கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3082 topics in this forum
-
அப்போ எனக்கு 10 - 12 வயதிருக்கும். விடுமுறைக்கு விடுதியிலிருந்து வீடுவந்திருந்தேன். அம்மா எனது கையெழுத்து ஒழுங்காக வரவேண்டும் என்பதற்காய் தனக்குத் தெரிந்த தமிழையெல்லாம் எழுது எழுது என்றும் சொல்வதெழுதல் எழுது என்றும் பாடாய்படுத்திக்கொண்டிருந்தார். அப்பாவோ தமிழின்பால் திரும்பியும் பாராதவர். அது ஒன்று தான் அவர் தமிழுக்குச் செய்த தொண்டு. ஆங்கிலமும், கணிதமும் அவர் கரைத்துக் குடித்த பாடங்கள். என்னையும் கரைத்துக்குடி குடி என்று என் உயிரை எடுத்துக்கொண்டிருப்பார். அவரால் முடியாது போன காரியங்களில் இதுவும் ஒன்று. விடுமுறைக்கு வந்தால் அப்பாவின் சகோதரிகளிடம் அழைத்துப்போவார்கள். நெடுந்தூரப்பயணம் அது. பஸ், ரயில், இறுதியில் அப்பய்யாவின் சோமசெட் கார் என்று அப்பயணம் முடிவுறும்.…
-
- 1 reply
- 1.2k views
-
-
பிரிந்தது ஓர் உயிர் அவன் எனக்கு அறிமுகமாகியது 2008ம் ஆண்டு யூலைமாதம் என்றே நினைவில் இருக்கிறது. என்னைப் போல் அவனும் கறுப்பன். காலம் எம்மை பலமாய் இணைத்துப்போட்டது. நான் எங்கு சென்றாலும் அதிகமாக என்னுடயே வருவான். நானின்றி அவன் எங்கும் சென்றது கிடையாது. எனது சுமைகளை எதுவித முகச்சுளிப்பின்றியும் தாங்கிக்கொள்ளும் பெரிய மனது அவனிடமிருந்தது. நானும் அவனின் சுமைகளை சுமந்து திரிந்திருக்கிறேன். என்னைக் கண்டவர்கள் அனைவரும் அவனையும் நிட்சயமாகக் கண்டிருப்பார்கள். அவ்வளவு ஒற்றுமை எம்மிடையே இருந்தது. நாம் இணைந்து வெளிநாட்டுப் பயணங்களும் செய்திருக்கிறோம். நான் களைத்துப்போகும் போதெல்லாம் அன்புடன், தோளில் கைபோட்டு எதையாவது உண் அல்லது குடி என்று கூறும் நண்பன் அவன். இன்று …
-
- 12 replies
- 1.4k views
-
-
சுரேஸ் கமல்காசனை போல் அழகு என்று சொல்லமுடியாது ஆனாலும் ரஜனியைவிட அழகானாவன்.ஒரு பக்கவாட்டில் பார்த்தால் ரஜனியின் சாயல் தெரியும் இதனால் நாங்களும் இதை சொல்லி அவனை உசுப்பேத்தி விடுவம்.அவனுக்கும் மனதில் ரஜனி என்ற நினைப்பு இருந்தது.யாழ்பல்கலைக்கழகத்தில் கணித துறையில் முதலாம் ஆண்டில் பயின்று கொண்டிருந்தான்.ஆங்கில பாடத்திற்க்கு யாழ்ப்பாணத்தில் பிரபலமான ஆங்கில டியுசன் வாத்தியிடம் சென்று கொண்டிருந்தான் .உயர்தரம் எடுத்தவுடன் ஆங்கிலம் பேச,எழுத டியுசனுக்கு போறதுதான் அந்த காலத்து வழமை.நானும் அவனுடன் போய் வந்து கொண்டிருந்தேன் .அவன் பல்கலைகழகத்திற்க்கு அருகாண்மையில் அறையில் வாடகைக்கு தங்கியிருந்தான்.படிப்பதற்க்கு அதிக நேரத்தை செலவிடலாம் என்பதால் இந்த முடிவை எடுத்திருந்தான். படிப்பதுடன் வ…
-
- 34 replies
- 3.4k views
-
-
வணக்கம் வாசகர்களே!!!!! கள உறவுகளே !!!! மீண்டும் " தென்கிழக்குச் சீமையிலே " என்ற ஒரு வரலாற்று தொடர் கதையுடன் உங்களைச் சந்திக்கின்றேன் . அண்மையில் நீண்ட காலங்களின் பின்பு பிரான்ஸ்சின் தென் கிழக்குப் பகுதியான ஆல்ப்ஸ் மறைற்ரும் மானிலத்தின் தலைநகராம் நீஸ் மாநகரிற்கு குடும்பமாக விடுமுறையைக் கழிக்கச் சென்றிருந்தேன் . அங்கு நான் கண்ட கேட்ட வரலாற்றுக் கதைகளையும் , நகைச்சுவையான சந்திப்புகளையும் இருவேறு பாணிகளில் பதிகின்றேன் . உங்கள் ஆதரவை நாடும் ................ நேசமுடன் கோமகன் *************************************************************************** நீசில் இருந்து கடந்த பலமாதங்களாக வந்த பலத்த நெருக்குவாரங்களினால் நானும் மனைவியும் நீஸ் புறப்படத் தேவ…
-
- 196 replies
- 18.7k views
-
-
வணக்கம் வாசகர்களே!! கள உறவுகளே!!! இத்துடன் எனது தென்கிழக்குச்சீமையிலே வரலாற்றுத் தொடர் கதையை நிறைவுக்குக் கொண்டு வருகின்றேன் . அதிகரித்துவிட்ட பணிச்சுமையினால் இந்தத்தொடர் அவ்வப்பொழுது தடங்கல்களைச் சந்தித்தது . அதற்கு நான் உங்கள் முன் மன்னிப்புக் கேட்கின்றேன் . ஒரு வரலாறையும் கதையும் சேர்ந்து சொல்லும்பொழுது , இருபக்கமும் சுவைகுன்றாமல் இருப்பதற்கும் எனக்குச் சிறிதுகால அவகாசம் தேவைப்பட்டது . உங்கள் எல்லோரையுமே என்னால் முடிந்த அளவிற்கு தென்கிழக்குச் சீமையை சுற்றிக்காட்டினேன் . இதில் வரலாற்றுத் தவறுகள் எங்காவது உங்கள் கண்ணில் தட்டுப்பட்டால் உரிமையுடன் சுட்டிக்காட்டுங்கள், திருத்திவிடுகின்றேன் . எனது முந்தைய தொடர்களை வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் . உங்கள் விமர்சனங்களை…
-
- 29 replies
- 3.1k views
-
-
வேட்டையன்– சித்தாந்தன் ஆத்மார்த்தனுக்கு அன்றைய பொழுது எரிச்சலுடனேயே விடிந்தது. அறையின் மூலைக்குள் இருந்து தவளை ஒன்று கத்துவதைப்போல அவன் மனைவியின் குரல் ஒலித்தது. ‘எழும்புங்கோ உங்களை யாரோ தேடி வந்திருக்கிறார்’ இந்தக் காலை வேளையில் தன்னை யார் தேடி வந்திருப்பார்கள்? அதுவும் இன்று விடுமுறை நாள். மிக்க அலுப்பும் சோர்வும் படர கட்டிலிலிருந்து எழுந்து கொண்டான். நீண்டதோர் பெருமூச்சு. காலை எழுந்தவுடனேயே வாயலம்பாமல் தேநீர் பருகும் பழக்கத்தைக் கொண்டவன் ஆத்மார்த்தன். ஆனால் சில நேரங்களில் இந்த வழக்கத்தை மறுதலிப்பது போலவும் அமைந்து விடுவதுண்டு. இரவு முழுக்கவும் தன்னுடைய பண்ணையின் கணக்குகளைப் பார்த்து முடித்துவிட்டுத் தாமதமாகத்தான் படுத்தான். இரண்டோ அல்லது ம…
-
- 0 replies
- 1.5k views
-
-
இது என் வாழ்வில் நான் எழுதும் இரண்டாவது கதை என்று சொல்லப்படக் கூடிய ஒரு பதிவு. முதலாவது சரிநிகரில் 21 வயதில் வெளியானதன் பின் மீண்டும் இரண்டாவதை 37 ஆவது வயதில் எழுத முயல்கின்றேன். கதை எழுதுவதற்குரிய எழுத்து ஆற்றல் இல்லை என்பதே கதை எழுதாமல் விட்டதன் காரணம். இது சர்வநிச்சயமாக இலக்கிய தரமாக இருக்கவே இருக்காது. ஒரு மர்ம நாவல் எழுதும் மனதையே என்றும் கொண்டிருந்தேன் என்பதும் நான் கதை எழுதாமல் விட்டதற்கான முக்கிய காரணம். இதுவும் ஒரு மர்ம கதை அல்லது நாவல் தான். ஆனால் எல்லாமே கற்பனை என்று சொன்னால் எவரும் நம்பப்போவதில்லை.... ------------------------------------------------------------------------------------------------------------- தோற்ற(ம்) விம்பங்கள்: …
-
- 35 replies
- 3.1k views
-
-
வள்ளிப்பிள்ளை தன்னைச்சுற்றி இருப்பவர்களை ஒரு முறை பார்த்தாள். அங்கு இருப்பவர்ர்களில் அதிகமானவர்கள் அவளைவிட வயதில் குறைந்தவர்கள். தூரத்தில் இருப்பவர்கள் அவளைச்சுட்டிக்காட்டிப்பேசும்போது அவளுக்கு வெட்கமாக இருந்தது. இந்த வயதில் இது தேவையா? என்று தன்னைத்தானே ஒருமுறை கேட்டாள். பேரப்பிள்ளைகளு ம் பீட்டப்பிள்ளைகளும் இருக்கையில் இப்படி ஒரு ஏற்பாடுதேவைதானா? இதை நிறுத்தமுடியாதா?அவள் தன்னைத்தா னே கேட்டாளே தவிர எவருக்கும் அதைப்பற்றிச்சொல்லமுடியாதநிலை கணவனே ஒப்புக்கொண்டபின்னர் அவள் மறுத்து என்ன பயன்.இந்தச்சின்னப்பிள்ளையளுக்கு முன்னாலை தனக்கு நடக்கப்போவதை நினைக்க நினைக்க அவளுக்கு வெட்கத்தில் என்ன செய்வதென்றேதெரியாது தவித்தாள். தனக்கு இப்படி ஒரு சம்பவம் நடக்கும் …
-
- 3 replies
- 918 views
-
-
[size=4]ஒரு ஊர்ல.... ஐய்யய்யோ வழக்கம்போல ஆரம்பிச்சிட்டன்!!! பரவாயில்லை.... அப்படித்தான் ஆரம்பிக்கணும். ஒரு நாள் ஐன்ஸ்டீன், தான் குடியிருந்த சாலை வழியாக சென்றிருக்கிறார். வழக்கமாக அவர் பயணிக்கும் பாதை என்றாலும் அவரது கவனம் ஒரு போதும் அதற்கு முதல் அந்த வீதியிலமைந்திருந்த அப்பிள் தோட்டத்தின் பக்கம் போயிருக்கவில்லை. ஆனால் ஒரு நாள் அதனை கண்டு அதிர்ச்சியடைந்து அந்த இடத்திலேயே சிந்தனையில் மூழ்கியிருந்தார்.[/size] [size=4]இநிலையில் அந்த வழியாக வந்த சிறுவன் தன்னை அவதானிக்கொண்டிருப்பதை உணர்ந்து ஆழ்ந்த சிந்தனையிலிருந்து சற்று வெளியே வந்த ஐன்ஸ்டீன் சிறுவனைப் பார்த்து 'இந்த அப்பிள் தோட்டத்திலுள்ள அனைத்து மரங்களிலும் அப்பிள் காய்த்திருக்கிறது ஆனாலும் (மரத்தைக்கா…
-
- 3 replies
- 1.3k views
-
-
[size=5]மச்சம் - இஸ்மத் சுக்தாய்[/size] உருது மூலம் – இஸ்மத் சுக்தாய் தமிழில் – ராகவன் தம்பி “சௌத்ரி… ஓ சௌத்ரி… கொஞ்சம் நான் சொல்றதைக் கேளேன்” கணேஷ்சந்த் சௌத்ரி அமைதியாக இருந்தார். “உஷ்… உஷ்”… “எதுக்கு இப்படி சில்வண்டு மாதிரி தொந்தரவு பண்ணிக்கிட்டே இருக்கே?” “எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு” “மரியாதையா சும்மா உட்காரு. இல்லேன்னா…” “இனிமேலும் என்னால உட்கார முடியாது. இங்கே பாரு. உக்காந்து உக்காந்து முதுகெல்லாம் பலகை மாதிரி ஆகிப்போச்சு. ஹே ராம்” “ச்சு… ச்சு… “எனக்கு அப்படியே உடம்பெல்லாம் நடுக்கமா இருக்கு” சௌத்ரி ஒன்றும் சொல்லவில்லை. “இங்கே… தோ… இங்கேதான். இங்கே பின்பக்கமா எறும்பு க…
-
- 0 replies
- 1.2k views
-
-
வைரவ சுவாமியை எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அவருக்கு ஒரு சின்னப் பிரச்சினை, இல்லைக் கொஞ்சம் பெரிய பிரச்சினை. அதைப் பிறகு பார்ப்போம். இப்ப கோனாச்சானா, கோனாச்சானா ஒரு தீவிர கடவுள் பக்தர். முருகன் சிவபெருமான், பிள்ளையார், உலகத்தில் உள்ள எல்லா அம்மன்கள், வைரவர்கள் என்று எல்லாக் கடவுளரையும் விட்டுவைக்காமற் கும்பிடுவார். இயேசு பிரானைத் தெரியாத ஊரிற் பிறந்துவிட்டார். இல்லாவிட்டால் அவருக்கும் ஒரு கும்பிடு போடாமல் இருக்கமாட்டார். கோனாச்சானா அவரிற்கு அவரின் அப்பா/அம்மா இட்டபெயராக இருக்கமுடியாது. கோ.சங்கரப்பிள்ளை தான் சுருங்கி கோனாச்சானா என்றாய் விட்டது. என்றாலும் ஊரில் முந்தநாள் மீசை முளைத்த பெடியளுக்கோ இல்லாவிட்டால் திரு கோ.சங்கரப்பிள்ளைக்கு அப்பா வயதில் உள்ளவர்களுக்கோ அவரின் இய…
-
- 0 replies
- 649 views
-
-
மச்சம் - லக்ஷ்மி சரவணக்குமார். மச்சம் குறித்த முதல் அக்கறை அவனுக்கு வந்தது சில மாதங்களுக்கு முன் ஒரு திங்கள்கிழமை அதிகாலையில்தான். விடுமுறை முடிந்து அலுவலகம் கிளம்பவேண்டி முகச்சவரம் செய்ய கண்ணாடியைப் பார்த்தவனுக்கு நம்பவே முடியாத ஆச்சர்யம்,, சரியாக அவனது இடது கன்னத்தில் இதழ்களுக்கு மிக அருகில் சின்னதாய் ஒரு மச்சம். ஏதாவது அழுக்காயிருக்குமோ என ஒரு முறைக்கு இரண்டு முறை முகம் கழுவிப் பார்த்தும் அந்தக் கருப்பு அதே அழுத்தத்துடன் இருந்தபோதுதான் இது மச்சம் தானென நம்பவேண்டியதாகிப் போனது, அதெப்படி இருப்பத்தி ஆறு வயதிற்கு மேல் ஒரு மனிதனுக்கு புதிதாக மச்சம் வளர முடியும்… ஆச்சர்யந்தான். சில நிமிடங்கள் ரொம்பவே பெருமையாக அதைப் பார்த்துக் கொண்டிருந்தான். நண்பர்கள் தனக்குத்…
-
- 3 replies
- 1.7k views
-
-
அப்பாவைக் கூட்டிவர காசு தருவீங்களா சித்தி....! அம்மா....! தர்சன் மாமா , சுகன் மாவெல்லாம் தடுப்பிலயிருந்து வந்திட்டாங்களாம்....! ஏனம்மா எங்கடை அப்பாவை கூட்டியர நீங்கள் போறீங்களில்லை....! இன்று முழுவதும் மகிழன் அபிராவை இப்படித்தான் தொல்லைப்படுத்திக் கொண்டிருந்தான். மகன் அம்மாட்டைக் காசில்லை....அதான அப்பாவைக் கூட்டியரப் போகேலா....! தாயின் சமாதானத்தில் அமைதியடையாதவன் மேசையில் இருந்த கொப்பி புத்தகங்களை நிலத்தில் எறிந்தான். கன்னத்தைப் பொத்தி அறைந்தாள் அபிரா. என்னடா....! என்ன வேணுமிப்ப...! பொறுமையின் எல்லை கடந்த நிலையில் அபிராவின் கைகள் அவனைத் தாக்கின. அடியின் நோவில் அவன் நீண்ட நேரம் அழுது கொண்டேயிருந்தான். எப்போதும் போலன்றிய அவனது அடம்பிடித்தல் இன்று எல்…
-
- 9 replies
- 10.2k views
-
-
முதலாவது பாகத்தை வாசிக்கப் பின்வரும் இணைப்பில் கிளிக்கவும்! http://www.yarl.com/...howtopic=110495 [size=4]வவுனியா புகையிரத நிலையத்தினுள், ஒரு பெருமூச்சை விட்டவாறு யாழ்தேவி நுழைந்தது.[/size] [size=4]அநேகமானவர்கள், தங்கள் மதியச் சாப்பாடுகளை, இங்கேயே முடித்து விட அவசரப் பட்டனர். வவுனியா தாண்டினால், கையைக்காலை நீட்டிச் சாபிடுவது கொஞ்சம் கடினமாக இருக்கும்![/size] [size=4]பல பெண்கள் போட்டிருந்த தாலிக் கொடிகள், இப்போது கணவர்களிடம் கை மாறின. சில புத்திசாலியான கணவர்கள், தங்கள் உள்ளாடைகளில், ஒரு விதமான இரகசியமான பொக்கட்டுகளைத் தைத்திருப்பார்கள் போலும். அவர்கள் நகைகளை வாங்கியதும்,யாழ்தேவியின் கழிப்பறைக்குள் போய் வந்த படி, இருந்தது அதனை உறுதிப் படுத்திய…
-
- 14 replies
- 1.4k views
-
-
[size=4] [/size] [size=4]புதுவருடம் பிறக்கப் போகிறது. புதுசாக ஏதாவது செய்யவேண்டுமே என்று டாக்டர் யூனோயோசித்தார். டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார் டாக்டர். 1924 ஜனவரியில் ஒரு இரண்டுமாத வயதே ஆன நாய்க்குட்டியை வாங்கினார். அகிடா எனப்படும் வகை நாய்க்குட்டி அது. அகிடா வகை நாய்கள் கம்பீரமான தோற்றம் கொண்டவை. தன் செல்லப் பிராணிக்கு ஹசிகோ என்று பெயரிட்டார் யூனோ.[/size] [size=4]கோல்டன் பிரவுன் நிறம் கொண்ட ஹசிகோ தன்னுடைய எஜமானருக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை தந்தது. யூனோவும், ஹசிகோவும் அடுத்த சில மாதங்களில் நெருக்கமான நண்பர்களாக உருவெடுத்தார்கள். தினமும் காலை டாக்டர் யூனோ, பல்கலைக்கழகத்துக்கு செல்ல வீட்டிலிருந்து அருகிலிருக்கும் ஷிபுயா ரயில் நிலையத்துக்கு நடந்துச் ச…
-
- 2 replies
- 1.6k views
-
-
இந்த பக்கத்தில் இன்னது என்று இல்லாமல், நாளாந்தம் நடக்கும், மனசுக்குள் எழும், கேட்கும் விடயங்களை எழுதலாம் என்று ஆரம்பிக்கின்றேன். தினசரி குறிப்புகள் போல்..... வழக்கம் போல இடையில் விட்டு விடுவேனோ என்றும் தெரியாது *********************** என் மகள் தன் தொட்டிலில் இருந்து (crib) பால் குடிப்பதற்காக தாயிடம் வந்தவள், பாலைக் குடித்த பின் சும்மா இருக்காமல் பக்கத்தில் படுத்து கொண்டு குறட்டை விட்டு இருந்த என் மூக்கின் இரு துவாரங்களிலும் தன் பிஞ்சு விரல்களை நுழைத்த போது வந்த தும்மலில் தான் என் காலை விடிந்தது. மிகவும் வித்தியாசமாக விடிந்த போதே இன்றைய நாள் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். அவளை முத்தமிட்ட பின் (வாய் கழுவாமல் தான்) எழும்பி குளித்து TTC b…
-
- 44 replies
- 4.8k views
-
-
எப்போதும்செம்பாட்டுமண்ணின்வாசமும்-அதை மூடிவளர்ந்த பயிர்களின்பசுமையும் -நிறைந்த ஒரு சிறுகிராமமது.காசுவசதிகொண்ண்டவர்களை கொண்டிராத போதிலும் பாசவளர்ச்சிகொண்டிருந்தவர்களை தன்னகத்தே கொண்டிருந்தது அக் கிராமம் .சின்னச்சின்ன ஒழுங்கைகள் அறிமுகமிலாதவர்களுக்கு முழு கிராமத்தையும் அறிமுகம் செய்துவைக்கும். அழகானசிறுகோவில்அதனருகே சிறுபடிப்பகம்.கோவில்திருவிழாக்காலங்களில் விதவிதமானபுத்தாடைகளுடன் உலகஅழகிகளின் செருக்குடன் உள்ளூர்அழகிகள்சுற்றிவருவர். துவிச்சக்கரவண்டிகளின் சக்கரங்கள்தேயத்தேய கன்னிகளைச்சுற்றும்காளையர்கள்.உள்ளூர்பேட்டைகளை கண் வைக்கவரும் அயலூர் பெடியன்களுடன்புழுதிகிளம்ப நடக்கும்போரென ஊரேரணகளமாய் மாறியிருக்கும்.அந்த ஊரில்தான் இவனும்இருந்தான்.வீதியில்ஊற்றிவிட்…
-
- 27 replies
- 4.8k views
-
-
ஆட்டிசம் வீட்டில் எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் நம்மில் பலர் குழந்தைகளைப் பார்த்தவுடன் மனச்சுமை எல்லாவற்றையும் மறந்து குழந்தையோடு குழந்தையாகி விளையாடும்போது மனம் எவ்வளவு லேசாகி விடுகிறது. “யாழினிது குழலினிது என்பர் மழலை மொழி கேளாதோர்” என்று சும்மாவா பாடி வைத்தார்கள்? ராசன் சுஜா தம்பதிகள் குழந்தைச் செல்வம் வேண்டுமென்று தவமிருந்து பெற்ற பிள்ளை தான் நர்மிதா. எல்லாப் பெற்றோரைப் போலவும் தங்கள் குழந்தையின் ஒவ்வொரு சிறிய வளர்ச்சியையும் பார்த்துப் பார்த்துப் பூரித்துக்கொண்டிருந்தவர்களுக்கு எப்போது தம்பிள்ளை தங்களைப் பார்த்துச் சிரிப்பாள், தூக்கச் சொல்லிச் சிணுங்குவாள, தவழ்ந்து வந்து செல்லக் குறும்புகள செய்து தங்களைச் சிரிக்க வைப்பாள் என்ற எதிர்பார்ப்பெல்லாம் ந…
-
- 18 replies
- 10.9k views
-
-
http://sinnakuddy1.b...-post_8635.html
-
- 1 reply
- 703 views
-
-
-
- 23 replies
- 1.6k views
-
-
ஒரு தனித்துவமான பண்பாட்டின் நல்ல அடையாளம் அதன் தனித்துவமான இசை. தனித்துவமான பண்பாடு இல்லாமல் இனமோ, தேசியமோ இருக்க முடியாது. தனித்துவம் மிக்க தூய்மையான இசையை தருபவன் அந்த இனத்தின், தேசியத்தின் பெரும் சொத்து. இளையராஜா எங்களின் சொத்து ஒரு நாள் என்னுடைய மனைவி என்னிடம் கேட்டார். „உங்களுக்கு இளையராஜாவை நேரில் சந்தித்து பேச விருப்பமா?'. உடனடியாகவே என்னுடய பதில் 'இல்லை' என்பதாகவே இருந்தது. அந்த மனிதன் தன்னுடைய இசை மூலம் எங்களுடன் தினமும் பேசிக் கொண்டிருக்கிறான். அவனுடைய புல்லாங்குழல் எங்களுடன் கூடவே பயணித்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் துள்ளிக் குதிக்கும் போது அவன் இசை எங்களோடு சேர்ந்து துள்ளுகிறது. சோர்ந்து வாடி இருக்கும் போது அவன் இசை தலை கோதிச் செல்கிறது. என…
-
- 43 replies
- 4.7k views
-
-
கோட்சே நான் RSS தூதுவனும் அல்ல., காந்திஜிக்கு எதிரனாவனும் அல்ல., கோட்சே வாக்குமுலம் என் மனதை தொட்டது அதனால் தான் எங்கு பதிவு செய்தேன் அவ்வளவே..... காந்திஜி மாமனிதர் என்றாலும் அவரும் சில தவறுகள் செய்து இருக்கிறார்., காந்திஜி கொல்லப்பட்ட வழக்கில் கோட்சே யின் வாக்குமுலம் -------------------------------------------------------------------------------------- காந்தி கொலை செய்யப்பட்டதற்கு முழுக்க முழுக்க நானே பொறுப்பு. வீரசவர்க்கார் உள்பட வேறு எவருக்கும் தொடர்பு இல்லை" என்று கோட்சே கூறினான். டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் கோட்சே தொடர்ந்து வாக்குமூலம் அளித்த…
-
- 3 replies
- 871 views
-
-
காலையில் ஆறு மணியளவில் புறப்பட்டேன் ...................எனது காரில் cd பிளையறை அழுத்த அந்த அருமையான முன்னிசையுடன் ...........விண்வரும் மேகங்கள் பாடும் .....என்ற அந்த அற்புதமான பாடல் என்னை உற்சாகப்படுத்தியது ..............புதிய உற்சாகத்துடன் மாவீரர் மண்டபத்தை காலை எட்டு மணியளவில் சென்றடைந்தேன் .......ஏற்கனேவே பேசியதற்கு இணங்க குறிப்பிட்ட அனைவரும் சரியான நேரத்திற்கு வந்தடைந்தனர் ................அவரவர் தத்தம் பணிகளை செய்ய தயாராகினர் ......நேற்று இரவே பெரும்பாலான வேலைகள் முடிந்தமையால் மீதியை இருந்த வேலைகளை முடிக்க அனைவரும் உற்சாகத்துடன் ஆரம்பித்தோம் .............மேடையில் ஏற்கனவே பொருத்தியிருந்த இசைக்கருவிகளை தந்திகள் மூலம் கலவைக்கருவிக்கு இணைத்து எல்லாவற்றையும் சரி சமம் செ…
-
- 3 replies
- 868 views
-
-
வணக்கம் உறவுகளே! அனைவரும் நலம் தானே! எமது குழந்தைப் பருவத்தை யாராலும் மறக்க முடியுமா? இல்லைத் தானே! நாம் சிறுவர்களாக இருக்கும் போது நாம் செய்த குறும்புகள் எவையுமே என்றுமே எம் மனதை விட்டு அகலாது! அது போல, நாம் உடுத்திய உடைகள், பழகிய நண்பர்கள், பாடிய பாடல்கள் என்று எவையுமே மறக்க முடியாதவை! இன்று நான் உங்களுடன் பகிர்ந்துகொள்வது நாம் சிறிய வயதில் பாடித் திரிந்த பாடல்கள் பற்றி! நான் சிறுவனாக இருக்கும் போது, எங்கள் வீட்டில் நிற்பதில்லை! அம்மம்மா வீட்டில்தான் போய் நிற்பேன்! அங்கு மாமாக்கள், சித்திமார், அத்தைமார் எல்லோரும் நிற்பார்கள்! என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரர்கள், மச்சாள்மார், மச்சான்மார் என்று எல்லோரும் சேர்ந்து விளையாடுவோம்! அப்போது நாங்கள் பல பாடல்கள் படிப்ப…
-
- 5 replies
- 2k views
-
-
புகலிட தேசமொன்றில்..... பெரியவர்: பிள்ளை எப்படி இருக்கிறாய்? அந்த அக்கா: நான் நல்லா இருக்கிறன்.. அங்கிள்.. பெரியவர்: முகத்தில சந்தோசத்தைக் காணேல்லையே.. அந்த அக்கா: இல்லையே நல்லாத் தானே இருக்கிறன். பெரியவர்: மனசில இருக்கிற சோகம் அப்படியே தெரியுது.. ஏன் பிள்ளை அதை மறைக்கிறா.. வெளிநாட்டுக்கு வந்தாச்சுத் தானே.. பிறகென்ன கவலை.. அந்த அக்கா: நான் மட்டும் வெளிநாட்டுக்கு வந்தாச்சு. அது எங்கட சொந்தங்களுக்கு சந்தோசம். ஆனால். எனக்கு..???! பெரியவர்: என்ன பிள்ளை ஆனால் என்று இழுக்கிறா.. என்ன சொல்ல வந்தியோ அதை மனந்திறந்து சொல்லு... அந்த அக்கா: என்னத்தை அங்கிள் சொல்லுறது.. முள்ளிவாய்க்காலுக்க என் கூடவே நின்ற ஆயிரம் ஆயிரம் மக்களும் போராளிகளும் தொலைத்…
-
- 0 replies
- 563 views
-