யாழ் ஆடுகளம்
கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு
யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.
யாழ் ஆடுகளம் பகுதியில் கள உறுப்பினர்களுக்கான போட்டிகள், விளையாட்டுக்கள், பட்டிமன்றங்கள் போன்றன இணைக்கப்படலாம்.
160 topics in this forum
-
வணக்கம் கள உறவுகளே... :P சினிமா கேள்வி பதில் போட்டி சினிமா பற்றிய கேள்வி பதில் போட்டி... முதலில் கீழே ஒரு கேள்வி தரப்பட்டுள்ளது. கேள்விக்கு பதில் தந்தவர் அடுத்த கேள்வியை கேட்கலாம்.. அப்படி அவர் இல்லை என்றால் வேறு யார் என்றாலும் கேள்வியை கேட்கலாம். கேட்ட கேள்விக்கு 2 நாளுக்கு மேல் பதில் தெரியாவிட்டால் கேள்வி கேட்டவரே பதிலை கூறிவிட்டு அடுத்த கேள்வியை கேக்கலாம்... கேள்விகள்..... * ஒரு சினிமா துறையில் இருப்பவரின் படத்தை தந்து அவர் யார் என்றோ?? * சினிமா பாடல்வரிகளை தந்து ..இந்த பாடலின் வரிகளை எழுதினது யார்? அல்லது இந்த பாடலை பாடியவர்கள் யார்? அல்லது இந்த பாடலின் இசையமைப்பாளர் யார்? என்று இப்படியான கேள்விகளை கேக்கலாம் * பழைய புதிய திரைப்படங்களில் இருந…
-
- 102 replies
- 20.3k views
-
-
பூக்கள் விற்கும் கடையில் இரண்டு பெண்கள் நுழைந்தார்கள். முதலில் நுழைந்த பெண் கடைக்காரரிடம் பத்து ரூபாய் கொடுத்து, ஒரு பூ வேண்டுமென்று கேட்டாள். அங்கிருந்த கடைக்காரன், ''மஞ்சள் ரோஜாவின் விலை ஏழு ரூபாய். சிவப்பு ரோஜாவின் விலை எட்டு ரூபாய். வெள்ளை ரோஜாவின் விலை பத்து ரூபாய். மூன்றில் எது வேண்டும்?'' என்று கேட்டான். அவள் தனக்கு சிவப்பு ரோஜா வேண்டும் என்று கேட்டு வாங்கிப் போனாள். இரண்டாமவளும் பத்து ரூபாய் கொடுத்தாள். ஆனால், அவளிடம் எந்தக் கேள்வியும் கேட்காமல் வெள்ளை ரோஜாவை எடுத்துக் கொடுத்தான். அவளும் அதை எடுத்துச் சென்றாள். அவனுக்கு எப்படித் தெரியும், அவளுக்கு அதுதான் தேவையென்று? :?: :?:
-
- 305 replies
- 31.5k views
-
-
யாழ் தாக்குதலில் அழிந்து போன... பாட்டுக்கு பாட்டும் மீண்டும்..... விதிகள் எல்லொருக்கும் தெரிந்ததே.... ஒருவர் பாடல் எழுதி முடித்த எழுத்தில் இருந்து மற்றவர் பாடலை அரம்பிக்க வேண்டும். உயிரின் உயிரே... உயிரின் உயிரே... நதியின் மடியில் காத்துக் கிடக்கின்றேன்... ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இறைக்கும்... இருந்தும் வேர்க்கின்றேன்... :arrow: வே ( அடுத்த பாடல் அரம்பிக்கவேண்டிய சொல்லை இவ்வாறு சுருக்கமாக கிழே எழுதிவிடவும். அடுத்த பாடலை அரம்பிப்பவருக்கு இலகுவாக இருக்கும் )
-
- 3k replies
- 153.2k views
-
-
யார்? என்ன? எங்கே? இப்பகுதி பொதுஅறிவு சார்ந்த விடயத்திற்காக ஆரம்பிக்கப்படுகிறது. * இங்கு சில படங்கள் இடப்பட்டு யார்? என்ன? எங்கே? என்பதன் அடிப்படையில் கேள்வி கேட்கப்படும். * கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதில் கிடைத்ததன் பின்னரே அடுத்த கேள்வி கேட்கப்படவேண்டும். * சரியான பதிலா என்பதை கேள்வி கேட்டவர் உறுதிசெய்வதுடன் அதுபற்றிய மேலதிக தகவல்கள் சிலவற்றையும் எழுதலாம். * யார் சரியான பதிலை சொல்கிறாரோ அவரே அடுத்த கேள்வியை கேட்க முடியும். * கூடியது... ஒரு கிழமையே (கேள்வி கேட்ட நாளிலிருந்து 7 நாட்கள்) பதில்கூறுவதற்கான காலமாக வழங்கப்படும். * ஒருகிழமைக்குள் யாரும் சரியான பதிலை சொல்லாவிட்டால், கேள்விகேட்டவரே பதிலைச் சொல்லி அடுத்த கேள்வியையு…
-
- 360 replies
- 36.5k views
-
-
1)இலை உண்டு கிளை இல்லை எவருமில்லை வாழ்த்தாதார் நட்டபின்னால் மடல் விரிப்பேன் நாலிரண்டு மாதத்தில் முகம் காட்டி நான் சிரிப்பேன் பலனோ என்னால் ஒரு முறை தான் நான் யார்? 2)நாலெட்டாய் நானிருப்பேன் அழகை நான் தருகின்றேன் அனைத்தையும் உருக்குலைப்பேன் நான் யார்?
-
- 2k replies
- 156.2k views
- 1 follower
-
-
பல்லவியை கண்டுபிடியுங்கள்...! கள உறவுகளே... மட்டை நிறுத்துனரே..அடச்சீ மன்னிக்கவும்.. மட்டுநிறுத்துனர்களே புதிதாக ஒரு போட்டி இதோ உங்களுக்காக உங்கள் ஆதரவுடன் ஆரம்பமாகிறது..! போட்டி இதுதான் ஒரு பாடலின் இடை வரிகளை (சரணம்) ஒருவர் பாடுவார்.. அதனை வைத்து பாடலின் ஆரம்ப வரிகளை (பல்லவி) நீங்கள் கண்டுபிடிக்கவேண்டும்.. என்ன நீங்கள் ரெடியா???? அந்தப்பக்கம் நம் உறவுகள் பட்டிமன்றத்தில் தூள் கிளப்புகிறார்கள் அதே போல் இங்கும் தூள் கிளப்புங்கள்..... யார் முதலில் போட்டியை ஆரம்பித்து வைக்கப் போகிறார்கள் பார்ப்போமா????
-
- 1.6k replies
- 118.5k views
-
-
பட்டிமன்றம் - நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகின்றதா சோம்பேறியாக்கின்றதா? நடுவர்கள் : , சண்முகி , சோழியன் உற்சாகப்படுத்துகின்றது என்ற அணியில்: வசம்பு -அணி தலைவர் குறும்பன் ஈஸ்வர் விக்டோர்ப் குளக்காட்டான் மழலை நடா குருவி மதுரன் சோம்பேறியாக்கின்றது என்ற அணியில்: சியாம் -அணி தலைவர் சிம்ரன்2005 வியாசன் ஈழப்பிரியேன் நிதர்சன் நிலவன் இளைஞன் சாத்திரி மதன் திரையின் பின்னால் : இராவணன், மோகன் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு : "பபா" தூயா. :P ஒரு அணி கருத்து கூறியவுடன் அடுத்த அணியில் கருத்து கூறதவர்கள் கருத்தை கூறலம். அணி தலைவர்கள் ஆரம்பத்திலும், முடிவிலும் கருத்து எழ…
-
- 60 replies
- 49.2k views
-
-
விதிமுறைகள் அதிகம் இல்லை. நான் ஒரு ஊரின் பெயரை சொன்னால், அந்த பெயரின் கடைசி எழுத்தில் நீங்கள் ஒரு ஊரின் பெயரை சொல்ல வேண்டும். ஊர்கள் தமிழ் ஈழத்திற்குள் உள்ளவை மட்டுமே. நான் ஆரம்பிக்கின்றேன். வல்வெட்டிதுறை ர /ற /ரா/றா வில் ஆரம்பிக்கலாம்.
-
- 1.8k replies
- 84.1k views
-
-
குறுக்கெழுத்து போட்டி 1 இடமிருந்து வலம் 1)ஓய்வுபெற்றவர்களுக்கு கிடைக்கும் பணம் 4)ஆண்டாளின் மறுபெயர் 5)நாகரிகமற்றவன் குழம்பியுள்ளான் 7)பாப்பரசரின் வாசஸ்தலம் 9)வில்லன், நகைச்சுவை, குணச்சித்திரம் என்று உயர்ந்த நடிகர் 10)உறவு/தீவட்டி என்று பொருள்படும் 12)வலிமையான மரமொன்று 13)முகத்தின் ஒரு பகுதி மேலிருந்து கீழ் 1)தாலாட்டு என்று பொருள்படும் 2)ஆரோக்கியமாக இருப்பதைக் குறிக்கும் 3)இராமயணக் கதாபாத்திரமொன்று 4) பல இரட்சங்களின் மடங்கு 6)செருக்கு என்றும் பொருள்படும் 7)போலியான தகவல்களை இப்படிச் சொல்வர் 8 )பாதுகாப்பானவர்களை இப்படியும் சொல்வர் 11)நிலம்-ஒத்தசொல்
-
- 647 replies
- 58.6k views
-
-
நெருப்பு பெட்டி ஒன்றில் 48 குச்சிகள் உண்டு. சமமற்ற 3 குவியலாக அவை கொட்டப்பட்டன. * 2 வது குவியலில் எவ்வளவு குச்சிகள் உண்டோ அதே அளவு குச்சிகள் 1 வது குவியலிலிருந்து எடுத்து 2 வது குவியலுடன் சேர்க்கப்படுகின்றது. * 3 வது குவியலில் எவ்வளவு குச்சிகள் உண்டோ அதே அளவு குச்சிகள் 2 வது குவியலிலிருந்து எடுத்து 3 வது குவியலுடன் சேர்க்கப்படுகின்றது. * பின்னர் 1 வது குவியலில் எவ்வளவு குச்சிகள் உண்டோ அதே அளவு குச்சிகள் 3 வது குவியலிலிருந்து எடுத்து 1 வது குவியலுடன் சேர்க்கப்பட்டவுடன் 3 குவியல்களும் சமமான எண்ணிக்கையை காட்டின. எனவே ஆரம்பத்தில் ஒவ்வொரு குவியல்களிலும் இருந்த குச்சிகளின் எண்ணிக்கை யாது?
-
- 694 replies
- 54.6k views
-