விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7839 topics in this forum
-
நடராஜன் மிகப்பெரிய சொத்து - கோலி! டி20 உலகக் கிண்ண போட்டி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து வேகப்பந்து வீச்சாளா் நடராஜன் என்று கேப்டன் கோலி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளாா். கடைசி ஒருநாள் ஆட்டத்தின் மூலம் சா்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்த நடராஜன், மொத்தம் 4 ஆட்டங்களில் 8 விக்கெட்டுகளை சாய்த்துள்ளாா். அதிலும் டி20 தொடரைக் கைப்பற்றிய 2 ஆவது ஆட்டத்தில் அவா் 3 விக்கெட்டுகளை சாய்த்தது முக்கியமானதாக அமைந்தது. இந்நிலையில், கடைசி டி20 ஆட்டத்துக்குப் பிறகு கோலி கூறியதாவது: ஷமி, பும்ரா இல்லாத நிலையில் மிகுந்த நெருக்கடியான சூழலில் நடராஜன் சிறப்பாகப் பந்துவீசியதை குறிப்பிட்டே ஆக வேண்டும். சா்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்…
-
- 2 replies
- 708 views
-
-
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத் தேர்தல் – வவுனியாவிற்கு உதவிபொருளாளர் பதவி! இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உதவிப்பொருளாளரிற்கான தேர்தலில் வவுனியாவை சேர்ந்த அருணகிரிநாதன் நாகராஜன் வெற்றி பெற்றுள்ளார். இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் புதிய நிர்வாகசபை தேர்தல் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்றது. குறித்த தேர்தலில் வவுனியா மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி உதவிப்பொருளாளர் பதவிக்கு அ. நாகராஜன் போட்டியிட்டிருந்தார். இந்நிலையில் தேர்தலில் வெற்றிபெற்று குறித்த பதவிக்கு அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் நான்கு வருடங்கள் வவுனியா மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கத்தின் பொதுச்செயலாளராகவும், இரண்டு வருடங்கள் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன…
-
- 2 replies
- 457 views
-
-
இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் லசித் மாலிங்க அவுஸ்திரேயாவிற்கு குடிபெயரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் ஏற்கனவே அவுஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமையை பெற்றுள்ளதாக சர்வதேச விளையாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய எதிர்வரும் பங்களாதேஸ் அணியுடனான தொடரின் பின்னர் தமது குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயரவுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. தற்போது லசித் மாலிங்க அவுஸ்திரேலியாவில் தங்கியுள்ள நிலையில்,பங்களாதேஸ் உடனான தொடரில் பங்கேற்பதற்காக நாளைய தினம் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயரவுள்ள அவருக்கு அங்கு பயிற்றுவிப்பாளர் பதவியும் வழங்கப்படவுள்ளதாக சர்வதேச விளையாட்டு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்…
-
- 2 replies
- 625 views
-
-
நட்சத்திரங்களின் உதைபந்தாட்டம் மானிப்பாய் இந்து ஹற்றிக் வெற்றி சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரி தீபாவளி தினத்தை முன்னிட்டு ஆண்டு தோறும் நடாத்திவரும் அழைக்கப்பட்ட பாடசாலைக ளுக்கிடையிலான நட்சத்திரங்களின் உதைபந்தாட்டத் தொடரில் மானிப்பாய் இந்துக்கல்லூரி சம்பியனானது. குறித்த போட்டியின் இறுதியாட்டமானது நேற்றைய தினம் ஸ்கந்தவரோதய கல்லூரி மைதானத்தில் கல்லூரியின் அதிபர் மு. செல்வஸ்தான் தலைமையில் ஆரம்பமானது. மானிப்பாய் இந்துக்கல்லுரி எதிர் மகாஜன கல்லுரி அணிகள் இறுதிப் போட்டியில் மோதிக் கொண்டன. இப்போட்டியில் மானிப்பாய் இந்துக்கல்லூரி 3:0 என்ற கோல்களைப் போட்டு வெற்றி பெற்றது. குறித்த பாடசாலையானது தொடர்ச்சியாக 3 ஆவது தடவையாக வெற்றி பெ…
-
- 2 replies
- 342 views
-
-
ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இந்தி நடிகர் வின்டூ சிங்கிற்கு சென்னை ஐபிஎல் அணியுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த நடிகரும் மல்யுத்த வீரருமான தாராசிங்கின் மகன் தான் வின்டூ சிங். சூதாட்டத் தரகர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரை மும்பை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வின்டூ சிங்கை 3 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் 6-ஆம் தேதி நடைபெற்ற சென்னை-மும்பை இடையேயான போட்டியில், தோனியின் மனைவி சாக்சியுடன் அமர்ந்து வின்டூ சிங் போட்டியை ரசித்துள்ளார். இதுதவிர விருந்துகளிலும் வீரர்களுடன் அவர் பங்கேற்றிருப…
-
- 2 replies
- 683 views
-
-
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ஆறு பேர் விண்ணப்பம்! In கிாிக்கட் August 2, 2019 5:02 am GMT 0 Comments 1166 by : Anojkiyan இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ஆறு பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த நிலையில், பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த 30ஆம் திகதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உட்பட, அவருடன் 6 பேர் பயிற்சியாளர் பதவிக்கான போட்டியில் உள்ளனர். ஐ.பி.எல்.லில் ஐதராபாத் அணியின் பயிற்சியாளராக இருக்கும…
-
- 2 replies
- 878 views
-
-
பேட்ஸ்மென்களை பவுல்டு செய்வதை குறிக்கோளாகக் கொண்ட முரளிதரன்: பிரசன்னா அலசல் அதிக டெஸ்ட் விக்கெட்டுக்கான உலக சாதனை படைத்த இலங்கையின் முத்தையா முரளிதரன் பந்து வீச்சு பற்றி இந்திய முன்னாள் ஸ்பின் பவுலர் ஈராப்பள்ளி பிரசன்னா தனது கருத்துகளை பதிவு செய்துள்ளார். இ.எஸ்.பி.என். கிரிக் இன்ஃபோ இணையதளத்தின் தொடர் ஒன்றில் அவர் முரளிதரன் பந்து வீச்சு பற்றி கூறியதாவது: மிகவும் சுவாரஸ்யமான ஒரு ஸ்பின் பவுலர் என்றால் எனக்கு முதலில் நினைவுக்கு வருவது முத்தையா முரளிதரனே. இவரது பந்து வீச்சை விவரிப்பது அவ்வளவு சுலபமல்ல. முரளிதரன் ஒரு வினோதமான பவுலர். இவரது பந்து வீச்சு முறை குறித்து சர்ச்சைகள் இருந்தாலும், ஸ்பின் உலகின் தலை சிறந்த பவுலர் அவர். இவரது பந்துகள் பல முறையற்றவை என்று கர…
-
- 2 replies
- 574 views
-
-
டர்பன்: தென் ஆப்பிரிக்காவும், இந்தியாவும் மோதிய 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை சமாளிக்க மு¬டியாமல் 91 ரன்களில் சுருண்டு, 157 ரன்கள் வித்தியாசத்தில் கேவலமான தோல்வியை சந்தித்தது இந்தியா. இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே தற்போது ஒரு நாள் போட்டித் தொடர் தொடங்கியுள்ளது. முதல் ஒரு நாள் போட்டி ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக அப்போட்டி கைவிடப்பட்டது. இந் நிலையில் டர்பன் நகரில் 2வது ஒரு நாள் போட்டி நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய தொடக்கப் பந்து வீச்சாளர்கள் ஆரம்பத்தில் சிறப்பாக பந்து வீசியதால் தென் ஆப…
-
- 2 replies
- 1.1k views
-
-
எப்படி அவரால் முடிந்தது? தமிழக வீரர் நடராஜன் செய்த காரியம் இணையம் முழுக்க வைரல் விளையாட்டு நேற்று டெல்லிக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்றது. பரபரப்பாக சென்ற செமி பைனல் போட்டியில் ஹைதராபாத்தை வீழ்த்தி டெல்லி வெற்றிபெற்றது. இதில் முதலில் ஆடிய டெல்லி அணி 189 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் களமிறங்கிய ஹைதராபாத் அணி 172 மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்து இருந்தாலும், தொடரில் நடந்த சில சம்பவங்கள் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. அதிலும் தமிழக வீரர் நடராஜன் ஹைதராபாத் அணிக்காக போட்ட கடைசி ஓவர் பெரிய அளவில் வைரலாகி உள்ளது. இந்த தொடர் முழுக்க நடராஜன் மிகவும் ச…
-
- 2 replies
- 989 views
-
-
மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி எப்ஏ கோப்பையை கைப்பற்றியது செல்சி அணி எப்.ஏ. கோப்பை இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய செல்சி அணி எப்.ஏ. கோப்பையை கைப்பற்றியது. #ChelseaFC #ManchesterUnited #FACup லண்டன்: 2018-19ம் சீசன் யுயெஃபா யுரோப்பா கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவே உலகிலேயே மிகப் பழமையான கால்பந…
-
- 2 replies
- 633 views
-
-
நிதானமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தும் இலங்கை அணி By A.Pradhap - ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டநேர நிறைவில், முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்களை பெற்றுள்ளது. நேற்றைய முதல் நாள் ஆட்டநேர நிறைவில் 362 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், இன்று ஆட்டத்தை தொடர்ந்த ஜிம்பாப்வே அணி, மதியபோசன இடைவேளைக்கு முன்னர் 406 ஓட்டங்களை குவித்து சகல விக்கெட்டுகளையும் இழந்தது. ஜிம்பாப்வே அணி சார்பாக சேன் வில்லியம்ஸ் அதிகபட்சமாக 107 ஓட்டங்களை…
-
- 2 replies
- 463 views
-
-
கிரிக்கெட் உலகில் யாருமே அணியாத ஜேர்சியுடன் களமிறங்கும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி.. சுதேசிய ஜேர்சி தொடர்பான முழு விபரம் ! விளையாட்டு இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரில் களமிறங்கவுள்ள அவுஸ்திரேலிய அணி புதியதொரு மேலங்கியுடன் (ஜேர்சி) களமிறங்குகிறது. அதாவது அவுஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணியானது முதல் முறையாக சுதேசிய கருப்பொருளை உள்ளடக்கிய ஜேர்சியுடன் களமிறங்குகிறது. சுதேசிய கருப்பொருளை உள்ளடக்கிய குறித்த ஜேர்சியானது புகழ்பெற்ற 1868 பழங்குடி கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின் கதையை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது. அவுஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணியானது தேசிய மகளிர் அணியினை முன்னிலைப்படுத்தி…
-
- 2 replies
- 762 views
-
-
புதிய வரவை எதிர்நோக்கும் செரீனா வில்லியம்ஸ் மகளிர் டென்னிஸ் பிரிவில் உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரரான செரீனா வில்லியம்ஸ் கர்ப்பமாக உள்ளதாகவும், வரும் மழைக்காலத்தில் அவரது பிரசவம் நடக்கக்கூடும் என்று அவரது மக்கள் தொடர்பு பிரதிநிதி உறுதிப்படுத்தியுள்ளார். 35 வயதாகும் செரீனா, கண்ணாடி முன் நிற்கும் தனது புகைப்படத்தை ''20 வாரங்களாகி விட்டது'' என்ற வாசகத்துடன் ஸ்னாப்ச்சாட் செயலியில் தகவல் வெளியிட்டிருந்தார். பின்னர், இப்பதிவை அவர் அகற்றி விட்டார். கடந்த ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்றதன் மூலம், தனது 23-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்த செரீனா, வரவிருக்கும் டென்ன…
-
- 2 replies
- 366 views
-
-
Published By: DIGITAL DESK 5 29 APR, 2023 | 02:03 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) நியூஸிலாந்து அணிக்கெதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பெற்றுக்கொண்ட வெற்றியின் மூலமாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 500 ஆவது வெற்றியை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பதிவு செய்தது. பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி ராவல்பிண்டியில் நேற்று முன்தினம் (27) பகலிரவுப் போட்டியாக நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து…
-
- 2 replies
- 660 views
- 1 follower
-
-
டெஸ்ட் போட்டியில் 8 கேட்ச்களை பிடித்து ரஹானே புதிய சாதனை சங்கக்காராவுக்கு ரஹானே பிடித்த அருமையான கேட்ச். | ஏ.எப்.பி. கால்லே டெஸ்ட் போட்டியில் 8 கேட்ச்களைப் பிடித்து இந்திய வீரர் அஜிங்கிய ரஹானே புதிய சாதனை புரிந்துள்ளார். இந்தியாவின் யஜுவேந்திர சிங் என்ற விக்கெட் கீப்பர் அல்லாத பீல்டர் ஒருவர் இதற்கு முன்பாக டெஸ்ட் போட்டி ஒன்றில் 7 கேட்ச்களை பிடித்து சாதனை புரிந்திருந்தார். ஆனால் யஜுவேந்திர சிங்குக்கு அது அறிமுக போட்டி என்பது குறிப்பிடத்தகக்து. தற்போது இந்தச் சாதனையை ரஹானே முறியடித்து 8 கேட்ச்களை கால்லே டெஸ்ட் போட்டியில் இதுவரை பிடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார். ஹர்பஜன் வீசிய பந்தை ஜெஹன் முபாரக் ஆடிய போது விளிம்பில் பட்டு ஸ்லிப்பில் ரஹானேயிடம் கேட்ச் ஆனது இது அவர் பிடி…
-
- 2 replies
- 1.7k views
-
-
பிரிமீயர் லீக் கால்பந்தில் மான்செஸ்டர் சிட்டி வெற்றி- அர்செனல் தோல்வி பிரிமீயர் லீக் கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி வெற்றி பெற்றது. அர்செனல் தோல்வியடைந்தது. #PremierLeague #MCI #TOT பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் அர்செனல் - டோட்டன்ஹாம் ஸ்பர்ஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் 49-வது நிமிடத்தில் ஸ்பர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஹாரி கேன் தலையால் முட்டி கோல் அடித்தார். அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காததால் டோட்டன்ஹாம் ஸ்பர்ஸ் அணி 1-0 என அர்…
-
- 2 replies
- 339 views
-
-
திருமணமானவர்களுக்குத்தான் தெரியும் வீட்டுக்கு முன்கூட்டிப்போவதன் அவசியம்-அஸ்வினைக் கிண்டலடித்த சேவாக். திருமணமானவர்களுக்குத்தான் தெரியும் வீட்டுக்கு முன்கூட்டிப்போவதன் அவசியம்-அஸ்வினைக் கிண்டலடித்த சேவாக். இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் 321 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா, தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது. 475 எனும் வெற்றி இலக்கு நியூசிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அஸ்வினின் மிகசிறந்த சூழல் பந்து வீச்சு காரணமாக 4 ம் நாளிலேயே போட்டி நிறைவுக்கு வந்தது. இந்தப் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளையும், 2வது இன்னிங்சில் 7 விக்கெ…
-
- 2 replies
- 316 views
-
-
மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர்... சாம்பியன்ஸ் லீக் கோப்பை யாருக்கு?! #UCL 2017 ல் ரியல் மாட்ரிட்டிடம் நூலிழையில் சாம்பியன் பட்டத்தைத் தவறவிட்ட யுவென்டஸ் இந்த முறை ரொனால்டோவையே தனது பிரத்யேக ஆயுதமாக மாற்றி கோப்பைக்குக் குறிவைத்திருக்கிறது. இந்தியாவில் இனி நள்ளிரவு, அதிகாலை நேரங்களிலும் கூட தொலைக்காட்சிகள் அலறப் போகின்றன; இந்திய இளசுகள் எல்லாம், `ஃபுட்பால் ஹேங் ஓவரில்’ இரவு முழுவதும் விழித்துக்கிடக்கப் போகின்றனர். 2018-19 சீஸனுக்கான `சாம்பியன்ஸ்லீக் ஃபுட்பால் இஸ் பேக்’. ஆம், ஐரோப்பாவின் டாப் கிளப்கள் கலந்துகொள்ளும் மாபெரும் கால்பந்துத் திருவிழாவான, சாம்பியன்ஸ்லீக் கால்பந்து தொடர் நாளை தொடங்கவுள்ளது. இந்தமுறை கோப்பையைக் கைப்…
-
- 2 replies
- 801 views
-
-
ஐபிஎல் சுற்றுப்போட்டிகள் 2017- ஏப்ரல்5 இல் ஆரம்பம் பத்தாவது தடவையாக இடம்பெறும் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் சுற்றுப் போட்டிகள் ஏப்ரல் 5 ஆரம்பமாகு மென இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை உறுதிப்படுத்தியுள்ளது. கட்டுப்பாட்டுச் சபை அதிகாரிகளும் குழு நிர்வாகிகளும் சந்திப்பு ஒன்றை நேற்று நிகழ்த்திய பின்னர் இந்தத் திகதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .. வெளிநாட்டு வீரர்கள் உட்பட கிரிக்கெட் வீரர்களை கழகங்கள் ஏலத்தில் எடுப்பது இந்தமாதம் இடம்பெறலாம் என்று நம்பப்படுகிறது. இந்தநிலையில் இங்கிலாந்து அணி வீரர்களுக்கோ சோதனைமேல் சோதனை ! இங்கிலாந்து அணியின் வீரர்கள் இந்தியாவில் விளையாடினால் விளையாடும் ஒவ்வொரு நாளுக்கும் அவர்கள் தாயக ஊதியத்திலிருந்து…
-
- 2 replies
- 558 views
-
-
முதல் ஒரு நாள் போட்டி ஆப்கானிஸ்தானிடம் வெஸ்ட்இண்டீஸ் அதிர்ச்சி தோல்வி செயிண்ட் லூசியாவில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வி அடைந்தது. செயிண்ட்லூசியா: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி நேற்று செயிண்ட் லூசியாவில் நடந்தது. டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 212 ரன் எடுத்தது. ஜாவித் ஆட்டி 81 ரன் எடுத்தார். பின்னர் விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. சு…
-
- 2 replies
- 523 views
-
-
யோகா -- மூச்சுப்பயிற்சி http://www.wikihow.com/Do-Pranayam --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
-
- 2 replies
- 3.5k views
-
-
பரபரப்பான சுப்பர் ஓவரில் இந்தியா வெற்றி: சொந்த மண்ணில் தொடரை இழந்தது நியூஸிலாந்து! by : Anojkiyan நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவது ரி-20 போட்டியில், இந்தியா அணி பரபரப்பான சுப்பர் ஓவரில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை இந்தியா அணி 3-0 என்ற கணக்கில் கைபற்றியுள்ளது. ஹெமில்டன் மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. …
-
- 2 replies
- 709 views
-
-
உலக கிரிக்கெட்டை திரும்பி பார்க்க வைப்போம்: வங்காள தேச கேப்டன் சொல்கிறார் இந்தியாவில் நாங்கள் விளையாடும் திறமையை பார்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் மீண்டும் மீண்டும் எங்களை அழைக்க வேண்டும் என வங்காள தேச கேப்டன் தெரிவித்துள்ளார். வங்காள தேச கிரிக்கெட் அணி கடந்த 2000-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடும் அந்தஸ்தை பெற்றது. இந்தியா அதே ஆண்டு நவம்பர் 10-ந்தேதி அங்கு சென்று முதன் முறையாக வங்காள தேசத்திற்கு எதிரான டெஸ்டில் விளையாடியது. சுமார் 16 வருடங்களாக வங்காள தேச அணி இந்தியா வந்து விளையாடியது கிடையாது. தற்போது முதன்முற…
-
- 2 replies
- 882 views
-
-
“El Clásico” என்பது Spain நாட்டில் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக நடந்து வரும் இரு கழகங்களிற்கிடையிலான உதைபந்தாட்ட போட்டி என்பதை விட போர் என்றே சொல்லலாம். El Clasico ஆனது Real Madrid மற்றும் FC Barcelona அணிகளிற்கிடையில் நடக்கும் ஆட்டத்தை குறிக்கும். Coca Cola குளிர்பாணத்தில் உலக புகழ் போல் El Clasico உதைபந்தாட்டத்தில் உலகறிந்த ஒரு ஆட்டம். 109 ஆண்டுகளில் 240ற்க்கு மேற்பட்டஆட்டங்களை தாண்டிய இந்த வரலாற்றை வரிசைப்படி பார்ப்போம். 1902 - 1906 இந்த இரு கழகங்களிற்கிடையிலான முதலாவது போட்டி 13. Mai 1902 அன்று நடைபெற்றது. Real Madrid கழகம் உருவாகி ஒரு சில மாதங்களே ஆகி இருந்தது. FC Barcelona கழகம் கடந்த 3 ஆண்டுகளிற்க்கு முன்னமே உருவாகியிருந்தது. உலகையே கவர்ந்திழுக்…
-
- 2 replies
- 1.3k views
-
-
சிறுவயது தோழியை கரம்பிடித்த நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி பிரபல நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி தனது சிறுவயது தோழி அண்டோனல்லா ரோகுசோவை நேற்று திருமணம் செய்து கொண்டார். பியுனோஸ் ஐரஸ்: அர்ஜென்டினா கால்பந்து அணியில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி. உலக புகழ்பெற்ற அவர் தனது ஆரம்ப கால தோழியான அண்டோனல்லா ரோகுசோவை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் வசித்து வரும் மெஸ்ஸி தம்பதியினருக்கு தியாகோ…
-
- 2 replies
- 623 views
-