விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
முரளிக்கு நடந்த அநீதிக்கு ஸ்டீவ் வோ கவலை கிரிக்கெட் உலகில் அண்மைக் காலமாக முன்னிலை பந்துவீச்சாளர்களாக வலம் வந்த இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஒரு சில சுழல் பந்துவீச்சாளர்கள் பந்தை வீசி எறிவதாக குற்றம் சுமத்தப்பட்டு வருவதை அதிகளவில் அவதானிக்க முடிகின்றது. இதன் காரணமாக குறித்த வீரர்களின் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குரியாக மாறியதையும் காணமுடிந்தது. இந்நிலையில், உலகின் தலைசிறந்த சுழல் பந்துவீச்சாளர்களில் ஒருவராக போற்றப்படும் முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தாலும், அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பகாலத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கும், பிரச…
-
- 1 reply
- 522 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,2011, ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையுடன் தோனி 51 நிமிடங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் (Hall of Fame) பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். "அழுத்தத்தின் போதும் நிதானமாக இருக்கும் இயல்புடனும், ஒப்பிடமுடியாத கிரிக்கெட் திறமையுடனும், குறுகிய வடிவ கிரிக்கெட்டின் முன்னோடியாக கொண்டாடப்படுகிறார் எம்.எஸ். தோனி. கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பினிஷர்களில் ஒருவராகவும், கேப்டனாகவும், விக்கெட் கீப்பராகவும் இருக்கும் தோனி, ஐ.சி.சி கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டதன் மூலம் கௌரவிக்கப்படுகிறார்" என்று ஐசிசி-யின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. திங்கள்கிழமை (ஜூன் 9) லண்டனில் நடைபெ…
-
- 1 reply
- 132 views
- 1 follower
-
-
தர்மசாலா: கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி சிறப்பான வெற்றியைப் பெற்று கவுரமாக ஒருநாள் தொடரை முடித்தது. இயான் பெல் சிறப்பான சதம் போட்டு இந்திய அணியின் வெற்றியைத் தடுத்து விட்டார்.இங்கிலாந்து அணியுடன் 4 ஒருநாள் போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஒரு போட்டியில்தான் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்தது. இதர 3 போட்டிகளிலும் இந்திய அணி தொடர்ச்சியாக வென்று தொடரைக் கைப்பற்றியது. இதனால் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னணியைப் பெற்றது.இந்நிலையில் இன்று காலை ஹிமாச்சல் பிரதேசம் தர்மசாலாவில் கடுமையான குளிருக்கு மத்தியில் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது.இந்திய அணி வீரர்கள் தொடக்கம் முதலே ரன்களை எடுக்க பெர…
-
- 1 reply
- 518 views
-
-
விண்டிஸ் அணிக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் – இங்கிலாந்து நிதான ஆட்டம்! விண்டிஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், 231 ஓட்டங்களைப் பெற்று இங்கிலாந்து நிதான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், ஒருநாள், மற்றும் T-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெற்று வரும் நிலையில், 3வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகியது. செயின்ட் லூசியாவில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற விண்டிஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது. அதன் பிரகாரம் இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்…
-
- 1 reply
- 800 views
-
-
Breaking Now தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஆம்லா திடீர் விலகல் டிவில்லியர்ஸ் மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக செயல்படுவார் தென் ஆப்பிரிக்க இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது Read more at: http://tamil.oneindia.com/
-
- 1 reply
- 535 views
-
-
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் துவக்க ஆட்டக்காரரான கிரிஸ் கேல் 333 ரன்களை அடித்து சாதனைப் பட்டியலில் தனது பெயரையும் பதிவு செய்துள்ளார். இலங்கைக்கு எதிராக காலியில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தை மேற்கு இந்தியத் தீவுகள் அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் என்ற வலுவான நிலையில் ஆரம்பித்தது. முதல் நாள் ஆட்டத்தில் 219 ரன்களை அடித்திருந்த கிரிஸ் கேல் தொடர்ந்து ஆடி மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு 300 ஓட்டங்களைத் தாண்டினார். இதன் மூலம் வெளிநாடு ஒன்றில் நடந்த போட்டியில் 300 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த முதல் மேற்கிந்திய அணி வீரர் என்ற சாதனையை கிரிஸ் கேல் புரிந்துள்ளார். காலி கிரிக்கெட் மைதானத்தில்…
-
- 1 reply
- 752 views
-
-
ஹாசிம் ஆம்லாவிடம் விருது பெற்ற இந்திய வம்சாவளி கிரிக்கெட் வீரர் நரபலி! தென்ஆப்ரிக்காவில் மன வளர்ச்சி குன்றிய இந்திய வம்சாவளி கிரிக்கெட் வீரர் ஒருவர் தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவரது நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட வீரரின் பெயர் பெயர் நவாஸ் கான் (வயது 23). இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், உம்ஸிண்டோ என்ற நகரில் தாயுடன் வசித்து வந்தார். இவரது நெருங்கிய நண்பர் தண்டோக்வேக் டுமா. இவர் உள்ளூர் மந்திரவாதி ஒருவரை தனது சொந்த பிரச்னைகள் தொடர்பாக சந்தித்துள்ளார். அதற்கு, அந்த மந்திரவாதி ஒருவரது தலையை வெட்டி எடுத்து வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து தண்டோக்வேக் டுமா, மன வளர்ச்சி குன்றிய நவாஸ் கான் த…
-
- 1 reply
- 391 views
-
-
பார்சிலோனாவை பழிவாங்கியது ரியல் மாட்ரிட்! ஸ்பெயினின் பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் அணிகள் நேற்று மோதிய எல் கிளாசிக்கோ போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. கால்பந்து உலகின் மிகப்பெரிய போட்டி என்றால் அது எல் கிளாசிகோ தான். புகழ்பெற்ற இவ்விரு அணிகள் மோதும் இப்போட்டி என்றுமே கால்பந்து ரசிகர்களின் இதயத்துடிப்பைக் கட்டிப்போட்டுவிடும். எம்.எஸ்.என் எனப்படும் மெஸ்ஸி, சுவாரஸ், நெய்மர் கூட்டணிக்கும் பி.பி.சி எனப்படும் பேலே, பென்சிமா, கிறிஸ்டியானோ ரொனால்டோ கூட்டணிக்குமான இந்த யுத்தத்தின் முதல் அத்தியாயத்தை பார்சிலோனா அணி 4-0 என்ற கணக்கில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. கேம்ப் நௌ மைதானத்தில் நடந்த இப்போட்டி, மறைந்த முன்னாள் பார்சிலோனா வீரர்…
-
- 1 reply
- 639 views
-
-
டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் லீக் தொடர்களுக்கு ஐ.சி.சி. ஒப்புதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் லீக் தொடர்களை நடத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆலோசனைக் கூட்டம் நேற்று புதுடெல்லியில் இடம்பெற்ற போதே இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.ஐ.சி.சி.யினால் நடத்தப்படும் கிரிக்கெட் தொடர்களில் புதிதாக இரண்டு தொடர்களை நடத்த ஐ.சி.சி. திட்டமிட்டுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் லீக் ஆகிய இரண்டு தொடர்களும் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.டெஸ்ட் லீக் தொடரில் 9 அணிகளும், ஒருநாள் லீக் தொடரில் 13 அணிகளும் விளையாடவுள்ளன. டெஸ்ட் லீக் தொடர் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டி…
-
- 1 reply
- 346 views
-
-
-
ஜூலை 7: 'கேப்டன் கூல்' தோனி பிறந்தநாள் சிறப்பு பகிர்வு மகேந்திர சிங் டோனி ஜூலை ஏழு ,1981 அன்று ராஞ்சியில் பிறந்தார்.அப்பா அரசு நிறுவனமான மேகானில் வேலைப்பார்த்தார். ஏழ்மை சூழ்ந்த குடும்பம். அதனால் பெரும்பாலும் தன் பொழுதுகளை சாலை ஓரம் நண்பர்களோடு விளையாடுவதில் கழித்தவர் இளம் வயதில் செம விளையாட்டு பையன்.பிடித்த விளையாட்டு கால்பந்து தான்,கூடவே பாட்மிண்டன் ! கால்பந்தில் டோனி அணியின் கோல் கீப்பர்,பல காலத்திற்கு கால்பந்தே விளையாடிக்கொண்டு இருந்தார் . ஒரு கிரிக்கெட் போட்டியின் பொழுது அணியின் விக்கெட் கீப்பருக்கு காயம் ஏற்பட்டதால் தோனியை கீப்பிங் செய்ய சொன்னார்கள் நண்பர்கள்.அப்படி தொற்றிக்கொண்டது தான் கிரிக்கெட் ஆர்வம். இளம் வயதிலேயே ரொம்பவே துறுதுறுப்பான பையன்.காலையில் எழுந்தத…
-
- 1 reply
- 2.4k views
-
-
நூற்றாண்டின் சிறந்த செஞ்சுரி.. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லிஸ்டில் வீரேந்திர சேவாக் சதம்! மெல்போர்ன்: இந்த நூற்றாண்டில், ஆஸ்திரேலிய மண்ணில் அடிக்கப்பட்ட மிகச்சிறந்த செஞ்சுரிகளில் ஒன்றாக வீரேந்திர சேவாக்கின் 195 ரன் விளாசல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா (வாரியம்) இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு, 21ம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாவில் அடிக்கப்பட்ட 15 பெஸ்ட் செஞ்சுரிகளை தேர்வு செய்து வருகிறது. 2000வது ஆண்டு முதல் இப்போதுவரையிலான செஞ்சுரிகள் அதில் அடங்கும். முதல்கட்டமாக 15 முதல், 10 வரையிலான பெஸ்ட் செஞ்சுரி பட்டியலை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் 13வது இடத்தை சேவாக்கின் 195 ரன் பெற்றுள்ளது. டேவிட் வார்னர் நியூசிலாந்த…
-
- 1 reply
- 457 views
-
-
2015 விளையாட்டு உலகம்! 2015-ம் ஆண்டு, உலகில் நடந்த முக்கிய விளையாட்டு நிகழ்வுகள், விறுவிறுப்பான போட்டிகளின் தொகுப்புகள் இங்கே... கிரிக்கெட் 2015 கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான வருடம்தான். இந்த வருடத்தின் தொடக்கத்திலே ஒருநாள் உலககோப்பை, அதனை தொடர்ந்து ஐ.பி.எல், முதல் முறையாக நடைபெற்ற பகல் இரவு டெஸ்ட் போட்டி, அதிவேக சதம் என பல சுவாரஸ்யங்களை கொண்டது. > ஜனவரி மாதத்தில் தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மேற்கு இந்திய தீவுகள் அணி, அங்கு ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடியது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் டிவில்லிர்ஸ் 31 பந்துகளில் சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்தார…
-
- 1 reply
- 891 views
-
-
`பார்சிலோனா`அணியிலிருந்து விலக மெஸ்ஸி முடிவு! August 26, 2020 பிரபல காற்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) தனது ஆஸ்தான அணியான பார்சிலோனாவிலிருந்து (Barcelona) விலக விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் இடம்பெற்ற ஐரோப்பிய காற்பந்தாட்தத் தொடரில் மெஸ்ஸி தலைமையில் களமிறங்கிய பார்சிலோனா அணி காலிறுதிப் போட்டியில் பேயர்ன் முனிச்சிடம் 8க்கு 2 என்ற கணக்கில் தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. இந்நிலையில், இவ் வார இறுதியில் நடைபெறவுள்ள கொரோனா பரிசோதனைக்கு தான் வரப்போவதில்லை எனவும், அணியிலிருந்து உடனடியாக விலக விரும்புவதாகவும் பார்சிலோனா அணியின் நிர்வாகத்திடம், மெஸ்ஸி தெரிவித்துள்ளார். இது குறித்து ஆலோசித்து முடிவ…
-
- 1 reply
- 841 views
-
-
நியூஸிலாந்துக்கு எதிராக 503 ரன்கள் சேர்த்து ஏரோன் பின்ச், ரயான் கார்ட்டர்ஸ் சாதனை ஏரோன் பின்சை பாராட்டும் நியூஸி. வீரர்கள். | படம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா. நியூசிலாந்துக்கு எதிராக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அணி விளையாடிய ஆட்டத்தில் தொடக்க விக்கெட்டுக்காக 503 ரன்கள் சேர்த்து பின்ச், கார்ட்டர்ஸ் சாதனை நிகழ்த்தினர். நியூஸிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டுள்ளது. 29-ம் தேதி சிட்னி பிளாக்டவுன் பார்க்கில் தொடங்கிய 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணியின் தொடக்க வீரர்கள் 503 ரன்கள் குவித்து சாதனை நிகழ்த்தியுள்ளனர். இந்நிலையில் பிட்ச் மோசமடைந்ததன் காரணமாக இந்த பயிற்சி ஆட்டம் 503/1 என்ற நிலையில் கைவிடப்பட்டது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா அணியின் கார…
-
- 1 reply
- 389 views
-
-
10 JUN, 2025 | 06:04 PM யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியின் 175வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடாத்தப்படும் விளையாட்டு விழாவின் T-10 கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த 7, 8 ஆகிய திகதிகளில் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாளை 11ஆம் திகதி அரையிறுதிப் போட்டியுடன் இறுதிப்போட்டி நிறைவு பெறவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு கடந்த 7ஆம் திகதி யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியின் மைதானத்தில் நடைபெற்றது. வட மாகாணத்தைச் சேர்ந்த 14 அணிகள் பங்குபற்றும் இந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வானது கல்லூரியின் அதிபர் அருட்திரு A.P. திருமகன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்லுரியின் புகழ்பூத்த விளையாட்டு வீரர் யூவான் ரைற்றஸ் அவரது பாரியாருடன் …
-
- 1 reply
- 156 views
- 1 follower
-
-
சாதாரண பள்ளி ஆசிரியரின் மகனை விம்பிள்டன் சாம்பியனாக்கிய மகேஷ் பூபதி! விம்பிள்டனில் ஒன்றல்ல... மூன்று சாம்பியன் பட்டங்களை தட்டிவந்திருக்கிறது இந்திய படை. மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்ஸா, கலப்பு இரட்டையர் பிரிவில் லியாண்டர் பெயஸ், ஜூனியர் இரட்டையர் போட்டியில் சுமித் நாகல் என ஒரே நேரத்தில் மூன்று இந்தியர்களும் சாம்பியன் பட்டத்தை அள்ள, இந்திய டென்னிஸ் உலகமும், ரசிகர்களும் உற்சாகத்தில் மிதிக்கிறார்கள். சானியாவின் நம்பர் ஒன் கனவு! மார்ட்டினா ஹிங்கிஸுடன் இணைந்தபிறகு சானியா மிர்ஸாவுக்கு வெற்றிகள் குவிய ஆரம்பித்தது. இந்த ஆண்டு இவர்கள் இருவரும் இணைந்து ஆட ஆரம்பித்த பிறகு மூன்று சாம்பியன் பட்டங்களை வென்றதோடு உலகின் நம்பர் ஒன் ஜோடியாக ரேங்கிங்கிலும் முதலிடம் பிடித்தார்கள்.…
-
- 1 reply
- 411 views
-
-
பாக்கிஸ்தானிற்கு எதிரான தொடரிலிருந்து விலகியுள்ள இலங்கை வீரர்களிற்கு எதிராக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஜாவிட் மியன்டாட் வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் தொடர்களை விட உலகநாடுகளில் இடம்பெறும் லீக் போட்டிகளிற்கு முன்னுரிமை வழங்கும் வீரர்களை இலங்கை தண்டிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச போட்டிகளே வீரர்களின் மிகவும் முன்னுரிமைக்குரிய விடயமாக அமையவேண்டும் என தெரிவித்துள்ள மியன்டாட் பாக்கிஸ்தான் தொடரிலிருந்து விலகிய வீரர்களை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தண்டிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தானிற்கு இலங்கையின் முக்கிய வீரர்கள் விஜயம் மேற்க…
-
- 1 reply
- 702 views
-
-
ஐ.சி.சியின் விதிமுறைகளை தொடர்ச்சியாக மீறிவரும் இலங்கை அணி சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) விதிமுறைகளை மீறும் வகையில் அண்மைக்காலமாக தொடர்ந்து மந்த கதியில் பந்துவீசி வருவது இலங்கை அணிக்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தற்போது நடைபெற்றுவரும் முத்தரப்பு T-20 தொடரில் பங்களாதேஷ் அணிக்கெதிராக கடந்த சனிக்கிழமை நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களை வீசுவதற்கு அதிக நேரத்தை எடுத்துக் கொண்டது. இது போட்டியை தாமதப்படுத்தும் செயல் என ஐ.சி.சியின் மத்தியஸ்தர் கிரிஸ் ப்ரோட் குற்றம் சாட்டியிருந்தார். இதன்படி, ஐ.சி.சியின் வீரர்கள் ஒழுங்குமுறைக் கோவைகளி…
-
- 1 reply
- 343 views
-
-
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி அ-அ+ வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. #PAKvWI #KarachiT20I கராச்சி: பாகிஸ்தான் சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அங்கு சுமார் 10 ஆண்டுக…
-
- 1 reply
- 382 views
-
-
இவரும் ஒரு கிரிக்கெட் அணியின் கேப்டன்தான்...! கென்யாவில் ஒரு கிரிக்கெட் அணி உள்ளது. இந்த அணிக்கு பெயர் மசாய் கிரிக்கெட் வாரியர். கென்யாவில் கால்நடை மேய்ச்சலில் ஈடுபட்டு வரும் பழங்குடி இளைஞர்கள் இணைந்து தோற்றுவித்த அணி, அவர்கள் அணிந்த ஆடைகளால் அகில உலக பாப்புலரானது. கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடும் சமயத்தில் இவர்களது கிரிக்கெட் பயிற்சி ஆரம்பமாகும். பயிற்சினா சும்மாலாம் கிடையாது. தொலைவில் உள்ள சிங்கம், சிறுத்தைகளை குறிவைத்து கல்கொண்டு அடித்து விரட்டுவதுதான் இவர்களது பயிற்சி. பின்னர் இதே பகுதியில் தொடங்கப்பட்ட இந்த கிரிக்கெட் அணியால், பழங்குடி மக்களிடையே எச்.ஐ.வி பாதிப்பு குறைந்ததுதான் இந்த செய்தியின் ஹைலைட். இந்த அணியின் கேப்டனாக இருப்பவர்தான் நிசான் ஜோனதான் ஒலி மெசாமி. …
-
- 1 reply
- 477 views
-
-
என்னை சிறந்த கிரிக்கெட் வீரராக மாற்றிய பெருமை டோணிக்கே சேரும்.. சொல்வது தென் ஆப்பிரிக்க கேப்டன்! டெல்லி: என்னை ஒரு கிரிக்கெட் வீரராக மாற்றிய பெருமை இந்திய அணி கேப்டன் டோணியை சேரும் என்று தென் ஆப்பிரிக்க அணியின் டி20 அணி, கேப்டன் பாப் டுப்ளசிஸ் தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியபோது அந்த அணியின் கேப்டனான டோணியிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டதாக டுப்ளசிஸ் தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அக்டோபர் 2ம் தேதி முதல் டி20 போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது. இதையொட்டி தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஏற்கனவே டெல்லி வந்துவிட்டனர். டுப்ளசிஸ் புகழாரம் டெல்லியில் நிருபர்களிடம் பேசிய தென் ஆப்பிரிக்க டி20 அணிக்கான, கேப்டன் பாப் டுப்ள…
-
- 1 reply
- 392 views
-
-
வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடிய ஆக்ரோஷமான இந்திய பந்துவீச்சாளர்களை உருவாக்குவேன்: அக்தர் by : Anojkiyan இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்குப் பயிற்சியளிக்க தான் எப்போதும் தயாராக இருப்பதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிவேக பந்துவீச்சாளர் சொயிப் அக்தர் தெரிவித்துள்ளார். மேலும், வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடிய ஆக்ரோஷமான பந்துவீச்சாளர்களை உருவாக்குவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘என்னிடம் உள்ள அறிவைப் பரப்ப வேண்டும் என்பதே எனது விருப்பம். நான் கற்றுக்கொண்டது பந்துவீச்சுப் பயிற்சி பற்றி தான். அதனை அடுத்தவர்களுக்குக் கற்றுத் தர ஆர்வமாக உள்ளேன். இப்போதுள…
-
- 1 reply
- 961 views
- 1 follower
-
-
வியாஸ்காந்திற்கு பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாட வாய்ப்பு ! 29 DEC, 2022 | 09:43 PM இடம்பெற்று முடிந்த லங்கா பிறீமியர் லீக் தொடரில் ஜெப்னா கிங்ஸ் (Jaffna Kings ) அணிக்காக விளையாடிய யாழ். வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜெப்னா கிங்ஸ் அணியில் இளம் வீரரான வியாஸ்காந்த் சுழல்பந்து வீச்சில் 8 இன்னிங்ஸ்களில் 13 விக்கெட்டுகளை அசத்தினார். அத்துடன் சிறந்த வளர்ந்துவரும் வீரருக்கான விருதையும் வென்றிருந்தார். வியாஸ்காந்த் பங்களாதேஷ் பிரீமியர் லீக் அணியான Chattogram Challengers இனால் 2023 BPL க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். …
-
- 1 reply
- 270 views
- 1 follower
-
-
மைதானத்தில் மயங்கி விழுந்த கால்பந்து வீரர் மரணம் கால்பந்து போட்டியின்போது மாரடைப்பு ஏற்பட்டதால் மைதானத்தில் மயங்கி விழுந்த பெல்ஜியம் நாட்டின் இளம் கால்பந்து வீரர் கிரிகோரி மெர்டன்ஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 21 வயதுக்குட்பட்டோருக்கான பெல்ஜியம் தேசிய அணியில் இடம்பெற்றிருந்த துடிப்பான வீரர் கிரிகோரி மெர்டன்ஸ். தேசிய அணியில் சில போட்டிகளிலே விளையாடியிருந்தாலும், செர்கிள் புரூகஸ், லோகிரன் ஆகிய கழகங்களுக்காக சுமார் 100 போட்டிகளில் விளையாடிய அனுபவம் பெற்றவர். இவர் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ரிசர்வ் அணி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோதுஇ திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் நிலைகுலைந்த அவர் மைதானத்தில…
-
- 1 reply
- 370 views
-