Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. தாய்வாசம் - சிறுகதை யுவகிருஷ்ணா, ஓவியங்கள்: ம.செ., மூணு வயசுக் குழந்தைகிட்டே உங்களுக்கு ஏன் இவ்வளவு வன்மம் மன்னி?'' - பாரதி, ஆச்சரியத்துடன் கேட்டாள். ''ஆமாண்டியம்மா... ஷைலு எனக்குச் சக்களத்தி. அவ மேலே எனக்குப் பொறாமை. போடி... வேலையப் பார்த்துக்கிட்டு. உனக்கு ரெஸ்ட் கொடுக்காம எப்போ பார்த்தாலும் 'பாரதிம்மா... பாரதிம்மா...’னு ஓடிவந்து மடியிலே படுத்துக்கிட்டுத் தொல்லை கொடுக்குறாளேனு உன் மேல கரிசனப்பட்டா... வன்மமாம், வன்மம்!'' - அலுத்துக்கொண்டே சொன்னாள் புஷ்பவல்லி. டி.வி. சீரியல்களில் வரும் பெண்கள் மாதிரி புஷ்பவல்லி அப்படியொன்றும் கொடுமைக்காரி கிடையாது. அவளுடைய நாத்தனார் பாரதி, 10 ஆண்டுகள் கழித்து கர்ப்பமாக இருக்கிறாள். அதனால் 'எப்போதும் பெட் ரெஸ…

  2. லண்டன்: பல முகங்களில் ஒரு வரவேற்பு! விமானப் பயணத்தின்போது இறக்கை பக்கவாட்டிலுள்ள ஜன்னலோர இருக்கைகளைத் தேர்ந்தெடுப்பது என் வழக்கம். இயற்கையில் தனக்கு மறுக்கப்பட்ட ஆற்றல்களைத் தன்னுடைய அசாத்தியமான முயற்சிகளால் எட்டிப்பிடிப்பதில் மனித குலம் காட்டிவரும் இடையறாத யத்தனத்துக்கான அபாரமான குறியீடாக விமானத்தின் இறக்கைகள் தோன்றுவது உண்டு. உச்சத்தில் நிற்கு…

  3. அமைதிப் பேய்கள்.... ஆறுமுகத்தார் வலுவேகமாகச் சந்தையால வந்துகொண்டிருந்தார்.ஆளுக்கு மூச்சிரைத்துக்கொண்டிருந்தது.சைக்கிளின்ர வலதுகால்ப் பெடல்க் கட்டையின்ர மிதியிலை இருந்த இறப்பர்க் கட்டையிலை ஒண்டு எங்கையோ கழண்டு விழுந்துபோய்விட ஒரு கட்டையும் நடுவில இருந்த அச்சுக் கம்பியிலும்தான் இவ்வளவு நாளும் நிண்டுகொண்டிருந்தது மிதி...போன மாசம் மற்ற இறப்பக் கட்டையும் கழண்டுபோய்விட இப்ப உழண்டியாய் இருந்த நடுக்கம்பி மட்டும்தான் மிதியிலை மிச்சமாக இருந்தது...போள்சும் தேஞ்சு கிறிஸும் இல்லாமல்க் காஞ்சுபோய்க் கிடந்த அந்தச் சைக்கிளை மிதி இருக்கும்போது ஓடுறதெண்டாலே சந்தைக்குப்போகிற அரை வழியிலேயே சாப்பிட்டது செமிச்சுப்போய் திரும்பப் பசிக்கும்...இப்ப மிதி கழண்டு விழுந்துபோய்விட கப்பிபோல வழுக்…

  4. கோபிகா ஏன் அப்படிச் செய்தாள்? வவுனியா நகரை எங்களின் கார் நெருங்கிக் கொண்டிருந்தது. நாட்டு நிலவரங்களை எங்களோடு துணையாக வந்த சிவா களைப்பில்லாது கொழும்பிலிருந்து சொல்லி வந்துகொண்டிருந்தான். பின்னணியில் சக்தி எப்ஃ எம்மில் ‘வேணாம் மச்சான் வேணாம்’ என்கிற பாடல் போய்க் கொண்டிருந்தது. காதலாய் இருந்தாலென்ன வீரமாய் இருந்தாலென்ன தோற்றுப் போனவர்களின் கதைகளின் உள்ளடுக்குகளில் துயரமே ததும்புகிறது. சிவா பேசிக்கொண்டிருக்கும் விடயங்கள் தற்போதைய மோஸ்தரில் கறுப்பிலா வெள்ளையிலா அல்லது பழுப்பிலா வருமெனத் தெரியாது நான் குழம்பிக்கொண்டிருந்தேன். ஒரு காலத்தில் சிவப்பும் மஞ்சளுமான வர்ணங்களைத் தெரிவு செய்து சிவா ஒரு பெரும் கனவுக்காய்த் தன்னையே தாரை வார்த்துக் கொடுத்தும் இருக்கின்றான். சிவாவும் ந…

  5. விரக்தியே வாழ்வாய்போன விதுசன் விதுசனிற்கு இப்பொழுது வயது 14 .கடந்த வருடம் வன்னியில் தன் 9 வயது தம்பியுடன் துள்ளித்திரிந்த பள்ளிமாணவன்தான் இவனும். வன்னியில் போரின் இறுக்கம் அதிகரித்த காலம் தைமாதம் ஒரு நாள்பொழுதில் எங்கிருந்தோ வந்து வீழ்ந்த செல் குண்டொன்று அவனது தாயாரை பலியெடுத்துப் போனது. தாயின் இழப்பு அவனது வாழ்வில் வீழ்ந்த முதலாவது இடி. தாயாரை இழந்தாலும் தந்தையின் அரவணைப்பில் தாயின் சேகத்திலிருந்து மெல்ல மீண்டெழுந்து கொண்டு வந்தாலும் கொடிய யுத்தம் கூடவே துரத்தியது. வன்னியின் வழமான வாழ்ககைகைள் அத்தனையையும் ஒரு நொடிப்பொழுதில் இழந்துவிட்டு ஓடிய அத்தனை மக்களுடனும் விதுசனின் குடும்பமும் ஓடிக்கொண்டிருந்தது.விதுசனும் தந்தையின் கையை பிடித்தபடி மறுகையால் தம்பியை…

    • 13 replies
    • 2.7k views
  6. முரண்- கோமகன் 2010 “ஹொப்பித்தால் ட்ருசோ”வின் பிரதான வாயிலில் இருந்து உள்ளே செல்லும் நீண்ட சாலையில் காலைப்பனி மூடியிருந்தது. அதன் இருமருங்கிலும் நின்றிருந்த பைன் மரங்கள் இலைகளைத்துறந்து துக்கம் கொண்டாடிக்கொண்டு இருந்தன. அதன் கிளைகளில் இருந்த மொக்குகளில் பனி உறைந்து காலை வெளிச்சத்தில் பளபளத்தது. இருபக்கமும் பனிச்சொரியல் மூடியிருக்க நடுவே வீதி சுத்தமாக்கப்பட்டு கருஞ்சாரையாய் நீண்டு சென்றது. ஆங்காங்கே பனியில் சறுக்காமல் இருக்க உப்புத்தூவப்பட்டிருந்தது. “இந்த மரங்களே இப்படித்தான் வசந்தகாலத்தில் இலைகளால் நிறைந்து அத்தனை பறவைகளையும் தமக்குள் வைத்துக்கொண்டு ஒரேயடியாக சந்தோஷத்தைக் கொண…

    • 14 replies
    • 2.7k views
  7. அன்றைக்குச் சந்திரனுக்கு மகளின் பள்ளிக்கூடத்திலிருந்து, ஒரு தொலைபேசி அழைப்பொன்று வந்தது. அவனது மகளின்,பள்ளிக்கூட அதிபர் தான் ஏன் மகள் ஒரு கிழமையாப் பள்ளிக்கூடம் வரவில்லை என விசாரித்தார். அவள், வயசுக்கு வந்து விட்டதால், மூன்று நாட்கள் பாடசாலைக்குப் போகாமல் தாய்க்காரி நிப்பாட்டியிருந்தா. வாற திங்கட்கிழமை, கட்டாயம் மகளைப் பள்ளிக்கூடம் அனுப்புகின்றேன் என்று அதிபருக்குச் சொல்லி வைத்தான். பிள்ளையின்ர சாமத்திய வீட்டைப் பெருசாச் செய்து போட வேணும், எண்டு மாமி சொன்னது கேட்டது. சரி, உங்கட விருப்பப் படி,செய்யுங்கோ! ஆனால்,ஆகப்பெரிய ஆரவாரமெல்லாம், செய்யக் கூடாது. இப்பவே சொல்லிப் போட்டன். முதல்ல, அவளைப் பள்ளிகூடத்துக்கு, அனுப்பி விடுங்கோ. பிரின்சிப்பல், ஏன் வரேல்லை எண்டு அடிச…

  8. இலுப்பைப் பூ ரகசியம் இலுப்பைப் பூ ரகசியம் தமயந்தி ப ண்ருட்டி வழியாகப் போகும்போது காற்றில் சிறகு கட்டி அலைந்த இலுப்பைப் பூவின் வாசம் ஏனோ அமுதாவை நினைவு படுத்தியது. அமுதாவும் நானும் அந்தப் பெண்கள் விடுதியைவிட்டு வெளியேறியது ஒரு துரதிர்ஷ்டம் சார்ந்த சுவாரஸ்யமான அனுபவம். ஓர் அதிகாலையில், எங்கள் அறைக்குள் இருவர் நின்றிருந்தனர்.அன்றைக்கு நான் 12 மணிக்கு மேல் தூங்கியதாக ஞாபகம். எங்கள் அறையிலிருந்த காமாட்சிதான் மு…

  9. மூங்கைப் பெருந்தவம் - வரவணை செந்தில் ஓவியங்கள் : வேல் அது, பூனைக்கண்ணு பாறையின் கீழ் வந்து முடிந்த 15 அடி புதுதார்ரோடு. அதன் இறுதியில், ‘சாலை ஒப்பந்த விபரம்’ என்ற தலைப்பில் `புதுச்சின்னாம்பட்டி முதல் மயானம் வரை - 990 மீட்டர் சாலைப்பணி’ என்று குறிக்கப்பட்ட அறிவிப்புப் பலகை நடப்பட்டிருந்து. கடல் மட்டத்திலிருந்து 105 மீட்டர் உயரத்தில் இருந்தது பூனைக்கண்ணு பாறை. அதன்மீது ஏறிப் பார்த்தால் நேர் மேற்கே ராக்காச்சி கரடு தெரியும். அந்தக் கரடை ராக்காச்சியின் தலைமாடாகக்கொண்டால், பூனைக்கண்ணு பாறைதான் கால்மாடு. கால்பரப்பிக்கிடக்கும் அவளின் தனங்களாக வடக்கே ‘பூதல் நத்தம்’ கிராமமும் தெற்கே’ பீமராவ் அருந்ததியர் காலனி’யும் போதுமான இடைவெளியுடன் சற்று சமமான உயரத்தில் இருந…

    • 2 replies
    • 2.7k views
  10. டேய் தம்பி எப்படியிருக்கிறாய் என்று என்னுடைய முதுகை தட்டினார் ஒருத்தர். திரும்பி பார்த்தேன். எங்கன்ட கந்தர் அண்ணே எப்படி சுகம். கனகாலம் கடைப்பக்கம் காணவில்லை, எங்கே போனயிர்ந்தனீங்கள்?நான் ஊருக்கு போய்விட்டு வந்தனான் உனக்கு சொல்லி போட்டு போகலாம் என்றுதான் இருந்தனான் ஆனால் டிரவல்ஸ்காரன் மலிவாக ஒரு டிக்கட் போட்டுத்தாரன் உடனே வெளிக்கிடுங்கோ என்றான் அதுதான் உனக்கு சொல்லாமல் வெளிகிட்டனான் கோபிக்காதையடா.... எப்படி யாழ்ப்பாணம் இருக்கு என்றதுதான் தாமதம் ,மனுசன் சிட்னியிலிருந்து வெளிக்கிட்டு திரும்பி சிட்னிக்கு வந்த கதை முழுவதும் ஒன்றும்விடாமல் சொன்னார்.அண்ணே நே ரம் போகுது பிறகு கதைப்போம் என்று இடைக்கிடை நான் சொன்னாலும் மனுசன் என்னை விடவில்லை,முழுக்கதையும் சொல்லி முடித்துவிட்டா…

    • 13 replies
    • 2.7k views
  11. முற்குறிப்பு இது ஒரு கதை அல்ல. வரலாற்று சம்பவத்தின் மீட்டல். எழுதியவர் பொன் குலேந்திரன் (கனடா) https://eluthu.com/kavithai/352788.html உயர் மட்டத்தில் ஒரு கொலை நடந்தால் அது மக்களினதும் ஊடகங்களினதும் கவனத்தை ஈர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை 1951 ஆம் ஆண்டு கொழும்பு 3, பம்பலபிட்டியாவில் நடந்த கொலை பிரபல கிரிகெட் விளையாட்டு வீரரின் மனைவியின் கொலை. இலங்கையிலும் பல கொமன்வேல்த் நாடுகளிலும் பெரியளவில் இந்த கொலை பேசப்பட்டதுக்கு முக்கிய கரணம், கொலை செய்த முதல் குற்றவாளி மாகாதேவன் சதாசிவம் என்ற பிரபல கிரிக்கெட் வீரர். கொமன்வேல்த் நாடுகளுக்கு கிரிக்கெட் விளயாட்டை அறிமுகப் படுத்தியவர்கள் பிரிட்டிஷ்காரர் ஒரு காலத்தில் இலங்கை, மலேசிய, சிங்கப்பூர…

    • 19 replies
    • 2.7k views
  12. மழை நண்பன் - சிறுகதை ஹேமி கிருஷ், ஓவியங்கள்: ஸ்யாம் மழை எப்போது நிற்கும்? பிரியாவுக்குச் சொல்ல முடியாத சங்கடம். வாசலில் நின்றபடி வானத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். இந்த மழையில் எப்படிப் போவது? சத்யாவிடம் சொன்னால் கோபித்துக்கொள்வான். 'ஏன் நான் வரலையா? நீயெல்லாம் அவ்ளோதான்!’ என்பான். ''15 நாள் இம்ப்ளிமென்ட் புரொகிராம். பெங்களூர் வர்றேன். உன் அட்ரஸ் சொல்லு'' - மாலை வேளை ஒன்றில் அலைபேசியில் அழைத்தான். ''முதல்ல உன் ஆபீஸ் எங்கேனு சொல்லு!'' ''பெலந்தூர்ல!'' ''அய்யோ நான் ஒயிட் ஃபீல்ட்ல இருக்கேன். அது ரொம்பத் தூரம். நீ அட்ரஸ் கண்டுபிடிக்கிறது கஷ்டம். ஒரு காமன் பிளேஸ்ல மீட் பண்ணலாமா?'' பெங்களூர் வந்ததும் சத்யா திரும்பவும் அழ…

  13. ஒருபோதும் தேயாத பென்சில் - சிறுகதை வண்ணதாசன் “வீடு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு'' - உட்காரக்கூட இல்லை. வீட்டுக்குள் வந்ததும் ராஜேஸ்வரி சொன்னாள். ''கீச்சுன்னு கதவு திறந்து மூடின சத்தம்கூட நிக்கலை. அதுக்குள்ள எப்படி ராஜி வீடு பிடிச்சுப்போச்சு?'' என்று அவளை உட்காரவைக்கப் போவதுபோல், தன் பக்கம் இழுத்துச் சேர்த்துக்கொண்டு சந்திரா நின்றாள். சந்திராவுக்கு ஏற்கெனவே பெரிய கண்கள். இன்னும் கொஞ்சம் பெரிதாகி அவை ராஜியை அகலமாகப் பார்த்தன. ''பாருங்க அணில் குஞ்சு மாதிரியே தோள்ல தொத்த ஆரம்பிச்சுட்டா'' என்று ராஜி என்னிடம் சொன்னபோது பிடித்து இருந்தது. ஓர் அணிலாக சந்திராவை நினைத்துப்பார்க்கச் சந்தோஷமாக இருந்தது. நரை விழ ஆரம்பித்து இருந்த 60 வயது அணி…

  14. Started by kuruvikal,

    சரவணனிற்கு தவறுதலாய் தான் மண்டை உடைந்தது, இருந்தும் தான் தள்ளியதால் தான் உடைந்தது என்ற கவலை கலந்த பதட்டம் கலாவிற்குள். 999 ற்கு அடிக்கச் சென்றாள். "இஞ்ச கலா அதொன்டும் பெரிய காயம் இல்லை பேசாமல் விடும், இப்ப அவங்களுக்கு கடிச்சால் ஆயிரம் கேள்வி கேட்டுக்கொண்டிருப்பானுகள். அவனது பேச்சைக் கேட்கையில் தலைக்கேறின வெறி முற்றாய் முறிஞ்சிருக்க வேணும் என்ற எண்ணம் கலாவிற்குள் எழுந்தது. சரவணனின் பேச்சையும் மீறி 999 ற்கு அடித்து அம்புலன்சிற்கு சொல்லிவிட்டு வீட்டுச்சாவி மற்றும் ஏனைய முக்கிய பொருட்களை எடுத்து கைப்பையில் போட்டுக்கொண்டு அம்புலன்ஸ் வர போவதற்கு தயாரானாள். சரவணனின் தலையில் இருந்து கசிந்து கொண்டிருந்த இரத்தத்தை நிறுத்த வெள்ளைத்துணியினால் கட்டி தன்னால் முடிந்த முதலு…

    • 5 replies
    • 2.7k views
  15. Started by putthan,

    நான் சிறுவனாக இருக்கும் பொழுதும் சரி,இளைஞனாக இருந்த காலங்களிலும் சரி கோயில் மணியகாரர்(தர்மகர்த்தா) என்றால் அவர்கள்தான் கோயிலை கட்டியவர்கள் என்று எண்ணியிருந்தேன்.அதாவது அந்த கோயிலுக்கு சொந்தகாரர்கள் அவர்கள் தான் என நினைத்திருந்தேன்.அவர்களின் செயற்பாடும் அப்படித்தான் இருக்கும் .ஜயரைவிட அவர்கள்தான் பெரியமனிதர்கள் என்றிருந்தேன்.பெற்றோரும் சொல்லிச்சினம் பரம்பரைபரம்பரையாக அவர்கள்தான் கோயில் சொந்தக்காரர்கள் அதுதான் அவர்களுக்கு முதல்மரியாதை செய்யிறவர்கள் என்று. தேர் திருவிழா போன்ற விசேட நாட்களில் இவர்களுக்குதான் முதல்மரியாதை கொடுக்கப்படும்,அதாவது தெப்பை அணிவித்து மேளதாளத்துடன் கோயிலை சுற்றிவருவார்கள்.அவர்களின் முழுக் குடும்பம்மும் அதில் பங்குபற்றும் ,அடுத்த வாரிசு யார் என்பத…

  16. கடவுள் கடவுள் ம.வே.சிவகுமார் இ ரண்டு நாட்களாகவே அந்தக் கருப்புப் பூனை இரவில் நான் உறங்கிக்கொண்டு இருந்த அறைக்கு வந்துகொண்டு இருந்தது. இருட்டில் தொப்பென்ற சப்தத்தில் கனவு கலைந்து நான் திடுக்கிட்டு கண் விழிப்பேன். காலடியில் மெத்தென்று பூனை இடறும். இன்னதென்று புரியாத கலவரத்தில் சுவரில் துழாவி விளக்கைப் போடுவேன். வெளிச்சம் பழகுவதற்குள் பூனை கட்டிலுக்கடியே போயிருக்கும். பயத்தில் வியர்க்கும். ஒரு சந்தேகத்தில் கட்டிலுக்கடியே குனிந்து பார்ப்பேன். அந்தக் கருப்…

    • 1 reply
    • 2.7k views
  17. நோக்கியாவும் கயல்விழியும்! நெல்சன் சேவியர் இந்தக் கதையை நான் என்றுதான் ஆரம்பிக்க வேண்டும் என்று எனக்கும் ஆசை. ஆனால் இந்தக் கதையில் வரும் நான் என்பது என்னைக் குறிக்கும் என்பதாலும் என்னை உங்களுக்கு முன்பே தெரியும் என்பதும்தான் என்னுடைய பிரச்சினை. மேலும் அடுத்து நிறையக் கதைகளை நான் எழுத வேண்டி இருப்பதால்தான் யோசிக்கிறேன். பரவாயில்லை, நான் என்றே சொல்கிறேன். ஏனெனில் இது என்னுடைய கதை. நான்தான் அதை சொல்லியாக வேண்டும். இந்தக் கதை முடிந்ததும் நீங்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பீர்கள் என்பதுதான் கவலை. இப்படிக் கவலைப்பட்டால் நான் எப்படி எழுத்தாளன் ஆக முடியும்? நான் உங்களுக்குத் தெரிந்த இளைஞன்தான். என்னுடைய வயது ஒரு நல்ல வயதுதான். என்னுடைய பிரச்சினையே நான் காதலிக்காமல் போய்…

  18. கோயில் பூசை முடிந்தவுடன் சந்நிதானத்தை ஒரு வலம் வந்து விட்டு நேரடியாக பிரசாதம் வழங்கும் இடத்திற்கு சென்று விட்டான் சுரேஷ்.இவன் அங்கு செல்லும் முன்னே பலர் முன் கூட்டியே வரிசையில் பிரசாதம் பெறுவதிற்காக நின்றதனால்,கடசியில் போய் நின்று கொண்டான்.ஒரு சில நிமிடங்களிள் பக்தர்கள் அதிகமாகவே சுரேசிற்கு பின்னாலும் வந்து சேர்ந்து விட்டார்கள். "அட என்ன சுரேஷ் கனகாலம் காணவில்லை எப்படி சுகம்" என்று ஒரு கதையை போட்டபடியே வரிசையில் நடுவில் புகுந்து கொண்ட கந்தர்.தனக்கு பின்னால் ஏனையோர் நிற்கிறார்களே என்ற எந்தவித கவலையும் இன்றி பத்தும் பலதும் அலச வெளிகிட்டார். ஆமை வேகத்தில் தான் வரிசை நகர்ந்து கொண்டிருந்தது. ஓமந்தையில் இருந்து ஒபாமா வரை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார் கந்தர்.ஒமந்தையில…

  19. Started by nunavilan,

    ஹங்கிப்* பெண் ஹெலன் ஃபோர்ப்ஸ் தமிழில் : கொற்றவை சமயலறை கடிகாரத்தில் ஐந்து மணி அடித்தது. சிமெண்ட் தரை வேயப்பட்ட சலவையறையில், களைப்பாய் இருந்த அந்த சலவைக்காரப் பெண் தன் தோள்களை வளைத்து, உடம்பை முறுக்கி எழுந்தாள், துணிகள் மீது தண்ணீர் தெளித்து வழக்கமான தனது பணியோடு அன்றைய நாளையும் தொடங்கினாள். கடைசி ஈரத் துணியை மடித்து துணிக் கூடைக்குள் வைத்து அடுக்கி முடித்ததும் ஒரு அகலமான துருக்கித் துண்டால் கூடையை மூடி மேஜையின் கீழ் தள்ளிவிட்டு, மேல்மாடிக்குச் சென்றாள். அன்றைய தினக் கூலியைக் கொடுக்க திருமதி. அட்வுட் காத்திருந்தார்; சிறந்த வீட்டுப் பராமரிப்பாளரான அவர் தான் நியமித்த ஒவ்வொரு பணியாளருக்கும் தன் கையால் கூலி கொடுப்பதை தன் கடமையாகக் கொண்டிருந…

    • 2 replies
    • 2.7k views
  20. காட்டாற்றங்கரை அத்தியாயம் 1 கண்களையும் மனசையும் இறுக வைக்கிற வெய்யில். அறுவடை ஓய்ந்த வயல்களையும் பற்றைக் காடுகளையும் ங்காங்கே தனித்துநின்ற மரங்களையும் ஏற்கனவே கோடை மேய்ந்து விட்டிருந்தது. கண் எட்டிய தூரம்வரைக்கும் வரண்டு கிடந்த வெளியெங்கும் சுடு புழுதி செம் பருந்துகளாய்ச் சுளன்றது. காய்ந்த புதர்கள் கானல் நீரில் அசைந்து முள்ளம் பன்றிகள் போல ஓடின. முதலையின் முதுகுபோலப் பாழாய்க் கிடந்த களர் நிலத்தில் ஒரு மாடு விழுந்து கிடந்தது. அந்த மாட்டின் நோக்கி அலகை நீட்டியபடி காகம் ஒன்று காத்திருந்தது. உலர்ந்து வெடிக்கும் காட்சிகளெல்லாம் ‘ஈழத்தின் திணை பாலை’ என்கிற விவாதத்தையே ஞாபப்படுதியது. பாலை நிலத்துக்கு தனது குடி மக்களைத் தாங்கி வைத்திருக்கப் போதிய…

    • 13 replies
    • 2.7k views
  21. ஸ்டாக்ஹோல்ம் செல்வதற்கான விமானம் 86 வது நுழைவாயிலில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்ததால், மெதுவாக நானும் என் மனைவி அம்முவும் கைக்கோர்த்துக் கொண்டு ஒன்று இரண்டு மூன்று. என ஒவ்வொன்றாக , கடந்தபடி 70 வது நுழைவாயில் வரை வந்தாகிவிட்டது. கண்ணாடி சுவர்களின் வழியாக குழந்தைகளும் , இளைஞர்களும் , நடுத்தர வயது மக்களும், விமானம் வந்து நிற்பதை அது புறப்படுதை வியப்பாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். விமானங்களில் எத்தனை முறை பறந்தாலும், விமானங்கள் தரையில் ஓடும்பொழுதும் தலைக்கு மேலேப் பறக்கும் பொழுதும் தலைசாய்த்து பார்ப்பதும் ஒரு சுவாரசியந்தான். அவர்களுடன் அம்முவும் சேர்ந்து கொண்டது மனநிலையை மேலும் ரம்மியமாக்கியது. குட்டிநகரமே இந்த ஜூரிச் விமானநிலையத்தில் இருப்பதை…

  22. புறாப்பித்து - சிறுகதை சிறுகதை: எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: ஸ்யாம் தற்செயலாகத்தான் அலுவலக மாடி ஜன்னலில் சாய்ந்தபடியே அந்தப் புறாக்களை கோவர்தன் பார்த்தார். அவரது அலுவலகத்தின் எதிரில் மத்திய உணவு சேமிப்புக் கிடங்கு இருந்தது. அதன் சுற்றுச்சுவர் மிக உயரமானது. கறுத்த சுவரின்மீது புறாக்கள் வரிசையாக உட்கார்ந்திருந்தன. ஒரேயொரு சாம்பல் நிறப் புறா. மற்றவை வெள்ளை நிறப் புறாக்கள். மொத்தம் எத்தனை என எண்ணிப்பார்த்தார். பதினாறு புறாக்கள். அலுவலகம், கோவர்தன் இயல்பை மாற்றியிருந்தது. இளைஞனாக இருந்த நாள்களில் இதுபோன்ற புறாக்களைப் பார்த்திருந்தால் இப்படி எண்ணியிருக்க மாட்டார். புறா என்றாலே காதலுக்குத் தூது விடுவது என்ற கற்பனையில் அமிழ்ந்து போயிருப…

  23. Started by sathiri,

    சாதனை சாதனை சாதனை . சாதனை . மாபெரும் உலக சாதனை இருநநூறு மணித்தியாலங்கள் இடைவிடாது நடனமாடுகிறார்.அடாது மழை பெய்தாலென்ன. விடாது புயல் அடித்தாலென்ன.கொழுத்தும் வெய்யிலடித்தாலும் கொண்ட கொள்கை மாறாது குறித்த நேரம்வரை ஆடி உலக சாதனையை நிலை நாட்டுவார். வாருங்கள் வந்து உங்கள் ஆதரவினை வாரி வழங்குங்கள்..... என்ன சாத்திரி இதுவரை எழுதிக்கிழிச்சது காணாதெண்டு இப்ப புசிசா ஆடிக்கிழிக்கபோறாராக்கும் அதுவும் உலக சாதனையாம் எண்டிற உங்கள் அனுதாபப் பார்வை விழங்கினாலும் . இது நான் சாதனை நிகழ்த்தேல்லை இந்த அறிவிப்புக்கள் யாழில் எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் ஆரம்பத்திலும் காரில் ஒரு ஸ்பீக்கரைக் கட்டி ஊர்ஊராய் சொல்லிக்கொண்டு திரிவினம்.இந்த சாதனை விசயமும் குனியா .மேனியா போலை ஒரு…

    • 17 replies
    • 2.7k views
  24. யெகோவாவின் குழந்தையாகவிட்ட விடுதலைப் போராளி யெகோவாவின் குழந்தையாகவிட்ட விடுதலைப் போராளி அக்கா...! அவ்வப்போது தொலைந்து போகிறவன் இடையிடை இப்படித்தான் அழைப்பான். கிட்டத்தட்ட 3மாதங்கள் தொடர்பறுந்து போனவன் நேற்று மீண்டும் அழைத்திருந்தான். எங்கைசாமீ ஒளிச்சிருந்தனீங்கள்...? ஒரு எஸ்எம்எஸ் கூடப்போட நேரம் கிடைக்கேல்லயோ ? நாய்க்கென்ன வேலை அது ஓடிக்கொண்டுதானேயக்கா இருக்கும்.... அப்ப நாய் வாழ்க்கை இன்னும் முடியேல்லெயெண்றீங்களோ...? அதெங்கக்கா முடியுறது....? எவ்வளவோ துயரங்களையும் வலிகளையும் மனசுமுட்டச் சுமந்து கொண்டிருந்தாலும் தொடர்பில் வருகிற நேரங்களில் எல்லாவற்றையும் மறந்துவிட்டவன் போல கதைக்க ஆரம்பித்துவிடுவான். வளமையான சுகநல விசாரிப்புகள்....குடும்பம் குழந்தைகளில் ஆர…

    • 16 replies
    • 2.7k views
  25. யாரோ புண்ணியவான் ஆரம்பித்து வைத்த இந்த சினிமாவை பற்றிய தொடர் விளையாட்டு பதிவுக்கு கானபிரபா என்னையும் போடும் படி அழைத்திருந்தார். இதனால் இந்த கேள்விகள எல்லாத்துக்கும் பதில் அளிப்பதால் நம்மளுக்கும் இதனால் ஒரு விஜபி அந்தஸ்து கிடைத்த சந்தோசம் .மற்றும் படி நம்மளை யாரு தான் பேட்டி காணப்போறாங்கள் ? நாம யாருக்கு தான் பதில் சொல்லப்போறோம்? அதை விடுங்க .....இப்ப..இவையளுடைய கேள்வியளுக்கு வருவம் அவற்றுக்கு பதிலையும் கொடுக்க முனைவம் 1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள் முதலில் சினிமா பார்க்க தொடங்கினது எட்டு வயதுக்குள்ளை தான் அதுவும பெற்றோருடன் போனது.. http://sinnakuddy.blogspot.com/2008/10/blog-p…

    • 19 replies
    • 2.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.