கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3075 topics in this forum
-
இதுவும் ஒரு காதல் கதை! நான் பாரதி; வயது, 35. இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால், வெட்டியாக வீட்டில், 'டிவி' தொடர் பார்த்தோ, அக்கம் பக்கத்து வீடுகளில் வம்பளப்பவளோ அல்ல! ஐ.டி., நிறுவனத்தில், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, அதிகாரியாக வேலை பார்த்து வருபவள். நிறைய வேலை; அதிகப் பணம்; பல்வேறு ஊர் மற்றும் நாடுகளுக்கு விஜயம். சற்று நெருக்கடியாக இருந்தாலும், வாழ்க்கை எனக்கு சுவையாக தான் இருக்கிறது. பின், ஏன் கல்யாணம் ஆகவில்லை என்கிறீர்களா? எனக்கு அப்பா இல்லை; அம்மா மட்டும் தான்! மாமா, சித்தப்பா போன்ற உறவினர்கள் உள்ளனர். ஆனால், அவரவர் குடும்பம் அவரவருக்கு! அவர்கள் என்னை சந்திக்கும் போதெல்லாம், 'என்ன பாரதி..…
-
- 0 replies
- 1.2k views
-
-
பறவைகள் கத்தின பார் - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... க.சீ.சிவகுமார், ஓவியம்: டிராட்ஸ்கி மருது தான் வசிக்கும் ஊரில் இருந்து காரில் குடும்பத்துடன் வந்த ராமு மாமா, எங்கள் ஊரில் காரை நிறுத்தி அதில் என்னையும் அம்மாவையும் ஏற்றிக்கொள்கிறார். அங்கிருந்து கிழக்கு சென்று, வடக்கு திரும்பி மேலும் மேற்கு நோக்கிப் போகிற கார், 10-ம் நாள் காரியத்துக்குப் போகும் அஞ்சலி மௌனத்தை அவ்வப்போது சுமக்கிறது. அம்மாவின் ஊரைச் சமீபித்தாயிற்று. வேலுச்சாமி மாமாவின் இழவுக்குப் போக முடியாத நான், 10-ம் நாள் காரியத்துக்குப் போகிற விதமாக இந்தப் பயணம் நேர்ந்திருக்கிறது. ''அண்ணன எரிச்சது இந்த இடத்துலதான்'' - கார், கணக்கன்பரப்பைக் கடக்கும்போது ராம…
-
- 0 replies
- 1.4k views
-
-
எழுச்சி - ஷோபாசக்தி சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும் பாரிஸை வதிவிடமாகவும் கொண்ட ஆழ்வார் தருமலிங்கத்திற்கு இந்தப் புரட்டாதி வந்தால் சரியாக நாற்பத்தேழு வயது. இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் பிரான்ஸின் புகழ்பெற்ற தொழிற்சாலையொன்றில் கடைநிலைத் தொழிலாளியாகப் பணி செய்கிறார். பிரான்ஸுக்கு வந்து பதின்மூன்று வருடங்களாகின்றன. பிறந்து வளர்ந்ததற்கு இதுவரை அவர் விமானத்தில் ஏறியதில்லை. பதினைந்து வருடங்களிற்கு முன்பு தருமலிங்கத்திற்கும் காரைநகர் தங்கோடையைச் சேர்ந்த அசோகமலருக்கும் பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோயிலில் கல்யாணம் நடந்தது. அந்தக் காலத்திலேயே அய்ந்து இலட்சம் ரூபாய்கள் ரொக்கமும் முப்பது பவுண் நகையும் வீடு வளவும் சீதனமாக தருமலிங்கத்திற்குக் கொடுக்கப்பட்டது. இவ்வளவுக்கு…
-
- 5 replies
- 1.5k views
-
-
ஓஷோ சொன்ன குட்டிக்கதை ஒரு கானகத்தில் காட்டாறு ஒன்று பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது. அந்த ஆற்றின் கரையினிலே ஒரு மாமரம் ஒன்று கிளைபரப்பி நின்றிருந்தது. அதில் அண்ணன், தம்பி என இரண்டு கிளைகளும் இருந்தன. அண்ணன் கிளை எப்போதும் அமைதியானது. காற்றடித்தால் ஆடும். தம்பி கிளை ஆரவாரமானது. தானாகவே ஆடி காற்றை வரவழைக்கும். ஒருநாள் பயங்கர மழை பொழிய ஆரம்பித்தது. கூடவே கடும்புயல் வேறு. காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பல மரங்களின் கிளைகளும் முறிந்து விழுந்தன. அண்ணன் கிளை வழக்கம்போல், நடப்பதை அமைதியாக வேடிக்கை பார்த்தபடி, புயலில் ஆடிக்கொண்டிருந்தது. தம்பி கிளையோ ‘என்னண்ணே, இது..நாசமாப் போற காத்து..இப்படி அடிக்குது” என்று புலம்பிக்கொண்டிருந்தது. …
-
- 4 replies
- 1.1k views
- 1 follower
-
-
அந்த மைதானத்துக்கு போராளிகள் கரப்பந்தாட்டம் விளையாட வருவது வளமை... அண்றும் வந்திருந்தார்கள்... ஐந்து பேர் கொண்ட அணியாக சிங்கிள் சொட் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்... பந்தின் வேகம் கட்டுக்கடங்காமல் அங்கும் இங்குமாய் அலைகிறது... அவர்கள் சாள்ஸ் அன்ரனி படையணி போராளிகள்.. மாவட்டரீதியாக பாரபட்சம் இல்லாமல் எல்லா மாவட்டத்தவரும் கலந்தே இருக்கிறார்கள்... பந்தின் வேகம் அதிகரித்து கிழே விழும் போதெல்லாம் தோல்வி உற்ற அணி வெளியேறி புது அணி உள்ளே நுளையும்... எனக்கும் கர பந்தாட்டம் எண்டால் உயிர்... என்னையும் ஒரு குழு அணியில் சேர்த்து இருந்தார்கள்.. வெளியேறும் அணிக்காகவும் எமது சந்தர்பத்துக்காகவும் காத்து இருக்கிறேன்... இது நடந்தது தென்மராட்சி எழுதுமட்டுவாள் பகுதியில் ஏற்கனவே விளையாடி …
-
- 13 replies
- 2.7k views
-
-
இன்று காலை இனிமையாகவே விடிந்தது. நேற்றிருந்த சுகயீனங்கள் இன்றிருக்கவில்லை. சனிக்கிழமை எனவே இந்தக் கிழமை முழுவதும் பின்போடப்பட்ட வேலைகள் நிறையவே இருந்தன. உடுப்புத்தோய்த்தல், கணணி திருத்தவேலைகள் இரண்டு, சப்பாத்துக்கடை, நண்பரின் வீட்டுக்குப் போதல் என்றிருந்தன அவை. முதலில் கணணி திருத்தவேலைக்குப் போனேன். குளிர் -4 என்றிருந்தது. வாகனத்தை நிறுத்தி வீட்டின் முன் கேட் கதவில் கையை வைக்கிறேன். வொவ் வொவ் என்று குரைத்தபடியே நாக்கை தொங்கப்போட்டபடியே பாய்ந்து வந்து கொண்டிருந்தது ஒரு அல்ஷேசன் நாய். என் இதயம் வாய்க்குள் பாய்ந்து வந்த மாதிரி இருந்தது எனக்கு. கேட்டில் இருந்த கையை எடுத்து பின்னால் வைத்துக் கொண்டேன்.. ஒரு தற்பாதுகாப்புக்காக. இரு தரம் குலைத்த பின் கேட்டிற்கு முன்னா…
-
- 2 replies
- 1.6k views
-
-
"அறம் பேசுமா?" அறம் பேசுமா? என்று என்னை கேட்டால், கட்டாயம் இல்லை என்று தான் சொல்வேன். கர்ணன் படம் பார்த்து விட்டு, அரங்கிற்கு வெளியே வந்த பொழுது என் மனம் அப்படித்தான் இருந்தது. நான் அப்பொழுது பாடசாலை இளம் மாணவன். விஸ்ணுவின் எட்டாவது அவதாரம் என கருதப்படும் கிருஷ்ணர், நிராயுதபாணியாக நிலத்தில் இறங்கி, மண்ணில் புதைந்த தேர் சக்கரத்தை வெளியே எடுக்க முயற்சித்துக்கொண்டு இருக்கும் கர்ணனை கொல்ல. யுத்த தர்மத்திற்கு எதிராக, அருஜுனனை அம்பு விட தூண்டுகிறான். ஆனால் அவன் சாகவில்லை. எனவே, பொய் வேடம் போட்டு, அம்பு துளைத்த கர்ணனை ஏமாற்றி புண்ணியங்களை (ஆயுள் முழுக்க தானம் செய்ததால் பெற்ற புண்ணியம் முழுவதையும்) தானமாக கேட்கிறான். அவனோ அந்த நிலையிலும் கொடுக்கிறான். அதன் பின் கர்ணன் இ…
-
-
- 2 replies
- 333 views
-
-
டைகர் பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும்..(விடை தெரியாமல் போன விடுகதை)...ஜம்மு பேபியின் "கானல் நீர்" (தற்போது யாழ்கள சினிமாவில் அட்டகாசமா திரையிடபட்டுள்ளது)..கவுஸ் புல் காட்சிகளாக..!! *கதாநாயகர்கள் - 1)டைகர் பிலிம்சின் தனித்துவ கதாநாயகன் "காதல் மன்னன்" சுண்டல் திரைபடத்தில் நிரோ.. 2)டைகர் பிலிம்சின் மக்கள் கதாநாயகன் "சனதிரள் நடிகர்" முரளி திரைபடத்தில் முரளி... *கதாநாயகிகள் - 1)டைகர் பிலிம்சின் அழகு தாரகை "காதல் இளவரசி" வெண்ணிலா திரைபடத்தில் சோபனா.. 2)அறிமுக நாயகி..(அவுஸ்ரெலிய கனவு கன்னி)..கனிஷ்டா திரைபடத்தில் கவிதா.. *கெளரவவேடத்தில் - 1)அறிமுக நட்சத்திரம் "சின்ன குயில்" அனிதா திரைபடத்தில் லக்சனா..!! 2)அறிமுக நட்சத்திரம் "சிரிபழகி" சுபைதா திரை…
-
- 23 replies
- 3.9k views
-
-
ஆழத்தில் ஆறாத ரணம். அந்த வானுயர்ந்த மாடிக்கட்டத்தில் வசிக்கும் ராஜி ,ஆறு மணி அலாரச்சதம் கேட்டு எழுந்து தேநீருக்காக கேத்தலை தட்டிவிடு , கணவன் ராகுலனை வேலைக்கு அனுப்பும் ஆயத்தங்களை தொடங்கினான். அவனும் பாத்ரூமில் முகம் கழுவும் சத்தம் கேட்டது .தேநீரை பருகியவாறே அவனும் ஆயத்தமானான் .இவள் காலை உணவுக்காக இரண்டு சான்விச் ,மதியம் ஒரு பிடி சாதம் மரக்கறியுடன்,ஏதும் பழவகை,போத்தலில் தணீர் என்று அவனை அனுப்பி வைத்தாள். பின் தான் தேனிரை முடித்தவாறு கண்மணிகளை எழுப்பி ,பாடசாலைக்கு தயார்படுத்தி நடந்து சென்று பாடசாலை வாயிலில் விட்டு வந்து வீட்டை ஒழுங்கு படுத்தியவாறே வானொலியை தட்டி விட்டாள். . அதில் .... "நித்தம் நித்தம் மாறு கின்ற எத்தனயோ ?நெஞ்சில் நினைத்த திலே நட…
-
- 4 replies
- 1.3k views
-
-
நேரம் வீட்டில் எல்லோரும் சோனாவுக்கு ‘ஹேப்பி பர்த் டே’ சொல்லிவிட்டார்கள். காலேஜ் தோழிகளும் போனில் வாழ்த்தி விட்டார்கள். வாட்ஸ்அப் குரூப்களிலும், ஃபேஸ்புக்கிலும் ஏகப்பட்ட வாழ்த்துச் செய்திகள். ஆனால் அவளுடைய காதலன் விஷாலிடமிருந்து மட்டும் எந்த அழைப்பும் இல்லை. ‘‘பையன் நம்ம பர்த் டேவை மறந்துட்டானோ?’’ - சோனா கொதித்துப் போனாள். மணி 9, 10, 11, 12 என்று ஓடி, மாலை 5ம் ஆகிவிட்டது. இன்னும் விஷாலிடமிருந்து போனைக் காணோம்.சரியாக ஐந்தரைக்கு ‘விஷாலி’ என்ற ஒளிர்வுடன் செல் அலற, ‘படவா ராஸ்கல்’ என மனதில் சீறியபடி ‘நங்’ எனப் பச்சையை அழுத்தினாள். ‘‘ஸ்வீட்டி, ஹேப்பி பர்த் டே டு யூ..!’’ ‘‘உனக்கு இப்பத்தானாடா விடிஞ்சது..?’’ என்று சோனா எகிறினாள். ‘‘என்ன ஹனி, இப்பிடி எரிஞ்சு விழ…
-
- 3 replies
- 1.1k views
-
-
எமோஜி - சிறுகதை நர்சிம் - ஓவியங்கள்: ஸ்யாம் வாட்ஸ்அப் சிணுங்கலில் விழித்துக்கொண்டு எழுந்தேன். மதுவைச் சந்தித்த நொடியிலிருந்து இன்றுவரை என் அத்தனை நாள்களும் அவளின் செய்தியில்தான் விடிகின்றன. இது இன்று நேற்று அல்ல... குறுஞ்செய்தி காலத்திலிருந்தே இப்படித்தான். “ I am not feeling well, இன்னிக்கு லீவு, don’t call me.” உடனே பதில் அனுப்பினேன். “You are not feeling well, OR your feelings are not well?” எனக்குத் தெரியும், பதில் வராது என்று. வரவில்லை. பல் துலக்கிக் குளித்து, சீருடை உடுத்தி, கிளம்பும் வரை 40, 50 முறை மொபைலைப் பார்த்திருப்பேன். பதில் வரவில்லை. ஆனால், நீல வண்ணத்தில் டிக் மார்க்குகள். உதாசீனம் செய்கிறாள் என எட…
-
- 0 replies
- 3.7k views
-
-
இலையுதிர் காலம்! பாட்டி விசாலத்தின் பெயரை முதியோர் இல்லத்தில் பதிவு செய்து விட்டு வந்த பின்னும் மூன்று நாட்களாக அந்தத் தகவலை தாயிடம் சொல்லத் தயங்கினான் சதீஷ். ""ஏன் இப்படி பயந்து சாகறீங்க?'' என்று எரிந்து விழுந்தாள் அவன் மனைவி சத்யா. ""இல்லை... அம்மாவுக்கு இது பெரிய ஷாக்காய் இருக்கும்'' ""இதப்பாருங்க... மாமியாரைப் பார்த்துக்கலாம். அது என் டியூட்டி. ஆனா, மாமியாரோட மாமியாரைப் பார்த்துக்கறதெல்லாம் டூ மச்...'' அவன் ஒன்றும் சொல்லாமல் மவுனமாய் இருந்தான். ""அடுத்த வாரம் அனுப்பணும்ன்னா இப்பவே சொன்னாத் தான் அவங்களுக்குப் பேக் பண்ண டைம் கிடைக்கும். சைக்காலஜிக்கலா தயாராகவும் முடியும். கிழவி இப்ப கோவிலுக்குப் போயிருக்கா. அதனால, இப்ப…
-
- 0 replies
- 1.6k views
-
-
யானைத்துப்பாக்கியைத் தூக்கி தனக்கு இணையாக நிறுத்திக் கொண்டு துரை என்னைப் பார்த்துக் கண்ணைச்சிமிட்டினான். பெரும்பாலான துரைகளுக்குக் கண்களைச் சிமிட்டும் பழக்கம் உண்டு. சின்னவயதில் நானும் என்ன செய்வதென்று தெரியாமல் பதிலுக்குக் கண்களைச் சிமிட்டிக் காட்டுவேன். அது துரைகளுக்குக் கோபத்தை உருவாக்கும் என்று சீக்கிரமே புரிந்துகொண்டேன். அதன்பின் முப்பதுவருட வேட்டைத்துணைவனின் வாழ்க்கையில் நான் மிகமிக அமைதியாக இருக்கக் கற்றுக் கொண்டேன். வேட்டை நாய் எப்படி இருக்குமோ அப்படி இருப்பேன். நான் கூடச்செல்வதே தெரியாது. தேவையான இடத்தில் மட்டும் சைகை செய்வேன். சைகை மூலம் சொல்லமுடியாத விஷயத்துக்கு மட்டும் குரல். அதுவும் ஒரு சொல் அல்லது இரண்டு சொல். எனக்கு ஆங்கிலம் சொற்களாகத் தான் தெரியும். ஆகவே எ…
-
- 10 replies
- 3.6k views
-
-
"உயர்ந்த மனிதர்கள்" [உண்மைக்கதை] ஒரு உயர்ந்த மனிதன் என்பவன், உண்மையை விரும்பி, சரியானதை செய்து, எதிரியையும் நேர்மையாக கையாண்டு, எந்த சந்தர்ப்பத்திலும் தன் சுயநலத்துக்காக, கௌரவமான பண்புகளை விட்டு கொடுக்காமல், கைவிடாமல் வாழ்பவன். அப்படியான என் நண்பர்கள் தான் பொறியாளர்கள் தவராஜாவும் ராஜரத்னாவும். இதில் தவராஜா என்னை விட கொஞ்சம் வயது கூட. அவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். ஆனால் ராஜரத்னா தெற்கை சேர்ந்த, ஒரு சிங்கள பாடசாலை அதிபரின் மகன். என்னைவிட கொஞ்சம் வயது குறைவு. நாம் மூவரும் புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் பணிபுரிந்த காலம் அது. நாம் எல்லோரும் சிங்களம் தமிழ் என்ற பாகுபாடு இன்றி நிர்வாக ஊழியர் விடுதிகளில் தங்கி இருந்து அங்கு வேலை செய்து வந்தோம். எனவே மாலை…
-
- 8 replies
- 724 views
-
-
பாலன் (சிறுகதை) ஆதியிலிருந்து தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்துக்கொண்டிருக்கையில் எங்கள் ஊரின் வடக்குப்பகுதியில் காடொன்று தோன்றியதாம்.அபூர்வமாக அங்கு குடியேறிய சனங்கள் மிகுந்த ஆரோக்கியமாக வாழத்தொடங்கினார்கள்.சிறுவர்கள் காட்டுப்பழங்களை உண்டு மகிழ்ந்தார்கள்.மர அணில்களைப் பிடித்து நெருப்பில் வாட்டினார்கள்.முள்ளம்பன்றிகளை வேடிக்கையாக அடித்துக் கொன்றார்கள்.முந்திரியம் பழங்களை ஆய்ந்த சிறுமிகள் அவற்றை ஒரேயொரு கடிகடித்து வனத்தின் பள்ளங்களில் எறிந்தார்கள்.அதனாலேயே காட்டின் பச்சைய சுகந்தத்தில் செழிப்பு இசைந்து கொண்டிருந்தது. அப்போது சிறுமியாகவிருந்த உமையாள் பூப்பெய்தினாள்.அவள் ஏறிநின்று கொண்டிருந்த மரத்தைவிட்டு அச்சத்தோடு கீழே இறங்கி தாயைத் தேடி …
-
- 0 replies
- 859 views
-
-
-
காணாமல் போனது யார்? கதையாசிரியர்: பரமார்த்த குரு பொழுது விடியாத பின்னிரவு நேரத்தில் பரமார்த்த குரு பயணம் செய்துகொண்டிருந்தபோது, ஆறு ஒன்று குறுக்கிட்டது. ஆறு வேகமாக சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. ஆற்றில் சல சல இரைச்சல் இருப்பதால் அது விழித்துக் கொண்டிருக்கிறது என்று குரு கருதினார். அதனால், இந்த வேளையில் ஆற்றைக் கடப்பது ஆபத்து எனப் பயந்தார். எனவே, ஆறு தூங்கும் வேளையில் கடப்பது நல்லது என்று முடிவு செய்தார். ஆற்றின் கரையில் இருந்த ஒரு மரத்தடியில் தனது சீடர்களுடன் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து, குரு தனது சீடர்களில் ஒருவனான மட்டியை அழைத்தார். அவன் கையில் ஒரு கொள்ளிக் கட்டையைக் கொடுத்து, ஆற்றின் அருகில் சென்று, அது இன்னும் விழித்துக்…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
- 7 replies
- 3.3k views
-
-
மிக உள்ளக விசாரணை - ஷோபாசக்தி ஃப்ரான்ஸ் காஃப்காவினது புகழ்பெற்ற நாவலொன்றுக்கும் இந்தச் சிறுகதைக்கும் ஓர் ஒற்றுமையும் ஒரு வேற்றுமையுமுள்ளன. அவரது நாவலின் தலைப்பு ‘விசாரணை’. இந்தக் கதையின் தலைப்பு ‘மிக உள்ளக விசாரணை’. வேற்றுமை என்னவென்றால், காஃப்காவினது நாயகனுக்கு ஒரு கவுரவமான பெயர் கிடையாதெனினும் அவனை ‘K’ என்ற ஓர் எழுத்தாலாவது காஃப்கா குறித்துக்காட்டினார். நம்முடைய நாயகனுக்கு அதற்குக் கூட வக்கில்லை. இப்போது நாங்கள் நேரடியாகவே கதைக்குச் சென்றுவிடலாம். எண்பத்தைந்து மனித மண்டையோடுகளும் குவியலாக மனித எச்சங்களும் அகழ்ந்தெடுக்கப்பட்ட, இருபத்தைந்து வருடங்களிற்கு முந்தைய மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இந்தக் கதை திடீரெனத் தொடங்குகின்றது. யாழ்ப்பாணப் பட…
-
- 3 replies
- 2.5k views
-
-
டொரன்டோவில் இருந்து மூன்று மணி நேரப்பயணத்தில் உள்ளது ஸ்ட்ராட்போர்ட், பிரிட்டீஷ்காரர்கள் அதிகம் வசிக்கும் அழகிய சிறிய நகரம், இங்கே ஆண்டு முழுவதும் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன, இதற்காக ஷேக்ஸ்பியரின் காலத்தில் இருந்தது போலவே பிரத்யேகமான குளோப் தியேட்டர் எனும் விஷேச அரங்கினை உருவாக்கியிருக்கிறார்கள், இந்தக் கோளவடிவ அரங்கில் ஒரு நேரத்தில் 1800 பேர் உட்கார்ந்து நாடகம் பார்க்க முடியும் இங்கே ஷேக்ஸ்பியரின் நாடகப்பிரதிகள் நவீனகால ஆங்கிலத்திற்கு மாற்றம் செய்யப்படாமல் மூலவடிவத்திலே நிகழ்த்தப்படுகின்றன, ஒரு நாடகம் மூன்று மணி நேரம் நடைபெறக்கூடியது, ஷேக்ஸ்பியரின் நாடகங்களை மரபான தயாரிப்பில் காண்பது ஒரு தனித்துவமான அனுபவம், ஸ்ட்ராட்போர்ட்டில் ஆண்டு முழுவதும் …
-
- 1 reply
- 798 views
-
-
விலங்குடைப்போம் சங்கவி மெலிதாக திரைச்சீலையை விலக்கிப் பார்த்தாள். ஓ... கண்ணுக்குத் தெரிந்த தூரம் வரை நிலம், மரங்கள், வீட்டுக் கூரைகள்... என்று எல்லாவற்றையும் வெண்பஞ்சு போன்ற வெள்ளைப் பனி போர்த்தியிருந்தது. ஆர்ப்பரிக்கும் கடல் அலையின் மெலிதான ஓசை, ஆலும் அரசுமாய் குடை விரித்திருக்க, அலரிகளால் எல்லை போட்டு அழகாய் அமைந்திருக்கும் ஆத்தியடிப் பிள்ளையார் கோவில்... என்று எமது மண்ணுக்குரிய வாசனைகளும், அழகுகளும் ஒரு புறமும், கடந்த சில வருடங்களாக இராணுவமும், ஷெல்களும், கிபீர்களும் அக்கிரமங்களும், தமிழர்கள் மீது பொழியப்படும் அநியாங்களும்… என்று போரின் கோலங்கள் இன்னொரு புறமுமாய் பழக்கப்பட்டு விட்ட சங்கவிக்கு ஜேர்மனியின் மார்கழி மாதப் பனியும் அழகாகத்தான் தெரிந்தது. அந்த …
-
- 0 replies
- 710 views
-
-
ஓலைக் கிளி எஸ். ராமகிருஷ்ணன்ஓவியங்கள் : ஸ்யாம் அபார்ட்மென்ட்டின் காவலாளி வந்து வீட்டின் காலிங் பெல்லை அடித்தபோது காலை மணி எட்டரை இருக்கும். பேப்பர் படித்துக்கொண்டு இருந்த நான் எழுந்து கதவைத் திறந்தபோது, சற்று எரிச்சலான குரலில் வாட்ச்மேன் சொன்னான், ''டாக்டர் சார், உங்களைப் பாக்க ஒரு கிழவன் ஒரு பொண்ணைக் கூட்டிக்கிட்டு வந்து கேட் முன்னாடி உட்கார்ந்து இருக்கான். விடிகாலை நாலு மணிக்கு எல்லாம் அந்த ஆளு வந்து உங்க பேரைச் சொல்லிக் கேட்டான். மூணாவது ஃப்ளோர்ல வீடுன்னு சொன்னேன். அய்யா தூங்கி எந்திரிச்சி குளிச்சி, சாப்பிட்டு ரெடியாகட்டும். அதுவரைக்கும் இப்படி உட்கார்ந்துக்கிடுறேன்னு சொல்லி பைக் ஸ்டாண்ட் பக்கமா உட்கார்ந்துக்கிட்டான். பேரைக…
-
- 0 replies
- 3.5k views
-
-
காட்டில் ஒரு மான் அம்பை அந்த இரவுகளை மறப்பது கடினம். கதை கேட்ட இரவுகள். தங்கம் அத்தைதான் கதை சொல்வாள். காக்கா-நரி, முயல் ஆமை கதைகள் இல்லை. அவளே இட்டுக் கட்டியவை. கவிதைத்துண்டுகள் போல சில. முடிவில்லா பாட்டுக்கள் போல சில. ஆரம்பம், நடு, முடிவு என்றில்லாமல் பலவாறு விரியும் கதைகள். சில சமயம், இரவுகளில் பல தோற்றங்களை மனதில் உண்டாக்கி விடுவாள். அசுரர்கள், கடவுளர்கள் கூட அவள் கதைகளில் மாறி விடுவார்கள். மந்தரையைப்பற்றி உருக்கமாக சொல்வாள். சூர்ப்பனகை, தாடகை எல்லோரும் அரக்கிகளாக இல்லாமல் உணர்ச்சிகளும், உத்வேகங்களும் கொண்டவர்களாக உருமாறுவார்கள். காப்பியங்களின் பக்கங்களில் ஒட்டிக்கொண்டவர்களை வெளியே கொண்டுவருவாள். சிறகொடிந்த பறவைகளை வருடும் இதத்தோடு அவர்களை வர…
-
- 1 reply
- 1.5k views
-
-
முப்பது லட்சம்! புழக்கடை வாசலில், தங்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தினர், அன்புச் செல்வனும், வினோதினியும். அந்த பெரிய வீட்டை நிமிர்ந்து பார்த்தாள், வினோதினி. அந்த கிராமத்தில் பெரிய செல்வந்தர் வீட்டுப் பையன், அன்புச் செல்வன். 'இது நடக்குமா, இந்த வீட்டின் மருமகளாய் வர இயலுமா...' என்று எண்ணியவள், ''அன்பு... உங்கப்பா என்னை ஏத்துப்பாரா...'' என்று சிறு பயத்துடன் கேட்டாள். ''இதையே எத்தனை முறை கேட்ப...'' என்றவன், ''நீ இங்கேயே இரு... நான் அப்பாகிட்ட பேசிட்டு வந்து உன்னை அழைச்சுட்டு போறேன்,'' என்றான். அவன் கூறுவது சரியென்று படவே, ''சரி சரி... அங்கிளோட சம்மதத்தோடயே என்னை அழைச்சுட்டுப் போ,'' என்றாள், சிரித்தபடி! அவள்…
-
- 1 reply
- 710 views
-
-
க்ளிஷே - போகன் சங்கர் ஓவியங்கள்: செந்தில் குளிமுறிக்குள் நுழைந்த அனில், “மரியம்மே” என்று அலறினான். “இது என்ன?” மரியம்மை எட்டிப் பார்த்தாள். பிறகு, “அய்யே” என்றாள். “நீ கொஞ்சம் வெளியே போ. க்ளீன் பண்ணிடறேன்.” அவன் “இதெல்லாம் பார்த்துப் பண்ண மாட்டியா?” அவள் “போடா போடா... எல்லாரும் இதிலிருந்துதான் வந்தீங்க.” கரகரவென்று தேய்க்கும் சப்தம். கிருஷ்ணமாச்சாரி வழக்கம்போல cognitive psychology in literature எடுக்கும்போது, வைஷ்ணவ தந்திர ஆகமங்கள் பற்றி எடுப்பதை விட்டுவிட்டு அதையே எடுத்துக் கொண்டிருந்தார். உடம்பு சரியில்லைபோல. நன்றாக உறக்கம் வந்தது. உறக்கத்தின் நடுவில் மரியம்மை வந்து `நீ ஒரு ரத்தக் கட்டி’ என்றாள். உடனே சிவப்பு சிவப்பாய்…
-
- 1 reply
- 1.4k views
-