கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
புதுப்பித்தல் ‘‘பரமு! நம்ம ரெண்டு பேர் பாஸ்போர்ட்டையும் புதுப்பிக்கணும். ஆன்லைன்ல அதுக்கு ஏற்பாடு பண்ணிட்டேன்!’’ - வீட்டுக்குள் நுழைந்தபடி சொன்னார் சதாசிவம்.‘‘சரிங்க!’’‘‘அடுத்த மாசத்தோட என்னோட டிரைவிங் லைசென்ஸ் முடியப் போகுது. அதையும் புதுப்பிக்கணும்!’’ ‘‘சரிங்க!’’‘‘பரமு! டி.டி.ஹெச்சுக்கு பணம் கட்டாம விட்டுட்டோம். ஒரு சேனலும் தெரியலை. பணத்தைக் கட்டி கணக்கைப் புதுப்பிக்கணும்!’’ ‘‘சரிங்க!’’ ‘‘நான் ரிட்டயர் ஆனப்போ கிடைச்ச ஆறு லட்ச ரூபாயை ஒரு வருஷத்துக்குனு நிரந்தர சேமிப்பா பேங்க்ல போட்டேன் இல்லையா? வருஷம் முடியப் போகுது. அதையும் அடுத்த வாரம் புதுப்பிக்கணும்!’’‘‘சரிங்க!’’‘‘என்கூட ஸ்கூலில் ஒண்ணா படிச்சானே ராமசாமி... ஏதோ காரணத்துக்காக கோவிச்சுகிட்டுப் போனவனை ம…
-
- 1 reply
- 892 views
-
-
அனந்தசயனபுரி சிறுகதை: சாம்ராஜ், ஓவியங்கள்: ஸ்யாம் அவன் திருவனந்தபுரம் போய் இறங்கும்போது நல்ல மழை. இந்தக் கற்கிடக மழை, தொடங்கினால் நிற்காது பெய்துகொண்டே இருக்கும். ரயில் குழித்துறையைத் தாண்டும்போதே, மழை தொடங்கிவிட்டது. முன்பு இதுபோல் மழை பெய்தால், ரயில் கதவின் அருகில் நிற்பான். மழைக் கேரளத்தைப் பார்ப்பது ஆன்மிகம். அதிகாலையில் பச்சை வெளிக்குள் சிறிய அம்பலமும் (கோயில்), அதில் ஏற்றப்பட்டிருக்கும் விளக்குகளின் மினுமினுப்பும், கசிந்துவரும் மலையாளப் பாடல்களும் மனதைக் கனியச்செய்யும். ஆனால், இன்று அப்படி நிற்க முடியவில்லை. அவன் ஜன்னலைப் பார்ப்பதையே தவிர்த்தான். ஒருகட்டத்தில் முடியாமல், மேலே ஏறிப் படுத்தான். திருவனந்தபுரம், பரபரப்பு இல்லாமல் இருந்தது. சிவ…
-
- 1 reply
- 2.5k views
-
-
ஒரு நிமிடக் கதை: கடன் நல்லது ‘‘சார்..!’’ வாசலில் குரல் கேட்டு எட்டிப் பார்த்தார் முரளி. அந்தத் தெருவில் அயர்ன் பண்ணுபவர், ஒரு 15 வயசு பையனுடன் நின்றுகொண்டிருந்தார். ‘‘சார்.. இவன் என் பையன். . ஸ்கூலுக்குப் போக ஒரு சைக்கிள் வேணும்னு கேக்கறான். இந்த தெருவுல எல்லார் வீட்டிலும் கொஞ்சம் கடன் வாங்கி சைக்கிள் வாங்கித் தரலாம்னு கூட்டிட்டு வந்தேன். உங்களுக்கு இஷ்டமானதைக் கொடுங்க.. அயர்ன் பண்ணுற காசுல கொஞ்சம் கொஞ்சமா கழிச்சுக்கலாம்..” என்றார். அஞ்சு வருஷமாக அவரைத் தெரியும்.. நம்பிக்கையானவர்தான். முரளியும் ஒரு தொகையைக் கொடுத்தனுப்பினார். ஆனால் மகனையும் கூட்டிக்கொண்டு வந்து அவர் கடன் கேட்டது முரளிக்கு…
-
- 1 reply
- 807 views
-
-
பிரதாப முதலியார்.ச - அ.முத்துலிங்கம் ஓவியங்கள் : ரமணன் அன்று அவனைச் சந்தித்திருக்காவிட்டால் இது நடந்திருக்காது. காலையில் கொக்குவில் ரயில் ஸ்டேஷனுக்கு வந்திருந்தான். வயது 12 இருக்கும். ஏதோ பெரிய ஆள்போல இவன் முன்னுக்கு நடந்துவர, பின்னால் தள்ளுவண்டியில் ஒரு மூட்டையைத் தள்ளிக்கொண்டு ஒருவன் வந்தான். இவன்தான் சொந்தக்காரன்போல இருந்தது. ஸ்டேஷன் மாஸ்டர் கொடுத்த படிவத்தைப் பெற்று, அதை ஆங்கிலத்தில் ஒருவிதப் பிரச்னையும் இல்லாமல் நிரப்பினான். பலநாள் இதைச் செய்தவன்போல காணப்பட்டான். இரண்டு தரம் என்னைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தான். நானும் சிரித்தேன். ‘இவன் எந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கிறான்? என்னிலும் இரண்டு வகுப்பு கூடப் படிக்கலாம். நான் சந்தித்ததே இல்லை.’ …
-
- 1 reply
- 1.8k views
-
-
மூகம்மா காடு - ஜெயராணி ஓவியங்கள் : செந்தில் பசுமையை வெளுத்துப் பார்க்கும் வெயில் காலம். ஸ்ரீசைலம் என்ற அந்தச் சிறிய நகரம், சற்று அதிகமாகவே வெயிலூட்டப்பட்டிருப்பதாகத் தோன்றியது. ``மலை மேலயும் இவ்ளோ வெயில் தெரியுமா?!’’ உடலை நனைத்த பிசுபிசுப்பும் பயணக் களைப்பும் அலுப்புடன் இந்தக் கேள்வியைக் கேட்கத் தூண்டின. ``ஏறக்குறைய நடுக்காட்டுக்குப் போகப் போறோம். போய்ச் சேரவும் ராத்திரியாகிடும். அந்நேரத்துக்கு பூமி குளிர்ந்திருக்கும்’’ என்றார் சோலையன். நடுக்காட்டில் குடியிருக்கும் பழங்குடி மக்களைச் சந்திக்க, இரவு நேரத்தில் போக நேரிடும் என நினைக்கவில்லை. ஆனால், பயணத்தில் ஏற்பட்ட இடர்ப்பாடுகளால் இப்படி ஆகிவிட்டது. ``ராத்திரியில போறதுல ஒண்ணும் சிக்கல் இல…
-
- 1 reply
- 1.1k views
-
-
இரண்டாம் திருமணம் செய்த தகப்பன் தன்னுடைய சிறிய மகனிடம் கேட்கிறான்.."உன்னுடைய இப்போதைய அம்மா எப்படி".என்று.அப்போது அந்த மகன் சொன்னான் ."என் அம்மா என்னிடம் பொய் சொல்பவளாக இருந்தால்.ஆனால் இப்போதைய அம்மா என்னிடம் பொய் சொல்பவலாய் இல்லை"இதைகேட்ட தகப்பன் கேட்டான்."அம்மா உன்னிடம் என்ன பொய் சொன்னால்?"அந்த குழந்தை சிறுசிரிப்புடன் தன் தகப்பனிடம் சொன்னான் ....."நான் சேட்டைகள் செய்யும்போது என் அம்மா சொல்வாள் ,எனக்கு இனிமேல் சாப்பாடு தரமாட்டேன் என்று .ஆனால் கொஞ்சநேரம் ஆகும்போது என்னை தன்னுடைய மடியில் அமர்த்தி பாட்டுபாடி ,நிலாவைக்காட்டி கதைசொல்லி அவள்தரும் ஓவ்வொரு பருக்கை சோற்றிலும் அவளுடைய பாசம் இருக்கும்.ஆனால்.."இப்போதைய அம்மா,நான் சேட்டைகள் செய்யும்போது சொல்வாள் "உனக்கு சோறு தரமாட்…
-
- 1 reply
- 6k views
-
-
உன் பேர் சொல்லுஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர் வந்தாரு.அந்த பள்ளிக்கூடத்தப் பத்தி ஏற்கனவே நிறைய அவரோட வேலை பாத்தவங்க சொல்லி இருக்காங்க. அதனால எதுக்கும் தயாராத்தான் அவர் வந்தார்.முதல்ல ஒரு வகுப்புக்குள்ள போன உடனே பசங்க எல்லாம் எழுந்திருச்சு நின்னு வணக்கம் சொன்னாங்க!.சரி எதாவது கேள்வி கேக்க வேண்டாம்ன்னு முதல் பையன எழுப்பி. . "உன் பேர் சொல்லு" "பழனி" "உன் அப்பா பேரு" "பழனியப்பா", அடுத்தப் பையன எழுப்பி , "உன் பேர் சொல்லு" "மாரி" "உன் அப்பா பேரு" "மாரியப்பா" அவருக்கு கொஞ்சம் டவுட் வருது. இருந்தும் அடுத்தப் பையன எழுப்பி. "உன் பேர் சொல்லு" "பிச்சை" "உன் அப்பா பேரு" "பிச்சையப்பா" இப்பொ அவருக்கு கன்பார்ம் ஆயிடுச்சு, சரி பசங்க ஆரம்பிச்சுட்…
-
- 1 reply
- 1.7k views
-
-
புரொபசர் சகல சந்தேக நிவாரணி! புரொபசர் சகல சந்தேக நிவாரணி! பாக்கியம் ராமசாமி ப க்கத்து வீட்டில் ஒரு புரொபசர் இருந்தார். புரொபசர்னா புரொபசரே அல்ல; அசிஸ்டென்ட் லெக்சரர் - ஒரு தனியார் கல்லூரியில்! சென்னையிலிருந்து ரெண்டு பஸ் பிடித்து, ரெண்டு மணி நேரம் பிரயாணம் செய்தால், அவரோட காலேஜ் இருக்கிற கிராமம் தெரியும். அப்புறம் பொடி நடையா கால்மணி நடந்து, சரியா 11 மணிக்கு காலேஜை அடைந்து…
-
- 1 reply
- 1.1k views
-
-
உயிர்ப்பு கட்டிலின் விளிம்பிலிருந்து தொங்கிய விரிப்பை இழுத்து உள்ளே செருகினான். அந்தச் சிறிய அசைவில் கண் விழித்த அம்மா, மெல்ல தனது சுருண்ட உடலை நகர்த்தி அவனது சீர் செய்யும் நடவடிக்கைக்கு இடம் கொடுத்தாள். அவளைப் பொறுத்தவரையில் நோயில் படுத்ததிலிருந்து தன் மகன் மாதவனுக்கு, தான் ஒரு பாரமாக ஆகிவிட்டோம் என்ற எண்ணம் விழுந்து விட்டது. ஆனால், இது குறித்த கவலை எதுவுமில்லாமல் மாதவன் பேச்சில் கிண்டலும் உற்சாகமும் குறையாமல் வளைய வந்து கொண்டிருக்கிறான். இது அவனுடைய இயல்பு. இந்த உற்சாகமும் அடுத்த பொழுதைப் பற்றிய கவலையின்மையும்தான் அவனை மட்டுமல்ல, அவன் தாயாரையும், மற்றும் இரண்டு…
-
- 1 reply
- 1.6k views
-
-
புத்திசாலிகள்! துபாயில் இறங்கிய பத்து நாட்களில் வாடகைக்கு வீடு பிடிக்க வேண்டும். வேலைக்கு சேர்ந்தாயிற்று. 10 நாட்களுக்குத்தான் கம்பெனி சார்பில் ஹோட்டலில் தங்க வைப்பார்கள். அதற்கு மேல் என் பாடு.அங்கு எனக்கு யாரையும் தெரியாது. ஆபீஸ் லன்ச் டைமின்போது ஒன்றாக அமர்ந்திருந்த ஒரு பன்னாட்டுக் கலவையான குரூப்பிடம் கேட்டேன். ‘‘எனக்கு வீடு தேட ஹெல்ப் பண்ண முடியுமா?’’ ஒருவன் கேட்டான், ‘‘கார் பார்க்கிங்குடன் வேண்டுமா?’’ என் பதில், ‘‘எனக்கு கார் வாங்கும் ஐடியாவே இல்லை!’’ அடுத்து பட்ஜெட், ஏரியா, ரூம் போன்ற வழக்கமான கேள்விகள். இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, லெபனான், ஆஸ்திரேலியா எனப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அவர்கள். தாங்கள் தங்கியிருக்கும் பில்டிங்கிலேயே ஏதாவது வீ…
-
- 1 reply
- 1.4k views
-
-
ரத்னா! ''அம்மா... உங்களைப் பார்க்க ஒருத்தர் வந்திருக்கார்... பேரு உலகநாதனாம், உங்களை அவருக்குத் தெரியுமாம்... அவரை உங்களுக்கும் தெரியுமாம்,'' செங்கம்மா சொன்னபோது, ஆச்சரியத்துடன் பார்த்தாள், ரத்னா. ''எப்ப வந்தார்... இப்ப தானே கதவை திறக்கிறோம்.'' ''வாசலை பெருக்கி, கோலம் போடலாம்ன்னு கதவைத் திறந்தேன்... இந்த அய்யா வந்தார்.'' ''உலகநாதனா... அவர் ஏன்... எப்படி... எதற்கு, அவர் தானா அல்லது வேறு யாராவதா... இது என்ன புது கதை! சரி... வரச்சொல்!'' உலகநாதன் தடுமாறியபடி உள்ளே வந்தார். கையில் தடி, தாடி, நைந்து போன வேட்டி, சட்டை. தன்னையறியா…
-
- 1 reply
- 911 views
-
-
தீபச்செல்வன் கிரிஸ் மனிதர்கள் என்கிற இரத்த பூதங்கள் இலங்கையின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் சிறுபான்மை இன மக்களை அச்சுறுத்தும் கிரிஸ் மனிதர்கள் எனப்படும் அரச பூதங்கள் நடமாடி மக்களின் இயல்பு வாழ்வைத் தின்று வருகின்றன. முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர் இந்த பூதங்கள் இரத்தம் குடிக்கும் நோக்குடன் அப்பாவி மக்களை இலக்கு வைத்துள்ளன. யுத்தம் மூலம் லட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்களைக் கடித்துக் குதறி சனங்களின் இரத்தத்தை இந்தப் பூதங்கள்தான் குடித்தன என்பதை நிரூபிக்கும் விதமாகத் தொடர்ந்து இரத்தப்பசியுடன் அலைகின்றன. உலகம் மிக நவீன கண்டுபிடிப்புகளால் வளர்ந்துள்ள நிலையில் அதன் செல்வாக்குடன் ஈடுகொடுக்கத்தக்க நிலையில் நகரும் இலங்கை நாட்டில் மனிதர்களைக…
-
- 1 reply
- 1.4k views
-
-
"விசுவாசம்" நான் சாதாரண வகுப்பில் தமிழ் கற்கும் ஒரு மாணவன். எமது ஆசிரியர் இன்று எம்மை 'விசுவாசம்' பற்றி கவிதை எழுதும்படி பணித்தார். எமது இனத்தின் இருப்பை, அடையாளத்தை, பண்பாட்டை காட்டுவது தாய் மொழி என்று அதே ஆசிரியர் நேற்று கூறியது ஞாபகம் வருகிறது. இன்று விசுவாச [višvāsa] என்ற வடமொழியை, நல்ல தமிழ் சொற்களான உண்மை, நம்பிக்கை, மாறாத பற்று போன்றவை இருக்கும் பொழுதே பயன் படுத்துகிறார் என்பது எனக்கு கோபமாக வந்தது. என்றாலும் அதை நான் வெளிக்காட்டவில்லை. இலங்கையில் தமிழ் பேசும் மக்கள், எந்த மதத்தை பின்பற்றுபவர்கள் என்றாலும் என்றும் தம் தாய் மொழியில் மாறாத பற்று கொண்டவர்களாகவே அநேகமாக இருக்கிறார்கள். அப்படியான குடும்பம் ஒன்றில் தான் நான் பிறந்தேன். எனக…
-
- 1 reply
- 1.6k views
-
-
அது ஒரு நட்சத்திர ஹோட்டல் அறை. அங்குள்ள ஒரே டபிள் பெட்டில் படுத்திருக்கிறேன். குளிர்சாதன இயந்திரம் குளிர்ந்த காற்றை அள்ளித் தாராளமாக வீசிக்கொண்டிருக்கிறது. நான் விழித்தபடி யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். யாரோ பெண்ணொருத்திக்கான காத்திருப்பாக இருக்கலாம். நிச்சயமாகத் தெரியவில்லை. மனதில் அங்கலாய்ப்பு இருந்தது. அதிக நேரம் காத்திருக்கவில்லை. எதிர்பார்த்ததுபோல கதவைத் திறந்தபடி அழகான ஐரோப்பிய பெண் ஒருத்தி உள்ளே வருகிறாள். அவளது உடலில் இருந்து வந்த வாசனை அறையெங்கும் நிறைக்கிறது. காற்றில் மெதுவாக அசையும் தீபமென அசைந்து உள்ளே வந்தவள் தனது சொந்த படுக்கையறைபோல் உடைகளை ஒவ்வொன்றாக களைந்து பக்கத்தில் உள்ள கதிரையில் போடுகிறாள். இப்பொழுது அவளது தலையலங்காரத்தை கலைத்த…
-
- 1 reply
- 661 views
-
-
, http://www.madathuvaasal.com/2013/10/blog-post.html இன்று வேலை முடிக்கும் நேரம் என் மேலதிகாரி என்னிடம் வந்து "நாளைக்கு நான் வேலைக்கு வரமாட்டேன் நாங்கள் இருக்கும் இடங்களைக் காலி செய்யச் சொல்லிவிட்டார்கள் எனவே வேறு இடத்து மாற வேண்டும்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். கடந்த சில நாட்களாக சிட்னியின் பெரும்பாகத்தைத் தாண்டிய புற நகர்ப்பகுதிகளில் பரவலான காட்டுத்தீயின் கொடூரம் பல உடமைகளை நாசப்படுத்தி விட்டது. இன்னும் இன்னும் அதிகமாகும் என்ற முன்னெச்சரிக்கையின் விளைவாக காட்டுத்தீ பரவக்கூடிய அண்மித்த இடங்களில் உள்ள மக்களையும் இடம்பெயரச் சொல்கிறார்கள். எனது மேலதிகாரி ஒரு வெள்ளை இனத்தைச் சேர்ந்த அவுஸ்திரேலியர். நகரத்தித்தின் அடர்த்தி இல்லாத எளிமையான இயற்கை வனப்புள்ள கிராமம…
-
- 1 reply
- 813 views
-
-
அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய ஒரு ஓய்வான பொழுதில் சகோதர (சிங்கள) மொழி கன்சல்டன்ட் சொன்னார். பழைய காலத்தில் மக்களிடம் (சிங்களவர்) ஒரு வழக்கம் இருந்ததாம்! ஒரு குடும்பத்தில் அண்ணன், தம்பி இருவரும் ஒரே பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதுதான் அது! சும்மா கதை விடுதா பயபுள்ள? -அதிர்ச்சியுடன் சந்தேகமாகப் பார்க்க, புரிந்து கொண்டு சொன்னார். காட்டுப் புறங்களில் விவசாயம் செய்யும் போது வீடும், விவசாய நிலமும் அதிக தூரத்தில் இருக்கும். இரவில் காட்டு விலங்குகள் காரணமாக பயிர் நிலத்தைக் கண்காணிக்க வேண்டும். அதே நேரத்தில் வீட்டில் மனைவி தனியாக! அப்போ வேறு ஆண்கள் இடையில் வந்துவிடாமல் மனைவியை ஒருத்தரும், பயிர்நிலத்தை ஒருத்தரும் மாறி,மாறி!? ஏன் இரண்டு பேரும்…
-
- 1 reply
- 1.4k views
-
-
அப்போ எனக்கு 10 - 12 வயதிருக்கும். விடுமுறைக்கு விடுதியிலிருந்து வீடுவந்திருந்தேன். அம்மா எனது கையெழுத்து ஒழுங்காக வரவேண்டும் என்பதற்காய் தனக்குத் தெரிந்த தமிழையெல்லாம் எழுது எழுது என்றும் சொல்வதெழுதல் எழுது என்றும் பாடாய்படுத்திக்கொண்டிருந்தார். அப்பாவோ தமிழின்பால் திரும்பியும் பாராதவர். அது ஒன்று தான் அவர் தமிழுக்குச் செய்த தொண்டு. ஆங்கிலமும், கணிதமும் அவர் கரைத்துக் குடித்த பாடங்கள். என்னையும் கரைத்துக்குடி குடி என்று என் உயிரை எடுத்துக்கொண்டிருப்பார். அவரால் முடியாது போன காரியங்களில் இதுவும் ஒன்று. விடுமுறைக்கு வந்தால் அப்பாவின் சகோதரிகளிடம் அழைத்துப்போவார்கள். நெடுந்தூரப்பயணம் அது. பஸ், ரயில், இறுதியில் அப்பய்யாவின் சோமசெட் கார் என்று அப்பயணம் முடிவுறும்.…
-
- 1 reply
- 1.2k views
-
-
சூரியகாந்திப் பூவை ஏந்திய சிறுமிகள்! - சிறுகதை எஸ்.ராமகிருஷ்ணன் - ஓவியங்கள்: ஸ்யாம் ``உலகத்துல இருக்கிற பூவுலேயே எதும்மா பெருசு?'' என, அடுப்படிக்குள் நுழைந்த ரம்யா கேட்டாள். முகத்தில் வெக்கை வீசக் கடுகைத் தாளித்துக் கொண்டிருந்த பார்வதி, எரிச்சலான குரலில் சொன்னாள்... ``தாமரை.'' ``இல்லம்மா. `சூரியகாந்திப் பூ'னு கிருஷ்ணவேணி சொல்றா'' என்றாள் ரம்யா. ``அதுக்கு என்னடி இப்போ?'' எனச் சலிப்புடன் கேட்டாள் பார்வதி. ``ஏன்மா, சூரியன் பின்னாடியே சூரியகாந்திப் பூ போய்க்கிட்டே இருக்கு?'' ``அது சூரியனோட பொண்டாட்டி. அதான் பின்னாடியே போய்க்கிட்டு இருக்கு, போதுமா?'' என்றபடியே அடுப்பைத் தணித்தாள். அம்மாவின் சிடுசிடுத்த பதிலில் வருத்தம் அடைந்தவள்போல ர…
-
- 1 reply
- 3.9k views
-
-
பனங்காடு – கருணாகரன் யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி செல்லும் நெடுஞ்சாலையில் முப்பது கல் தொலைவில் இருக்கிறது இயக்கச்சி. முறைப்படி சொல்ல வேண்டுமானால், கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் வழியில் 169 கல் தொலைவில் இருக்கிறது ஊர். கிலோ மீற்றரில் சொல்வதென்றால், 270ஆவது கல்லில் இருக்கிறது அது. இப்போது இரண்டு கற்களும் அங்கே உண்டு. எந்தக் கல்லை வைத்தும் அடையாளம் கண்டுவிடமுடியும். யாழ்ப்பாண ராஜ்ஜியத்திலிருந்து கண்டி ராஜ்ஜியத்துக்குப் போகும் வழியே இந்த நெடுஞ்சாலை என்று சொல்வார் மாமா. ஐரோப்பியர்கள் முதலில் இலங்கையில் நெடுஞ்சாலைகளை அப்படித்தான் அமைத்திருக்கிறார்கள் என்பது அவருடைய வாதம். கண்டி ராஜ்ஜியத்திலிருந்து கொழும்பு கோட்டை ராஜ்ஜியத்துக்கும் கோட்டை ராஜ்ஜியத்திலிருந்து கா…
-
- 1 reply
- 879 views
-
-
விருந்து! குத்து விளக்கு வடிவில் சீரியல் செட், மஞ்சள், பச்சை வண்ணத்தை சிதறிக் கொண்டிருக்க, அதன் பக்கத்தில் வணக்கம் சொல்லும் வளையல் அணிந்த பெண் கைகள் இரண்டு அழகாய் ஜொலித்துக் கொண்டு இருந்தன. இரண்டு புறமும் அழகாய், அடர்த்தியான வாழை மரங்கள் கட்டப்பட்டு இருக்க, அதன் உச்சியில் தென்னை குருத்து கட்டப்பட்டு இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன் நடப்பட்ட பந்தக்காலின் உச்சியில், மஞ்சள் துணியில் நவதானிய மூட்டை புஷ்டியாக காட்சி தந்தது. வாசல் முழுக்க தென்னை தடுக்கு வேயப்பட்டு இருக்க, அந்த விசாலமான இடத்தில், 'இன்ஸ்டென்ட்' நட்பு கிடைத்த சின்ன குழந்தைகள் ஓடிப்பிடித்தும், ஒளிந்தும் விளையாடிக் கொண்டு இருந்தன. வாச…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஒரு கூடைக் கொழுந்து!.. சிறுகதை…. என்.எஸ்.எம்.இராமையா. சிறப்புச் சிறுகதைகள் (20) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – என்.எஸ்.எம்.இராமையா எழுதிய ‘ஒரு கூடைக் கொழுந்து’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். “அக்கா எனக்கு எது நெரை?” கொழுந்து இல்லாத கூடையின் தலைக்கயிறு தோள் வழியாக இடதுகைக்குள் அடங்கியிருக்க, வெற்றுக்கூடை முதுகில் அசைந்துகொண்டிருந்தது. லட்சுமியின் கேள்வி யார் காதில் விழுந்ததோ என்னவோ? பதிலே இல்லை. மற்ற நாட்களாக இருந்தால் அந்த ‘வயசுப்பெண்கள்’ குழுவினர் அவளை ஆளுக்கொரு பக்கமாக இழுப்பார்கள். “இங்கே வாடி லெட்சுமி! என்கிட்டே நிரைதாரேன்” “ஐயோ! லெட்சுமிக்…
-
- 1 reply
- 2.2k views
-
-
அடுத்த வீடு சில வருடங்களுக்கு முன்பு, ஒரு காலனி வீட்டில் குடியிருந்தேன். காலனியின் முதல் வீட்டில் MVV இருந்த ஆறு வயதுப் பெண் குழந்தையன்று, “என்ன அங்கிள், எப்போ பார்த்தாலும் நீங்க உங்க பையனுக்கே பூந்தி, மிக்ஸர் வாங்கிட்டு வர்றீங்க..? எனக்கு ஏன் எதையும் வாங்கிட்டு வர மாட்டேங்குறீங்க?” என்று கேட்டது. ஒரு நிமிஷம் சுள்ளென சாட்டையால் அடித்த மாதிரி இருந்தது. நிஜம்தானே..? நம் குழந்தைகள் மட்டும்தான் நம் கவனத்தில் இருக்கிறார்கள். நமது அண்டை வீட்டிலும் குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது நம் நினைவில் இருப்பதில்லையே! பையனுக்கு வாங்கி வந்த ஸ்வீட்டை எவ்வளவோ முறை பங்கு போட்டு அந்தக் குழந்தைகளுக்கும் கொடுத் திருக்கிறோம். ஆனாலும், அந்தக் குழந்தையின் ஆசை இயல்பானதுதான் இல்லையா?…
-
- 1 reply
- 1k views
-
-
பார்வை தாட்சாயணி பச்சை வைப்பர் இழைக்கண்ணாடிகள் இருபக்கமும் கூரைகளாய் வளைந்து இறங்கிய கூடாரம். மழைத்துளிகள் வளைந்த விளிம்புகளில் சிறு பிள்ளைகள் சறுக்கி விழுவது போல விழுந்து வழிந்தன. வெளிமுற்றத்தின் குடை நிழலொன்றில் மழைக்கு ஒதுங்கியபடி அந்தக் கூடாரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் தரணிகா. அவள் வந்து பத்து நிமிடங்கள் ஆகியிருந்தன, கீதாஞ்சலி இன்னும் வரவில்லை. மழையின் சாரல்கள் அவளது பயணத்தில் இடையூறு தந்திருக்கக் கூடும் என நினைத்தாள். வானம் காலையில் வெயிலின் பளிச்சிடலோடு சிறிது தகதகப்போடு தான் இருந்தது. நாலைந்து நிமிடங்களுக்குள் திடுமென்று சூழ்ந்த இருண்மையின் நெருக்கத்தை எப்படி விலக்குவது?. அதற்குப் பிறகு சூழ்ந்த சாம்பல் நிறம் சூழலை ஒரு இ…
-
- 1 reply
- 1.5k views
-
-
மாசு எனக்கு இன்றைக்கு பள்ளிக்குக் கிளம்பவே மனம் இல்லை. என்னமோ மிகவும் பாரமாகத்தான் இருந்தது. நினைவெல்லாம் மதுவைச் சுற்றியே இருந்தது. ஆனால் கால்கள் மட்டும் பழக்க தோஷத்தில் பஸ் ஸ்டாண்ட் வந்து நின்றன. இன்று உடலுறுப்பு பற்றி ஸ்கூலில், பாடம் நடத்த வேண்டும். எந்த மெட்டீரியலும் தயார் செய்து கொள்ளவில்லை. பஸ் வந்து நின்றது. அவசர அவசரமாய் ஏறிய எனக்கு நல்ல வேளை உட்கார இடம் கிடைத்தது. கொஞ்ச நேரம் டெக்ஸ்ட் புக்கைப் புரட்டினால், இன்று எடுக்கப் போகும் புது பாடத்தின் மெட்டிரியல்களைக் கொஞ்சம் சேகரித்துக் கொள்ளலாம். புத்தகத்தைப் புரட்டி, அதற்கான பக்கத்தையும் எடுத்துப் பிரித்துக் கொண…
-
- 1 reply
- 1.3k views
-
-
காட்சிப் பிழை கே.எஸ்.சுதாகர் பாலகிருஷ்ணனின் மாமா அமிருக்கு ஒரு விருந்தாளி வந்திருந்தார். ‘ஹோல்’ மகிழ்ச்சியும் சிரிப்புமாக களை கட்டியிருந்தது. விருந்தாளி, பாலகிருஷ்ணனையும் அவனது மனைவி கலைச்செல்வியையும் பார்ப்பதற்குத்தான் வந்திருக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவர்கள் இருவரும் இலங்கையிலிருந்து கனடாவிற்கு வந்திருந்தார்கள். கனடாவில் கலைச்செல்வியின் அப்பாவும் அண்ணனும் இருக்கின்றார்கள். வவனியாவிலிருந்து கொழும்பு வந்து பின்னர் கனடா வந்த களைப்பு இன்னமும் தீரவில்லை. குளியலறைக்குள் பாலகிருஷ்ணன் ‘ஷேவ்’ செய்து கொண்டிருந்தான். முப்பது வருடங்களாகியும் பாலாவின் முகத்தினில் இருந்த தழும்புகள் மறையவில்லை. அதை தடவிப் பார்த்தான். காலம் போக வடுக்கள் எல்லாம் மறைந்து, உடம்பில…
-
- 1 reply
- 633 views
-