எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3794 topics in this forum
-
1991 ஆம் ஆண்டு இலங்கை அரசு, விடுதலைப் புலிகளது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதிகளுக்கான பொருளாதாரத் தடையை விதித்தது. அதன்படி எரிபொருள் வரத்துத் தடைப்பட்டது. எரிபொருள் தடைப்பட்டால், விவசாயம் நேரடியாகப் பாதிக்கப்படும். இதனால் பட்டினியால் வாடும் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு வழிக்கு வருவார்கள் என்பதே அரசின் திட்டம். இந்தத் திட்டத்தைப் புலிகள் எப்படி முறியடித்தனர் என்பதை அவ்வியக்கப் போராளியொருவர் 1991 ஆம் ஆண்டில் வெளிவந்த தினசரியொன்றில் கீழ்வருமாறு எழுதியிருக்கிறார். “...உழவு இயந்திரத்தின் தேவையை எமது சொந்த வளத்தால் மாற்றீடு செய்ய நாம் யோசித்தோம். வன்னிப் பிராந்தியத்தின் இன்னொரு பெரும் வளமான காளை மாடுகளைப் பயன்படுத்த எண்ணினோம். இதன்படி 1991 ஆம் ஆண்ட…
-
- 4 replies
- 869 views
-
-
கவிதை கவிஞனின் அகத் தேடலில் விழைவது. கவிதை கவிஞனுக்குள் நிகழ்ந்த பாதிப்பிலிருந்து விடுபட்டுவிட முடியாத ஒரு மையத்திலிருந்து உருவாக்கம் பெறுவது. கவிதை உருவாக்கப்படுபவை அல்ல, மனித உணா்வினில் உருவாவது. காட்டிடை வைக்கப்பட்ட சிறுகனல் காடெங்கும் பரவுவது போல மனிதனின் உணர்வினைத் தாக்கிய சிறுவடு கவிதையெனும் தீயாய் பற்றிப் படர்கிறது. அந்த சிறுவடுவே கவிதைக்கான தொடக்கப்புள்ளி. அந்த வடு இல்லாமல் கவிதையும் இல்லை. கவிஞனும் இல்லை. கவிஞனை உரசி காயப்படுத்திய அந்த நிகழ்வே கவிஞனுக்கான முகமும், அவனது அடையாளமும் கூட. இவ்வாறாக கவிதைக்கு ஆயிரம் விளக்கங்களை அவரவர் அனுபவத்தில் இருந்து அள்ளிக் கொடுக்கலாம். ஈழத்துப் போர்ச்சூழலில் கவிதையின் உருவாக்கம் பற்றி குறிப்பிடும் பெண்கவிஞர் கவிதா, …
-
- 0 replies
- 2k views
-
-
"ஆதி தமிழரின் நீர்பாசனம்,"மெசொப்பொத் தேமியா" முதல் "தென்இந்தியா" வரை" / பகுதி: 01 "நீரின்றி அமையாது உலகு " -- வள்ளுவர் வாக்கு (குறள் -20 ) முன்னைய நாகரிகங்களான டைகரிஸ், யூப்ரடிஸ் என்னும் இரு ஆறுகளுக்கும் இடைப்பட்ட - மெசொப்பொத்தேமியா, நைல் நதியின் ஓரத்தில் அமைந்த - எகிப்பது, சரஸ்வதி, சிந்து நதிகளுக்கு இடைப் பட்ட - சிந்து சம வெளி, மஞ்சள் ஆறு, யாங்சி ஆறு பகுதிகளில் அமைந்த - சீனா போன்றவை எல்லாம் ஆறுகளின் ஓரமாக அல்லது பெரிய ஆறுகளின் வெள்ளச் சமவெளியில் [rivers/ flood plains] அமைந்து இருந்தன. மேலும் அந்த இடங்கள் எல்லாம் நன்னீரின் தோற்று வாயாக அமைந்து இருந்தன. அது மட்டும் அல்ல, நாம் அறிவது என்னவென்றால், இந்த நாகரிகங்கள் எல்லாம் நீர்பாசனத்தை முழுமையாக அங்கீகரி…
-
- 3 replies
- 635 views
-
-
ஊரில் பழைய காலத்தில் அரசாங்கத்தில் ஏதாவது ஒரு வேலையில் இருப்பவர்களுக்குத்தான் என் பெண்ணைக்கட்டிக்கொடுப்பேன் என்று பெண்ணைப்பெற்ற பெற்றோர் வீம்பாக இருப்பார்கள் என்று என் தாத்தா பாட்டி பேசும் போது கேட்டு இருக்கேன். ஆனால் இப்போது அந்த நிலை கொஞ்சம் வலுவிழந்து யாராவது ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு தங்கள் பெண்பிள்ளைகளை கட்டி வைக்க ஊரில் இருப்பவர்கள் நாயாய் பேயாய் அலைவது மிக வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கு. ஊரில் இருந்து யாராவது பெண் கேட்டு வந்துவிட்டால் மட்டும் அவன் குணம், குடும்பம், படிப்பு, வேலை, சம்பளம், என தெளிவாக விசாரிக்கும் இந்த அறிவு ஜீவிகள் அதே ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளை கிடைத்துவிட்டால் எந்த விசாரிப்புக்களும் இன்றி முன்பின் தெரியாதவனுக…
-
- 6 replies
- 3k views
-
-
எழுத்தாளர்: தமிழ்ப்பொடியன் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் பருத்தித்துறையில் உள்ள பிரபலமான ஆண்கள் பாடசாலையான ஹாட்லிக்கல்லூரியின் நூலகம் 1984ஆம் ஆண்டு எரிக்கப்பட்டது உங்களுக்கு தெரியுமா? 1984 ஆம் ஆண்டு செப்ரம்பர் 2 ஆம் திகதி. "பருத்தித்துறை படுகொலை" 18 பேர் சிறிலங்கா பொலிசாரால் பட்டப்பகலில் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். அத்தோடு ஹாட்லிக்கல்லூரியின் நூலகத்தை எரித்தார்கள். சுமார் 7000 புத்தகங்களை எரித்து சாம்பல் ஆக்கினார்கள். நூலகத்தை எரிப்பதற்கு ஹாட்லிக்கல்லூரியின் ஆய்வுகூடத்தில் இருந்த இரசாயண திரவங்களை(acids) பாவித்தார்கள். ஆய்வுகூடத்தையும் உடைத்து எறிந்தார்கள். யாழ்நூலகம் எரிக்கப்பட்டது 1981. மூண்டு ஆண்டுகள் கழித்து திரும்பவும் ஒர…
-
- 0 replies
- 70 views
-
-
மட்டக்களப்பு மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு கிராமத்தில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வு 21 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது. மண்முனைப் பற்று புதுக்குடியிருப்பு கிராமத்தில் 1990 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இரவு 10 மணியளவில் உட்புகுந்த காடையர்கள் கிராம மக்களை கடற்கரைப் பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று அங்கு மடு ஒன்றில் இருத்திவிட்டு அம்மக்களை வெட்டியும், சுட்டுக் கொன்ற கொடூரம் இடம்பெற்றிருந்தது. இப்படுகொலைச் சம்பவத்தில் சிறுவர்கள், வயோதிபர்கள், பெண்கள் உட்பட 17 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். 28 பேர் படுகாயமடைந்திருந்…
-
- 0 replies
- 283 views
-
-
சினிமா ஜாம்பவான்கள் எங்கள் பலரின் உள்ளங்களில் குடிகொண்டிருப்பார்கள். அதிலும் இவர்களை வீட்டிற்கு சொல்லியும் சொல்லாமலும் தான் சந்தித்து இருக்கிறோம் . 1960 முதல் 1980 காலப்பகுதி வரை புரட்ச்சித்தலைவர் ,எம்.ஜி.ஆர் , நடிகர் திலகம் சிவாஜி கணேசன் , மெல்லிசை மன்னன் எம்.எஸ்.விசுவநாதன் என சினிமா ஜாம்பவான்கள் எங்கள் பலரின் உள்ளங்களில் குடிகொண்டிருப்பார்கள். அதிலும் இவர்களை வீட்டிற்கு சொல்லியும் சொல்லாமலும் தான் சந்தித்து இருக்கிறோம் . இவர்களை சந்தித்த இடங்களை ராணி, ராஜா, சாந்தி, வின்சன், லிடோ, ரீகல், வெலிங்டன், ஸ்ரீதர், மனோகரா, ரியோ, ஹரன் என வரிசைப்படுத்த முடியும். இதில் இன்று ராஜா, சாந்தி (செல்வா) இரண்டு திரையரங்குகளில் தான் திரைப்படங்கள் யாழில் காண்பிக்கின்றது என்…
-
- 17 replies
- 4.7k views
-
-
-
பாதுகாப்பு வலயம் என தன்னால் பிரகடனப்படுத்தப்பட்ட பகுதி மீது சிறீலங்கா அரச பயங்கரவாதம் 08.05.2009 அன்று மேற்கொண்ட தாக்குதலில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அவலக் காட்சி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 951 views
-
-
இலங்கையின் தலை நகரம் கொழும்பு! ஆனால் வரும் அத்தனை தூதுவரும் கண்டியில் பேச்சுவார்த்தைக்கு போவதானது கவனிக்கபடவேண்டிய ஒன்று, அதுமட்டுமல்ல இலங்கை வரும்போது மிக காத்திரமான செயல் செய்வதுபோல் அறிக்கை விட்டபடி வருவார்கள், ஆனால் கண்டி போய்திரும்பியதும் கனிவாக காதலனை காதலி விமர்ஷிப்பதுபோல அழகாக நற்சான்ரிதள் தந்துவிட்டு போவது மட்டுமல்ல, தமது நாடு திரும்பியபிறகும் மிக நன்றாக ஆதரவு தருகின்ரனரே அதெப்படி சாத்தியமாகும்? கண்டியில் நடப்பது என்ன? மது, மாது, பணம் காசு,வீடுவாசல் தோட்டம் துறவு என அள்ளி விடுகின்ர அன்புக்காணிக்கை அவர்களை அடிமை மாடுகள் ஆக்குகின்ரனபோலும்? இயலுமானவர்கள் இந்த ஊழலலை ஒழித்துகட்ட முன்வருவீர்களா? உங்களால் முடிந்தளவு முயர்ச்சி செய்வீர்களா? எப்படியாவது ஒரு ப…
-
- 3 replies
- 4.7k views
-
-
வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த முதியவர்களை அவர்களது உறவினர்களிடம் செல்ல அனுமதிக்கும் பொறுப்பு வன்னிப்பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இராணுவ உயரதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த இந்த பொறுப்பு கடந்த வாரம் பொலிசாரிடம் வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இடம்பெயர்ந்து வந்துள்ள சுமார் 3 லட்சம் பொதுமக்கள் மத்தி்யில் ஆயிரக்கணக்கான முதியவர்கள் இருப்பதாகவும், இவர்களில் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் உறவினர்களுடன் சென்று வசிப்பதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. இதுவரையில் சுமார் 2000 பேர் வரையில் இவ்வாறு செல்வதற்கு அனுமதிக்கப்பட…
-
- 0 replies
- 1.6k views
-
-
நாங்கள் சாக துணிந்து விட்டோம்; போருக்கு தயார் : பெண் விடுதலை புலிகள் பகிரங்க அறிவிப்பு கிளிநொச்சி: இலங்கையில் விடுதலைப் புலிகள் மற்றும் அரசுக்கு இடையில் அமைதிப் பேச்சு வார்த்தை நடப்பதாக கூறினாலும், மீண்டும் போர் வெடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிக அளவில் உள்ளன. பெண் விடுதலைப் புலிகள் பலர் போருக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். ராணுவத்துடனான போரில் உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் பொருட்டு ஆண்டு தோறும் நவம்பர் மாதம் "மாவீரர் தின'த்தை விடுதலைப் புலிகள் கடைப்பிடித்து வருகின்றனர். கடந்த நவம்பரில் நடந்த நினைவு தின கூட்டத்தில் உரையாற்றிய புலிகள் தலைவர் பிரபாகரன், "தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது குறித்த பிரச்னையில் தீர்வு காணப்படா விட்டால் புத்தாண்டு (2006) முத…
-
- 17 replies
- 2.8k views
-
-
இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதுகாப்புச் சூழ்நிலை காரணமாகவும் எரிபொருட்களின் விலை அதிகரித்திருப்பினாலும் சிறிலங்கா ஏயர்லைன்ஸ் நிறுவனம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. அண்மையில் கூடிய சிறிலங்கா ஏயர்லைன்சின் பணிப்பாளர் சபை இந்த சூழ்நிலை காரணமாக இந்த ஆண்டுக்கான மிகை ஊதியத்தை அடுத்த ஆண்டு மார்ச்சில் வழங்கத் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள சிறிலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் தொடர்பாடல் இணைப்புத் தலைவர் சந்தன டி சில்வா, மிகை ஊதியக் கொடுப்பனவு தொடர்பாக வருட இறுதி அறிக்கையிலேயே தீர்மானிக்கப்படும். தவறான பிரசாரங்களும் எரிபொருள் விலை அதிகரிப்புமே இந்த நிலைக்கு காரணம். இலங்கைக்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை அண்மைக் காலமாக வெகுவாகக் குறைவடைந்…
-
- 0 replies
- 1.8k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
முகிலைத் துளைத்த புலிகளும் நிலவைத் துடைத்த தமிழரும் - வியாசன் முந்தி ராவணன் ஏற்றிய புஷ்பகம் முகில் துளைத்ததாம் அதன்பிற கின்றுதான் சொந்தமான வானூர்தியில் தமிழனும் சோதிமின்னிடத் தோன்றினான் ஆமிது விந்தைதானடா. போரிடை ஆடும்மண் விடியும் என்பதற்கான குறியுடன் எந்தைநாடினி எதற்கும் அஞ்சாதென இறக்கைகட்டிப் பறந்த பறப்படா. 26.03.2007 திங்கட்கிழமை ஈழத்தமிழருக்கு முகில்கள் தலைவாரியநாள். நள்ளிரவிலும் வெளிச்சம் பிரகாசித்த தினம். நீர்கொழும்புக்கு மேலே நின்றிருந்த நட்சத்திரங்கள் யாரிவர்கள் என்று அதிசயித்தன. அச்சத்தில் மகிழ்ச்சி தொலைத்தவர்கள்கூட கச்சையிறுக்கிக் காலிற் சதங்கை பூட்டினர். நாணற்புற்களும் தலைநிமிர்த்தி மானத்தின் மகுடம் தரித்தன. எம்மாலும் …
-
- 0 replies
- 777 views
-
-
இப்படித்தான் இருக்கிறது தொன்மைக் கிராமமான தென்னமரவடி Editorial / 2018 டிசெம்பர் 18 செவ்வாய்க்கிழமை, மு.ப. 03:15 - ஜெரா இலங்கையின் கடந்த நாள்கள், மிக பரபரப்பானவை. ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் இடைப்பட்ட போட்டியில், நாட்டு மக்கள் சிக்கியிருந்தனர். அதேசமநேரத்தில், திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குள் இருக்கின்ற தென்னமரவடிக் கிராமம், அபாயமொன்றை எதிர்கொண்டிருந்தது. ஜனநாயத்தை மீட்பதற்காக, நாட்டின் பிற பாகங்களில் உள்ள மக்கள் பதைபதைத்துக் கொண்டிருந்ததைப்போல, தென்னமரவடிக் கிராம மக்கள், தங்கள் பூர்வீகக் கிராமத்தைக் காப்பதற்குப் பதறிக்கொண்டிருந்தனர். இன்று தென்னமரவடி என இக்கிராமம் அழைக்கப்பட்டாலும், “தென்னவன் மரபு அடி” …
-
- 1 reply
- 857 views
-
-
குமரிக் கண்டம் http://omtamil.com/videos/watch/kumari-kandam-%E2%80%93-the-lost-lemuria-continent/
-
- 7 replies
- 1.6k views
-
-
என் பெயர் சரோஜினி நாகநந்தன். நான் கொழும்பு கொட்டாஞ்சேனையில் வசிக்கிறேன். என் மகன் – ராஜீவ் நாகநந்தன் – 17 செப்டம்பர் 2008 அன்று கடத்தப்பட்ட 11 ஆண் குழந்தைகளில் ஒருவராக இருக்கிறார். 1987 மார்ச் 30 அன்று பிறந்த என் மகன், கொழும்பிலுள்ள ஒரு சர்வதேச பாடசாலையில் படித்தார். அவர் மருத்துவராக ஆக வேண்டும் என்ற கனவு கொண்டிருந்தார். காணாமல் போன நாளின் மறுநாள் இங்கிலாந்து பயணிக்க திட்டமிட்டிருந்தார். அன்று இரவு, நண்பர்களுக்காக நாங்கள் பிரியாவிடை விருந்து வைத்திருந்தோம். அதன் பின்னர் தலைமுடி வெட்டவும், மற்றொரு நண்பரை சந்திக்கவும் என் மகனும் அவரது நண்பர்கள் நான்கு பேரும் காரில் புறப்பட்டார்கள். அவர்கள் சென்ற காரை கடற்படை ஆயுததாரிகள் தடுத்து நிறுத்தி கடத்திச் சென்றனர். சிறிது நேரத்தில் ர…
-
- 0 replies
- 136 views
-
-
உண்ணாநோன்பு சர்வதேசத்தில் எமது அங்கிகாரத்துக்கான ஒரு அக்கினிப்போர் அகிம்சை வழியிலான உரிமை போராடடங்களின் மிக உயர்ந்த வடிவம் தான் உண்ணா நோன்பு பொதுவாக இதுவே அகிம்சைபோரின் இறுதிவடிவமுமாகும். உலகின் ஒவ்வொரு உயிரினமும் உயிர்வாழ உணவு அத்தியாவசியமானது அந்த உணவை வெறுத்து உடலை வருத்தி மேற்கொள்ளப்படும் போராட்டம் ஒரு ஒப்பற்ற வடிவமாகவே மனிதநேயம் கொண்டவர்களால் நோக்கப்படும். திரு. திருமாவளவனின் இந்த போராட்டத்தினை உலகத்திலுள்ள தமிழர்கள் அனைவராலும் அன்போடு வரவேற்ற அதே நேரம் அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு வேதனையும் அடைகிறார்கள். ஆனால் சில தமிழின விரோதிகள் எப்படி இவரைக் கைதுசெய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். …
-
- 0 replies
- 731 views
-
-
இதன் கருத்துப்படத்தை காண http://vinavu.wordpress.com/2009/02/09/cricketsri/ இந்தியாவின் தேசிய ஊடகங்கள் குறிப்பாக ஆங்கில ஊடகங்கள் இந்திய இலங்கை கிரிக்கெட் போட்டிகளுக்காக செய்த கவரேஜில் நூற்றில் ஒரு பங்குகூட ஈழத்தின் அவலத்திற்காக ஒதுக்கவில்லை. முல்லைத் தீவில் உயிரிழந்த, படுகாயமுற்ற ஈழத்தமிழ் மக்களின் புள்ளிவிவரங்கள் தினசரிகளின் ஏதோ ஒரு பக்கத்தின் மூலையில் ஒதுங்கி நீர்த்துப்போன செய்தியான போது கொழும்பில் வெற்றிக்கு மேல் வெற்றி குவித்த இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைகள் படோபடமாக வெளியிடப்பட்டன. முல்லைத்தீவில் ஓரே நாளில் 300 பேர் படுகொலை! இந்திய கிரிக்கெட் அணி 300க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து வெற்றி ! மனித உயிரிழந்த புள்ளி விவரத்தின் அருகில் ரன்களுக்க…
-
- 1 reply
- 4.6k views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 405 views
-
-
இந்திய இராணுவம் நடாத்திய வல்வைப் படுகொலை - (படங்கள்) இளகிய மனம் உள்ளவர்கள்,இதயம் பலகீனமானவர்கள் தயவு செய்து கீழ்வரும் படங்களை பார்க்கவேண்டாம். தமிழர் உரிமைப் போராட்டத்தின் திருப்பு முனையாக ஏற்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் (ஜுலை 29.1987) விளைவாக இலங்கைக்கு வந்த இந்தியப் படைகள் (IPKF) ஏற்கனவே திட்டம் இட்டபடி தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து ஆயுத களைவு என்ற பெயரில் ஒரு முழு யுத்தத்தினையே நடத்தத் தொடங்கின.வேறு வழிவகை அறியா தமிழீழ விடுதலைப் புலிகளும் மக்கள் ஆதரவினை மட்டும் நம்பி உலகின் நாலாவது பெரிய இராணுவத்தினை எதிர்த்து போர்புரிந்துவெற்றியும் பெற்றனர். இந்திய இராணுவத்தினரின் தாக்குதல்கள் முடிந்து அந்தப் பிரதேசத்தை விட்டு இராணுவம் முகாம்களுக்குத் திரு…
-
- 0 replies
- 1.6k views
-
-
வணக்கம் தாய்நாடு... சுனாமி பொது நினைவாலயம், உடுத்துறை
-
- 2 replies
- 478 views
-
-
எங்கட ஊர்களுக்கே இருக்கிற ஒரு தனித்துவமான விசயம் இந்த வாசிகசாலைகள். ஊருக்கு ஊர் குறைஞ்சது ஒரு வைரவர்கோயில் இருப்பது போல இந்த வாசிகசாலைகளும் விதிவிலக்கல்ல . என்ர சிறு வயசு வாழ்க்கையில் ஒன்றிப் போன சில வாசிகசாலைகள் நினைவுக்கு வருகுது இப்ப. முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2006/06/blog-post.html
-
- 22 replies
- 5.1k views
-