விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
இலங்கையின்... 19 வயதுக்குட்பட்ட, கிரிக்கெட் அணிக்குள் நுழையும்... மற்றொரு தமிழ் வீரர்! தோமியன் 1ஆவது XI துடுப்பாட்ட அணியின் துணைத் தலைவர் கனிஸ்டன் குணரத்னம், இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட அணியில் விளையாடத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் மாகாண போட்டியில் சிறப்பாக செயற்பட்டதன் பின்னணியில் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர், இந்த வார இறுதியில் 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியுடன் இங்கிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். தோமியன் துணைக் தலைவரும், தொடக்க வேகப்பந்து வீச்சாளருமான கனிஸ்டன் குணரத்னம், சமீபத்தில் முடிவடைந்த இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட…
-
- 2 replies
- 439 views
-
-
குசல் பெரேராவின் தடை நீக்கம் இலங்கை கிரிக்கட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் விக்கட்காப்பாளருமான குசல் பெரேராவுக்கு சர்வதேச கிரிக்கட் சபையால் விதிக்கப்பட்டிருந்த தடை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பாவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு,மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் குசல் தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு சர்வதேச கிரிக்கட் சபையால் குறித்த தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறித்த தடைக்கு எதிராக குசல் பெரேரா சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார். இதற்கமைய குசல் பெரேராவுக்கு ஊக்க மருந்து சோதனையை நடத்திய கட்டாரைத் தளமாக கொண்ட நிறுவனம், தாம் முன்வைத்த அறிக்கை பிழைய…
-
- 2 replies
- 523 views
-
-
புதிய தலைமையின் கீழ் இந்தியா - நியூஸிலாந்துக்கு இடையிலான டி-20 தொடர் இன்று ஆரம்பம் இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. ரோஹித் ஷர்மாவின் தலைமை மற்றும் ராகுல் டிராவிட்டின் தலைமைப் பயிற்சியின் கீழ் இந்திய அணி, நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் ஜெய்பூரில் அமைந்துள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும். முன்னாள் அணித் தலைவர் விராட் கோஹ்லி, ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் மொஹமட் ஷமி உள்ளிட்ட சில நட்சத்திரங்களுக்கு இந்த தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல்.…
-
- 2 replies
- 382 views
-
-
தோல்விக்கு இந்தியா காரணம் * புலம்பும் இலங்கை கிரிக்கெட் போர்டு கொழும்பு: ‘‘இந்தியாவுக்கு எதிராக அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒருநாள் தொடர், எங்களது உலக கோப்பை பயிற்சியை பாதித்தது. இது தான் எங்கள் அணி தோல்விக்கு காரணம்,’’ என, இலங்கை கிரிக்கெட் போர்டு (எஸ்.எல்.சி.,) நிர்வாகி ஷமி சில்வா தெரிவித்தார். பொதுவாக இலங்கை அணி உலக கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும். 2003ல் அரையிறுதி (எதிர்–ஆஸி.,), 2007ல் பைனல் (எதிர்–ஆஸி.,), 2011ல் பைனல் (எதிர்–இந்தியா) என, முன்னேறிய இலங்கை அணி இம்முறை காலிறுதியில் தென் ஆப்ரிக்காவிடம் தோற்றது. 1999க்குப் பின் முதன் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெறாதது குறித்து எஸ்.எல்.சி., தலைவர் ஜயந்தா தர்மதாசவுக்கு எழுதிய கடிதத்தில், ஷமி …
-
- 2 replies
- 537 views
-
-
இப்படியா ஆபாசமாக ஆடுவது... பிரியங்கா சோப்ராவுக்கு உயர்நீதிமன்றம் விளாசல்! மதுரை: சென்னையில் நடந்த 5வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடக்க விழாவின்போது மேடையில் பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் ஆடியதில் ஆபாசம் இருப்பதாக கூறப்பட்டுள்ள புகாருக்கு முகாந்திரம், உறுதியான ஆதாரம் உள்ளதாக கூறியுள்ள மதுரை உயர்நீதிமன்றக் கிளை, இப்படி பொது மேடையில் அநாகரீகமாக, ஆபாசமாக ஆடியது கண்டனத்துக்குரியது என்று கண்டித்துள்ளது. சென்னையில், கடந்த ஏப்ரல் மாதம் ஐபிஎல் தொடர் தொடக்க விழா நடைபெற்றது. அப்போது பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் மேடையில் தோன்றி ஆடினர். அதிலும் பிரியங்கா சோப்ராவின் ஆட்டத்தில் ஆபாசம் அதிகம் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஹாலிவுட்டிலிருந்து கேத்தி பெர்ரியு…
-
- 2 replies
- 709 views
-
-
உடல் எடையை குறைப்பதற்காக ஓட ஆரம்பித்தவர் 24 மணித்தியாலங்களில் 319 கி.மீ. ஓடி உலக சாதனை By VISHNU 26 SEP, 2022 | 01:00 PM லித்துவேனியாவைச் சேர்ந்த ஓட்ட வீரர் அலெக்ஸாண்டர் சோரோகின், 24 மணித்தியாலங்களில் 319.6 கிலோமீற்றர் தூரம் ஓடி புதிய உலக சாதனை படைத்துள்ளார். 41 வயதான சோரோகின் சானியா எனும் பெயரிலும் அழைக்கப்படுகிறார். 24 மணித்தியாலங்களில் அதிக தூரம் ஓடும் ஐரோப்பிய சம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் வெரோனா நகரில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் 319.6 கிலோமீற்றர் ஓடிய சோரோகின், முதலிடம் பெற்றதுடன் புதிய உலக சாதனை படைத்தார். சராசரியாக மணித்தியாலத்துக்கு …
-
- 2 replies
- 330 views
- 1 follower
-
-
ரியோ ஒலிம்பிக்கில், ஆடவர் ரக்பி செவன்ஸ் போட்டியில், பிஜி அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், எந்த நாட்டிடம் பல ஆண்டு காலம் அடிமைப்பட்டு கிடந்ததோ, அதே பிரிட்டன் அணியை, 43-7 என்ற புள்ளி கணக்கில் துவைத்து எடுத்தது பிஜி. முதல்பாதியில், பிரிட்டன் அணியை ஒரு புள்ளி கூட எடுக்க விடாமல், 29-0 என்ற புள்ளிக்கணக்கில் பிஜி முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில்தான், பிரிட்டன் அணி போராடி 7 புள்ளிகளை பெற்றது. இறுதியில் ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கத்தை கைப்பற்றி அசத்தியது பிஜி . கடந்த 1956 ம் ஆண்டு முதல், ஒலிம்பிக்கில் பிஜி பங்கேற்று வருகிறது. 12 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றும் ஒரு முறை கூட பிஜி வீரர்கள் 'போடியம் 'ஏறியது கிடையாது. ஆனால் இந்…
-
- 2 replies
- 451 views
-
-
லீக் கோப்பை இறுதிப் போட்டி: ஜோஸ் மவுரினோ தலைமையில் மான்செஸ்டர் யுனைடெட் மகுடம் சூடுமா? ஜோஸ் மவுரினோ தலைமையிலான மான்செஸ்டர் யுனைடெட் அணி லீக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. லீக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி இன்றிரவு 10 மணிக்கு நடக்கிறது. இதில் மான்செஸ்டர் யுனைடெட்- சவுதாம்ப்டன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மான்செஸ்டர் அணியின் பயிற்சியாளராக ஜோஸ் மவுரினோ உள்ளார். மான்செஸ்டர்…
-
- 2 replies
- 430 views
-
-
செய்தித் துளிகள் ஹாக்கியில் புதிய விதிமுறை ஹாக்கி இந்தியா லீக் (ஹெச்ஐஎல்) தொடரில் புதிய விதிமுறை புகுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 4-வது சீசனிலிருந்து ஒவ்வொரு ஃபீல்டு கோலும், 2 கோல்களாக கணக்கில் கொள்ளப்படும். ஹெச்ஐஎல் தலைவர் நரீந்தர் பாத்ரா இதனை அறிவித்துள்ளார். அணியில் வீரர்களின் எண்ணிக்கை 24-லிருந்து 20 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதில், 12-8 என்ற விகித்தில் இந்திய-வெளிநாட்டு வீரர்கள் இடம்பெறுவர். இதுதவிர, ஓர் அணியில் 2 கோல் கீப்பர்கள் கட்டாயம் என்பது உள்ளிட்ட விதிமுறைகளும் புகுத்தப்பட்டுள்ளன. வில் வித்தையில் தங்கம் கொலம்பியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை வில் வித்தைப் போட்டியில் ஆடவர் பிரிவில் சர்வேஷ் பரீக், சந்தீப் குமார், இசய்யா ராஜேந்தர் சனம் ஆகியோரடங்கிய இந்…
-
- 2 replies
- 286 views
-
-
குமார் சங்கக்கார இங்கிலாந்து கழக போட்டியில் சதம்: இலங்கை அணியின் நட்சத்திர முன்னாள் வீரர் குமார் சங்கக்கார இங்கிலாந்து கழக மட்டப் போட்டியில் சதமடித்து சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தின் சர்ரே கழகத்தின் சார்பில் குமார் சங்கக்கார விளையாடி வருகின்றார். ஓவல் மைதானத்தில் சமர்செட் கழகத்திற்கு எதிரான போட்டியில் சங்கக்கார 171 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார். இதுவரை சங்கக்கார சரே அணிக்காக 22 இன்னிங்ஸ்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டங்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/131438/language/ta-IN/article.aspx
-
- 2 replies
- 561 views
-
-
-
- 2 replies
- 434 views
-
-
முதல் இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸுக்காக 2 விக்கெட்டுக்களை இழந்து 215 ஓட்டங்களை குவித்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அவுஸ்திரேலியாவுடன் மூன்று இருபதுக்கு 20, நான்கு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இருபதுக்கு 20 தொடர் ஏற்கனவே சமநிலையில் முடிவடைந்துள்ள நிலையில், நடைபெற்று முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் 1:1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந் நிலையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று மெல்போர்னில் ஆரம்பானது. இப் போட்டியில் …
-
- 2 replies
- 833 views
-
-
டி 20 தொடரை வென்றது இங்கிலாந்து பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் இரண்டாவது டி 20 ஆட்டத்தில் துபையில் மோதின. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன் குவித்தது. வின்ஸ் 38, ஜோஸ் பட்லர் 33, ரன் எடுத்தனர். 173 ரன்கள் இலக்குடன் ஆடிய பாக். அணி 17 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 126 ரன் எடுத்தது. கடைசி 3 ஓவரில் வெற்றிக்கு 47 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் வோக்ஸ் வீசிய 18வது ஓவரில் அப்ரீடி 3 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். இந்த ஓவரில் 5 பந்தில் 21 ரன் சேர்க்கப்பட்ட நிலையில் கடைசி பந்தில் அப்ரீடி ஆட்டமிழந்தார். அவர் 8 பந்தில் 24 ரன் எடுத்தார். வில்லி வீசிய அடுத்த ஓவரில் பாக். அணி 14 ரன்கள் சேர்த்தது. கடைசி 6 பந்தில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் வோக…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஆப்கானை வீழ்த்தியது இங்கிலாந்து இருபது ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 6ஆவது லீக் ஆட்டத்தில் 117 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தானை வெற்றி கொண்டது. இதன்மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறியது ஆப்கானிஸ்தான். இங்கிலாந்து வீரர் லுக் ரைட் 55 பந்துகளில் 6 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 99 ஓட்டங்களை குவித்து ஒரு ஓட்டத்தினால் சதத்தை தவரவிட்டமை ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 17.2 ஓவர்களில் 80 ஓட்டங்களுடன் ச…
-
- 2 replies
- 549 views
-
-
தொடரும் முரளியின் சர்ச்சை ; ஐ.சி.சி.யின் திடீர் தீர்மானம் இலங்கை அணியின் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் இந்த வருடத்திற்கான ஹோல் ஒப் பேம் உறுப்புரிமைக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இலங்கையின் முதல் வீரராக இவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவருடன் அவுஸ்திரேலிய பெண்கள் அணியின் முன்னாள் தலைவர் கரேன் ரோல்டன், அவுஸ்திரேலியாவின் அர்த்துர் மொரிஸ் மற்றும் இங்கிலாந்து அணியின் ஜோர்ஜ் லோமன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். உலகத்தில் உள்ள சிறப்புமிக்க கிரிக்கெட் வீரர்களுக்கான ஒரு பாரிய அந்தஸ்தாக இந்த ஹோல் ஒப் பேம் உறுப்புரிமை கருதப்படுகிறது. இவர்களில் தெரிவுசெய்…
-
- 2 replies
- 553 views
-
-
சினம் கொண்ட பல தமிழர்களின் முயற்சியால் இணையத்தில் பிரேத்தியக முறையில் ஒரு விளையாட்டு மென்பொருளை தயாரித்துள்ளனர் ...ஐந்தாம் நூற்றாண்டில் இலங்கையில் குடியேறி இன்று நாட்டை கையில் வைத்திருக்கும் ராஜபக்ஷேவை தண்டிபதற்காக இந்த விளையாட்டு மென்பொருள் தயாரித்துள்ளனர் ... கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தின் முகவரியை சொடுக்கி அவனுக்கு நீங்கள் விரும்பியதுபோல் தண்டனை கொடுங்கள் .. இது உங்களுக்கு கிடைத்த வாய்ப்பு விளையாடி தண்டனை கொடுக்க தவறாதீர் தமிழர்களே ....!!! http://www.123bee.com/play/show_your_kolaveri/
-
- 2 replies
- 468 views
-
-
இலங்கை அணியை கௌரவப்படுத்திஇரண்டு முத்திரைகள் வெளியீடு உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இரண்டாமிடம் பெற்ற இலங்கை அணியை கௌரப்படுத்தும் முகமாக இலங்கை தபால் திணைக்களத்தினால் இரண்டு முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த முத்திரைகளில் இலங்கை வீரர்களின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 1996 ஆம் ஆண்டு உலக சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை அணி 11 வருடங்களின் பின்னர் மீண்டும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது. இதனை நினைவுகூரும் பொருட்டே மேற்படி முத்திரைகள் இரண்டும் வெளியிடப்பட்டுள்ளன. வீரகேசரி
-
- 2 replies
- 1.4k views
-
-
ஓராண்டில் லண்டன் ஒலிம்பிக்ஸ் லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க ஒராண்டு இருக்கும் நிலையில், அதை குறிக்கும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் லண்டன் நகரில் நடைபெறுகின்றன. ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் திட்டமிட்டபடி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கின்றன என போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். எனினும் இன்னும் பல அரங்குகளில் பெரிய அளவில் பணிகள் முடிவுறாமல் உள்ளன என்றாலும், இது வரை சாதிக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து தாங்கள் பெருமை கொள்வதாக லண்டன் ஒலிம்பிக் குழுவின் தலைவர் செபாஸ்டின் கோ தெரிவித்துள்ளார். இந்தப் போட்டிகள் மேட்டுக்குடி மக்களின் ஒரு ஊதாரித்தனம் என்றும், முதலில் எதிர்பார்த்து திட்டமிடப்பட்டதை விட செலவினங்கள் பல மடங்கு உயர்ந்து 15 பில்லியன்…
-
- 2 replies
- 879 views
-
-
ஒருநாள் தொடரில் ஆஸி.க்கு முதல் ஒயிட்வாஷ்: தென் ஆப்பிரிக்கா மகத்தான 5-0 வெற்றி! தென் ஆப்பிரிக்க அணி கொண்டாட்டம். | படம்: ராய்ட்டர்ஸ் ரைலி ருசோவ்வின் அதிரடி சதத்தின் மூலம் கேப்டவுனில் நடைபெற்ற 5-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 5-0 என்று தொடரைக் கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா முதன்முதலாக ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு ஒயிட்வாஷ் தோல்வியைப் பெற்றுத் தந்தது. அனுபவமற்ற ஆஸ்திரேலிய பந்துவீச்சு மட்டுமல்ல, டேவிட் வார்னர் நீங்கலாக ஆஸ்திரேலிய பேட்டிங்கும் சப்பென்று ஆகி வரலாறு காணாது ஒருநாள் போட்டி ஒயிட்வாஷ் தோல்வியை அடைந்தது ஆஸ்திரேலியா. கேப்டவுனில் நேற்று நடைபெற்ற பகலிரவு ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்…
-
- 2 replies
- 307 views
-
-
யாழ். இந்து 37 ஓட்டங்களுடன் களத்தில் இந்துக்களின் போர் என வர்ணிக்கப்படும் மாபெரும் துடுப்பாட்டப்போட்டி யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு, பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி 165 ஓட்டங்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்தது. தற்போது யாழ். இந்துக் கல்லூரி விக்கெட் எதுவும் இழக்காத நிலையில் 37 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடிவருவதாகத் தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/74794.html இந்து மைந்தர்களின் சமரில் ஆதிக்கம…
-
- 2 replies
- 701 views
-
-
86 வருடங்களுக்குப் பின் ஐந்து Ashes Test போட்டிகளிலும் வெற்றி பெற்று (5:0) சாதனை படைத்தது அவுஸ்ரேலியா. Sydney துடுப்பாட்ட மைதானத்தில் 2 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்ற ஐந்தாவதும் கடைசியுமான Ashes Test போட்டியில் அவுஸ்ரேலியா அணி இங்கிலாந்து அணியை 10 விக்கெற்றுக்களால் வெற்றி பெற்றது. இதன் மூலம் நடைபெற்ற ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று அவுஸ்ரேலியா அணி Ashes வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியது. ஆட்டத்தின் நாயகனாக Stuart Clark தெரிவு செய்யப்பட்டார் தொடர் ஆட்ட நாயகனாக அவுஸ்ரேலியா அணித்தலைவர் Ponting தெரிவு செய்யப்பட்டார். Ashes Test போட்டி வரலாற்றில் 86 வருடங்களுக்கு பின் "நடைபெற்ற ஐந்து போட்டிகளிலும் அவுஸ்ரேலியா அணி வெற்றி பெற்று (5:0) சாதனை படைத்துள்ளது என்பது கு…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஐபிஎல் சூதாட்ட வழக்கில் குருநாத் மெய்யப்பன் குற்றவாளி, சீனிவாசன் குற்றமற்றவர்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்ட நிலையில் ராஜ் குந்த்ரா மற்றும் குருநாத் மெய்யப்பனுக்கான தண்டனை குறித்து தீர்மானிக்க முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் 3 நபர் குழு அமைக்கப்படும். சூதாட்டத்தில் ஈடுபட்டு தவறிழைத்தவர்கள் மீதான நடவடிக்கை தனிநபர் சார்ந்ததல்ல அவர்கள் சார்ந்த அணியையும் கட்டுப்படுத்தும் என்று உச்ச நீதிமன்றம் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீதான நடவடிக்கை பற்றி சூசகமாகத் தெரிவித்துள்ளது. ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் குருநாத் மெய்யப்பன் குற்றவாளி என்றும், சீனிவாசன் குற்றமற்றவர் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து…
-
- 2 replies
- 473 views
-
-
2016 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்தாட்டக்காரர் யார்..? 2016 ஆம் ஆண்டுக்கான ஃபிஃபா விருது போர்ச்சுகல் அணியின் முன்னணி கால்பந்து வீரரான ரோனால்டோவிற்கு வழங்கப் பட இருக்கிறது.ஒவ்வொரு வருடமும் சிறந்து விளங்கும் கால்பந்தாட்ட வீரர்களை கவுரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.அதன் படி 2016 ஆண்டிற்கான சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்ற கவுரவத்தை பெற்றிருக்கிறார் ரோனால்டோ. சிறந்த வீரருக்கான வாக்கெடுப்பில் ரோனால்டோ 34.54 சதவிகிதம் பெற்று முதலிடமும், அர்ஜெண்டினாவை சேர்ந்த மெஸ்ஸி 26.42 சதவிகிதம் பெற்று இரண்டாம் இடமும் பிடித்தனர்.பெரும் எதிபார்ப்புக்கு இடையில் ரோனால்டோ தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. http://www.vikatan.com/news/sports/77411…
-
- 2 replies
- 607 views
-
-
இந்திய அணி இன்று தேர்வு தென் ஆப்பிரிக்காவுக்கு எதி ரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளை யாடவுள்ள இந்திய கிரிக்கெட் அணி பெங்களூரில் இன்று தேர்வு செய்யப்படுகிறது. இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யவுள்ள தென் ஆப்பிரிக்க அணி, இந்தி யாவுக்கு எதிரான 3 டி20, 5 ஒருநாள் போட்டி மற்றும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. டி20 தொடர் அக்டோபர் 2-ம் தேதி தொடங்கவுள்ள நிலை யில், தேர்வுக் குழுவினர் பெங்களூரில் இன்று கூடி இந்திய அணியை தேர்வு செய்கின்றனர். டி20 தொடரில் விளை யாடும் அணியும், முதல் 3 ஒருநாள் போட்டிகளில் விளை யாடும் அணியும் மட்டுமே இன்று தேர்வு செய்யப்படும் என தெரிகிறது. அடுத்த ஆண்டு இந்தியாவில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. அதை க…
-
- 2 replies
- 282 views
-
-
பிரிமீயர் லீக்: டோட்டன்ஹாம் அணியை வீழ்த்தி 16-வது வெற்றியை ருசித்தது மான்செஸ்டர் சிட்டி பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் மான்செஸ்டர் சிட்டியின் வெற்றி தொடர்கிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியை 4-1 என துவம்சம் செய்தது. பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் தற்போதைய சீசனில் (2017-18) மான்செஸ்டர் சிட்டி அணி மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி இதுவரை தோல்வியை சந்திக்காமல் 15 வெற்றியை ருசித்திருந்த நிலையில் நேற்று, டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியை எதிர்கொண்டது. சொந்த மைதானத்தில் மான்செஸ்டர் சிட்டி வீரர்கள் அட்டகாசமான ஆட்டத்தை வெளி…
-
- 2 replies
- 501 views
-