விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7841 topics in this forum
-
விம்பிள்டன் உட்பட பல டென்னிஸ் போட்டிகளில் மோசடி? விம்பிள்டன் போட்டிகள் உட்பட, உலகின் பல முன்னணி டென்னிஸ் போட்டிகளில், பந்தய மோசடி நடைபெற்றுள்ளன என்று சந்தேகப்படுவதற்கான ஆதாரங்கள், பிபிசி மற்றும் பஸ்ஃபீட் நியூஸ் ஆகியவை இணைந்து முன்னெடுத்த விசாரணையில் தெரியவந்துள்ளது. விம்பிள்டன் டென்னிஸ் போட்டியிலும் மோசடி என சந்தேகங்கள் எழுந்துள்ளன என பிபிசி கூறுகிறது. கடந்த பத்தாண்டுகளில்,கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர்கள் உட்பட பலர், பந்தய மோசடியில் ஈடுபட்டு ஆட்டங்களில் தோல்வியடைந்தனர் எனும் சந்தேகத்தின் பேரில், டென்னிஸ் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர் என்று, இரகசிய ஆவணங்கள் மற்றும் கோப்புகள் காட்டுகின்றன. பல விளையாட்டு வீ…
-
- 1 reply
- 608 views
-
-
இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக கிரகம் போர்ட் இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக கிரகம் போர்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார். எதிர்வரும் பெப்ரவரி 01ம் திகதி முதல் 45 மாதங்களுக்கு அவர் இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=76495
-
- 1 reply
- 308 views
-
-
ஆசிய மெய்வல்லுனருக்கான தெரிவுப்போட்டிகள்: வடக்கின் நட்சத்திரம் புதிய இலங்கை சாதனை 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் கடற்படையின் கயந்திகா அபேரத்ன இலங்கை சாதனையைப் படைத்தார். இந்த சாதனைக்காக அவர் 02 நிமிடங்கள் மற்றும் 2.55 விநாடிகளை எடுத்துக்கொண்டார். வடக்கின் நட்சத்திரமான அனிதா ஜெகதீஸ்வரன் மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் 03.45 மீற்றருக்குத் தாவி புதிய இலங்கை சாதனையைப் புதுப்பித்தார். மகளிருக்கான முப்பாய்ச்சலில் விதுஷா லக்ஷானி மற்றுமொரு இலங்கை சாதனையை நிலைநாட்டினார். 13.67 மீற்றருக்கு தாவிய அவர் இந்த சாதனையைத் தன்வசப்படுத்தினார். இந்த சாதனைகளுடன் ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளுக்கான தெரிவுப்போட்டிகள்…
-
- 1 reply
- 595 views
-
-
கொத்மலை கிண்ண கால்பந்தாட்டத்தில் யாழ் ஹென்றியரசர் சம்பியன்; இறுதிப்போட்டியில் கொழும்பு ஸாஹிராவை வென்றது 2016-02-19 19:04:45 (நெவில் அன்தனி) 19 வயதுக்குட்பட்ட பாடசாலைகள் அணிகளுக்களுக்கிடையிலான கொத்மலை கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் யாழ். இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி சம்பியனாகியுள்ளது. யாழ். இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அணிக்கும் கொழும்பு ஸாஹிரா கல்லூரி அணிக்கும் இடையிலான கொத்மலை கிண்ண இறுதிப் போட்டி கொழும்பு, குதிரைப் பந்தயத் திடலில் இன்று மாலை நடைபெற்றது. இப்போட்டியில் புனித ஹென்றியரசர் அணி 3:1 கோல்களால் வென்றது. …
-
- 1 reply
- 437 views
-
-
கொரோனா என்ற கொடிய நோய்த் தாக்கம் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவை பிற்போடுமாறு சர்வதேச ஒலிம்பிக் குழுவிடம் (ஐ.ஓ.சி.) உலக மெய்வல்லுநர் சங்கம் (வேர்ல்ட் அத்லெட்டிக்ஸ்) வேண்டுகோள் விடுத்துள்ளது. முழு உலகமே கொடிய நோய்த் தாக்கத்தினால் பீதிக்குள்ளாகியுள்ள நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவை திட்டமிட்டவாறு ஜூலை, ஆகஸ்ட் காலப்பகுதியில் நடத்துவது சாத்தியமானதோ விரும்பத்தக்கதோ அல்லவென சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச்சுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் உலக மெய்வல்லுநர் சங்கத்தின் தலைவர் செபெஸ்டியன் கோ குறிப்பிட்டுள்ளார். 'விளையாட்டு விழாவை பிற்போடுமாறு கடிதம் மூலம் தங்களைக் கோருகின்றேன்' என கோ அனுப்பியுள்ள கடிதத்தல் குறிப்பிடப்பட்டுள்ளது.&…
-
- 1 reply
- 441 views
-
-
சென்னை அணிக்கு பிசிசிஐ அழைப்பு - மீண்டும் 'டாஸ் ' போடுகிறார் தோனி! சூதாட்டப் புகார் காரணமாக, சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு ஐபிஎல் தொடரில் பங்கேற்க இரு ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், கடந்த ஆண்டும் நடப்பு ஐபிஎல் தொடரிலும் சென்னை, ராஜஸ்தான் அணிகள் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், சஸ்பென்ட் செய்யப்பட்ட இரு அணிகளுக்கும், 2018-ம் ஆண்டு தொடருக்கான ‘Invitation To Tender for media rights -க்கு பிசிசிஐ அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து, சென்னை மற்றும் ராஜஸ்தான் அணி நிர்வாகங்கள் கடும் உற்சாகம் அடைந்துள்ளன. சென்னை அணி, இரு முறை ஐபிஎல் சாம்பியன். ராஜஸ்தான் அணியும் கோப்பையை ஒரு முறை வென்றுள்ளது. இந்த அணிகளுக்குத் தடை விதிக்கப்ப…
-
- 1 reply
- 473 views
-
-
டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தார் சங்கா ஐ.சி.சி.யின் டெஸ்ட் தரவரிசையில் தென்னாபிரிக்க வீரர் ஏ.பி.டிவிலியர்ஸை பின்னுக்குத் தள்ளிவிட்டு குமார் சங்கக்காரா முதலிடத்தைப் பிடித்துள்ளார். காலியில் பாகிஸ்தானுக்கு எதிராக இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் சங்கக்கார 211 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களிப்பாக வழங்கியிருந்தார். இது 2014ஆம் ஆண்டில் அவரது 4ஆவது சதமாகும். இதுவரை இந்த ஆண்டில் அவர் 1350 ஓட்டங்களை பெற்று 84.37 என்ற சராசரி எடுத்துள்ளார். பங்களாதேஷ_க்கு எதிராக ஒரு முச்சதம் மற்றும் ஒரு சதம் எடுத்ததோடு லோட்ஸில் இங்கிலாந்துக்கு எதிராக அபாரமான முறையில் 147 ஓட்டங்களைப் பெற்றார். 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் டிவிலியர்ஸ் டெஸ்ட் தரவரிசையில் முதல…
-
- 1 reply
- 456 views
-
-
'காலம் கடந்த ஞானம்' : 2019 உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் தவறுகள் இழைத்ததை ஒப்புக்கொண்டார் 'டைம்ட் அவுட்' மத்தியஸ்தர் இரேஸ்மஸ் 05 APR, 2024 | 06:20 PM (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற 2019 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் கள மத்தியஸ்தர்களால் இரண்டு தவறுகள் இழைக்கப்பட்டதாக அப்போட்டியில் மத்தியஸ்தம் வகித்தவர்களில் ஒருவரான ஓய்வுபெற்ற மராயஸ் இரேஸ்மஸ் ஒப்புக்கொண்டுள்ளார். அந்த இறுதிப் போட்டி 50 ஓவர்கள் நிறைவிலும் பின்னர் சுப்பர் ஓவர் நிறைவிலும் சமநிலையில் முடிவடைந்தது. இதனையடுத்து இரண்டு அணிகளும் குவித்த பவுண்டறிகளின் அடிப்படையில் 26 - 17 என முன்னணியில் இருந்த …
-
- 1 reply
- 275 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் “விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் சர்வதேச டி20 போட்டிகளில் விட்டுச் சென்ற இடம் பெரியது. அவர்களின் வெற்றிடத்தை நிரப்ப இந்திய அணிக்குச் சில காலம் ஆகும். அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்திய அணி இருவரின் பங்களிப்பு இல்லாமல் சாதிக்கும். ஏனென்றால் இருவரும் இந்திய அணிக்கு ஏராளமான பங்களிப்புகளைச் செய்துள்ளார்கள்.” இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ரோஜர் பின்னி இந்த வார்த்தைகளைக் கூறினார். ஆனால், வெகு விரைவாகவே ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரின் வெற்றிடங்கள் நி…
-
- 1 reply
- 343 views
- 1 follower
-
-
குட் பை சாம்பியன்ஸ்! தௌசண்ட் வாலா பட்டாசைக் கொளுத்திப் போட்டால் என்ன ஆகும்? படபடவென்று அதுவாக வெடித்து முடிக்கும் வரை யாராலும் தடுக்க முடியாது. ஷேவாக்கின் பேட்டிங்கும் அப்படித்தான். என் வழி தனி வழி! ‘‘விவியன் ரிச்சர்ட்ஸ் ஆட்டத்தைப் பார்த்தது இல்லை. ஆனால், ஷேவாக்கின் அதிரடியைப் பார்த்துள்ளேன்’’ என்று தோனி பெருமையாகக் குறிப்பிட்ட ஷேவாக், தனது 37-வது பிறந்தநாளான அக்டோபர் 20-ல், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார். டெல்லியில் படிக்கும்போது, ஷேவாக் விளையாடிய அரோரா வித்யா மந்திர் பள்ளி மைதானத்தை, கிரிக்கெட்டின் கோயிலாக நினைத்து பல சிறுவர்கள் அங்கே விளையாட விரும்புகிறார்கள்.சச்சினைப் போல பள்ளிக் காலத்திலேயே ஷேவாக் மிகவும் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரா…
-
- 1 reply
- 502 views
-
-
சிரேஷ்ட வீரர்கள் பிரகாசிக்கவில்லை ஆசியக் கிண்ணப் போட்டிகளில், இலங்கையின் சிரேஷ்ட வீரர்கள் சிறப்பாகப் பிரகாசிக்கவில்லை எனத் தெரிவித்துள்ள இலங்கை இருபதுக்கு-20 அணியின் தற்காலிகத் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், சிரேஷ்ட வீரர்கள் சிறப்பாகப் பிரகாசிக்கவில்லையெனில், இலங்கை அணி தடுமாறுமெனத் தெரிவித்துள்ளார். இலங்கை அணிக்கும் இந்திய அணிக்குமிடையில் இடம்பெற்ற ஆசியக் கிண்ணப் போட்டியில் தோல்வியடைந்தமை தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இப்போட்டியில், ஆரம்பத்திலிருந்தே தடுமாறிய இலங்கை, இறுதி நேரத்தில் பின்வரிசை வீரர்களின் சிறப்பான ஆட்டத்தின் உதவியுடன், 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றது. இந…
-
- 1 reply
- 429 views
-
-
எல் கிளாசிகோ நேரம் மாற்றம் ஸ்பெய்னின் முக்கிய கால்பந்தாட்டக் கழகங்களான ரியல் மட்ரிட், பார்சிலோனா அணிகள் மோதும் எல் கிளாசிகோ ஆட்டம் நடைபெறும் நேரம் ஆசிய ரசிகர்களையும் கவரும்படியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பரம வைரிகளான இந்த இரண்டு அணிகளும் மோதும் ஆட்டத்தைக் காண்பதற்கு உலகமே ஆவலுடன் காத்திருக்கும். வழக்கமாக இந்த ஆட்டங்கள் இலங்கை நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கே ஆரம்பமாகும். ஆனால் மாலை 5.30 மணிக்கு இனி ஆட்டங்கள் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. http://newuthayan.com/story/50614.html 2017-18 சீசனின் முதல் எல் கிளாசிகோ போட்டி எப்போது …
-
- 1 reply
- 378 views
-
-
மெத்தியூஸின் அதிரடியால் தென்னாபிரிக்காவுக்கு வெற்றியிலக்கு 300 மெத்தியூஸின் அசத்தலான துடுப்பாட்டம் காரணமாக இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 299 ஓட்டங்களை பெற்று, தென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக 300 ஓட்டங்களை நிர்ணியித்துள்ளது. இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமானதுமான போட்டி இன்று கொழும்பு, ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. அதன்படி இலங்கை அணி சார்பில் களமிறங்கிய நிரோஷன் திக்வெல்ல மற்றும் உபுல் த…
-
- 1 reply
- 879 views
-
-
ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. ஆனால் 2 வது மற்றும் 3 வது டெஸ்டில் படுதோல்வி அடைந்தது. அணியின் தலைவர் டு பிளிசிஸ் மிகவும் மோசமான ஃபார்மில் உள்ளார். 3 வது டெஸ்டில் 44 ஓட்டங்கள் தான் எடுத்தார். இந்தத் தொடரில் அவரின் சராசரி 20 ஐ விடவும் குறைவு. 24 ஆம் திகதி தொடங்கும் கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும். மோசமான தோல்வியால் டு பிளிசிஸ் ஓய்வு பெற இருக்கிறார் என்று செய்திகள் பரவின. இந்நிலையில் டி20 உலக கிண்ணம் வரை அணியில் நீடிப்பேன். அதன்பிறகே ஓய்வு. தற்போது ஓய…
-
- 1 reply
- 462 views
- 1 follower
-
-
சுழற்பந்தை விளையாட முடியவில்லை என்றால் இந்தியா செல்லாதீர்கள்: ஆஸி.க்கு பீட்டர்சன் அறிவுரை சுழற்பந்தை உங்களால் விளையாட முடியவில்லை என்றால் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்யாதீர்கள் என்று ஆஸ்திரேலியாவிற்கு பீ்ட்டர்சன் அறிவுறுத்தியுள்ளார். இங்கிலாந்து அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தவர் கெவிட் பீட்டர்சன். 2012-ம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. அப்போது 338 ரன்கள் குவித்தவர் பீட்டர்சன். இந்த மாதம் 23-ந்தேதி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் எப்படி விளையாட…
-
- 1 reply
- 365 views
-
-
கிரிக்கெட் இனி... 1843இல் இங்கிலாந்தில் கிரிக்கெட் ஆடும் ராணுவ தளபதி கிரிக்கெட் ஒரு காலனிய ஆட்டம். நியுசிலாந்து, இந்தியா, வங்கதேசம், இலங்கை, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே போன்ற அணிகள் இங்கிலாந்தின் வழிகாட்டலின் கீழ் ஆடிய ஒரு பண்பாட்டு பங்கேற்பு நிகழ்ச்சி. ஒரு காமன்வெல்த் நாடு என தன்னை இருத்திக் கொள்வதை தாண்டி இவ்விளையாட்டுக்கு ஒரு முக்கியத்துவம் இருந்ததில்லை. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்த துவங்கியது. இங்கிலாந்தின் கையில் இருந்து ஆட்சிக்கட்டிலை அது பறித்தது. இதைச் சொல்லும் போது பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்தே இந்த ஆட்டத்தை இங்கிலாந்து தான் ஆடி வளர்த்தெடுத்தது என நினைவில் கொள்ள வேண்டும். ஆஸ்திரேலியாவிடம் இருந்து மே…
-
- 1 reply
- 554 views
-
-
விராட் கோலிக்கு இந்த நிலைமையா? சோகத்தில் ரசிகர்கள்! Aug 20, 2022 06:27AM இந்திய அணி வீரர் விராட்கோலி சர்வதேச போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் ஆகஸ்ட் 19ஆம் தேதியுடன் 1000 நாட்களை கடந்துள்ளார். ஒவ்வொரு தலைமுறைகளின் இந்திய கிரிக்கெட் அணியின் பெயரை சர்வதேச அளவில் பெருமையுடன் உச்சரிக்க வைக்கும் வகையில் விளையாடும் வீரர்கள் உருவாவது உண்டு. கபில்தேவ், கவாஸ்கர், சச்சின், கங்குலி, தோனி என்ற அந்த வரிசையில் தன் பெயரை சிறப்பாக விளையாடி பதித்தவர் தான் விராட்கோலி. உலக அரங்கில் அடுத்தடுத்து பல சாதனைகள் படைத்து நம்பர் 1 வீரராக வலம் வந்தவர் தான் விராட் கோலி.சச்சினுக்கு அடுத்தபடியாக அவரது சாதனையை முறியடிக்க வந்தவர் என்று எதிர்ப்பார்க்கப்பட்டவர். …
-
- 1 reply
- 566 views
-
-
மைக் ஹஸ்ஸியை பயிற்சியாளராக்க தோனி பரிந்துரை? இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸ்ஸியை பரிசீலிக்கலாம் என்று ஓய்வு பெற்ற டெஸ்ட் கேப்டன் தோனி பிசிசிஐ-க்கு பரிந்துரை செய்ததாக தெரிகிறது. இது குறித்து இந்திய ஊடகம் ஒன்றில் எழுதப்பட்ட பத்தி ஒன்றை மேற்கோள் காட்டி ஆஸ்திரேலிய ஊடகம் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு: டன்கன் பிளெட்சருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரரும் ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடியவருமான மைக் ஹஸ்ஸி பெயரை தோனி பரிந்துரை செய்துள்ளதாக அந்தப் பத்தியில் கூறப்பட்டுள்ளது. பிசிசிஐ-யின் முதன்மை அதிகாரிகளுக்கு மைக் ஹஸ்ஸியை பயிற்சியாளர் பொறுப்பிற்கு தோனி பரிந்துரை செய்துள…
-
- 1 reply
- 800 views
-
-
சகோதரனை நினைத்து கண்ணீர் சிந்திய மஹேல (காணொளி இணைப்பு) இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன இறந்துபோன தனது சகோதரனை நினைத்து கண்ணீர் விட்டு அழுத சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. காலி காராப்பிட்டி வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சைப்பிரிவை ஸ்தாபிக்கும் நோக்குடன் (TRAIL WALK ) நடைபவனி இடம்பெற்று வந்தது. இதன் நிறைவு நாளான நேற்று காலி கராப்பிட்டி வைத்தியசாலையில் குறித்த புற்றுநோய் சிகிச்சைப்பிரிவுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது மேடையில் அமர்ந்திருந்த இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் குறித்த நிதி சேகரிப்பு அறக்கட்டளை அமைப்பின் தூதுவருமான மஹேல ஜெ…
-
- 1 reply
- 489 views
-
-
பார்சிலோனாவுக்கு சூப்பர் ஸ்டார் கேப்டன் இனியெஸ்டா கண்ணீர் பிரியாவிடை கால்பந்துக் கோப்பைகளுடன் இனியெஸ்டாவுக்குப் பார்சிலோனா பிரியாவிடை. - படம். | ஏ.எஃப்.பி. பார்சிலோனா அணியின் இத்தனையாண்டு கால வெற்றியில் பெரும் பங்களிப்பு செய்த ஸ்பெயின் நட்சத்திரம், கேப்டன் இனியெஸ்டாவுக்கு அந்த கிளப் விமரிசையான பிரியாவிடை அளித்தது. 34 வயதான இனியெஸ்டா பார்சிலோனாவுடன் தன் 12வது வயதில் இணைந்தார். சேர்ந்த புத்தில் இளையோர் லீகுகளிலும், பி டீமிலும் ஆடினார், பிறகு 2002-ல் பெருமைக்குரிய பிரதான அணியில் இணைந்தார். வெள்ளியன்று கேம்ப் நூவில் நடந்த மிகப்பெரிய பிரியாவிடை நிகழ்வில் பார்சிலோனா அணியின் அனைத்து வீரர்கள், இனிய…
-
- 1 reply
- 829 views
-
-
இதை படிச்சிட்டு என்னடா எதோ கிரிக்கட் பற்றி எழுத போறன் என்று நினைத்து வந்தவர்களிற்க்கு ஏமாற்றமே. பலர் அறிந்திருக்க முடியாத அளவிற்க்கு இந்தியாவில் ஒரு பகுதியில் உதைபந்தாட்டம் கிரிக்கெற்றை விடவும் மேலாக நேசிக்கப்படுகின்றது என்று சொன்னால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும். இந்தியாவில் உள்ள மாநிலங்களிற்க்கே தெரியாமல் கிரிக்கற்றால் பின்தள்ளப்பட்ட இரு கழகங்களின் கதை இது. உதைபந்தாட்டம் பற்றி பேசினால் அது ஐரோப்பா அல்லது தென் அமெரிக்கா பற்றியதாக தான் இருக்கும். ஆசியா பற்றி யாரும் நினைக்க மாட்டார்கள். அதுவும் இந்தியா பற்றி நினைப்பாரே இல்லை. கல்கத்தா நகரை சேர்ந்த இரு கழகங்களுக்கிடையிலான இந்த ஆட்டமே உலகில் முக்கிய இடத்தை பிடிக்கின்றது. இந்தியாவில் இது சாத்தியமா…
-
- 1 reply
- 785 views
-
-
இந்தியாவின் சவாலை முறியடித்து 7 விக்கெட்களால் தென்னாபிரிக்கா வெற்றி (என்.வீ.ஏ.) டெல்லி, அருண் ஜெய்ட்லி விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (09) இரவு கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட முதலாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் சவாலை முறியடித்து 7 விக்கெட்களால் தென் ஆபிரிக்கா வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் தென் ஆபிரிக்கா முன்னிலை அடைந்துள்ளது. இந்தியாவின் அதிரடி வீரர் இஷான் கிஷான் குவித்த அதிரடி அரைச் சதம், ரசி வென் டேர் டுசென், டேவிட் மில்லர் ஆகியோரின் அதிரடி அரைச் சதங்களால் வீண் போனது. இந்திய அணியில் வழமையான அணித் தலைவர் ரோஹித் ஷர்மா, விராத் க…
-
- 1 reply
- 221 views
-
-
ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: டாப்-10-ல் இந்திய வீரர்கள் இல்லை ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஒருவர் கூட முதல் 10 சிறந்த வீரர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. டேவிட் வார்னர், யூனிஸ் கான் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர். இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் கண்ட முதல் பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் 4 இடங்கள் முன்னேறி 7-வது இடம் பிடித்துள்ளார். தோல்வி கண்ட ஆஸ்திரேலிய அணியின் ஒரே சிறந்த பேட்ஸ்மென் டேவிட் வார்னர் 4-ஆம் இடத்திற்கு முதல் முறையாக முன்னேறியுள்ளார். டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் இலங்கை வீரர் சங்கக்காரா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். டிவிலியர்ஸ், சந்தர்பால், வார்னர், அஞ்சேலோ மேத்யூஸ், ஹசிம் ஆம்லா, யூனிஸ் கான், ராஸ் டெய்லர், ஜோ ரூட், …
-
- 1 reply
- 654 views
-
-
1,000 போட்டிகளில் வென்று ரோஜர் பெடரர் சாதனை டென்னிஸ் விளையாட்டில் ஆயிரம் போட்டிகளில் வென்ற மூன்றாவது நபர் என்ற சாதனையை ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் பெற்றுள்ளார். உலக ஒற்றையர் தரவரிசையில் 2-வது இடத்திலுள்ள பெடரர், நேற்று நடைபெற்ற பிரிஸ்பென் சர்வதேச டென்னிஸ் இறுதிப்போட்டியில், உலகின் 8-ம் நிலை வீரரான கனடாவின் மிலோஸ் ரயோனிக்கை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். பெடரர் பெறும் 1,000வது வெற்றி இதுவாகும். ரயோனிக்கை அவர், 6-4, 6-7(2), 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். டென்னிஸ் வரலாற்றில் 1,000 போட்டிகளில் வெற்றி பெறும் மூன்றாவது நபர் பெடரர் ஆவார். முன்னதாக, அமெரிக்காவின் ஜிம்மி கானர்ஸ் (1253), இவான் லெண்டில் (1071) ஆகியோர் 1,000 போட்டிகளில் வென்றுள்ளனர். பெடரர்…
-
- 1 reply
- 404 views
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,"இந்தியாவின் சுவர்" என்று அனைவராலும் அழைக்கப்பட்டார் ஸ்ரீஜேஷ் 34 நிமிடங்களுக்கு முன்னர் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா ஹாக்கியில் வெண்கலப் பதக்கம் வென்ற அந்த தருணம், வீரர்கள் பெருமகிழ்ச்சியில் துள்ளி குதித்து கொண்டாடினர். ஆனால் பிஆர் ஸ்ரீஜேஷ் மட்டும் அமைதியாக அந்த இடத்தை விட்டு நடந்து சென்று, மைதானத்தின் ஒரு முனையில் இருந்த கோல் போஸ்ட்டின் முன் தலைகுனிந்து நின்றார். அந்த காட்சி அவருக்கும் கோல் போஸ்டுக்குமான நீண்ட நெடிய ஆழ்ந்த உறவை பிரதிபலித்தது. ஆம். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக கோல்போஸ்ட் தான் அவரின் உறைவிடமாக இருந்தது. ஆனால் அந்த வீட்டில் இனி இருக்க முடியாது. கோல் போஸ்டை அவர் எந்த அளவுக்கு `மிஸ்…
-
- 1 reply
- 550 views
- 1 follower
-