கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
பெருமாள் உச்சியிலிருந்து அடித்துச் சப்பளித்ததுபோல் அடர்ந்து சடைத்து கட்டையாக நின்றிருந்த அந்த முதிர் பூவரசு இன்னும் நின்றிருந்தது கண்டபோது, அந்த வீட்டில் ஒருகாலத்தில் குடியிருந்த பெருமாளதும் அவரது குடும்பத்தினதும் ஞாபகம் துரைசிங்கத்தினது மனத்தில் சாரலடித்தது. மிகவும் அண்டி வராமல் விலகியிருந்த சக மனிதர்கள் இவ்வாறான எதிர்பாராத் தருணங்களில்தான் மனத்தில் உயிர்கொண்டெழுகிறார்கள். முப்பது முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் அந்த ஊருக்கு குடும்பமாய் வந்து மலேசியா பென்சன்காரர் பொன்னம்பலத்தின் வெறுவீட்டில் அவர் புதிதாகக் குடியேறியபோது, அயல் சிறுவர்களிடத்திலெல்லாம் பெரும் குதூகலிப்பு ஏற்பட்டுப்போனது. அது பெரும்பாலும் நீண்டநாட்கள் நீடிக்கவில்லையென்றே சொல்லமுடிகிறது…
-
- 1 reply
- 723 views
-
-
பெற்றதும்... கற்றதும்... சுஜாதா கோவிச்சுக்க மாட்டார் (என்று நம்புகிறேன்) திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்தார் என் உறவுக்காரர் ஒருத்தர். வந்தவர் அழைப்பிதழை மட்டும் நீட்டாமல், அதன்மேல் நாலு அட்சதையையும் (மஞ்சள் அரிசி) வைத்து நீட்டினார். அதை என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. அதுபற்றி யாரும் எனக்கு சொல்லித் தரவும் இல்லை. எனவே, நானாக யூகித்து, அதை ஜாக்கிரதையாகக் கையில் எடுத்து என் தலையில் கொஞ்சம் போட்டுக் கொண்டேன். பக்கத்திலிருந்த என் மனைவியின் தலையிலும் கொஞ்சம் தூ…
-
- 0 replies
- 1.3k views
-
-
அந்த தொடர் மாடிக்கட்டத்தின் நான்காம் மாடியில் அமைந்து இருந்தது அவர்களது குடியிருப்பு. தாய் மாலதி .தந்தை வாகீசன் மகன்கள் சுபன் .சுதாகரன் ஆகிய நால்வரும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். முதலில் நாட்டுப்பிரச்சினை காரணமாக் தந்தை வாகீசன் தான் குடிபெயர்ந்து இருந்தார். மனைவி மாலதி அவனது தூரத்து உறவு தான் . அப்போது சவூதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான் . திருமணமாகி இரு குழந்தைகள் பிறக்கும் வரை ஒழுங்காக் தான் இருந்தான். ஒரு தடவை விடுப்பில் வந்தவன் நாட்டு பிரச்சினை காரணமாக மீண்டும் போக முடியாது போனது. மதுவகை பாவிக்க் தொடங்கினான். மாலதி இருந்த நகை நட்டு எல்லாம் விற்று சகோதரர்களிடமும் கடன் வாங்கி ஒரு பாடசாலை வாகனம் எடுத்து கொடுத்தாள் பிள்ளைகளை பாடசாலைக்கு ஏற்றி வரும் பண…
-
- 10 replies
- 1.5k views
-
-
பெலிசிற்றா : ஜே.கே ஜே.கே ஏழு பதினொன்றுக்கு வரவேண்டிய தொடருந்து தாமதமானதால் பயணிகள் மேடை அலுவலகப் பணியாளர்களாலும் பாடசாலை மாணவர்களாலும் நிறைய ஆரம்பித்தது. தலைக்கு பீனித் தொப்பி, கழுத்துச்சால்வை, முழங்கால்வரை நீளும் குளிர் ஜாக்கட், சுடச்சுடக் கோப்பி என அத்தனை போர்வைகளையும் மீறிக் குளிர் அவர்களை உறைய வைத்துக்கொண்டிருந்தது. இந்தக் குளிரிலும் காற்சட்டை அணிந்து மேலே வெறுமனே ஒரு சுவெட்டரை மாத்திரம் மாட்டியிருக்கும் மாணவர்களைப் பார்த்து பெலிசிற்றா பொறாமைப்பட்டாள். அவர்களில் பலரும் இந்திய நிறத்தைச் சூடியவர்கள். சிலருக்குச் சீனத்து முகம் இருந்தது. பெலிசிற்றா அவுஸ்திரேலியாவுக்கு வந்த இந்த நாற்பது வருடங்களில் நிகழ்ந்த பெரும் மாற்றம் இது. இந்த நிலத்தில் வாழ்ந்த ஆதிக்குடிக…
-
- 1 reply
- 692 views
-
-
பேச்சு ‘‘இதோ பார்... இப்படி அடிக்கடி வந்து என்னைத் தொந்தரவு செய்யாதே!’’ - வீடு தேடி வந்த நெருங்கிய நண்பனிடம் எகிறி விழுந்தான் ஏகாம்பரம். ‘‘டேய், மூணாம் மனுஷன்கிட்ட பேசற மாதிரி கத்தாதே! நான் உன் குளோஸ் ஃபிரண்டுடா...’’‘‘இதோட உன் நட்பை குளோஸ் பண்ணிட்டேன்... போதுமா?’’ பரிதாபமாகத் திரும்பிப் போனான், நாற்பது வருட நண்பன்.‘‘ஏங்க! பீச்சுக்குப் போய் ரொம்ப நாள் ஆச்சு... சாயங்காலம் போலாமா?’’ - ஆசையுடன் கேட்ட மனைவியை எரித்து விடுவது போல் பார்த்தான் ஏகாம்பரம். ‘‘அங்கே போய் வாங்கினாத்தான் காத்தா? நம்ம வீட்டு மொட்டை மாடியில போய் நில்லு... அதே காத்து வரும்!’’‘‘அப்பா, செஸ் விளையாட வர்றீங்களா?’’ - கேட்ட மகனுக்கு முதுகிலேயே ஒன்று வைத்தான். ‘‘டேய்! ஏண்டா இப்படி எல்ல…
-
- 0 replies
- 1.2k views
-
-
பேனாவின் சிவத்த மை ......... அமைதியான அந்த கிராமத்தில் சுந்தரதாரின் கடைக்குட்டி சாதனா , பத்தாம் வகுப்பில் படித்து கொண்டிருந்தாள் . அக்காலம் மிக மிக சாதாரணமாகவே இருந்தது ,கைதுகளும் குண்டுமழையும் ... இடப்பெயர்வுகளும் ...இல்லாத காலம் . தெளிந்த நீரோடை போன்று ,மக்களும் ,வாழ்கையும் ஓடிக்கொண்டு இருந்தது . கோவில் ,பாடசாலை ,விளையாட்டு என்று ,சமுதாயம் அமைதியாக வாழும் காலத்தில் ,முதலாம் முறை ,பத்தாம் வகுப்பு கோட்டை விட்டதால் ஏனைய தோழிகளுடன் பதினோராம் வகுப்பு செல்ல முடியவில்லை .முக்கியமான கணிதபாடம் தவற விட்டு விட்டாள் , வீடிலும் நல்ல வசை மாரிகள் ,அதனால் இரண்டாம் வருடம் முழு மூச்சாக படித்து கொண்டிருந்தாள். போதாக்குறைக்கு பெரியண்ணாவின் கண்டிப்பு வேறு . பாடசாலையும் ப…
-
- 4 replies
- 1.3k views
-
-
அண்மையில் பிரான்சின் வெயில்நாளொன்றில் பாரிஸின் மையப்பகுதியில் வெள்ளையினத்தவர்களின் நடுவே உலகெங்கும் சிதறி இருக்கும் என் இனத்தில் இருந்து தெறித்த ஒரு துளியாக இலக்குகள் எதுவுமின்றி நான் அலைந்துகொண்டிருந்தேன்....என் மொழியின் சுவடுகளே இல்லாத சனசந்தடிமிக்க அந்த நகரத்தில் புள்ளிகளுடன் புள்ளியாய் வெள்ளைகளின் நடுவே நாடிழந்த ஒரு அகதித்தமிழனாய் நான் நின்றுகொண்டிருந்தேன்....நடமாடும் பொம்மைகள்போல் விளையாடிக்கொண்டிருந்த வெள்ளையினக் குழந்தைகளின் புன்னகையில் மனதைப் பறிகொடுத்தபடி பொன்னிறத்தில் அமைந்த அந்த அற்புதமான மாலைப்பொழுதை நான் அனுபவித்துக்கொண்டிருந்தபொழுது விளையாட்டில் தன்னைமறந்த குழந்தை ஒன்று திடீரெனத் தவறி அங்கிருந்த சிமெண்ட் நிலத்தில் விழுந்துவிட்டது.காலில் சிறிதாக அடிபட்டுவிட்ட…
-
- 12 replies
- 1.4k views
-
-
பேயோட்டி வினையூக்கி முதலில் சாமியார் ஆகவேண்டும் என்றுதான் நினைத்தேன். இத்தாலியில் சாமியார் வேடங்களுக்கு வங்காள தேசத்தவர்களும் ஹரே கிருஷ்ணா குழுமமும் பிரபலம் ஆகிவிட்டதால் , சொகுசா இருக்கிற ஒரு வேலை என்ன என தேடிய பொழுது சிக்கிய தொழில் தான் 'பேயோட்டி' ... ஆங்கிலத்தில் Ghost Buster , Exorcist எனச் சொல்லுவார்கள். ஸ்டைலாக பில்டிங் காண்டிராக்டர் என்பது போல நான் எனக்கு வைத்துக் கொண்ட தொழில் பெயர் Para Normal Scientist. பேய் வீடுகளில் இருக்கும் பேய்களை ஒட்டுவதற்குத்தான் என் முதல் முன்னுரிமை. மனிதர்களுக்குப் பேய் பிடித்ததாக சொன்னால் நான் எதுவும் செய்ய மாட்டேன், நல்ல மன நல மருத்துவரைப் பரிந்துரைப்பேன். என்னுடைய பாட்டி ஒரு முறை தனக்கு யாரோ செய்வினை வைத்து விட்டதாகவும் அந்த செய்…
-
- 1 reply
- 869 views
-
-
பேரறிவாளன் டைரி - 1 தொடரும் வலி..!தொடர் வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன் அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது! 25 ஆண்டுகள் முடிந்துவிட்டன. நினைக்கவே மலைப்பாக இருக்கிறது. இது, ஏதோ அரசியல் வானில் அடியெடுத்துவைத்து அடைந்துவிட்ட பெரும் பதவியின் ஆர்ப்பாட்டமான வெள்ளிவிழா அல்ல... கலைத்துறையில் எனது 25 ஆண்டு சாதனையின் வெற்றிக்கொண்டாட்டம் என நினைத்துவிடாதீர்கள். இருள்சூழ்ந்த காராகிரகத்தின் நான்கு சுவர்களுக்குள் முடங்கிப்போன வேதனை ஆண்டுகள் அவை. இந்த 25 ஆண்டுகால துன்பக் கதைகளை, துயர வாழ்வை 25 பக்கங்களிலும் அடக்கிவிடலாம்... 25 தொகுதிகளுக்கான புத்தகமாகவும் அடுக்கி அழலாம். இந்த கால் நூற்றாண்ட…
-
- 10 replies
- 5.2k views
-
-
பேரழகியின் புகைப்படம் - நாராயணிகண்ணகி ஞாயிறன்று அம்மாவுடன் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தேன். மணமகன் தேவையில் லதாவின் புகைப்படத்தைப் பார்த்த அம்மா உறைந்த மாதிரி ஆகிவிட்டாள். கண்கள் பழைய நினைவுகளுக்கு ஓடி விட்டது. என்றாலும் எதையோ வென்றுவிட்ட ஆர்ப் பரிப்பு மௌனத்திலும் வெயிலாய் சுட்டிருக்க வேண்டும். அடுத்த நபரின் புகைப்படம் தொலைக்காட்சியில் வந்தும் நெஞ்சில் லதாவின் பிம்பம் அகலவில்லை. தேவதை என்று சொல்வதை விட மேலான வார்த்தை உண்டா? அழகி எனும் சொல்லிற்குள் சுருக்கி விட விருப்பம் இல்லை. பேரழகி என்று சொல்வதே குறைவான மதிப்பீடு போல்தான் படுகிறது. அழகு என்பதற்கு ஆயிரம் பேர் ஆயிரம் விளக்கங்கள். அந்த ஆயிரங்களையும் தாண்டும் சில அழகுக்குறிப்புகள் இருக்கிறது. கா…
-
- 1 reply
- 1.8k views
-
-
எனது முகப்பு புத்தகத்தினூடாக பேராசிரியர் காலமாகிய செய்தி அறிந்து நீண்ட காலமாக தொடர்புகள் இல்லாத எனது பள்ளி தோழனுக்கு தொலைபேசி செய்தேன். தொலைபேசி அழைப்பு அமைந்த பொழுது எனது குரலை அறிந்து கொண்ட அவனது குரலும் வறண்டு கர கரத்தது . அவன் எனது பெயரை விளித்து நீ அறிந்தியோ தெரியாது .என்று தொடங்க. விசயம் அறிந்து தான் எடுத்தேன் என்று சொல்வதுடன் சம்பாசணை தொடங்கியது.சம்பாசணையில் அவரை பற்றிய நினைவுகளும் விவரங்களும் வேறு விடயங்களும் தொடர்ந்தது.அவன் வேறு யாருமல்ல சிவத்தம்பி அவர்களின் நெருங்கிய உறவினன்.அவன் ஹாட்லி கல்லூரியில் உயர்தர வகுப்பில் என்னோடு ஒன்றாக படித்தவன்.உயர்தர, வகுப்பு படிக்கும் பொழுது தான் அவனுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. எங்களுக்கு 16 அல்லது 17 வயதுகள் தான் …
-
- 0 replies
- 756 views
-
-
அது ஒரு காலம். யார்க் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தோம். கையில் அவ்வளவாகப் பசை இருக்காது. ஒவ்வொரு டாலரும் பார்த்துப் பார்த்து செலவு செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை, சனிக்கிழமைகளில் அங்கிருக்கும் பள்ளிக்கூடங்களில் C/C++ வகுப்பு எடுப்பதன்வழி மாதம் $350 கிடைக்கும். பெரிய பணம் அது. அது போக ஊரிலிருந்து குடிவரவாக வந்திருப்பவர்களுக்கு ஆங்கிலம் பயிற்றுவிப்பதன்வழி அவ்வப்போது வயிறார சாப்பாடுகிடைக்கும். சனிக்கிழமை மாலையானால், மார்க்கம் ரோட்டில் இருக்கும் அண்ணன் ஒருவரது வீட்டுக்குப் போய்விடுவது வழக்கம். அண்ணனுக்கு ஒரு மகன், ஒரு மகள். முறையே 4, 1 வயதுப் பிள்ளைகள். நான் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வேன். பெரிதாக வெளித்தொடர்பு இல்லாத அவர்களுக்கு என் வருகையானது ஒரு விடுப்பு. வெ…
-
-
- 3 replies
- 1.4k views
- 1 follower
-
-
முன்னுரை ....இது ஒரு பயணக் கட்டுரை அல்ல. ..ஏனெனில் பயணம் என்றால் ஒரு வாரம் அல்லது இரு வாரம் மட்டும் ஒரு ஊருக்கு அல்லது நாட்டிற்கு போய் அது பற்றி எழுதுவார்கள். ஆனால் நான் 5 வருடங்களுக்கும் மேலாக வசித்த நாடு ஐக்கிய அரபு இராச்சியம். அதில் டுபாய் எனும் மற்றவர்களால் சொர்க்கபுரி என கருதப் பட்டு என்னால் பாதி நரகமாகவும் பாதி சொர்க்கமாகவும் உணரப் பட்ட ஒரு ஊரிலும் பக்கத்தில் உள்ள சார்ஜா ஊரிலும் (உண்மையில் இவை மாநிலங்கள்: UAE: Semi federal country ) நான் வாழ்ந்த கதை. சின்ன புள்ளைகள் இதனை வாசித்தால் கெட்டுப் போயிடும் என நினைக்கும் அப்பாமார், அம்மாமார் இந்த தொடரை இரவில் யாருக்கும் தெரியாமல் வாசிக்கவும் (செம build up அப்பு) இதனை வாசிக்க முன் உங்களுக்கு நிச்சயம் தெர…
-
- 72 replies
- 22.9k views
-
-
அன்று பேஸ்புக்கில் சந்தித்தோம் இன்று பேஸ் ரூ பேஸ் பார்க்க முடியாமல் பிரிந்தோம்..
-
- 0 replies
- 720 views
-
-
போத்தல் பித்தளை அலுமினியம். இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதியது. பேத்தில் பித்தளை அலுமினியம். இந்த சத்தத்தை ஊரில் கேட்காதர்களே இருந்திருக்க மாட்டீர்கள். ஒரு சைக்கிளில் பின்னால் இரண்டுபக்கமும் சாக்கு அல்லது உரப்பையை கட்டியபடி போத்தில் பித்தளை அலுமினியம் இருக்கா என்று கத்தியபடியே வருவார்கள்.வீடுகளில் உள்ள பழைய உபோகிக்க முடியாத இரும்பு பித்தளை சாமான்களை நிறுத்து வாங்கி கொண்டு போவார்கள்.சிலர் பண்டமாற்று முறையில் வாங்கிய பொருட்களிற்கு பிளாஸ்ரிக் அல்லது அலுமினிய பாத்திரங்களை தருவார்கள். முன்னர் யாழ்சோனதெருவில் வசித்துவந்த சோனகர்களே பெரும்பாலும் இந்த வியாபாரத்தை செய்தனர்.இப்படி வேறு சில வியாபாரிகளின் கூவல் சத்தங்களையும் ஊரிலை கேட்கலாம் ஆடு இரிக்கா ஆடு.பழையகோட்.இ…
-
- 27 replies
- 7.2k views
-
-
இந்த உலகத்தில் பைத்தியங்கள் அதிகரித்து கொண்டு செல்கின்றது காரணம் நாம் ஒவ்வொரு பொருளின் மீதும் பைத்தியமாக இருக்கிறோம் உதாரணம் பணம் , பொருள் , நகைநட்டுக்கள் அடுத்தவன் சொத்துக்கள் ( மண் , பொண் ) இன்னும் பல இதை உங்கள் கண்ணாடியை பார்த்து கேட்டால் தெரியும் .நாம் பைத்தியமா இல்லையா என்று. உன்மையில் பைத்தியம் இல்லாதவரை நீங்கள் பைத்தியாமா என்று சொன்னால் அவர் சிரிப்பார் அல்லது முறைப்பார் .அதுவே பைத்தியமே இல்லாத ஒருவரை பைத்தியகார அதாவது மனநல நிலையங்கள் ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட இடங்களில் கண்டு அவரை பைத்தியம் என்று சொன்னால் அவர் மனம் எவ்வளவு பாடு படும் என்பது எத்தனை பேருக்கு தெரியும் அது போல எந்தன் வாழ்க்கையும் ஓடிக்கொண்டிருக்கிறது . இந்த உலகத்தில் எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான…
-
- 16 replies
- 5.1k views
-
-
என் பிரியமான தோழிக்கு, நான் நலம். நீயும் நலமுடன் இருப்பாய் என்று நம்புகிறேன். குழந்தைகள் நலமாய் இருக்கிறார்கள். என்னுடன் குப்பை கொட்ட வந்தவளும் நலமாய் இருக்கிறாள். என்ன, உங்களை கட்டி எனனாத்தை கண்டேன் என்று இடைக்கிடை சொல்லி வெறுப்பேத்துகிறாள். இது உங்கள் பெண் குலத்துக்கே உரிய புராணம் என்று என்னால் புறக்கணிக்க முடியவில்லை. இன்று ஒரு படம் பார்த்தேன். அதன் பலன் தான் இந்த கடிதம். செரனின் போக்கிசம். நேரம் இருந்தால் நீயும் எடுத்து பார். நான் தனிமையில் இருந்த போது, நீ அனுப்பும் கடிதங்களும், இன்று என்ன கறி என்ற கிண்டலும், என் வருசங்களை நிமிடங்கள் ஆக்கின. அவற்றில் சிலவற்றை நான் இன்னமும் பொக்கிசமாய் வைத்திருக்கிறேன். சில வேளை எடுத்து மீண்டும் படிப்பது உண்டு. என்னை அறியாம…
-
- 16 replies
- 2k views
-
-
என் அரூயிர் நண்பனுக்கு, நான் நலம். உன் நலம அறிய ஆவல் இருந்தாலும், இங்க நடக்கிற இளுபடியாளால், நீண்ட நாட்களாக கடிதம் போட முடியவில்லை. மன்னிக்கவும். வளத்த கடா எல்லாம் முட்ட வருகுது. இரத்தத்தில் சீனியும், கொளுப்பும் வேண்டா விருத்தாளிகளாக வந்து குடியெறிவிட்டுது. சமைக்கிற பஞ்சியில உங்களுக்கு சுகர், உந்த பாணை போட்டு சாப்பிடுங்கோ, என்ற குரல் சுப்பிரபாதம் ஆகிவிட்டது. துரித உணவுகள், அன்றடா அத்தியவாசியம் ஆகிவிட்டது. அவசர வாழ்க்கையில், பிள்ளைகளின் குறும் செய்தி மட்டுமே கிடைக்கிறது. எனிந்த வாழ்க்கை என்று எண்ணும் போதெல்லாம், நாமடித்த லூட்டிகள் கொஞ்சம் மனசை பலமூட்டுகிறது. உனக்கு ஞாபகம் இருக்கிறதா, ஜயர் வீட்டுக்கு புது மீன் காரனை அனுப்பினோம். அம்மா மீன் கொண்டராட்டாம், நான் கா…
-
- 1 reply
- 1.5k views
-
-
பிராங்பேர்ட் விமானநிலையம். விமானங்களின் போக்குவரத்து விபரங்களை விளம்பும் அறிவிப்புப் பலகையை நோட்டமிட்டவாறு அமர்ந்திருந்தாள் சுதா. பல்வேறு நாட்டவர்கள் புரியாத மொழிகளில் உரையாடியவாறு, சக்கரங்கள் பூட்டிய 'சூட்கேஸ்'களை இழுத்தவாறு அவளைக் கடந்து சென்றுகொண்டிருந்தார்கள். தோளில் ஒரேயொரு 'வாய்க்'. இலங்கையில் இருந்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இதே பிராங்பேர்ட் விமானநிலையத்தை மிதித்தபோது கொண்டு வந்திருந்த அதே 'வாய்க்'. அப்போது கனத்திருந்தது. பெறுமதியான பொருட்களுடன் இருந்தது. ஆனால் இப்போது இரண்டொரு உடுபிடவைகளுடன் பாரமில்லாமல் இலேசாக அவள் தோளே தஞ்சமெனத் தொங்கியது. சுதாவின் மனம் இந்த மண்ணை மிதித்தபோது எவ்வளவோ இன்ப மதர்ப்புடன் காற்றாடியாகக் கற்பனையென்ற வானத்தி…
-
- 12 replies
- 1.5k views
- 1 follower
-
-
ஆம்பளைங்களை நம்பாத..! ------------------------------------------------ தீபாவிற்கு ஒரு நொடியில் உடல் நடுங்கி விட்டது. சித்தியினை அவள் இங்கு எதிர்பார்க்கவில்லை. என்ன பேசுவது எனத் தெரியாமல் உறைந்து நின்றிருந்தாள். சித்தியேதான் “என் தங்கம்” என்று அழுதபடி வந்துக் கட்டிக் கொண்டாள். உணர்வு திரும்பவும் தானும் அழத் தொடங்கிய தீபா சித்தியைக் கட்டிக் கொள்ள, சத்தம் கேட்டு வீட்டினுள் இருந்து வந்த ராஜேஸ்வரி நிலைமையைப் புரிந்துக் கொண்டு இருவரையும் வீட்டினுள் அழைத்து சென்றாள். சித்திக்கு குரல் அடங்கவில்லை. “இப்படி யாருமில்லாத அனாதை மாதிரி ஓட வச்சுட்டானுகளே பாவிங்க” அந்த வார்த்தை தீபாவிடம் அடங்கி இருந்த அழுகையை மேலும் தூண்டியது. அதைப் புரிந்துக் கொண்ட ராஜேஸ்வரி அதை திசை திருப…
-
- 8 replies
- 2k views
- 1 follower
-
-
பொதுச்சுடர் - தெய்வீகன் விமானம் தரைதட்டியபோது உயிர்நாடியில் அலாரம் சொட்டியது. காலம் என்னை புதியதோர் நிலத்தில் பிரசவித்தது. விமான நிலையங்களில் ஒருவன் கழுத்தில் இரண்டு தலைகளோடு வந்திறங்கினால்கூட புதினமில்லை. கடவுச்சீட்டிற்குள் இரண்டு தலைகளிருந்தால்தான் அதகளப்படுவார்கள். இங்கு எல்லோருமே கடவுச்சீட்டுகள்தான். தடித்த இரண்டு அட்டைகளாலான அந்த சிறிய புத்தகத்துக்குத்தான் மரியாதை. இலங்கையிலிருந்து ஏறும்போதும் சரி, மலேசியாவில் மாறும்போதும் சரி, இப்போதும்கூட மானிடத்தின் இந்த அட்டை வாழ்வு எவ்வளவு அஜீரணமானது என்பதை எண்ணியபடியே நடந்தேன். …
-
- 4 replies
- 1.3k views
-
-
தங்கள் குடிலுக்கு.. அருகில் வந்தவிட்ட பொன் மானை கண்டுவிட்டாள் சீதா. அதன் வழுவழுப்பான தசைப்பிடிப்பான ஹன்சிகா போன்ற மொழுமொழு உடலும் வெண் புள்ளிகள் போட்ட அழகு ரோமமும் அவளைக் கவர்ந்துவிட.... தன் அடிமையான கணவனை நோக்கி.. டேய் அந்தப் பொன் மானைப் பிடித்து வந்து வெட்டி.. நல்லா உப்பும் மிளகாய்த் தூளும் போட்டு.. பொரியல் செய்து தா. மிச்சத்தை அவிச்சு வத்தல் போடு.. இங்கு தங்கி இருக்கும் காலம் வரை நான் அதைச் சுவைத்துச் சாப்பிட வேண்டும்.. என்று கட்டளை இட்டாள்..! சீதாவின் குரலைக் கேட்ட தொடை நடுங்கிக் கணவன் இராமன்.. குரலால் குழைந்தபடி.. ஓமம்மா.. இந்தா முடிச்சிடுறன். நீங்க சொன்னா.. எள்ளென்றால் நான் எண்ணெய்யா நிப்பன். ஏய் ஏய்.. வீண் பேச்சு வேணாம். நீ.. எள்ளாவும் நிற்க வேணாம்.. எண்…
-
- 1 reply
- 1.5k views
-
-
பொன்னுலகம் சிவா கிருஷ்ணமூர்த்தி அட்மிரல் பார்க்கினுள் வரும் போதே கழுத்துக் கசகசத்தது. எதிர் சைக்கிள் காரரின் கண்களைத் தொட்டு பரஸ்பரம் தலையசைத்துக்கொண்ட பின் சீட்டின் முன் வந்து சற்றே ஏறி பெடலை மிதித்த போது வியர்வை ஒரு சொட்டு சைக்கிள் பாரில் மோதியது. புன்னகைத்துக்கொண்டேன். சைக்கிள் பாதையில் கவனமாகத் திரும்பி மேட்டில் ஏறி மிதிக்கும் போது அனிச்சையாக வானத்தைப் பார்த்தேன். ஒரு மேகத்துணுக்கு கூட இல்லை. எங்கும் எங்கெங்கும் நீலம். இன்று நிச்சயம் 28 டிகிரியாகவாது இருக்கும். இங்கிலாந்தின் வேனிர் காலமென்பது பெரும்பாலான நாட்களில் வெறும் வானிலை அறிக்கைத்தாளில்தான். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இரண்டு அல்லது அதிகப் பட்சம் மூன்று வாரங்கள் 28-32 டிகிரி இருக்க…
-
- 1 reply
- 1.9k views
-
-
பொன்மனசசெம்மல் எம்ஜிஆர் அவர்கள் லணடன் வாணெலியில். தமிழீழ மக்களின் நெஞ்சங்களை ஆக்கிரமித்க்குடிகொண்ட மக்கள் திலகத்தின் பேட்டி நன்றி சின்னக்குட்டி பேட்டியைக் கேட்க http://sinnakuddy1.blogspot.com/2010/01/mgr.html
-
- 0 replies
- 1.5k views
-
-
பொப்பி என்பது புனைபெயர் ஷோபாசக்தி பூமியில் ஆதி காலம் முதலே இந்தக் கதை இருக்கிறது. எனினும், பிரெஞ்சு இளைஞனான பேர்னா பப்டிஸ்ட் ஆந்ரே இந்தக் கதைக்குள் பத்து வருடங்களுக்கு முன்புதான் வந்தான். அப்போது, அவனுக்கு இருபத்தாறு வயது. ‘கலே’ நகரத்துக் கடற்கரை வீதியிலுள்ள சின்னஞ் சிறிய ‘வெஸ்டர்ன் யூனியன்’ கிளையின் கூண்டுக்குள் தனியாளாக உட்கார்ந்தவாறே அலுப்பூட்டும் பணியைச் செய்துகொண்டும், நாள் முழுவதும் தனிமையில் உழன்றுகொண்டுமிருந்தான். இந்தக் கதையில் இன்னொரு முதன்மைப் பாத்திரமாக இருக்கும் இளம் பெண்ணுடைய பெயர் பொப்பி. அந்தப் பெண்ணின் உண்மையான பெயர், நாடு, இனம், தாய்மொழி, மதம் போன்ற விவரங்களைச் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தக் கதையில் குறிப்பிட முடியவில்லை. இந்தக் கதைக்காக மட்டு…
-
-
- 1 reply
- 343 views
-