கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3082 topics in this forum
-
அடர்ந்த காட்டு வழியே ஒரு மனிதன் நடந்து செல்கிறான். அப்போது இரை தேடி வந்த புலி ஒன்று அவனை பார்த்து விடுகிறது. உடனே அவனைத் துரத்துகிறது. பயந்து ஓட்டம் பிடித்த மனிதன், அங்கிருந்த ஒரு மரத்தின் மேல் தாவி ஏறிக்கொள்கிறான். ஆனாலும், புலி அவனை விடுவதாக தெரியவில்லை. மரத்தையே சுற்றிச்சுற்றி வருகிறது. பயம் அதிகமான மனிதன் மரத்தின் கிளையை இறுக பற்றிக்கொள்கிறான். அப்போதுதான் தனக்கு பக்கத்தில் ஏதோ அசைவதை உணர்ந்தவன் திரும்பி பார்க்கிறான். அங்கே ஒரு கரடி இருக்கிறது. அதை பார்த்த மாத்திரத்தில் குலை நடுங்கிபோகிறான் மனிதன். தன்னை பார்த்து மிரண்ட மனிதன் மீது கரடிக்கு இரக்கம் பிறக்கிறது. `மனிதா… என்னை பார்த்து பயபடாதே. நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன். உயிருக்கு பயந்து மரத்தின் மீது ஏறும…
-
- 12 replies
- 1.8k views
-
-
அப்போ எனக்கு 10 - 12 வயதிருக்கும். விடுமுறைக்கு விடுதியிலிருந்து வீடுவந்திருந்தேன். அம்மா எனது கையெழுத்து ஒழுங்காக வரவேண்டும் என்பதற்காய் தனக்குத் தெரிந்த தமிழையெல்லாம் எழுது எழுது என்றும் சொல்வதெழுதல் எழுது என்றும் பாடாய்படுத்திக்கொண்டிருந்தார். அப்பாவோ தமிழின்பால் திரும்பியும் பாராதவர். அது ஒன்று தான் அவர் தமிழுக்குச் செய்த தொண்டு. ஆங்கிலமும், கணிதமும் அவர் கரைத்துக் குடித்த பாடங்கள். என்னையும் கரைத்துக்குடி குடி என்று என் உயிரை எடுத்துக்கொண்டிருப்பார். அவரால் முடியாது போன காரியங்களில் இதுவும் ஒன்று. விடுமுறைக்கு வந்தால் அப்பாவின் சகோதரிகளிடம் அழைத்துப்போவார்கள். நெடுந்தூரப்பயணம் அது. பஸ், ரயில், இறுதியில் அப்பய்யாவின் சோமசெட் கார் என்று அப்பயணம் முடிவுறும்.…
-
- 1 reply
- 1.2k views
-
-
பிரிந்தது ஓர் உயிர் அவன் எனக்கு அறிமுகமாகியது 2008ம் ஆண்டு யூலைமாதம் என்றே நினைவில் இருக்கிறது. என்னைப் போல் அவனும் கறுப்பன். காலம் எம்மை பலமாய் இணைத்துப்போட்டது. நான் எங்கு சென்றாலும் அதிகமாக என்னுடயே வருவான். நானின்றி அவன் எங்கும் சென்றது கிடையாது. எனது சுமைகளை எதுவித முகச்சுளிப்பின்றியும் தாங்கிக்கொள்ளும் பெரிய மனது அவனிடமிருந்தது. நானும் அவனின் சுமைகளை சுமந்து திரிந்திருக்கிறேன். என்னைக் கண்டவர்கள் அனைவரும் அவனையும் நிட்சயமாகக் கண்டிருப்பார்கள். அவ்வளவு ஒற்றுமை எம்மிடையே இருந்தது. நாம் இணைந்து வெளிநாட்டுப் பயணங்களும் செய்திருக்கிறோம். நான் களைத்துப்போகும் போதெல்லாம் அன்புடன், தோளில் கைபோட்டு எதையாவது உண் அல்லது குடி என்று கூறும் நண்பன் அவன். இன்று …
-
- 12 replies
- 1.4k views
-
-
நிழலாடும் நினைவுகள். வெளித்தெரியாத வேர். M.S.R சாத்திரி ஒரு பேப்பர். ஈழத்தின் ஆயுத விடுதலைப் போராட்டத்தின் தங்கள்அனுபவங்களை மையமாக வைத்து பலர் தங்கள் பதிவுகளை புத்தமாக்கியிருக்கிறார்கள். அவற்றில் .சி.புஸ்பராஜா. கி. பி. அரவிந்தன். மற்றும் ஜயர் ஆகியோருடைய பதிவுகள் முக்கியமானவை. ஆனால் இந்த மூவரது பதிவுகளிலுமே இந்த எம்.எஸ்.ஆர் என்கிற மனிதனைப் பற்றிய எந்தவொரு தகவல்களும் உள்ளடக்கப் பட்டிருக்கவில்லை. இந்த மூவரோடும் நெருங்கி பழகியவர்தான் எம்.எஸ். ஆர். சி. புஸ்ப்பராஜா எதற்காக தனது புத்தகத்தில் இந்த மனிதரைப்பற்றிய பதிவுகளை தவறவிட்டிருந்தார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் கி. பி அரவிந்தனிடம் நான் ஒரு தடைவை கதைத்தபொழுது அதற்கான காரணத்தை கேட்டிருந்தேன். அதற்கு …
-
- 33 replies
- 3.7k views
-
-
வேட்டையன்– சித்தாந்தன் ஆத்மார்த்தனுக்கு அன்றைய பொழுது எரிச்சலுடனேயே விடிந்தது. அறையின் மூலைக்குள் இருந்து தவளை ஒன்று கத்துவதைப்போல அவன் மனைவியின் குரல் ஒலித்தது. ‘எழும்புங்கோ உங்களை யாரோ தேடி வந்திருக்கிறார்’ இந்தக் காலை வேளையில் தன்னை யார் தேடி வந்திருப்பார்கள்? அதுவும் இன்று விடுமுறை நாள். மிக்க அலுப்பும் சோர்வும் படர கட்டிலிலிருந்து எழுந்து கொண்டான். நீண்டதோர் பெருமூச்சு. காலை எழுந்தவுடனேயே வாயலம்பாமல் தேநீர் பருகும் பழக்கத்தைக் கொண்டவன் ஆத்மார்த்தன். ஆனால் சில நேரங்களில் இந்த வழக்கத்தை மறுதலிப்பது போலவும் அமைந்து விடுவதுண்டு. இரவு முழுக்கவும் தன்னுடைய பண்ணையின் கணக்குகளைப் பார்த்து முடித்துவிட்டுத் தாமதமாகத்தான் படுத்தான். இரண்டோ அல்லது ம…
-
- 0 replies
- 1.5k views
-
-
[size=4]ஒரு ஊர்ல.... ஐய்யய்யோ வழக்கம்போல ஆரம்பிச்சிட்டன்!!! பரவாயில்லை.... அப்படித்தான் ஆரம்பிக்கணும். ஒரு நாள் ஐன்ஸ்டீன், தான் குடியிருந்த சாலை வழியாக சென்றிருக்கிறார். வழக்கமாக அவர் பயணிக்கும் பாதை என்றாலும் அவரது கவனம் ஒரு போதும் அதற்கு முதல் அந்த வீதியிலமைந்திருந்த அப்பிள் தோட்டத்தின் பக்கம் போயிருக்கவில்லை. ஆனால் ஒரு நாள் அதனை கண்டு அதிர்ச்சியடைந்து அந்த இடத்திலேயே சிந்தனையில் மூழ்கியிருந்தார்.[/size] [size=4]இநிலையில் அந்த வழியாக வந்த சிறுவன் தன்னை அவதானிக்கொண்டிருப்பதை உணர்ந்து ஆழ்ந்த சிந்தனையிலிருந்து சற்று வெளியே வந்த ஐன்ஸ்டீன் சிறுவனைப் பார்த்து 'இந்த அப்பிள் தோட்டத்திலுள்ள அனைத்து மரங்களிலும் அப்பிள் காய்த்திருக்கிறது ஆனாலும் (மரத்தைக்கா…
-
- 3 replies
- 1.3k views
-
-
[size=5]மச்சம் - இஸ்மத் சுக்தாய்[/size] உருது மூலம் – இஸ்மத் சுக்தாய் தமிழில் – ராகவன் தம்பி “சௌத்ரி… ஓ சௌத்ரி… கொஞ்சம் நான் சொல்றதைக் கேளேன்” கணேஷ்சந்த் சௌத்ரி அமைதியாக இருந்தார். “உஷ்… உஷ்”… “எதுக்கு இப்படி சில்வண்டு மாதிரி தொந்தரவு பண்ணிக்கிட்டே இருக்கே?” “எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு” “மரியாதையா சும்மா உட்காரு. இல்லேன்னா…” “இனிமேலும் என்னால உட்கார முடியாது. இங்கே பாரு. உக்காந்து உக்காந்து முதுகெல்லாம் பலகை மாதிரி ஆகிப்போச்சு. ஹே ராம்” “ச்சு… ச்சு… “எனக்கு அப்படியே உடம்பெல்லாம் நடுக்கமா இருக்கு” சௌத்ரி ஒன்றும் சொல்லவில்லை. “இங்கே… தோ… இங்கேதான். இங்கே பின்பக்கமா எறும்பு க…
-
- 0 replies
- 1.2k views
-
-
வைரவ சுவாமியை எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அவருக்கு ஒரு சின்னப் பிரச்சினை, இல்லைக் கொஞ்சம் பெரிய பிரச்சினை. அதைப் பிறகு பார்ப்போம். இப்ப கோனாச்சானா, கோனாச்சானா ஒரு தீவிர கடவுள் பக்தர். முருகன் சிவபெருமான், பிள்ளையார், உலகத்தில் உள்ள எல்லா அம்மன்கள், வைரவர்கள் என்று எல்லாக் கடவுளரையும் விட்டுவைக்காமற் கும்பிடுவார். இயேசு பிரானைத் தெரியாத ஊரிற் பிறந்துவிட்டார். இல்லாவிட்டால் அவருக்கும் ஒரு கும்பிடு போடாமல் இருக்கமாட்டார். கோனாச்சானா அவரிற்கு அவரின் அப்பா/அம்மா இட்டபெயராக இருக்கமுடியாது. கோ.சங்கரப்பிள்ளை தான் சுருங்கி கோனாச்சானா என்றாய் விட்டது. என்றாலும் ஊரில் முந்தநாள் மீசை முளைத்த பெடியளுக்கோ இல்லாவிட்டால் திரு கோ.சங்கரப்பிள்ளைக்கு அப்பா வயதில் உள்ளவர்களுக்கோ அவரின் இய…
-
- 0 replies
- 649 views
-
-
வள்ளிப்பிள்ளை தன்னைச்சுற்றி இருப்பவர்களை ஒரு முறை பார்த்தாள். அங்கு இருப்பவர்ர்களில் அதிகமானவர்கள் அவளைவிட வயதில் குறைந்தவர்கள். தூரத்தில் இருப்பவர்கள் அவளைச்சுட்டிக்காட்டிப்பேசும்போது அவளுக்கு வெட்கமாக இருந்தது. இந்த வயதில் இது தேவையா? என்று தன்னைத்தானே ஒருமுறை கேட்டாள். பேரப்பிள்ளைகளு ம் பீட்டப்பிள்ளைகளும் இருக்கையில் இப்படி ஒரு ஏற்பாடுதேவைதானா? இதை நிறுத்தமுடியாதா?அவள் தன்னைத்தா னே கேட்டாளே தவிர எவருக்கும் அதைப்பற்றிச்சொல்லமுடியாதநிலை கணவனே ஒப்புக்கொண்டபின்னர் அவள் மறுத்து என்ன பயன்.இந்தச்சின்னப்பிள்ளையளுக்கு முன்னாலை தனக்கு நடக்கப்போவதை நினைக்க நினைக்க அவளுக்கு வெட்கத்தில் என்ன செய்வதென்றேதெரியாது தவித்தாள். தனக்கு இப்படி ஒரு சம்பவம் நடக்கும் …
-
- 3 replies
- 918 views
-
-
மச்சம் - லக்ஷ்மி சரவணக்குமார். மச்சம் குறித்த முதல் அக்கறை அவனுக்கு வந்தது சில மாதங்களுக்கு முன் ஒரு திங்கள்கிழமை அதிகாலையில்தான். விடுமுறை முடிந்து அலுவலகம் கிளம்பவேண்டி முகச்சவரம் செய்ய கண்ணாடியைப் பார்த்தவனுக்கு நம்பவே முடியாத ஆச்சர்யம்,, சரியாக அவனது இடது கன்னத்தில் இதழ்களுக்கு மிக அருகில் சின்னதாய் ஒரு மச்சம். ஏதாவது அழுக்காயிருக்குமோ என ஒரு முறைக்கு இரண்டு முறை முகம் கழுவிப் பார்த்தும் அந்தக் கருப்பு அதே அழுத்தத்துடன் இருந்தபோதுதான் இது மச்சம் தானென நம்பவேண்டியதாகிப் போனது, அதெப்படி இருப்பத்தி ஆறு வயதிற்கு மேல் ஒரு மனிதனுக்கு புதிதாக மச்சம் வளர முடியும்… ஆச்சர்யந்தான். சில நிமிடங்கள் ரொம்பவே பெருமையாக அதைப் பார்த்துக் கொண்டிருந்தான். நண்பர்கள் தனக்குத்…
-
- 3 replies
- 1.7k views
-
-
வணக்கம் வாசகர்களே!! கள உறவுகளே!!! இத்துடன் எனது தென்கிழக்குச்சீமையிலே வரலாற்றுத் தொடர் கதையை நிறைவுக்குக் கொண்டு வருகின்றேன் . அதிகரித்துவிட்ட பணிச்சுமையினால் இந்தத்தொடர் அவ்வப்பொழுது தடங்கல்களைச் சந்தித்தது . அதற்கு நான் உங்கள் முன் மன்னிப்புக் கேட்கின்றேன் . ஒரு வரலாறையும் கதையும் சேர்ந்து சொல்லும்பொழுது , இருபக்கமும் சுவைகுன்றாமல் இருப்பதற்கும் எனக்குச் சிறிதுகால அவகாசம் தேவைப்பட்டது . உங்கள் எல்லோரையுமே என்னால் முடிந்த அளவிற்கு தென்கிழக்குச் சீமையை சுற்றிக்காட்டினேன் . இதில் வரலாற்றுத் தவறுகள் எங்காவது உங்கள் கண்ணில் தட்டுப்பட்டால் உரிமையுடன் சுட்டிக்காட்டுங்கள், திருத்திவிடுகின்றேன் . எனது முந்தைய தொடர்களை வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் . உங்கள் விமர்சனங்களை…
-
- 29 replies
- 3.1k views
-
-
[size=4] [/size] [size=4]புதுவருடம் பிறக்கப் போகிறது. புதுசாக ஏதாவது செய்யவேண்டுமே என்று டாக்டர் யூனோயோசித்தார். டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார் டாக்டர். 1924 ஜனவரியில் ஒரு இரண்டுமாத வயதே ஆன நாய்க்குட்டியை வாங்கினார். அகிடா எனப்படும் வகை நாய்க்குட்டி அது. அகிடா வகை நாய்கள் கம்பீரமான தோற்றம் கொண்டவை. தன் செல்லப் பிராணிக்கு ஹசிகோ என்று பெயரிட்டார் யூனோ.[/size] [size=4]கோல்டன் பிரவுன் நிறம் கொண்ட ஹசிகோ தன்னுடைய எஜமானருக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை தந்தது. யூனோவும், ஹசிகோவும் அடுத்த சில மாதங்களில் நெருக்கமான நண்பர்களாக உருவெடுத்தார்கள். தினமும் காலை டாக்டர் யூனோ, பல்கலைக்கழகத்துக்கு செல்ல வீட்டிலிருந்து அருகிலிருக்கும் ஷிபுயா ரயில் நிலையத்துக்கு நடந்துச் ச…
-
- 2 replies
- 1.6k views
-
-
http://eathuvarai.net/?p=1943 “சூரிச்” புகையிரத நிலையத்தினுள் நுழைந்த அமுதன் அங்கிருந்த சிற்றுண்டி சாலையை நோக்கி நடந்தான். அங்கு இருந்த கதிரைகளில் பிஸ்கற்றை சாப்பிட்டபடி விளையாடிக்கொண்டிருந்த மாலதியும் தமிழினியும் பல நாட்களிற்கு பின்னர் அமுதனைக் கண்டதும், அப்பா என்றபடி ஓடிப்போனவர்களை முழந்தாளிட்டு இரண்டு கைகளாலும் கட்டியணைத்து மாறி மாறி முத்தமிட்டவன் . தான் வாங்கி உடைந்து விடாமல் பத்திரமாக பாதுகாத்தபடி கொண்டு வந்த இரண்டு Kinder சொக்கிலேற்றுக்களை இருவரிடமும் கொடுத்து விட்டு மேனகாவை பார்த்தான். தன்னை பாரக்கிறான் என்பதை கவனித்த மேனகா அவனை கவனிக்காதது போல் வாடிக்கையாளர் ஒருவரிற்கு குளிர் பானங்களை எடுத்து நீட்டிவிட்டு பணத்தை பெற்றுக்கொண்டிருந…
-
- 60 replies
- 10.4k views
-
-
இது என் வாழ்வில் நான் எழுதும் இரண்டாவது கதை என்று சொல்லப்படக் கூடிய ஒரு பதிவு. முதலாவது சரிநிகரில் 21 வயதில் வெளியானதன் பின் மீண்டும் இரண்டாவதை 37 ஆவது வயதில் எழுத முயல்கின்றேன். கதை எழுதுவதற்குரிய எழுத்து ஆற்றல் இல்லை என்பதே கதை எழுதாமல் விட்டதன் காரணம். இது சர்வநிச்சயமாக இலக்கிய தரமாக இருக்கவே இருக்காது. ஒரு மர்ம நாவல் எழுதும் மனதையே என்றும் கொண்டிருந்தேன் என்பதும் நான் கதை எழுதாமல் விட்டதற்கான முக்கிய காரணம். இதுவும் ஒரு மர்ம கதை அல்லது நாவல் தான். ஆனால் எல்லாமே கற்பனை என்று சொன்னால் எவரும் நம்பப்போவதில்லை.... ------------------------------------------------------------------------------------------------------------- தோற்ற(ம்) விம்பங்கள்: …
-
- 35 replies
- 3.1k views
-
-
காலையில் ஆறு மணியளவில் புறப்பட்டேன் ...................எனது காரில் cd பிளையறை அழுத்த அந்த அருமையான முன்னிசையுடன் ...........விண்வரும் மேகங்கள் பாடும் .....என்ற அந்த அற்புதமான பாடல் என்னை உற்சாகப்படுத்தியது ..............புதிய உற்சாகத்துடன் மாவீரர் மண்டபத்தை காலை எட்டு மணியளவில் சென்றடைந்தேன் .......ஏற்கனேவே பேசியதற்கு இணங்க குறிப்பிட்ட அனைவரும் சரியான நேரத்திற்கு வந்தடைந்தனர் ................அவரவர் தத்தம் பணிகளை செய்ய தயாராகினர் ......நேற்று இரவே பெரும்பாலான வேலைகள் முடிந்தமையால் மீதியை இருந்த வேலைகளை முடிக்க அனைவரும் உற்சாகத்துடன் ஆரம்பித்தோம் .............மேடையில் ஏற்கனவே பொருத்தியிருந்த இசைக்கருவிகளை தந்திகள் மூலம் கலவைக்கருவிக்கு இணைத்து எல்லாவற்றையும் சரி சமம் செ…
-
- 3 replies
- 868 views
-
-
கோட்சே நான் RSS தூதுவனும் அல்ல., காந்திஜிக்கு எதிரனாவனும் அல்ல., கோட்சே வாக்குமுலம் என் மனதை தொட்டது அதனால் தான் எங்கு பதிவு செய்தேன் அவ்வளவே..... காந்திஜி மாமனிதர் என்றாலும் அவரும் சில தவறுகள் செய்து இருக்கிறார்., காந்திஜி கொல்லப்பட்ட வழக்கில் கோட்சே யின் வாக்குமுலம் -------------------------------------------------------------------------------------- காந்தி கொலை செய்யப்பட்டதற்கு முழுக்க முழுக்க நானே பொறுப்பு. வீரசவர்க்கார் உள்பட வேறு எவருக்கும் தொடர்பு இல்லை" என்று கோட்சே கூறினான். டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் கோட்சே தொடர்ந்து வாக்குமூலம் அளித்த…
-
- 3 replies
- 871 views
-
-
http://sinnakuddy1.b...-post_8635.html
-
- 1 reply
- 703 views
-
-
புகலிட தேசமொன்றில்..... பெரியவர்: பிள்ளை எப்படி இருக்கிறாய்? அந்த அக்கா: நான் நல்லா இருக்கிறன்.. அங்கிள்.. பெரியவர்: முகத்தில சந்தோசத்தைக் காணேல்லையே.. அந்த அக்கா: இல்லையே நல்லாத் தானே இருக்கிறன். பெரியவர்: மனசில இருக்கிற சோகம் அப்படியே தெரியுது.. ஏன் பிள்ளை அதை மறைக்கிறா.. வெளிநாட்டுக்கு வந்தாச்சுத் தானே.. பிறகென்ன கவலை.. அந்த அக்கா: நான் மட்டும் வெளிநாட்டுக்கு வந்தாச்சு. அது எங்கட சொந்தங்களுக்கு சந்தோசம். ஆனால். எனக்கு..???! பெரியவர்: என்ன பிள்ளை ஆனால் என்று இழுக்கிறா.. என்ன சொல்ல வந்தியோ அதை மனந்திறந்து சொல்லு... அந்த அக்கா: என்னத்தை அங்கிள் சொல்லுறது.. முள்ளிவாய்க்காலுக்க என் கூடவே நின்ற ஆயிரம் ஆயிரம் மக்களும் போராளிகளும் தொலைத்…
-
- 0 replies
- 563 views
-
-
-
- 23 replies
- 1.6k views
-
-
வணக்கம் உறவுகளே! அனைவரும் நலம் தானே! எமது குழந்தைப் பருவத்தை யாராலும் மறக்க முடியுமா? இல்லைத் தானே! நாம் சிறுவர்களாக இருக்கும் போது நாம் செய்த குறும்புகள் எவையுமே என்றுமே எம் மனதை விட்டு அகலாது! அது போல, நாம் உடுத்திய உடைகள், பழகிய நண்பர்கள், பாடிய பாடல்கள் என்று எவையுமே மறக்க முடியாதவை! இன்று நான் உங்களுடன் பகிர்ந்துகொள்வது நாம் சிறிய வயதில் பாடித் திரிந்த பாடல்கள் பற்றி! நான் சிறுவனாக இருக்கும் போது, எங்கள் வீட்டில் நிற்பதில்லை! அம்மம்மா வீட்டில்தான் போய் நிற்பேன்! அங்கு மாமாக்கள், சித்திமார், அத்தைமார் எல்லோரும் நிற்பார்கள்! என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரர்கள், மச்சாள்மார், மச்சான்மார் என்று எல்லோரும் சேர்ந்து விளையாடுவோம்! அப்போது நாங்கள் பல பாடல்கள் படிப்ப…
-
- 5 replies
- 2k views
-
-
[size=6]வண்டிற்சவாரி![/size] அ.செ.முருகானந்தன் 1 இறைப்பு ஆரம்பமாயிற்று. ஆளை ஆள் தெரியாத இருட்டு. துலாவில் இரண்டுபேர் ஏறினார்கள். பட்டைக் கொடியை ஒருத்தன் பிடித்தான். பரந்து கிடந்த புகையிலைத் தோட்டத்துள்ளே இன்னொருத்தன் நுழைந்தான். துலா மேலுங் கீழுமாக ஏறி இறங்கிற்று. 'ஆறுமுக வேலனுக்கண்ணனாமடி' என்று துலாவில் நின்ற ஒருத்தன் ஆரம்பித்தான். மற்ற இருவரும் அதற்குப் பிற்பாட்டு இழுத்தார்கள். இந்த அமளியில் பக்கத்தே பூவசரசு மரத்தில் அரைக்கண் உறக்கம் உறங்கிக் கொண்டிருந்த சேவல் கோழி ஒன்று சிறகடித்துக் கூவியது. அதைப் பின்பற்றி அந்த வட்டாரத்திலுள்ள ஒன்றிரண்டு கோழிகள் ஒவ்வொன்றாகக் கரகரக்கத் தொடங்கின. இறைப்புக்காரரின் கச்சேரிக்குப் பொருத்தமான பின்னணியாக அது வாய்த்து விட்டது. ஒரு …
-
- 3 replies
- 1.5k views
-
-
முதலாவது பாகத்தை வாசிக்கப் பின்வரும் இணைப்பில் கிளிக்கவும்! http://www.yarl.com/...howtopic=110495 [size=4]வவுனியா புகையிரத நிலையத்தினுள், ஒரு பெருமூச்சை விட்டவாறு யாழ்தேவி நுழைந்தது.[/size] [size=4]அநேகமானவர்கள், தங்கள் மதியச் சாப்பாடுகளை, இங்கேயே முடித்து விட அவசரப் பட்டனர். வவுனியா தாண்டினால், கையைக்காலை நீட்டிச் சாபிடுவது கொஞ்சம் கடினமாக இருக்கும்![/size] [size=4]பல பெண்கள் போட்டிருந்த தாலிக் கொடிகள், இப்போது கணவர்களிடம் கை மாறின. சில புத்திசாலியான கணவர்கள், தங்கள் உள்ளாடைகளில், ஒரு விதமான இரகசியமான பொக்கட்டுகளைத் தைத்திருப்பார்கள் போலும். அவர்கள் நகைகளை வாங்கியதும்,யாழ்தேவியின் கழிப்பறைக்குள் போய் வந்த படி, இருந்தது அதனை உறுதிப் படுத்திய…
-
- 14 replies
- 1.4k views
-
-
[size=6]காலச்சூரியன்களும் சிறைக்கம்பிகளும் [/size] Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Saturday, November 3, 2012 சூரியனின் பெயர்களின் ஒன்று அவனுக்கானது. பெயருக்கு ஏற்ப சூரியனின் வேராகவே அவனிருந்தான். 1995 சூரியக்கதிர் நடவடிக்கையின் போது யாழ்ப்பாணம் இடம்பெயர அவனும் வன்னிக்கு வீட்டோடு இடம்பெயர்ந்தான். சொந்த ஊரைப்பிரிந்த துயரும் அவனும் ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியத்தை அக்கால வீதிநாடகங்களும் பரப்புரைக்கூட்டங்களும் உணர்த்தியது. 14வயதில் அவன் ஆயுதமேந்தி விடுதலைப் போராளியானான். அடிப்படைப்பயிற்சி முடித்து சமர்க்களம் போனவனின் ஆற்றலும் திறமையும் அவனைப் புலனாய்வுப் பிரிவிற்கு பணிமாற்றம் செய்தது. பகைகுகையில் இறங்கிப் பணி செய்ய அவனுக்குப் பயிற்றுவிக்கப்பட்டு வரியுடை …
-
- 6 replies
- 1.3k views
-
-
[size=4]நகரில் இசை நிகழ்ச்சி ஒன்று நடப்பதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியைக் காண ஆசைப்பட்டான் ஒருவன். [/size] [size=4]ஆனால், நுழைவுச்சீட்டு இல்லை![/size] [size=4]கலக்கத்துடன் இருந்தவனுக்கு, பிரபல பத்திரிகை ஒன்றில் ஓவியராகப் பணிபுரியும் நண்பன் ஒருவன் உதவ முன்வந்தான். ''எங்கள் அலுவலகத்தில், ஓவியருக்கென நுழைவுச் சீட்டு ஒன்று உண்டு. அதை உனக்குத் தருகிறேன்'' என்று நண்பன் சொன்னதும் நம்மவனுக்கு உற்சாகம் கரைபுரண்டது.[/size] [size=4]இசை நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று, நண்பன் தந்த நுழைவுச் சீட்டை வாங்கிக் கொண்டு இசையரங்கத்துக்குச் சென்றான். அங்கே, நுழைவாயிலில் நின்றவர், இவனை சந்தேகத்துடன் பார்த்தார்.[/size] [size=4]''நீங்க... அந்தப் பத்திரிகையின் ஓவியர்தானா?'' என்று …
-
- 5 replies
- 890 views
-
-
[size=5]பனங்கொட்டை பொறுக்கி[/size] குரு அரவிந்தன் உள்நாட்டுப் போரின் பாதிப்பு ஆங்காங்கே வெளிப்படையாகத் தெரிந்தது. கவனிப்பு அற்ற பிரதேசம் என்பதால் ஏ9 பாதை குண்டும் குழியுமாயிருந்தது. சில இடங்களில் பாதைகள் செப்பனிடப் பட்டிருந்தன. முன்பெல்லாம் இப்பாதையில் பயணிக்கும்போது பயந்து நடுங்கிக் கொண்டே பயணிக்கவேண்டும். இராணுவத்தின் கெடுபிடி ஒருபக்கம், தெருவோரக் கண்ணிவெடிகளின் பயம் மறுபக்கம். தப்பித்தவறி வண்டி பாதையைவிட்டு விலகினால் காவு கொள்ள எங்கேயென்று கண்ணிவெடிகள் காத்திருக்கும். பாதை ஓரத்தில் அக்குள் தண்டு பிடித்து மெல்ல மெல்ல நொண்டிக் கொண்டு சென்ற அந்த சிறுவனுக்காக என் மனம் பரிதாபப்பட்டாலும், சற்றுத்தள்ளி மூன்று காலில் நொண்டிக் கொண்டு புல் மேய்வதற்குப் பகீரதப் பிரயத்…
-
- 3 replies
- 1.1k views
-