கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
ஒரு நிமிடக் கதை: பயணம் “கோகுலுக்கும் ஹரிணிக்கும் போரடிக்குது. நாளைக்கு மகா பலிபுரம் போயிட்டு வரலாம்பா. போக வர மூணு மணி நேரம்தான். நம்ம கார்லயே போயிட்டு வந்துடலாம். நீங்களும் வாங்க!” - அப்பா ராகவனிடம் சொன்னான் பிரபாகர். “போகலாம். ஆனா பஸ்ல போனா நானும் வர்றேன். கார்ல போறதா இருந்தா நான் வரலைப்பா” - அப்பா சொன்னதைக் கேட்டு வியப்பாக இருந்தது பிரபாகருக்கு. “பஸ்லயா? இங்கேயிருந்து பஸ் ஸ்டாண்டுக்குப் போயி, அங்கேயிருந்து மகாபலிபுரம் பஸ் பிடிக்கணும். அங்கேயும் ஒவ்வொரு இடத்தையும் பார்க்க ஆட்டோவோ டாக்ஸியோ பிடிக்கணும். கார்ல ஈஸியா போயிட்டு வர்றதை விட்டுட்டு என்னப்பா சொல…
-
- 2 replies
- 1.1k views
-
-
(a+b)2 = a2+b2+2ab கல்யாணமாகி ஒரு மாதம் - A கல்யாணமாகி 2 வருடம் - B ---------- ஆருயிர் நண்பன் ரமேஷ் - C கண்ணதாசன் பாடல் - D A "என்னங்க உங்களுக்கு ஹார்லிக்ஸ் வேணும்மா, பூஸ்ட் வேணும்மா" இங்கி, பிங்கி போட்டு பார்த்ததில் பூஸ்ட்தான் வந்தது. ஆனால் எனக்கு ஹார்லிக்ஸ்தான் பிடிக்கும். அதனால், "எனக்கு ஃபில்டர் காஃபிதான் வேணும்" B "எருமைமாடு அந்தப் பாலை குடிச்சாத்தான் என்ன? அதுல என்ன வெஷம்மா கலந்திருக்கு, அப்பனும், பிள்ளையும் ஒரே மாதிரி வந்து வாச்சிருக்கு பாரு. எனக்கு வேலை வைக்கணும்னே பிறந்து தொலைச்சிருக்கு" "ஏய்..... ஏண்டி பிள்ளைய திட்டுற" "ம்....... எனக்கு கிறுக்கு பிடிச்சிருக்கு அதான் திட்டுறேன்" "உனக்கு திமிறு அதிகம…
-
- 3 replies
- 1.2k views
-
-
குணவேறுபாடு சிறுகதை: மேலாண்மை பொன்னுச்சாமி, ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு சுனைக்கனி, பலசரக்குக் கடைக்குள் உட்கார்ந்திருந்தான். மடியில் நோட்டும் சிட்டைத்தாளும். கடை பூராவும் நிதானமாகப் பார்வையை அனுப்பினான். ‘வேற ஏதாச்சும் கொள்முதல் பண்ணணுமா?’ என ஒவ்வொரு பொருளாக யோசித்து சிட்டையில் எழுதினான். கல்லாப்பெட்டியைத் திறந்தான். ரூபாயை எடுத்தான். ‘எம்புட்டு வெச்சிட்டுப் போகணும்?’ என்ற யோசிப்பு. `கரிவலம்வந்தநல்லூர் மிட்டாய் வியாபாரி, வரகுணராமபுரம் புகையிலைக்காரர், மாதாங் கோவில்பட்டி முட்டை வியாபாரி, செவல்பட்டி சேவுக்காரர், நத்தம்பட்டி பொடிமட்டைக்காரர்... இவங்கதான் இன்னைக்கு வந்து சரக்கு போடுவாக. அவுகளுக்கு ரூவா கட்டணும்…
-
- 0 replies
- 3.9k views
-
-
அடோ ப(B )ள்ளா ! கொய்தி தியன்னே. கியபங். (அட நாயே ..எங்கடா இருக்கு சொல்லுடா) அந்த சீருடை அணிந்த மிருகம், அவனை எட்டி வயிற்றில் உதைத்தது. எனக்கு தெரியாது. அவன் இதை ஐம்பத்து மூன்றாம் தடவை சொல்லுகிறான். தலையை நீரினுள் அமிழ்த்தி, முகத்தில் பெற்றோல் பை கட்டி, மூக்கிலே மிளகாய் தூள் தூவி, வாய்க்குள்ளே சுடுதண்ணி ஊத்தி, உடம்பிலே மின் பாய்ச்சி, தலைகீழாக கட்டி அடிச்சு, குறட்டினாலே நகம் புடுங்கி, கையிலே ஆணி அடிச்சு, ஆணுறுப்பை உயிர் போக அழுத்தி, கால்களை அமில வாளிக்குள் தோய்த்து, அந்த மிருகத்துக்கு தெரிந்த சித்திரவதை எல்லாம் பண்ணி பார்த்தாச்சு. இப்போ அவன் முதுகிலே மின்அழுத்தியை (Iron Box ) அழுத்தியபடி மீண்…
-
- 16 replies
- 1.8k views
-
-
அழிந்துவரும் வரும் கலைகளில் ஒன்றான புலிக்கூத்து நேற்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு - வந்தாறுமூலை கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றது. இந்நிகழ்வு கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சி.ஜெயசங்கரின் வழிகாட்டலின் கீழ் நுண்கலைத்துறை இறுதி வருட மாணவியான ந.துஷ்யந்தியின் இறுதி வருட ஆய்வின் ஒரு பகுதியாக நடைபெற்றது. இவ்வாற்றுகை நிகழ்வில் ஆற்றுகையாளர்களாக நுண்கலைத்துறை மாணவர்களும் விரிவுரையாளர்களுமே கலந்து கொண்டனர். இவர்கள் புலிகூத்தின் மரபுவழி அண்ணாவியார்களினதும், புலிக்கூத்துக் கலைஞர்களினதும் பயிற்றுவிப்பின் கீழ் முறைப்படி பயின்றே இந்த ஆற்றுகையை நிகழ்த்தினர். வந்தாறுமூலை - பலாச்சோலை, சித்தாண்டி, வாகரை - அம்மன்தனாவெளி போன்ற கிராமங்களில் ஆடப்பட…
-
- 3 replies
- 1.5k views
-
-
அவளை மறக்க முடியவில்லை!… ஏலையா க.முருகதாசன். நானும் தயாநிதியும் கோப்பிக் கடையைத் தேடி நடந்து கொண்டிருந்தோம்.வீதிகளில் ஆளரவத்தைக் காண முடியவில்லை.நத்தைகள் உடலை ஓட்டுக்குள் இழுப்பது போல குளிரின் தாக்கத்தால் குடியானவர்கள் வீட்டுக்குள் முடங்கிவிட்டார்களோ என நினைத்தேன். குளிர் வாட்டியது .குளிர்காற்று மூக்கு வழியாக சுவாசப்பைக்குள் சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டது.காதுகள் சிவந்தது.மூக்கிலிருந்து நீர் வழிந்தது. தயாநிதி மாதகலைச் சேர்ந்தவர். நான் தெல்லிப்பழையைச் சேர்ந்தவன்.இங்கு அறிமுகமாகி முப்பத்திமூன்று வருடங்களாகிவிட்டன.இப்பொழுது நண்பர்களாக இருக்கிறோம்.அவர் ஒரு குடும்பஸ்தர். தயாநிதி, தான் கப்பலில் வேலை செய்ததாக எனக்குப் பலமுறை சொல்லியிருக்கிறார்.கப்பல் வாழ்க்கையைப் ப…
-
- 2 replies
- 1.4k views
-
-
வைகறைக்கனவு (சிறுகதை) – தமிழினி ஜெயக்குமாரன் ‘மலரினி ஓடிக் கொண்டிருந்தாள். வேகமாக மிக மிக வேகமாக. பூமி அவளது கால்களுக்கு கீழே ஒரு மின்சார ரயிலின் வேகத்தில் பின்னோக்கி நகர்வதைப் போலிருந்தது. நிலத்தைத் தொட்டும் தொடாமலும் உதைத்தெழும்பும் ஒரு மானின் லாவகத்துடன் அவளது கால்கள் அசைந்து கொண்டிருந்தன. பிடரி மயிரை சிலுப்பிக் கொண்டு காட்டுப் பாதைகளையும் கட்டாந்தரைகளையும் கடந்து காற்றிலே பறக்கும் வேகக் குதிரையாகயாகவே மாறிவிட்டிருந்தாள் அவள். ஆஹா… எத்தனை இனிமையானதொரு அனுபவம் என எண்ணுவதற்குள்ளாகவே அவளது உடல் பாரமாகக் கனப்பதைப் போலிந்தது. ஒரு அங்குலம் கூட அசைக்க முடியாதபடி பெரும் பாராங்கல்லொன்றுடன் இறுக்கப் பிணைத்து கட்டி விட்டதைப் போல… “ஆ….ஐயோ…அம்மா” உடம்பு முழுவதையும் கொத்திக்…
-
- 3 replies
- 775 views
-
-
[size=4]பத்தாம் வகுப்பு படித்த காலத்திலேயே எங்களது கணக்கு வாத்தியார் செற்றாக திரிந்த எங்கள் நால்வரை வகுப்பில் நிற்க வைத்து மன்மதக் குஞ்சுகள் எனத் திட்டியிருந்தார். அவரது கோபம் நியாயமானதுதான். காரணம், எங்கள் கூட்டத்திலிருந்த ஒருவன் கூடப் படித்தவளொருத்தியைக் காதலித்திருந்தான். எங்கள் மூவரையும் துணைக்கழைத்துச் சென்று, அவளது சைக்கிள்க் கூடைக்குள் காதல்க் கடிதத்தை போட்டுவிட்டான். அவள் வாத்தியாரது மருமகள் முறையானவள். வாத்தியார் இப்படித் தான். சாதாரணமாக திட்டமாட்டார். நல்ல உவமான உவமேயங்களுடன்தான் திட்டுவார். தமிழ் படிப்பித்த நடராசா வாத்தியார்கூட பிச்சை வாங்க வேண்டும். வகுப்பில் தூங்கி விழுபவனை நிற்க வைத்து ‘இஞ்ச பாரும் ஐசே கும்பகர்ணன்’ என செம்மொழியிலான திட்டலை ஆரம்பிப்பார். சற…
-
- 3 replies
- 971 views
-
-
மிகவும் அருமையான எல்லோரும் வாசிக்க வேண்டிய ஒரு கதை ,இணைக்க முயற்சித்தேன் முடியவில்லை .யாராவது முடிந்தால் இணைத்து விடவும் . . அம்ருதா யூன் இதழில் வெளிவந்த கதை இது .
-
- 13 replies
- 2.3k views
-
-
சற்றிங் சாலையில்.... காலை நேரம் பல்கலைக்கழக வாசலில் ஒரே கூட்டம். பஸ்ஸில் இருந்து இறங்கிய சங்கர் ஓட்டமும் நடையுமாய் அவசரமாய் போய்க் கொண்டிருந்தான். அவனை வாசலில் கண்டுவிட்டு ஓடி வந்த துசி " டேய் சங்கர் எங்க போறா... ஒப்படை (அசைன்மெண்ட்) கொடுக்கிறதுக்கோ, நில்லு நானும் வாறன்". அதுக்கு சங்கர்.. இல்லையடாப்பா, சின்னப் பிரச்சனை ஒன்று, என்ர நண்பிகள் அவசரமா வரச் சொல்லி போன் பண்ணிச்சினம் அதுதான் போறன். "இன்று ஒப்படைக்கு இறுதி நாள் எல்லோ.. சரி சரி நீங்கள் போய் அவைக்கு விலக்குப் பிடியுங்கோ.. நான் ஒப்படை கொடுக்கப்போறன்" சங்கர் பல்கலைக்கழகம் வந்த புதிதில் அப்பாவியாகத்தான் தெரிந்தான். பின்னர் நாட்கள் போகப்போக நண்பிகளோடு சுற்றுவதும் அவர்களோடு கடலை ( அரட்டை) போடுவதும் "காட்ஸ்" வி…
-
- 16 replies
- 2.4k views
-
-
'பிரேம' அத்தியாயங்கள் ஓய்வதில்லை! அகிலன் செல்போனில் அழைத்தான். ஹலோ என்றதும், ஒரு குட் நியூஸ் என்று குழந்தைக்கே உரிய குதூகலத்தோடு சொன்னான். ''எதிர்பார்த்த மாதிரி வேலை கிடைச்சிடுச்சா அகிலா?'' ''இல்லை அண்ணாத்த. வீட்ல ஓகே சொல்லிட்டாங்க. எனக்கும், திவ்யாவுக்கும் ஒரு வருஷத்துல கல்யாணம்.'' ''சூப்பர் டா. அஞ்சு வருஷம் போராடி ஜெயிச்சுட்டே.'' ''திவ்யா ஹேப்பி அண்ணாத்த. 'சீக்கிரம் வேலை தேடு. ஆறு மாசத்துல நிச்சயதார்த்தம் பண்ணிக்கலாம்'னு சொல்றா. ரெண்டு மூணு இடத்துல வேலைக்கு சொல்லியிருக்கேன். எப்படியும் இந்த மாசமே சேர்ந்திடுவேன்.'' ''சந்தோஷமா இருக்குடா. ட்ரீட் கிடையாதா?'' …
-
- 0 replies
- 998 views
-
-
சேர்! என்னைக் கல்யாணம் கட்டுங்கோ. உங்களை நான் கவனமாகப் பார்த்துக் கொள்வேன்! கனடா ஈழ….. ஒரு காலத்தில் இந்த வார்த்தைகளைச் சொன்னவளைத் தான் கணவன் பிள்ளைகள் மாமன் மாமி என்று ஒரு கூட்டமாக இன்று கனடா பெரிய பிள்ளையார் கோவிலில் காண்கிறான் சத்யா. அவனுக்கு அது அதிர்ச்சியாக இருக்கவில்லை. எனக்கே கல்யாணம் கட்டும் வயதில் பிள்ளைகள் இருக்கும் போது நான் காதலித்தவளுக்கு இருக்காதா என்ற எண்ணமே அவன் மனம் முழுவதும் வியாபித்து இருந்தது. கோவில் உட்பிரகாதத்தை சுற்றி வரும் போது அவள் மூன்று முறை திரும்பிப் பார்த்துவிட்டாள் கூட வந்தவர்களுக்குத்; தெரியாமல். அவள் கதைக்க விரும்புகிறாள் என்பதை இதழ் ஓரத்தில் தோன்றி மறைந்த புன்னகை இருமுறை சொல்லிக் காட்டிவிட்டது. ஆனால் அந்தப் பு…
-
- 6 replies
- 2k views
- 1 follower
-
-
சேவலும் முயலும் சேவலும் முயலும் நீண்டகால நண்பர்கள். அடர்ந்து செறிந்த பற்றைக் காட்டில் அடிக்கடி சந்தித்து, இருவரும் ஒன்றாகவே இரைதேடி அலைவார்கள். அன்று நீண்டநேர அலைச்சலின் பின்னர் களைப்பாறவென்று, பச்சைப் பசேலெனக் கிளைபரப்பி வளர்ந்திருந்த புன்னைமர நிழலை நாடிச் சென்ற இருவருக்கும் ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது. ஓநாயொன்று புன்னை மரத்தடியில் கண்ணை மூடி நிஷ்டையில் மூழ்கி இருந்தது! ஓநாயாரின் தெய்வீகக் கோலத்தைத் தூர இருந்தே பார்த்த சேவலும் முயலும் ஒருகணம் ஸ்தம்பித்து நின்றன. அன்பே உருவான சாந்த சொரூபியாய் தியானத்தில் சமைந்திருந்த ஓநாயாரின் திருவுருவில் தன்னை இழந்த முயலோ, பக்தி சிரத்தையோடு தன் பின்னங் கால்களில் குந்தியிருந்து, பவ்வியமாகச் சிரந்தாழ்த்தி முன்னங் கால்…
-
- 1 reply
- 600 views
-
-
ஒரு இனிய உதயம்! – சிறுகதை ''அம்மா.... நான் கேட்க, கேட்க ஏம்மா பதிலே சொல்ல மாட்டேன்ங்கிறீங்க?'' ''சுஜி... உனக்கு இன்னும் ரெண்டு பூரி வைக்கிறேன்.'' ''நான் என்ன கேட்கிறேன்? நீங்க அதுக்கு என்ன பதில் சொல்றீங்க? நான் கேட்டது உங்களுக்கு புரியலையா என்ன?'' ''புரியுது.... புரியுது... சுஜி. நீ சின்ன பெண். உனக்கு எதுக்கு இப்போ இதைப்பற்றின கவலை. சாப்பிட்டதும் போய் படி. பரீட்சை வருதுதில்லே.... இப்போ டென்த்துங்கிறதை மனசிலே வச்சுக்கிட்டு படி.'' ''படிக்க புத்தகத்தை எடுத்து விரிச்சாலே அதிலே அப்பா முகம்தான் தெரியுது. படிக்க முடியல...'' ''இதுல உன்னை சொல்ல குத்தமில்லே. இனிமேல் ஸ்கூல்ல வந்து உன்னை பார்க்க வேண்டாம்னு கொஞ்சம…
-
- 1 reply
- 2.2k views
-
-
நான் அகதி - பயணம் ஆரம்பம் - 1 தாலா பானுவால் ஒரு வார்த்தைகூடப் பேசமுடியவில்லை என்பதால் அவர் கணவர் முகமது மூலமாகவே அவர்கள் கதை வெளியுலகுக்கு வந்திருக்கிறது. அவர்கள் பர்மாவைச் சேர்ந்தவர்கள். பர்மா என்று சொல்லும்போதே அவர் கண்கள் மினுமினுப்போடு விரிகின்றன. பர்மா என்பது அவரைப் பொறுத்தவரை ஒரு நாடல்ல, குட்டி சொர்க்கம். கனவில் மட்டுமே காணக்கூடிய மயக்கமூட்டும் காட்சிகளை ஒருவர் பர்மாவில் அசலாகக் காணமுடியும். விக்டோரியன் கட்டடங்களும் அடுக்குமாடிக் குடியிருப்புகளும் நவீன வர்த்தக வளாகங்களும் நிரம்பியிருந்தாலும் பர்மாவை நவீனத்துவம் இன்னமும் முழுக்க முழுங்கிவிடவில்லை. அழகிய ஓடைகள், பச்சைப் பசேலென்று விரிந்திருக்கும் கானகப் பகுதிகள், ஒருவேளை பொம…
-
- 17 replies
- 5k views
-
-
பந்தல் ஏறிய கொள்ளுக்கொடி! - சிறுகதை பி.ச.குப்புசாமி, ஓவியங்கள்: ம.செ., மரங்களின் மீதும் காடுகளின் மீதும் தனிக் காதல்கொண்டவர் என் நண்பர். அவரை முதலில் அறிமுகப்படுத்திவிடுகிறேன். என் நண்பருடைய தந்தை ஃபாரஸ்ட்டராகப் பணிபுரிந்தவர். தாயை இழந்த என் நண்பரும் அவர் சகோதரியும், இளம் வயதில் அடிக்கடி காட்டிலே இருந்த தந்தையிடம் போய்த் தங்குவது உண்டு. தாவரங்களின் மீதான அவரது காதல், அப்போது இருந்து மூண்டிருக்கும் என்று நினைக்கிறேன். அதோடுகூட, அவர் கொஞ்ச காலம் ஒய்.எம்.சி.ஏ-வில் தங்கிப் பயின்றவர். எதிலும் அறிவியல்பூர்வமான மனோபாவம் செலுத்துபவர். எல்லாம் சேர்ந்து அவரை வார்த்தன என்றும் சொல்லலாம். தாவரங்களை அவர் ஏதோ சத்தியங்கள் போல் பேணினார். '…
-
- 1 reply
- 1.9k views
-
-
டெரரிஸ்ட் - சிறுகதை ஷான் கருப்பசாமி - ஓவியங்கள்: கோ.ராமமூர்த்தி 20 வருடத்துக்கு முன்பான கல்லூரி வாழ்க்கை, வேறொரு பிறவியைப்போல இருக்கிறது. முற்பிறவியிலிருந்து யாரையாவது மீண்டும் சந்திக்கும்போது, நெற்றியைச் சுருக்கி யோசிக்க வேண்டியிருக்கிறது அல்லது விழிகளை விரித்து ஆச்சர்யப்பட வேண்டியிருக்கிறது. சதையைக் கூட்டியோ, சிகையை உதிர்த்தோ அல்லது வெளுத்தோ அவர்கள்மீது விளையாடியிருக்கும் காலம். வெங்கடேஷும் அப்படித்தான் இரண்டு மடங்கு குறுக்கில் வளர்ந்திருந்தான். பாதி முடியை இழந்திருந்தான். கல்லூரியில் எங்களுக்கு ஜூனியர். வெவ்வேறு துறை. ஆனால், ஹைதராபாத்தில் மூன்று நட்சத்திர விடுதியின் வரவேற்புப் பகுதியில் தூரத்தில் பார்த்தபோதே வெங்கடேஷை எனக்கு அடை…
-
- 1 reply
- 2.1k views
-
-
ஒரு கவடு தூரம் -வாசுதேவன் பாரிஸ் முதலாவது குறிச்சியில் உள்ள உணவகமொன்றில் சமையற்காரனாக வேலை செய்யும் கண்ணன் பிரஞ்சுக் குடியுரிமை பெற்றுக்கொண்ட வேகத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சி உறுபினராகவும் தன்னைப் பதிவு செய்துகொண்டிருந்தான். அதற்கு மூன்று வருடங்களுக்கு முன்னரே பிரஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பான தொழிற்சங்கத்திலும் உறுப்புரிமை பெற்றிருந்தான். தொழிற் சங்கத்தில் இணைந்ததிலிருந்து சிறிது சிறிதாக இடதுசாரிச் சிந்தனை அவனை ஆக்கிரமித்துக்கொண்டது. தொழிற்சங்கக் குறிச்சிப்பொறுப்பாளனான டானியல் ப்ரௌவ்ஸ்கிதான் கண்ணனுக்கு கம்யூனிசச் சிந்தனைகளின் கதவுகளைத் திறந்துவிட்டவன். கண்ணனுக்கும் ப்ரௌவ்ஸ்கிக்கும் இடையில் ஒரு முக்கியமான பொதுவிடயம் உண்டு. ப்ரௌவ்ஸ்கி பரிசில் கோவில் வீதிய…
-
- 0 replies
- 1k views
-
-
அந்தி நேரம் இது தான் என்று சொல்ற மாதிரி மரங்கள் நிறைந்த பகுதியினூடாக சிறிது வந்த வெளிச்சம் கூட மங்கி கொண்டு செல்கிறது . பண்ணை கடலில் சூரியன் சங்கமாகி கொண்டிருக்கிறது. மைதானத்தில் சில மாணவர்கள் பயிற்சி எடுத்து கொண்டிருக்கிறார்கள் .அதை கவனிக்கிற மாதிரி கொஞ்சமும் அரட்டை பாதி கொஞ்சமுமாக குழுமியிருந்தவர்கள் ஆளுக்கொரு பக்கம் மெல்ல மெல்ல விலகி கொண்டிருந்தார்கள் சுப்பிரமணியம் பூங்காவில் உள்ள லவுட்ஸீபிக்கரிலிருந்து இலங்கை வானொலியில் இருந்து வரும் இன்றைய நேயர் நிகழ்ச்சிக்கு போடும் இசை. நேரம் ஐந்து என http://sinnakuddy.blogspot.com/2007/06/blog-post.html
-
- 1 reply
- 1.3k views
-
-
தமிழ்க் கதை யோ.கர்ணன் ஆயிரத்தெட்டு சிறுகதைகளும், இருபத்தேழு குறுநாவல்களும், பதின்மூன்று நாவல்களும், நான்கு நாடகங்களும், மூன்று உரைநூல்களும், ஒரு சமையல் குறிப்புமென கணக்கில்லாமல் புத்தகங்கள் போட்டுத் தள்ளிய கலைஞர் அப்புக்காத்துவை உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். தெரியாவிட்டாலும் பாதகமெதுவுமில்லை. சிலர் அவரது புத்தகங்களில் ஓரிரண்டாவது படித்திருக்கக் கூடும். இந்த இரண்டு நிபந்தனைகளிற்கும் நீங்கள் உட்படுவீர்களெனில் இதற்கடுத்த பந்தியை வாசிக்கத் தேவையில்லை. கடந்து சென்று விடலாம். அவரை அறியாதவர்களிற்காக இதற்கடுத்த பகுதியை எழுத நேர்கிறது. முத்தமிழையும் கரைத்துக் குடித்த முத்தமிழறிஞர்கள் பரம்பரையில் கலைஞர் கருணாநிதிக்கு பின்பாக பெயர் சொல்லத்தக்க நபர்க…
-
- 19 replies
- 2.3k views
-
-
புகழ் பெற்ற ஜப்பானியத் தளபதி தனது வீட்டுக்கு ஒரு ஜென் துறவியை அழைத்திருந்தார். துறவி வந்தவுடன் தனது கலைப் பொருட்களின் சேமிப்பைக் காட்டி அவற்றைப் பற்றி வானளாவப் புகழ்ந்து கொண்டிருந்தார். துறவி அதை லட்சியம் செய்யவே இல்லை. முடிவில் துறவி அங்கிருந்த சீனக் களிமண்ணால் செய்யப்பட்ட வேலைப்பாடுகள் மிகுந்த ஒரு கிண்ணத்தைத் தூக்கித் தரையில் போட்டு உடைத்தார். அதைக் கண்ட தளபதியால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கோபத்தில் துடித்துக் கத்த ஆரம்பித்தார். துறவி அமைதியாகச் சொன்னார், ''உன் கண் முன்னாள் ஒரு பீங்கான் கிண்ணம் உடைந்து நொறுங்கியதை உன் மனத்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எவ்வளவு உயிர்கள் கை கால் துண்டாகி வேதனையுடன் போர்க்களங்களில் வலியுடன் இறந்து போயின? உன் கண் …
-
- 4 replies
- 1.1k views
-
-
``சிங்கள தன்னவத? ´´ (சிங்களம் தெரியுமா) என்றார் கண்ணாடித் தடுப்பிற்கு அப்பால் அமர்ந்திருந்த மீசையற்ற அதிகாரி. இல்லையென்று தலையாட்டினான் சீலன். ``தன்னாய்´´ (தெரியாது) என சிங்களத்திலேயே அவனால் பதிலளித்திருக்க முடியும். கொழும்பில் தங்கியிருந்த கடந்த இரண்டு வருட காலத்தில் எக்காய், தெக்காய், துணாய் எனச் சில எண்களும் மேக்க, பைனவ, கருணாகர எனச் சில பயணச்சொற்களுமாக அவன் அறிந்து வைத்திருந்தான். சென்ற முறை கூட இதே பாஸ்போட் ஒபிஸில் (Office, ஆபிஸ்) தெரிந்த சில சிங்களச் சொற்களை வைத்துத்தான் சமாளித்தான். அப்போதெல்லாம் சிங்களம் தெரியாது எனச் சொல்லும் மனநிலை அவனிடத்தில் இருக்கவில்லை. ``தெரியாது..? எவ்வளவு காலம் இங்கை இருக்கிறது? ´´ இலக்கணங்கள் மீறிய போதும் கேள்வித் தொனியிலான அவர…
-
- 12 replies
- 3.5k views
-
-
டிங்கிரி.சிவகுரு புராண இதிகாச நாடகங்களையே பார்த்து வாளும்.வேலும்.விழியும் .கண்ணாளா.மன்னா.மந்திரி என்று பழக்கப்பட்டுபோயிருந்த மக்களிற்கு வித்தியாசமான அதுவும் வாழ்வின் அன்றாட நிகழ்வுகளை முளுக்க முளுக்க நகைச்சுவையாக இருவர் மட்டுமே மேயில் தோன்றி நடித்த இரட்டையர்கள்தான் டிங்கிரி மற்றும் சிவகுரு என்பவர்கள்.இவர்களின் வருகை சமூக மற்றும் நகைச்சுவை நாடகங்களிற்கென மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது மட்டுமல்ல. பினர் பல நகைச்சுவை நடிகர்கள் தோன்றுவதற்கும் காரணமாக இருந்தது என்றும் சொல்லலாம். அது மட்டுமல்ல சாதாரணமாக ஒரு நாடகம் போடுவதென்றால் விளம்பரத்தில் நாடகத்தின் பெரைச்சொல்லி பின்னர் அதில் நடிக்கும் நடிகர்களின் பெயரைச்சொல்லி விளம்பரப்படுத்துவதுதான் வழைமை …
-
- 13 replies
- 3.3k views
-
-
நமஸ்காரம், ஷேமம், ஷேமத்திற்கு எழுத வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். நீங்களோ எனக்குக் கடிதம் எழுதப் போவதில்லை. உங்களுக்கே அந்த எண்ணமே இருக்கிறதோ இல்லையோ? இங்கே இருக்கும் போதே, வாய் கொப்புளிக்க, செம்பில் ஜலத்தை என் கையிலிருந்து வாங்க. சுற்றும் முற்றும் திருட்டுப் பார்வை, ஆயிரம் நாணல் கோணல். நீங்களா கட்டின மனைவிக்கு கடிதம் எழுதப் போகிறீர்கள்? அதனால் நானே முந்திக் கொண்டதாகவே இருக்கட்டும். அகமுடையான் உங்கள் மாதிரியிருந்தால்தானே, என் மாதிரி பெண்டாட்டிக்குப் புக்ககத்தில் கெட்ட பேரை நீங்களே வாங்கி வைக்க முடியும்? “அவள் என்ன படிச்ச பெண், படிச்ச படிப்பு எல்லாம் வீணாய்ப் போகலாமா? ஆம்படையானுக்குக் கடிதம் எழுதிக்கிறாள்!” என்று வீட்டுப் பழைய பெரியவாள், புதுப் பெரியவாள் எல்லாம் என் கன்னத…
-
- 1 reply
- 699 views
-
-
நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன்-ஜெயகாந்தன் ஆமாம்; நான் ஜன்னலண்டைதான் உக்காந்துண்டிருக்கேன்… அதுக்கென்னவாம்? உட்காரப்படாதோ?… அப்படித்தான் உட்காருவேன். இன்னிக்கி நேத்திக்கா நான் இப்படி உக்காந்துண்டிருக்கேன்… அடீ அம்மா! எவ்வளவோ காலமா உக்காந்துண்டுதான் இருக்கேன். இனிமேலும் உக்காந்துண்டுதான் இருப்பேன். என்ன தப்பு? இல்லே, யாருக்கு என்ன நஷ்டம்? பெரீசா எப்போ பார்த்தாலும் இதையே ஒரு வழக்காப் பேசிண்டு இருக்கேளே… ‘ஜன்னலண்டையே உக்காந்துண்டிருக்கா… உக்காந்துண்டிருக்கா’ன்னு. ஜன்னலண்டை உட்காரப்படாதோ? ஜன்னலண்டையே போகப் படாதோjayakanthan_185_1_050408 ? அப்படீன்னா வீட்டுக்கு ஜன்னல்னு ஒண்ணு எதுக்காக வெக்கணும்கறேன்! ஒண்ணா? இந்த வீட்டுக்கு ரெண்டு ஜன்னல் இருக்கு; பார்த்துக்கோங்கோ. தெருவ…
-
- 2 replies
- 1.3k views
-