கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
உதிரிப்பூக்கள் - சிறுகதை தமிழ்மகன் - ஓவியங்கள்: ஸ்யாம் ‘‘மத்தவங்கள்லாம் வரலையா?” - அனுஷா கதவைத் திறந்தவுடன் பிரகாஷ் கேட்டான். ‘‘மொதல்ல உள்ள வா. எல்லாரும் வர்ற நேரம்தான். வந்ததும் வராததுமா ‘எப்படி இருக்கே’னு கேட்கத் தோணுதா உனக்கு?” “எப்படி இருக்கே அனு? பார்த்து ரொம்ப நாளாச்சு.” ‘இப்ப கேளு ட்யூப் லைட்... மர மண்டை’ -நினைத்ததைச் சொல்லாமல் அடக்கிக் கொண்டாள். அவளை சந்தோஷத்துடன் பார்த்தான் பிரகாஷ். ஜீன்ஸ் பேன்ட் சர்ட்டில் இன்னமும் கல்லூரிப் பெண்போலத்தான் இருந்தாள். நிறம்கூட கல்யாணத்துக்குப் பிறகு இன்னும் மினுமினுப்பாக மாறியிருந்தது. அனுஷாவின் பின்னாலே நடந்து, அவள் சோபாவில் அமர்ந்ததும் அவளுக்கு எதிரே இருந்த ஓர் ஒற்றை இருக்கை சோபாவில் அமர்ந்தா…
-
- 0 replies
- 3k views
-
-
அதை தூக்காதையுங்கோ பிறகு நாரிக்குள் பிடித்துவிடும்,உந்த வயசில ஏன் உங்களுக்கு தேவையில்லாத வேலை என்று மனிசி சொன்னது சுரேஷின் மனசு சிறிது சங்கடப்படதான் செய்தது.இப்ப ஜம்பத்தொன்பது வயசு தானே என்னும் அறுபது ஆகவில்லையே என்று மனதில் எண்ணி கொண்டான்."உந்த வயசு" என்ற வார்த்தையால் அவன் பல தரம் பாதிக்கப்பட்டுள்ளான். அவனுக்கு பத்து வயது இருக்கும்,பாடசாலையால் வீடு திரும்பும் போது பக்கத்து வீட்டு அக்காவுடன் ஒரு பெடியன் கதைத்து கொண்டிருப்பதை பார்த்து விட்டு அதை அம்மாவிடம் சொல்ல,அம்மா சந்நிதானமே ஆடிவிட்டாள் உந்த வயசில உப்படியான கதைகள் ஒன்றும் தேவையில்லை என்று அதட்டி கொண்டு இருக்கும் போது அப்பாவும் அவ்விடத்திற்கு வரவே அம்மா அவரிடம் விடயத்தை சொல்ல அவர் தனது பங்கிற்கு கன்னத்தில் இரண்டு அ…
-
- 22 replies
- 3.6k views
-
-
பெங்களூரில் வீடு கட்டிக் கொண்டிருந்த போது அனுமந்தா என்ற ஒரு மனிதருடன் பழக்கம் ஏற்பட்டிருந்தது. கன்னடத்தில் ஹனுமந்தாதான். ஆனால் கட்டட வேலை செய்தவர்கள் பெரும்பாலும் தமிழர்கள் என்பதால் அனுமந்தா ஆக்கிவிட்டார்கள். பழுத்த பழத்திலிருந்து, சித்தாள் வேலை செய்யும் பிஞ்சு வரைக்கும் எல்லோருக்குமே அனுமந்தாதான். பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள். சில பெண்கள் மட்டும் அவரைக் கிண்டலடிப்பார்கள்- அனு, கண்ணு என்றெல்லாம். ‘எங்கிட்ட இதெல்லாம் வெச்சுக்காதீங்க..இழுத்து வெச்சு அறுத்து உட்டுடுவேன்...’ என்று அவர் கத்தினால் அடங்கிக் கொள்வார்கள். எதை அறுப்பார் என்று நாம் கன்ஃப்யூஸ் ஆகிவிடக் கூடாது என்பதற்காக ‘கொண்டையை....’ என்று முனகுவார். நாம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும். கட்டடத்தில் போட்டு வைத…
-
- 3 replies
- 2.6k views
-
-
உனைத்தேடி நான் வருவேன்.... சிறு கதை..... பல வருடங்களின் பின் அவன் தாய் நாட்டிற்கு போயிருந்த படியால் அவன் லண்டன் வந்த பின்னர் ஆவணி மாதம் 2003 இல் யுத்த நிறுத்தக் காலத்தில் லண்டனிலிருந்து இலங்கை சென்று பின்னர் யாழ்ப்பாணம், பின்னர் நல்லூர் என்று சென்றடைந்தான் சந்திரன். நல்லூர் திருவிழா எல்லாம் அவனின் குடும்பத்தாருடன் மிகவும் சந்தோசமாகக் கழித்துவிட்டு மீண்டும் திரும்புவதற்கு சில நாட்களே இருக்கும் சமயத்தில் தான் சிறுவயதில் பார்த்த வல்லிபுரக் கோவிலை பார்க்க ஆசைப்பட அவனின் அக்காவின் மச்சானும்( அக்காவின் புருசன்) வான் ஒன்றை ஒழுங்கு செய்து ஒரு சனிக்கிழமை எல்லோரும் புறப்படத் தயாராயினர். சிறுவயதில் தந்தையை இழந்த சந்திரன் தன்னுடன் சேர்த்து பொறுப்பில்லாத மூத்த…
-
- 4 replies
- 1.2k views
-
-
வாழ்க்கை இன்பமும் துன்பமும் நிறைந்தது தான். இன்பம் வரும்போது துள்ளிக்குதிக்கும் மனசு துன்பத்தில் துவண்டு தான் போகிறது துன்பத்தையும் ஏற்று சகித்து வாழ் பழகினால் வாழ்கை ஒரு கின்னஸ் பதிவு ஆகி விடுகிறது. இதோ ஒரு சாதனைப் பெண்ணின் கதை. தாய் தந்தையர்களுக்கு செல்லப் பெண்ணாக வளர்ந்தவள் தான் மஞ்சு என்னும் மஞ்சுளா ஆசைக்கு ஒரு அண்ணா. ..அவள் வளர்ந்து மணப்பருவம் அடையும் காலத்தில் ....மாதவனுக்கு வாழ்க்கைபட்டு ..வெளி நாட்டு ஆசை கொண்டு ...கனடாவுக்கு வந்து சேர்ந்தாள். காலபோக்கில் இரு ஆண் குழந்தைகளுக்கு தாயானாள். கணவன் ஒரு தனியார் கம்பனியில் உதவி முகாமையாளராக பணி புரிந்தான் ....வீடில் குழந்தைகளை கவனிக்க வேண்டு மென்பதாலும் மாதவன் விரும்பாததாலும் அவள் வேலைக்கு போவதில்லை. ஒரு கோடை வ…
-
- 19 replies
- 5.5k views
-
-
உன்னை அறிவேன் மாதத்தின் முதல் வாரம் என்பதால், அந்த டிபார்ட்மென்ட் ஸ்டோரில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. வித்யா டிராலியை தள்ளியபடி வர, அவள் மாமியார் சாரதா, பருப்பு பாக்கெட்டுகளை எடுத்து டிராலியில் போட்டாள். ''வித்யா... நீ போய் சோப்பு, பவுடர் எல்லாம் எடுத்து வை; நான், பூண்டு நல்லதா பார்த்து எடுத்துட்டு வரேன்,'' என்றதும், டிராலியை தள்ளிக் கொண்டு போனாள், வித்யா. வித்யாவுக்கு திருமணமாகி, மூன்று மாதம் தான் ஆகிறது. படித்து முடித்தவுடன் திருமணம் என்பதால், இன்னும் அவளுக்கு எதுவும் பிடிபடவில்லை. அமைதியாக இருப்பாள், சாரதா. வேலைக்காரியிடம் அன்பாக நடந்து கொள்வாள். மனதுக்கு தப்பு என்று தெரிந்தால், 'படபட'வென்று பேசி, கோபப்படுவாள். இதுவரை அவளிடம் அப்படி நடந்…
-
- 0 replies
- 674 views
-
-
உன்னை வாழ்த்தி பாடுகிறேன். -சண்முகம் சிவலிங்கம் எனக்கு மனம் கொதித்தது. நாங்கள் பியர் குடித்து மகிழ்ந்த வாடி வீடு இப்போது இந்தியன் வசம் ஆகிவிட்டதே என்று. எதிரே கடல். ஓங்கி எழும் அலைகள் தெரிகின்றன. அலைகளின் இரைச்சல் நிரந்தரமாக எங்கும் நிறைந்திருக்கிறது. கடல் காற்று வீசிச் சூழன்று இதோ இந்த அரசமரத்தில் மோதித் துடிக்கிறது. அரசமரத்தை ஒட்டியிருக்கிற ‘போச்’ இல் நிற்கிற ஜீப் யாருடையது? அதுதான் அந்த மேஐரின் ஜீப்பா? மேஐர் இப்போது எங்கே இருப்பான்? ‘போச்’ ஐ தொட்டிருக்கும் போட்டிக்கோவை மையமாகக் கொண்டு இரண்டு பக்கமும் ஓடும் அந்த கொரிடோர்’களில் நாம் எத்தனை முறை ஸ்ற்றூலையும் கதிரைகளையும் இழுத்துப் போட்டு கடலையும் காற்றையும் இடையில் உள்ள வெள்ளை மணல் வெளியையும் அனு…
-
- 1 reply
- 957 views
-
-
உபச்சாரம் பொ.கருணாகரமூர்த்தி அதொன்றும் வழக்கமான விஷயமல்ல. ராகுலனை செஃப்பே(முதலாளி) வலியக்கூப்பிட்டு “உனக்கின்னும் ஒரு கிழமை ஊர்லாப்(விடுமுறை) இருக்கு……… மேலதிமாய் இன்னும் ஒரு கிழமை தாறன்……. இந்த மாதம் நீ வெளியில எங்காவது போக விரும்பினால் போய்வரலாம்………… ”என்றான் “ஓ……..ஜா…..!” மனதுள் சந்தோஷப்பனி தூவ அதைத்தாங்கமுடியாத தவிப்புடன் ராகுலன் விசிலும் வாயுமாய் வீடுவந்து சேர்ந்தான். இரவுமுழுதும் மனைவி லதாவுடன் ஃப்ரான்ஸுக்குப் போவதா, இல்லை சுவிஸுக்குப் போவதா என விவாதித்தும் ஒரு தீர்மானத்திற்கும் வரமுடியவில்லை. சுவிஸில் லதாவின் அண்ணன் குடும்பமிருக்கிறது. ஃப்ரான்ஸிலோ ராகுலனுக்கு உறவுகள் ஏராளம். கடைசியில் என்றும் போல் லதாவே வென்றுவிட எண்ணிறந்த பலகாரவகைகளாலும…
-
- 8 replies
- 2k views
-
-
உமிக்கருக்கு - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... எஸ்.செந்தில்குமார், ஓவியங்கள்: ஸ்யாம் வணங்காமுடி, இரும்புச் சட்டியின் முன்பாக நீர்க்காவியும் ஊது குழலுமாகக் குத்தவைத்திருந்தான். இரும்புச் சட்டியில் எரித்துக்கொண்டிருந்த அழுக்குத் துணிகள் கருகி, புகை எழுந்தது. வணங்காமுடிக்குப் புகை மூக்கில் ஏறி இருமல் வந்தது. புகையால் அவனது கண்களில் நீர் கசிந்தது. அவனுக்கு இந்த வேலை புதிது. வணங்காமுடியின் பட்டறை ஓனர் சானாகூணா, தாமரை டாலரின் கல் துவாரங்களை ராவுவதில் மும்முரமாக இருந்தார். பட்டறையின் வாசலைத் தாண்டி அமர்ந்திருந்தார். அவருக்கு அருகில் கொக்கு பரமசிவமும், அடுத்ததாக பூனைக் கண்ணும் அமர்ந்திருந்தார்கள். தேவாரம் தாத்தா கட…
-
- 0 replies
- 1.7k views
-
-
உயர்ந்த உள்ளம் கல்யாணம் செய்து கொடுத்திருந்த மகள் வாணியை, ஆடிக்கு அழைத்து வந்திருந்தாள், ஜெயா. மகளை, நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்ததில், ஜெயாவுக்கு பெரிய நிம்மதி. சம்பந்தி, திருச்சியில் இருக்க, இளைய மகன், பெங்களூரில், சாப்ட்வேர் இன்ஜினியராகவும், பெரியவன், சென்னையில், எக்ஸ்போர்ட் பிசினஸ் செய்ய, நல்ல வசதியான குடும்பம். அந்த வீட்டில், தன் மகள் வாணியை, இரண்டாவது மருமகளாக, மணமுடித்துக் கொடுத்திருந்தாள் ஜெயா. ''வாணி... உன் மாமியார் நல்ல குணம்; 'ஆடிக்கு அழைக்கணும்; திருச்சிக்கு வந்து சீர் வைக்கிறேன்'னு சொன்னதுக்கு, 'தேவையில்லை சம்பந்தி... எதுக்கு அலையுறீங்க. நீங்க, பெங்களூரு போய், வாணிய கூட்டிட்டு வாங்க; அந்த சம்…
-
- 0 replies
- 879 views
-
-
பெரிய அலையும் சிற்றலையும் பக்கத்தில் பக்கத்தில் பயணித்திருக்க, சிற்றலை அழுதுவடிந்தது கண்டு பேரலை கேட்டது. எதற்காக அழுகிறாய் என்று. சிற்றலை சொன்னது. பாருங்கள் நீங்கள் தாம் எத்தனை பெரியவர். உங்களை போன்றோர் என்மீது சாயும்போது என்போன்ற சிறியவர்கள் அழிந்து போகிறோம். எமக்கான வேதனை உமக்கெங்கே புரிய போகிறது என்றது. பேரலை சிரித்துக் கொண்டே சொன்னது. உன்னை நீ அறிந்து கொண்டாயாயின் இத்தகு பிரச்சினை எழவே வாய்ப்பில்லை. சிற்றலை கேட்டது “நான் அலையில்லையா பின் நான் என்ன ?? என்ன அறியவேண்டும் என்கிறீர்கள்” பேரலை சொன்னது ” அலை என்பது தற்காலிக வடிவம் தான். நீயும் நானும் நீரின் எழுச்சி. சீற்றம் அடங்கிடில் நீயும் நானும் ஒன்று தான். தண்ணீர். அப்புறம் எங்கே உயர்வு தாழ்வு வரும் ??…
-
- 10 replies
- 2.4k views
-
-
உயிரின் நிழல்! "யாரு'' என்றபடி வீட்டுக்குள் இருந்து கதவைத் திறந்தபடி வயதொத்த பெண். "வா தர்மு என்ன? பத்திரிகையெல்லாம்'' அவளுக்கு ஆச்சரியம். "நாளைக்கு அம்மாவுக்கு பெயர் சூட்டு விழா... வந்துருங்க'' என்றவனின் வார்த்தையை ஒன்றும் புரியாமல் வாங்கி கொண்டவளாய். "என்னப்பா புரியலையே'' "நாளைக்கு புரிஞ்சு போயிரும்'' சொல்லிவிட்டு விறுவிறுவென்று அந்த தெருவின் அடுத்த வீடு நோக்கி நகர்ந்தான். யாருக்கும் புரியாத புதிராக இருப்பது உண்மைதான். அவன் அம்மா இறந்து பதினாறாம் நாள். காரியத்துக்காகத்தான் கூப்பிடுவான் என்றிருந்தாள். காரணம் தர்முவின் அம்மா மேகலை, எழுபத்தி ஐந்து வயதில் தடுமாற்ற நிலை ஏற்பட்டப…
-
- 0 replies
- 665 views
-
-
உயிருக்காய் தன் உயிரை........ சிறுகதை.... எம் தாய் நாட்டில் ஏதோ ஒரு மூலையில் நடந்துவிட்ட, நடந்து கொண்டிருக்கும் நடக்கப்போகும் இது போன்ற தியாகங்களால் நடந்தேறும் உண்மைச் சம்பவங்களை சிறிது கற்பனை கலந்து தந்திருக்கிறேன் ''எவ்வளவு நேரமாய் இவவை பார்த்துக்கொண்டு நிக்கிறது ஒரு நாளைக்கு ரியுசனுக்குப் போகாட்டி என்ன செத்தாபோயிடுவ'' என்று தனக்குள்ளே யாழினியைப் பேசிக்கொண்டான் ஆதவன். அந்த ஒடுங்கிய ஒழுங்கையில் இருபக்கமும் உள்ள பனை வடலியொன்றில் தனது சயிக்கிலை சாத்திவிட்டு வெள்ளை மணலில் தனது சயிக்கிலுக்கு பக்கத்தில் உட்கார்ந்தான் அவன். சிறிது நேரம் செல்ல பொறுமையிழந்தவனாய் சயிக்கிலையும் எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். சிறிது தூரம் சென்றதும் யாரோ கூப்பிடுவது கே…
-
- 6 replies
- 1.6k views
-
-
கடுங்குளிரில் வந்த வயது முதிர்ந்த ஒருவருக்கு புத்தமடத்தில் தங்க இடம் கொடுக்கப்பட்டது. அன்று இரவு கடுங்குளிர். கிழவரால் குளிரைத் தாங்க முடியவில்லை. மரத்தால் செய்யப்பட ஒரு புத்தர் சிலையை எடுத்து அதை எரித்து குளிர் காய ஆரம்பித்தார். மரம் எரியும் சப்தம் கேட்ட புத்தமடத்தின் குரு ஓடிவந்து புத்தர் சிலை எரிவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கிழவரிடம், “நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உங்களுக்குப் பைத்தியமா? தெய்வத்தையே எரித்து விட்டீர்களே” என்று கோபத்தில் கதறினார். உடனே கிழவர் ஒரு குச்சியைக் கொண்டு சாம்பலைக் கிளறினார். அவர் என்ன செய்கிறார் என்று குரு கேட்டபோது, அக்கிழவர் சொன்னார், ''நான் எலும்புகளைத் தேடுகிறேன். நான் எரித்தது புத்தரை என்றால் எலும்புகள் இருக்க வேண…
-
- 0 replies
- 727 views
-
-
ஆநதி ஒரு முன்னாள் பெண் போராளி. அவர் எழுதிய உயிரே உயிரே! என்ற நாவல் தினமணியின் கதிர் இணைப்பில் வாரம் தோறும் வெளிவருகிறது. அதை தொடர்ந்து இங்கே இணைக்கலாம் என நினைக்கிறேன். இணைக்கலாந்தானே?! நான் எழுதிய நாவல்களில், வெளிவரும் முதலாவது நாவல். சிறிலங்காப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப் பகுதியில் இதை எழுதினேன். என் போர்க்கால வாழ்க்கையில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதியிருக்கிறேனே தவிர நாவலெதுவும் எழுதவில்லை. மனசுக்குள் நாவலுக்கான வடிவங்கள் இருந்தாலும் ஆற அமர்ந்து எழுத நேரமிருக்கவில்லை. அடிப்பெட்டிக்குள் ஒளித்து வைத்திருந்த இந்நாவலை அவனிக்குத் தர இப்போதும் எனக்குத் தயக்கம்தான். காரணம் நான் எழுத வேண்டிய கதைகள் இன்னும் இருக்கின்றன. அதற்க…
-
- 29 replies
- 4.1k views
-
-
உயிர் சோறு - சிறுகதை சிறுகதை: கணேசகுமாரன், ஓவியங்கள்: ஸ்யாம் சரவணனிடம் தலையசைத்து விடைபெற்று வீதியில் இறங்கினேன். நல்ல வெயில். இப்படிப் பெரு வெளிச்சமாய் மட்டும் வந்து நம் உடல் முழுவதும் தழுவும் வெயிலை நல்ல வெயில் என்றுதானே சொல்ல வேண்டும். ஆனால் சுள்ளென்று தோல் சுட்டு எரிக்கும் வெயிலுக்கும் நாம் நல்ல வெயில் என்றுதான் சொல்கிறோம். நல்ல என்ற சொல்லுக்குத் தரும் அழுத்தத்தில் அர்த்தமே மாறிப்போய்விடுகிறதுதானே. வெயிலில் ஏது கெட்ட வெயில். கையில் விஜி கொடுத்தனுப்பிய நகைகள் அடங்கிய பை அப்படியே எந்த மாற்றமும் இன்றி இருந்தது. நான் வாழ்ந்த வாழ்க்கை பற்றி சரவணனுக்குத் தெரியும். நகைகளை என்னிடமே வைத்துக்கொள்ளச் சொல்லிவிட்டான். பணம் தருகிறேன்; பின்பு உனக…
-
- 0 replies
- 3.8k views
-
-
உயிர் நண்பன் ஒரு ஊரில் இரண்டு உயிர் நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் அவர்கள் இருவரும் பாலைவனத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் ஒரு விஷயத்தில் வாய்ச்சண்டை ஏற் பட்டது. அப்போது ஒருவன் மற்றொருவனின் கன்னத்தில் அறைந்து விட்டான். ஆனால் அறை வாங் கியவன் அதற்கு கோபப் படாமல், அமைதி யாக இருந்தான். பின் சற்று தூரம் சென்று அமர்ந்து மணலில் “இன்று என் உயிர் நண்பன் என்னை அறைந்துவிட்டான்” என்று எழுதினான். அதைப் பார்த்த மற்றொருவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்கள் இருவரும் மீண்டும் நடந்தனர். சிறிது நேரத்துக்கு பிறகு அவர்களுக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. தூரத்தில் ஒரு தண்ணீர் ஊற்று இருப்பதை இருவரும் கண்டனர். அங்கு…
-
- 1 reply
- 1.8k views
-
-
"உவனொரு இந்தியாக்காரன். சிறிலங்கன் தமிழ் என்று பொய் சொல்லி அகதித் தஞ்சம் கேட்டிருக்கிறான். " என்று பூலோகத்தார் காட்டிய பெடியன் எங்களைக் கடந்துபோய்க் கொண்டிருந்தான். அவனைப்பார்த்தால் புதுசு போலத்தான் இருந்தது. ஒன்றிரண்டு தடவைகள் எங்களைப் பார்க்கவும் செய்தான். அவன் பார்த்தபோதெல்லாம் பூலோகத்தார் உம் என்று முறைச்சுப்பார்த்தார். அவர் சொன்னால் சரியாகத்தானிருக்கும். பிபிசி என்றும் வீரகேசரி என்றும் விடுப்பு டொட் கொம் என்றும் முதுகுக்குப்பின்னால் கூப்பிடப்படுகிற பூலோகத்தார் இந்தமாதிரிக் கதைகளை விரல் நுனியில் வைத்திருப்பார். அதை அகப்படுகிற நாலைஞ்சு பேருக்குச் சொல்லாமலும் விடமாட்டார். அப்பிடியாப்பட்ட ஒவ்வொருக்காவும் "எப்பிடித்தெரியும்?" என்று நானும் கேட்காமல் விடுவதில்லை. எனக்குத் …
-
- 9 replies
- 1.7k views
-
-
உயிர்க்கொல்லிப் பாம்பு - நோயல் நடேசன் கடல் சூழ்ந்த மல்லிகைத்தீவில் வடமேல் பருவக்காற்றால் மழை மேகங்கள் கருக்கட்டி இடியுடன் பயங்கரமான மழையும் பெய்தது.மக்களுக்கு மழைக்காலம் எப்பொழுதும் ஆனந்தமானது. பத்துமாதம் எரிக்கும் கோடை, இரண்டு மாதங்கள் விராடதேசத்தில் ஒளிந்த பாண்டவர்களாக தலைமறைவாகும். வற்றிய குளங்கள், நிலம் தெரியும் கிணறுகள், புழுதி சிந்தும் நிலங்கள் எல்லாம் நெடுநாளாக தாகத்துடன் பாலைவனத்தை கடந்துவந்த வழிப்போக்கனைப்போல் நீர் வேண்டிக் காத்திருந்தன. வங்காள விரிகுடாவில் காற்றமுக்கம் என்று வானொலியில் கேட்டபோது அசட்டையாக இருந்துவிட்டார்கள். மழை, வேறு இடங்களுக்கு காற்றால் எடுத்து செல்லப்படுவதை பலவருடங்களாக அறிந்தவர்கள் அவர்கள். ஏற்கன…
-
- 8 replies
- 1.7k views
-
-
உயிர்தரிப்பு – ப.தெய்வீகன் 01 மூண்டு அணைந்த காட்டுத்தீயினால் எரிந்த பெருமரங்களின் எச்சங்கள் தூரத்தில் தெரிந்தன. கம்பீரமற்ற தரவை நிலத்தைக் கிழித்து பல கிலோ மீற்றர்களுக்கு நீண்டிருந்த புறநகர் நெடுஞ்சாலையில் நாங்கள் பயணித்தோம். மெல்பேர்னின் மேற்குத் திசை வழியாகச் சென்று பண்ணைப்பகுதிகளை தொட்டுவிட்டால், நாம் செல்லும் இடம் வந்துவிடுமென வரைபடத்தில்ஏற்கனவே பார்த்திருந்தேன். வாகனத்துக்குள்ளிருந்த மூன்று பேரையும்விட பேரச்சம்தழும்பிக்கொண்டிருந்த என்னுள் இறுக்கம் கூடியது. கண்ணாடி வழியாகத் தெரியும் பூமியை பார்க்கத்தொடங்கினேன். அடர்பசுமை நிறைந்த பண்ணை நிலங்கள் தெரியத்தொடங்கின. அடுத்து வந்த வயல்களில் அறுத்த புல்லுக்கட்டுகள் பெரும் எண்ணிக்கையில் சுர…
-
- 0 replies
- 962 views
-
-
உயிர்த்துளியின் ஓரத்தில் கண்களை மூடிக் கொண்டேன். மெல்லிய இளங்காற்று என் மேனியைத் தழுவிட, புலன்களால் இனங்காணமுடியாத ஒரு அமானுஸ்ய உணர்வு என்னை ஆக்கிரமித்தது. கவிந்த இமைகளுக்குள் நிலைத்த விழிகளுக்குள் தவிப்பும், தாகமும் விரிந்தன. மூடிய கயல்களின் ஓரங்களில் மெல்லிய ஈரக்கசிவு. எங்கோ பசுமையைச் சுமந்தபடி என் வரவிற்காய் ஏங்கியபடி காத்திருப்பதாய், எனக்குள் உணர்த்தியபடியே, புன்னகையை வீசி என்னைத் தனக்குள் ஈர்த்தது பாசம். அக்கினித் தகிப்பில் உடலும், உள்ளமும் எரிந்தன. பனிக்கரங்கள் அணைத்துக் குளிர்ச்சி தரும் வெளிகளில் இருக்கும் என்னிருப்பின் உணர்வுகள் காலநிலைகளைத் தாண்டி முரண்பட்டுக் கிடக்கின்றன. அடையாளங் காணப்படாத பிணங்களைப் போன்று எண்ணங்கள் அவலமுறு…
-
- 5 replies
- 1.9k views
-
-
புலிகளின் குரல் வானொலியில் சிந்திக்கத்தூண்டும் வரலாற்று நாடகம் "உயிர்த்தெழுகை". நாடகத்தை கேட்கும் பொழுது நமது அன்றாட வாழ்க்கையில் நடைபெறுகின்ற நிகள்வுகள்போல இருக்கின்றன. சில நேரங்களில் மயிர்கூற் செரியவும் வைக்கின்ற ஓர் அற்புத நாடகம். கேட்கத்தவறாதீர்கள் உறவுகளே..
-
- 1 reply
- 1.4k views
-
-
உயிர்ப்பு கட்டிலின் விளிம்பிலிருந்து தொங்கிய விரிப்பை இழுத்து உள்ளே செருகினான். அந்தச் சிறிய அசைவில் கண் விழித்த அம்மா, மெல்ல தனது சுருண்ட உடலை நகர்த்தி அவனது சீர் செய்யும் நடவடிக்கைக்கு இடம் கொடுத்தாள். அவளைப் பொறுத்தவரையில் நோயில் படுத்ததிலிருந்து தன் மகன் மாதவனுக்கு, தான் ஒரு பாரமாக ஆகிவிட்டோம் என்ற எண்ணம் விழுந்து விட்டது. ஆனால், இது குறித்த கவலை எதுவுமில்லாமல் மாதவன் பேச்சில் கிண்டலும் உற்சாகமும் குறையாமல் வளைய வந்து கொண்டிருக்கிறான். இது அவனுடைய இயல்பு. இந்த உற்சாகமும் அடுத்த பொழுதைப் பற்றிய கவலையின்மையும்தான் அவனை மட்டுமல்ல, அவன் தாயாரையும், மற்றும் இரண்டு…
-
- 1 reply
- 1.6k views
-
-
உரத்துக் கேட்கும் மௌனம்: சக்கரவர்த்தி ஓவியம் எஸ். நளீம் மெக்சிக்கோ வளைகுடாவில் உருவாகிய தாழ் அமுக்கம் மூன்று நாட்களுக்கு முன்பு அலபாமா பகுதிக்குள் பெரும் புயலாக மாறிக் கடும் சேதத்தை ஏற்படுத்தியிருந்தது. கரோலினா கரையோரமாக நகரும் டகோடா புயல், நியூயோர்க் மாநிலத்தைக் கடந்து, ஒன்டாரியோவில் எங்கள் பகுதியூடாகச் சற்று வலுவிழந்து வடபுலம் போகப் போகிறது. ரொறன்டோவில் பலத்த காற்றுடன் கூடிய பெருமழைப் பெய்யுமென எச்சரிக்கப்பட்டிருக்கிறோம். சிறிதான காற்றுடன் காலையில் இருந்தே தூறல் தூவிக் கொண்டிருக்கிறது. சிகப்பியை எண்ணித்தான் கவலையாக இருக்கிறது. நான்கு நாட்களுக்கு முன்புதான் கோதுடைத்துக் குஞ்சுகள் வெளிவந்தன. அவள் கூடு சிறு காற்றைத் தாங்கும். டகோடா போன்ற பெரும்புயலை எதிர்த்த…
-
- 1 reply
- 740 views
-
-
உரு – ப. தெய்வீகன் 1 மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு முன்பாக உள்ள ஒழுங்கை வழியாக நன்றாக உள்ளே சென்றால் ஒரு காளி கோயில் வரும். பெரிய சடைத்த ஆலமரத்துக்குக் கீழ் சிறியதொரு கோயிலாக கனகாலமாக அந்தக் கோயில் அங்குள்ளது. நவாலி வேலக்கை பிள்ளையார் கோவில் கொடியேறும் காலப் பகுதியில் அந்தக் கோயிலுக்கு காவடி எடுக்க நேர்த்தி வைப்பவர்களை இந்தக் காளி கோவிலுக்கு அழைத்து வந்து இங்கு தான் முள்ளு குத்துவார்கள். பின்னர் அவர்களை ஆடி ஆடி சங்கரப்பிள்ளை வீதிக்கு அழைத்துச் சென்று லோட்டன் வீதி வழியாக வேலக்கை பிள்ளையார் கோவிலுக்கு கூட்டிப் போவார்கள். எனக்கு பத்து வயதாக இருக்கும் போது இந்தக் காளி கோவிலில் தான் முதல் தடவையாக காவடிக்கு முள்ளுக் குத்துவதைப் பார்த்தேன். அன்றைய தினம் வேலக…
-
- 1 reply
- 1.1k views
-