Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. "உயில்" - சிறுகதை - ஆக்கம்- ஆதவி 22/12/2008 -------------------------------------------------------------------------------- என்னடா.... ஊருக்குப் போறதாச் சொல்லீட்டு, வேலைக்கு வந்து நிக்கிறாய்? என்ன நடந்தது?' - வசந்தன்தான் ஆதங்கத்துடன் கேட்டான். 'என்னத்தையடா சொல்றது..?அப்பா இப்படிச் செய்வாரெண்டு கனவிலையும் நான் நினைக்கேல்லையடா... இந்தா....இதை வாசி; விளங்கும்......' என்றபடி, நேற்றைய தினம் பதிவுத் தபாலில் வந்திருந்த மடலினை அவனிடம் கொடுத்து விட்டு நான் அப்பால் நகர்ந்தேன். குளிர் காற்று வேகமாக வீசிக் கொண்டிருந்தது. அதை விட வேகமாக என் மனதில் நினைவுப்புயல் அடித்துக் கொண்டிருந்தது. வேலை தொடங்க இன்னும் பத்து நிமிடங்களே இருந்தன. சரியாக இதே நேரத்துக்கு இன்று வானில பறந்து…

  2. சுகுணாவை கேட்காதே ரிஷபன் சுகுணாவைப் பார்க்கவே தயங்கினேன். என்ன பதில் சொல்லப் போகிறேன் "ஹலோ ரவி.." என்றாள் "ஹலோ.." என்று முனகினேன் "என்ன.. உடம்பு சரியில்லையா" "நத்திங். சும்மா" அவள் போய் விட்டாள் பக்கத்து இருக்கை முகுந்தன் என்னைப் பார்த்து கண்ணடித்தான் "என்னடா அமுக்கமா இருந்துகிட்டு அவ வலையிலே மாட்டிகிட்டியா..." போச்சு இனி அலுவலகம் முழுக்க இவனே செய்தியைப் பரப்பி விடுவான். நான் பதில் சொல்லத் தயங்குவது அவனுக்கு வேறு யூகங்களைக் கொடுத்திருக்கும் உண்மையில் என்ன நடந்தது என்று எனக்குத் தானே தெரியும் சுகுணாவைப் பற்றி எங்கள் மத்தியில் பரவலாய் ஒரு பேச்சு உண்டு. யாராவது மாட்டினால் விடமாட்டாள். சுத்தமாய் 'மொட்டை'யடித்து விடுவாள…

    • 1 reply
    • 605 views
  3. ஒரு நிமிடக் கதை: டிவி பக்கத்து பிளாட்டில் அந்த பாட்டி குடிவந்து சில மாதங்கள் ஆகிறது. அவர் வீட்டில் எப்போதும் டிவி அலறிக்கொண்டு இருக்கும். காதைப் பொத்திக் கொள்ளாத குறையாக நான் நாள் முழுவதும் டென்ஷனில் இருப்பேன். இந்த சத்த அலர்ஜியால் நான் டிவி பார்ப்பதோ, ரேடியோ கேட்பதோ இல்லை. சுத்தமாக விட்டுவிட்டேன் என்றே சொல்லலாம்! கடந்த சில நாட்களாக என்ன நடந்ததோ தெரியவில்லை. பக்கத்து வீட்டில் இருந்து டிவி சத்தம் வரவே இல்லை. என் கணவரிடம் அதை சொன்னேன். “என்னம்மா சொல்ற?... அவங்க வீட்டு டிவி ரிப்பேர் ஆயிருக்குமோ?... பாவம், அந்த பாட்டி என்ன செய் வாங்க?... டிவியை ச…

    • 1 reply
    • 1.8k views
  4. வாடாமலர் மங்கை ''மங்க... அடி மங்க... இஞ்ச... எங்கன இருக்கே அடி இங்கிட்டு வா'' என்று முகப்பிலிருந்து சத்தம் போட்டார்கள் வாடாமலை ஆச்சி. ""இருங்காச்சி சோத்த வடிசிட்டு வாரேன். ஒரு வேலையும் உருப்படியாச் செய்யவிடுறதுல்ல'' என்று சலித்தபடி ரெண்டாங்கட்டில் இருந்து வந்தாள் மங்கை. ""அடி மகராசியா இருப்பே, அந்தப் போகணில தண்ணியைக் கொண்டா கையக் கழுவோணும்'' என கையை நீட்டிக் கொண்டிருந்தார்கள் வாடாமலை ஆச்சி. ""இதுக்குத்தானா இப்பிடி அவசரப்பட்டீக?'' என்று கேட்க நினைத்து அசட்டையாக கப்பில் தண்ணீர் கொண்டு வந்தாள் மங்கை. கையைக் கப்பில் விட்டுச் சுழற்றிக் கழுவிவிட்டுப் படுக்கையில் சாய்ந்துகொண்டார்கள் வாடாம…

    • 1 reply
    • 1.1k views
  5. 1791ஆம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் தனது 30ஆவது வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் அரியணை ஏறுகிறார். இதே காலத்தில்தான் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலிச் சீமையிலும் ஏற்படுகிறது . வரி வசூலிப்பதற்காக கலெக்டர்கள் எனப்படும் ஆங்கிலேய நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர். இந்திய அரசு வெளியிட்ட கட்டபொம்மன் நினைவு தபால் தலை கம்பெனியின் நிர்வாகிகளிடையே நடந்த கடிதப் பரிமாற்றங்களைப் பார்க்கும் போது வரி வசூலிப்பதற்குப் பாளையக்காரர்களைத் தடைக் கற்களாகப் பார்த்ததும், அவர்களை ஒழிக்கவேண்டும் என்ற அணுகுமுறையும் தெரிகிறது. அதற்குத் தோதாக, அடங்க மறுக்கும் பாளையக்காரர்களையும், அனுசரணையாகப் போகும் அடிவருடிகளையும் ஒருவருக்கு மற்றவர் எதிரிகளாக்கும…

    • 1 reply
    • 5.9k views
  6. 10,000 டாலர்... பரிசு பெற்ற, கார் சாரதி. ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார். நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது. சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் அவர் காரை முந்திக்கொண்டு சென்று, அவர் கார் முன் நின்றது.இறங்கி வந்த போலிஸ் , அவரிடம் 'குட் ஈவ்னிங் சார்.. 'அவர் 'குட் ஈவ்னிங், ஏதாவது பிச்சனையா?'. போலிஸ், 'நாங்கள்,, உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம்...... "நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம்." அதனால…

  7. ஒரு நிமிடக் கதைகள் உக்காந்து யோசிப்பாய்ங்களோ?! ‘‘ரெண்டு மாசத்துக்கு மேலாச்சு. இன்னும் ஒரு தகவலும் வரலையே?’’ என்றார் பெருமாள். என் நண்பர் மாணிக்…

    • 1 reply
    • 1.1k views
  8. பிங்க் - சிறுகதை அந்த மாலை நேரத்தில், நீங்கள் வீட்டுக்குச் செல்லும் பரபரப்பில் இருக்கலாம். உங்கள் இணையை, நண்பர்களை, சொந்தங்களைப் பார்ப்பதற்காக வேக வேகமாக என்னைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறீர்கள். எப்படியிருந்தாலும், இம்மாநகரத்தின் முக்கியமான இடங்களில் ஒன்றான இந்த ரயில் நிலையத்தை ஒட்டி இருக்கிற கூவம் பாயும் பாலத்தை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகக் கடக்கவே நீங்கள் விரும்புகிறீர்கள். நான் அங்கே வெகு நேரமாக நின்றுகொண்டிருப்பது உங்களுக்கு ஆச்சர்யத்தை வரவழைக்கவில்லை, சரியா? ஏதோ ஒரு தொழிற்சாலையோ, ஆய்வுக்கூடமோ இந்தக் கூவம் நீரில்... இல்லை இல்லை... சாக்கடையில் கலந்துவிடும் பிங்க் நிறச் சாயம் ஒட்டாமல் சென்றுகொண்டிருந்தது. நான் அதை வெகு நேரமாகக் கவனித்துக்கொண…

    • 1 reply
    • 2.5k views
  9. ஆகாசத்தின் உத்தரவு - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... இமையம், ஓவியங்கள்: பாலு சிமென்ட் மேடையில் ஒரு குதிரையின் மீது கிழக்கு பார்த்த நிலையில் முனியசாமி மாதிரி கொடூரத் தோற்றத்தில் ஒரு சாமி உட்கார்ந்து இருந்தது. சாமி சிலைக்கு முன் எந்த அவசரமும் இல்லாமல் கருத்த நிறமுடைய ஓர் ஆள் கும்பிட்டுக் கொண்டிருந்தான். நடந்து வந்த களைப்பால் வழிந்த வியர்வை யைக்கூடத் துடைக்க வில்லை. கீழே வைத்திருந்த பையில் இருந்து செய்தித்தாள் ஒன்றை எடுத்து, தரையில் விரித்துப்போட்டான். பையில் இருந்த பொரிகடலை பொட்டலத்தை எடுத்துப் பிரித்துவைத்தான். ஒரு சீப்பு வாழைப்பழத்தை எடுத்துவைத்து அதில் ஊதுவத்தியைச் செருகினான். குவாட்டர் பிராந்தி பாட்டில் இரண்டு, சிகரெட் ட…

    • 1 reply
    • 3.1k views
  10. ஒரு நிமிடக் கதை: தடுமாற்றம் சுந்தரம் அன்று காலையிலிருந்தே முடிக்கு டை அடித்து, சவரம் செய்துகொண்டு புத்துணர்ச்சி யோடு யாருக்காகவோ காத்திருந்தார். அவருக்கு தொந்தி இல்லாததால், டீ ஷர்ட்டை இன் செய்து, லேசாக சென்ட் அடித்துக்கொண்டார். முகத்துக்கு கிரீம் தடவி அதன் மேல் பவுடர் மணக்க பூசியிருந்தார். அடிக்கடி எழுந்து தன்னை கண்ணாடியில் பார்த்துக்கொண்டார். இருபது வருஷங்களுக்கு முன் ஆபீஸூக்கு பைக்கில் போகும்போது எப்படி இருந்தாரோ அப்படியே தன் தோற்றம் இருப்பதைப் பார்த்து திருப்திப் பட்டுக் கொண்டார். அவருக்கு அறுபத்தி ஐந்து வயசு ஆகிறது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்! அன்று காலையில் அவர் மனைவி சகுந்தலா பேரனுக்கு உடம்பு சரியில்லை என்று இ…

    • 1 reply
    • 1.6k views
  11. Started by nunavilan,

    சாமிமாடு எப்பவோ முடிவு செஞ்சதுதான்னாலும் கூட இன்னக்கி ஏதோ ஒன்னு கைநழுவி போறாப்புல மனசு மருவி நிக்கிது சின்னசாமி குடும்பம். யாரு போறதுன்னு பேசிக்கிட்டு இருந்தப்பவே, பெரியவனே போயிட்டு வரட்டுமேன்னு அப்பா சின்னசாமி சொல்ல, ‘என்னாலல்லாம் மாட்ட வுட்டுட்டு திரும்பிவர முடியாது. அது என்ன பாத்து ‘ம்மா’ன்னு கத்துச்சின்னா சாமிமாடாவுது ஒன்னாவுது திரும்ப புடிச்சிக்கிட்டு வந்துடுவன்’னு ராமசாமி மறுக்கவும், ‘யப்போ நீயும் அம்மாவுமே போயி மாட்ட வுட்டுட்டு அப்படியே தேரு பாத்துட்டு வந்துடுங்க’ இது நல்லுவன் மேகநாதன். போனா ஒத்தப்படையில போவனுமுன்டானு அப்பா சொல்ல... இந்தா சின்னவன் அருளுக்கு பள்ளிக்கூடந்தான் இல்லையே அவனையும் அழச்சிக்கிட…

    • 1 reply
    • 1.2k views
  12. Started by nunavilan,

    ஆன்டன் செகாவ் 'பந்தயம்' மரண தண்டனை வேண்டுமா என்று உலகம் முழுவதும் விவாதங்கள் இருந்து கொண்டிருக்கின்றன. மூன்று பேரின் முடிவை தள்ளி போட தமிழர்கள் தவித்து வருகின்றோம். ஒருவரின் உயிரை எடுக்க யாருக்கு உரிமை உள்ளது என்ற வாதத்தை எழுப்பிக் கொண்டிருக்கும் வேளையில், அந்தக் கேள்விக்கான பதிலை தனது எழுத்தின் மூலம் சிறுகதையாக்கி முடிவை காவியம் போல் செதுக்கியிருக்கிறார் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவ். எப்போதோ படித்த இந்தக் கதை எப்போதும் துரத்திக் கொண்டிருக்கிறது வாழ்ந்தே ஆக வேண்டிய நம் வாழ்க்கையைப் போல. அந்தக் கதையின் ஆங்கில வழி தமிழாக்கம் இது. பந்தயம் பனி பொழியும் ஓர் இரவில் தன…

  13. பாஷை பிரபல இசை அமைப்பாளர் சந்துருவின் மகளுக்குத் திருமணம். அதற்கான ஏற்பாடுகளை அவர் மனைவி ரேணுகா மும்முரமாக கவனித்துக்கொண்டு இருந்தாள்.சமையல் பொறுப்பை ஒரு வட இந்திய கான்ட்ராக்டரிடம் ஒப்படைத்துவிட்டு அவரிடம் பாதி ஆங்கிலம் பாதி தமிழில் பேசி புரிய வைத்துக்கொண்டிருந்த மனைவியைப் பார்த்து திகைத்துப் போனார் சந்துரு. பந்தல் போட ஒரிசாக்காரர்களிடமும், மேடை அலங்காரத்துக்கு டெல்லியிலிருக்கும் ஒரு நிறுவனத்தின் நிர்வாகியிடமும் பாஷை புரியாமல் விளக்கிக் கொண்டிருந்த மனைவி மீது சந்துருவுக்கு ஆத்திரமே வந்துவிட்டது. மகளுக்கு மெகந்தி வைக்க மும்பையிலிருக்கும் யாரோ ஒரு நிபுணருடன் மொபைலில் தட்டுத்தடுமாறி பேசிக்கொண்டிருந்த ரேணுகாவிடம் இருந்து மொபைலைப் பிடுங்கினார். ‘‘எதுக்கு இப்பட…

    • 1 reply
    • 676 views
  14. புதுக்குடியிருப்பு மாவீரர் மயானத்தை அடைந்ததும். விறு விறுவென என் கால்கள் காந்தி அக்காவின் கல்லறையை நோக்கி நடைபோட்டது. பையினில் இருந்த மலர்கள் அவளிற்கு அஞ்சலி செலுத்த மலர்ந்து கொண்டன. இங்கு வருகிறோம் என்று தெரிநதவுடன். அவசர அவசரமாய் பறித்த மலர்கள். இதைப்போல ஒரு நாள் தான் நான் விரும்பாத அந்த நிகழ்ச்சி நடந்தேறியது. அன்று மழை பெய்து கொண்டிருந்தது. மாவீரர் துயிலும் இல்லம் நோக்கி எங்கள் 'வான்' நகர்ந்து கொண்டிருக்கிறது. 'பாண்ட்' வாத்திக்குழுவில் நானும் இணைந்ததில் இருந்து ஒவ்வொரு முறை இங்கு வரும்போது என் வயிற்றிற்குள் புதுப்புது நோய்களை உணர்வேன். மாவீரர் வித்துடல்களிற்கு அஞ்சலி செலுத்தும் போது என் நெஞ்சம் எதையோ நினைத்து ஏங்கும். இது காந்தியக்காவாய் இருக்கக…

    • 1 reply
    • 602 views
  15. அன்று ஒரு நாள் நான் எனது விட்டு அருகில் நடந்து போயுட்டு இருந்தேன்.என் பின்னால் ஒரு அழைப்பு கிர்த்தீ என்று நானும் யாரு என்று திரும்பி பார்த்தேன் என் பின்னால் ஒரு அழகனா வாலிபன் அவன் வேற யாரும் இல்லை என் பள்ளி நண்பன்..என்ன புதுசாய் பார்வை இருக்கே நான் ஜோசித்து கொண்டே அவன் முகத்தை பார்த்தேன்.. நானும் என்ன என்பது போல் அவன் முகத்தை பார்த்தேன்.என்ன மாதவா என்ன வேணும் ஏன் என்னை அழைத்தாய்.கிர்த்தீ நான் ஒன்று சொல்லுவன் நீ கோப பட கூடாது..இல்லை சொல்லு... நான் உன்னை காதலிக்கிறேன்..உன்னிடம் வெகு நாளாய் சொல்லணும் என்று வருவேன் ஆனால் என்னால் பேச முடியல.என்னை மண்ணிச்சுடு.. என்னால் துங்க முடியல சாப்பிட முடியல..அதான் இன்னைக்கு சொல்லிவிட்டேன்...மாதவ நீ சொல்லுறாய்.. நான்…

  16. யார் இந்த ஆட்டோ ஷங்கர்? தொடரும்...

  17. இவன் - அகரமுதல்வன் ஓவியங்கள் : செந்தில் இவனுக்குச் சொந்தவூர் யாழ்ப்பாணம். இரண்டு காதுகளும் கேட்காது. இயக்கம் அடிச்சுத்தான் காது கேட்காமல் போனது. இரண்டாயிரத்து பன்னிரண்டாம் ஆண்டு நாட்டிலயிருந்து வெளியேறி சென்னையில இருந்திருக்கிறான். அடுத்த ரெண்டு வருஷம் கழிச்சு களவாய்க் கனடாவிற்குப் போய்த் திரும்ப ஒரு மாத லீவில இப்ப சென்னைக்கு வந்திருக்கிறான். இன்னும் பத்து நாளில கலியாணம். இது இவனுக்கு இரண்டாவது கலியாணம்தான். முதல் மனிசியும் பிள்ளையும் முள்ளிவாய்க்காலில செத்துப்போயிட்டினம். இந்தக் கதையை நான் முடித்துக்கொள்ள சரியாக ஏழரை நிமிடங்கள் ஆகும். கதை நிகழத் தொடங்கிற்று. பத்து நாள்களில் கலியாணப் பந்தலில் மாப்பிளை வேஷத்தோடு இருக்கப்போகிற இவன் சிறைச்சாலையில்தான் என…

  18. மீள் வருகை வெகுகாலம் அரசியல் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கமாவு மீண்டும் வீட்டுக்கு வந்த பிறகு… கண்ணுக்கெட்டாத் தொலைவில் பிரதான வீதியின் எல்லை. முன்னே எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அவனுக்குப் பின்னால் கோபத்தோடு எழுந்து வரும் புழுதி மேகம். அவன் தொலைவில் செல்லச் செல்ல புழுதி மண்டலமும் படிப்படியாக அடங்கிப் போனது என்றாலும், புகை போன்ற மென்மேகங்களால் வெற்று ஆகாயம் மூடப்பட்டிருந்தது. புழுதியைக் குறித்தோ, தான் பயணித்துக் கொண்டிருக்கும் பூமியைக் குறித்தோ எவ்வித உணர்வுமற்று அவன் முன்னே நடந்தான். பெருந்தெரு அவனுக்கெதிராக எழுந்து வருமொரு எதிரியைப் போன்றிருந்தது. முன்னே எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மிகவும் கடினமாக இருந்தது. பழக்கப்பட்ட எதையேனும் காணுவதைக…

    • 1 reply
    • 1.3k views
  19. கண்ணாடி ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றின் தலைமை உதவி ஆசிரியரும், சினிமா ஆர்வலருமான `கே.கே.எம்’ என்று அழைக்கப்படும் கவுண்டனூர் கே.மூர்த்தி (55), முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை இன்று காலை உடைத்துவிட்டார். ஆனால், அவரோ இதை மறுக்கிறார். அதை அவர் உடைக்கவில்லை என்றும், கண்ணாடியே தானாகக் கீழே விழுந்து உடைந்துவிட்டதாகவும் சொல்கிறார். வீட்டில் யாரும் இல்லாதபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளதால் உறுதியாக எதையும் சொல்ல முடியவில்லை. அவர் பத்திரிகையாளர் என்றாலும் இந்தச் சின்ன விஷயத்தில் பொய் சொல்ல மாட்டார் என்றே நம்பப்படுகிறது. சென்னை கோயம்பேட்டை அடுத்த நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன். இவரது மனைவி சுதா. இவர்களது உறவினர்தான் மூர்…

    • 1 reply
    • 3.9k views
  20. தாழ்ப்பாள்களின் அவசியம் அ.முத்துலிங்கம் அம்மாவுக்குக் கனடாவில் நம்ப முடியாத பல விசயங்கள் இருந்தன. அதில் மிகப் பிரதானமானது வீடுகளில் பூட்டு என்ற பொருளுக்கு வேலை இல்லாதது. அம்மாவின் கொழும்பு வீட்டில் அலமாரிக்குப் பூட்டு இருந்தது. தைலாப்பெட்டிக்குப் பூட்டு இருந்தது. மேசை லாச்சிக்குப் பூட்டு இருந்தது. பெட்டகத்துக்குப் பூட்டு. வாசல் கதவுக்குப் பூட்டு. கேட்டிலே பெரிய ஆமைப்பூட்டு. இப்படியாகப் பூட்டு மயம். ஆனால் கனடாவில் குளிர்சாதனப் பெட்டிக்குக்கூடப் பூட்டு இல்லாதது மன்னிக்க முடியாத குற்றமாக அம்மாவுக்குப் பட்டது. எல்லாக் குளிர்சாதனப் பெட்டிகளும் பூட்டோடு வரும் என்றுதான் அவர் நினைத்தார். கொழும்பில் இருந்தபோது அவர் ஒரு வீட்டுக்குப் போயிருக்கிறார். அங்கே வர…

  21. Started by நவீனன்,

    ஈடுகள் ஐநூறு ரூபாய்க்குப் பக்கமான தொகையை அவர் நீட்டினார். அவன் வாங்கி கொண்டான். ஒரு பரம்பரைச் சொத்தின் மிச்சம் அது! எடுத்துக் கொண்டு வீடு திரும்பிய போது அவனைப் பெற்றவள் புதியவாடகை வீட்டின் மோட்டு வளையில் பார்வையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். ஒரு வகை பயம் கலந்த மௌனத்துடன் ஐநூற்றுச் சொச்சத்தை அவன் அவள் முன்னால் வைத்தான். அவள் அதைத் தொடவேயில்லை. மாறாக விழிகளில் கண்ணீர் கொப்பளிப்புடன் அவனைப் பார்த்தாள். "தயவு செஞ்சு அப்படிப் பார்க்காதம்மா... நான் இப்ப முன்ன மாதிரி இல்ல. மாறினவன்..." - அதைக் கேட்ட அவள் வாய் விட்டுச் சிரிக்க விரும்பி பின் தோற்று மெலிய சிரித்து ஆழ ஒரு பெருமூச்சை …

    • 1 reply
    • 774 views
  22. டென்மார்க் தமிழ்க் கடைகளில் இலங்கையில் விற்கப்படும் கன்டோஸைக் காணுவேன் என நான் கனவில் கூட கற்பனை பண்ணியிருக்கவில்லை. கன்டோஸ் என்ற பெயராலே அந்த வகைச் சொக்கிலேற்றை அறிந்திருந்தேன். அல்லது தட்டையானதும் இறுக்கமானதும் இலகுவில் உருகக்கூடியதுமான சொக்கிலேற் வகைகள் எல்லாம் கன்டோஸ் எனவே நினைத்திருந்தேன். டென்மார்க்கிற்கு வந்தபின்பு ரொம்ஸ்ää மாபோää றீற்ரா ஸ்பொட் கம்பனிகளின் சொக்கலேட்டுகள் போன்றன அறிமுகமாகிய பொழுது தான் கன்டோஸ் என்பது ஒரு நிறுவனம் சூட்டிய பெயர் என அறிந்து கொண்டேன். அவ்வாறுதான் சிகரட் என்றால் திறீரோசஸ் என நினைத்திருந்த காலமும் உண்டு பிறிஸ்டல் இலங்கையில் அறிமுகமாகும் வரை. அறியாத வயதில் இலங்கையில் எங்கள் வீட்டில் தொங்கிய பாரதியினதும்ää திருவள்ளுவரினதும்ää காந்தியினதும் …

    • 1 reply
    • 633 views
  23. மணியண்ணை: என்ன சண்முகம் கனநாளா ஆளைக்காணேல்லை எப்படி இருக்கிறாய்? என்னவிசேஷம்? ஏதாவது கொண்டாட்டம் கிண்டாட்டமே? சண்முகம்:இல்லை அண்ணை. இஞ்சை சாமன்கள் விக்கிற விலைக்கு சாப்பிட வழியில்லை அதுக்குள்ளை கொண்டாட்டம் எப்படி மணியண்ணை செய்ய? பொன் விழைந்த பூமியிலை இண்டைக்கு பிணமும்,மனிதப்புதைகுழியும் தானே விழையுது மணியண்ணை: பார்த்தடா, வேலியிலை ஓணான் கீணானுக்கு கேட்கப்போகுது. சண்முகம்:ஏனண்ணை? மணியண்ணை: இப்ப ஓணான் கூட காட்டிக்குடுக்கிற காலமடா, அதுசரி சண்முகம் என்ன உந்த யாழ்ப்பாணத்திலை இருக்கிற சில ஆயுதம் தாங்கிய ஒட்டுண்ணிகள் ஆமிக்காரனோடை சேர்ந்து பாவம் சனத்தை ஆயுதமுனையில் வற்புறுத்தி ஆர்ப்பாட்டம் செய்திச்சினமாம், வராட்டி சுட்டுப்போடுவம் எண்டவையாம் சண்முகம்:ஓமண்ணை இவன் எ…

  24. Started by நவீனன்,

    புரிந்தது ரோஸி அப்படிச் செய்வாளென்று யாரும் நினைக்கவில்லை. உண்மை எதிரே வந்து மோதிய போது ஒவ்வொருவர் மனத்திலும் ஆத்திரம் பொங்கியது. நன்றி கெட்ட பெண்! வளர்த்து ஆளாக்கியவர்கள் முகத்தில் கரியைப் பூசி விட்டுப் போய் விட்டாளே! அந்த வீட்டில் எடுபிடி வேலை செய்யும் பெண்ணாகவா ரோஸியை நடத்தினார்கள்? கிறிஸ்துமஸ், ஈஸ்டர்- எந்தப் பண்டிகை வந்தாலும் ரோஸிக்கு புது டிரெஸ் வாங்காமல் இருக்க மாட்டார்களே! அவளை ஸ்கூலில் சேர்த்து அவள் நன்றாகப் படித்து முன்னேறுவதற்கு எல்லா வசதியும் செய்யவில்லையா? சுமை புத்தகங்களும், நோட்டுப் புத்தகங்களும் வாங்கிக் கொடுத்து பஸ் பாஸுக்குப் பணம் கொடுத்து அவளுடைய படிப்பில் எப்படியெல்லாம் அ…

    • 1 reply
    • 2k views
  25. சிவகங்கை மாவட்டம் சேர்ந்தவர் தா.கிருட்டிணன் இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும்,ஒருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர். 20.5.2003-ல் மதுரையில் கொலை செய்யப்பட்டார். கொன்றது யார்? தா.கி ஏன் கொலை செய்யப்பட்டார்? நடந்த சம்பவங்கள் என்ன? குற்றவாளிகள் யார்? தொடரும்..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.