கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
# நம் மனமும் இக்கதையைப் போலதான்! கோவணம்! எல்லாவற்றையும் துறந்து விடு என்று ஒரு குரு சொல்லக் கேட்டு ஒரு சிஷ்யன் ஒரே ஒரு தவிர்க்க முடியாத கோவணத்துடன் ஊருக்கு வெளியே வாழ்ந்து வந்தான். அந்தக் கோவணத்தை அடிக்கடி எலி கடித்து விட்டது. ஊரார் என்ன இது? இவ்வாறு கந்தலாகக் கோவணம் கட்டியிருக்கிறாயே என்று கேட்க "எலி கடித்து விட்டது" என்று பதில் சொன்னான் அவன். ஊரார், "அந்த எலியிடமிருந்து பாதுகாப்பிற்காக ஒரே ஒரு பூனை வளர்க்கலாமே?" என்றார்கள். அவன் பூனை வளர்க்கத் தொடங்கினான். பூனைக்குப் பால் தேவையாக இருந்தது. இல்லாவிடில் அது எலியைக் கடிக்க மறுத்தது. பாலுக்காக ஊரில் பிச்சை எடுக்க ஆரம்பித்தான். ஊரார், "ஒரே ஒரு பசுமாடு தருகிறோம். தினம் தினம் இங்கே வராதே" என்று பசு மாட்டைத் தானமாக …
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆட்டுக்குட்டிகளும் உதிர்ந்த சில இலைகளும் டிசே தமிழன் நன்றி: 'காலம்' ஜூன் 2007 (இதழ் 25 ) (1) அப்போதுதான் கோடை முடிந்து இலையுதிர்காலம் ஆரம்பித்திருந்தது. ஆக வெக்கையோ, குளிரோ இல்லா மிதமான காலநிலை அந்தப் பருவத்திற்கு ஒருவித அழகைக் கொடுத்துக்கொண்டிருந்தது. இவன் வகுப்பறைக்குள் இருந்து, மழை பொழியத்தொடங்கிய பின்னேரப்பொழுதை இரசிக்கத் தொடங்கியிருந்தான். மெல்லிய சாம்பல்நிற வானப்பின்னணியில் இலைகள் உதிர்ந்துகொண்டிருப்பதைப் பார்க்கையில் மனது களிமண்ணைப் போல நெகிழத்தொடங்கியிருந்தது. இவனுக்கு இன்னும் ஒரு மாதம் கடந்தால் பதினைந்து வயது ஆரம்பிக்க இருந்தது. அன்று பாடசாலை முடிந்து பஸ்ஸைப் பிடிக்க சற்றுத் தாமதமாகியதால், வழமையாக பஸ் நிறுத்தத்தில் நிற்கும் நண்பர்களும் போய்விட்டிரு…
-
- 6 replies
- 1.2k views
-
-
மம்முடு-கோமகன் பிரான்ஸ் இன்போ செய்தி : செவ்ரன் நகரில் போதைப்பொருள் தேடுதல் வேட்டையில் இரண்டு கிலோ பிரவுன் சுகர் போதைவஸ்து வில்லைகள் கைப்பற்றப்பட்ட வேளையில் நடந்த மோதலில் ஒரு கறுப்பினத்தவர் உயிரிழந்ததாக செவ்ரன் மாநகரக் காவல்துறை தெரிவிப்பு. 07 மார்கழி 2018 000000000000000000000 கடந்த இரவு அம்மா வாட்ஸ் அப்-இல் எனது கலியாணத்துக்காக அபிப்பிராயம் சொல்லும்படி அனுப்பியிருந்த அந்த அப்பாவிப் பெண்ணை மறுப்புச் சொல்லி செய்தி அனுப்பினேன். அம்மா எனக்காகப் பார்த்த 10-ஆவது பெண் தான் இவள் பெயர் மது. நான் எதிர்பார்த்ததை விட நல்ல வடிவாகத்தான் மது இருந்தாள்.ஆனாலும் எனக்கு ஏனோ அவள் மீது பிடித்தம் வரவில்லை. அப்பாவின் மறைவுக்குப் பின்னர் அம்மாவுக்கு நல்லது கெட்ட…
-
- 2 replies
- 1.2k views
-
-
மல்லாவி மத்திய கல்லூரியின் மயில்வாகனம் மண்டபம் அரங்கு நிறைந்த பார்வையாளர்களால் நிரம்பியிருந்தது. கண்களில் நீர் சொரிய உணர்ச்சிப் பெருக்கோடு மக்கள் குழுமியிருந்தனர். தன் மன உணர்வுகள் யாவற்றையும் ஒன்று திரட்டி விடுதலை வீரர்களின் பெருமையினையும், தியாகத்தினையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான் சுடரவன். "மானத்தின் திருநாள் கார்த்திகையே! மாவீரத்தின் பெரு நாள் கார்த்திகையே! கார்த்திகை மாதம் கறுப்பு. இந்த கார்த்திகை மாதம் நெருப்பு! கண்ணுக்குள்ளே வைத்துக் காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம்! அந்த புண்ணியர் நெஞ்சிலே பூத்ததோர் கனவினை எண்ணத்திலே வளர்த்தோம்!" என மாவீரர் பெருமை சொல்லும் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவி வரிகளை தன் சிறப்புரைக்கு வலுச் சேர்க்கும் வகையில்…
-
- 2 replies
- 1.2k views
-
-
சொத்தையா - ஜி.தமிழினியன் சொத்தையாவுக்கு எப்போது இந்தக் குறை வந்தது? தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்க டி.நாராயண ரெட்டியாலும் முடியாது. அவன் ‘அப்படி’ என்று வெளியுலகத்துக்குத் தெரியாமலிருக்க கட்டை மீசை வைத்திருந்தான். எவரும் அவன் கெத்தாக ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 ஓட்டுவதைப் பார்த்தும் பொறாமைப் பட்டதில்லை. உறுதியாகத் தெரியும் ‘கன்னிப் பருவத்திலே’ மாடும் முட்டிவிடவில்லை. ஆனாலும் அந்தக் குறை வந்துவிட்டது. மும்பை பெண்ணை விர்ச்சுவலாக கற்பழித்த தமிழக வாலிபர் கைதாவாரா? திருப்பூர், ஆக. 21: மும்பை பெண்ணை விர்ச்சுவலாக கற்பழித்த வாலிபரைத் தேடி நாளை தமிழகம் வரும் மும்பை போலீஸ் அவரைக் கைது செய்து விசாரிக்கப் போவதாகத் தெரிவித்தனர். முகநூல் திருப்பூர் அவிநாசி ரோடு கம்பன் நகரில…
-
- 0 replies
- 1.2k views
-
-
பிணக்கு - ஜெயகாந்தன் மெட்டியின் சப்தம் டக்டக்கென்று ஒலித்தது. வளையொலி கலகலத்தது. கூடத்தில் எட்டு வயதுப் பேரன் முத்து வலது புறமும், நான்கு வயதுப் பேத்தி விஜி இடது புறமும் நித்திரையில் ஆழ்ந்திருக்க, நடுவே படுத்திருந்த கைலாசம் பிள்ளை தலையை உயர்த்திப் பார்த்தார். கையில் பால் தம்பளருடன் மருமகள் சரஸா மகனின் படுக்கை அறைக்குள் நுழைவது தெரிந்தது. தன் மீது விழுந்த பார்வையால் சரஸாவின் தலை கவிழந்தது. கிழவருக்குக் கொஞ்சம் குறும்பு அதிகம் தான்! கைலாசம் பிள்ளையின் பார்வை அவளைப் பின்தொடர்ந்து சென்றது. அவள் அறைக்குள் நுழைந்தாள். ‘கிரீச்’சென்ற ஒலியுடன் கதவு மூடியதும், மேலே செல்ல முடிய…
-
- 0 replies
- 1.2k views
-
-
இசைவு இராசேந்திர சோழன் நடேசனுக்கு மாமியார் வீடு ரொம்ப சௌகரியம். நல்ல வசதியும்கூட. போய்விட்டால் போதும். மாப்பிள்ளை வந்துட்டார், மாப்பிள்ளை வந்துட்டார் என்று அமர்க்களம் செய்துவிடுவார்கள். கடைசீ மருமகப்பிள்ளை நடேசன். ஏக கடைசீ என்றால் நாலைந்து மருமகப் பிள்ளைகளில் கடைசீ என்று அர்த்தம் இல்லை. இரண்டே மருமகப் பிள்ளைகளில் இரண்டாவது மருமகன். இளைய மருமகன். மாமிக்கு ரெண்டே பெண்டுகள். மூத்த பெண்ணைத் திண்டிவனத்தில் ஒரு டெய்லருக்குக் கொடுத்திருந்தார்கள். இளையவள்தான் நடேசனுக்கு சம்சாரம். அதற்குப் பிறகு மாமிக்குக் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வயது இல்லை என்று கருதியோ அல்லது மாமனாருக்கு வசதிப்படாமலோ போயிருக்கலாம். இதனால் நடேசனின் சம்சாரத்திற்குப் பிறகு இளசுகள் யாரும் வீட்டில் இல்ல…
-
- 2 replies
- 1.2k views
-
-
நினைவின் நிழல் நான் அமைதியாகக் கண் அயர்ந்து இருந்தேன். எனக்கு உயிர் இருக்கிறதா என்பதை பலரும் நம்பிக்கையே இல்லாமல் பரிசோதித்துக்கொண்டிருந்தார்கள். உடலில் ஒரு அசைவும் இல்லை. பத்து குதிரைத்திறன் உள்ள நீர் இறைக்கும் இயந்திரத்தை தோளில் சுமந்து செல்லக்கூடிய என் தோள்கள் துடைத்துப் போட்ட கரிக்கந்தை போல கிடந்தது. இமையைக்கூட அசைக்க முடியவில்லை. என்னைச் சுற்றி நான்கைந்து டாக்டர்கள் நின்றிருப்பதை மிக யோசனைக்குப் பிறகே உணர்ந்தேன். எல்லோருமே நான் பிழைப்பது அரிது என்பதைத் தங்கள் மருத்துவ அறிவைக்கொண்டு தீர்மானமாகச் சொன்னார்கள். நெடிய உருவம் கொண்ட ஆங்கிலேயரை நினைவுபடுத்தும் தோற்றம் உள்ள அந்த மருத்துவர்& இது அவருடைய குரலை வைத்து நான் செய்த கற்பனை& என்னை ஏறத்தாழ இறந்துவி…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஒருநிமிடக்கதை: நடிப்பு! ஏதோ ஒரு நேரத்தில் நாம் காட்டும் ரியாக்ஷன் நம் வாழ்க்கையையே முடிவு செய்துவிடுகிறது. இந்தப்பாடத்தை மிக நன்றாகப் படித்து டிஸ்டிங்ஷனுடன் பாஸ் செய்யுமளவிற்குத் தேர்ந்துவிட்டான் குமார். செய்து கொண்ட கல்யாணம் இதில் பெரும் பங்கு வகித்தது.ரொட்டியின் மிக அருமையான பதத்தில் தட்டில் போடப்படும் தோசையை இனம் கண்டுபிடிக்க முடியாமல் திணறும் தருணத்தில் அவனிடம் கேள்வி கேட்கப்படும். “என்னங்க... டிபன் பிடிச்சிருக்கா..” வேகமாகத் தலையை ஆட்டி மிக அற்புதமாக ”அமிர்தம்’’ என்று சொல்லி அது தோசையா ரொட்டியா என்ற எசகுபிசகான பதில் சொல்லி, கேள்வி கேட்ட…
-
- 2 replies
- 1.2k views
-
-
மஞ்சள் நிற நோட்டீஸு! மஞ்சள் நிற நோட்டீஸு! த டுப்புச் சுவர்கள், விபத்துக்கள் நடக்காமலிருக்கக் கட்டப் படுபவை. ஆனால், தடுப்புச் சுவரில் மோதி ஒருவன் காயம் பட்டுக்கொள்வது என விதியிருந்தால், யார் என்ன செய்ய முடியும்? கார்த்திகேயனுக்கு அது நிகழ்ந்தது. இருபத்து மூன்று வயது நிரம்பியிராத இளைஞன் அவன். பன்னிரண்டாம் வகுப்பு முடித்து, எவ்வளவோ பல காலங்கள் முடிந்துவிட்டதான சோர்வு அவனுக்குத் தட்டியிருந்தது. வெட்டியாக ஊரைச் சுற்றுகிறான் என்ற ‘நற்பெயர்’ வேறு! அப்…
-
- 1 reply
- 1.2k views
-
-
இதுவும் ஒரு காதல் கதை! நான் பாரதி; வயது, 35. இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால், வெட்டியாக வீட்டில், 'டிவி' தொடர் பார்த்தோ, அக்கம் பக்கத்து வீடுகளில் வம்பளப்பவளோ அல்ல! ஐ.டி., நிறுவனத்தில், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, அதிகாரியாக வேலை பார்த்து வருபவள். நிறைய வேலை; அதிகப் பணம்; பல்வேறு ஊர் மற்றும் நாடுகளுக்கு விஜயம். சற்று நெருக்கடியாக இருந்தாலும், வாழ்க்கை எனக்கு சுவையாக தான் இருக்கிறது. பின், ஏன் கல்யாணம் ஆகவில்லை என்கிறீர்களா? எனக்கு அப்பா இல்லை; அம்மா மட்டும் தான்! மாமா, சித்தப்பா போன்ற உறவினர்கள் உள்ளனர். ஆனால், அவரவர் குடும்பம் அவரவருக்கு! அவர்கள் என்னை சந்திக்கும் போதெல்லாம், 'என்ன பாரதி..…
-
- 0 replies
- 1.2k views
-
-
ராதா ஒல்லியாக, உயரமாய் இருப்பாள். மெல்லிய இடை, ஆரோக்கியத்தை எடுத்துக் காட்டும் கன்னங்கள். அந்தப் பெண்ணின் அழகு முழுவதும் அவளுடைய சுறுசுறுப்பில் இருந்தது. திருமணம் முடிந்து ஆறு வருடங்கள் ஆனாலும் அந்த உற்சாக குறையவில்லை. மேலும் கூடியது, உடனே குழந்தைகள் வேண்டாமென்று செய்த முடிவினால். கணவன் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்துவந்தான். ஏற்கனவே லோன் வாங்கி வீட்டையும் கட்டி முடித்து விட்டார்கள். அழகான வீடு. முன்னால் சின்ன ரோஜா தோட்டம். வராண்டாவுக்கு வலதுபுறம் தனியாக ஒரு அறை. வீட்டை அழகாக, நேர்த்தியாக வைத்துக்கொள்வது ராதாவின் தனித்தன்மை. கணவன் அலுவலகம் சென்ற பிறகு வீட்டை ஒழுங்குபடுத்தி விட்டு ஏதாவது பத்திரிகையை படித்துக்கொண்டு கட்டிலில் படுத்திருப்பாள். கொஞ்ச நேரம் ரேடியோ கேட்…
-
- 0 replies
- 1.2k views
-
-
தேங்காய்த் துண்டுகள் - டாக்டர் மு.வரதராசனார் "மாலை நேரத்தில் குடித்துவிட்டுச் சாலை ஓரத்தில் விழுந்து கிடப்பவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இது என்ன கொடுமை! பகல் ஒரு மணிக்கு நல்ல வெயிலில் தார் வெந்து உருகும் வெப்பத்தில் இந்தச் சாலை ஓரத்தில் இப்படி ஒருவன் விழுந்து கிடக்கிறானே" என்று எண்ணிக் கொண்டே அந்த மாரியம்மன் கோயிலை அணுகி நடந்து போய்க் கொண்டிருந்தேன். வெளியூர்களில் கள் சாராயக் கடைகளை மூடி விட்ட பிறகு, அங்கே உள்ள குடிகாரர் சிலர் அடிக்கடி சென்னைக்குப் புறப்பட்டு வந்து, ஏதோ வேலை இருப்பது போல் நகரத்தைச் சுற்றித் திரிந்து, ஆசை தீரக் குடித்து மயங்கியிருந்து, பிறகு ஊருக்குத் திரும்புவது எனக்கு நன்றாகத் தெரியும். எங்கள் ஊரில் இருந்தே பலர் அப்படிப் புறப்பட்டு வந்து சென…
-
- 3 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு கிராம வீட்டில் மரங்களும் பறவைகளும் இயற்கையும் அரசியலையும் உண்மைகளையும் பேசினால் !!! (யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு கிராம வீட்டில் ) அந்த முற்றத்திலே ஒரு நிழல்வாடிமரமும் பூவரசும் ஒன்றையொன்று தமது இலைகளால் தொட்டுப்பேசி கதைத்துகொண்டன , இந்த காற்று அளவாக அடிப்பதனால் நான் உன்னை தொட்டு கதைக்க இலகுவாயிருக்கின்றது என்றது நிழல்வாடி. அது கிடக்கட்டும் இந்த முற்றத்து மண்ணிலே எத்தனை கொடூரம் எங்கள் இருவர் கண்முன்னால் நிகழ்ந்தது அதை என்னால் என்றுமே மறக்க முடியாது என்றது பூவரசு. அதைகேட்டு நிழல்வாடி அழத்தொடங்கியது. பூவரசுவும் அழுதது அப்போது மழை மேலிருந்து துளிர்த்தது இந்தா இருவரும் அழுகிறதை நிறுத்துங்கள் என்றது மழை. இப்படியே அழுது வடிந்து என்ன பயன் வல…
-
- 1 reply
- 1.2k views
-
-
அத்தான் இல்லையேல், நான் செத்தேன்!! பூவரசு சொந்தத்தில் கார், கொழும்பிற் காணி சோக்கான வீடு, வயல்,கேணி இந்தளவும் கொண்டு வரின் இக்கணமே வாணியின் பால் சிந்தை இழப்பான் தண்டபாணி - மகாகவி உருத்திரமூர்த்தி அறுவைதாசன் சகலதும் ஒடுங்கிப்போய் இருந்தான். அவனிற்கு வாயிலே சனி என்று மற்றவர்கள் சொல்வது உண்மை தானென்று நினைத்துக் கொண்டான். அவன்ரை மனிசி யாழினி ஒரு கலியாண வீட்டிற்கு போக வேணும் எண்டு சொன்னாள். அவனிற்கு கலியாண வீடுகளிற்கு போவதென்றால் வீடியோ கமெராவை கண்ட நித்தியானந்தா மாதிரி ஆகி விடுவான். நாலைந்து மணித்தியாலங்களிற்கு அய்யரின் அறுவையையும், கலியாண வீட்டுக்காரர்கள் அடிக்கிற ஆடம்பர க…
-
- 4 replies
- 1.2k views
-
-
10 செகண்ட் கதைகள் ஷாக் ட்ரீட்மென்ட் ``சின்னப் பிரச்னைதான், ஸ்கேன் ரிப்போர்ட்ல பயப்படுற மாதிரி ஒண்ணும் இல்லை’’ என்று சொன்ன டாக்டர், ``முப்பதாயிரம் ரூபாய்க்குள்ள முடிஞ்சிடும்’’ என்றார்! - ந.கன்னியக்குமார் கொண்டாட்டம் ``என்ன ஆச்சுன்னு தெரியலை... காலையிலேர்ந்து கரன்ட்டே இல்லை. ஒரு டி.வி புரோகிராம்கூடப் பார்க்க முடியலை. இந்தப் பொங்கல், பொங்கல் மாதிரியே இல்லை’’ - அலுத்துக்கொண்டாள் மாளவிகா! - அஜித் விலை மகனுக்கு ஆக்ஸிடென்ட் ஆனதைக் கேட்டு, ``என்னாச்சுப்பா..?’’ எனக் கனிவோடு விசாரித்த அப்பாவிடம் ``மொபைல்ல லேசா ஸ்க்ராட்ச், லேப்டாப்புக்கு ஒண்ணும் ஆகலை. ஹெட்போன்தான் அறுந்துருச்சு’’ என்றான் விக்னேஷ்! - எஸ்கா இது டாப் 10 அல்ல.…
-
- 0 replies
- 1.2k views
-
-
‘அவனை அழிக்கிறேன் பார்’ சூழுரைத்தல், சபதமேற்றல் எல்லோருக்கும் ஏற்புடையதல்ல; நல்ல நோக்கத்தை நிறைவேற்றுவேன் எனச் சபதமேற்பவர்களை விட, “அவனை அழிக்கிறேன் பார்” என எதிரிகளை அழிக்கச் செய்ய, சபதம் எடுப்போர் தொகைதான் அதிகம். உலகம் அழுக்காகி வருகின்றமைக்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். இன்று உலக நாடுகள்கூட, மக்களை அழித்து, உரிமைகளை அடக்கும் செய்யும் வண்ணம், வெளிப்படையாக சூழுரைகளும் மறைமுகமாகச் செய்யும் கழுத்துறுப்புகளையும் மக்கள் பார்த்து, இரசிக்கின்றார்கள். வலு இழந்த மக்கள் போராட்டம் செய்ய, எந்த அரசுமே அனுமதிப்பதில்லை. நீதியைக் காப்பாற்று வதைவிட, தங்கள் ஆணவ அதிகாரத்துக்கு வலுச் சேர்ப்பதையே பலரும் விரும்புகின்றனர். போலியான ஒரு…
-
- 0 replies
- 1.2k views
-
-
சித்திரவதைகள் கொடூரமானவை என்பது அனுபவித்த அனைவருக்குமே தெரியும். ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் நான் அனுபவித்த சித்திரவதைகள் விசித்திரமானவை. ஒருவனை எப்படி எல்லாம் விதம்விதமாகச் சிதைக்க முடியும் எனக் குரூரத்தோடு யோசித்து, பரிசோதனை எலியாக என்னைப் பயன்படுத்தினார்கள். இரவு 10 மணிக்கு ஒரு அதிகாரி என்னை அழைத்தார். ஈரக்குலை நடுங்க உயிரைக் கையில் பிடித்தபடி நின்றேன். 'அந்தக் கொலை விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை ஒன்றுவிடாமல் என்னிடம் சொல்’ என்று மிரட்டினார். இதேபோல் எத்தனையோ தடவை அதிகாரிகள் என்னை விசாரித்து இருக்கிறார்கள். நானும் எனக்குத் தெரிந்த தகவல்களைக் கண்ணீரோடு அவர்களிடம் சொல்வேன். புதுமுக இயக்குநரிடம் கதை கேட்கும் தயாரிப்பாளர் போல் அலட்டிக்கொள்ளாமல் கேட்பார்…
-
- 2 replies
- 1.2k views
-
-
யோ.கர்ணன் சிறுகதை: ஆதிரையும் நாற்பது ஆமிக்காரரும் பல வருடங்கள் நீடித்த ஈழப் போர் சூழலிலிருந்துதான் இன்றைய புலம் பெயர் வாழ்வதென்பது தீவிரமாகக் கவனிக்கப்பட்டது. 50களில் தலைகாட்டிய ஈழத்தமிழர் பிரச்சனை 80களில் உலகக் கவனத்தைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் ஆங்காங்கே உதவிகளும் ஆதரவுகளும் கிடைக்கப்பெற்றும் அரசியல் சூழ்ச்சியினால் ஆயுத உதவியினால் 2009இல் இறுதி நிலையை எட்டியது. போர் முடிந்துவிட்டதா அல்லது தமிழீழம் எனும் கனவு தகர்ந்துவிட்டதா எனும் கேள்வியே பேரோசையாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இலங்கையுடன் கைக்கோர்த்து பல விசயங்களைச் சாதித்துக்கொள்வதற்காகச் சீனாவைப் போல பல அமைப்புகளும் நாடுகளும் இணைந்து தமிழ் இனத்தை அழிப்பதில் கூட்டுச் சேர்ந்து மிகப்பெரிய அதிகார சக…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஒன்பதாவது முடிச்சு! ( சிறுகதை) "என்ர இரண்டாவது மனிசன் மோசம் போன போது முதல் மனிசன் உயிரோட இருந்தவர், நான் விதவையா இல்லையா? என்ர நிலை என்ன எனக்கு தெரியேல்ல" ஆனந்தியின் இந்த வார்த்தைகள் என்னை சிந்திக்க வைத்தது!. ஆனந்தி என்று பெயர் ஆனந்தம் அக்கம்பக்கத்து வீட்டிலும் அவளுக்கருகாய் இருந்ததில்லையாம். கண்ணீர் நிறைந்த ஒரு அபலையின் கதையை கேட்டிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். இந்த கதை என்னை விட்ட விலக பலநாள் எடுக்கும் என்பதை அதன் தாக்கம் அப்போதே தெரிந்து விட்டது. ஆனந்தி, அந்த வீதியில் உள்ள கட்டழகுப்பெண்களில் அவளும் ஒருத்தி. மற்றப்பெண்களிற்கு கிடைக்கின்ற மதிப்பும் மரியாதையும் அவளிற்கு கிடைப்பதில்லை. அவள் 30 வயசினுள் மூன்றாவது திருமணம் செய்து விட்டாள். இத்…
-
- 2 replies
- 1.2k views
-
-
சுந்தரேசன் வீடு கலகலப்பாக இருந்தது. அவரது ஒரே பெண்ணான ஹரிணிக்கு அன்று, பெண் பார்க்கும் வைபவம். "அப்பா, ஒவ்வொருத்தரா வந்து பார்த்துட்டு போறதுக்கு, நான் ஒண்ணும் பொருட்காட்சி இல்ல. ஒரு பையன பாருங்க, குடும்பத்த விசாரிங்க; என் போட்டோவ காட்டுங்க. எல்லாம் புடிச்சிருந்தா... பெண் பார்க்க வரட்டும்...' என்று, ஹரிணி கறாராக சொல்லியிருந்தாள், அதன்படியே, அவரது மருமகளின், தூரத்து உறவினரான ரமேஷ் பற்றி, சுந்தரேசனுக்கு தெரிந்தது. கொஞ்சம் தெரிந்த இடம் என்பதால், மருமகள் மூலமாகவே விசாரித்து, மற்ற விவரங்களை சேகரித்து, கடைசியில் ரமேஷையும் நேரில் பார்த்தார். பையன் களையாக இருந்தான். அப்பா இல்லை; அம்மா மட்டும். சொந்த வீடு, கை நிறைய சம்பளம்; அதுவும், ஒரு பெரிய நிறுவனத்தில். ஹரிணியின் போட்டோவைப் …
-
- 1 reply
- 1.2k views
-
-
வாசனை - சிவப்பிரசாத் வாசனை * 1 ஆழ்ந்த உறக்கத்திலிருந்த வாசுவுக்கு யாரோ தன் மேல் படுத்திருந்ததுபோல் பாரம் அழுத்தியது. மல்லாந்து படுத்திருந்தவன் புரண்டு படுக்க முற்பட்டான். அவனால் திரும்பக்கூட முடியவில்லை. மலைப்பாம்புபோல் ஏதோ ஒன்று அவனைச் சுற்றியிருந்தது. வாய்விட்டுக் கத்தலாம் எனப் பார்த்தால், அவன் உதட்டை யாரோ கவ்விக்கொண்டிருந்ததாகத் தோன்றியது. பதட்டத்தோடு மேல்மூச்சு வாங்கினான். அவன் நாசி ஏதோ வாசனையை உணர்ந்தது. அது அவன் அதுவரை முகர்ந்திராத ஒன்று. ஆற்றிலும் குளத்திலும் வளரும் பெயர் தெரியாத ஏதோ செடியின் இலைகளிலிருந்து வரும் வாசனையைப் போல் இருந்தது. அந்தப் பச்சை இலையின் வாசம் வாசுவுக்குக் காமத்தைத் தூண்டியது. அந்தச் சுகந்தத்தை உணர்ந்த தருணத்தில் தன்னுடலின் ரோமங்கள் சிலி…
-
- 0 replies
- 1.2k views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: ஸ்யாம் தூக்குடா `எத்தனை பேரை நாம தூக்கியிருப்போம்... இப்போ நம்மையேவா?' - மனசாட்சிகள் முணுமுணுத்தன. - பிரகாஷ்.T.A.C கடைசி ஆசை கடைசி ஆசையைக் கேட்டதற்கு, ``சீக்கிரம் தூக்குல போட்டுடுங்க'' என்றான் மரணதண்டனைக் கைதி. - கோ.பகவான் மரியாதை மிக மிக மரியாதையாக நடத்தப்பட்டார் அப்பா, சொத்து அவரிடம் இருந்தவரை. - பெ.பாண்டியன் பயம் பக்கத்து இருக்கை பயணி பிஸ்கட் நீட்டியதும் திடுக்கிட்டான், மயக்க பிஸ்கட் வைத்திருந்தவன். - சி.சாமிநாதன் ஞாபகம் வீட்டுக்கு வந்தும் குத்தாட்டம் போட்டார், கூவத்தூரிலிருந்து வந்த எம்.எல்.ஏ. - சி.சாமிநாதன் தலைமுறை நியூஸ் பேப்பரோடு அப்பா வ…
-
- 0 replies
- 1.2k views
-
-
புதியதோர் உலகம் அத்தியாயம் 01 தார் வீதியால் நடந்து வந்தவர்கள் அந்தக் குச்சொழுங்கையில் திரும்பிய தும் கடற்கரை அண்மித்து விட்டதை உணரத் தொடங்கினார்கள். இரண்டு பேர் மட்டும் அக்கம் பக்கமாக நடந்து போகும் அகலமுள்ள அந்தச் சிறிய ஒழுங்கை ஒன்று அல்லது இரண்டு வீடுகளைத் தாண்டியதும் அந்த மனிதர்கள் போலவே தன்னடக்கத்துடன் வளைந்து செல்லும். அந்தக் கிராமத்து மக்கள் மாதிரி ஒழுங்கைகளும் கம்பீரமாக நீட்டி நிமிர்ந்து செல்லும் துணிச்சலை கண்டறியாததுகள். மனிதர்களதும் கால்நடைகளதும் காலடி அடிக்கடி பட்டு நலிந்துபோன புற்களின் மத்தியில் இடையிடையே பீறிட்டு நிற்கும் தரையில், வெண்மையாக கடற்கரைக் குருமணல் கோலம் போட்டிருந்தது. ஒரே திசையில் வேகமாக சாய்ந்தாடும் தென்னை மரங்களிருந்து வீசி…
-
- 4 replies
- 1.2k views
-
-
பூசணிப்பழம் - விஜயாலயன் பருத்தித்துறைச் சந்தை சதுரமான நாற்சார் கட்டிடத்தில இயங்கிய காலம்.... நாற்சார் கட்டடத்தினுள்ள நடுவில காய்கறிச் சந்தையும், உட்புறமா சுத்திவர பலசரக்கு சாமான்கள் விக்கிற சில்லறைக்கடைகளும், வெளிப்பக்கத்தில மற்றக் கடைகளும், சுத்திவர மூண்டு பக்கமும் விசாலமான ஒரு வழி தார் ரோட்டுகளும், நாலாவது பக்கத்தில பஸ்ராண்டும், மீண்டும் சுத்திவர கடைகளும், அலுவலகங்களும், ஒதுக்கமா மீன்சந்தையும் எண்டு சுத்தமான, அழகான, சிறிய நகரம் பருத்தித்துறை. பருத்தித்துறையில இருந்து யாழ்ப்பாணத்திற்கு கடற்கரை ஓரமா 751 ஆம் இலக்க பஸ்களும், வடமராட்சியை ஊடறுத்து 750 ஆம் இலக்க பஸ்களும் எண்டு 10 நிமிசத்திற்கொரு பஸ் வெளிக்கிடும். இன்னும் யாழ்ப்பாணத்திற்குள்ளேயே தாளையடி, காங்கே…
-
- 0 replies
- 1.2k views
-