கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
"என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் என் வீட்டு யன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார் என் வீட்டு தென்னங்கீற்றை ஒவ்வொன்றாக கேட்டுப்பார் உன் பெயர் சொல்லுமே" என்று பொங்கும் பூபாளம் நிகழ்ச்சி காலையில் காதல் நாணத்துடன் இசைத்துக் கொண்டிருந்தது. பாடலின் வரிகளில் தன்னை மறந்து பூக்களுடன் கதைக்க தொடங்கினாள் ஐங்கரி. "என் வீட்டு பூக்கள் என்னவனின் பெயரை கனவிலும் சொல்ல தயங்காது" என காதலனை எண்ணியவறே மல்லிகையில் "இச்"சென்று முத்தம் ஒன்றைப் பதித்ததாள். இலைகளிலிருந்து வந்து சிதறிய பனித்துளிகள் முகத்தில் பட்டதும் சட்டென நினைவுக்கு வந்தாள். காதல் மயக்கத்தில் தான் அங்கே செய்ததை நினைத்து முகம் சிவக்க நாணினாள். திடீரென்று கடிகாரத்தைப் பார்த்தவள் "அட 8 மணி ஆகிவிட்டது…
-
- 17 replies
- 3.4k views
-
-
ஒரு பையன் முட்டை கூடைகளுடன் மிதிவண்டியில் சென்றான். கல் தடுக்கி மிதிவண்டியுடன் விழுந்துவிட்டான்.முட்டைகள் அணைத்தும் உடைந்துவிட்டன. கூட்டம் கூடி விட்டது. வழக்கம்போல் இலவச உபதேசங்கள்.: பாத்து போக கூடாதா? " " என்னடா... கவனம் இல்லாம சைக்கிள் ஓட்டுற?" அப்போது ஒரு பெரியவர் அங்கு வந்தார். அடடா...ஒரு சின்ன பையன் இப்படி விழுந்து விட்டானே!! அவனது முதலாளிக்கு இவன்தானே பதில் சொல்லணும்? எதோ என்னால் முடிந்த உதவி என என ஒரு பத்து ரூபாயை குடுத்தார். அதோடு " தம்பி இங்கே இருப்பவர்கள் நல்ல மனிதர்கள். உபதேசம் மட்டுமில்ல ஆளுக்கு கொஞ்சம் பணமும் தருவார்கள். வாங்கிகொள்' என்றார். மக்களும் இவரது செய்கை பேச்சை பார்த்து பணம் தந்தார்கள். முட்டை உடைந்ததைவிட அதிக பணம் சேர…
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
எங்கட கதைகள் வெளியீடாக வந்த, "பங்கர்" தொகுப்பில் இருந்து எழுத்தாளர் வெற்றிச்செல்வி அவர்களின் கதையான "செல்வம் இழந்த கதை” இந்தவார கதை சொல்லவா? நிகழ்வில் இடம்பெறுகிறது.
-
- 0 replies
- 585 views
-
-
காலை வேளை 5 மணியாகி இருந்தது . தூரத்தே சேவல் ஒன்று காலை விடிவதற்குக் கட்டியங் கூறியது .இருட்டுக்கும் பகலுக்கும் நடந்த போரில் இருட்டு தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்தது . எனக்குப் பக்கத்தில் படுத்திருந்த றொனியன் காலை நக்கி அதன் சந்தோசத்தைக் காட்டியது . இன்னும் கடைசி மகள் எழுந்திருக்கவில்லை . நான் மெதுவாக எழும்பி உடம்பை சிவருக்கு முட்டுக்குடுத்துக் கொண்டு இருந்தேன் . இடுப்பில் கட்டி இருந்த மூத்திரப்பை முட்டியிருந்தது . எனக்கு வாய் நமநமத்தது . பக்கத்தில் இருந்த வெத்திலையையையும் , பொயிலையையும் பாக்கையும் , கலந்து வாய்க்குள் வைத்துக்கொண்டேன் .என் மனமோ காலம் என்னும் சக்கரத்தை திருப்ப முயன்று வெற்றியுங் கொண்டது .எனது அப்பா மலாயாவில் வேலை செய்து கொண்டிருந்தபோது நான் பிறந்தேன் . எனக…
-
- 12 replies
- 1.5k views
-
-
தேநீரா? தேநீர் கோப்பையா? ஊருக்கு வெளியில் ஆசிரமம் அமைத்து தன் மாணவர்களுக்கு வாழ்கையை பாடமாக சொல்லி கொடுத்து வாழ்ந்து வந்தார் ஜென்துறவி ஒருவர். அறிவும் அனுபவமும் மிக்க அந்த துறவியிடம் பாடம் கற்க நிறைய மாணவர்கள் வந்து விரும்பி கற்றனர். அவர்களில் சிலர் தாங்கள் முழுவதும் கற்று அறிந்து விட்டதாகவும் எனவே தங்கள் ஊர்களுக்கு திரும்பிபோக முடிவு செய்துவிட்டதாக துறவியிடம் சொல்லிவிட்டு அவர் பதிலுக்கு காத்திராமல் திரும்பி சென்றனர் . அந்த ஜென்துறவியோ எதுவுமே நடக்காதது போலப் புன்முறுவல் புரிந்தார். சில வருடங்களுக்கு பிறகு சொல்லாமல் சென்ற அந்த மாணவர்கள் மீண்டும் குருவை தேடி வந்தனர். அவர்களை குரு அன்புடன் வரவேற்றார் . தாங்கள் எல்லோரும் நல்ல நிலையில் இருப்பதாகவும் இருந்தும் மன ந…
-
- 9 replies
- 1.3k views
-
-
படித்ததில் பிடித்தது....வலைப்பூவில் எழுதும் கேமாவின் ஒரு நினைவுப்பதிவு இது. பாணும் பஞ்சமும் ஸ்ரீமா அம்மாவும். நான் நினைக்கிறன் 1974 ம் ஆண்டுப் பகுதியெண்டு.அந்த நேரம் ஸ்ரீமா அம்மாவின்ர (ஸ்ரீமாவோ பண்டாரநாயக)ஆட்சிக்காலம்.காசு கையில இருந்தாலும் சாப்பாட்டுச் சாமான்கள் ஏதும் வாங்கேலாது.பஞ்சம்...பஞ்சம் பசி...பசி.நாங்கள் வீட்ல 5 பேர்.அப்பா கோயில் சேவகம் செய்ற சாதாரண தவில்காரர்.அப்பப்ப கையில கிடைக்கிற காசைக் கள்ளமில்லாம அம்மாட்ட கொண்டு வந்து குடுத்திடுவார்.வெத்திலை போடுறது மட்டும்தான் அவருக்குப் பிடிச்ச கெட்ட பழக்கம்.வெறும் தேத்தண்ணியும் வெத்திலைத்தட்டமும் இருந்தா அவருக்குப் பசிக்காது என்கிறாப்போல.அம்மா பாவம்.அப்பா கொண்டு வந்து குடுக்கிறதைப் பக்குவமா செலவழிப்பா.…
-
- 2 replies
- 1.1k views
-
-
எப்போதும்செம்பாட்டுமண்ணின்வாசமும்-அதை மூடிவளர்ந்த பயிர்களின்பசுமையும் -நிறைந்த ஒரு சிறுகிராமமது.காசுவசதிகொண்ண்டவர்களை கொண்டிராத போதிலும் பாசவளர்ச்சிகொண்டிருந்தவர்களை தன்னகத்தே கொண்டிருந்தது அக் கிராமம் .சின்னச்சின்ன ஒழுங்கைகள் அறிமுகமிலாதவர்களுக்கு முழு கிராமத்தையும் அறிமுகம் செய்துவைக்கும். அழகானசிறுகோவில்அதனருகே சிறுபடிப்பகம்.கோவில்திருவிழாக்காலங்களில் விதவிதமானபுத்தாடைகளுடன் உலகஅழகிகளின் செருக்குடன் உள்ளூர்அழகிகள்சுற்றிவருவர். துவிச்சக்கரவண்டிகளின் சக்கரங்கள்தேயத்தேய கன்னிகளைச்சுற்றும்காளையர்கள்.உள்ளூர்பேட்டைகளை கண் வைக்கவரும் அயலூர் பெடியன்களுடன்புழுதிகிளம்ப நடக்கும்போரென ஊரேரணகளமாய் மாறியிருக்கும்.அந்த ஊரில்தான் இவனும்இருந்தான்.வீதியில்ஊற்றிவிட்…
-
- 27 replies
- 4.8k views
-
-
[size=5]1967 ஆண்டு அளவில் சண்முகதாசன் மாவோ சேதுங்கை சந்தித்த பொழுது எடுத்த புகைப் படம்[/size] [size=3]தோழர் சண்முகதாசன் அவர்களின்[/size] [size=3]“ஒரு கம்யுனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்”[/size] [size=3]நூல் அறிமுக மற்றும் விமர்சன அரங்கு[/size] [size=3]காலம் - 20th October 2012 , 3.00 P.M[/size] [size=3]இடம் - Walthamstow Quaker Meeting House 1a Jewel Road London E17 4QU தலைமை – தோழர் வேலு அவர்கள் மேலதிக விபரங்கட்கு : தோழர் பாலன் - 00447753465573 tholar2003@hotmail.com [/size]
-
- 1 reply
- 798 views
-
-
-
- 47 replies
- 5.2k views
-
-
நூறு நிலங்களின் மலை – 1 ஜெயமோகன் நித்ய சைதன்ய யதியின் மாணவரான ஷௌகத் அலி நித்யாவின் மறைவுக்குப்பின் கிட்டத்தட்ட நாலாண்டுக்காலம் இமயத்தில் அலைந்த அனுபவங்களை ‘இமயத்தில்’ என்ற பயணக்கட்டுரைநூலாக மலையாளத்தில் எழுதினார். நீண்ட இடைவேளைக்குப்பின் உஸ்தாதை திருவண்ணமாலையில் பவா செல்லத்துரையின் நண்பராகச் சந்தித்தேன். அவர் கேரள சாகித்ய அக்காதமி விருது பெற்ற அந்நூலை அளித்தார். அதை வாசித்தபோது மீண்டும் இமயப்பயணம் பற்றிய கனவை அடைந்தேன். அக்கனவு எப்போதும் என்னுடன் இருந்துகொண்டிருந்த ஒன்றுதான். எப்போதென்று சொல்லவேண்டுமென்றால் என் இளமையின் அந்தரங்கத்திற்குள் செல்ல வேண்டும். சிவன் வீற்றிருக்கும் கைலாயம் என்ற வெண்பனிமலையின் காலண்டர் ஓவியங்கள்தான் எழுத்தறியா வயதிலேய…
-
- 19 replies
- 9.6k views
-
-
இரண்டொழிய வேறில்லை “அப்பா! அத்தான் கிட்டே இருந்து கடுதாசி வந்திருக்கு.”- செம்பவளவல்லி படபடப்புடன் அந்தக் கடிதத்தைப் பிரித்தாள். இருளப்பன் மகள் அருகில் நெருக்கமாக நின்றபடி, “முதல்ல படி, பாப்பம். செந்தில் என்ன எழுதி இருக்கு?” உள்ளம் மகிழ்ச்சியால் துள்ள, கடிதத்தைப் பலமுறை மனதிற்குள் படித்துப் பார்த்தாள் செம்பவளம். “அன்பு பவளம்! இப்போது எனது ஐ.ஏ.எஸ் பயிற்சி முடிந்து எங்களை வேலைக்கு அனுப்பத் தீர்மாணிக்கும் சமயம், நமது ஊர் எல்லைக்காளியை மனப்பூர்வமாக வேண்டிக்கொள். விரைவில் பெரிய கலெக்டராக, நம்ம ஊரிலேயே உன் அருமை அத்தான் வருவேன்! பிறகு கேட்க வேணுமா? நமது சபதம் நிறைவேறும். ஆசை அத்தான்’ செந…
-
- 0 replies
- 930 views
-
-
வருத்தம் தான் ...இப்ப அதிகம் இங்கு எழுதுவது இல்லை என்றாலும் ..பலர் தமிழில் இணையத்தில் எழுதுவதை அண்ணாந்து பார்த்திருக்கிறேன் ,,பார்த்த என்னை தமிழ் எழுத பழக்கியது இந்த யாழ் தான்.. எங்கோ மூலையில் மூணு பெக் அடித்து விட்டு குப்பனெ கிடந்த என்னை எல்லாம் கூட இணையத்தில் தெரிய உதவியது இந்த யாழ் தான் ... மூட படப்போகுது என்ற சிவப்பு விளக்கை பார்க்க கவலையாக தான் இருக்கிறது ,,நடத்துபவர்களுக்கு என்ன என்ன கஸ்டமோ தெரியாது ..இதை கேட்டவுடன் பார்த்தவுடன் மிகவும் கஸ்டமாகவும் இருக்கிறது. இதில் சண்டை பிடித்து இருப்போம் தமாசாக கதைத்து இருப்போம் இது எல்லாம் பசுமை நிறைந்த நினைவுகளாக பதிந்து இருக்கின்றன...நாங்கள் கும்மியடித்த பொற்காலத்தில் இருந்த யாழ் கள நண்பர்களை நினைத்து பார்க்கிறேன் புனை பெய…
-
- 13 replies
- 2k views
-
-
நீராலானது உலகு! கன்னியாகுமரியில் என்னவோ இருக்கிறது. முக்கடல் சங்கமத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சுற்றிலும் சுற்றுலாப் பயணிகள். ஒரே ஆரவாரமும் கொண்டாட்டமும். அலைகள் பாறைகளில் மோதுவதும் பாறைகளைத் தழுவுவதும் பாறைகளைத் தாண்டுவதுமாக இருக்கின்றன. பார்வை நீள்கிறது. தூரத்தில் இரு படகுகள். தவிர, நீலம், நீலம், எங்கும் நீலம். இன்னும் கொஞ்ச நேரத்தில் வண்டி வந்துவிடும் என்றார் நண்பர். நீரோடிக்குப் போக வேண்டும். தமிழகக் கடற்கரையின் எல்லை நீரோடி. கன்னியாகுமரி, அடுத்து மணக்குடி, சொத்த விளை, பள்ளம், புத்தன்துறை, பொழிக்கரை, பெரியகாடு, முட்டம், கடியபட்டினம், மண்டைக்காடுபுதூார், குளச்சல், குறும் பனை, இணையம், தேங்காய்ப்பட்டினம், இறையுமண் துறை, பூத்துறை, தூத்தூர் தாண்டினால் நீரோடி…
-
- 52 replies
- 19.7k views
-
-
மூன்று சீலைகள் - நரன் ஓவியங்கள் : ரவி உச்சி வெயிலில் கருநாயொன்று அண்ணாந்து, ஆகாசத்தை நோக்கி மூஞ்சியைத் தூக்கி ஊளையிட்டது. பின் கொஞ்சம் இடைவெளிவிட்டு ஊளையிட்டபடியே காசியின் நிழலைத் தொடர்ந்தது. கண் முன்னே வெயில் அலைபோலத் திரிந்துகொண்டிருந்தது. கருவேலம் மண்டிக்கிடக்கும் நீரற்ற கண்மாய்க்குள் இறங்கி, முழங்காலுக்குக் கீழே முட்கள் காலில் கிழிப்பதைப் பொருட்படுத்தாது, சுரத்தே இல்லாமல் நடந்துகொண்டிருந்தான் காசி. காசியின் செருப்பில்லாத கால்களில் புழுதி அப்பிக்கிடந்தது. எப்போதோ கால்கள் கல்லில் எத்தி, பெருவிரலில் ரத்தம் வழிந்து உறைந்திருந்தது. மூன்றோ, நான்கோ அழுக்கேறிப்போன கிழிந்த வேஷ்டிகளை இடுப்பில் சுற்றியிருந்தான். கிழிசல்கள் நடுவே கட்டம்போட்ட லுங்கி ஒன்று.…
-
- 1 reply
- 1.8k views
-
-
பிடிகயிறு - சிறுகதை நர்சிம், ஓவியங்கள்: ஸ்யாம் பிடிமாடாப் போச்சேடா தவுடா!'' - சொல்லிக்கொண்டே ஓடியதில் மூச்சு முட்டியது பாண்டிக்கு. கையில் இருக்கும் பிடிகயிற்றைச் சுற்றிக்கொண்டே சற்று நின்று மூச்சுவாங்கிய பாண்டியை, பரிதாபமாகப் பார்த்தான் தவுடன். ''விடப்பா, நிண்டு விளையாடுச்சு. நல்லவேள, குத்தித் தூக்கத் தெரிஞ்சிச்சு அந்தப் பாளமேட்டுக்காரனை. எல்லக் கவுறு வந்ததும் தாவிப் பம்மிப் படுத்துட்டான் தாயளி. இல்லேண்டா அவென் கொடலு கொம்புல தொங்கிருக்கும்!'' அதை ஆமோதிப்பது போல பார்த்துக்கொண்டிருந்தான் பாண்டி. கிட்டத்தட்ட ஆறேழு கிலோமீட்டர் ஓடிய களைப்பு, அவர்களின் முகங்களிலும் இடுப்புகளிலும் தெரிந்தன. கையை மாற்றி மாற்றி இடுப்பைப் பிடித்தவாறே அங்கிருந்த…
-
- 2 replies
- 2.6k views
-
-
அளவோடு ஆசைப்படு......... ஆசையே அலை போல நாமேலாம் அதன் மேலே........ ஒருவன் பாறைகளிலிருந்து கல்லுடைக்கும் வேலையைச் செய்து வந்தான். கடுமையான வேலை, குறைவான கூலி. அதனால் அவன் வேலையின் மீது அதிருப்தி கொண்டான். அவன் ஒரு நாள் தெய்வமே நான் உன்னை தினமும் வணங்குகிறேன், நீ என்னை பணக்காரனாக்கக் கூடாதா? என்னை பட்டு மெத்தையில் படுக்க வைக்கக் கூடாதா? என்று பிரார்த்தித்தான். தெய்வம் அவன் முன் தோன்றி "நீ விரும்பிய வண்ணமே ஆவாய்" என்று வரம் கொடுத்தது. அவன் பணக்காரனாகி விட்டான். பட்டு மெத்தையில் படுத்திருந்தான். ஒரு நாள் அந்த நாட்டு அரசன் அவன் மாளிகை வழியாக அழகிய தேரில் முன்னும் பின்னும் குதிரை வீரர்களுடன் சென்றான். அதைப் பார்த்ததும் அவனுக்கு அரசனைப் போல் இருக்க வேண்டு…
-
- 6 replies
- 1.4k views
-
-
பரபரப்போடு... கூட்டம் கூடுகிறது... கேள்விகளை தொடுக்கிறார்... (வெள்ளையின ஆங்கிலேய) முகாமையாளர்: உங்கள் பெயர்தான் கோலியாத்தா..?! கோலியாத்: ஆம்.. நானே தான் அது. முகாமையாளர்: உங்கள் மீது ஒரு குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. அது எமது நிறுவன ஒழுங்கு விதிக்கமைய பராதூரமாக பார்க்கப்படுகிறது..! அந்த வகையில் தான் இந்த விசாரணைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. நீங்கள் அண்மையில் அப்படி ஏதாவது குற்றம் செய்ததாக உணர்கிறீர்களா..??! கோலியாத்: நானா. அப்படி எதுவும் செய்ததாகத் தெரியவில்லையே..?! முகாமையாளர்: உங்களுக்கு சீதாவை தெரியுமா..??! கோலியாத்: என்ன அந்த மகாபாரத சீதாவா.. மன்னிக்கனும்.. இராமாயண சீதாவா.... அவாவை தெரியும். (முகாமையாளர் இந்தப் பதிலைக் கேட்டு முழிக்கிறார். …
-
- 8 replies
- 1.8k views
-
-
சூரியன் மறையாத தேசம் என்று ஒருகாலத்தில் சொல்லப்பட்ட நாட்டுக்கு வந்து கொஞ்சகாலம் தான் ஆகிறது . இதற்க்கு முன்பு ஜரோப்பாவில் ஒரு நாட்டில் ஒரு குக் கிராமத்தில் நீண்ட காலம் நாட்களை கடத்தி துரத்தி ஏனோ தானோ வாழ்ந்து கொண்டிருந்தேன்.இந்த லண்டனில் செட்டில் ஆக வேண்டும் என்ற எனது குடும்பத்தினரின் நச்சரிப்பு காரணமாக ஆங்கில கால்வாயை கடந்து வந்த காலம் . அங்கை இடது இங்கை வலது கார்கள் ஓட்டும் முறை மட்டுமல்ல செல்லும் பாதை வழி முறைகளிலும்...பாதையை கடப்பது கூட மிகவும் கடின முயற்ச்சி எடுத்து தான் கடக்க வேண்டும். றோட்டில் எழுதி இருக்கும் வலது பக்கம் பார்த்து கடக்கவும் என்ற வாசகத்தை பார்த்து கடக்க வேண்டிய காலம். அந்த காலம் எப்பவென்றால் பன்னிரண்டு பதின்மூன்று வருடங்களுக்கு முன்னர். …
-
- 7 replies
- 1.9k views
-
-
குஞ்சுகள் இருட்டுப் போர்வை பூமியை மூட ஆரம்பித்த மாலை வேளை. வானத்தில் நிலவும், நட்சத்திரங்களும் மட்டுமே மீதியாக இருந்தன. ஆனால் காற்றோ இப்பவும் சூடாகவே வீசிக்கொண்டிருந்தது. "எணை அப்பு...! என்ரை செல்லத்தைக் காணேல்லை. நீ கண்டனியோணை?" அரக்கப்பரக்க ஓடிவந்து கேள்வி கேட்ட என் பேரனிற்கு பதிலளிப்பதற்காய் வாய்க்குள் குதப்பிக் கொண்டிருந்த வெற்றிலைச் சாற்றினைத் துர உமிழ்ந்தேன். "இல்லை ராசா. நான் காணேல்லை. கொஞ்சம் முன்னந்தானே நீ மடியிலை வைச்சுக் கொஞ்சிக் கொண்டிருந்தனீ..." அவனது தலையை ஆதரவாகத் தடவி கொடுத்தவாறே கேட்டேன். "ஓமணை அப்பு. பவுடர் பூசி, ஒட்டுப் பொட்டும் வைச்சுப்போடு விட்டனான். அதுக்குன்னம் காணைல்லை" என்று விம்மத் தொடங்கிய எனது பேரனுக்கு வாற ஆவணி மாசம் …
-
- 5 replies
- 867 views
- 1 follower
-
-
ஓர் ஊரின் கதை ஊருல தெருக்கள் இருக்கும். ஆனா, ஒரு தெருவே ஊராய் இருக்குமா? இருக்கே! நம்பிக்குறிச்சிங்கிற ஊர், அப்படி ஒரு தெருதானே! ஒரு காலத்துல ஓகோன்னு இருந்த ஊர். இப்ப, வெற்று அடையாளங்களோட, கட்டட மண்ணும் குட்டிச் சுவருமாக் கிடக்கு. சோலைவனம் போலப் பூத்துச் செழிச்சிருந்த ஊராக்கும் இது! இப்ப கரடு தட்டிப் போன காட்டுப் பகுதி மாதிரில்ல காணப்படுது. ஓ! எப்பேர்ப்பட்ட மனுசங்க நடமாடின மண் இது! இங்க மொதல் வீடே தபால் பண்ணைத் தாத்தா வீடுதான். கறுப்பா இருந்தாலும் கம்பீரமா, லெட்சணமா இருப்பாங்க. வெள்ளை மீசையைக் கெத்தா முறுக்கி விட்ருப்பாக. அவுக ஊர்வழி போறப்ப தூள் க…
-
- 0 replies
- 1.5k views
-
-
இன்று லண்டன் கட்வீக் விமான நிலையத்தில் நின்றிருந்த போது எனது விமானத்துக்கு சற்று நேரம் இருந்ததால் அங்கிருந்த கடைகளை கண்களால் மேய்ந்தபடியே நடந்து கொண்டிருந்தேன். முதலில் electronic பொருட்கள் இருந்த கடையை வலம் வந்து பின்பு வாசனைத்திரவியங்கள் இருந்த கடையைப் பார்த்த போது தான் நண்பர் தனக்கு ஒரு மதுபான போத்தல் வாங்கி வர உத்தரவிட்டிருந்தது ஞாபகத்தில் வந்தது. எனவே அருகில் இருந்த மதுபான விற்பனைநிலையத்துக்குள் புகுந்து நண்பருக்கான சந்தோஷபானத்தை சீதையை தேடிய அனுமான் போல் தேடியலைந்து கொண்டிருந்தேன். அப்போது "Sir" என்று ஒரு குரல் எனக்கு பின்னால் கேட்க ”நம்மளை யார் இவ்வளவு மரியாதைக் கூப்பிடப்போகிறார்கள்” என்பதால் அதை கவனிக்காது நடக்க முற்பட்டேன். அப்போதும் "Sir, "Sir" என்ற …
-
- 8 replies
- 1.4k views
-
-
1995 இதே காலப் பகுதி... மாதகல் பக்கமா ஒரே கன்போட் அடி... குரும்பசிட்டி.. சண்டிலிப்பாய்.. அளவெட்டிப் பக்கமா.. ஒரே செல்லடியும்.. துப்பாக்கிச் சண்டையும்... ஆமி முன்னேறி வந்திட்டானாம்.. சனங்கள் எல்லாம் உடுத்த உடுப்போட கத்திக் கொண்டு ஓடுதுகள்... ! ஓடிறதுகள் ஓட.. இன்னும் கொஞ்ச சனம்.. காலாற.. கோயில் வழியவும்.. சேர்ச் வழியவும் அடைக்கலம் தேடுதுகள்... என்ன கொடுமை இது.. இதுக்கு ஒரு முடிவே இல்லையா..??! கடைக்குப் போய் பொருட்கள் வாங்கிக் கொண்டு வந்த நான்.. மக்கள் வீதி ஓரங்களில் களைப்பு மிகுதியில் மரங்களுக்கு கீழ நின்று ஓய்வெடுக்கிறதை கண்டிட்டு எனக்குள்ள அங்கலாய்த்தும் கொண்டன். பலாலில இருந்து.. அச்சுவேலிக்கால வெளிக்கிட்டு முன்னேற முயன்ற ரத்வத்த அங்கிள் அங்க அடி அகோரம…
-
- 30 replies
- 3.1k views
-
-
அதிகாலை ஒரு மணி இருக்கும். வெடிச்சத்தம் காதைப் பிளக்க.. நித்திரை இடையில் கலைகிறது. "சண்டை தொடங்கிட்டுது எல்லாரும் எழும்புங்கோ" அம்மா அவசரப்படுத்திக் கொண்டிருக்க, பலாலிப்பக்கம் இருந்து 'ஆட்லறிகளும்' கூவுகின்றன. "மண்டை தீவுப்பக்கம் தான் அடி விழுகுது" அப்பா தன் பங்குக்கு சொல்லும் பொழுதே வெடிச்சத்தம் உக்கிரமடைகிறது. பயம் கெளவிக் கொள்ள வீட்டை விட்டு வெளிய வந்து மாமரத்துக்கு அருகில் நின்றபடி அவதானிக்கிறோம். "சந்திரிக்கா போட்ட யுத்த நிறுத்தம் இந்தளவும் தானா?" அம்மா ஏக்கத்தோடு என்னைப் பார்த்துக் கேக்க, "அவள் கதிரை பிடிச்சிட்டாள் எல்லோ எனி என்னவும் செய்வாள்" அப்பா பதிலுரைக்கிறார். நித்திரை குழம்பிய பக்கத்து வீட்டு 'அங்கிளும்'.. வெளியே வந்து, வீதியில் நின்றபடி " என்ன அடி தொடங்கிட்ட…
-
- 8 replies
- 2k views
-
-
களவாணி மழை சிறுகதை: தமிழச்சி தங்கபாண்டியன், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு முன்நெத்திச் சுருக்கங்களில் வழிந்தோடும் வியர்வையைக் கூடத் துடைக்காமல் வேகு வேகென்று வந்து நின்றவனைப் பார்த்து, “ந்தா... சோத்தண்ணி குடிக்கிறியா?” என்ற பாண்டியம்மாளின் குரலைச் சட்டை செய்யாமல் தொழுவத்துக்குள் நுழைந்தான் பெரியாம்பிளை. மாடு, கன்னுகளுக்குத் தண்ணி ரொப்பும் சிமென்டுத் தொட்டி கால்வாசிக்குத்தான் இருந்தது. “சவக் கழுதை, சப்பணங்கொட்டி ஒக்காந்துகிட்டுக் கிடக்கா, தண்ணி ரொப்பாம” என்று முனகிக்கொண்டே தண்ணியை அள்ளி எடுத்து முகம், கை, காலில் சோமாறிக்கொண்டான். மூக்கு விடைக்கத் திரும்பிய நெற மாசச் சிங்கி, அவனது அருகாமையை உணர்ந்தாற்போல் அசைந்துகொடுத்தது…
-
- 0 replies
- 1.1k views
-
-
பாவம் பைரவி இப்படி நடக்குமென்று அவள் நினைக்க கூடவில்லை .மனம் நிறைய சேர்த்து வைத்த சந்தோசங்களும் கனவுகளும் எதிர்பார்ப்புகளும் நேற்று நடந்து முடிந்த அந்த சம்பவத்தால் அப்படியே நொறுங்கி போனது. எங்கே அவள் அதிகம் நம்பிக்கை வைத்திருந்தாளோ யாருக்காக தன் பெற்றோரின் கனவுகளை ஒதுக்கிவிட்டு அவனே தன் உலகம் என்று எண்ணி இருந்தாளோ இன்று அவனே அவளிற்கு அன்னியனாகிப் போனான். நினைக்க நினைக்க அவளால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் போனது. பைரவி ஏழை குடும்பத்தில் பிறந்தவள்.எனினும் குடும்ப்பதோர் பாசத்தை பொழிந்து அவளை வளர்த்தனர்.படிப்பிலும் அவள் சுட்டி. நீண்ட கண்களும் அடர்ந்த கூந்தலும் அவள் அழகிற்கு மேலும் அழகூட்டின . பார்ப்பதற்கு ஒரு தேவதை போல் இருந்த அவளிற்கு…
-
- 17 replies
- 6.7k views
-