அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
மே 2009ல் முடிவிற்கு வந்த, சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின் வடுக்கள் நாட்டின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு நகரம் மற்றும் அதன் புறநகர்க் கிராமங்களிலும் இன்னமும் தொடர்கின்றன. 2009 மே 23ல், அதாவது உள்நாட்டு போர் நிறைவுற்று நான்கு நாட்களின் பின்னர் , வீட்டை விட்டுப் புறப்பட்ட பின்னர், இன்னமும் வீடு திரும்பாத தனது கணவரான பத்மசிறியை, 32 வயதான சமூகப் பணியாளரான புண்ணியமூர்த்தி ஜெயதீபா இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறார். மட்டக்களப்பு நகருக்கு வடக்கேயுள்ள கிராமத்தில் இராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையின் போது இவர் காணாமல் போனார். தனது கணவர் வீட்டை விட்டுப் புறப்படும் போது சிவப்பு நிற ரீசேட் மற்றும் நீல நிற ஜீன்ஸ் போன்றவற்றை அணிந்திருந்ததாக ஜெயதீபா த…
-
- 0 replies
- 559 views
-
-
ஜின்னா - காந்தி இரு தேசப்பிதாக்கள் ரொடெரிக் மாத்யூஸ் தமிழில்: கண்ணன் காந்தி, ஜின்னா இருவருமே தேசத் ‘தந்தை’களாக பாராட்டப்பட்டுள்ளனர். ஆனால் தந்தைமை இருவருக்கும் சுகமானதாக அமையவில்லை. அதிக பணிச்சுமையால் ஜின்னா தன் உடல்நலத்தை இழந்தார். வரலாற்றில் அதிகம் அறியப்பட்ட இந்திய ஆளுமையான காந்தி, ஒரு ‘தேசபக்த’னின் கருத்தில், குறைபட்ட இந்தியத்தன்மை கொண்ட இந்தியாவை உருவாக்கியதற்காகச் சுட்டுக் கொல்லப்பட்டார். தந்தைமை இருவரையுமே பலிவாங்கியது. ஆனால் அதுவே பிற்காலத்தில் அவர்களுக்குப் புத்துயிர்ப்பும் அளித்து திருஉருக்களாக்கியது. அவர்கள் இருவருக்கும் இடையில் உருப்பெற்ற எல்லைக் கோட்டின் தம் பக்கத்தில் அவர்கள் புகழப்பட்டார்கள். இரு தலைவர்களும் எப்படிப் பார…
-
- 1 reply
- 1.5k views
-
-
சிறிலங்காவின் கிழக்கில் வேரூன்றும் வஹாபி தீவிரவாதம் – இந்திய ஊடகம் [ திங்கட்கிழமை, 07 ஒக்ரோபர் 2013, 06:30 GMT ] [ கார்வண்ணன் ] பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர், ஷபாஸ் ஷெரீப்பின் ஆதரவுபெற்ற, லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின், பாதுகாப்பாக பிரதேசமாக சிறிலங்கா வேகமாக மாறிவருகிறது என்று, அனைத்துலக தீவிரவாத அமைப்புகளின் வளர்ச்சியைக் கண்காணித்து வரும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாத மூவர், சிறிலங்காவில் லஷ்கர் தொய்பா - குறிப்பாக, பின்தங்கிய பகுதிகள் மற்றும் கிழக்குக் கரையோரப் பகுதிகளில், ஒரு தளத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றிய தகவல்கள் வழங்கினர். பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐயுடன் தொடர்புடைய, பாகிஸ்தான் …
-
- 0 replies
- 1.9k views
-
-
ஐ.எம்.எவ் கடன்: நம்பிக்கையைக் கழுவேற்றல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கை, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான ஒருவழி, ‘ஐ.எம்.எவ்’ என்று அறியப்பட்ட சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்துவதே என்று, எல்லோரும் கூறுகிறார்கள். அரசியல்வாதிகள் முதற்கொண்டு பொருளியல் அறிஞர்கள் வரை, அனைவரினதும் இறுதிப் போக்கிடமாக, சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதே வழியாக இருக்கிறது. இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் வேர்கள் ஆழமானவை. அது இலங்கையின் பொருளாதாரக் கொள்கை சார்ந்தது. அது குறித்து யாரும் பேசுவதில்லை. அதேபோல, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் எவ்வகையான தாக்கங்களை மூன்றாமுலக நாடுகளில் ஏற்படுத்தியுள்ளது என்பதையும் யாரும் பேசுவதில்லை. இவை இரண்டும் பேசப்பட வேண…
-
- 0 replies
- 521 views
-
-
http://aruvi.com/img/uploads/2015/aruvi-news-photos/1636724261_china.jpg சீனா ஏன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சந்திக்க முனைகிறது? - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்! Posted: 2021-11-12 08:38:54 EST இலங்கைக்கும் சீனாவுக்குமான உறவு நெருக்கடிமிக்கதொரு காலப்பகுதியை எதிர்நோக்கியுள்ளமை தெரிகிறது. இலங்கையை மிக நீண்டகால நட்பு நடாடாகவும் புவிசார் அரசியலையும் பூகோள அரசியலையும் எதிர்கொள்வதற்கு சீனாவுடனான உறவை பலப்படுத்திய இலங்கை தற்போது இந்தியாவையும் மேற்கையும் நோக்கி நகர்வதாக விளங்குகின்றது. இச்சூழலில் இலங்கையை எதிர்கொள்ள சீனா அணுகுமுறை மாற்றங்களை செய்ய நகர்வு ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தென்னிலங்கையிலிருந்து வெளியாகவும் தகவல்கள் உறுதிப்படுத்துகிறது. இக்கட்டுரையும் இலங்கை-சீன உ…
-
- 0 replies
- 363 views
-
-
ஆரியகுளமும் தமிழ்த் தேசிய அரசியலும் என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan யாழ்ப்பாண நகரிலுள்ள ஆரியகுளம், துப்புரவு செய்யப்பட்டு, அழகாகக்கப்பட்டு, ஒரு மகிழ்வூட்டும் திடலாக உருப்பெற்றிருக்கிறது. இதனை யாழ்ப்பாண மாநகர சபை செய்திருக்கிறது. அதுவும், தனியார் அறக்கட்டளையொன்றின் நிதி உதவியுடன் இது நடந்தேறி இருப்பதாக அறியக்கிடைக்கிறது. யாழ்ப்பாண நகரத்திலிருந்த குளமொன்று புனரமைக்கப்பட்டு, பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டிருப்பது அரசியல் பேசுபொருளாகி இருக்கிறது; விவாதப்பொருளாகி இருக்கிறது என்பது, தமிழ்த் தேசிய அரசியலின் வங்குரோத்துப் போக்கை சுட்டிக்காட்டி நிற்கிறது. ஒரு புறத்தில், ஸ்ரீ …
-
- 0 replies
- 1k views
-
-
முஸ்லிம்களின் இனவிகிதாசாரத்துக்கு ஏற்ப காணி இல்லை மரணித்த பிறகு, எல்லோருக்கும் அதிகபட்சம் ஆறடி நிலம்தான் சொந்தம். என்றிருந்தாலும், உலகத்தில் வாழ்கின்றபோது, தனிமனிதர்களும் குழுக்களும் அரசாங்கங்களும் நாடுகளும் நிலத்துக்காக நடத்திய போராட்டங்கள் எண்ணிலடங்காதவை. சர்வதேச அளவில் மண்ணுக்காக நடந்த யுத்தங்கள்தான் அதிகம். காணிப் பிரச்சினையும் நிலப்பற்றாக்குறையும் உலக அளவில் பொதுவாக எல்லா நாடுகளிலும் எதிர்நோக்கப்படுகின்ற பிரச்சினை என்றாலும், இன, மத அடிப்படையிலோ அல்லது ஆளுகைக் கட்டமைப்பு ரீதியாகவோ வேறுபட்டுள்ள மக்கள் கூட்டத்தாரிடையே இந்நிலைமை தீவிரமாகக் காணப்படும். அந்த வகையில், இலங்கையிலும் காணிப்பிரச்சின…
-
- 2 replies
- 567 views
-
-
குர்திஸ்தான் போன்று இலங்கையில் வாக்கெடுப்பு சாத்தியமா? -அ.நிக்ஸன் மேற்குலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி குர்திஸ்தான் மக்கள் தங்கள் தேசியத்தையும் தனிநாட்டுக் கோரிக்கையையும் சாத்தியப்படுத்தியுள்ளனர். ஈராக் அரசுக்கு பாடம் புகட்டியுள்ளனர். அ.நிக்ஸன் குர்திஸ்தான் போன்று வாக்கெடுப்பு நடத்தி தமிழ் ஈழத்தையும் தனி நாடாக்க வேண்டும் என்றால் குர்திஸ்தான் அரசியல் தலைவர்கள் போன்று தமிழ்த் தலைவர்களும் தமிழ்த்தேசியம் என்ற கோட்பாட்டிலும் சுயாநிர்ணய உரிமை என்ற கருத்துடனும் நிலையாக கால் ஊன்ற வேண்டும். ஆனால் அதற்கான சாத்தியங்கள் வடக்கு கிழக்கில் இருக்கின்றதா என்பது கேள்வி. தமிழரசுக் கட்சி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு போன்று குறிப்ப…
-
- 3 replies
- 514 views
-
-
தமிழ்த் தலைவர்களின் பொறுப்பு என்ன? ஈழத் தமிழரது போராட்டத்திற்தான் இலங்கைக்கான ஜனநாயகமும் ஏனைய இனங்களுக்கான உரிமைகளும் மையங் கொண்டுள்ளன. ஒடுக்கப்படும்,அநீதி இழைக்கப்படும் ஈழத் தமிழருக்கான ஜனநாயகமின்றி இலங்கைக்கான ஜனநாயகம் பற்றியோ, மனிதஉரிமைகள் பற்றியோ பேச முடியாது. நீண்ட காலமாய் தொடர்ச்சியாக ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநியாயங்களுக்கு எதிராக நீதியைக் காணாமல் இலங்கைக்கான நீதியைப் பற்றிப் பேசமுடியாது. தொன்மையான வரலாற்றையும் செழுமையான பண்பாட்டையும் கொண்ட ஆனால் அளவால் சிறிய ஈழத் தமிழினம் ஒடுக்குமுறைக்கு எதிரான தனது போராட்டத்தில் தன் அளவுக்கும் அதிகமான அளவு தியாகங்களைச் செய்துள்ளதுடன் தன் அளவையும் மீறிய அளவிற்கு அது அழிப்புக்களுக்கும், இழப்புக்களுக்கும…
-
- 0 replies
- 469 views
-
-
அபாயகரமான கட்டத்தை நோக்கிச் செல்கிறது இலங்கையின் பொருளாதாரம் புதிய மேலாளர்கள் போதுமான மனிதாபிமான உதவிகளை உருவாக்குவதற்கும் பற்றாக்குறையைக் குறைப்பதற்கும் தவறினால் , நாடு குழப்பமாகவும் அராஜகமாகவும் மாறும். மக்களின் சகிப்புத்தன்மைக்கும் எல்லை உண்டு. முல்லைத்தீவில் எரிபொருளைப் பெறுவதற்காகக் காத்திருக்கும் தமிழ்க் கூட்டத்தைக் கலைப்பதற்காக இராணுவத்தினர் வானத்தை நோக்கிச் சுட்டதை ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தெற்கில் பொலிஸார் பொறுப்பேற்கும் போது வடக்கில் இராணுவம் ஏன்? ஏன் இந்தப் பாகுபாடு? நெருக்கடியை தவறாக சித்திரித்து அதை ஓர் இனவாதப் பிரச்சினையாக மாற்றுவதற்கு திரைக்குப் பின்னால் ஏதாவது தீய மற்றும் கொடூரமான ச…
-
- 1 reply
- 415 views
-
-
முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல் – பயனடைந்திருப்பது யார்? நிலாந்தன்.. ‘தனது மக்களுக்கு இலவசக் கல்வி, இலவச சுகாதார சேவை போன்ற பல்வேறு சமூக நலத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்திய இலங்கைக்கு சமாதானம் இலகுவாகக் கிட்டியிருந்திருக்க வேண்டும். ஆனால் பௌத்தத்துக்கும், சிங்கள பெரும்பான்மையினருக்கும் உயர்நிலை வழங்கும் நிலையை அந்நாடு எடுத்ததால், ஏனைய மக்கள் சமூகத்தை தேசிய ரீதியாக அடையாளப்படுத்தும் உணர்வில் அதைத் தனிமைப்படுத்தி விட்டது.அந்த நிலைப்பாட்டிலிருந்து தன்னை விடுவித்துத் திருந்தும் போக்கு இலங்கையில் தென்படுவதாக இல்லை. பன்மைத்துவத்தில் உள்ள சிறப்பை இலங்கை உணர்ந்துகொள்ளவேயில்லை.’ -அமர்தியா சென் அம்பாறையிலும் கண்டியிலும் நிகழ்ந்த சில தனிப…
-
- 0 replies
- 482 views
-
-
பிரதேசவாதம் வேறு!!! பிரதேச நலன் வேறு எதோ ஒரு பத்திரிகையில் தீவகப் பிரதேசங்கள் ஒன்றாக இணைந்து அமைப்பொன்றை நிறுவுகின்றார்களாகவும் அது கருணாசியத்தை வளர்ப்பதற்கு உதவுவதாகவும் வெறும் உதவாக்கரை கருத்துக்களோடு கட்டுரையொன்று வந்துள்ளது. யாழ்ப்பாணத்தை சுற்றி அமைந்துள்ள எதோ ஒரு தீவில் பிறந்தவன் என்கின்ற முறையிலும், தேவையற்றதற்கெல்லாம் கருணாவின் பெயரை தொடர்புபடுத்தும் புல்லுரிவிகளின் நோக்கத்தையும் தோலுரித்துக்காட்டுவது தான் இந்தக் கட்டுரையின் (??) உள்நோக்கம். எதற்கெடுத்தாலும் தீவகப் பிரதேசங்கள் அன்று தொட்டு இன்று வரை தமிழ் தேசியம் வளர்க்கும் தம்பிமார்களின் விளையாட்டுக்களுக்கு ஆளாகிக்கொண்டே வருகின்றது. யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வல்வெட்டித்துறை, கோண்டாவில், கோப்பாய் போன்ற பிர…
-
- 1 reply
- 1.7k views
-
-
பிரித்தானிய டெலோ பொறுப்பாளர் திரு சம்பந்தன் அவர்களோடான செவ்வி
-
- 0 replies
- 585 views
-
-
-
- 1 reply
- 503 views
-
-
இரணைதீவு: மகிழ்ச்சியின் கண்ணீரும் சமாதானக் கோரிக்கைகளும் - இரணைதீவிலிருந்து கமந்தி விக்கிரமசிங்க பயங்கரமான இன முரண்பாட்டின் வடுக்கள், இன்னமும் குணமாகும் காலத்திலேயே இருக்கின்றன. போருக்குப் பின்னரான அபிவிருத்தித் திட்டங்கள், குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும், வெளிப்புற அழுத்தங்களின் காரணமாக மெதுவான முன்னேற்றத்தையே வெளிப்படுத்தியுள்ளன. உள்ளக இடப்பெயர்வுக்குள்ளான பல பேரில், இரணைதீவைச் சேர்ந்த 187 குடும்பங்களும் உள்ளடங்குகின்றன. இரணைதீவு என்பது, கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலகத்தின் கீழ் வரும், இரண்டு தீவுகளாகும். போரால் பாதிக்கப்பட்ட இரணைதீவில் காணப்பட்ட மக்கள், அங்கிருந்து …
-
- 0 replies
- 386 views
-
-
சுதந்திரத்தின் பொருள் என்ன? நிலாந்தன். 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் திருப்பகரமான ஒரு முடிவு எட்டப்படும் என்று ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார். தமிழ்க் கட்சிகளோடு பேச்சுவார்த்தைகளைத் தொடங்கிய பொழுது அவருடைய நிகழ்ச்சி நிரல் அவ்வாறுதான் காணப்பட்டது. ஆனால் அவர் எதிர்பார்த்தது போல பேச்சுவார்த்தைகள் முன்னேறவில்லை. அதைவிட முக்கியமாக சுதந்திர தினத்தை ஒரு கரி நாள் என்று பிரகடனப்படுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் வடக்கிலிருந்து கிழக்கை நோக்கி ஒரு ஆர்ப்பாட்டப் பேரணியை ஒழுங்குப்படுத்தியிருக்கிறார்கள். கடந்த 75 ஆண்டுகளாக சுதந்திர தினம் எனப்படுவது தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு கெட்ட நாளாகவே காணப்படுகிறது. தமிழ் மக்கள் தங்களுடை…
-
- 0 replies
- 670 views
-
-
உன்னை நீ அறிவாய் ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் பொதுவாகவே நீங்கள் கலைப்பிரிவிலோ அல்லது விஞ்ஞானப் பிரிவிலோகல்வியை தொடர்ந்தாலும் முதலில் நீங்கள் இந்த கிரேக்க தத்துவவியளாளர்களின் தத்துவ சிந்தனைகளைகட்டாய பாடமாக படிக்க வேண்டும். இந்த பாடத்தில் சித்தி அடைந்தால் மாத்திரமே நீங்கள் தொடர்ந்துஏனைய பாடங்களை படிக்க முடியும். இவை எமக்கு ஒன்றை தெளிவாக சொல்லி இருக்கிறது நீ எதை கற்றாலும் ஆழ்ந்த அறிவோடும் தேடலோடும்அதை கற்று க்கொள்ளுவது மட்டும் இன்றி உன்னை நீ அறிய வேண்டும். இந்த வகையில் சோக்கிரட்டீஸ், பிளாட்டோ, அடிஸ்டோட்டில் என்னும் தத்துவவியளாளர்கள் முக்கியமானவர்கள். எனக்குத் தெரிந்ததெல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாதது மட்டும் தான் என்று சொன்ன யார் இந்தக் கிழவன் சோக்கிரட…
-
- 1 reply
- 481 views
-
-
Published By: VISHNU 19 DEC, 2023 | 10:52 AM போ . இராஜரெட்ணம் நாட்டில் தோன்றியுள்ள பொருளாதார நெருக்கடி, வறுமை, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், வேலைவாய்ப்பின்மை போன்ற பல்வேறு காரணங்கள் இளைஞர்கள் பலரை வேலை வாய்ப்பு தேடி வெளிநாடு செல்ல நிர்பந்தித்துள்ளது. இந்த போக்கு தொடர்பில் நாம் சற்று விரிவாகப் பார்ப்போமானால், இளம் இலங்கையர்கள் வெளிநாட்டில் பணிபுரிய விரும்புவதற்கு முதன்மையான காரணங்களில் ஒன்று, சிறந்த பொருளாதார வாய்ப்புகளின் கவர்ச்சியாகும். பல வளர்ந்த நாடுகள், உள்நாட்டில் கிடைப்பதை விட அதிக ஊதியம் மற்றும் சிறந்த வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. தகவல் தொழிநுட்பம், நிர்மானம் மற்றும் நிதி போன்ற துறைகளில் திறமையான நிபுணர்களுக…
-
- 0 replies
- 272 views
- 1 follower
-
-
மீண்டும் ரஷ்யா vs. மேற்கு ஆனால் இந்த முறை வேறு ஒரு தளத்தில். ரஷ்ய நாட்டு உளவுப் படை மிகத் தேர்ந்த உளவியல் நுட்பங்களை கொண்டு ரஷ்யாவில் பணிபுரியும் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகளின் நடவடிக்கைகளை முடக்கத் துவங்கியுள்ளது. தொடர்ச்சியான மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படும் இவர்கள், தங்கள் பணிகளை திறம்பட செய்ய முடியாமல் தவிக்கின்றனர். எப்படியெல்லாம் இது செய்யப்படுகிறது? உதாரணத்திற்கு இந்த அதிகாரிகளின் மனைவிகளுக்கு தொடர்ச்சியாக கலவி பொம்மைகளை அனுப்புவது. யார் எங்கிருந்து அனுப்புகிறார் என்ற விவரம் தெரியாமல், இதை எப்படி தவிர்ப்பதென்றும் புரியாமல் இந்த அதிகாரிகள் திண்டாடுகின்றனர். இத்தகைய உளவியல் சிக்கல்களால் பலர் தற்கொலை செய்து கொள்வதுமுண்டு. மேற்கொண்டு அறிய இந்தக் கட…
-
- 5 replies
- 1.2k views
-
-
விவரங்கள் வழங்காத புள்ளி விவரங்கள் காரை துர்க்கா / 2019 ஏப்ரல் 02 செவ்வாய்க்கிழமை, பி.ப. 05:54 Comments - 0 தமிழ் நாட்டுக் கவிஞர் ஒருவரது ‘கைகூ’ கவிதை ஒன்றை, அண்மையில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மனதில் அப்படியே ஆழமாகப் பதிந்துவிட்டது. உங்களோடும் பகிர்ந்து கொள்கின்றேன். ‘பொய், பச்சைப் பொய், புள்ளிவிவரம்’ என்பதே அதுவாகும். வெறும் மூன்று வரிகளில், அழகான கருத்தை, அற்புதமாகக் கவிஞர் சொல்லி உள்ளார். அப்படியே விடயத்துக்கு வருவோம். கடந்த 25ஆம் திகதி, கொழும்பு பத்திரமுல்லயில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில், ஆளுநரால் ஊடகவியலாளர் மாநாடு நடத்தப்பட்டது. அவர், அங்கு பல விடயங்களைத் தெரிவித்து உள்ளார். வடக்கில் இராணுவக் கட்…
-
- 0 replies
- 498 views
-
-
"உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல் / கறுப்பு ஜூலையில் ஒரு சிந்தனை" / பகுதி 01 [இது என் சிறிய சிந்தனை. இதில் பிழையும் இருக்கலாம் சரியும் இருக்கலாம். இதை சமாதான விரும்பிகளிடம், அவர்களின் கருத்துக்காக சமர்ப்பிக்கிறேன். உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன் !] காந்தி, ஒரு வெளிநாட்டு அதிகாரத்துக்கு எதிராக சுதந்திரம் வேண்டி போரிட்டார் நெல்சன் மண்டேலா நிறவெறிக்கு எதிராகப் போரிட்டார் மார்ட்டின் லூதர் கிங் சமூக உரிமைக்காக போரிட்டார் இவர்களில் இருந்தும் பெண் விடுதலைக்கு எதிராக போரிட்ட பாரதியார் சாதி, மதத்திற்கு எதிராக போரிட்ட பெரியார் தமிழர்களின் சம அரசியல் உரிமைக்காக போரிட்ட தந்தை …
-
-
- 9 replies
- 958 views
-
-
கிழக்கின் அரசியலுக்கான நேர்மைத்தனம் Editorial / 2019 ஜூலை 16 செவ்வாய்க்கிழமை, பி.ப. 05:22 Comments - 0 -தீர்த்தன் நாட்டில் மீண்டும் மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணைகளும் ஆட்சிக் கவிழ்ப்புக்கான முயற்சிகளுமே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அரசாங்கத்துக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, கட்சி பேதமற்ற முறையில், சிறுபான்மைக் கட்சிகளின் பலத்துடன் மீண்டும் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. இது தேசிய அரசியலின் நிலைமை. தேசிய அரசியலிலும் தேர்தலுக்கான ‘சருகு புலி விளையாட்டுகள்’ தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. நமது கிழக்கைப் பொறுத்தவரையில், இலங்கையின் வடக்கு, கிழக்கு இணைப்பு, அதனூடான செயற்பாடுகளுக்கான முன்னெடுப்புகள் குறித்து நடைபெற்று வரு…
-
- 0 replies
- 610 views
-
-
மாற்றம் ஒன்றே தேவை -இலட்சுமணன் ஏழாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிக்குரிய தேர்தல் முடிவுகள், இலங்கையின் நிலையான அரசியல் ஸ்திரத்தன்மை குறித்தும் எதிர்கால இனத்துவ அரசியல் நகர்வுகள் குறித்தும் பல்வேறு சிந்தனாவோட்டத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேவேளை, தமிழ் அரசியல் தலைமைகளினதும், அதன் எதிர் அரசியல் தலைமைகளினதும் மக்களதும் கருத்தோட்டங்களை மிகத் தெளிவாக வெளிக்காட்டி நிற்கிறது. இலங்கையின் அரசியல் வரலாற்றில், தமிழ் பேசும் இனம், ஓரணியில் நின்றும் சிங்களப் பெரும்பான்மை மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றியீட்டிய ஜனாதிபதியாக, குறிப்பாக சிங்கள மக்களின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகியுள்ளார். இந்தத் தெரிவு என்பது, இலங்கை அரசியல் தலைமைகளுக்கும் சிறுபான்மை …
-
- 0 replies
- 696 views
-
-
16 MAR, 2025 | 03:31 PM டி.பி.எஸ். ஜெயராஜ் "தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் வெற்றி பெற்று நிருவாகங்களை அமைக்கும்." கடந்த வியாழக்கிழமை (மார்ச் 13) யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் கிளப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோது கடற்தொழில், நீர்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மிகுந்த நம்பிக்கையுடன் கூறினார். எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிடவிருக்கும் தேசிய மககள் சக்தி வேட்பாளர்களின் கட்டுப்பணத்தை செலுத்துவதற்காக அவர் யாழ்ப்பாணம் தேர்தல் செயலகத்துக்கு சென்றிருந்தார். அவருடன் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் பிரதேச அமைப்பாளர்களுடன் கூட இருந்தனர். யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் முக…
-
- 0 replies
- 389 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா ? - நிலாந்தன் ஒரு காலம் சேவல் கூவி எமது இரவுகள் விடிந்தன. பிறகு ஒரு காலம் ஏறி கணைகளின் வெடித்துப் பகல் விடிந்தது. ஆயுத மோதல்களுக்குப் பின் பேக்கரி வாகனங்களின் இசையோடு பகல் விடிகிறது. ஆனால் அண்மை ஆண்டுகளாக பேக்கரி வாகனங்களோடு சேர்த்து மற்றொரு வாகனமும் ஊர் ஊராக வருகிறது. அதுதான் தண்ணீர் விற்கும் வாகனம். அதுவும் இசையோடுதான் வருகிறது. அதாவது நீரை விலைக்கு வாங்கும் ஒரு சமூகமாக நாங்கள் எப்பொழுதோ மாறி விட்டோம். சில ஆண்டுகளுக்கு முன்பு கலாநிதி ஆறு.திருமுருகன் இதுதொடர்பாக பகிரங்கமாக பேசியிருந்தார். ”ஆலயங்களில் காணப்படும் பொதுக் கிணறுகளில் உள்ள நீரை தீர்த்தம் என்று கூறி ஊர் முழுதும் அருந்தியது. ஆனால் இப்பொழுது பெரும்பாலானவர்கள் வடிக்கப்பட…
-
-
- 4 replies
- 359 views
- 1 follower
-