கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3073 topics in this forum
-
நட்சத்திரங்களின் வாக்குமூலம் by பிரசன்ன கிருஷ்ணன் இதழிலும், இடது கன்னத்திலும் மிருதுவான முத்தங்களை வழங்கி கழுத்துக்குச் சென்று வியர்வை வாடையைப் பொருட்படுத்தாது கீழிறங்கினான். முத்தமிட்டப்படியே அவள் மார்பகங்களுக்குச் சென்றடைந்தான். அவ்வப்போது தலையைத் தூக்கி செயலிலிருந்து விடுபட்டு அவள் முகம் காணவும் தவறவில்லை. கண்கள் சொக்கி மோனத்தில் இருந்தாள். அவளின் மேலாடையைக் களைய முற்படும் போதே அவனுள் எழுந்த படபடப்பு அவனைத் தொந்தரவுக்குள்ளாக்கியது. எவ்வகையிலாவது இம்முறை மன வேலியை கடந்து சென்று விட வேண்டும் என்றெண்ணி முனைப்புடன் கூடலில் ஈடுபடலானான். மேலுள்ளாடையையும் அவிழ்த்து அவள் மார்பகங்களைத் தற்போது, அரிதாக நடைபெறும் ஒரு நிகழ்வை கண்டதைப் போல் வெறித்துக் கொண்டிருந்தான். …
-
- 2 replies
- 1.3k views
-
-
பாக்கி ‘‘என்னங்க, ஏதோ அன்பா எங்க அம்மாவை அழைச்சுட்டு வந்திருப்பீங்கனு நினைச்சேன். ‘வரதட்சணையா தர வேண்டிய பாக்கிப் பணத்தை எடுத்து வையுங்க... இல்லாட்டி எங்க வீட்ல வந்து வேலைக்காரியா இருந்து அதைக் கழிச்சுடுங்க’னு சொல்லிக் கூட்டிட்டு வந்தீங்களாமே..? எங்க அம்மாவை வேலைக்காரியா நினைக்கிற உங்களுக்கு நான் எப்படி பொண்டாட்டியா இருக்க முடியும்? இனி எனக்கும் இந்த வீட்ல வேலை இல்லை. நாங்க ரெண்டு பேருமே கிளம்புறோம்!’’ - கணவன் சித்தேஷிடம் பத்மா எகிறிக் குதித்தாள்.அவளைத் தனியே அறைக்குள் அழைத்துப் போய்ப் பேசினான் சித்தேஷ். ‘‘நமக்கு கல்யாணமாகி ரெண்டு வருஷத்துக்கு மேல ஆகிடுச்சு. வரதட்சணை பாக்கியிருக்குறதால இந்த வீட்டுப் பக்கமே வராம இருக்காங்க உ…
-
- 7 replies
- 1.5k views
-
-
பிரிகூட்டில் துயிலும் விதைகள் - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... பாப்லோ அறிவுக்குயில், ஓவியங்கள்: ம.செ., சிறு வட்டமாகச் சுழன்று, மெள்ள விரிவடைந்து மேலெழும்பிய 'மூக்கரா காற்றின்’ ஒலியால் மிரண்ட ஆடுகள் எல்லாம், சருகுகளையும் குப்பைக் கூளங்களையும் உள்ளிழுத்தபடியே மிக வேகமாகச் சுழல்வதைக் கண்டு, தலையைத் தூக்கிப் பார்த்த மறுகணமே தீய்ந்துகிடந்த புல்பூண்டுகளைக் கரண்டத் தொடங்கின. தரிசு நிலம் எங்கும் வெயில் கொளுத்தியது. கோவணத்துணியாக விழுந்திருந்த நிழலில் ஒதுங்கிய பெருமாள், ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். செம்மறிகள் என்றால் மேய்ப்பதில், வளைப்பதில் இவ்வளவு சிரமம் இருக்காது. இவை யாவும் வெள்ளாடுகள்... சிறிது நேரம் கண்ணயர்ந்தாலோ, தலை மற…
-
- 0 replies
- 2k views
-
-
கண்டி வீரன் ஷோபாசக்தி சிலோனில் முன்னொரு காலத்தில் கண்டி வீரன் என்றொருவன் இருந்தான். அவனுக்கு ஒரு தமிழ் விடுதலை இயக்கம் மரணதண்டனையைத் தீர்ப்பளித்ததாம். பின்னொரு சந்தர்ப்பத்தில் அந்த மரணதண்டனையை அந்த இயக்கம் விலக்கியும் கொண்டதாம். கண்டி வீரனின் சரித்திரம் பற்றி இதற்கு மேல் எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் இத்தகைய சம்பவம் எங்களது போராட்ட வரலாற்றில் வெகு அபூர்வமாகவே நிகழ்ந்த ஒன்று. இயக்கங்களின் கைகளில் சிக்கியவர்கள் மீண்டதான நிகழ்வுகள் வெகு அரிதே. குறிப்பாக மரணதண்டனை விதிக்கப்பட்ட பின்பாக அத்தண்டனை விலக்கிக்கொள்ளப்பட்ட நிகழ்வு இது ஒன்றுதான். நான் கண்டி வீரனைப் பற்றிக் கேள்விப்பட்ட நாளிலிருந்தே இது எப்படி நடந்திருக்கக் கூடும் என யோசித்து வந்திருக்கிறேன். கண்டி வீரனின் …
-
- 4 replies
- 816 views
-
-
'கந்தசாமி எம்.எல்.ஏ., பதவியிலிருந்து விலகல். கட்சியிலிருந்தும் விலகினார்' என்று டி.வி-யில் பிளாஷ் நியூஸ் ஓடியது. தொண்டர்கள், மக்கள், பத்திரிகையாளர்கள் என கந்தசாமியின் வீடே நிரம்பி வழிந்தது. கந்தசாமி வெளியில் வந்தார். அவரை நிருபர்கள் மொய்த்தனர். "ஏன் சார் திடீரென்று இந்த ராஜினாமா?" "நான் கடந்த மூன்று வருடமா எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வாக இருக்கேன். ஆனால், என்னை நம்பிவாக்களித்த மக்களுக்கு என்னால் எதுவுமே செய்ய முடியல. மக்களுக்கு பயன்படாத இந்த பதவி இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன என்று முடிவு செய்து ராஜினாமா செய்து விட்டேன்." "கட்சியிலிருந்தும் விலகியிருக்கீங்களே?" "நான் என் முடிவை என் கட்சி தலைமையிடம் சொன்னபோது என் தலைமை அதை ரசிக்கவில்லை. மாறாக, நான…
-
- 2 replies
- 1.3k views
-
-
இறுதி யுத்தத்தின் பின்னான நாட்களில் அனைவரும் வவுனியா முகாம்களிற்கு கொண்டு வரப்பட்டிருந்தபோது உணவு, உடை, இருப்பிடம்,தண்ணீர் என அனைத்தையும் பெறுவதற்கு பெரிய நெருக்கடியை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. முழுக் குடும்பமுமே இவற்றை பெறுவதற்கு ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டியிருந்தது. பெண்கள் தண்ணீர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் வழங்கும் பொருட்களின் வரிசையில் காத்திருக்க, ஆண்கள் உணவு வண்டிகளின் பின்னால் ஓடி உணவு பெறுவது, கூடாரமமைப்பது, பொருட்கள் வாங்க அலைவது எனத் திரிந்தார்கள். இந்த நாட்களில் அனைவருக்கும் இருந்த ஒரே சந்தோசமெனில், யுத்த வலயத்தில் பிரிந்த நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் பற்றிய தகவல்களே. ஓவ்வொருவரும் ஒவ்வொரு முகாம், வலயம், கூடாரமாக அலைந்து திரிந்தோம். ஒவ்வொரு காலடி வைக…
-
- 0 replies
- 1k views
-
-
யார் புத்திசாலி? கதையாசிரியர்: சூர்யா அலுவலகத்தின் ஒட்டு மொத்த பார்வையும் ஒரே நேரத்தில் ஈர்க்கக் கூடிய ஆற்றல் அவளிடம் அப்படி என்ன இருக்கிறதெனத் தெரியவில்லை. அவள் என்னவோ பார்ப்பதற்கு சுமாரான அழகோடுதான் இருக்கறாள். சரி………சரி…… நான் பொய் சொல்ல மாட்டேன். (மானசீகமாக சத்தியம் செய்து கொண்டு 2 மாதங்கள் ஆகிறது. எல்லாவற்றிற்கும் காரணம் அந்த சத்திய சோதனை புத்தகம்தான்) அவள் சற்று கூடுதலான அழகோடுதான் இருக்கிறாள். அதற்காக ஒட்டு மொத்த அலுவலகமும் அவள் காலடியில் விழுந்துவிட வேண்டுமா என்ன?. அனைவரும் தன்னைப் பார்த்து ரசிக்கிறார்கள் என்கிற கர்வம் அவளது முகத்தில் அப்பட்டமாகத் தெரிகிறது. என்னவொரு கர்வமான நடை அது. அதை கூட கவனிக்கமல், அவளது கர்வத்தைக் கண்டு கோபப்படாமல், இதோ அருகில்…
-
- 3 replies
- 1.1k views
-
-
நிலங்கீழ்வீடு பொ.கருணாகரமூர்த்தி எமது 15 வருஷ கனடியவாழ்வின் அருஞ்சேமிப்பில் இந்தவீட்டை நோபிள் ரியல் எஸ்டேட்ஸ் என்கிற ஒரு குழுமத்தின் அனுசரணையுடன்தான் வாங்கினோம். இங்கே வீடுகளைவாங்கும் தமிழர்கள் அநேகமாகச் செய்வதைப்போலவே நாங்களும் இவ்வீட்டை நிலவறைகள் உள்ள வீடாகத்தேர்வுசெய்தோம். ஆனாலொன்று எப்படி ஒரு அடுக்ககத்தின் உச்சிமாடத்தில் கூரைமுகடுகளுக்குள் அமைந்த வீடுகளை குடியிருப்பாளர்கள் தவிர்த்துக்கொள்வார்களோ, அதேபோல் இந்த நிலங்கீழமைந்த வீடுகளும் குடியிருப்பாளர்களின் முதல் விருப்புக்குரியவையல்ல. நிலங்கீழ்வீட்டையும் யாருக்காவது வாடகைக்கு விட்டால் அவர்கள் தரக்கூடிய வாடகையும் எமது மாதாந்த தவணைத்தொகையைச் செலுத்துவதற்கு உதவும் என்பதே இவ்வீட்டைத் தேர்வுசெய்ததின் சூக்…
-
- 1 reply
- 1k views
-
-
அன்று ஒரு நாள் ஒர் முந்திரிகை தோட்டத்தில் முந்திரிகை காய்த்தி குலுங்கியது.அங்கு ஒரு செம்மறி தோல் போர்த்த நரி வந்தது. மிகுதி நாளை எதிர்பாருங்கள்.
-
- 9 replies
- 1.7k views
-
-
கண்ணுக்குத் தெரியாத நட்சத்திரம் ``சார், சொல்லச் சொல்லக் கேட்காம வெளியே அருணகிரி உங்க காரைக் கழுவிக்கிட்டு இருக்காரு. என்ன செய்றதுனு தெரியலை’’ என்றான் உதவி இயக்குநர் ஸ்ரீ. மகேந்திர குமாருக்கு ஆத்திரமாக வந்தது. ``அந்த ஆள் என்ன எழவுக்கு இங்கே வந்து உசுரை எடுக்கிறான். அவனை யாரு கார் கழுவச் சொன்னது?’’ எனக் கத்தினான். ``ஆளு செம போதை. சட்டைகூடப் போடலை. வெறும் பனியனோட வந்திருக்கார்’’ என்றான் சேகர். ``இருக்கிற இம்சை போதாதுனு இது வேறயா?’’ - சலிப்புடன் அறைக் கதவைத் திறந்து படி இறங்கி கிழே வரத் தொடங்கினான் மகேந்திர குமார். அவன் தமிழ்த் திரையுலகில் தொடர்ந்து ஆறு வெற்றிப் படங்களைத் தந்த உச்ச இயக்குநர். கீழே அவனது காரைத் துடைத்துக்கொண்டிருந்த…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஜெர்மன் விசா - சிறுகதை அ.முத்துலிங்கம், ஓவியங்கள்: ஸ்யாம் ஒருவன் வீட்டைவிட்டு ஓடுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். பரீட்சையில் சித்தியடையாதது, காதல் தோல்வி, அம்மா ஏசியது, அப்பா அடித்தது, கடன் தொல்லை, விரோதிகளின் சதி... இப்படிப் பலவற்றைச் சொல்லலாம். நான் வீட்டைவிட்டு ஓடியதற்குக் காரணம் ஓர் ஆடு. வீட்டைவிட்டு மட்டும் அல்ல; நான் நாட்டைவிட்டே ஓடினேன். அதைச் சொன்னால் ஒருவருமே நம்புவது இல்லை. ஆகவே, அது உண்மை இல்லை என்று ஆகிவிடுமா? வருடம் 1979. எனக்கு வயது 15. நெடுந்தீவு மகாவித்தியாலத்தில் படித்துக்கொண்டிருந்தேன். வகுப்பில் முதலாவதாக வராவிட்டாலும், ‘நீ சுயமாகச் சிந்திக்கிறாய்’ என்று வாத்தியார் என்னைப் பாராட்டியி…
-
- 1 reply
- 2.4k views
-
-
அப்சரஸ் வந்திருந்தாள் தனது புத்தம் புதிய வீட்டின் சமையல் அறைக்குள் அந்த தவளையைப் பார்த்ததும் ராஜுவுக்கு அறுவறுப்பாக இருந்தது. வந்த அந்த தவளை அவனை சற்று அலட்சியமாக பார்த்து விட்டு தனது வழியில் தத்தி தத்தி செல்ல ஆரம்பித்தது. அந்த தவளை பாத்திரங்களின் உள்ளே சென்று ஒளிந்து கொள்ளும் வாய்ப்பு இருந்ததை உணர்ந்த ராஜு வேகமாக அந்த தவளையை தவளையை மிதித்து பலமாக நசுக்கத் தொடங்கினான். சில வினாடிகளுக்கு பின் தவளை இறந்திருக்கும் என்று திருப்தி அடைந்து காலை நகர்த்தியதும்தான் தவளையின் உடலில் இருந்து புகை வருவதை உணர்ந்தான். அவன் என்ன நடக்கிறது என்று யோசிப்பதற்குள் புகை சமையல் அறை முழுவதும் பரவியது. புகைக்கு அவனுக்கு மூச்சு முட்டியது.. அப்போதுதான்…
-
- 0 replies
- 1.6k views
-
-
பரமேஸ்வரி அத்தையின் மகள் - சிறுகதை சிறுகதை: சுகா, ஓவியங்கள்: செந்தில் பரமேஸ்வரி அத்தை சரியாகத்தான் சொல்லியிருக்கிறாள். அசோக் நகரில் உள்ள புகழ்பெற்ற பள்ளியை அடுத்த வலது, பிறகு இடது வளைவில் உள்ள மெடிக்கல் ஸ்டோர், பல் மருத்துவமனையைத் தாண்டி நான்காவது பில்டிங். அத்தை சொன்ன மாதிரியே செங்காமட்டை கலரில் பெயின்ட் அடித்திருந்த அப்பார்ட்மென்ட்டை லட்சுமணனால் எளிதாகக் கண்டுபிடிக்க முடிந்தது. வாசலில், அடையாளத்துக்குச் சொல்லப்பட்டிருந்த மாநகராட்சியின் பச்சை வண்ணக் குப்பைத் தொட்டியும் இருந்தது. ‘`இந்த பில்டிங்தான்'’ என்றபடி ஆட்டோவை நிறுத்தி இறங்கினான். காம்பவுண்டையொட்டி அமைந்திருந்த செக்யூரிட்டி அறையில் உள்ள பதிவேட்டில் கையெழுத்திட வேண்டியிருந்தது. `‘யார் வீ…
-
- 1 reply
- 20.3k views
-
-
பயங்கரமான அலுப்பு… தனியார் வைத்தியக்கல்லூரிக்கு எதிராக பதினைந்து கிலோ மீட்டர்கள் கால் தேய்த்தது, அதற்கான பலனை கொடுத்துக்கொண்டிருந்தது. அடமென்ரியம் உலோகத்தை உருக்கி காலுக்குள்ளே வார்த்தது போல் மலையாய் கனத்தது கால். ஆறு மணி நேர அளவான நித்திரை ஒன்றே அப்போதைக்கு என்னுடைய ஒரே தேவையாக இருப்பதை உணர்ந்து கொண்டு ஹொஸ்டலுக்கு ஏறும் மலைப்படிகளை ஊன்றிக்கொண்டிருந்தேன்… பேராதெனிய என்ற சிங்கள வார்த்தையால் பேராதனை என்ற தமிழ் உரு கொடுக்கப்பட்டிருந்த பிரதேசம் அது. மத்தியமாகாணத்தில் அதிக ஜீவன்களுக்கு அடைக்கலம் கொடுத்திருந்த அதை கண்டி மாவட்டத்தில் இருந்து தெற்குப்புறமாக ஆறுகிலோ மீட்டர்கள் சென்றால் அடையலாம்.. அதை என்பதை விட அவள் என்று விளித்தல் ரசமாக இருக்கும்.. எனக்கு நன்றாய்த்தெரிந்த வன…
-
- 0 replies
- 733 views
-
-
வதனியின் இதயத்தில் இனந்தெரியாதவொரு படபடப்பு. தான் செய்தது சரியா பிழையா என்பதை அவளால் தீர்மானிக்க முடியாமலிருந்ததே அதற்குக் காரணம். "நானுந்தான் எத்தனை எத்தனை வழிகளிலெல்லாம் முயன்றேன். ஒன்றுமே சரிவரவில்லை என்பதால்தானே இதைச் செய்யத் துணிந்தேன். அதனால் இது தவறே அல்ல!" அவள் மனதின் ஒரு பக்கம் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தது. "உன்னைப் போலவே மற்றவர்களும் நடந்துகொள்ள முயன்றால்? அதன் விளைவுகளை எண்ணிப்பார். தெரியாமல் செய்திருந்தால் அது பிழை. நீ திருந்திக் கொள்ள வாய்ப்புண்டு. நீயோ தெரிந்தே செய்துவிட்ட பிழையிது. இது பிழையென்றல்ல குற்றமென்று நீ சரியாகப் புரிந்து கொள்." வதனியின் மனச்சாட்சியின் மறுபக்கம் இவ்வாறு வலியுறுத்திச் சொல்லிக் கொண்டிருந்தது. தான் தங்கிய…
-
- 15 replies
- 2.4k views
-
-
டிஜிட்டல் செத்தவீடு! நேரம் அகாலத்தைக் கடந்திருந்தது. இன்னும் சிலமணித்தியாலங்களில் பொழுது பொலபொலவென விடிந்துவிடும். ஆனாலும் சூரியனின் கதிர்கள் பூமியைத் தொடுவதற்கிடையில் வேலை முடிந்துவிட வேண்டும் என்ற அவசரத்துடன் அந்த மோட்டார் சைக்கிள் பனியைக் குடித்துக்கொண்டு விரைந்து கொண்டிருந்தது. அரைமணித்தியாலப் பயணத்தின் பின் ஸ்ரூடியோ ஒன்றின் முன்னால் அந்தமோட்டார் சைக்கிள் தன் செயற்பாட்டை நிறுத்திக்கொள்ள, ஸ்ரூடியோவின் கதவு தட்டப்பட்டது. கொலைகளும் கொள்ளைகளும் மலிந்துவிட்ட சூழலில் நள்ளிரவு தாண்டிய பின்னர், இருட்டு வேளையில் கதவு பலமாகத் தட்டப்பட்டதால் அதற்குள் உறங்கிக் கொண்டிருந்த பணியாளர்கள் இருவருக்கும் ஈரற்குலை ஒருநொடியில் தீய்ந்தே போய்விட்டது. நடப்பது நடக்கட்டும் என்ற நினை…
-
- 0 replies
- 1.3k views
-
-
அப்பத்தான் அவன் ஏற வேண்டிய பஸ் பஸ் நிலையத்தை விட்டு கிளம்பியது. நகர்ந்து கொண்டிருந்தாலும் பின்னால் ஓடி தொங்கி புட்போர்ட்டில் ஏற முயன்றான். முடியவில்லை இவனுக்கு பேப்பே காட்டி விட்டு தூரத்தில் போய் கொண்டிருந்தது. அந்த டவுன் பஸ் நிலையத்தில்.. மற்ற இடங்களுக்கு போக வேண்டிய பிரிவுகளில் எல்லாம் கியூ நிரம்பி வழிந்தது. ஆக்களை இறக்கிய சுமைகளினால் ஆறுதல் எடுக்கும் பஸ்களுமாயும். சுமை தாங்க முடியாமால் http://sinnakuddy.blogspot.com/2007/08/blog-post_14.html
-
- 20 replies
- 3.7k views
-
-
காய்ச்சல்காரன் வாய் கைய்த்தது. உடல் கொஞ்சம் குளிர்ந்தது மாதிரி இருந்தது. வெளியில் நல்ல வெயில். வெளியில் கூவிய குயில்கூட கொஞ்சம் உசார் இல்லாமல் கூவியமாதிரி இருந்தது. அம்மாவிடம் கேட்டு ஒரு பிளேன் ரீ குடித்தாயிற்று. முற்றத்தில், நேற்று வந்திறங்கிய விறகுக் குற்றிகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. மண்ணிறம், சாம்பல் நிறங்களில் காட்டு மரங்கள், ஒருவித வாசனையுடன். சில குற்றிகளில் பச்சை இலைகள் ஒன்றிரண்டு இன்னும் காயாமல் இருந்தன. பத்து மணிக்குக் கிட்ட விறகு கொத்த ஆள் வரலாம். குவியலாக இருந்த விறகுக் குற்றிகளை உருட்டி விட்டேன். ஓணான் ஒன்று அவசரமில்லாமல் ஓடியது. "குரங்கு!, கால்ல விறகுக்குத்தி விழப்போகுது" அப்பா கத்திக் கேட்டது. அப்பா கோபமாக இருந்தால் 'குரங்கு, கழுதை' என வி…
-
- 1 reply
- 875 views
-
-
என்னடா பயல் இப்படி கதை விட்டுட்டு போறானே என்ற பாவனையில்..அங்கு கூடி நின்றவர்கள் ஒருதரை ஒருத்தர் பார்த்து கொண்டனர் .இப்படித்தான் பத்து பேர் வருவான் பத்து கதை சொல்லுவான் இதெயல்லாம் நம்பி கொண்டு இருக்க முடியுமா ..அண்டைக்கொரு நாள் பாருங்க ....இப்படித்தான் ஒருவன் வந்து ....என்று கொண்டு ...அங்கு சிறிது நேரம் நீடித்த இனம் தெரியாத அமைதியை இல்லாமால் ஆக்கி கொண்டு அங்கு சப்ளை செய்து கொண்டிருந்த ஒருவன் பேச்சை தொடங்க கல்லா பட்டையில் இருந்து ஒருவன் குரல் கொடுத்தான் கதையை விட்டுட்டு கஸ்டமரை கவனியடா என்று . .இப்படி வாறவர் போறவர் கதைக்கறவர் சிரிக்கிறவர் கேலி செய்கிறவர் சாப்பிடுறவர் குடிக்கிறவர் பத்திரிகை பார்க்க வருகிறவர் வெட்டி கதை அழப்பவர் எல்லாரோயும் வேடிக்கை பார்த்து பொழுது போக்…
-
- 11 replies
- 1.3k views
-
-
[size=5]ஊர்விட்டு ஓடோடிப் போனவர்கள்… கடைசிப்பிள்ளையும் கட்டுநாயக்கா தாண்டியபின் விடுதலை மோகத்தில் விழுந்தெழும்பியவர்கள்..... பிள்ளைகள் மூவரையும் பான்ரோம் காரில் Fபப்புக்கு அனுப்பிய பின் பொடியளின் வீரத்தில் புல்லரித்துப் போனவர்கள்…. நேற்று வந்திருந்தனர்… என்ன வரமாட்டன்..வரமாட்டன் என்டீங்கள்.. கடைசியில இந்தப்பக்கம்? இனியென்ன வரலாந்தானே…பிள்ளைக்கும் விடுமுறை… ஒரே “Bore” என்றான்… அதுதான் ஒருக்கா சுத்திப் பாத்திட்டுப் போவம் என்று….. ஓ…. எங்க போறதா உத்தேசம்? நிறைய இடம் plan பண்ணித்தான் வந்தனாங்கள்… தம்பி list ஐ எடு.. ஓ… பிறந்த இடம்….. தவழ்ந்த இடம்…. அப்பா படித்த பள்ளிக்கூடம்… அம்மாவுக்கு அனுமதி கிடைத்த பல்கலைக்கழகம்…. கடல் தாண்டி கண்ணில் வைக்க ஒரு கண்ணகி அம்மன்…. …
-
- 3 replies
- 975 views
-
-
மௌனங்கள் கலைகின்றன - 2 முட்டிய விழிகளும், முதல்வலியும் வெண்ணிலவும், விண்மீன்களும் வெட்கமின்றிப் பார்க்கக் கூரை ஆடையின்றி, அம்மணமாகவும், கரிய அழுக்குடனும் தங்கமண் தாம்பாளத்தில் என்வீடு. அப்பப்போ மேகங்கள் வடிக்கும் கண்ணீரில், வானம் பார்த்த என்னில்லம் இல்லாத ஒட்டடையையும், தன்மேல் படிந்திருக்கும் கரியையும் கழுவிக் கொள்ளும். எரிகாயங்கள் வடுக்களாக காலடியில் மேடுபள்ளமாக நவீன ஓவியங்கள்போல் சிந்தனைகள் பலவற்றைத் தூண்டும். அதே நேரம் மேகத்தின் கசிவை இந்தப்பள்ளங்கள் நான், நீ என்று போட்டிபோட்டு ஏந்தி ஜதியிடும். கதிரவனுக்குக் கோபம் வந்தால் பாதங்களைத் தொப்பளிக்கவே படைக்கப்பட்டதுபோல் நான் தவழ்ந்த அந்த உள்வீட்டுத் தரை சூரிய அடுப்பாக மாறிவிடும். …
-
- 17 replies
- 3.9k views
-
-
*நண்பரொருவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிகாலை நான்கு மணிக்கு ரயிலில் வந்து இறங்கினார். வடபழனி தாண்டிப் போகவேண்டும். ஆட்டோ பிடித்தார். நான்கரைக்கெல்லாம் அவர் வீட்டு வாயிலுக்கு ஆட்டோ வந்துவிட்டது. ஆட்டோ கட்டணம் ரூ 230. பர்ஸை எடுத்துப் பார்த்தார். என்ன சங்கடம். ஐநூறு ரூபாய் நோட்டுத்தான் இருந்தது. சில்லரை இல்லை. ஆட்டோ ஓட்டுநரிடம் ஐநூறு ரூபாயைக் கொடுத்து மீதியைக் கேட்டார். `நீங்கள்தான் முதல் சவாரி ஐயா. என்னிடமும் சில்லரை இல்லையே?` என்றார் ஓட்டுநர். அதிகாலை நான்கரை மணிக்கு எந்தக் கடையும் திறந்திருக்காது. யாரிடம் போய்ச் சில்லரை வாங்குவது? யோசித்த நண்பர், பெருமூச்சுடன், `சரி. மீதி உன்னிடமே இருக்கட்டும்` எனச் சொல்லிவிட்டார். ஆட்டோ ஓட்டுநர் அவரின் ச…
-
- 1 reply
- 681 views
-
-
பாதை தெரியாத சுவடுகள். ............ புத்தமதத்தை மிகவும் கண்ணியமாககடைபிடிக்கும் லங்காபுரியின் கிழக்கு மாகாண வைத்ய சாலை ஒன்றில் பாக்கியம் ...இரு கால்களும் இழந்த தன் கணவனை பராமரிக்கும் பணியில் ஈடு பட்டிருந்தாள். வெளியில் கையிழந்த ...ஒரு கால் இழந்த ....சிறுவர்கள் சிறு விளையாடு முயாற்சியில் ஈடு பட்டு இருந்தார்கள். பாக்கியம் அறுபதுவயதின் ஆரம்பத்தில் இருப்பவள். கணவன் ஒரு தொண்டு நிறுவனத்தில் வேலைபர்த்துகொண்டிருந்த போது ...அண்மையில் வன்னியில் நடைபெற்ற இன அழிப்பின் இரு கால்களையும் இழந்து ..கப்பல் மூலம் திருமலைக்கு அனுப்பபட்டிருந்தான் .அவனும் ...இளைப்பாறும் வயது ..அவர்களது பிள்ளைகள் நேரத்துடன். வெளி நாடு ஒன்றில் அகதி கோரிக்கையில் ...சென்று இருந்தனர்.. .பாக்கியம் என்னை ஏன் …
-
- 9 replies
- 1.4k views
-
-
அந்த வானுயர்ந்த மாடிக்கட்டிடத்தின் முன்வாசல் கண்ணாடிக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தார் றொபின்சன். தனது எதிர்பார்ப்பு நிறைவேறும் என்ற திடமான நம்பிக்கையுடன் சற்று நேரத்துக்கு முன்பு அந்த வீட்டினுள்ளே சென்றவர், அவை யாவுமே 'பொல, பொல'வென்று பூகம்பத்தால் சின்னாபின்னமாகிச் சிதறுண்ட கட்டிடங்களாகப் பொடிப்பொடியாகிவிட்ட அதிர்வுடன் திரும்பி வந்தார். வரப்போகும் பொழுதுகள் மனக்கண்ணிலே வந்து நின்று பயமுறுத்த, எதுவுமே சிந்திக்கத் திராணியற்றவராய் மூளையே விறைத்து மரத்தாற்போன்ற உணர்வுடன் முன்னால் நீண்டு விரிந்துசெல்லும் வீதியைப் பார்த்தார். வாகனங்கள் வரிசையாகச் சென்றுகொண்டிருந்தன. வீதியின் அருகால் பரபரப்பாகச் செல்லும் மக்கள் கூட்டம் கைகளில் பொருட்கள் நிறைந்த 'பிளாஸ்ரிக்' பைகள…
-
- 2 replies
- 1.5k views
-
-
நாளோடும், பொழுதோடும்! பாலக் கீரையை ஆய்ந்து கொண்டிருந்த மிருதுளா, 'டிவி'யில் ஒளிப்பரப்பான அந்த செய்தியை கேட்டு, அப்படியே கீரையை மேஜை மீது வைத்து, செய்தியை கவனிக்க ஆரம்பித்தாள். நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில், பொது இடத்தில் இயற்கை உபாதையை கழித்தாள் என்று பீனிங் என்ற இளம் பெண்ணை பிடித்து கேஸ் போட்டு, 90 யூரோ அபராதம் விதித்து விட்டனர். அந்தப் பெண் நீதிமன்றத்தை நாடி விட்டாள். ஆண்களுக்கென்று, 30க்கும் மேற்பட்ட கழிப்பறைகள் இருக்கும் நகரத்தில், பெண்களுக்கு மூன்றே மூன்றுதான் இருக்கின்றனவாம். அதுவும், அப்பெண் இருந்த இடத்திலிருந்து, 2 கி.மீ., தாண்…
-
- 1 reply
- 903 views
-