விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7839 topics in this forum
-
அணித்தலைவர் ஸ்மித் சதம் ; வலுவான நிலையில் ஆஸி அவுஸ்திரேலியா மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி 39 ஓவர்கள் நறைவில் 4 விக்கட்டுகளை இழந்து 206 ஓட்டங்களை பெற்றுள்ளது. அவுஸ்திரேலிய அணி சார்பில் அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 103 ஓட்டங்களையும், டிராவிஷ் ஹெட் 48 ஓட்டங்களையும் பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றனர். பந்து வீச்சில் நியுஸிலாந்து அணி சார்பில் நீஸம், பெர்கஷன் மற்றும் ஹென்றி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளனர். http://www.virakesari.lk/article/14137
-
- 4 replies
- 491 views
-
-
ரொனால்டோ ஹாட்ரிக் கோல்! அரை இறுதியில் ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியின் கால்இறுதியில், பேயர்ன் முனிச் அணியை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது, ரியல் மாட்ரிட் அணி. வெவ்வேறு லீக் போட்டிகளில் வென்ற அணிகளைத் தேர்வுசெய்து, சாம்பியன்ஸ் லீக் கோப்பைப் போட்டிகள் நடத்தப்பட்டுவருகின்றன. தகுதிச் சுற்றுகள் முடிந்துள்ள நிலையில், கால்இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணியும் பேயர்ன் முனிச் அணியும் மோதின. முதல் கால்இறுதிப் போட்டியில் 2-1 என்ற கணக்கில் ரியல் மாட்ரிட் வென்றதால், இந்தப் போட்டியில் பேயர்ன் அணி கூடுதலாக இரண்டு கோல்கள் அடிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனிடையே, நள்ளிரவு நடந்த போட்டியில் இரு அணிகளும் மோதின. …
-
- 4 replies
- 237 views
-
-
மீண்டும் சாதனை படைத்தார் அனித்தா வட மாகாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன் கோலூன்றிப் பாய்தலில் 3.48 மீற்றர் உயரத்தைத் தாவி மீண்டும் தேசிய சாதனை படைத்துள்ளார். அவர் இவ்வருடத்தில் மாத்திரம் தொடர்ச்சியாக 4 ஆவது முறையாகவும் தேசிய சாதனையை முறியடித்த வீராங்கனையாக வரலாற்றில் இடம்பிடித்தார். விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறைத் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள 43 ஆவது தேசிய விளையாட்டு பெருவிழாவின் மெய்வல்லுனர் போட்டிகள் இன்று காலை மாத்தறை, கொடவில விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகின. போட்டிகளின் முதல் நாளான இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன் 3.4…
-
- 4 replies
- 1.7k views
-
-
தடுமாற்றத்துடன் ஆரம்பித்தாலும் ஸ்திரமான நிலையை அடைந்தது இங்கிலாந்து இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 91 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 321 ஓட்டங்களை குவித்து ஸ்திரமான நிலையை அடைந்தது. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று காலை 10:30 மணிக்கு காலியில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஆரம்ப வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும் மத்திய தர வீர்களின் நிதானமான துடுப்பாட்டம் காரணாக முதலாம் நாள் ஆ…
-
- 4 replies
- 1.4k views
-
-
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற 13 வயதுடய ஜப்பானிய வீராங்கனை திங்கட்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான முதல் ஒலிம்பிக் ஸ்கேட்போர்ட் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த மோமிஜி நிஷியா வெற்றி பெற்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் மூலம் அறிமுகமான "ஸ்கேட்போர்ட்டிங்" விளையாட்டின் முதலாவது தங்கப்பதக்கத்தை ஜப்பான் நாட்டின் இளம் வீரர் யூட்டோ ஹொரிகோம் வென்ற ஒரு நாள் கழித்து, ஒசாக்காவைச் சேர்ந்த 13 வயதுடைய நிஷியா ஜப்பானுக்கு மீண்டும் தங்க பதக்கம் பெற்றுக் கொடுத்துள்ளார். நிஷியா 15.26 மதிப்பெண்களுடன் தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு ஜப்பானிய வீராங்கனையான 16 வயதுடைய ஃபூனா நகயாமா 14.49 மதிப் பெண்களுடன் வெண்கலப் பதக்கம் வென்றார். அதேநேரம் பிரேசில் நாட்டைச் சேர்ந்த 13 வயதான ரெய்…
-
- 4 replies
- 723 views
-
-
இந்திய வீரர் ஜடேஜாவுடன் மோதிய அண்டர்சனுக்கு எதிராக ஐ.சி.சி. விசாரணை இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் ஜேம்ஸ் அண்டர்சன், வீரர்களுக்கான ஐ.சி.சியின் ஒழுக்க விதிகளை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். இந்திய அணியுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது ரவீந்திர ஜடேஜாவுடன் ஜேம்ஸ் அண்டர்சன் மோதலில் ஈடுபட்டமையே இதற்குக் காரணம். இங்கிலாந்தின் நொட்டிங்ஹாம் நகில் நடந்த இப்போட்டியின் இரண்டாவது நாளான கடந்த வியாழனன்று மதிய உணவு இடைவேளைக்காக வீரர்கள் மைதானத்திலிருந்து வெளியேறியபோது, ஜடேஜாவை ஜேம்ஸ் அண்டர்சன் திட்டியதுடன் தள்ளிவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் வீரர்களுக்கான ஐ.சி.சி. ஒழுக்கக் கோவையின் 2.3.3. விதியை அண்டர்சன் மீறியுள்ளாரென குற்றச்சாட்டு பதிவு செய்ய…
-
- 4 replies
- 615 views
-
-
நோர்வே தமிழ் விளையாட்டு கழகத்தினரால் நாடாத்தப்பட்டுக் கொண்டிரிக்கின்ற ஐவருக்கான கரைப்பந்தாட்ட சுற்றுபோட்டில்யில் கலந்துகொண்டு சிறப்பிக்கும் சில விளையாட்டு வீரர்களை இங்கே இணைக்கப்பட்டுள்ள படங்களில் காணலாம். எனது நண்பர் ஒருவர் ஈ மைல் மூலம் அனுப்பியுள்ள படங்களைத்தான் இங்கே இணைத்துள்ளேன். படங்களின் ஒளித்தரம் சற்று தெளிவின்றி உள்ளது. வரும்காலங்களில் ஒளித்தரம் கூடிய படங்களை தந்துதவுவார் எனும் நம்பிக்கையுடன். உங்கள் பார்வைக்கு விளையாட்டு வீரர்களின் அபார விளையாட்டில் இருந்து சில படங்கள்.
-
- 4 replies
- 2.1k views
-
-
Angelo Davis Mathewsஇவர் தமிழரா? இப்ப அவுஸ்ரேலியா தொலைக்காட்சி சேவையில் இவர் தமிழர் என்று கூறினார்கள் ...இது உண்மையா? கள உறவுகளே உங்களுக்கு இது பற்றி எதாவது தெரியுமா?
-
- 4 replies
- 871 views
-
-
கிறிஸ் கெய்ல் தனது ஆணுறுப்பை காண்பித்ததால் குழந்தை போன்று கதறி அழுதேன் – மேற்கிந்திய அணியின் முன்னாள் மசாஜ் ஊழியர் நீதிமன்றில் சாட்சியம் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் தனது ஆணுறுப்பை தன்னிடம் காண்பித்தபோது தான் குழந்தை போன்று கதறி அழுததாக அவ்வணியின் பெண் மசாஜ் ஊழியராக பணியாற்றிய யுவதி ஒருவர் நேற்று முன்தினம் தெரிவித்தார். லியனே ரஸல் எனும் இந்த யுவதி, அவுஸ்திரேலிய நீதிமன்றமொன்றில் நடைபெறும் வழக்கு விசாரணையில் சாட்சிமளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் ஒருநாள் சர்வதேச உலக கிண்ணப் போட்டிகள் நடை பெற்றபோது மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியினருக்கான மசாஜ் ஊழியராக பணி யாற்றியவர் லியன…
-
- 4 replies
- 557 views
-
-
இந்திய அணியில் யுவராஜ் சிங் இடம்பெறாததற்குக் காரணம் கேப்டன் தோனியே என்று ஏற்கெனவே கடுமையாகப் பேசி சர்ச்சையைக் கிளப்பிய யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங், மீண்டும் தோனி மீது பாய்ந்துள்ளார். இந்தி செய்தி சானல் ஒன்றிற்கு பேட்டி அளித்த யோக்ராஜ் சிங், “தோனி ஒன்றுமில்லாதவர், அவர் ஒன்றுமேயில்லை. ஊடகங்களினால் அவர் கிரிக்கெட் கடவுள் ஆகியிருக்கிறார். ஊடகங்கள் அவரை மிகப்பெரிய வீரர் என்று ஊதிப் பெருக்கியது, ஆனால் இத்தகைய பெருமைக்கு அவர் தகுதியானவர் அல்ல. அவர் ஒன்றுமே இல்லாத காலங்கள் இருந்தன, ஆனால் இன்று ஊடகங்களின் முன்னால் அமர்ந்து ஊடக நிருபர்களையே கேலியும் கிண்டலும் செய்கிறார். அவருக்கு துதிபாடிய ஒரு பத்திரிகையாளரையே கேலி செய்கிறார். அவர் ஒரு ரன் எடுத்தால் கைதட்டும் இந்திய ரசிகர்…
-
- 4 replies
- 891 views
-
-
திருமண பந்தத்தில் இணைந்தார் இந்திய வீரர் பும்ரா இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இன்று திங்கட்கிழமை திருமண பந்தத்தில் இணைந்தார். பும்ரா - மொடல் அழகியும் தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான சஞ்சனா கணேசன் என்பவரை திருமணம் செய்துள்ளார். இருவரதும் திருமண நிகழ்வு இன்றையதினம் கோவாவில் இடம்பெற்றது. மட்டுப்படுத்தப்பட்ட விருந்தினர்களுடன் குறித்த திருமணம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருவருக்குமிடையில் திருமணம் இடம்பெற்றதையடுத்து முதலாவது படத்தை பும்ரா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/102169
-
- 4 replies
- 1k views
-
-
16 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு உயரம் பாய்தல்: மன்னார் மாணவன் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு! மன்னார்- உயிர்த்தராசன்குளம் றோ.க.த.க பாடசாலை மாணவன் சி.விஜய், 16 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு உயரம் பாய்தலில் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளார். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வடமாகாண மட்ட மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியில் வெற்றிபெற்று, தேசிய மட்ட போட்டிக்கு தெரிவானார். பயிற்றுவிப்பாளர் திரு.ஆ.கு.ரொசேன் செரூபா பீரிஸ், பாடசாலையின் அதிபர் வு.ஆனந்தன் மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் மற்றும் விளையாட்டுத்துறை பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஆகியோர், தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ள மாணவன் சி.விஜய் வாழ்த்த…
-
- 4 replies
- 729 views
-
-
பிரேசிலுக்கு தீராத் துயரம்: நெதர்லாந்துக்கு உலகக் கோப்பை 3-ம் இடம் அரையிறுதிப் படுதோல்வி நினைவுகளும், காயங்களுமே மறையாதிருக்கும் வேளையில், பிரேசில் அணி அடுத்த அடியைச் சந்தித்தது. உலகக் கோப்பைக் கால்பந்துத் தொடரின் 3ஆம் இடத்திற்கான ஆட்டத்திலும் பிரேசில் அணி படுதோல்வியைச் சந்தித்தது. பிரேசிலியாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நெதர்லாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை ஊதித் தள்ளியது. இந்த முறை அந்த நாட்டின் கால்பந்து ஹீரோ நெய்மார் ஆட்டத்தைப் பார்க்க மைதானத்திற்கு வந்தார். அவர் கண்ணெதிரே இந்த அவலத் தோல்வி ஏற்பட்டுள்ளது பிரேசில் அணிக்கு. அன்று டிஃபென்சில் ஏற்பட்ட இடைவெளி இன்னும் மறையவில்லை. ஆட்டம் தொடங்கி 3-வது நிமிடத்திற்குள் நெதர்லாந்து அபாய வீரர் வான் பெர்சி ப…
-
- 4 replies
- 962 views
-
-
Published By: RAJEEBAN 04 JUN, 2023 | 11:16 AM இலங்கை ஆசிய கிண்ணப் போட்டிகளை நடத்துவதற்கு முன்வந்ததால் சீற்றமடைந்த பாக்கிஸ்தானின் கிரிக்கெட் சபை இலங்கையில் ஒருநாள் போட்டிகளில் விளையாட மறுத்துள்ளது. பாக்கிஸ்தானில் ஹைபர்மொடல் அடிப்படையில் நான்கு ஆசிய கிண்ணப்போட்டிகளை நடத்த வேண்டும் என பாக்கிஸ்தான் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் அனைத்து போட்டிகளையும் நடத்துவதற்கு இலங்கை முன்வந்துள்ளதை தொடர்ந்து பாக்கிஸ்தான் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைகளிற்கு இடையிலான உறவுகள் பாதிப்படைந்துள்ளன. இலங்கையில் அடுத்தமாதம் பாக்கிஸ்தான் சில ஒருநாள்போட்டிகளில் விளையாடுவதற்கான யோசனையை பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்ப…
-
- 4 replies
- 399 views
- 1 follower
-
-
அவுஸ்த்திரேலியாவுக்கும் தென்னாபிரிக்காவிற்குமிடையிலாந் தெஸ்த் போட்டி நடந்து வருவது தெரிந்ததே. இதுவரை நடைபெற்ற இரு போட்டிகளில் இவ்விரு அணிகளும் தலா ஒரு வெற்றியை ஈட்டியிருக்கின்றன. அவுஸ்த்திரேலிய அணி விளையாடும் போட்டிகளில் ஏதாவது ஒரு வழியில் கான்ரவேர்ஸி, அதாவது பிணக்க்ய்கள் ஏற்படுவதை அவ்வணி வழக்கமாக வைத்திருக்கிறது. எதிரணி வீரர்களை தமது கிண்டலான வார்த்தைகளால் உசுப்பேற்றி, அவர்களின் கவனத்தை சிதைத்து, பின்னர் இலகுவாக அவர்களை ஆட்டமிழக்கச் செய்வதில் ஆஸ்த்திரேலியர்கள் சூரர்கள். பல வருடங்களாக அவுஸ்த்திரேலிய அணியுல் விளையாடிய பல நசத்திரங்கள் இதை ஒப்புக்கொண்டுள்ளதோடு, அதுவும் ஒரு விளையாட்டு உத்திதான் , முடிந்தால் நீங்களும் செய்துபாருங்கள் என்று மற்றைய அணிகளைக் கிண்டலடித…
-
- 4 replies
- 306 views
-
-
பாகிஸ்தான் சுப்பர் லீக்: பெஷாவாரில் அப்ரிடி, லாகூரில் கெயில் பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் தொடருக்கான வீரர் தெரிவு, இன்று இடம்பெற்றது. இதில், கராச்சி கிங்ஸ், லாகூர் கலான்டர்ஸ், பெஷாவார் ஸல்மி, இஸ்லாமாபாத் யுனைட்டட், குவேட்டா கிளாடியேற்றர்ஸ் ஆகிய 5 அணிகளும், தங்களுக்கான வீரர்களைத் தெரிவுசெய்தன. இதன்படி, பெஷாவார் அணி சார்பாக ஷகிட் அப்ரிடியும் லாகூர் அணி சார்பாக கிறிஸ் கெயிலும் குவேட்டா அணி சார்பாக கெவின் பீற்றர்சனும் இஸ்லாமாபாத் அணி சார்பாக ஷேன் வொற்சனும் தெரிவுசெய்யப்பட்டனர். தெரிவுசெய்யப்பட்ட ஏனைய வீரர்களின் விவரம்: கராச்சி கிங்ஸ்: ஷொய்ப் மலிக், ஷகிப் அல் ஹசன், சொஹைல் தன்வீர், இ…
-
- 4 replies
- 336 views
-
-
இங்கிலாந்து - தென் ஆப்ரிக்கா இன்று பலப்பரீட்சை இங்கிலாந்து - தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இப்போட்டியில் வென்று தொடரை சமன் செய்யும் முயற்சியில் தென் ஆப்ரிக்க அணி உள்ளது. தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே இதுவரை நடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி 2 போட்டிகளிலும், தென் ஆப்ரிக்க அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் 4-வது டெஸ்ட் போட்டி இன்று மான்செஸ்டர் நகரில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றும் முயற்சியில் இங்கிலாந்து அணியும், தொடரை சமன்…
-
- 4 replies
- 614 views
-
-
24 NOV, 2023 | 05:48 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) பம்பலப்பிட்டி இந்து கல்லூரி மாணவனான செல்வசேகரன் ரிஷியுதன் 9.4 ஓவர்கள் பந்து வீசி ஓட்டம் எதனையும் விட்டுக்கொடுக்காமல் 8 விக்கெட்டுக்களை சாய்த்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துக்கொடுத்துள்ளார். 13 வயதுக்குட்பட்ட (ஏ) டிவிஷன் -2 கிரிக்கெட் தொடர் - 2023இன் கொழும்பு - 04 பம்பலப்பிட்டி இந்து கல்லூரி அணிக்கும், பத்தரமுல்லை ஜயவர்தன மகா வித்தியாலய அணிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி முல்லேரியா எதிரிவீர சரத்சந்திரா விளையாட்டு மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை (23) நடைபெற்றது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பம்பலப்பிட்டி அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 126 ஓட்டங்களை ப…
-
- 4 replies
- 568 views
- 1 follower
-
-
முழு மாரத்தான் (Full Marathon) எனப்படும் 42 கிலோ மீட்டர் தொலைவை 2 மணி நேரத்திற்குள் முடித்து கென்ய வீரர் எலியூத் கிப்சோக் (Eliud Kipchoge) சாதனை படைத்துள்ளார். மாரத்தான் வரலாற்றில் இது யாரும் செய்யாத சாதனையாக உள்ளது. இதனை எலியூத்தின் மனைவி, 3 குழந்தைகள் நேரில் பார்த்து அவரை உற்சாகமூட்டினர் 42 கிலோ மீட்டர் தூர முழு மாரத்தானை கென்யாவை சேர்ந்த பிரபல மாரத்தான் வீரர் எலியூத் கிப்சோக் 2 மணி நேரத்திற்குள்ளாக ஓடி முடித்து வரலாற்று சாதனையை படைத்துள்ளார். மொத்தம் 1 மணி 59 நிமிடம் 40.2 வினாடிகளில் அவர் 42 கிலோ மீட்டரை ஓடி முடித்தார். இது இதுவரையில் யாரும் செய்யாத சாதனையாக உள்ளது. 34 வயதாகும் அவர் இதே முழு மாரத்தானை 2018 - ல் ஜெர்மனியின் பெர்லினில் 2 மணி நேரம் …
-
- 4 replies
- 747 views
-
-
ஆரம்பமானது வடமாகாண விளையாட்டுப் போட்டி வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில், வட மாகாண பாடசாலைகளின் வீர, வீராங்கனைகளுக்கிடையிலான தடகள மற்றும் மைதான நிகழ்வுகள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (14) முதல் ஆரம்பமாகியது. இன்றை ஆரம்ப நிகழ்வு வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டு திணைக்களத்தின் செயலாளர் ஆர்.இரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக இந்திய துணைத்தூதர் ஆ.நடராஜன் கலந்துகொண்டார். இந்த விளையாட்டுப் போட்டி எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. ஐந்து நாட்களிலும் 258 மைதான மற்றும் தடகள போட்டிகள் நடத்தப்பட…
-
- 4 replies
- 1.7k views
-
-
கோப்பை வென்றது பார்சிலோனா: சாம்பியன்ஸ் லீக்கில் அசத்தல் பெர்லின்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி கோப்பை வென்றது. பைனலில் ஜூவான்டஸ் அணியை வீழ்த்தியது. ஐரோப்பாவில் உள்ள கால்பந்து கிளப் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் ஆண்டுதோறும் நடக்கும். பெர்லினில் நடந்த 2014–15 சீசனுக்கான பைனலில் பார்சிலோனா, ஜூவான்டஸ் அணிகள் மோதின. போட்டியின் 4வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் ரேக்டிக் ஒரு கோல் அடித்தார். முதல் பாதியில் எதிரணியால் இதற்கு பதிலடி தர முடியவில்லை. இரண்டாவது பாதியில் ஜூவான்டஸ் அணிக்கு மொராட்டா (55வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். சாரஸ் (68) ஒரு கோல் அடித்து பார்சிலோனா அணியை வலுப்படுத்தினார். தொடர்ந்து அசத்திய பார்சிலோனா அணிக்கு ந…
-
- 4 replies
- 792 views
-
-
பாக்.எதிரான ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியா திணறல் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 78 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது. பிரிஸ்பென்: ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் 5 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றன. இதன் முதல் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் 7 ரன்னிலும், கேப்டன் சுமித் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள். அதன்பின் கிறிஸ்லீன் (16), ஹேட் (39), மிஷ்சேல் மார்ஷ் (4) ஆகியோர் அ…
-
- 4 replies
- 1.4k views
-
-
கிரிக்கெட் வரலாற்றில் பார்த்திடாத முறையில் அவுட்..! சொந்த அணி வீரரால் ஆட்டமிழந்த வீரர் வைரலாகும் வீடியோ இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. இந்த நிலையில் லீட்சில் நேற்று தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்திருந்தது. டேரில் மிட்செல் 78 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் டாம் பிளன்டெல் 45 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து வீரர் ஹென்ரி நிகோல்ஸ் ஆட்டமிழந்த வீடியோ தற்போது இணையத…
-
- 4 replies
- 428 views
-
-
மலேசிய பைக் பந்தயத்தில் விபத்தில் இத்தாலி வீரர் பலி. மலேசியாவில் நடந்த பைக் பந்தய விபத்தில் இத்தாலி வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். ஏராளமான ரசிகர்கள் மத்தியில் நடந்த இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மலேசியாவின் செபாங்க் நகரில் மலேசியன் கிராண்ட் பிரிக்ஸ் பைக் பந்தயம் நேற்று(ஞாயிறு) நடந்தது. உலகின் முன்னணி வீரர்கள் பலர் பங்கேற்றனர். போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் அரங்கத்தில் கூடியிருந்தனர். 21 சுற்றுகள் கொண்ட இப்போட்டி விறுவிறுப்புடன் தொடங்கியது. வீரர்கள் அசுர வேகத்தில் பைக்கில் பறந்தனர். 2ஆவது சுற்றின் போது, இத்தாலி வீரரான ஹோண்டா அணியின் சைமன்செல்லி, யமஹா அணியின் காலின் எட்வர்ட்ஸ், வலன்டினோ ரோஸி ஆகியோரை முந்திச் செல்ல முயன்றார். அப்போது, எதிர…
-
- 4 replies
- 1.1k views
-
-
அதிரடி மாற்றங்களுடன் களமிறங்குகிறது இலங்கை இலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான முதலாவது டி20 போட்டி நாளை (06) கண்டி பல்லேகலை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் போட்டியில் இலங்கை அணி பல மாற்றங்களுடன் களமிறங்குகிறது. இலங்கை அணியின் டி20 குழாமின் விபரம் இதோ... 1.குசால் ஜனித் பெரேரா 2.குசால் மெண்டிஸ் 3.தினேஸ் சந்திமால் (அணித் தலைவர்) 4.திலகரட்ன டில்ஷான் 5.தனஞ்சய டி சில்வா 6.சாமர கபுகெதர 7.சச்சித்ர பத்திரன 8.மிலிந்த சிறிவர்தன 9.சுரங்க லக்மால் 10.திசர பெரேரா 11.சச்சித்ர சேனாநாயக்க 12.சீகுகே பிரசன்ன 13.தசுன் சானக 14.கசுன் ராஜித …
-
- 4 replies
- 614 views
-