நடுத்தர வயதுப் பணக்காரர்கள் அமைதியாக அமர்ந்து குடிக்கும் கார்டன் பார். ரவீந்தர், அங்கு …
-
- 0 replies
- 581 views
-
-
-
ஒட்டகமும் வரிக்குதிரையும் | மற்றும் எனது தாத்தாவின் பரிசோவியமும்
-
- 7 replies
- 1.6k views
-
-
கண்ணான கண்ணே ...... 'கண்ணான கண்ணே கண்ணான கண்ணே என்மீது சாய வா புண்ணான நெஞ்சை பொன்னான கையால் பூப்போல நீவ வா.... ஆராரிராரோ.... ஆராரிராரோ....ஆராரிராரிரோ......' கடந்த சில மாதங்களாக ஆதவன் தன் செல்ல மகள் ஆரதிக்காகப் பாடிப்பாடி ஆரதிக் குட்டிக்கு பிடித்துப்போன இப் பாடலை இன்று ஆரதி தன் அன்புத் தந்தைக்காகப் பாட நேரிடும் என்று கனவில்கூட எண்ணியிருக்க மாட்டாள். அவளது கொஞ்சும் குரலில் செல்லச் சிணுங்கலாய் ஆதவனின் காதுகளில் பாடல் புகுந்து அவனைப் பரவசப் படுத்திக்கொண்டிருந்தது. அப்பரவசத்தினோடே அவனது உடலின் அசைவுகளும் இதயத்தின் துடிப்பும் மெல்ல மெல்ல அடங்க அவனது அன்பு மனைவி அபிராமியும் மகள் ஆரதியும் கையசைத்து விடைகொடுப்பதான பிரேமையுடன் இரு காதோரங்களிலும் இருசொட்டுக்கண்…
-
- 22 replies
- 3.1k views
-
-
மீள்.... வாழ்த்து --- ரிஷபன் சற்று ஒடிசலான கையெழுத்தில், மாதவி கிருஷ்ணன் என்று எழுதிய வாழ்த்து தபாலில் வந்திருந்தது. எங்கள் திருமண நாளைப் பத்து வருடமாய் ஞாபகம் வைத்திருக்கிற ஜீவன். அலுவலகத்திலிருந்து திரும்பியவனிடம் புவனா காபியையும் வாழ்த்தையும் கொடுத்தாள். "காலைல தபால்ல வந்திச்சு." "வேற போஸ்ட்…?" என்றேன். "இல்ல." அலுப்பில், காபிக்கு முதல் உரிமை கொடுத்தேன். குடித்த சுறுசுறுப்பில் வாழ்த்தைப் பிரித்தேன். ‘அன்புடன்… மாதவி கிருஷ்ணன்!’ "மறக்காம அனுப்புறா!" என்றேன் வியப்புடன். "அவங்களுக்கு எப்ப மேரேஜ் டே?" இது புவனாவின் கேள்வி. "ஞாபகம் இல்ல. ஜூன்லயா… ப்ச்… தெரியல!" பத்தாவது வாழ்த்து இது. வருடம் முழுவதும் வேறு …
-
- 0 replies
- 592 views
-
-
மிருகம் - க.கலாமோகன் July 15, 2020 எலெனாவை எனக்குத் தெரியும். ஆனால் நான் அவளைச் சந்திப்பது அபூர்வமாகவே. மதுச் சாலைகளிலும், தோட்டங்களிலும், சில வேளைகளில் கலைகள் காட்டும் கண்காட்சி சாலைகளிலும். இவளது வீட்டுக்கு நான் சில தடவைகளில்தான் சென்றதுண்டு. ஆனால் நான் அங்கு சென்றதும் பயப்பட்டு விடுவேன். காரணம் அவள் வளர்க்கும் நாய்தான். அது மிகவும் பெரியது. மிகவும் நீளமான பற்கள். அது ஓர் பயங்கர மிருகத்தைப் போல. முதலாவது சந்திப்பில், நான் நடுங்கியதை அவள் கண்டுவிட்டாள். “பயப்பிடவேண்டாம் ரவி. ரூக்கி நல்லவன். முத்தமிடு ரவியை…” “எலெனா, எனக்கு அதனது முத்தங்கள் தேவை இல்லை.” அந்த முதல் தடவையில் அவளைக் களைப்பில்லாமல் ரூக்கி முத்தமிட்டதைக் கண…
-
- 1 reply
- 1.1k views
-
-
சிவனடிபாத மலை யாத்திரை - பொன் குலேந்திரன். உலகில் இமயமலை போன்று பல மலைகள் முக்கோண வடிவத்தில் அமைந்துளன வடிவத்தின் பின்னால் மர்மம் என்ன ? மலைகள் உருவாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளை எடுத்துக்கொள்கின்றன மற்றும் டெக்டோனிக் சக்திகள், ஈர்ப்பு, உராய்வு சக்தி, அரிப்பு போன்ற பல்வேறு சக்திகள் உள்ளன, அவை மலைகள் உருவாக வழிவகுக்கிறது. ஆரம்பத்தில், மலைகள் உருவாவதில் முக்கிய பங்கு வகிக்கும் இரண்டு முக்கிய சக்திகள் உள்ளன, இவை ஈர்ப்பு விசை மற்றும் உராய்வு ஆகியவை மணல் துகள் மீது செயல்படுகின்றன. ஈர்ப்பு மணலை தரையை நோக்கி இழுக்கிறது மற்றும் உராய்வு இரண்டு துகள்களும் ஒன்றையொன்று சரியச் செய்கிறது. இந்த இரண்டு சக்திகளும் ஒருவருக்கொருவர் போட்டியிடும்போது, இங்கு ஈர்ப்பு விசையின் தீவ…
-
- 0 replies
- 1.3k views
-
-
துண்டு நிலம் by தர்மு பிரசாத் • July 1, 2020 01 தடுப்பு முகாமிலிருந்து வீட்டிற்கு வந்து சரியாக முப்பது நாட்கள் கழிந்துவிட்டன. துடக்கு நாட்களில் சாமி அறையினுள் புழங்கும் பட படப்புடனே வீட்டினுள் நடமாட முடிகிறது. அம்மாவும், அப்பாவும் வேற்று மனிதர்கள் போலவும், இது அயலாரின் வீடுபோலவும், இங்கே நான் வழி தவறி வந்துவிட்டதாகவும் தோன்றியபடி இருக்கிறது. கண்ணாடிக் குவளையை பட்டுத் துணியால் துடைப்பதுபோல மிக கவனமாக என்னைப் பாவிக்கிறார்கள். உண்மையில் அப்படி இல்லை என்றாலும், அப்பாவிற்கு பதில் சொல்லும் போது உள்ளங்கை வியர்த்து, உதடுகள் இறுகிக் கொள்கின்றன. சொற்களை நிதானமாகத் தேர்ந்தெடுத்துப் பதட்டத்துடன் பதில் சொல்கிறேன். அவை சரியான பதில்கள் இல்லை என்றாலும், …
-
- 1 reply
- 780 views
-
-
ஆமை - ஜெயமோகன் Turtle’s back background texture abstract pattern nature. நாங்கள் சென்றபோது நாகப்பன் முதலாளி வீட்டிலேயே இருந்தார். மிகப்பெரிய கேட்டுக்கு உள்ளே பிஎம்டபிள்யூ கார் நின்றிருந்தது. எட்டிப்பார்த்துவிட்டு ராஜேந்திரன் “கார் நிக்குது” என்றான். கேபினில் இருந்து வாட்ச்மேன் எட்டிப்பார்த்து “ஆரு? என்ன?” என்றான். “நாங்க பனை சொசைட்டியிலே இருந்து வாறம்… பனைப்பாதுகாப்புச் சங்கம். முதலாளியை பாக்கணும்” என்றான் ராஜேந்திரன். “டொனேசனுக்குன்னா ஆரையும் உள்ள விடக்கூடாதுன்னாக்கும் அறிவிப்பு” என்று வாட்ச்மேன் சொன்னான். “இல்ல, இது டொனேசன் இல்லை. வேற விசயம்…” என்று ராஜேந்திரன் சொன்னான். “முதலாளிக்க சொத்து ஒண்ணு இருக்கு… பனைவிளை. அது சம்பந்தமான பேச்ச…
-
- 6 replies
- 1.8k views
-
-
அனலுக்குமேல் - ஜெயமோகன் ஃப்ரேசரின் ஓவியம். [ 1 ] பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் குளிர்ந்து உறைந்து இருண்டு கிடந்த கடலுக்கு அடியில் பூமி பிளந்தது. ஒரு கண் இமை திறந்து கொண்டதுபோல. அதிலிருந்து லாவா பெருகி எழுந்தது. மாபெரும் தீக்கோபுரம் என அது எழுந்து நின்றது. அதைசூழ்ந்து கடல் கொந்தளித்துக்கொண்டே இருந்தது. நீராவி எழுந்து அதன்மேல் வெள்ளிமுடி போல நின்றிருந்தது. பின்னர் குளிர்ந்த லாவாவே அந்த பிளவை மூடியது. அந்தக் கண் மூடிக்கொண்டு துயிலில் ஆழ்ந்தது. அந்த கொப்பளித்த லாவாவின்மேல் நீராவி மழையெனப் பொழிந்து கொண்டே இருந்தது. குளிர்ந்து குளிர்ந்து அது கரியமண்ணாகியது. அதை நாடி பறவைகள் வந்தன. அவை விதைகளையும் சிற்றுயிர்களையும் அங்கே பரப்பின. காடு எழுந்தது. பூச்சிகளும் பறவைக…
-
- 1 reply
- 2.1k views
-