Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. Started by nunavilan,

    கடவுளின் மரணம் - செல்வன் | "கடவுள் இறந்து விட்டார்..அன்னாரது ஈமக்கிரியைகள் வரும் 16ம் தேதி நடைபெறும்" "கடவுள் இறந்து விட்டார்..அன்னாரது ஈமக்கிரியைகள் வரும் 16ம் தேதி நடைபெறும்" இடி இறங்குவது போல் அந்த செய்தி மக்களிடையே இறங்கியது. ஆரம்பத்தில் யாரும் அதை நம்பவில்லை.ஆனால் கடவுளின் உடலை மக்களின் பார்வைக்கு வைத்ததும் தான் அதை அனைவரும் நம்பினர். "ஓ"வென அனைவரும் அழுது புலம்பினர். அவரது உடல…

  2. களம் - ஜெயமோகன் அதிகாலைமுதலே அரங்கேற்றக் களத்தில் அஸ்தினாபுரத்துக் குடிமக்கள் ரதங்களிலும் , குதிரைகளிலும் ,மூடுவண்டிகளிலும் வந்து குவிய ஆரம்பித்த ஒலி அரண்மனையை சூழ்ந்து கொண்டது.அரண்மனையில் இருநாட்களுக்கு முன்னரே பரபரப்பு பெருகி ,அதன் உச்சத்தில் ஒவ்வொருவரும் பிறரை மறந்து தங்கள் வேகங்களில் விரையவே முழுமுற்றான ஓர் ஒழுங்கின்மை எங்கும் நிறைந்திருந்தது . தன் தனிப்பட்ட பயிற்சிக்களத்தில் துரியோதனன் இடைவிடாத ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்டிருக்க, அர்ச்சுனன் துரோணருடன் விற்பயிற்சியில் தன்னை இழந்திருந்தான். குருகுலத்து இளவரசர்கள் அனைவருமே பதற்றத்துடன் பயிற்சியில் ஈடுபட்டிருக்கையில் பீமன் மட்டும் மடைப்பள்ளியில் சமையலுக்காக தென்னாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்த விற்பன்னர்களிடமிருந…

  3. உங்களுக்குத் தெரிந்த மனிதர் யாராவது உயிர் வாழ்ந்த போதிலும் பார்க்க ஒரு இறந்தபின்பு அழகாக தோற்றமளித்தாரா? அப்படி ஒரு ஏதாவது சந்தர்ப்பத்தில் இறந்து போன ஒருவரை பார்த்தவுடன் அவ்வாறு நீங்கள் நினைத்திருக்கிறீர்களா? இது சிக்கலான கேள்வி நான் நினைப்பதை நீங்கள் புரிந்து கொள்ள விரும்பினால் அதுபற்றி விரிவாக கூறவேண்டும். எனது வேலைத்தலத்துக்கு அருகே பெரிய மயானம் இருக்கிறது. அது நமது ஊர் மயானம் போல் அல்ல யாழ்ப்பாணத்து கோம்பயன்மணல் மாதிரியாக நாலு ஆலமரங்கள் சில அலரிமரங்கள் இடைக்கிடையே ஆமணக்கு பற்றை என்பன வளர்ந்திருக்கும் இடமாக ஒரு சில ஏக்கர் விஸ்திரணத்தில் இல்லை. அதற்கு மாறாக இது பல கிலோமீட்டர் அகல நீளமான அழகிய பூந்தோட்டம். யுகலிக்கப்ரஸ் மரங்களில் இருந்துவரும் கற்பூரவள்ளி நறுமணம் நிறைத்…

  4. Started by கிருபன்,

    கெளரி -இளங்கோ 'ஒரு துரோகிக்கு பாடங் கற்பிக்கும்போது நாங்கள் ஓராயிரம் துரோகிகள் வளர்வதைத் தடுக்கின்றோம்' என்ற குரல் எல்லாவற்றையும் கலைத்துப் போனது. அதுவரை, சாணி மெழுகிய குசினிக்குள் அம்மா கம்பிக்குழாயால் அடுப்பை ஊதிக்கொண்டிருகக, இவன் கள்ளிச்செடிகளுக்குள் நுழைந்து கோழிகளைத் துரத்திக்கொண்டிருந்தான். அடர்த்தியாய் வளர்ந்திருந்த எக்ஸோராவில் சிறு குருவிகள் வந்து அமர்ந்திருக்க, முற்றத்து மல்லிகைப் பந்தலில் மல்லிகை வாசமும் வந்துகொண்டிருந்தது. திடீரென்று சிவப்பும் வெள்ளையுமான Half Saree அணிந்த பெண், 'ஒரு துரோகிக்கு பாடங்கற்பித்தல்....' என்கின்ற வாக்கியத்தை நடுக்கத்துடன் சொன்ன கணத்தில்தான் அதுவரை இவன் கண்டுகொண்டிருந்த அழகிய ஊர்க்கனவு சட்டென மறைந்து போனது. அன்று பாடசாலை …

  5. ஒருசொட்டுக் கண்ணீர் - சயந்தன் 02.12.2012 பனிகொட்டிய காலை தூரத்தில் எங்கேயோ ஆரம்பித்து எதிர்த்திசையில் மெதுவாக நகர்ந்த இடிமுழக்கமும் இரைந்துகொண்டேயிருந்த மழைச்சத்தமும் உண்மையா அல்லது வெறுமனே பிரம்மையா என்று உள்ளுணர்வை ஆராய்ந்தபடி தூக்கத்திற்கும் விழிப்பிற்குமிடையில் கிறங்கிக் கிடந்தான் ரொக்கெற். பிரம்மைதான். இப்படியொரு சோனாவாரிப் பேய்மழை இங்கே பெய்யச் சாத்தியமில்லை. அவன் மழையின் ஓசையைத் திரும்பவும் நினைவுபடுத்தினான். நரம்புகளில் சில்லிட்டது. அறையின் ஹீற்றரைச் சற்று அதிகரித்துப் பஞ்சுப்பொதி போலான போர்வையால் மூடிக்கொண்டால் கதகதப்பாயிருக்கும். எழும்பிச் செல்லத்தான் அலுப்பாயிருந்தது. விழிப்பு வந்துவிட்டதால் இனிஅலார்ம் கிணுகிணுக்கும். உடலை முறுக்கி வீசியதுபோல …

  6. ஆடு இல்லை ஆடுவேன்.. ஒரு விவசாயின் கண்காணிப்பில் வளர்ந்த ஆடு ஒன்று வழிதவறி அருகில் இருந்த காட்டுக்குள் நெடுந்தொலைவு சென்றுவிட்டது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைபசேலன தாவரங்களும்,புல் பூண்டுகளும் செழித்து கிடந்தன.ஆனால் ஆவலாய் உண்பதற்கான மனநிலையில் ஆடு இல்லை.பயத்தோடு பதறியபடி ஓடி ஓடி ஓய்ந்து போனதுதான் பலன். ஏற்கனவே பதறிபோன நெஞ்சை பதறவைக்கும் விதமாக புதருக்குள் இருந்து பாய்ந்து வந்தான் எமன் சிறுத்தை.திடீர் தாக்குதலை சற்றும் எதிர்பாராத ஆடு நிலைகுலைந்துதான் போய்விட்டது.பாய்ந்தது கிழட்டு சிறுத்தை போல் கழுத்துக்கு வைத்த குறி தவறி போய் அருகில் இருந்த மரத்தில் முட்டிக்கொண்டது.இந்த சிலவினாடி புலியின் தடுமாற்றத்தை சாதகமாக்கி சிட்டாக பறந்தது ஆடு.ஓடியது…

  7. 03- oct- 2012 புதன் அவன் மூக்கிற்கும், மேல் உதட்டிற்கும் இடையே உள்ள பகுதியிலும் அவன் பிறப்புறுப்புக்குத் தொட்டடுத்த மேல் பகுதியிலும், புழுதி படிந்தாற் போல பொன்னிற ரோமங்கள் வளரத் தொடங்கியிருந்த காலம்... அம்புலிமாமாவிலிருந்து, அகிலன், கல்கி, மு.வரதராசன், நா.பார்த்தசாரதி, எஸ்.கணேசலிங்கம், டொமினிக் ஜீவா, லட்சுமி, சூடாமணி, என அவன் வாசிப்பு வளரத் தொடங்கியிருந்த காலம்... "முத்திரைக்கதை" முக்கியத்துவத்துடன் ஜெயகாந்தன் என்ற இளம் எழுத்தாளரை ஆனந்த விகடன் பிரபலப் படுத்திக் கொண்டிருந்த காலமும் அதுதான்... அவன் அப்பாதான் ஜெயகாந்தனை அவனுக்கு அறிமுகப் படுத்தியிருந்தார். விகடனில் அவன் படித்த முதல் ஜெய…

  8. TN 00 E - 1111 குளத்தில் சிறுநீர் கழிக்கும் சிறுவன் பூமியில் இருந்தபடி ஆகாயத்தை அசைக்கிறான்! - ஜென் கவிதை சனி, ஞாயிறு தவிர்த்து, தினமும் காலையில் இவனும் இவன் மகனும் பள்ளிக்குக் கிளம்புவார்கள். மகன் படிக்கும் பள்ளி யில் அவனை இறக்கி விட்டுவிட்டு, இவன் தன் பள்ளிக்குப் புறப்பட்டுப் போவான். இன்றுவரை மகனது நம்பிக்கையில் இவனும் ஒரு மாணவன்தான். தேர்ட் ஸ்டாண்டர்ட் 'எ’ செக்ஷன் படிக்கிறான். அதுவும் பல வருடங்கள் அதே தேர்ட் ஸ்டாண்டர்டில் ஃபெயிலாகி ஃபெயிலாகி 'கே’ செக்ஷனில் இருந்து இப்போதுதான் 'எ’ செக்ஷன் வந்திருக்கிறான். பள்ளிக்குச் செல்லும் வழியில் இவர் களது உரையாடல் இப்படித் தொடங்கும். 'அப்பா... ஹோம்வொர்க் பண்ணிட் டீங்களா?’ 'அய்யோ மறந்திட்டேன் ராஜா!’ 'போச்சு. நல்லா மாட்டிக்…

  9. Started by கிருபன்,

    அது..! சுதாராஜ் எழுத்தாளர் சுதாராஜ்இருள் கசியத் தொடங்கும் மாலை ஆறுமணிப் பொழுதில் அந்த வீதியில் வந்துகொண்டிருந்தேன். முக்கிய நகரங்களைத் தொடுக்கும் பிரதான வீதிதான் அது. எனினும் சன நடமாட்டம் குறைவாயிருந்தது. நகரத்திலிருந்து எட்டுக் கட்டை தொலைவிலிருந்த அந்தப் பகுதியில் குடிமனைகளும் குறைவு. அடுத்த நகரம் சுமார் நாற்பது கிலோமீட்டருக்கு அப்பாலிருந்தது. நாட்டில் சுமுக நிலையற்ற காலம் அது. இருள்வதற்கு முன்னரே மக்கள் வீடுகளுள் அடங்கிப்போய்விடுவதற்கு அதுவும் ஒரு காரணமாயிருக்கலாம். இன்னும் வெட்டப்படாத காட்டு மரங்களும் பற்றை புதர்களும் இரு மருங்கும் கொண்ட வீதியில், இந்தத் தனிமை வேளையில் எனது ஐம்பது சீசீ ஸ்கூட்டரில் பயணித்து வருவது சற்றுத் திரில்லாகக்கூட இருந்தது. முகத்திலடிக்கும்…

  10. வெண் நிலவுகள் பசுந்திரா சசி (U.K.) " பிச்சை எடுக்கிறதுக்காகவே பிள்ளையை பெறுவது , பிறகு - பேத்தி ,பேத்தி - எண்டு சொல்லித்திரியிறது 'பேத்தியின்ர அப்பாவும் நான் தான் ! 'எண்டு சொல் வேண்டியது தானே...." என எரிந்து கொண்டு பெருமாள் கோயில் படி ஏறினார் ஒரு நடுத்தர வயது பெண் – அந்த பிச்சைக்காற முதியவருக்கு இது ஒன்றும் புதிதில்லை . சேற்றில் தோய்த்தெடுத்த கோலத்தில் இருந்தாலும் பார்ப்பதற்கு அழகான சிலை போல் ஒரு கையில் பிள்ளையும் மறு கையில் பிச்சைத்தட்டும் ஏந்திய படி இருக்கும் மகளையும் , மனம் கல்லாகி மரத்துப் போய் எதற்கும் பதிலோ இல்லை கேள்வியோ கேட்காத அவரையும் இப்படி ஊரார் எள்ளி நகை யாடுவது இன்று நேற்று அல்ல இரண்டு வருடத்திற்கு மேலாக நடக்கிறது . 'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொ…

  11. வழமை போல.. பார்க்கில் ஓடிக்கொண்டிருந்தேன். எதிரே ஒரு நடுத்தர வயதுக்காரர் வந்து கொண்டிருந்தார். அவர் என்னைக் கண்டதும் இல்லாமல்..ஏதோ தெரிந்தவர் போல.... தம்பி கொஞ்சம் நில்லும்... என்றார் தமிழில். நானோ காதில் விழாதது போல என் கருமத்தில் கண்ணாய் இருந்தேன். எனக்கு முன்னால் ஒரு அழகான பிகரு வேற ஓடிக் கொண்டிருந்தது. அதை எப்படியாவது கடந்து போயி.. ஒருக்கா.. அந்தப் பிகரின்.. மூஞ்சியை பார்த்திடனும் என்ற கொள்கை வெறியோட வேற.. நான்.. ஓடிக் கொண்டிருந்தேன். நான் என் கொள்கையில் நீண்ட நேரம் செலவழிக்கல்லை. சிறிது நேரத்துக்குள்ளாகவே.. இலகுவாகவே அந்த பிகரை விரட்டி பிடிச்சு.. கடந்து போய்.. திரும்பிப் பார்த்தும் விட்டேன். சும்மா சுமாரான பிகர் தான். பார்க்க தமிழ் பிகர் போல இருந்திச்சு. நாட்…

  12. ஒரு செம லவ்வும் சுமார் எதிரியும் வா மணிகண்டன் பத்து வருடங்களுக்கு முன்பாகக் கூட இந்த இடம் பொட்டல் காடாகத்தான் இருந்திருக்கும்.இப்பொழுது பாருங்கள்- நெடு நெடுவென வளர்ந்த மூன்று நான்கு பனைமரங்களை ஒன்றுக்கு மேல் ஒன்றாக நட்டுவைத்த உயரத்திற்கு கட்டடங்கள். அதுவும் துளி இடைவெளி இல்லாமல் வதவதவென கட்டி வைத்திருக்கிறார்கள். இங்கு ஒவ்வொரு சதுர அடியுமே காசுதான். மூன்றுக்கு மூன்று இடத்தில் ஒரு பெட்டிக்கடை வைத்தால் கூட சிகரெட்டும், ப்ளாஸ்க்கில் டீயும் விற்று வெகு சுலபமாக பிழைத்துக் கொள்ளலாம். பிறகு எப்படி இடைவெளி விடுவார்கள்? சந்து பாக்கியில்லாமல் வளைத்துவிட்டார்கள். இதெல்லாம் பாக்மெனி டெக் பார்க் வரும் வரைக்கும்தான். இருங்கள். எந்த ஊர், எந்த ஏரியா என்ற எந்தத் தகவலுமே சொல்லாமல் நான் …

  13. கோவையில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனை ஒன்றில் சமீபத்தில் நிகழ்ந்த சம்பவம் இது. செல்வந்தர் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் அன்னையை, கவலைக்கிடமான நிலையில் அழைத்து வந்திருந்தனர். தீவிர அறுவை சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அம்மையாருக்கு, முக்கியமான அறுவை சிகிச்சை ஒன்றை மறுநாளே செய்ய வேண்டிய கட்டாயம். அந்த அறுவை சிகிச்சை சிக்கலானதும்கூட. தாயார்மீது பாசம் மிக்க அந்த சகோதரர்கள், தங்கள் இஷ்ட தெய்வமாகிய முருகனை பிரார்த்தனை செய்து கொண்டே கண்ணீருடன் அறுவை சிகிக்சைக்கு அனுப்பினார்கள். அறுவை சிகிக்சைக் கூடத்துக்குள் ஸ்ட்ரெச்சர் நுழையும்போதே, பக்கத்தில் இருந்த யாரோ ஒருவரின் பாக்கெட்டில் இருந்த செல்ஃபோனில், ரிங்டோன் ஒலித்தது…. “சஷ்டியை நோக்க சரவண பவனார்…” என்கிற கந்த ச…

  14. இறுதி வணக்கம் - சயந்தன் நான் பார்த்த கணத்தில், வளவன் தன் காலின் கீழே, பச்சைநிற ஈரலிப்பான முதுகில் கருமை நிறப் புள்ளிகளைக் கொண்ட தவளையின் மீது, கையில் ஏந்தியிருந்த உடைந்த கொங்கிறீட் கல்லை நசுக் என்று போட்டான். புளிச் என்ற சத்தம் கேட்டது போலிருந்தது. நான் ஒருவித அசூசையான உணர்வில் ஆட்பட்டு கண்களை மூடி பற்களைக் கடித்தேன். வளவனுக்கு ஆறு வயதும் முழுதாக நிரம்பியிருக்கவில்லை. அவன் எனக்கு மருமகன் முறை, அக்காவின் மகன். பற்றிப்பிடித்திருந்த கை தளர்ந்தால் எந்நேரமும் இடுப்பில் வழியத் தயாராயிருந்த ஒரு தொளதொளத்த காற்சட்டையை மட்டும் அணிந்திருந்தான். உருண்டையான முகத்தில், அலட்சியமான பெரிய கண்களோடு காலையிலிருந்து அவன் வளவு முழுவதும் திரிகிறான். நான் அவனுக்குப் பின்னாலேயே அலைகின்றேன். …

    • 2 replies
    • 1.5k views
  15. Started by கோமகன்,

    தங்கரேகை புனிதவதி ரீச்சருக்குக் காதுகள் கொஞ்சம் மந்தம் எனச் சொல்லி ஆரம்பித்தான் கதைசொல்லி. புனிதவதியைத் தேடி வந்திருந்த விடுதலைப் புலிகள் சொன்னது அவருக்குச் சரியாகக் கேட்கவில்லை. எனினும் வந்திருந்த இருவரையும் பார்த்து ‘வாருங்கள்‘ என்பதுபோலத் தலையாட்டிச் சிரித்தவாறே அவர்களை வரவேற்றுவிட்டு, முற்றத்தில் இருந்த இரண்டு ப்ளாஸ்டிக் நாற்காலிகளைக் காட்டி வந்தவர்களை உட்காரச் சொன்னார் புனிதவதி. வந்தவர்கள் புனிதவதி ரீச்சரை உட்காருமாறு சொல்ல, எதுவும் பேசாமல் புனிதவதி தலையை ஆட்டிவிட்டு முற்றத்து மண்ணில் மெல்ல உட்கார்ந்துகொண்டார். புலிகள் நாற்காலியில் உட்காரத் தயங்கி நின்றார்கள். அவர்களில் ஒருவன் புனிதவதியை நாற்காலியில் உட்காருமாறு கையைக் காட்டி மறுபடியும் சொன்னான். அவனது …

  16. அது நான்தான் இரவு ஒன்பது மணியாகிவிட்டது. ரொறொன்ரோ சூரியனின் சாய்ந்த கிரணங்கள் அவன் கண்களைக் கூசவைத்தன. நெடுஞ்சாலையில் காரை வேகமாக விமான நிலையத்தை நோக்கி ஓட்டினான் வசந்தகுமாரன். அவனுடைய புது மனைவி தன்னந்தனியாகக் கொழும்பிலிருந்து வருகிறாள். அவள் வரும்போது அவன் அங்கே நிற்க வேண்டும். 13 மாதத்திற்குப் பிறகு மனைவியைப் பார்க்கப்போகிறோம் என்று நினைத்தபோது மனது குறுகுறுவென்று ஓடியது. காரை மூன்றாவது தளத்தில் நிறுத்திவிட்டுத் தரிப்புச் சீட்டில் காரை நிறுத்திய இடத்தைக் குறித்து வைத்துக்கொண்டான். புது மனைவியுடன் திரும்பும்போது காரைக் கண்டுபிடிக்க அலையக் கூடாது. வருகைக்கூடத்தில் நிறைய ஆட்கள் சேர்ந்துவிட்டார்கள். அவனுக்குப் பக்கத்தில் ஒருவர் உரத்துப் பேசிக் கொண்டிருந்தார். அவ…

  17. இது எப்ப நடந்தது என்று சரியாக என்னால் சொல்ல முடியாவிட்டாலும் எனது பத்து வயதுக்கு உட்பட்ட காலத்தில் தான்.அந்த காலத்தில் நாங்கள் எதாவது குழப்படியோ எங்கள் பாதுகாவலரின் விருப்பத்துக்கு மாறாகவோ செய்தால் பிள்ளை பிடிகாரரிடம் பிடித்து கொடுத்து விடுவோம் என்று வெருட்டுவதுண்டு.சந்திரனை காட்டி சோறு ஊட்டுவதுமுண்டு .இப்படி வெருட்டுவதுமுண்டு.இதன் உண்மை பொய்மை தெரியாததால் மகிழ்வதுமுண்டு வெருள்வதுமுண்டு .பிள்ளை பிடிகாரர் என்று யாரை தெரிவார்களென்றால் கொஞ்சம் குரூரம் ,கொஞ்சம் முரடன் ,பொதுவாக சராசரிகளின் தோற்றமில்லாதவர்களைதான்.றோட்டாலை வலது பக்கம் போகவேணும் இடது பக்கமாக வரணும் கரையாலை போகணொம் வான் பஸ் கார் வரும் கவனம் என்று ஆயிரம் உபதேசம் செய்து பிள்ளையை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களுக…

  18. Started by nunavilan,

    ஆடாத நடனம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது வரும் செல் அழைப்பு எரிச்சல் ஊட்டுகிறது. கதிர்கதறிக் கொண்டிருந்த செல்லின் வால்யூமை குறைத்தான். எதிர் சுவரில் மணி பார்த்தான். “ஆறு”. இந்த அதிகாலையில் அழைப்பது யார்? குன்றத்தில் இருந்து மோகன். சோம்பலாக எடுத்து “சொல்டா..” என்றான் ஒரு சின்ன மௌனத்தின் பின் மோ கன்விசும்புவது தெரிந்தது. “கதிரு….சித்தப்பு இறந்துட்டாப்ளடா..” என்றான். ஒருகணம் தலை சுற்றுவது போல இருந்தது கதிருக்கு. சித்தப்புவின் சிரித்தமுகம் நிழலாடியது. நாக்கு லேசாய்க் குழறியது. “என்னடா சொல்றே..? எப்படா..?” “ கதிரு. . . ரூம்லேருந்து ரெண்டு நாளா இறங்கிவரவே இல்லையாம். ஏதும் உடம்புக்கு முடியலையான்னு கேக்க நேத்து நைட்டு நம்ம டீக்கடை பன்னீரு பார்த்துருக்காரு. கதவு அடை…

    • 0 replies
    • 920 views
  19. நன்றி: விகடன் இணைப்பு: http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=90628 எங்கள் ஊர் ரொம்ப அழகான ஊர். எங்கள் அக்ரஹாரத் தெரு ரொம்ப அழகானது. எங்கள் அக்ரஹாரத்து மனிதர்களும் ரொம்ப அழகானவர்கள். அழகு என்றால் நீங்கள் என்னவென்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களோ, எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை ஒன்றின் நினைவே சுகமளிக்கிறது என்றால்... அது ரொம்ப அழகாகத்தான் இருக்க வேண்டும். 35 வருஷங்களுக்கு முன்னால் அங்கே அந்தத் தெருவில் ஒரு பழங்காலத்து வீட்டின் கர்ப்பக் கிரகம் மாதிரி இருளடைந்த அறையில் பிறந்து, அந்தத் தெருப் புழுதியிலே விளையாடி, அந்த மனிதர்களின் அன்புக்கும் ஆத்திரத்துக்கும் ஆளாகி வளர்ந்து, இப்போது பிரிந்து, 25 வருஷங்கள் ஆன பிறகும் அந்த நினைவுகள், அனுபவங…

  20. காட்சிப் பிழை கே.எஸ்.சுதாகர் பாலகிருஷ்ணனின் மாமா அமிருக்கு ஒரு விருந்தாளி வந்திருந்தார். ‘ஹோல்’ மகிழ்ச்சியும் சிரிப்புமாக களை கட்டியிருந்தது. விருந்தாளி, பாலகிருஷ்ணனையும் அவனது மனைவி கலைச்செல்வியையும் பார்ப்பதற்குத்தான் வந்திருக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவர்கள் இருவரும் இலங்கையிலிருந்து கனடாவிற்கு வந்திருந்தார்கள். கனடாவில் கலைச்செல்வியின் அப்பாவும் அண்ணனும் இருக்கின்றார்கள். வவனியாவிலிருந்து கொழும்பு வந்து பின்னர் கனடா வந்த களைப்பு இன்னமும் தீரவில்லை. குளியலறைக்குள் பாலகிருஷ்ணன் ‘ஷேவ்’ செய்து கொண்டிருந்தான். முப்பது வருடங்களாகியும் பாலாவின் முகத்தினில் இருந்த தழும்புகள் மறையவில்லை. அதை தடவிப் பார்த்தான். காலம் போக வடுக்கள் எல்லாம் மறைந்து, உடம்பில…

  21. ஆண்மை - எஸ்.பொன்னுத்துரை ஈச்சேரில் விழுந்த” சந்திர சேகரம் கோழி உறக்கத்தை வாலாயம் பண்ணி, அதனைச் சுகிக்கின்றார். யாழ்தேவியிலே பகற் பயணம். அகோர வெயில். காட்டு வெக்கை. இத்தனைக்கும் மேலாகச் சிவசம்பு சாப்பாட்டுக்கடைச் சோற்றைக் கொறித்தார். மனசார ஒரு மயக்கம். சாய்வு நாற்காலியிற் தாம் தூங்குவதான நினைப்பே அவருக்கு யாரோ உடம்பைப் பிடித்து விட்டது போன்ற சுகத்தைக் கொடுத்தது. வள்ளிசாக மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், அவருடைய குடும்பம் தாயடி வீட்டிலே வந்திருக்கிறது. பெத்துப் பெருகிய குடும்பம். அவருடைய மனைவி சரஸ்வதி மூலம் ஐந்து பிள்ளைகளையும் பெட்டைக்குஞ்சுகளாகவே பீச்சி விட்டாள். அரிய விரதங்கள் பிடித்து, இருக்காத தவம் எல்லாம் கிடந்து, கண்ட கண்ட தெய்வங்களையெல்லாம் கையெடுத்துக் கும…

  22. அதிசயம் யேசு மாட்டு கொட்டகையில் பிறந்தது மட்டுமல்ல அப்படி ஒன்று எங்கள் வீட்டிலும் நடந்தது.அது நடந்ததுக்கு தடங்கள் இல்லை இப்ப என்ற மாதிரி,எங்கள் வீட்டு அதிசயத்துக்கான தடங்களும் இப்ப இல்லை .என்றாலும் இன்று போல அந்த நாள் அது நடந்த நேரம் இப்பவும் என் முன் திரைபடம் போல ஓடி கொண்டிருக்கிறது ..வேறு ஒன்றுமில்லை எனக்கு அதிசயமாக இருந்தது .உங்களுக்கு எப்படி இருக்கும் என்று தெரியாது . நத்தார் பிறக்கும் இரவு ஒரு பதினொரு பன்னிரண்டு மணிக்கும் இடையில் தான் அது நடந்தது என்று நினைக்கிறன் .கொட்டும் மழை வேறை அன்றைய காலையிலிருந்து. அடியென்றால் அந்த மாதிரி விடாமால் ஓரே அடி .அந்த மழை எல்லாரையும் வெளிக்கிட விடாமால் வீட்டுக்குள்ளை அன்று முழுவதும் கட்டி போட்டது போதாதுக்கு அன்று இரவும் நித்திரை கொள்…

    • 13 replies
    • 1.3k views
  23. சொல்லப்பட்ட கதையும், சொல்லில் வராத கதைகளும் ஆர்.அஜய் சிறுகதையோ, நாவலோ அது தான் வெளிப்படையாக சொல்லும் விஷயங்களோடு, நேரடியாகச் சொல்லாமல் வாசகனின் கற்பனையையும் நுண்ணுணர்வையும் செயலிறங்கக் கோருகிற சில விஷயங்களையும், அவற்றுக்கான மௌனங்களையும் இடைவெளிகளையும் தன்னுள் கொண்டிருக்க வேண்டும் என்பது ஒரு எதிர்பார்ப்பாக உள்ளது, இது நல்ல படைப்பின் ஒரு அடையாளமாகவும் கொள்ளப்படுகிறது. சிறுகதையை எடுத்தால், அதன் நீளமும் காலமும் குறுகியவை என்று துவக்கத்திலேயே வரையறுக்கப் பட்டுவிடுவதால் அது பல பாதைகளில் கிளைக்கும் சாத்தியத்தை தன்னுள் இயல்பாகவே கொண்டுள்ளது. ஆலிஸ் மன்றோ முதலானவர்கள் எழுதும் நெடுங்கதைகளைத் தவிர்த்து, பொதுவாக ஒரு சிறுகதையின் நீளம் ஐந்து முதல் பத்து பக்கங்கள் கொண்டதாகவும…

  24. (2004, டிசம்பர் 26ம் தேதி... சுலபமாக மறக்கக் கூடிய நாளா! உயிர்கள் பல குடித்து கடல் தன் வயிறு நிரப்பிய சுனாமி சோக நாளாயிற்றே! அதன் பாதிப்பில் அப்போது எழுதிய சிறுகதை.) அது ஒரு ~சொக்கலேற்~ தொழிற்சாலை. ஏறக்குறைய ஆயிரம் தொழிலாளர்களைக் கொண்ட தொழிலகம். அந்த நகரத்தில் அமைந்துள்ள குறிப்பிட்டுக் கூறக்கூடிய பெரிய தயாரிப்பு ஆலை. பிற நாடுகளில் இருந்து பெரிய சதுரப் பாளங்களாக வரும் கொக்கோக் கட்டிகளை அரைத்துப் பாணியாகவும் தூளாகவும் மாற்றும் பகுதி அவற்றுடன் விதம்விதமான அளவுகளிலே பல சுவையான பதார்த்தங்களை ~சொக்கலேற்~ வகைகளுக்கு ஏற்ப கலக்கும் பகுதி. அவ்வாறான கலவைகளை அவற்றுக்குரிய வடிவமைக்கும் இயந்திரங்களின் மூலம் உருவாக்கி குறிப்பிட்ட வடிவங்களில் வெட்டி தானாகவே அந்தந்த வர்ண கடதாசிகளா…

    • 15 replies
    • 1.7k views
  25. Started by sOliyAn,

    அந்த வானுயர்ந்த மாடிக்கட்டிடத்தின் முன்வாசல் கண்ணாடிக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தார் றொபின்சன். தனது எதிர்பார்ப்பு நிறைவேறும் என்ற திடமான நம்பிக்கையுடன் சற்று நேரத்துக்கு முன்பு அந்த வீட்டினுள்ளே சென்றவர், அவை யாவுமே 'பொல, பொல'வென்று பூகம்பத்தால் சின்னாபின்னமாகிச் சிதறுண்ட கட்டிடங்களாகப் பொடிப்பொடியாகிவிட்ட அதிர்வுடன் திரும்பி வந்தார். வரப்போகும் பொழுதுகள் மனக்கண்ணிலே வந்து நின்று பயமுறுத்த, எதுவுமே சிந்திக்கத் திராணியற்றவராய் மூளையே விறைத்து மரத்தாற்போன்ற உணர்வுடன் முன்னால் நீண்டு விரிந்துசெல்லும் வீதியைப் பார்த்தார். வாகனங்கள் வரிசையாகச் சென்றுகொண்டிருந்தன. வீதியின் அருகால் பரபரப்பாகச் செல்லும் மக்கள் கூட்டம் கைகளில் பொருட்கள் நிறைந்த 'பிளாஸ்ரிக்' பைகள…

    • 2 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.