Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துயர் பகிர்வோம்

இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

துயர் பகிர்வோம் பகுதியில்  இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. முன்னாள் அமைச்சர் ‘சொல்லின் செல்வர்’ செல்லையா இராஜதுரை காலமானார் 07 Dec, 2025 | 12:07 PM இலங்கையின் தலைசிறந்த பேச்சாளரான முன்னாள் அமைச்சர் ‘சொல்லின் செல்வர்’ செல்லையா இராஜதுரை தனது 98ஆவது வயதில் சென்னையில் காலமானார். அவர் 1956ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமையும் அவருக்குச் சேரும். மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை முடித்த அவர், பின்னர் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் மேல் நிலைக் கல்வியை நிறைவு செய்தார். ஊடகவியலாளராகவும் செயல்பட்ட இராஜதுரை, ‘சுதந்திரன்’ பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றியுள்ளார். 1956ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ் அ…

  2. நாச்சிமார் கோவிலடி வில்லுப்பாட்டு இராஜன் (இராசு) தம்பையா இராஜன் அவர்கள் இன்று (18.11.2025) காலமானார். இவர் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, பின்னர் ஜேர்மனி மற்றும் பிரான்ஸ்சிலும் வசித்துள்ளார். இவர் நாடகங்களை இயக்கியுள்ளார். இந்திரா பார்த்தசாரதியின் 'மழை' மற்றும் கே. பாலச்சந்தரின் 'மூன்று முடிச்சு' போன்ற நாடகங்களை இயக்கி மேடையேற்றியுள்ளார். யாழ் களமூடாக அறிமுகமான ஒருவர். ஒரு காலத்தில் ஈழத்திலும், ஐரோப்பா எங்கும் வில்லுப்பாட்டு நிகழ்வினூடாக கோலோச்சியவர். „மறுபக்கம்” என 2003 களில் நான் எழுதிய சிறுகதை ஒன்றை தொலைக்காட்சி நிகழ்வுக்காக வில்லுப்பாட்டாக செய்தவர். நினைவுகளில் என்றும் நிலைத்து நிற்பார். Inuvaijur Mayuran ########################################## ஆழ்ந்த அனுதாப…

  3. 13 Nov, 2025 | 02:18 PM மலையகத்தின் மூத்த எழுத்தாளரும் ஆய்வாளருமான தி.இராஜகோபாலன் தனது 86ஆவது வயதில் காலமானார். லிந்துலை, துலாங்கந்தையை பிறப்பிடமாகக் கொண்ட இவர், மலையக சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட ஆளுமையாக தனது வாழ்நாள் முழுதும் விளங்கினார். வீரகேசரி வாரவெளியீட்டில் அவர் எழுதிய “சிரிக்கும் செவ்வந்தி பூ”, “கண்ணான கண்மணிக்கு கதை கேட்க ஆசை இல்லையோ” போன்ற தொடர்கதைகள் பெருமளவு வரவேற்பை பெற்றன. வீரகேசரிக்கு மட்டுமன்றி, பல பத்திரிகைகளுக்கு பல கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், தொடர்களை இவர் எழுதினார். இவர் தமிழ் மொழியில் எந்தளவுக்கு ஆழமான அறிவைப் பெற்றிருந்தாரோ அதேபோன்று ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்றவர் ஆவார். இவரது பல படைப்புகள், ஆக்கங்கள் மலையக மண்ணின் எழுச்சி ம…

  4. தந்தை செல்வா என்று போற்றப்பட்டவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவருமான தந்தை செல்வாவின் (எஸ்.ஜே.வி. செல்வநாயகம்) மூத்த மகள் சுசீலாவதி வில்சன் தனது 97 ஆவது வயதில் கனடாவில் இறைவனடி எய்தினார். தந்தை செல்வாவின் மூத்த மகள் சுசீலாவதி (சுசீலி) வில்சனின் மறைவுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. சுசீலாவதியின் மறைவு தொடர்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவரான தந்தை செல்வாவின் மூத்த மகள் சுசீலாவதி (சுசீலி) வில்சனின் மறைவுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றது. சுசீலி , தனது தாயாருடன் இணைந்து, 1950கள் மற்றும் 60களில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரச…

    • 0 replies
    • 119 views
  5. மாவீரர் தளபதி விதுசா அவர்கள் மற்றும் விதுசான் ஆகிய இரு மாவீரர்களின் தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையா அவர்கள் இன்று (12.10.2025) மதியம் இவ்வுலக வாழ்வினை நீத்துள்ளார்.. அவருக்கு எமது புகழ் வணக்கம் ஐயாவின் இறுதி கிரியைகள் நாளை (13.10.2025) காலை பொன்னாலையிலுள்ள மகனின் இல்லத்தில் நடைபெற்று காலை 11.00 மணியளவில் #கப்புது #சனசமூக நிலையத்தில் இறுதி அஞ்சலிக்கூட்டம் நடைபெற்று உடலம் தீயுடன் சங்கமமாகும்... போராளிகள் நலன்புரிச் சங்கம்

  6. https://www.newsweek.com/jane-goddall-dead-conservationist-institute-chimpanzees-latest-updates-10813647 கடந்த 60 ஆண்டுகளாக சிம்பன்சிகள் (Chimps) எனப்படும் மனிதக் குரங்குகள் பற்றி நடத்தையியல் ஆய்வுகளை மேற்கொன்டு வந்த ஜேன் குடால் நேற்றுக் காலமானார். ஏராளமான பெண் விஞ்ஞானிகளுக்கு ஊக்கமாக இருந்தவர். சிம்பன்சிகளின் நடத்தையியலைக் கொண்டு பல ஆபிரிக்க நாடுகளில் சிம்பன்சிகளை அழியாமல் பாதுகாக்கும் செயல்திட்டங்களை உருவாக்க உதவியவர். மிகவும் எளிமையான பிரபலம். கொண்டாடப் பட வேண்டிய வாழ்வு இவருடையது!

  7. ரமேஷ் பிரேதன் நினைவஞ்சலி jeyamohanSeptember 28, 2025 ரமேச்ன் 2023 விஷ்ணுபுரம் விழாவில் ரமேஷ் பிரேதன் சென்ற 25 செப்டெம்பர் அன்று இரவு ஒரு கவிதையை எழுதி தன் முகநூலில் வலையேற்றியிருந்தார். அது ஒரு காதல் கவிதை. அதன்பின் சில மணிநேரங்களில் மயக்கமுற்றிருக்கக் கூடும்.கடுமையான இதய அடைப்பு மற்றும் ரத்த அழுத்த உயர்வு. உடனடியாக 26 காலையில் மருத்தவமனையில் சேர்க்கப்பட்டார். 27 செப்டெம்பர் 2025 மாலை 520க்கு உயிர்பிரிந்தது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் நம் நண்பர்கள் உடனிருந்தனர். ஒவ்வொரு மணிநேரத்திற்கும் செய்திகளை அளித்தனர். முதல் நாளிலேயே ரமேஷ் மீள்வது அரிதினும் அரிது என்று கூறிவிட்டனர். மூளையில் முழுமையான ரத்தக்கசிவு. உள்ளுறுப்புகள் செயலிழந்துகொண்டிருந்தன. இதயம் நின்று ந…

  8. யாழ்.கள உறவு... அஜீவன் இன்று, (06.09.2025) காலமானார். அன்னாரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திப்பதுடன், அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். 🙏 தகவல்: @தனிக்காட்டு ராஜா

  9. லவ்ரா டால்மையர் Laura Dahlmeier இரு தடவைகள் யேர்மன் நாட்டிற்கு ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கத்தை பெற்று கொடுத்தவர்.7 தடவைகள் உலக சம்பியனாக வந்த சாதனையாளர் பாக்கிஸ்தானில் மலை ஏறுகின்ற போது விபத்தில் இறந்துவிட்டார்.இன்று உறுதிபடுத்தபட்டது. இப்படியான விபத்து சூழலில் தன்னை மீட்பதற்காக யாரும் தங்கள் உயிரைப் பணயம் வைக்கக்கூடாது என்றும் இப்படியான நிலையில் தனது உடலை மலையில் கை விட்டு செல்ல வேண்டும் என்பதே அவரது தெளிவான எழுத்துப்பூர்வ விருப்பமாக இருந்தது BBC SportLaura Dahlmeier: Olympic star dead after mountaineering a...Two-time Olympic champion Laura Dahlmeier dies aged 31 after a mountaineering accident in Pakistan.

  10. மிருதங்க இசை வித்துவான் சண்முகரட்ணம் பிரணவநாதன் காலமானார் Posted on July 19, 2025 by தென்னவள் ஈழத்து இசைப்பாரம்பரியத்தின் முன்னோடிக் கலைஞர் மிருதங்க வித்துவான் சண்முகரட்ணம் பிரணவநாதன் காலமானார். அவர் கடந்த (16) ஆம் திகதி உடல்நலக் குறைவால் ஜேர்மனியில் காலமானார். 1951 ஓகஸ்ட் 13 ஆம் திகதி அன்று யாழ்ப்பாணம் உடுவிலில் இசைப்புலவர் சண்முகரட்ணம் மற்றும் ஜெயலக்ஷ்மி தம்பதியருக்கு மகனாகப் பிறந்த பிரணவநாதன், தனது தந்தையார் வழியிலேயே இசைப்புலைமை பெற்று, மிருதங்கக் கலையில் தேர்ச்சி பெற்று விளங்கினார். இலங்கையின் புகழ் பெற்ற கர்நாடக இசை வித்துவான் கலாசூடாமணி சண்முகராகவனின் இளைய சகோதரர் இவராவர். தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து ஜேர்மனி நாட்டில் வாழ்ந்து வந்த இவர் ஐரோப்பிய நாடுகளில் நடைப…

    • 0 replies
    • 128 views
  11. புலிகளின் குரல் வானொலியின் அறிவிப்பாளர் மரணம் July 15, 2025 11:36 am தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ‘புலிகளின் குரல்’ வானொலியின் பிரபல அறிவிப்பாளராகச் செயற்பட்ட சத்தியா (சிவசுப்பிரமணியம் ஞானகரன்) மாரடைப்பால் காலமானார். 1990 ஆம் ஆண்டில் புலிகளின் வானொலி தொடங்கி முதலாவது செய்தி ஒலிபரப்பாகியபோது “புலிகளின்குரல் – செய்திகள் வாசிப்பவர் சத்தியா” என்று செய்தி வாசித்தவர் அவர், புலிகளின் குரல் வானொலியில் செய்தி ஆசிரியராகவும், செய்தி வாசிப்பாளராகவும் 2003 ஆம் ஆண்டு வரையில் அவர் செயற்பட்டிருந்தார். அவருடைய செய்தி வாசிப்புப் பாணியை வைத்து செய்தியின் கனதி தொடர்பில் மக்கள் உணரக்கூடிய அளவுக்கு அவருடைய அறிவிப்பு தனித்துவம் பெற்றிருந்தது. நிதர்சனம் நிறுவனத்தில் மாதாந்தம் வெளியாகிய ஒள…

  12. இனப் பிரச்சினைகளை தீர்க்க கடினமாக உழைத்தவர் இரா.சம்மந்தன்; ச.குகதாசன் எம்.பி 06 JUL, 2025 | 02:48 PM இலங்கையில் இனப் பிரச்சினைகளை தீர்க்க கடினமாக பாடுபட்டு உழைத்தவரே மறைந்த தலைவர் இராஜவரோதயம் சம்மந்தன் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தெரிவித்தார். மறைந்த பெருந் தலைவர் இரா.சம்மந்தனின் முதலாவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (06)இடம் பெற்றது இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், 1976ம் ஆண்டு முதல் 2023 வரை மிகவும் நெருக்கமாக அவருடன் பணியாற்றியுள்ளேன் 1933 பெப்ரவரி 05ல் இராஜவரோதயனுக்கு இரண்டாவது மகனாக பிறந்த இரா.சம்மந்…

  13. Published By: DIGITAL DESK 3 20 JUN, 2025 | 12:56 PM தினக்குரல் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளில் நீண்டகாலமாக கருத்தோவியராக பணியாற்றிய அம்மையப்பபிள்ளை யோகமூர்த்தி (கார்ட்டூனிஸ்ட் மூர்த்தி) உடல் நலக் குறைவினால் வியாழக்கிழமை (19) காலமானார். அன்னாரின் பூதவுடல் புஞ்சி பொரளை லங்கா மலர் சாலையில் காலை 9 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை சனிக்கிழமை (21) பிற்பகல் 2 மணிக்கு இறுதிக்கிரியைகள் நடைபெற்று பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இலங்கை பத்திரிகை பேரவையும் இணைந்து வழங்கும் 2023 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை கடந்த வருடம் பெற்றிருந்ததுடன், கருத்தோவிய படைப்புகளுக்காக 4 விருது…

  14. தமிழீழ புரட்சிப் பாடலாசிரியர் பண்டிதர் வீ. பரந்தாமன் ஐயா காலமானார் ஜூன் 15, 2025 “மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன் அவன் போன வழியில் புயலேன எழுந்து போரில் வந்தார் புலி வீரர்…” என்ற புகழ்பெற்ற ஈழப் புரட்சிப்பாடலை எழுதிய கவிஞர் தமிழ் அறிஞர் பண்டிதர் வீ. பரந்தாமன் அவர்கள் காலமானார். பண்டிதர் பரந்தாமன் வடமராட்சியை புலோலியைச் சேர்ந்த ஒரு தமிழறிஞர் ஆவார். இவர் கிளிநொச்சியில் உள்ள பண்டிதர் பரந்தாமன் கவின்கலைக் கல்லூரியின் நிறுவனர் ஆவார். மேலும், இவர் எழுதிய “தமிழர் உறவுமுறைச் சொல் வழக்கு அகராதி” என்ற நூல் குறிப்பிடத்தக்கது. கெரில்லாப் போர் விரகுகள் என்ற விடுதலைப் போராட்டம் சார்ந்த முக்கிய நூலையும் இவர் எழுதியுள்ளார். அத்துடன் மனிதரும் கடவுளும் மற்றும் வேர் – …

  15. நல்லை ஆதீன குருமுதல்வர் இறையடி சேர்ந்தார். adminMay 2, 2025 நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு இறையடி சேர்ந்தார். கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி காலமானார். https://globaltamilnews.net/2025/214928/

  16. போப் பிரான்சிஸ் காலமானார்! உலக கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 88 வயதான போப் பிரான்சிஸ் மூச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து,இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் கடந்த பெப்பிரவரி மாதம் 14-ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில், நுரையீரல் இரண்டிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அவருக்கு அண்டிபயோடிக் மருந்துகள் அளிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் தொடர்ச்சியாக இருந்துவந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429008

  17. ஈழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான புஸ்பராணி “அக்கா” காலம் ஆனார்! adminApril 18, 2025 1970 களில் ஈழ மக்களின் விடுதலைப் போராட்டப் பாதையில் தமிழ் இளைஞர் பேரவை மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் (TLO) ஆகியன ஆற்றிய பங்களிப்பின் போது முக்கிய தோழியாக, மூத்த செயற்பாட்டாளராக இயங்கியவர் புஸ்பராணி. ஈழப்போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் அஞ்சாது, துஞ்சாது, அயராது, தளராது, எந்த இடர் வந்த போதும் கலங்காது ஏறு நடை போட்ட ஈழப் போராட்டத்தின் போராளியாக விளங்கியவர். 1970களின்முற்பகுதியில் எழுச்சியுற்ற தமிழ் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் சுடராக ஒளிர்ந்தவர் புஸ்பராணி என்ற ஆளுமை. ஒரு காலத்தின் சரித்திரக் குறியீடு . 1970 களின் முற்பகுதியில் அவர் அனுபவித்த சிறை வதை வாழ்வு அன்றைய ஊடகங்களில் மனித உரிமை…

  18. இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் மாரடைப்பு காரணமாக காலமானார். உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று(25.03.2025) அவர் உயிரிழந்துள்ளார். மாரடைப்பு மனோஜ் தனது 48ஆவது வயதில் காலமானார். சென்னையில் வசித்து வந்த மனோஜுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Tamilwinபாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் காலமானார் - தமிழ்வின்இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் மாரடைப்பு காரணமாக காலமானார். உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப...பெற்றோர்கள் இருக்கும் போதே பிள்ளைகள் இறப்பது மிகவும் கொடுமை. ஆழ்ந்த அனுதாபங்கள்.

  19. எங்கள் பாசமிகு தந்தையார் திடீர் சுகவீனம் காரணமாக எம்மை மீளாத்துயரத்தில் ஆழ்த்தி பூவுலக வாழ்வில் இருந்து ஓய்வுபெற்று விட்டதை யாழ் கள உறவுகளுக்கு மிக மன வருத்தத்துடன் அறிய தருகிறோம். அன்னார் ஓய்வு பெற்ற அரச மருத்துவ சேவை உத்தியோகத்தரும் ஆவார். நெடுக்ஸ் 18.03.2025.

  20. BBC தமிழோசை ஆனந்தி சூரியபிரகாசம் அவர்கள் காலமானார்கள் என்ற துயரத் தகவல் கிடைத்துள்ளது. மரணம் நேற்றிரவு சம்பவித்தது. திருமதி ஆனந்தி சூரியபிரகாசம் அவர்கள் 21 பெப் 2025 வெள்ளிக்கிழமை அமைதியான முறையில் மீளாத்துயில் கொண்டார். ஆனந்தி அக்கா என்று அன்புடன் அழைக்கப்படும் திருமதி சூரியபிரகாசம் தமிழ் ஒளிபரப்பில் ஒரு முன்னோடியாக இருந்தார். #பிபிசிதமிழ் சேவையில் இணைந்த முதல் தமிழ்ப் பெண்மணியாக தடைகளைத் தாண்டி பிபிசி தமிழோசியின் இயக்குநராக உயர்ந்தார். அவர் டிடிஏ யுகேவின் அறங்காவலராகவும் பணியாற்றினார். விடுதலைப் புலிகளின் தலைவருமான வேலுப்பிள்ளை பிரபாகரனை பிபிசியின் சார்பில் முதன் முதலாக சந்தித்து நேர்காணல் செய்ய மூத்த ஊடகவியலாளர் ஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கத…

  21. தினக்குரல், யாழ். தினக்குரல் பத்திரிகைகளின் நிறுவுனர் எஸ். பி. சாமி சற்று முன்னர் யாழ்ப்பாணத்தில் காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும். தினக்குரல் ஸ்தாபகர் எஸ்.பி.சாமி காலமானார்

  22. 17 FEB, 2025 | 03:21 PM இலங்கையின் இசை ஆளுமையும் ஊடக ஜாம்பவானுமான “கலாசூரி” “தேச நேத்ரு” கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் இன்று (17) அவுஸ்திரேலியாவில் காலமானார். அருந்ததி ஸ்ரீரங்கநாதன் பாடகி, சிறந்த ஒலிபரப்பாளர், வீணை ஆசிரியர், நடன நிகழ்ச்சிகளின் ஒழுங்கமைப்பாளர் என பல அடையாளங்களை கொண்டவர். இவர் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தமிழ்ச் சேவையின் பணிப்பாளராகவும் கடமையாற்றினார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக தமிழ், சிங்கள மாணவர்களுக்கு தென்னிந்திய இசை, கர்நாடக சங்கீதம், நாட்டியம் முதலிய கலைகளை கற்பித்து, ஆற்றல் மிகுந்த விரிவுரையாளராக வலம் வந்தவர் அருந்ததி ஸ்ரீரங்கநாதன். அதனால் இவரது பெயரிலேயே பல்கலைக்கழகத்தின் கட்புல, கலை, நாட்டிய, சங்கீத பீடத்துக்கான கட்டடமொன்று இயங…

  23. பிரபல மூத்த ஊடகவியலாளர் பாரதி காலமானார்! சிரேஷ்ட ஊடகவியலாளரும்,ஞாயிறு தினக்குரல், தினக்குரல் இணையம் ஆகியவற்றின் முன்னாள் ஆசிரியருமான இராஜநாயகம் பாரதிஉடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். கடந்த சில வாரங்களாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று யாழில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினக்குரல்பத்திரிகையின் பிரதம ஆசிரியராக பணியாற்றய அன்னார் அரசியல் ஆய்வு மற்றும் கலை செயற்பாடுகளில் மிகுந்த ஆளுமை உள்ளவராக காணப்பட்டிருந்தார். மேலும் அண்மையில் வீரகேசரியின் சிரேஷ்ட ஊடகவியலாளராக யாழ் காரியாலயத்தின் பொறுப்பு அதிகாரியாகவும் கடமை ஆற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அன்னாரது…

  24. 01 FEB, 2025 | 05:02 PM பேராசிரியர் அம்பலம் புஸ்பநாதன் 1964 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 24ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை அல்வாய் நகரில் உள்ள வதிரிக் கிராமத்தில் பிறந்தார். யா.தேவரையாளி இந்துக்கல்லூரியில் தரம் ஒன்று முதல் உயர்தரம் வரை தனது பாடசாலைக் கல்வியை நிறைவுசெய்தார். 1989இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாக இளங்கலைப் பட்டத்தையும், 1996 இல் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டப் பின் படிப்பாக முகாமைத்துவத்தில் டிப்ளோமாவையும், 2008இல் சீனாவின் சியாமென் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ விஞ்ஞானத்தில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றார். 2006 இல் சீனாவின் சியாமென் பல்கலைக்கழகத்தில் சிறந்த சர்வதேச மாணவ…

  25. 'வைகறை' ரவி சமூக, சூழற் பிரக்ஞை மிக்க ஆளுமையாளர்! - வ.ந.கிரிதரன் - - வ.ந.கிரிதரன் - - 'வைகறை' ரவி ( ரவிச்சந்திரநேசன் பொன்னுத்துரை) - வைகறை பத்திரிகையை வெளியிட்டு வந்தவர் ரவிச்சந்திரநேசன் பொன்னுத்துரை. வைகறைக் கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு, புகலிடத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த பத்திரிகைகளிலொன்று. அதன் ஆசிரியர்களில் ஒருவராகவுமிருந்தார்.அதன் காரணமாகவே ரவி பொன்னுத்துரை என்றறியப்பட்டவர். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருப்பவர். நண்பர் ஐங்கரநேரன் பொன்னுத்துரையின் சகோதரர் என்பதைப் பின்னரே அறிந்தேன். அவரது மறைவுச் செய்தியினை முகநூல் கிரி செல்வரத்தினம் அறியத்தந்தார். இரமணியும் தன் முகநூற் பக்கத்தில் பகிர்ந்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.