விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7857 topics in this forum
-
அவுஸ்திரேலியாவை சரித்தார் கும்பிளே 9 விக்கெட் இழப்புக்கு 337 ஓட்டங்கள் [27 - December - 2007] [Font Size - A - A - A] இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே நேற்றுப் புதன்கிழமை மெல்போர்னில் ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கை ஓங்கியுள்ளது. அவுஸ்திரேலிய அணி வலுவான நிலையைப் பெறத் தவறிவிட்டது. இந்திய அணிக் கப்டன் அனில் கும்பிளேயின் சுழல் பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி தடுமாறிப்போயுள்ளது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணித் தலைவர் ரிக்கி பொண்டிங் முதலில் துடுப்பெடுத்தாட முடிவெடுத்தார். அவரது தெரிவுக்கேற்ப அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான பில் ஜக்ஸும் மத்யூ ஹைடனும் மிகச் சிறப்பாகத் துடுப்பெடுத்த…
-
- 0 replies
- 1.4k views
-
-
சாம்ஸன் சாதனை சதம்: தென் ஆப்ரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே புரட்டி எடுத்த இந்திய இளம்படை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சஞ்சு சாம்ஸன் பந்தை விளாசுகிறார். எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக சஞ்சு சாம்ஸனின் தொடர்ச்சியான 2வது டி20 சதம், சுழற்பந்துவீச்சாளர்களின் அற்புதமான பந்துவீச்சு ஆகியவற்றால், சொந்த மண்ணிலேயே தென் ஆப்பிரிக்க அணியை முதல் டி20 ஆட்டத்தில் அபாரமாக வென்றது சூர்யகுமார் தலைமையிலான இளம் இந்திய அணி. டர்பன் நகரில் உள்ள கிங்ஸ்மெட் மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. 203…
-
-
- 24 replies
- 1.3k views
- 1 follower
-
-
இலங்கையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடுத்துவதை தவிர்க்க சொல்லியும், நிறவெறியை பின்பற்றிய தென் ஆப்பிரிக்காவை இவ்வாறு கிரிகெட் போட்டியில் இருந்து உலகம் நீக்கியது போல இலங்கை அணியையும் போட்டியில் இருந்து நீக்க சொல்லியும் இந்த கையெழுத்து போராட்டம் வழியாக உலகின் முதன்மையான அணிகளின் அலுவலுகத்திற்கு மின்னஞ்சல் அனுப்புவோம். ஒரு லட்சம் கையெழுத்துக்கள் குவிக்க உறுதி கொள்ளுங்க தோழர்களே… போராட்டம் ஆரம்பிக்கட்டும்… நாம் வெல்வோம்… http://www.eelamwebsite.com/?p=10626 http://www.change.org/petitions/view/boycott_of_sri_lanka_cricket_2011 Muthamizh Chennai
-
- 1 reply
- 1.3k views
-
-
காற்பந்து போட்டியின் இடைநடுவே மாரடைப்பினால் நிலைகுலைந்து வீழ்ந்த பிரபல இங்கிலாந்து காற்பந்து வீரர் பாப்ரிஸ் மும்பா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். போல்டன் வாண்டேர்ஸ் காற்பந்து அணியின் மிட்ஃபீல்டராக களமிறங்கும் 23 வயது இளம் வீரர்... பாப்ரிஸ் மும்பா (Fabrice Mumba). நேற்று FA Cup ற்கான காலிறுதி போட்டியில் டொடென்ஹாமுடன் மோதியது போல்டன் வாண்டர்ஸ். போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த போது இடை நடுவே மைதானத்தில் திடீரென சுருண்டுவீழ்ந்தார் மும்பா. உடனடியாக களத்தில் நுழைந்த மருத்துவர்கள் மும்பாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக உறுதி செய்தனர். முதலுதவியாக மைதானத்தில் வைத்து அவருக்கு அளிக்கபப்ட்ட சிகிச்சை பலனின்றி போக, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்…
-
- 11 replies
- 1.3k views
-
-
மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி அவுஸ்ரேலியா 15 ஓட்டங்களால் வெற்றி! நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை 15 ஓட்டங்களால் அவுஸ்ரேலிய அணி வெற்றிகொண்டது. உலகக் கிண்ணத் தொடரின் 10ஆவது போட்டியில் அவுஸ்ரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. நொற்றிங்கமில் உள்ள ரென்ட் பிரிஜ் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வுசெய்தது. அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி, 49 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றது. அணி சார்பாக, கௌல்ரர் நைல் 92 ஓட்டங்களையும், ஸ…
-
- 2 replies
- 1.3k views
-
-
பங்களாதேஷ் தொடரில் வெற்றி வாகை சூடிய இந்திய வீரர்கள் ஒவ்வொருவரும் தலா 34 இலட்சம் ரூபா அள்ளிச் செல்கின்றனர். சமீபத்தில் பங்களாதேஷ் சென்ற இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றியது. உலகக் கிண்ணத் தோல்விக்குப் பின் வீரர்களுக்கான சம்பள முறையை இந்திய கிரிக்கெட் சபை மாற்றியமைத்தது. வெற்றி அடிப்படையில் ஊக்கத் தொகை, போனஸ் அளிக்கப்படும் என தெரிவித்திருந்தது. இதன்படி பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளில் வென்றதற்கு சம்பளமாக ஒவ்வொரு வீரருக்கும் 3 இலட்சம் ரூபா (ஒரு போட்டிக்கு 1.5 இலட்சம் ரூபா வீதம்) வழங்கப்படும். * ஊக்கத் தொகையாக 5 இலட்சம் ரூபா (வெற்றி பெற்ற இரண்டு போட்டிக்கு ரூபா 2.5 இலட்சம் வீதம்) வழங்கப்படும். விளையாடாத வீரர்கள் இதில் பா…
-
- 3 replies
- 1.3k views
-
-
சங்ககாரா 192 ஓட்டங்களைப் பெற்றபோதும் இலங்கை அணி 96 ஓட்டங்களால் தோல்வி [21 - November - 2007] [Font Size - A - A - A] * தொடரைக் கைப்பற்றியது அவுஸ்திரேலியா இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளிடையே ஹோபேற்றில் நடைபெற்ற 2 ஆவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றதன் மூலம் 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா 2-0 என கைப்பற்றியுள்ளது. பிறிஸ்பேனில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இனிங்ஸாலும் 40 ஓட்டங்களாலும் வெற்றிபெற்றது. 2 ஆவது டெஸ்டின் 4 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் தனது 2 ஆவது இனிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 247 ஓட்டங்களைப் பெற்றிருந்த இலங்கை அணிக்கு 5 ஆம் நாள் ஆரம்பமே மோசமாக அமைந்தது. 4 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 33 ஓட்டங்களுட…
-
- 1 reply
- 1.3k views
-
-
முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்திய கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய சச்சின் தெண்டுல்கர், தோனி ஆகியோரது வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போது 1983-ம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற வரலாறும் திரைப்படமாக உருவாகி வருகிறது. ‘83’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். இந்நிலையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமும் திரைப்படமாக உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் நடி…
-
- 3 replies
- 1.3k views
-
-
2011 உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியா, பாக், இலங்கை, வங்கதேசத்தில் நடக்கிறது டெல்லி: 10வது உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி 2011ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசத்தில் நடைபெறவுள்ளன. 9வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்து முடிந்துள்ளது. அடுத்த போட்டியை ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகியவை இணைந்து நடத்தவுள்ளன. 10வது உலகக் கோப்பைப் போட்டியை நடத்த ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் இணைந்து நடத்த முயன்றன. ஆனால் ஆசிய நாடுகள் இதைத் தட்டிச் சென்று விட்டன. 10வது உலக்க கோப்பைப் போட்டியின் தொடக்க விழா வங்கதேசத்தில் நடைபெறும். மொத்தம் 53 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் இந்தியாவில் 22 போ…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டனாக ஸ்டீவன் ஸ்மித் நியமனம்! ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டனாக ஸ்டீவன் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக இந்த மாத இறுதிவாக்கில் நடைபெறவுள்ள ஒருநாள் போட்டித் தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட ஆஸ்திரேலிய அணி வீரர்களின் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் பேட்ஸ்மேன் ஜோ பர்ன்ஸ் சுழற்பந்துவீச்சாளர் ஆஸ்டன் ஆகர், ஆல்ரவுண்டர் மார்க்கஸ் ஸ்டோயினிஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆரோன் பின்ச்சுக்கு பதிலாக ஜோ பர்ன்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டி முடிந்ததும் மிட்செல் ஜான்சன்,ஹேஸ்லிவுட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்படுகிறது. குடித்து விட்டு வாகனம் ஓட்டி வழக்கில் சிக்கியுள்ள ஃபாக்னர் 4 போட்டிகளில் விளையாடத்…
-
- 0 replies
- 1.3k views
-
-
தற்போதைக்கு ஓய்வுபெறப் போவதில்லை முரளிதரனே எனக்கு முன்னுதாரணம் [03 - January - 2008] [Font Size - A - A - A] *கில்கிறிஸ்ட் கூறுகிறார் `பொக்சிங் தின டெஸ்ட் போட்டிதான் (மெல்போர்ன் டெஸ்ட்) எனது கடைசி டெஸ்ட்டாக இருக்கும்..."இப்படி ஒரு வருடத்திற்கு முன் கூறியவர் `கில்லி' என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் கில்கிறிஸ்ட். இன்றோ தலைகீழ் மாற்றம். `ஓய்வைப் பற்றி இப்போது நினைக்கவே இல்லை'என்கிறார் அவர். 36 வயதாகும் கில்கிறிஸ்ட்,உலகின் தலைசிறந்த விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரராகக் கருதப்படுபவர். அவுஸ்திரேலிய துடுப்பாட்டத்தின் அதிரடி மையமாக இருப்பவர். ஆனால், `உங்களுக்கு வயதாகிறதே... எப்போது ஓய்வு பெறப்போகிறீர்கள்?' என்ற கேள்வி `கில்லி'யை தொட…
-
- 0 replies
- 1.3k views
-
-
கங்குலி Vs சேப்பல் அத்தியாயம் எங்கு தொடங்கியது? ஒரு கிரவுண்ட்ல ஒரு தாதா! சவுரவ் கங்குலி தாதா ஆன கதை பாகம் 1 #ACenturyIsNotEnough "ஐந்து ஆண்டுகள் இந்த அணியின் கேப்டனாக இருந்திருக்கிறேன். செங்கல் செங்கலாக இந்த அணியை உருவாக்கியிருக்கிறேன். என்னுடைய பேட்டிங் பொசிஷன்களை விட்டுக்கொடுத்திருக்கிறேன். இந்திய வீரர்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காக எதிரணி கேப்டன்களோடு சண்டையிட்டிருக்கிறேன். இந்திய அணியை சுமார் 200 போட்டிகளில் வழிநடத்தியுள்ளேன். ஆனால், இப்போது திடீரென்று அணியைச் சீரழிப்பவனாக மாறிவிட்டேனா...?" - இது கங்குலியின் ஆதங்கம். இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய ஆளுமை, எதற்கும் அடங்காத அந்த வங்கப்புலி, சரத் பவார் சொன்ன வார்த்தைகளால் ஆட…
-
- 2 replies
- 1.3k views
-
-
-
- 2 replies
- 1.3k views
-
-
நான் கடவுளில்லை; ரசிகர்கள் எனது காலில் விழுவது வருத்தமளிக்கும் செயல் என்கிறார் டெண்டுல்கர் [21 - February - 2009] தன்னைக் கடவுளாக நினைத்து ரசிகர்கள் காலில் விழுந்து வணங்கும் போது தர்மசங்கடமான நிலை ஏற்படுவதாக மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர் கிரிகெட் அரங்கில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இவர் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தவுள்ளார். தனது கிரிக்கெட் வாழ்க்கை, அனுபவங்கள், எதிர்காலத்திட்டம் குறித்தும் சச்சின் அளித்த பேட்டி; கிரிக்கெட் ரசிகர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஒரு சில சமயங்களில் ரசிகர்களின் செயல் வருத்தமளிப்பதாக உள்ளது. சிலர் நீ…
-
- 2 replies
- 1.3k views
-
-
விஸ்வரூபமெடுத்த ரிஷப் பன்ட்.. இதுவரை கடந்து வந்த பாதை! #RishabhPant குஜராத் லயன்ஸ் Vs டெல்லி டேர் டெவில்ஸ். நேற்றைக்கு நடந்த அந்தப் போட்டி, ஐ.பி.எல் சீசனின் 42வது போட்டி. முன்னதாக ஆடிய குஜராத் லயன்ஸ் அணி 208 ரன்கள் எடுத்திருந்தது. ஓவருக்கு 10 ரன் வேண்டும் என்ற நிலையில் சேஸ் செய்ய களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு, மூன்றாவது ஒவரில் இடியாக கருண் நாயர் விக்கெட். ஸ்கோர் 24/1. 3வது ஓவரின் கடைசி பந்துக்கு இறங்குகிறார் ரிஷப் பன்ட். லெக் பையில் ஒரு ரன் எடுத்து அடுத்த ஓவரை எதிர்கொள்கிறார். நான்காவது ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்குத் தெறிக்க விடுகிறார். ஐந்தாவது ஓவரின் முதல் மூன்று பந்துகள் 6,6,4. அதன்பிறகு ஒவ்வொரு அடியும் அதிரடியாகப் ப…
-
- 3 replies
- 1.3k views
-
-
அவுஸ்திரேலியாவிற்குப் பயணமாகின்றார் இலங்கையின் வலைப்பந்தாட்ட நட்சத்திரம் சிவலிங்கம் தர்ஜினி Tharjini Sivalingam (Seylan Bank) - Best Shooter(Mercantile Netball League 2016) இலங்கையின் வலைபந்தாட்ட நட்சத்திரம் சிவலிங்கம் தர்ஜினி அவுஸ்திரேலியாவின் முன்னனி கழக அணியான சிற்றி வெஸ்ட் ஃபெல்கொன் அணிக்கு விளையாடுவதற்காக ஆறு மாதகால ஒப்பந்த அடிப்படையில் நாளை (17.04.2017) அவுஸ்திரேலியா நோக்கி பயணமாகின்றார். யாழ்ப்பாணம் ஈவினையைப் பிறப்பிடமாகக் கொண்ட தர்ஜினி, தனது பள்ளிக்கல்வியை வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தில் பெற்றுக்கொண்ட இவர் அதனை தொடர்ந்து கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு நுழைந்தார். அங்கு வலைப்பந்தாட்ட…
-
- 4 replies
- 1.3k views
-
-
40 சிக்ஸர்கள், 307 ரன்கள் விளாசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்: உள்ளூர் போட்டியில் சாதனை ஜோஷ் டன்ஸ்டன் | படம்: ட்விட்டர் பகிர்விலிருந்து ஆஸ்திரேலியாவில் அகஸ்டா துறைமுக கிரிக்கெட் சங்கம் நடத்திய உள்ளூர் போட்டி ஒன்றில் ஜோஷ் டன்ஸ்டன் என்ற கிரிக்கெட் வீரர் 307 ரன்களைக் அதிரடியாக குவித்துள்ளார். இதில் அவர் மட்டுமே 40 சிக்ஸர்கள் விளாசியதுதான் ஆட்டத்தின் முக்கிய அம்சம். வெஸ்ட் அகஸ்டா அணிக்கும், செண்ட்ரல் ஸ்டெர்லிங் அணிக்கும் இடையே சனிக்கிழமை அன்று ஒருநாள் போட்டி நடைபெற்றது. அணிக்கு 35 ஓவர்கள் வீதம் நடந்த இந்தப் போட்டியில் வெஸ்ட் அகஸ்டா அணி முதலில் ஆடியது. அணியின் முதல் விக்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
பார்த்திவ் படேலை உங்களுக்கு நினைவிருக்கிறதா? பதினாறே வயதில் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உலகக் கோப்பை வரை போனாரே... அவர்தான். அணியில் இருந்து சில நாட்களில் நீக்கப்பட்டாலும் குறுகிய காலத்திலேயே நிறைய பணம் சேர்த்து கவலையில்லாமல் வசதியாக இருக்கிறார் பார்த்திவ். ஆனால், இதற்கு நேர்மாறான நிலையில், தமிழக விளையாட்டு வீரர் ஒருவர் இருக்கிறார். வியாசர்பாடியை அடுத்த கல்யாணபுரத்தைச் சேர்ந்த இந்த வீரரின் பெயர் அகஸ்டின். 17 வயதுக்கு உட்பட்ட இந்தியக் கால்பந்து அணியின் கோல்கீப்பர், பல போட்டிகளில், எதிரணியின் பந்துகளைத் தடுத்து இந்தியாவை வெற்றிபெறச் செய்யும் இந்த வீரர், வாழ்க்கையை நடத்த என்ன செய்கிறார் தெரியுமா? வியாசர்பாடியில் ரயில்களில் வரும் சர…
-
- 0 replies
- 1.3k views
-
-
இந்தியா - இங்கிலாந்து 20 ஓவர் போட்டி கண்ணோட்டம் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 20 ஓவர் போட்டிகள் பற்றி சில கண்ணோட்டங்களை பார்ப்போம். இரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் முதல் முறையாக 2007-ல் மோதின. தென்ஆப்பிரிக்காவில் நடந்த உலககோப்பையில் இந்தியா 18 ரன்னில் வெற்றி பெற்றது. இரு அணிகளும் இதுவரை 8 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 3 ஆட்டத்திலும், இங்கிலாந்து 5 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய அணி 2007-ல் டர்பன் மைதானத்தில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன் குவித்ததே இங்கிலாந்துக்கு எதிரான அதிகபட்ச ஸ்கோராகும். அந்த அணி அதிகபட்சமாக 6 விக்கெட…
-
- 22 replies
- 1.3k views
-
-
சிலம்பம் சிலம்பம், தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகவும், பண்பாட்டு சின்னமாகவும் கலாசார புதையலாகவும் விளங்குகிறது. "சிலம்பம்' என்ற சொல் "சிலம்பல்' என்ற வினையின் அடியாகப் பிறந்தது. "சிலம்பல்' என்ற வினைச் சொல்லுக்கு "ஒலித்தல்' என்பது பொருள். மலைப் பகுதிகளில் அருவி விழும் ஓசை, பறவைகளின் கீச்சொலி, மரங்களின் இலைகள் காற்றில் அசையும் ஓசை, மிருகங்களின் இரைச்சல் போன்ற நாலாவித ஓசைகள் ஒலித்துக் கொண்டே இருப்பதால் மலைக்கு, "சிலம்பம்' என்ற பெயருண்டு.எனவே, மலை நிலக் கடவுளான முருகனுக்கும், "சிலம்பன்' என்ற பெயருண்டு. கம்பு சுழலும் போது ஏற்படும் ஓசை மற்றும் ஆயுதங்கள் ஒன்றோடொன்று மோதும் ஓசை போன்ற காரணங்களால், தமிழரின் தற்காப்புக் கலைக்கு "சிலம்பம்' என்ற பெயர் ஏற்பட்டது. நெல்லை மாவட்…
-
- 1 reply
- 1.3k views
-
-
சிங்கள கிரிக்கெட்டு வீரர்களின் அசத்தலான ஆட்டங்கள்... அரவிந்த டி சில்வா ரொம்ப பிடிக்கும்.... எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது 50 கிந்திய கூட்டமைப்பு சுந்திர தின கோப்பை அன்று அதன் பிறகு நடந்த ஆசிய கோப்பை என அனைத்திலும் வெளுத்து வாங்கினார் சுருக்கமாம சொன்னால் இவர் இன்னோரு நங்கூரம் அதாவது டிராவிட்.... ஏனோ அந்த காணோளிகள் கிடைக்கவில்லை... கிடைத்தவுடன் இணைப்பேன்... அவர் ஆப் சைடில் இரு கால்களையும் உள்ளே வாங்கி அடிக்கும் விதமே தனி அழகு....
-
- 14 replies
- 1.3k views
-
-
அரோகரா! மீண்டும் மண் கவ்வியது இலங்கை அணி!! International Triangular Series: Australia v Sri Lanka 14-02-2006 at Brisbane Australia beat Sri Lanka by 9 wickets Sri Lanka won the toss and decided to bat Sri Lanka Innings 266 for 9 (50.0 overs) Australia Innings 267 for 1 (45.3 overs) இலங்கை அணிக்கு எமது வாழ்த்துக்கள்! தொடர்ந்து இதே மாதிரியான தோல்விகளை சந்திக்க எல்லா வல்ல ஈழ்பதீஸானை பிராத்திக்கிறேன்! :smile2:
-
- 0 replies
- 1.3k views
-
-
ஒலிம்பிக்கில்... வெல்லாத, வட கொரியா வீரர்களுக்கு கூலி வேலை.. ரேஷன் கார்டுகளும் பறிமுதல்! அதிபர் ஆவேசம்? பியோங்யாங்: ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வட கொரியா வீரர்களின் ரேஷன் கார்டுகளை பிடுங்கி வைத்துக்கொள்ளவும், அவர்களை சுரங்க தொழிலுக்கு கூலி வேலை செய்ய அனுப்பவும் அந்த நாட்டு சர்வாதிகார அதிபர் கிம் ஜோங் உன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், 2 தங்க பதக்கங்கள் உட்பட மொத்தம் 7 பதக்கங்களை வட கொரியா வென்றுள்ளது. அதேநேரம், வட கொரியாவின் பரம எதிரி நாடான தென் கொரியாவோ, 9 தங்கம் உட்ட 21 பதக்கங்களை வேட்டையாடியுள்ளது. 5 தங்க பதக்கங்களையாவது வெல்ல வேண்டும் என அதிபர் 'உத்தரவிட்டு' அனுப்பியிருந்த நிலையில், அதைவிட குறைந்த தங்கம் ப…
-
- 5 replies
- 1.3k views
- 1 follower
-
-
தென் ஆபிரிக்காவை வீழ்த்தி இரண்டாவது தடவையாக ரி20 உலக சம்பியனானது இந்தியா 29 JUN, 2024 | 11:51 PM (நெவில் அன்தனி) பார்படொஸ், ப்றிஜ்டவுன் கென்சிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் கடைசிவரை மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்காவை 7 ஓட்டங்களால் வெற்றிகொண்ட இந்தியா ரி20 உலகக் கிண்ணத்தை 2ஆவது தடவையாக சுவீகரித்தது. தென் ஆபிரிக்காவில் 2007இல் நடைபெற்ற அங்குரார்ப்பண ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் எம்.ஸ். தோனி தலைமையில் சம்பியனான இந்தியா இப்போது 17 வருடங்களின் பின்னர் ரோஹித் ஷர்மாவின் தலைமையில் இரண்டாவது தடவையாக உலக சம்பியனானது. இந்த இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்காவுக்க…
-
-
- 7 replies
- 1.3k views
- 1 follower
-
-
கலக்க காத்திருக்கும் கோல்கீப்பர் : வயசு 16....மதிப்பு 12ஆயிரம் கோடி? பதினாறு வயசுல நாம என்ன செஞ்சிட்டு இருந்திருப்போம்? மாங்கு மாங்குனு பத்தாம் கிளாஸ் தேர்வுக்கு படிச்சிட்டு இருப்போம். இல்ல தெருவுல கிரிக்கெட் விளையாடிட்டு இருந்துருப்போம். கொடி நாளுக்கு 5 ரூபாய் கொடுங்கனு ஸ்கூல்ல கேட்டா, அதுக்கே அம்மாகிட்டயும் அப்பாகிட்டயும் போய் நிப்போம். ஆனால் இத்தாலியைச் சார்ந்த கோல்கீப்பரான 16 வயதே நிரம்பிய கியான்லூகி டொன்னருமாவுடைய மதிப்பு இப்பொழுது 170 மில்லியன் யூராக்களாம் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 12ஆயிரம் கோடி). இவரை இத்தாலி அணியின் கேப்டனும் உலகின் தலைசிறந்த கோல்கீப்பர்களுள் ஒருவருமான பஃப்னோடு ஒப்பிட்டுக் கொண்டாடுகின்றனர் இத்தாலி ரசிகர்கள். யாரு …
-
- 0 replies
- 1.3k views
-