கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
காலை பசியாறலாம் என்று அந்த ஹோட்டல் வாசலில் வாசலில் பைக்கை நிறுத்திய செல்வத்தின் அருகில் அந்த குரல் கேட்டது. ”சாமி கைரேகை பார்க்கறீங்க?” கேட்டவனுக்கு வயது ஒரு முப்பத்தைந்து இருக்கலாம். “அடப்போப்பா...கைரேகை, ஜோசியம்ன்னு...இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை” “சாமி அப்படி சொல்லாதீங்க... நடந்தது, நடக்கப்போறது எல்லாமே சொல்வேன் சாமி” “ சொன்னா கேட்க மாட்டியா நீ.... முதல்ல உன் கைரேகையை பார்த்துட்டு எங்கே போனா நல்லா தொழில் நடக்கும்ன்னு போ...எனக்கு சொல்றது அப்புறம் இருக்கலாம்” “என்ன சாமி இப்படி கோபப்படறீங்க...உங்க முகத்தை பார்த்தா நல்லவராட்டம் தெரியுது... எனக்கு முதல் போணியை கொடுங்க சாமி” “ஏப்பா...இப்படி லோலோன்னு அலையறதுக்கு பதிலா எங்காச்சும் போயி …
-
- 2 replies
- 18.8k views
-
-
அந்தச் சிறுவனுக்கு பத்து வயசுதான் இருக்கும். இதற்குமுன்னர் அவனுடைய அதிகபட்ச ஆசைகள் எல்லாம் சின்னச் சின்ன விளையாட்டுச் சாமான்கள் மேலேயே இருந்தது. ஆனால், வயசும் கூடியதாலோ என்னவோ, இப்போது அவன் கொஞ்சம் அதிகமாகவே ஆசைப்பட்டான். அவனுக்கு ஒரு சைக்கிள் வேண்டும். அவனுடைய பாடசாலை நண்பர்களில் பலபேர் சைக்கிள் வைத்திருந்தார்கள். அவர்களிடம் அடிக்கடி கேட்பான், "நான் ஒருக்கா ஓடிப் பார்க்கவா?" என்று. கெஞ்சிக்கேட்டும் ... அந்த சந்தர்ப்பம் அவனுக்குக் கிடைக்கவில்லை. "என்ர சைக்கிளில சைக்கிளோடப் பழகி அதை உடைச்சிட்டியென்டால்...யார் தர்றது?" என்ற நக்கலான பதில்களே வந்தன. ஆனாலும் அப்பாவின்ர கிழட்டுச் சைக்கிளில வாருக்குள்ளால கால விட்டு ... பலதடவை விழுந்தெழும்பி ஓரளவுக்கு சைக்கிள் ஓடப் பழகியிருந்த…
-
- 29 replies
- 3.4k views
-
-
புதுச்சப்பாத்து... (இந்தவார ஒருபேப்பரிற்காக எழுதியது) தீ,பெருந்தீ,விண்ணைமுட்டும் வேட்கையுடன் கொழுந்துவிட்டெரிந்துகொண்டிருந்தது,மனிதர்களை எரித்துஎரித்து எஞ்சிய கரித்துண்டுகள் குவிந்து அந்த இடம் மேடாகி இருந்தது.அதன் மேல் வைக்கப்பட்டிருக்கும் அந்த சிதையைத்தான் தீ விரைவாகத் தின்றுதீர்த்துவிடவேண்டும் என்ற பெருஞ்சங்கல்ப்பத்துடன் எரித்துக்கொண்டிருந்தது.மாலை நேரத்து மெல்லிருளில் அந்த மயானப் பிரதேசமெங்கினும் அத்தீயின் ஒளியில் கரைந்து செந்நிறமாக உருகிக்கொண்டிருந்தது.சனசந்தடியற்ற அந்தச்சுடலை ஏரியாவில் பினமெரியும் சிதையை சற்றுத்தொலைவில் இருந்து வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் கோபி.தீ எழுந்து வானத்தை தொட்டுவிட எத்தனித்துக்கொண்டிருந்தது.சுடலையை அடுத்திருந்த வயல்வெ…
-
- 11 replies
- 1.8k views
-
-
புதுப் பெண்சாதி - அ.முத்துலிங்கம் அ.முத்துலிங்கம் நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... புதுப் பெண்சாதி கொழும்பிலே ரயில் ஏறும்போது பத்மலோசனிக்குத் தன்னுடைய பெயர் இனிமேல் பயன்படாது என்பது தெரியாது. கணவனைத் தேடினாள். அவன் மும்முரமாக இரண்டு பெரிய பெட்டிகளையும், வ…
-
- 1 reply
- 2.3k views
-
-
புதுப்பித்தல் ‘‘பரமு! நம்ம ரெண்டு பேர் பாஸ்போர்ட்டையும் புதுப்பிக்கணும். ஆன்லைன்ல அதுக்கு ஏற்பாடு பண்ணிட்டேன்!’’ - வீட்டுக்குள் நுழைந்தபடி சொன்னார் சதாசிவம்.‘‘சரிங்க!’’‘‘அடுத்த மாசத்தோட என்னோட டிரைவிங் லைசென்ஸ் முடியப் போகுது. அதையும் புதுப்பிக்கணும்!’’ ‘‘சரிங்க!’’‘‘பரமு! டி.டி.ஹெச்சுக்கு பணம் கட்டாம விட்டுட்டோம். ஒரு சேனலும் தெரியலை. பணத்தைக் கட்டி கணக்கைப் புதுப்பிக்கணும்!’’ ‘‘சரிங்க!’’ ‘‘நான் ரிட்டயர் ஆனப்போ கிடைச்ச ஆறு லட்ச ரூபாயை ஒரு வருஷத்துக்குனு நிரந்தர சேமிப்பா பேங்க்ல போட்டேன் இல்லையா? வருஷம் முடியப் போகுது. அதையும் அடுத்த வாரம் புதுப்பிக்கணும்!’’‘‘சரிங்க!’’‘‘என்கூட ஸ்கூலில் ஒண்ணா படிச்சானே ராமசாமி... ஏதோ காரணத்துக்காக கோவிச்சுகிட்டுப் போனவனை ம…
-
- 1 reply
- 895 views
-
-
https://www.youtube.com/watch?v=ApUVBLDxITM எழுத்தாளர் புதுமைபித்தன் அவர்கள் கலைமகளில் எழுதிய செல்லம்மாள் என்ற சிறுகதையை மேலே உள்ள வீடியோவில் காட்சி படுத்தி இருக்கிறார்கள் . கீழே உள்ள இணைப்பில் அவர் எழுதிய செல்லம்மாள் என்ற சிறுகதை இருக்கிறது. இந்த சிறுகதையை இதுவரை படிக்காதவர்கள் வீடியோவை பார்க்கு முன் வாசித்தால் நன்றாக இருக்கும்<br /> http://azhiyasudargal.blogspot.co.uk/2009/07/blog-post_6534.html<br /> பொதுவாக தீவிர வாசிப்பு என்னிடம் இல்லை என்று எனது பால்ய நண்பர்கள் ஒரு குற்றச்சாட்டாக வைப்பதுண்டு ..ஆனால் எதையும் யாரும் விவரிக்கும் பொழுது உன்னிப்பாக கேட்க தவறுவதுவில்லை,, ஒரு ஜெயகாந்தன் ,ஒரு இந்திரா பார்த்தசாரதி போன்றவர்களுக்கு மேல் வாசித்த…
-
- 0 replies
- 3.2k views
-
-
அகல்யை புதுமைப்பித்தன் வேதகாலம் சிந்து நதி தீரத்திலே... இப்பொழுதுபோல் அல்ல. செழித்த காடுகள்; புல்வெளிகள்; இடையிடையே சிறு சிறு குடிசைகளில் மனிதக் கூட்டங்கள். எங்கெங்கோ, அதிக நெருக்கமாக, ஜாஸ்தியாக மனிதக் கூட்டங்கள் வசிக்கும் இடம் நகரம் என்ற ஹோதாவில் விளங்கும் - அதில் அரசன் இருப்பான் - அதனால் அது தலைநகர். இவ்வளவும் தாண்டி ஜன சஞ்சாரமே இல்லாத பாகம். சிந்து நதி ஹிமயத்தின் மடியைவிட்டுச் சமவெளிக்கு வர ஆரம்பிக்கும் இடம். மரமும் கொடியும் மனிதனின் வெற்றியைக் காணாதவை. சிந்துவின் கன்னிப் பருவம் - நதி களங்கமற்ற உள்ளத்தைப்போல் பாறைகளைத் தழுவிச் சுழித்துச் சிரித்துச் சென்றது. அங்கே கௌதமருடைய வாசஸ்தலம் சற்று காட்டின் உள்ளே தள்ளி. சிந்துவின் கரைக்கும் கு…
-
- 1 reply
- 1.8k views
-
-
எப்போதாவது வந்துபோகும் ஞாபகம் தான் ஆனால் கார்த்திகை மாதமானால் எப்படியாவது மறக்காமல் வந்துவிடும்.மறந்துபோக வேண்டுமே என்று எங்கோ என்னுள் புதைத்து வைத்த அந்த புதைக்கப் பட்ட ஞாபகம் இன்றும் என்மனதில் வந்து என்னை கிளறி விட்டுப் போனது... குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகளை இந்திய அமைதிப்படை கைதுசெய்து அவர்களை சிங்கள அரசிடம் ஒப்படைக்க முற்பட்ட சமயம் தமது கொள்கையின் படி சயனைற் அருந்தி உயிர்துறந்தனர். அதற்குப் பின்னர்தான் இந்திய அமைதிப் படைக்கு எதிரான யுத்தம் வெடித்தது. இறுதியாக கோப்பாய் எனும் இடத்தில்தான் நேருக்கு நேர் யுத்தம் நடந்ததென்று நினைக்கின்றேன் பின்னர் புலிகள் தமது தாக்குதல்களின் வியூகத்தை மாற்றி அமைத்துக் கொண்டனர். இருந்தாலும் குண்டுகளின் சத்தங்கள் தொடர்ந…
-
- 24 replies
- 5k views
-
-
புத்தகம் ………………….. உங்கட மகனை நான் அனுப்புகிறேன். அவற்ர புத்தகத்தையும், 50000 ரூபா காசை அட்வான்சாகவும் தாங்கோ. ஓம் தம்பி சொன்ன மாதிரி செய்யிறன். எம்மவரின் புலம்பெயர்வு காலத்தில் சாதாரணமாகப் பேசப்பட்ட வசனங்களில் ஒன்று. ஏஜென்ஸிமாருக்கும் எமக்குமான உரையாடல்களில் இச் சொற்கள் சர்வசாதாரணமாகவே வரும் அது என்ன புத்தகம். பாடப்புத்தகம், பாஸ்போட் ( கடவுச் சீட்டு -Passport ), மோட்டார் வாகனப் பதிவுப் புத்தகம். ஆகியவை எம்மால் புத்தகமென கூறப்படும் புத்தகங்களாகும். எம்மவருக்கும் புத்தகம் எனப்படும் பாஸ்போட்டுக்கும் இரத்தமும் சதையுமான உறவு ஒன்று உள்ளது. பலாலி விமான நிலையம் ஊடாக நாம் வெகு சுதந்திரமாக இந்தியாவுக்குப் போய் வந்த ஒரு காலம் இருந்தது. 1974 ஆம் ஆண்டு எனது…
-
- 3 replies
- 1.5k views
-
-
[size=6]புத்தனாவது சுலபம்-எஸ்.ராமகிருஷ்ணன்[/size] அருண் இரவிலும் வீட்டிற்கு வரவில்லை. பின்னிரவில் பாத்ரூம் போவதற்காக எழுந்து வந்தபோது கூட வெளியே பார்த்தேன் அவனது பைக்கைக் காணவில்லை. எங்கே போயிருப்பான். மனைவியிடம் கேட்கலாமா என்று யோசித்தேன். நிச்சயம் அவளிடமும் சொல்லிக் கொண்டு போயிருக்க மாட்டான். கேட்டால் அவளாகவே அருண் எங்கே போயிருக்கக் கூடும் என்று ஒரு காரணத்தைச் சொல்வாள். அது உண்மையில்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும், பிறகு எதற்குக் கேட்டுக் கொள்ள வேண்டும். பலநாட்கள் அருண் பின்னிரவில் தான் வீடு திரும்பிவருகிறான். இப்போது அவனுக்கு இருபத்திநாலு வயதாகிறது. இன்ஜினியரிங் படிப்பை கடைசிவருசத்தில் படிக்காமல் விட்டுவிட்டான். இனிமேல் …
-
- 5 replies
- 733 views
-
-
புத்தரின் கண்ணீர் - சித்தாந்தன் சமரசிங்க புத்தரின் சிலை முன்னால் கண்களை மூடிக்கொண்டுஅமர்ந்திருந்தான். விகாரையின் வாசலில் ஓங்கி வளர்ந்திருந்த அரச மரத்தின்இலைகளின் சலசலப்பு கேட்டுக்கொண்டிருந்தது. கண்களை இறுக மூடிமனதை ஒருநிலைப்படுத்த முயன்றான். அவனின் கண்களுக்குள்ஆயிரமாயிரம் பிணங்கள் சிதறிக்கிடப்பதான பிரமை ஏற்பட்டது.பிணங்களுக்கிடையில் நின்று தன் மகன் பலமாக சிரிப்பது போலிருந்தது.அவனால் கண்களை மூடி மனதை ஒருநிலைப்படுத்த முடியவில்லை.துயரமும், அவமானமும் அவனது இதயத்தைப் பிளந்தன. புத்தரின் முகத்தை கூர்ந்து பார்த்தான். அந்த முகத்தில் விரிந்த கருணையும்கண்களின் நிர்மலமும் அவனை மேலும் மேலும் வதைத்தன. பகவானுக்குமுன்னே அமர்ந்து பிரார்த்திக்க தனக்கு தகுதி இல்லையெனநின…
-
- 2 replies
- 2.5k views
-
-
புத்தரின் தொப்பி ஜீ.முருகன் இப்போது கனவுகள் அதிகம் வருகின்றன. நிம்மதியான தூக்கம் என்பது அரிதாகி விட்டது. இதற்கு நான் புதிதாக வாங்கியிருக்கும் கட்டில்தான் காரணம் என்றால் நீங்க நம்பமாட்டீர்கள். இடது பக்கம் சாய்ந்து படுத்தால் நல்ல கனவுகளும், வலது பக்கம் சாய்ந்து படுத்தால் கெட்ட கனவுகளும் வருகின்றன என்றால் மொத்தமாகவே நம்பமாட்டீர்கள். தயவு செய்து நீங்கள் நம்பவேண்டும். நான் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. தூங்கிய சிறிது நேரத்திலேயே கனவுகள் தொடங்கிவிடுகின்றன. கனவுகளின் விபரீதமான கணத்தில் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தால் பத்து நிமிடம்தான் தூங்கியிருப்பது தெரிகிறது. ஆனால் பத்து மணி நேரம் நிகழக்கூடிய சம்பவங்களைக் கொண்டதாக இருக்கின்றன கனவுகள். சில கனவுகள் பன…
-
- 1 reply
- 1.2k views
-
-
புத்தரின் மௌனம்: நெற்கொழுதாசன் ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் பிற்சேர்க்கை புளோமினில் அடுக்குமாடியொன்றில் வசித்துவந்த பங்களாதேசை சேர்ந்த பெண் கொலை செய்யப்பட்டமுறை பிரான்ஸ் போலீசாரை அதிர்ச்சிக்குளாக்கி இருந்தது. அவள் தோளிலிருந்து இடைப் பகுதிவரை கூரிய ஆயுதமொன்றால் பிளந்து குரூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தாள். சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யபபட்டதாகவும் அன்றைய பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியிருந்தன. 0 பல்பொருள் அங்காடியில் அவனைக் கண்டபோது விலகிச்சென்றுவிடலாம் என்றுதான் நினைத்தேன். அதற்குள் அவன் என்னை அடையாளம் கண்டுவிட்டிருந்தான். மிக நெருக்கமாக வந்து “நீங்கள் றஞ்சித்தானே?” எனக் கேட்டான். நான் அவனை அடையாளம் கண்டுகொள்ளாதவன் …
-
- 5 replies
- 1k views
-
-
புத்தா சயந்தன் ஸ்ரீபெரும்புத்தூரில் முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்தி கொலைசெய்யப்பட்டுச் சரியாக இரண்டு வாரங்களுக்குப் பின்னர் இந்தக் கதை ஆரம்பிக்கின்ற கும்மிருட்டில் தொடையில் ஈரலித்துப் பின்னர் முதுகு நோக்கி ஊர்கின்ற ஈரம் என்னுடைய மூத்திரம் தானென்பதை வலது கையினால் அளைந்து நான் உறுதி செய்தேன். இடது கையின் மணிக்கட்டு நரம்பை நசித்த விலங்கு, கூண்டின் இரும்புக் கம்பியோடு பிணைக்கப்பட்டிருக்க முடிந்தவரை ஈரத்திலிருந்து உடலை நகர்த்த முயற்சித்தேன். மேடும் பள்ளமுமான பழங்காலத்துத் தரையில் நீர்வீழ்ச்சியிலிருந்து கிளைபிரிகிற அருவியென மூத்திரம் மற்றுமொரு பாதையில் தொட்டது. சற்றுமுன்னர் அளைந்த கையை வயிற்றில் தேய்த்துத் துடைத்துக்கொண்டேன். நீரில் மெதுவாக முங்குவதைப்போல புலன்கள் வ…
-
- 2 replies
- 1.4k views
-
-
புத்திசாலிகள்! துபாயில் இறங்கிய பத்து நாட்களில் வாடகைக்கு வீடு பிடிக்க வேண்டும். வேலைக்கு சேர்ந்தாயிற்று. 10 நாட்களுக்குத்தான் கம்பெனி சார்பில் ஹோட்டலில் தங்க வைப்பார்கள். அதற்கு மேல் என் பாடு.அங்கு எனக்கு யாரையும் தெரியாது. ஆபீஸ் லன்ச் டைமின்போது ஒன்றாக அமர்ந்திருந்த ஒரு பன்னாட்டுக் கலவையான குரூப்பிடம் கேட்டேன். ‘‘எனக்கு வீடு தேட ஹெல்ப் பண்ண முடியுமா?’’ ஒருவன் கேட்டான், ‘‘கார் பார்க்கிங்குடன் வேண்டுமா?’’ என் பதில், ‘‘எனக்கு கார் வாங்கும் ஐடியாவே இல்லை!’’ அடுத்து பட்ஜெட், ஏரியா, ரூம் போன்ற வழக்கமான கேள்விகள். இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, லெபனான், ஆஸ்திரேலியா எனப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அவர்கள். தாங்கள் தங்கியிருக்கும் பில்டிங்கிலேயே ஏதாவது வீ…
-
- 1 reply
- 1.4k views
-
-
புத்துணர்ச்சி பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டியபடியே சோபாவிலே சாய்ந்திருந்த ரம்யாவின் கண்களிலே அந்த மரண அறிவித்தல் பட்டது. அதிலே அவள் கண்கள் அப்படியே நிலை குத்தி நின்றன. இது நிச்சயமாக அவள்தான். கடவுளே.. .. அப்படி இருக்கக்கூடாது கண்களை அகலத் திறந்தபடி பெயர் ஊரைக் கவனமாக உற்று நிதானமாக வாசித்தாள். ஆமாம் அவள் என் மாணவி தான். அமைதி, அடக்கம், பொறுமையின் சிகரமான அவளுக்கா இக்கதி? நெஞ்சிற்குள் ஏதோ செய்வது போலிருந்தது. இவளால் எப்படி போராட்டத்தில் இணைய முடிந்தது? எப்படி அவள் இறந்திருப்பாள்? தனக்குத்தானே கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தவள் கண்களில் இருந்து கண்ணீர்த்துளிகள் அவள் கன்னங்களில் வடிந்தோடின. ரீட்டா ஒரு ஏழை. அவள் தந்தையார் அன்றாடம் தோட்ட வேலை செய்பவர். ஆறு …
-
- 5 replies
- 1.9k views
-
-
வழமையாக எம்மவர் கொண்டாட்டங்கள் இந்த மண்டபத்தில்தான் நடை பெறும்.கலியாணவீடு,பிறந்தநாள் ,மனித சாமிமார்களின் பூஜை,மற்றும் கோவில்கள் கட்டமுதல் சாமியை இங்கு வைத்துதான் பூஜை செய்வார்கள் பின்பு கோவிலுக்கு எடுத்து செல்வார்கள் இப்படி பலவித எம்மவர்களின் சடங்குகள் இந்த மண்டபத்தில் நடை பெறும் நானும் பலதுக்கு சென்று இருக்கிறேன் .இனிமேலும் செல்வேன். நன்பனின் பிறந்த நாள் கொண்டாட்டம் அங்கு நடை பெற்றது .பலர் வந்திருந்தார்கள் அநேகமானவருக்கு அறிமுகம் தேவைப்படவில்லை எல்லோரும் ஒரே இடத்தை சேர்ந்தவர்கள். பெண்கள் தங்களுக்கு தெரிந்தவர்களுடன் சேர தொடங்கினார்கள் ,ஆண்களும் தண்ணி நன்பர்கள் ஒன்றாக சேரத் தொடங்கினார்கள். இளம் வயதினர் தங்களுக்கு என்று ஒரு வட்டத்தை உருவாக்கி கொண்டனர். நான் இரு…
-
- 24 replies
- 2.6k views
-
-
அவள் அப்பொழுது நடந்து கொண்டிருந்த இடம் ஒரு சூனிய பிரதேசம் ஒரு ரயில் நிலையமும் கூட...அந்த நாட்டவர்கள் இறங்க முடியாத வேற நாட்டவர்கள் இறங்கி ஏறக்கூடிய இடம்,,அவளுடன் இவ்வளவு தூரம் பயணம் செய்த பொழுது வழித் துணைக்கு வந்தவளைக்கூட யாரோ தெரிந்தவர்கள் கூட்டி சென்று விட்டார்கள் .கூட வந்தவளும் அவளைப் போல அகதியாக வந்தவள் தான் ,,ஏன் அவளை மட்டும் சொல்லுவான்..அந்த நிலையத்துக்குள் நுழைந்தவர்கள் பலரும் அந்த நோக்கத்துட்ன் வந்தவர்கள் தான் .அவர்கள் எல்லாம் இந்த இடத்துக்கு வந்த பின் எல்லாம் வெற்றிக் கரமாக முடிந்து விட்டன என்ற களிப்புடன் கூட்ட வந்தவர்களுடன் சென்று கொண்டிருக்கிறார்கள்.இவளை கூட்ட வரவேண்டியவர்கள் இன்னும் வரவில்லை ..அந்த நிலையத்தில் தீர்வையற்ற விலையில் மதுபானம் எடுக்கலாம் அந்த நோக்…
-
- 13 replies
- 1.6k views
-
-
கிளர்ந்தெழுந்த வெட்கத்தின் படரலை என் முகத்தில் யாரும் கண்டுணர முடியாது. நான் நடந்து கொண்டிருந்தேன். மூடப்பட்டிருந்த பெருவீதியில் விதைத்திருந்த சன நெரிசலுக்குள் என்னை நுழைத்து நுழைத்து வெளிவருவது எரிச்சலைத் தந்தது. எங்காவது, இருப்பதற்குரிய வாய்ப்புக்களை மறுத்து நெரிசல் இரு திசைகளிலும் இயங்கிக் கொண்டிருந்தது. எரிச்சலும், கோபமும் இருவேறு உணர்ச்சிகளா அல்லது ஒருமித்தவையா எனத் தெரியவில்லை. ஆனால் அவையிரண்டும் முகத்தில் பரவத்தொடங்கியிருந்ததை நான் அறிந்தேன். என் எதிர்ப்படுவோருக்கு நான் கோபமுற்றிருக்கின்றேன் என்பது தெரியலாம். ஆனால் எனக்குள் விரவிக் கிடக்கும் வெட்கத்தை அவர்கள் அறிவார்களா ? அறியக் கூடாதென்பதை நான் விரும்பினேன். வெட்கம், கோபம், எரிச்சல் என வெவ்வேறு உணர்வுத் திர…
-
- 2 replies
- 1.2k views
-
-
புரிதல்: ஒரு நிமிடக் கதை "பாலு! இந்தக் காலத்துல சாதி மதம் எல்லாம் ஏது? பொண்ணு மாப்பிள்ளைக்கு பரஸ்பரம் பிடிச்சிருக்குதான்னு பார்க்கணும். திவ்யாவுக்கு அந்தப் பையன் வினோத்தைப் பிடிச்சிருக்குது. அவனுக்கு நம்ம திவ்யாவைப் பிடிச்சிருக்குது." - திவ்யாவின் பெரியப்பா முருகேசன் தம்பி பாலுவிடம் சொன்னார். "அண்ணே! பையனுக்கு நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல குணம். இதுதானே வேணும்? எல்லாமே வினோத்கிட்டே இருக்குது. நாம ஒத்துக்கிட்டா என்ன குறைஞ்சுடப் போகுது?" திவ்யாவின் சித்தப்பா பிரபாகரும் தன் பங்குக்கு சொன்னார். ‘பெரியப்பாவும் சித்தப்பாவும் ஒத்துக்கிட்டாங்க. அப்பா ஏன் இப்படி பிடிவாதமா இருக்கிறார…
-
- 3 replies
- 1.8k views
-
-
புரிந்தது ரோஸி அப்படிச் செய்வாளென்று யாரும் நினைக்கவில்லை. உண்மை எதிரே வந்து மோதிய போது ஒவ்வொருவர் மனத்திலும் ஆத்திரம் பொங்கியது. நன்றி கெட்ட பெண்! வளர்த்து ஆளாக்கியவர்கள் முகத்தில் கரியைப் பூசி விட்டுப் போய் விட்டாளே! அந்த வீட்டில் எடுபிடி வேலை செய்யும் பெண்ணாகவா ரோஸியை நடத்தினார்கள்? கிறிஸ்துமஸ், ஈஸ்டர்- எந்தப் பண்டிகை வந்தாலும் ரோஸிக்கு புது டிரெஸ் வாங்காமல் இருக்க மாட்டார்களே! அவளை ஸ்கூலில் சேர்த்து அவள் நன்றாகப் படித்து முன்னேறுவதற்கு எல்லா வசதியும் செய்யவில்லையா? சுமை புத்தகங்களும், நோட்டுப் புத்தகங்களும் வாங்கிக் கொடுத்து பஸ் பாஸுக்குப் பணம் கொடுத்து அவளுடைய படிப்பில் எப்படியெல்லாம் அ…
-
- 1 reply
- 2k views
-
-
என்ன இப்பதான் 8 மணியா..?! உங்களுக்காக 1 மணித்தியாலமா காத்திருக்கிறன். ஆடிப்பாடி வாறீங்கள். கெதியா வாறதுக்கு என்ன.. என்று ஜெகனோடு சினந்து கொண்டாள் ஜனனி. இஞ்ச பாருங்கோ ஜனனி.. உங்களைக் காக்க வைக்கனும் என்றது என்ர விருப்பமில்ல. நீங்க எனக்காக தனிய காத்திருப்பீங்கள் என்று நினைச்சிட்டுத்தான் கெதியாப் புறப்பட்டு வந்தன். வாற வழியில நான் வந்த பஸ் பழுதாகி நின்றிட்டுது. பிறகு அடுத்த பஸ் வரும் வரை காத்திருந்து அதில வாறன். அதுதான் நேரம் எடுத்திட்டுது. மன்னிச்சுக்கோங்கோ தாயே... என்று பணிந்தான் அவள் கோபத்தின் முன். சரி சரி.. வாங்க ரீ குடிப்பம். களைப்பா இருக்கிறீங்க.. முகமெல்லாம் வாடிப்போயிருக்கு என்று கோபந்தணிந்து பணிவோடு கேட்டாள் ஜனனி. ஜனனி தாதியாக வைத்தியசாலை ஒன்றில் …
-
- 34 replies
- 4.6k views
-
-
புரொபசர் சகல சந்தேக நிவாரணி! புரொபசர் சகல சந்தேக நிவாரணி! பாக்கியம் ராமசாமி ப க்கத்து வீட்டில் ஒரு புரொபசர் இருந்தார். புரொபசர்னா புரொபசரே அல்ல; அசிஸ்டென்ட் லெக்சரர் - ஒரு தனியார் கல்லூரியில்! சென்னையிலிருந்து ரெண்டு பஸ் பிடித்து, ரெண்டு மணி நேரம் பிரயாணம் செய்தால், அவரோட காலேஜ் இருக்கிற கிராமம் தெரியும். அப்புறம் பொடி நடையா கால்மணி நடந்து, சரியா 11 மணிக்கு காலேஜை அடைந்து…
-
- 1 reply
- 1.1k views
-
-
புறவழிச்சாலைப் புண்ணியங்கள் காலை மணி ஒன்பதரை. காசி விஸ்வநாதனுக்கு அன்றைய காலைக் கடமைகள் முடிந்தன. ஐந்தரை மணிக்கு எழுதல். பயோரியா பற்பொடியில் பல் துலக்குதல். மனைவி கற்பகம் கையால் தரப்படும் காபியை ருசித்துக் குடித்தல். அரை கிலோ மீட்டர் தொலைவு வியர்வை அரும்ப நடைப்பயிற்சி. நடைப்பயிற்சி முடித்து வந்து குளிர்ந்த நீரில் குளித்தல். அடுத்து தமது குடும்பத்திற்குச் சொந்தமான விநாயகர் கோயில் பூஜை. பூஜை முடிந்து கற்பகத்துடன் சேர்ந்து காலைச் சிற்றுண்டியைச் சாப்பிட்டு விட்டு கடிகாரம் பார்த்தால்... அது மணி ஒன்பதரையைக் காட்டும். அதன் பிறகு அன்றையச் செய்தித் தாளை வரி விடாமல் வாசிக்கத் தொடங்குவார் காசி விஸ்வநாதன். வேலையில்…
-
- 0 replies
- 701 views
-
-
புறாப்பித்து - சிறுகதை சிறுகதை: எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: ஸ்யாம் தற்செயலாகத்தான் அலுவலக மாடி ஜன்னலில் சாய்ந்தபடியே அந்தப் புறாக்களை கோவர்தன் பார்த்தார். அவரது அலுவலகத்தின் எதிரில் மத்திய உணவு சேமிப்புக் கிடங்கு இருந்தது. அதன் சுற்றுச்சுவர் மிக உயரமானது. கறுத்த சுவரின்மீது புறாக்கள் வரிசையாக உட்கார்ந்திருந்தன. ஒரேயொரு சாம்பல் நிறப் புறா. மற்றவை வெள்ளை நிறப் புறாக்கள். மொத்தம் எத்தனை என எண்ணிப்பார்த்தார். பதினாறு புறாக்கள். அலுவலகம், கோவர்தன் இயல்பை மாற்றியிருந்தது. இளைஞனாக இருந்த நாள்களில் இதுபோன்ற புறாக்களைப் பார்த்திருந்தால் இப்படி எண்ணியிருக்க மாட்டார். புறா என்றாலே காதலுக்குத் தூது விடுவது என்ற கற்பனையில் அமிழ்ந்து போயிருப…
-
- 2 replies
- 2.7k views
-