கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3080 topics in this forum
-
இப்படி ஓர் எதிரொலியா - சிறுகதை - தேவகி கருணாகரன் அந்த ஞாயிற்றுக் கிழமை தான் முகுந்தனுடைய வாழ்க்கையை தலைகீழாக்கின நாள் மதிய சாப்பாட்டுக்குப் பின் முகுந்தனின் அப்பா, சின்னத்தம்பி நித்திரை கொள்வது வழக்கம். அந்நேரம் வீட்டில் எல்லோரும் மெள்ளமாகத் தான் பேச வேண்டும். வீட்டுக்குள் ஓடிப் பிடிக்கக் கூடாது என்பதும் சட்டம். சரியான கோவக்காரர், அவர் நித்திரையைக் குழப்பினால் வீட்டில் எல்லோருக்கும் ஏச்சும் அடியும் தான். அன்று முகுந்தனின் அம்மா ராசு, நல்லூர்க் கந்தசாமி கோவிலுக்குப் போயிருந்தார். அண்ணன்மார் தங்கள் கூட்டாளிகளோடு சினிமாவிற்குப் போயிருந்தனர். முகுந்தனுக்கு அப்போது பத்து வயது தான். இன்றைக்கு எப்படியாவது அப்பாவிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என எண்ணி போட்டிக…
-
- 0 replies
- 619 views
-
-
அந்த ஒரு நிமிடம் - சிறுகதை - விமல் பரம் அதிகாலை ஐந்து மணிக்கு வழமைபோல் விழிப்பு வந்து விட்டது. அவசரமாய் படுக்கையை விட்டு எழுந்து ஓடத் தேவையின்றி கண்களை மூடியபடி படுத்திருந்தேன். எனக்கு வேலையில்லை மகனுக்குப் படிப்பில்லை. வேலைக்கும் பள்ளிக்கும் போவதால் அமளிப்படும் காலைப்பொழுது சத்தமின்றி உறங்கிக் கொண்டிருந்தது. நாடு விட்டு நாடு பரவி அனைவரையும் கதிகலங்க வைக்கும் கண்ணுக்குத் தெரியாத வைரஸினால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் காலமிது. இப்படியொரு நிலமை வரும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க முடியாது. அன்றாட வருமானத்துக்காக ரெஸ்றோரண்டில் வேலை செய்யும் என்னைப் போன்றவர்கள் தொடர்ந்து வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம். படிக்க வேண்டிய காலங்களை அலட்சியமாகக் கட…
-
- 0 replies
- 770 views
-
-
ஒரு ஊர்ல ஒரு அறிவாளி ஆள் இருந்தார் . அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம் . அடிக்கடி கோவிலுக்கு போவார். கடவுளை வேண்டிக்குவார் .அதுக்கப்புறம் காட்டுக்கு போவார் . விறகு வெட்டுவார் .அதை கொண்டு போய் விற்பனை செய்வார் . ஓரளவுக்கு வருமானம் வந்தது . அதை வச்சிக்கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தார் . ஒரு நாள் அது மாதிரி அவர் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தார் . அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை . எதோ விபத்துல இழந்துட்டது போல இருக்கு.. ! அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு.. அதை இவர் பார்த்தார் .. அப்போ இவர் மனசுல ஒரு சந்தேகம் "இந்த…
-
- 3 replies
- 1.6k views
-
-
திருமதி. பெரேரா: இஸுரு சாமர சோமவீர පෙරේරා මහත්මිය | ඉසුරු චාමර සෝමවීර | தமிழில்: எம்.ரிஷான் ஷெரீப் திருமதி. பெரேரா விழித்துக் கொண்ட போது விடிந்து விட்டிருந்தது. மின்விசிறியின் காற்றுக்கு நுளம்பு வலை இலேசாக அசைந்து கொண்டிருந்தது. முற்றத்தில் பறவைகள் கீச்சிடுவது கேட்டது. ஜன்னல் அருகேயிருக்கும் பிச்சிக் கொடியின் கிளைகள் தோற்றுவித்த நிழலானது அறையினுள்ளே ஒரு சுவரில் படிந்து ஆடிக் கொண்டிருந்தது. அலாரம் வைக்காவிட்டாலும் கூட ஏனைய நாட்களிலென்றால் இந் நேரத்தில் திருமதி. பெரேரா விழித்தெழுந்து வீட்டில் நிறைய வேலைகளை செய்து முடித்திருப்பார். இப்போது என்ன நேரமிருக்கும் என்பதை திருமதி. பெரேராவால் யோசித்துப் பார்க்க முடியவில்லை. ஜன்னலின் கண்ணாடி வழியே மிகக் கடுமையான வெயில் உள்ளே …
-
- 2 replies
- 847 views
-
-
நெடுநல்வாடை வையகம் பனிப்ப, வலனேர்பு வளைஇப் பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென ஆர்கலி முனைஇய கொடுங்கோற் கோவலர் ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப் புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல் நீடிதழ்க் கண்ணி நீரலைக் கலாவ மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன் கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க மாமேயல் மறப்ப மந்தி கூரப் பறவை படிவன வீழக் கறவை கன்றுகோ ளழியக் கடிய வீசிக் குன்றுகுளிர்ப் பன்ன கூதிர்ப் பானாள் புன்கொடி முசுண்டைப் பொறிப்புற வான்பூப் பொன்போற் பீரமொடு புதற்புதல் மலரப் பைங்காற் கொக்கின் மென்பறைத் தொழுதி இருங்களி பரந்த ஈர வெண்மணற் செவ்வரி நாரைய டெவ்வாயுங் கவரக் கயலறல் எதிரக் கடும்புனற் சாஅய்ப் பெய…
-
- 3 replies
- 3.9k views
-
-
-
- 2 replies
- 991 views
-
-
பாவ மன்னிப்பு | சாதனா சகாதேவன் புனித லூசையப்பு தேவாலயத்தின் பாதிரியார் ஆஸ்திரோவ்ஸ்கிக்கு பெருத்த சங்கடமாகப் போயிற்று. படபடத்த தேகத்தோடு கூண்டுக்குள் கைகளை நுழைத்து தன் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு ஒருசிறுவனைப் போல் அழுதுகொண்டிருக்கும் துர்கனேவ்வின் கைகளை விலத்திக் கொள்ள அவர்முயன்றார். முடியாமற் போகவே அவனைச் சமாதானப்படுத்த எண்ணி, ‘தண்ணீர் குடிக்கிறாயா?’ என்றார். தலையை ஒரு வேகத்தோடு உலுப்பி, வேண்டாமென்றவன், மேலும் அழுதான். அப்படி அவன்அழும்போது அவன் கண்களிலிருந்து கண்ணீரானது பெருகிற்று. ஆஸ்திரோவ்ஸ்கி தோற்றுப் போனார். அவரால் எவ்வளவோ முயன்றும் துர்கனேவ்வின் அழுகையை நிறுத்த முடியவில்லை. அவனை எப்படித்தேற்றுவது என்றும் அவருக்குத் தெரியவில்லை. சில நிமிடங்கள் கழித்து, …
-
- 0 replies
- 550 views
-
-
ஆவி எதை தேடியது ? - நடேசன் நத்தை தனது ஓட்டையும் பாம்பு தனது தோலையும் புதுப்பித்துக்கொள்வது போன்று, அவுஸ்திரேலியர்களும் தாங்கள் வாழும் வீட்டை ஏழு வருடங்களுக்கு ஒரு தடவை மாற்றிக்கொள்கிறார்கள். அதனால் அவர்கள் வாழ்ந்த வீடுகள் ஏழு வருடங்களுக்கு ஒரு முறை விற்பனைச் சந்தைக்கு வரும். வயதானவர்கள் பெரிய வீட்டை விற்றுவிட்டு, மற்றும் ஒரு சிறிய வீட்டைத் தேடுவார்கள்.அதேபோன்று குடும்பம் பெருகுவதால் மட்டுமன்றி, குடும்பம் பிரிவதாலும் வீடுகள் மாறுகின்றன. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து இங்கு வாழ வந்தவர்களால் அவுஸ்திரேலியர்களின் இந்த மனப்பான்மையை நம்ப முடியாது. நமது நாடுகளில் நூறு வருட வீடுகள் இடிந்து உடையும்வரை, பல தலைமுறைகளாக வாழ்வார்கள். அப்படிப் பல த…
-
- 0 replies
- 567 views
-
-
Where are you from? - - வ.ந.கிரிதரன் - "டாக்ஸி கிடைக்குமா?" வார்டன் பாதாள ரயிலிலிருந்து வந்திருந்த அந்தக் கனடிய வெள்ளையினப் பெண்மணி கேட்டபோதுதான் அமைப்பியல் பற்றிய தமிழ் நூலொன்றினை வாசித்துக் கொண்டிருந்த நான் இவ்வுலகிற்கு வந்தேன். "தாராளமாகக் கிடைக்கும். எங்கு போக வேண்டும்?" என்றேன். " பேர்ச்மவுண்ட்/ லாரண்ஸ்" என்று அதற்குப் பதிலிறுத்தபடியே கதவைத் திறந்து டாக்ஸியினுள் ஏறி அமர்ந்தாள் அந்தப் பெண்மணி. வயது முதிர்ந்த, நன்கு பருத்த உடல் வாகுடன் கூடிய தோற்றத்திலிருந்தாள் அவள். முகத்தில் ஒருவித கடுமையுடன் கூடிய பாவம் விரவிக் கிடந்தது. பாதாளரயில் வாகனத் தரிப்பிடத்திலிருந்து வார்டன் வீதிக்கு வந்து கிழக்காக சென்ற்கிளயர் அவென்யுவில் பேர்ச்மவுண்ட் நோக்கித் திரும்பினேன். "Wher…
-
- 1 reply
- 456 views
-
-
எம்பாவாய் September 5, 2020 அகரமுதல்வன் இளமஞ்சள் நிறத்தில் சீலை உடுத்தியிருந்தாள். அணையாத காதலின் வாசனை அவளுடலில் இருந்து உபரியாய் கசிந்தது. மெருகேறிய பிருஸ்டத்தின் சிறியதான அசைவு குகை ஓவியம் வண்ணமாய் நகர்வதைப் போலிருந்தது. விரல்கள் ரகசிய வீரர்களைப் போல கூந்தலுக்குள் ஊடுருவி ஈரத்தை உலர்த்துகின்றன. மது சுரக்கும் கூந்தல் அவளுடையது. அதிரகசியமாக வடிவு தழுவும் இந்தப்பெண்ணின் பேர் என்ன என்று அறிய ஆவல் தோன்றிற்று. மூச்சின் குமிழ்களில் காமம் கொதித்தது. களிப்பின் ஜன்னலில் இருந்து ஏகாந்தம் வேகம் கொண்டிருந்தது. இவனால் தாமதிக்கமுடியவில்லை. எழுந்து அவளைப் பின்தொடர்ந்து நடந்தான். அவள் அமர்ந்த கதிரைக்கு பக்கத்தில் இருந்தான். மணவறையில் ஐயர் மந்திரங்களை ஓதிக்கொண்டிருக்கிறா…
-
- 1 reply
- 852 views
-
-
” அரோகரா “-அலெக்ஸ் பரந்தாமன் ” யாழ்ப்பாணம்… வாங்க…வாங்க… யாப்பனய…. என்ட … என்ட… என்ட…” கொழும்பு- கோட்டை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பேருந்து ஒன்றின் நடத்துனர் இருமொழிகளிலும் மாறிமாறிப் பயணிகளை அழைப்பது ஆரியசிங்கவுக்குத் தெரிந்தது. உடனே அவன் அந்த இடத்தை நோக்கி நடந்தான். இரவு ஏழு மணியளவில் குறிப்பிட்டதொகைப் பயணிகளுடன் பேருந்து யாழ். நோக்கிப் புறப்படு கிறது. இடையில் சில இடங்களில் நிறுத்தப்பட்டு, மீண்டும் புறப்பட்ட பேருந்து, அதிகாலை நான்கு முப்பது மணியளவில், கொடிகாமத்தை வந்தடை கிறது. ஆரியசிங்க பேருந்தைவிட்டுக் கீழே இறங்கினான். அன்று சந்தைநாளாகையால், வியாபாரிகளின் நடமாட்டமும் விற்பனைப்பொருள்களைக் கொண்டுவருவோர் எண்ணிக்கை அதிகமா…
-
- 3 replies
- 1.2k views
-
-
நமஸ்காரம், ஷேமம், ஷேமத்திற்கு எழுத வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். நீங்களோ எனக்குக் கடிதம் எழுதப் போவதில்லை. உங்களுக்கே அந்த எண்ணமே இருக்கிறதோ இல்லையோ? இங்கே இருக்கும் போதே, வாய் கொப்புளிக்க, செம்பில் ஜலத்தை என் கையிலிருந்து வாங்க. சுற்றும் முற்றும் திருட்டுப் பார்வை, ஆயிரம் நாணல் கோணல். நீங்களா கட்டின மனைவிக்கு கடிதம் எழுதப் போகிறீர்கள்? அதனால் நானே முந்திக் கொண்டதாகவே இருக்கட்டும். அகமுடையான் உங்கள் மாதிரியிருந்தால்தானே, என் மாதிரி பெண்டாட்டிக்குப் புக்ககத்தில் கெட்ட பேரை நீங்களே வாங்கி வைக்க முடியும்? “அவள் என்ன படிச்ச பெண், படிச்ச படிப்பு எல்லாம் வீணாய்ப் போகலாமா? ஆம்படையானுக்குக் கடிதம் எழுதிக்கிறாள்!” என்று வீட்டுப் பழைய பெரியவாள், புதுப் பெரியவாள் எல்லாம் என் கன்னத…
-
- 1 reply
- 707 views
-
-
வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை.! பெரிய பரந்தன் கதை இந்த வரலாற்றை ஏற்கனவே நான் எழுதி வணக்கம் லண்டன் இணையத்தளத்தில் தொடர்ச்சியாக வந்தது. அதனை லண்டனில் இருந்து வெளிவரும் “ஒரு பேப்பர்” பத்திரிகை தொடர்ந்து பிரசுரித்தது. வணக்கம் லண்டன் இணையத்தளத்தில் வந்ததை வாசித்து அதனை ரசித்த அப்போதைய “சுடரொளி வாரமலர்” ஆசிரியர் மூன்று கிராமங்களின் கதை என்ற தலையங்கத்தை “அது ஒரு அழகிய நிலாக்காலம்” என்ற பெயரில் மாற்றி தொடராக வெளியிட்டார். எனது தந்தையும் நானும் பிறந்து தவழ்ந்து வளர்ந்த ” பெரிய பரந்தன்” கிராமத்தைத் பற்றி முழுமையாக எழுதவில்லை என்ற மனக்குறை எனக்கு இருந்தது. எனவே பெரிய பரந்தன் வரலாற்றை ஒரு கதை வடிவில் எழுதி மூன்று கிராம…
-
- 42 replies
- 10.2k views
-
-
அம்மா எப்போ தூங்குவான்னு தெரியாது, காலைல எந்திரிச்சுப் பாத்தா சாமி படத்துக்கு முன்னாடி நின்னு கண்ண மூடிக்கிட்டு நிப்பா, வாய் மட்டும் முணுமுணுக்குறது தெரியும், சாமிக்கிட்ட என்ன வேண்டுவான்னு தெரியாது, அநேகமா ஊர்லயே சாமிக்கிட்ட அதிக நேரம் பேசுறது அம்மாவாத்தான் இருக்கும்...... கோயில் பூசாரி கூட சாமியவிட மத்தவங்ககிட்டத்தான் அதிக நேரம் பேசிப் பாத்திருக்கேன், கிட்டத்தட்ட 10 வருஷத்துக்கு மேல அம்மாவும் சாமிகிட்ட ஏதோ வேண்டிக்கிட்டேதான் இருக்கா, ஆனா, அவ வாழ்க்கைல வேண்டுறது எதுவும் நடந்த மாதிரித் தெரியல.... அம்மாவோட வாழ்க்கை ரொம்ப நீளமானது, அம்மாவோட கதைய சின்ன வயசுல கேக்குறப்பவெல்லாம், கண்ணு விரிச்சு படம் பாக்குற மாதிரி இருக்கும், வெள்ளக்காரங்கிட்ட கணக்கு எழுதுற வேல…
-
- 4 replies
- 1k views
-
-
புலரியில் மறைந்த மஞ்சள் கடல் – ப.தெய்வீகன் மயானத்துக்குப் பின்னாலிருந்த மஞ்சள்நிற கடுகு வயலிலிருந்து வந்த காற்று கருங்கல் மதிலின் மேலால் பாய்ந்து உள்ளே நுழைந்தது. அந்தியின் சூரியக்கதிர்களில் அசைந்துகொண்டிருந்த பெருமரங்களில் மோதியது. படர்ந்துநின்ற கொரம்பியா மரங்கள் சின்னதொரு ஆட்டத்தோடு அசைவை நிறுத்திக்கொண்டன. கல்லறைகளுக்கு அருகில் வரிசையாக நின்ற எப்கரிஸ் பூக்கள் தங்கள் இதழ்களை தரையில் சொரிந்தன. பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சித்திர வட்டக்கற்களுக்கு கீழே பிறப்பும் இறப்பும் இரங்கற் கவிதைகளும் பதித்த கல்லறைகளின் மீது சில இலைகள் பறந்துசென்று விழுந்தன. நான் அந்த மயானத்தின் தென்கிழக்கு மூலையிலிருந்த கல்குடிசைக்கு முன்னால் வேலைக் களைப்போடு அமர்ந்திருந்திருந்து எச்சிலில் மு…
-
- 2 replies
- 953 views
-
-
❤️ அந்த வெள்ளைக் காகிதத்தைப் பிரித்துப் படித்தான் ரவீந்தர். அதில், `தயவுசெய்து ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…’ என்ற பாடலைப் பாடவும்' என ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. கையெழுத்தைப் பார்த்தவுடனேயே தெரிந்துவிட்டது. அதே நபர்தான். ரவீந்தர் சுற்றிலும் தேடினான். சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும், ஒரு ரிசார்ட் பார் அது. வழக்கமான ஈ.சி.ஆர் பார்களைப்போல் இளைஞர்கள் கும்மாளமிடும் பார் அல்ல. பணம் சம்பாதித்துச் சம்பாதித்துக் களைத்துப்போன, `வீட்டுக்குக் கிளம்பிட்டீங்களா?' என போன் அடிக்கும் மனைவிகளால் அலுத்துப்போன, ஆண்டுக்கு ஒருமுறை ஐபோனை மாற்றும் பிள்ளைகளால் வெறுத்துப்போன... நடுத்தர வயதுப் பணக்காரர்கள் அமைதியாக அமர்ந்து குடிக்கும் கார்டன் பார். ரவீந்தர், அங்கு …
-
- 0 replies
- 594 views
-
-
-
மீள்.... வாழ்த்து --- ரிஷபன் சற்று ஒடிசலான கையெழுத்தில், மாதவி கிருஷ்ணன் என்று எழுதிய வாழ்த்து தபாலில் வந்திருந்தது. எங்கள் திருமண நாளைப் பத்து வருடமாய் ஞாபகம் வைத்திருக்கிற ஜீவன். அலுவலகத்திலிருந்து திரும்பியவனிடம் புவனா காபியையும் வாழ்த்தையும் கொடுத்தாள். "காலைல தபால்ல வந்திச்சு." "வேற போஸ்ட்…?" என்றேன். "இல்ல." அலுப்பில், காபிக்கு முதல் உரிமை கொடுத்தேன். குடித்த சுறுசுறுப்பில் வாழ்த்தைப் பிரித்தேன். ‘அன்புடன்… மாதவி கிருஷ்ணன்!’ "மறக்காம அனுப்புறா!" என்றேன் வியப்புடன். "அவங்களுக்கு எப்ப மேரேஜ் டே?" இது புவனாவின் கேள்வி. "ஞாபகம் இல்ல. ஜூன்லயா… ப்ச்… தெரியல!" பத்தாவது வாழ்த்து இது. வருடம் முழுவதும் வேறு …
-
- 0 replies
- 608 views
-
-
கண்ணான கண்ணே ...... 'கண்ணான கண்ணே கண்ணான கண்ணே என்மீது சாய வா புண்ணான நெஞ்சை பொன்னான கையால் பூப்போல நீவ வா.... ஆராரிராரோ.... ஆராரிராரோ....ஆராரிராரிரோ......' கடந்த சில மாதங்களாக ஆதவன் தன் செல்ல மகள் ஆரதிக்காகப் பாடிப்பாடி ஆரதிக் குட்டிக்கு பிடித்துப்போன இப் பாடலை இன்று ஆரதி தன் அன்புத் தந்தைக்காகப் பாட நேரிடும் என்று கனவில்கூட எண்ணியிருக்க மாட்டாள். அவளது கொஞ்சும் குரலில் செல்லச் சிணுங்கலாய் ஆதவனின் காதுகளில் பாடல் புகுந்து அவனைப் பரவசப் படுத்திக்கொண்டிருந்தது. அப்பரவசத்தினோடே அவனது உடலின் அசைவுகளும் இதயத்தின் துடிப்பும் மெல்ல மெல்ல அடங்க அவனது அன்பு மனைவி அபிராமியும் மகள் ஆரதியும் கையசைத்து விடைகொடுப்பதான பிரேமையுடன் இரு காதோரங்களிலும் இருசொட்டுக்கண்…
-
- 22 replies
- 3.1k views
-
-
சார் ! இந்த ரோடு தாம்பரம் போகுங்களா ?" வார்த்தை பாதியும், வறுமை மீதியுமாய் வந்து சேர்ந்த வார்த்தைகள் சட்டென என்னைத் திரும்பி பார்க்க வைத்தது, கெச்சலான தேகம், உழைத்து உழைத்தே உள்ளே போன கண்கள், அடி பைப்புகளில் துவைத்து கட்டியே அழுக்கேறிய வேட்டி சட்டை, கையில் ஒரு பிளாஸ்டிக் பை சகிதம் ஒரு பெரியவர் நின்றிருந்தார். மறுபடியும் ஒரு முறை கேட்டார், "தம்பி இந்த ரோடு தாம்பரம் போவுமுங்களா ?” “ஐயா, இது கோயம்பேடு ரோடு, ரைட் சைடு போகுது பாருங்க, அதான் கிண்டி, தாம்பரம் ரோடு, எதித்தாப்ல போய் நில்லுங்க, தாம்பரம் பஸ் வரும் ! " என்றேன். சரி என்பது போலத் தலையாட்டிவிட்டு, எதிர்புற ரோட்டில் நுழைந்து, பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் கிண்டியை நோக்கி விறு விறு வென நடக்க…
-
- 16 replies
- 2k views
-
-
"குஞ்சம்மா" ரிஷபன் சாருமதி சட்டென்று திரும்பிப் பார்த்தாள். அவளை யாரோ கூப்பிட்ட மாதிரி. அப்புறம்தான் ஞாபகம் வந்தது. அந்தப் பெயரில் அழைக்கிற ஒரே ஒருத்தரைப் பார்க்கத்தான் இன்று ஸ்ரீரங்க விஜயம். ரெயில்வே ஸ்டேஷனில் சிறு பெட்டியுடன் தனியே இறங்கியவளை அந்த அதிகாலை இருட்டில் யார் கவனிக்கப் போகிறார்கள்.. ரொம்ப நாளாச்சு. இப்படி விஸ்ராந்தியாய் வெளியே வந்து. எப்போது ஏசி கார். கூடவே தம்பூர் போடுகிற பெண். சுருதிப் பெட்டி.. சில சமயங்களில் கணவர் ராஜகோபாலன்.. எப்போதாவது மகள் மதுவந்தி.. இன்று யாரும் வேணாமென்று தனியே. 'நிஜமாத்தான் போறியா..' "ஆமா' 'ஒரு வாரத்துக்கா' 'ஆமாப்பா' கேள்வி மேல் கேள்வி கேட்ட கணவரைக் குழந்தை போலப்…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஒட்டகமும் வரிக்குதிரையும் | மற்றும் எனது தாத்தாவின் பரிசோவியமும்
-
- 7 replies
- 1.6k views
-
-
மிருகம் - க.கலாமோகன் July 15, 2020 எலெனாவை எனக்குத் தெரியும். ஆனால் நான் அவளைச் சந்திப்பது அபூர்வமாகவே. மதுச் சாலைகளிலும், தோட்டங்களிலும், சில வேளைகளில் கலைகள் காட்டும் கண்காட்சி சாலைகளிலும். இவளது வீட்டுக்கு நான் சில தடவைகளில்தான் சென்றதுண்டு. ஆனால் நான் அங்கு சென்றதும் பயப்பட்டு விடுவேன். காரணம் அவள் வளர்க்கும் நாய்தான். அது மிகவும் பெரியது. மிகவும் நீளமான பற்கள். அது ஓர் பயங்கர மிருகத்தைப் போல. முதலாவது சந்திப்பில், நான் நடுங்கியதை அவள் கண்டுவிட்டாள். “பயப்பிடவேண்டாம் ரவி. ரூக்கி நல்லவன். முத்தமிடு ரவியை…” “எலெனா, எனக்கு அதனது முத்தங்கள் தேவை இல்லை.” அந்த முதல் தடவையில் அவளைக் களைப்பில்லாமல் ரூக்கி முத்தமிட்டதைக் கண…
-
- 1 reply
- 1.1k views
-
-
சிவனடிபாத மலை யாத்திரை - பொன் குலேந்திரன். உலகில் இமயமலை போன்று பல மலைகள் முக்கோண வடிவத்தில் அமைந்துளன வடிவத்தின் பின்னால் மர்மம் என்ன ? மலைகள் உருவாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளை எடுத்துக்கொள்கின்றன மற்றும் டெக்டோனிக் சக்திகள், ஈர்ப்பு, உராய்வு சக்தி, அரிப்பு போன்ற பல்வேறு சக்திகள் உள்ளன, அவை மலைகள் உருவாக வழிவகுக்கிறது. ஆரம்பத்தில், மலைகள் உருவாவதில் முக்கிய பங்கு வகிக்கும் இரண்டு முக்கிய சக்திகள் உள்ளன, இவை ஈர்ப்பு விசை மற்றும் உராய்வு ஆகியவை மணல் துகள் மீது செயல்படுகின்றன. ஈர்ப்பு மணலை தரையை நோக்கி இழுக்கிறது மற்றும் உராய்வு இரண்டு துகள்களும் ஒன்றையொன்று சரியச் செய்கிறது. இந்த இரண்டு சக்திகளும் ஒருவருக்கொருவர் போட்டியிடும்போது, இங்கு ஈர்ப்பு விசையின் தீவ…
-
- 0 replies
- 1.3k views
-
-
பிலாக்கணம் பூக்கும் தாழி - அகர முதல்வன் July 1, 2020 அகர முதல்வன் ஓவியம்: வல்லபாய் அ “பிலா இலை ஆச்சிக்கு தலைமுழுக்க பேன், ஆனா பார்க்க விடுகுதில்லையண்ணே” என்று கோள்மூட்டிக் கொண்டிருந்தாள் மாலா. அப்பா சுருட்டின் அடிப்பக்கத்தை எச்சிலால் பதப்படுத்தியபடி “ஏனணை அவளைப் பேன் பாக்கவிடன், அது தலைமுழுக்க பெருகிப் புழுத்தால் பிறகு மலத்தியோன் வைச்சுத்தான் முழுக வேண்டி வரும்” ஆச்சியின் கொட்டிலுக்கு கேட்குமளவிற்கு குரல் கொடுத்தார். “உந்தக் கொண்டோடி வேசய இஞ்சவரச் சொல்லு” என்று ஆச்சி கத்தினாள். “என்ன சொல்லுங்கோ” என்று இருந்தவிடத்திலிருந்து பதிலுக்கு கேட்ட மாலாவை பொருட்படுத்தாமல் ஓலைப்பெட்டியில் இருந்த குறைச்சுருட்டை எடுத்து மூட்டினாள் ஆச்சி. வாங்கின் அடியில்…
-
- 2 replies
- 1.2k views
-