துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
641 topics in this forum
-
பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளார். டேனியல் பாலாஜிக்கு இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி தனது 48 ஆவது வயதில் காலமானார். பொல்லாதவன், காக்க காக்க உள்ளிட்ட படங்களில் டேனியல் பாலாஜி நடித்துள்ளார். டேனியல் பாலாஜி தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இரசிகர்கள் மனதில் மறக்க முடியாத வில்லன் நடிகராக வலம் வந்தவர். தனி இரசிகர் பட்டாளம் சித்தி நாடகத்தில் நடிகராக அறிமுகமான டேனியல் பாலாஜி, வேட்டையாடு விளையாடு, பைரவா மற்றும் வட சென்னை உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இவர் நட…
-
-
- 8 replies
- 632 views
- 2 followers
-
-
கவிஞர் வி. கந்தவனம் கவிஞர் வி. கந்தவனம் அவர்கள் மார்ச் 11-ஆம் நாள் திங்கட்கிழமை ரொறன்ரோவில் காலமானார். அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு அவர்தம் துயரிலும் தாய்வீடு பங்குகொள்கிறது. அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
-
-
- 4 replies
- 375 views
- 1 follower
-
-
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை தமிழர் சாந்தன் உடல்நலக்குறைவால் இன்று இந்தியாவால் காலமானார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதன் பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். சாந்தன் இலங்கை தமிழர் என்பதால், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருடன் சாந்தன் தங்க வைக்கப்பட்டார். தொடர்ந்தும…
-
-
- 48 replies
- 4.5k views
- 4 followers
-
-
10 FEB, 2024 | 03:14 PM வடமராட்சி பிரதேச கல்வி புலமையாளர்களில் ஒருவரான யாழ். பல்கலைக்கழக கல்வித்துறை முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்பிஐயா கலாமணி உடல் நலக் குறைவு ஏற்பட்டு தனது 72வது வயதில் இன்று சனிக்கிழமை (10) அதிகாலை காலமானார். அல்வாய் தெற்கைச் சேர்ந்த அவர், ஆரம்ப கல்வியை வதிரி தேவரையாளி இந்து கல்லூரியிலும், இடைநிலை கல்வியை நெல்லியடி மத்திய கல்லூரியிலும் கற்று யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு கலைப் பட்டதாரி ஆனார். யாழ். பல்கலைக்கழகத்தில் பகுதி நேர விரிவுரையாளராக இணைந்து கலைப்பீட விரிவுரையாளர் ஆனார். மேலும், உயர் கற்கைகளை மேற்கொண்டு கலாநிதி பட்டத்தை பெற்றுக்கொண்ட அவர், யாழ். பல்கலைக்கழகத்தி…
-
-
- 6 replies
- 1.1k views
- 1 follower
-
-
நல்லூர் எசமானி காலமானார் January 28, 2024 நல்லூர் எசமான் அம்மா சுகிர்தா தேவி குமராதாஸ் மாப்பாணமுதலியார் குகபதமடைந்தார். நல்லூர் கந்தசாமி கோவிலின் பத்தாவது நிர்வாக அதிகாரி அமரர் குமாரதாஸ் மாப்பாண முதலியார் அவர்களது துணைவியாரும் தற்போதைய பதினொராவது நிர்வாக அதிகாரி குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ மாப்பாண முதலியார் அவர்களது தாயாருமாகிய அமரர் சுகிர்தாதேவி குமாரதாஸ் மாப்பாண முதலியார் இன்று (28) குகபதமடைந்தார். அன்னாரது இறுதிகிரிகைகள் யாழ்ப்பாணம் நல்லூர் மாப்பாணர் வளவில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்று தகனகிரிகைகளுக்காக செம்மணி இந்து மயானத்திற்க்கு எடுத்துச் செல்லப்படும். https://globaltamilnews.net/2024/20…
-
- 3 replies
- 942 views
-
-
தேசியத் தலைவரின் தந்தை அமரர் திருவேங்கடம்-வேலுப்பிள்ளையின் நினைவுநாள். ஐயாவுக்கு ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.
-
- 1 reply
- 339 views
- 1 follower
-
-
மூத்த பேராசிரியர் திரு.செ.யோகராசா காலமானார்! கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை பேராசிரியரான செ.யோகராசா நேற்று (07) கொழும்பில் காலமானார். யாழ் வடமராச்சி கரணவாய் கிராமத்தில் பிறந்த இவர் ஈழத்து இலக்கிய வளர்ச்சியில், குறிப்பாக கிழக்கிலங்கைத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவராவார். கடந்த 1991 இல் கிழக்குப் பல்கலைக்கழகத்தில், மொழித்துறை விரிவுரையாளராக இணைந்த இவர், 2009இல் பேராசிரியராக நியமனம் பெற்று 2014 இல் 23 வருட பல்கலைக்கழக பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். அதுமட்டுமல்லாது இதுவரையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், எட்டு நூல்கள், ஆறு தொகுப்பு நூல்களை அவர் படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. …
-
- 5 replies
- 967 views
- 1 follower
-
-
யாழ் திருநெல்வேலியில் பிறந்து மீசாலையில் எனது மச்சாளைத் திருமணம் செய்து சிவானந்தன்(சிவா,லண்டன்)சிவோதயன்(தவம்,மயாமி அமெரிக்கா)சிவபூரணி(மீனா,சிட்னி அவுஸ்திரேலியா,சிவநாதன்(நாதன்,மயாமி-இலங்கை) மருமக்கள்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகளுடன் சந்தோசமாக வாழ்ந்து 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலமானார். இவர் கடைசியாக சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றி இளைப்பாறினார்.
-
- 46 replies
- 3.2k views
- 3 followers
-
-
தமிழர்களின் கடல்சார் தொன்மையை வெளிகொணர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு மறைவு. சென்னை: கடலியல் தமிழ்சார் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு காலமானார். அவருக்கு வயது 60. திருச்சி உறையூரில் பிறந்த இவரின் உண்மையான பெயர் சிவ பாலசுப்ரமணியன். பல ஆண்டுகள் ஒரிசாவில் பணிபுரிந்ததால் ஒரிசா பாலு என அழைக்கப்பட்டார். தமிழர்களின் கடல்சார் தொன்மை தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொண்ட இவர், தமிழர் வரலாற்றின் மரபுசார் அறிவை நவீன தொழில்நுட்பங்கள் மூலமாக வெளிக்கொண்டு வந்தார். ஆமைகள் மூலம் நீரோட்டத்தை அறிந்து, பழங்கால தமிழர்கள் கடற்பயணம் மேற்கொண்டதை கண்டறிந்தவர் இவர்தான். மேலும், குமரிக்கண்டம், கடலில் மூழ்கிய பூம்புகார் உள்ளிட்ட கடல் சார்ந்த ஆய்வுகளில் இவரது பங்களிப்பு மிக முக்கியமானதாக அறி…
-
- 11 replies
- 1.2k views
- 1 follower
-
-
நாட்டின் பிரபல நடனக் கலைஞரும் நடன ஆசிரியருமான கலாசூரி ரஜினி செல்வநாயகம் காலமானார். உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று (20) இரவு உயிரிழந்துள்ளார். இராஜகிரிய – களபளுவாவையில் வசித்து வந்த அவர் தனது 71 ஆவது வயதில் காலமானார். உள்நாட்டில் மட்டுமின்றி வௌிநாட்டிலும் புகழ்பெற்ற கலாசூரி ரஜினி செல்வநாயகம், கலா கீர்த்தி மற்றும் விஷ்வ கலா கீர்த்தி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். பலாங்கொடையை சேர்ந்த கிராமமொன்றில் பிறந்து, கலை உலகில் பிரவேசித்த அவர், மாணவர்களுக்கு நடனம் கற்பிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார். https://thinakkural.lk/article/278040
-
- 0 replies
- 332 views
- 1 follower
-
-
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா காலமானார் ! இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் Sayanolipava முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உப தலைவருமான பொன்.செல்வராசா இன்று காலமானார். 1994ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில், தேர்தலில் போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து, நாடாளுமன்ற உறுப்பினராக இவர் தெரிவானர். 2000ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நிமலன் சௌந்தரநாயகம் படுகொலை செய்யப்பட்ட பின்னர், பொன்.செல்வராசா அவரது வெற்றிடத்திற்கு நியமன நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 2010ம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடாக தேர்தலில் போட்…
-
- 1 reply
- 284 views
-
-
Published By: NANTHINI 02 AUG, 2023 | 10:46 AM மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் தனது 75ஆவது வயதில் காலமானார். இலண்டனில் இடம்பெற்ற விபத்தொன்றில் விமல் சொக்கநாதன் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர், தான் எழுதிய 'லண்டனிலிருந்து விமல்' என்ற நூலை அண்மையில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் வெளியிட்டிருந்தார். அதன் பின்னர், உலக அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீதின் 'வானலைகளில் ஒரு வழிப்போக்கன்' நூலின் அறிமுக விழா கொழும்பில் நடைபெற்றபோது, அந்நிகழ்வினை விமல் சொக்கநாதன் தலைமையேற்று நடத்தியதோடு, நூல் வெளியீட்டிலும் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. …
-
- 10 replies
- 833 views
- 1 follower
-
-
தூரிகை நாயகன்.. மக்கள் மனங்களில் இடம் பிடித்த ஓவியர் மாருதி மறைவு.. சென்னை: பிரபல ஓவியர் மாருதி உடல்நலக்குறைவு காரணமாக புனேவில் மரணமடைந்தார். ஓவியர் மாருதி மறைவு குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், பத்திரிகை உலக நண்பர்கள் மற்றும் வாசகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். புதுக்கோட்டையில் 1938, ஆகஸ்டு 28-ம் தேதி டி.வெங்கோப ராவ், பத்மாவதி பாய் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் ஓவியர் மாருதி. இவரின் இயற்பெயர் ரங்கநாதன். வேலைச்சூழலின் காரணமாக, மாருதி என்ற புனைப்பெயரில் பத்திரிகைகளில் ஓவியங்கள் வரைந்து அதன் மூலம் பிரபலமானவர். 1969 முதல் இவர் ஓவியங்கள் வரைந்து வந்தவர். இவருக்கு சு…
-
- 3 replies
- 504 views
-
-
Published By: RAJEEBAN 24 JUL, 2023 | 08:49 PM இலங்கையை பிறப்பிடமாக கொண்ட பிபிசியின் ஊடகவியலாளர் ஜோர்ஜ் அழகையா காலமானார். புற்றுநோயுடன் ஒன்பது வருடங்கள் போராடிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்தினர் உறவினர்கள் சூழ ஜோர்ஜ் அமைதியான விதத்தில் மரணத்தை தழுவினார் என அவரது முகவரின் அறிக்கை தெரிவித்துள்ளது. மூன்று தசாப்தங்களிற்கு மேல் பிபிசி தொலைகாட்சியில் ஜோர்ஜ் அழகையா பணியாற்றினார். கடந்த 20 வருடங்களாக பிபிசியின் நியுஸ் சிக்சின் தொகுப்பாளராக பணியாற்றினார். அதற்கு முன்னர் பிபிசியின் விருதுகள் பெற்ற வெளிநாட்டு செய்தியாளராக அவர் பணியாற்றியிருந்தார். ஜோர்ஜ் அழகையா ஈராக், ருவ…
-
- 5 replies
- 633 views
- 1 follower
-
-
துயர் பகிர்வோம் ———————— திருமதி பாக்கியம் பூபாலசிங்கம் அவர்கள் காலமானார். யாழ்ப்பாணம் பூபாலசிங்கம் புத்தகசாலை நிறுவனர் அமரர் ஆர்.ஆர்.பூபாலசிங்கம் அவர்களின் மனைவி திருமதி பாக்கியம் பூபாலசிங்கம் அவர்கள் 26.05.2023 வெள்ளிக்கிழமை கொழும்பில் காலமானார் என்பதை துயரத்துடன் அறியத்தருகிறோம். இவர், யாழ்ப்பாணம்,கொழும்பு ஆகிய இடங்களில் இயங்கிவரும் பூபாலசிங்கம் புத்தகசாலை நிலையங்களை இயக்கிவரும் ஶ்ரீதரசிங்,ராஜன்,காலமார்க்ஸ் ஆகியோரின் அன்புத் தாயார் ஆவார். https://www.facebook.com/poobalasingham202
-
- 5 replies
- 690 views
-
-
Published By: VISHNU 15 MAY, 2023 | 04:28 PM பிரபல வைத்தியரான வைத்தியர் சிவகுமாரன் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கு யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இரங்கல் செய்தியில் அவர் குறிப்பிடுகையில், யாழ். போதனா (Teaching) வைத்தியசாலையில் சிக்கலான காலப் பகுதியில் சிறப்பாக கடமையாற்றிய வைத்திய நிபுணர் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள். மறைந்த வைத்தியர் சிவகுமாரன் அவர்கள் பல தலைசிறந்த வைத்தியர்களை உருவாக்கியவர். மருத்துவபீட மாணவர்களால் "கடவுள்" என செல்லமாக அழைக்கப்பட்டவர். கடமை, ஒழுக்கம், நோயாளி முதன்மையானவர் என பல சீரிய பண்புகளை கற்பித்தவர்…
-
- 4 replies
- 565 views
- 1 follower
-
-
தமிழ் சிறியின் தங்கையின் கணவர் எதிர்பாராத விதமாக காலமானர். மேலதிக விபரங்கள் எதுவும் தெரியவில்லை.
-
- 57 replies
- 3.8k views
- 4 followers
-
-
இன்று 17/03/2023 எமது அண்ணா(பெரியம்மாவின் மகன்) கனகசபை சிறிகாந்தன் அவர்கள் இறையடி எய்திவிட்டார் என்பதை உறவுகளுக்கு அறியத்தருகிறேன். அவரும் எங்களைப் போலவே ஒரு Muscular Dystrophy யால் பாதிக்கப்பட்டவர்.
-
- 43 replies
- 2.5k views
- 2 followers
-
-
சிறியின் குடும்பத்தின் சார்பாக அவரின் மைத்துனரின் மரண அறிவித்தலை பற்றி மேலும் விபரங்களை யாழ் கள உறுப்பினர்களுடன் பகிர்ந்துள்ளேன் 🌺 https://ripbook.com/kangesu-jeyathakumaran-642e8a02dbf05/notice/obituary-642e8a4ed5a95🙏
-
- 12 replies
- 1.5k views
-
-
மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார் 2023-04-12 09:23:48 இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும் ரொய்ட்டேஸ், பி.பி.சி. , வீரகேசரியின் ஊடகவியலாளருமான பொன்னையா மாணிக்கவாசகம் அவர்கள் காலமானார். கடந்த யுத்த காலத்தில் பல சவால்களை எதிர்கொண்டு மக்களுக்கான ஊடகப்பணியாற்றியவர் மாணிக்கவாசகம் அவர்கள். அன்னார் ஓய்வுபெற்ற வவுனியா தெற்கு பிரதி கல்விப்பணிப்பாளர் நாகேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும் வைத்தியகலாநிதி பவித்திராவின் பாசமிகு தந்தையும் வைத்தியகலாநிதி தினேஸின் அன்பு மாமனாரும் தனேந்திராவின் பேரனுமாவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் வவுனியா வைரவபுளியங்குளம் 10 ஆம் ஒழுங்கையில் உள்ள அன்னார…
-
- 13 replies
- 1.2k views
- 1 follower
-
-
கந்தர்மடத்தை சேர்ந்தவரும் எமது உறவினருமான பாலசிங்கம் நந்தபாலன் லண்டனில் தமது 74 ஆவாது வயதில் காலமானார். மிகவும் செல்வந்தரான (பரம்பரை பணக்காரனான அவர் லண்டனில் பல சேர்விஸ் ஸ்டேஷன்கள் வைத்திருந்தவர்) இவர் விடுதலை போராட்ட ஆரம்ப காலங்களில் இருந்தே நிறைய பண உதவி செய்திருந்தார். 2009 இற்கு பிறகு போரினால் பாதிக்கப்பட்ட மக்கள், வறிய மக்கள், விதவையான பெண்கள் என்று பலருக்கும் பல விதமான வாழ்வாதார நிதி உதவிகளை செய்து வந்தார். அண்மையில் ஒரு திருமணத்தின்போது அருகில் இருந்தவர்கள் ஒரு வறிய குடும்பத்தை சேர்ந்தவர்களின் கஷ்டத்தை கேட்டுவிட்டு, அவர்களை தொடரபு கொண்டு தேவையான உதவிகளை செய்துள்ளார். அவரது பல உதவிகளும் இப்படி நடந்தவை தான். சரியாகத்தெரியவில்லை. ஆனால் நூற்றுக்கணக்கான ஏக்கர் க…
-
- 8 replies
- 884 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் காலமானார் 18 Feb, 2023 | 10:03 AM ( எம்.நியூட்டன்) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் உடல்நலப் பாதிப்பால் நேற்று (17) மாலை காலமானார் என்று அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி அவர் யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருந்தார். 2019 ஆம் ஆண்டு அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். மாணவர்கள் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அவர் மென்போக்கை கடைப்பிடிப்பதால், அரசியல் பழிவாங்கலுக்க…
-
- 2 replies
- 284 views
-
-
யாழ்.கள உறவு கந்தையா அண்ணையின் அம்மாவிற்கு, ஆழ்ந்த அஞ்சலிகள். 🙏 அவரின் பிரிவால் துயருற்று இருக்கும் குடும்பத்தினருக்கும், உற்றார். உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம். 🙏
-
- 30 replies
- 1.6k views
- 3 followers
-
-
இன்று காலை மோகன் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார். அவருக்கு எனது குடும்பம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
-
- 45 replies
- 2.6k views
- 2 followers
-
-
வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 14 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்! AdminJanuary 29, 2023 சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பை நிறுத்த வலியுறுத்தியும் அந்த இனவழிப்புப் போருக்கு இந்திய மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்குவதை நிறுத்தக் கோரியும் 29.01.2009 அன்று தன்னை எரித்து ஈகைச்சாவடைந்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 14 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் தன்னிகரற்ற தியாகத்தைத் தொடர்ந்து தமிழகத்திலும், புலத்தில் வெவ்வேறு தேசங்களிலும் தங்கள் வாழ்வை அர்ப்பணித்திருக்கிறார்கள் இந்நாளிலே தீயாய் பூத்த தீந்தமிழ் ஈகியர் அனைவருக்கும் வீரவணக்கம். முத்துகுமாரின் கடைசிக் கடிதம்: ஈழத்தமிழர் பிரச்சனை முடி…
-
- 1 reply
- 467 views
- 1 follower
-