Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. 'எய்தவர்களுடன் நல்லிணக்கம் - அம்புகளுடன் பகைமுரண்' கூட்டமைப்பின் ராஜதந்திரமோ? குமரன் கார்த்திகேயன் 17 அக்டோபர் 2013 மாகாணசபைத் தேர்தலைத் தொடர்ந்து வடக்கில் நிலவும் சூழ்நிலைகளை அவதானிக்கும் ஒருவருக்கு எற்படக்கூடிய மன வருத்தமும் கோபமும் இந்தக் கட்டுரையில் வெளிப்படையாகத் தெரிகிறது என எவராவது கருதுவாரானல் அது இக்கட்டுரையின் வெற்றியாகும் எமது கடந்த காலங்களை உரிய பொழுதுகளில் மீள்பார்வைக்கு உட்படுத்தாமையினாலும் புறமிருந்து வந்த விமர்சனக்களை புறந்தள்ளியமையினாலும் நாம் எதிர்கொண்ட அனர்த்தங்களை அனைவரும் அறிவோம். இனிவரும் காலங்களையும் மௌனத்திற்கு இரையாக்கி எதிர் வரும் பல தசாப்தங்களை கறை படிந்த வரலாறுகளாக மாற்றக் கூடாது என்பதன் வெளிப்பாடாகவே இந்தப் பதிவு அமைகிறது. …

  2. நாட்டில் பொது பல சேன என்கின்ற பௌத்த தீவிரவாத அமைப்பானது முஸ்லீம் சமூகத்தை தேசிய நீரோட்டத்திலிருந்து தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதியை சிறிலங்கா அரசாங்கம் வழங்கியமை மிகப் பெரிய தவறாகும். இவ்வாறு கொழும்பை தளமாகக் கொண்ட The Sunday Leader ஊடகத்தில் Dr Dayan Jayatilleka எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் இஸ்லாம் எழுச்சி பெற்றுவருவதாலா அல்லது சிறிலங்காவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு எதிரான அமைப்பினதும் அதன் நடவடிக்கைகளாலா சிறிலங்காவுக்கு உண்மையான ஆபத்து ஏற்பட்டுள்ளது? சிறிலங்காவின் வடக்கு கிழக்கைப் பிரிப்பதற்குத் தேவையான மிகப் பெரிய மூலோபாயத் தவறைத் தற்போது சிறிலங்கா மே…

  3. பிரித்தானியாவின் புதிய சிக்கல் – போரிஸ் ஜோன்சன் August 8, 2019 159 . Views . பிரக்சிட் நெருக்கடியினால் முன்னால் பிரதமர் தெரேசா மே பதவி விலகியதைத் தொடர்ந்து போரிஸ் ஜோன்சன் புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ளார். இப்சோஸ் மோரி (Ipsos Mori) என்னும் நிறுவனம், இவ்னிங் ஸ்டாண்டர்ட் (Evening Standard) பத்திரிகைக்காக நடத்திய கருத்துக் கணிப்பின்படி கன்சர்வேடிவ் கட்சிக்கான ஆதரவு தற்பொழுது பத்துப் புள்ளிகளால் அதிகரித்துள்ளது எனக் கூறப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பினை விட முன்னணியில் அவர் நிற்பதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. பிரக்சிட்டினால் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாகவே அடுத்த பிரதமராக வரக்கூடிய சாத்தியம் அதிகமாயிருந்த ஜெரமி கோர்பின் பின்னுக்கு தள்ளப்பட்டு …

  4. கம்பியா:து(ர்)ப்பாக்கி(ய) ஜனநாயகம் - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஜனநாயகம் பல வழிகளில் நிறுவப்படுகிறது. வாக்குப் பெட்டி முதல் துப்பாக்கி முனை வரை பல்வேறு அந்தங்களில் அது நிலைநாட்டப்பட்டுள்ளது. அவ்வாறு நிலைநாட்டப்பட்ட ஜனநாயகத்தின் தன்மையானது, அது அடையப்பட்ட வழிமுறையில் தங்கியுள்ளது. முறை எவ்வாறானதாயினும் முடிவில் எல்லாம் ஜனநாயகத்தின் பெயரால் அரங்கேறுகின்றன. ஜனநாயகம் என்றால் என்ன என்பதற்கான பொருட்கோடல் பரந்த தளத்தில் நடைபெறுவதால் எல்லாவற்றையும் ஜனநாயகம் என வசதியாக அழைத்துக் கொள்ளவியலுமாகிறது. ஆபிரிக்காவில் மிகவும் சிறிய நாடான கம்பியாவில் அண்மைக்காலமாக நடந்தேறிய நிகழ்வுகள் ஜனநாயகத்தை நிலைநாட்டுவத…

  5. சீனா – தமிழரின் எதிரியா நண்பனா? February 15, 2021 — கருணாகரன் — “பலரும் இதை மறுக்கலாம். ஆனால், தமிழருக்கு இப்போது நேச சக்தி சீனாவே” (சீனா மறைவிதமாக தமிழர்களுக்கு நன்மை செய்கிறது, ஆகவே நட்புச் சக்தியாக உள்ளது எனும் அர்த்தத்தில்) என்றொரு பதிவை கடந்த வாரம் முகநூலில் எழுதியிருந்தேன். பல தமிழ் நண்பர்களும் பதட்டமாகி விட்டனர். “ஐயோ, அதெப்படிச் சீனா தமிழர்களுக்கு நட்புச் சக்தியாக இருக்க முடியும்? அது சிங்களத் தரப்போடல்லவா நெருங்கிச் செயற்படுகிறது?அரசாங்கத்தின் மடியில் அல்லவா படுத்திருக்கிறது!” என்றவாறாக பலரும் கொதித்தனர். ஒரு நண்பர், அவர் நீண்ட காலமாகவே அரசியல் மற்றும் கலை இலக்கியம் ஊடகம் மற்றும் புலமைத்துவத் தளத்தில் முக்கியமானவர். இதெல்லாத்த…

  6. பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக கடந்த 1989 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு இதுவரை நஸ்டஈடு வழங்கப்படவில்லையென்று சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், தமது காணிகளில் மகிந்த அரசாங்கம் தனது படைகளைக் கொண்டு விவசாயம் செய்கின்றது என்றும் மேற்படி காணி உரிமையாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு நஸ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட பல தரப்பினருக்கும் பல தடவைகள் கடிதங்கள் அனுப்பிய போதிலும் இதுவரை எந்தவித பதிலும் கிடைக்கவில்லையென்றும் மேற்படி மக்கள் தெரிவித்துள்ளனர். வலி.வடக்கில் கடந்த 1989 ஆம் ஆண்டு பல காணிகள் விமான நிலைய விஸ்தரிப்புக்காக சிறிலங்கா அ…

    • 2 replies
    • 644 views
  7. ஒரே நாடு ஒரே தேசம் என்று சொல்லப்படுகின்ற போதிலும் இன ஐக்கியம் பற்றிப் பேசப்படுகின்றபோதிலும், சில போதுகளில் தென்னிலங்கையில் ஒரு உணர்வும் வடக்கில் வேறு விதமான உணர்வும் மேலிடக் காண்கின்றோம்.ஒரு பக்கத்தில் யுத்த வெற்றிக் கொண்டாட்டம் மறுபக்கம் நினைவேந்தலும் கண்ணீர் அஞ்சலியுமாகவே, கடந்த 11 வருடங்களாக மே 18ஆம் திகதிகளை நாம் கடந்து வந்து கொண்டிருக்கின்றோம்.இந்தத் திகதி, அரசாங்கங்களுக்கும் கணிசமான நாட்டு மக்களுக்கும் யுத்தம் என்ற பெரிய துன்பம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட மகிழ்ச்சிகரமான நாளாகவும் பொதுவாக தமிழ் மக்களுக்கு தங்களது விடுதலைப் போராட்டம் ஆயுத ரீதியில் தோற்கடிக்கப்பட்ட தினமாகவும் இருக்ககின்றது எனலாம். ஆனால் இரு தரப்பிலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிச்சயமாக அது …

    • 0 replies
    • 644 views
  8. இந்துத் தேசியவாத அமைப்பால் யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலயம் மற்றும் கண்டியிலுள்ள தலதா மாளிகை போன்றன மதிப்பளிக்கப்படுதல் போன்றன சிறிலங்காவுடனான இந்தியாவின் பண்பாட்டுத் தொடர்பாடலைக் கட்டியம் கூறுகின்றன. இவ்வாறு Swapan Dasgupta என்னும் இந்திய ஊடகவியலாளர் THE ASIAN AGE ஊடகத்தில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 2015ன் முற்பகுதியில் இடம்பெறுவதற்கான சாத்தியமுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பான அரசியல் கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெறுகின்றன. சிறிலங்காவின் மத்திய அரசாங்கத்திற்கும் யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண சபைக்கும் இடையில் நிலவும் முடிவுறாத குழப்பநிலையானது அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.…

  9. ரணிலை புரிந்துகொள்வது அவசியம் - தெய்வீகன் நல்லாட்சி அரசு ஆட்சி பீடமேறி மகிந்தவின் கறைகளால் பீடிக்கப்பட்டிருக்கும் நாட்டை சீர்திருத்துவதில் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக பல முயற்சிகளை மேற்கொண்டுவருவதை தொடர்ந்து காணக்கூடியதாக இருக்கிறது. இந்த முயற்சிகள் பெரும்பான்மை சமூகத்தையும் அவர்கள் சார்ந்த பிரதேசங்களையும் எவ்வளவு தூரம் முன்னேற்றியிருக்கிறது என்பதற்கு பல சான்றுகளை கூறலாம். ஆனால், எதிர்வரும் மே மாதத்துடன் போர் முடிந்த ஏழாவது ஆண்டை எட்டப்போகும் தமிழ்மக்களுக்கு தாம் கொடுக்கப்போவதாக அறிவித்த தீர்வு மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றில் எவ்வளவு தூரம் சிங்கள தேசம் உண்மையாக நடந்திருக்கிறது என்ற மிகப்பெரிய கேள்வி தொடர்ந்து தொங்கியவண்ணமே உள்ளது. இது விடயத…

  10. ஜெனிவா 2021 – நிலாந்தன்! March 28, 2021 புதிய ஜெனிவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை ராஜதந்திர ரீதியாக இது ஒரு பின்னடைவு. ஆனால் அதற்காக தமிழ் மக்களைபொறுத்தவரையில் இது ஒரு மகத்தான வெற்றி என்று கூற முன்வருவது உண்மையல்ல. அரசாங்கத்துக்கு எதிரானவை எல்லாம் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்பது மிகவும் எளிமையாக்கப்பட்ட தட்டையான ஒரு தர்க்கமே. தீர்மானம் அரசாங்கத்துக்குஎதிரானதுதான். ஆனால் அது தமிழ் மக்களுக்கு மகத்தான வெற்றி அல்ல. ஏனென்றால்தாயகத்திலிருந்து மூன்று தமிழ் தேசியக் கட்சிகளும் குடிமக்கள் சமூகங்களும் பாதிக்கப்பட்ட மக்களின் அமைப்புகளும் சேர்ந்து அனுப்பிய பொதுக்கோரிக்கைக்கு சாதகமான பிரதிபலிப்புகள் புதிய…

  11. சமகால இலங்கை அரசியலில் காத்திரமான அரசியல் அழுத்தக் குழுவென்றால் அது பேரினவாத சக்திகள் தான் என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுவரும் ஒன்று. பேரம்பேசும் ஆற்றல் கூட தம் வசமே உள்ளது என்று மார்தட்டி பறைசாற்றும் அளவுக்கு அது உண்மை. தீர்மானகரமான அரசியல் சூழல்களில் அவர்கள் தமது பாத்திரத்தை வெற்றிகரமாக ஆற்றியிருக்கிறார்கள். அரசை இனவாத திசையில் வழிநடத்தவும், வழிதவறிப்போனால் எச்சரிக்கவும் அவர்களால் முடிந்தது. குறிப்பாக இதுவரை ஜாதிக ஹெல உறுமய அரசின் பங்காளிக்கட்சியாக தாமும் அதிகாரத்தில் இருந்தபடி தமது பேரினவாத இலக்கில் பாரிய வெற்றிகளை பெற்றார்கள். யுத்தம் முடிவுற்றதன் பின்னர் அவர்கள் இரண்டாம் கட்ட போரை ஆரம்பித்துவிட்டதாக அறிவித்தார்கள். தமிழர்களின் நியாயபூர்வமான அரசியல் கோரிக…

  12. சட்டத்தரணி எனும் உத்தியோகம் என்.கே. அஷோக்பரன் “பிரபல்யமற்ற நிலைப்பாடுகள் சார்பாகவும் வாதாடுவதுதான், சட்டத்தரணிகளின் கடமை” - போல் க்ளெமெண்ட், ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் மன்றாடியார் நாயகம். நேற்றைய தினம், சமூக ஊடகங்களில் பரவலான ஒரு செய்தி, என் கண்களையும் எட்டியது. கொவிட்-19 பெருந்தொற்றுக்கு உள்ளாகி மரணித்தவர்களின் உடலங்கள், எரிக்கப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து, முஸ்லிம் மக்களின் சார்பாக, அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் சில, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்தவாரம் இவை விசாரணைக்கு வந்தபோது, குறுக்கீடு செய்யும் மனுதாரர் ஒருவர் சார்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, சுயதனிமைப்படுத்தலில் இருப்பதா…

  13. அர்த்தம் பொதிந்ததும் ஆபத்துகள் நிறைந்ததுமான அழைப்பு - காரை துர்க்கா இலங்கைத் தமிழர் 1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் தங்கள் மண்னை விட்டுப் பிறதேசம் செல்லத் தாமாக விரும்பவில்லை; எத்தனிக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகவே ஒரு சிலர் மேற்கத்தேய நாடுகளுக்கும் கப்பல்களிலும் அரபு நாடுகளிலும் வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்றுவந்தனர். அவர்கள் குடும்பத்துடன் அல்லது தமது குலத்துடன் இடம்பெயர்ந்திருக்கவில்லை. 1983 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் கனடாவில் வெறும் 150 இலங்கைத் தமிழர்கள் வாழ்ந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளது. 1958, 1977 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகப் பாரிய இனவன்முறைகள் நன்கு திட்டமிட்டு ஏவிவிடப்ப…

  14. வெள்ளக் கதைகள் -நிலாந்தன் December 13, 2020 புரேவிப் புயல் கடந்த வாரம் தமிழர் தாயகத்தை ஓரளவுக்குச் சேதப்படுத்தியது. மூன்று மரணங்கள். ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்தார்கள்.சொத்துக்களுக்கு நட்டம் ஏற்பட்டது.குறிப்பாக யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலைச் சூழ்ந்து வெள்ளம் நின்றது. யாழ் நகரத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. கோவில் வீதியில் அமைந்துள்ள இரண்டு நாடாளுமன்ற உறுபினர்களின்(விக்னேஸ்வரன்,அங்கஜன்) வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. விக்னேஸ்வரனின் வாடகை வீட்டின் படிக்கட்டுக்கு வெள்ளம் ஏறியது. இவ்வாறு யாழ்ப்பாணத்தின் சில பகுதிகள் வெள்ளத்துள் மிதந்தமை குறித்து சமூக வலைத்தளங்களில் ஊடகங்களில் பரவலாக விமர்சனங்கள் எழுந்தன. நகைச்சுவை உணர்வு மிக்…

    • 3 replies
    • 644 views
  15. மேதகு-வரலாறு எனது வழிகாட்டி எல்லா மனிதர்களும் பிறக்கும் போதே எல்லா சுதந்திரத்துடனும் பிறக்கிறான் என ஆங்கிலேய தத்துவஞானி ஒருவன் கூறினான்.( All human beings are born free and equal).இவனது உரிமைகள் பறிக்கப்படும் போதும் நசுக்கப்படும் போதும் தனக்கான இருப்பை தங்க வைத்துக் கொள்ள அற ரீதியாகவோ ஆயுத ரீதியாகவோ போராடித் தான் தம் உரிமையை மீட்க முடியும் என்ற அடிப்டையிலே இலங்கைத் தீவில் ஈழத்து தேசிய இனத்துக்கு இனவாத சிந்தனை கொண்ட சிங்கள ஆட்சியாளர்களினால் வலிந்து ஆக்கப்பட்ட கொடுமையின் விளைவே இந்த தமிழ் இளைஞர்களை ஆயுதப் போராட்டம் என்ற வழிமுறையைப் பின்பற்ற வைத்தது. இந்த அடிப்படையில் ஈழத் தமிழரின் வலிகளையும் துன்பத்தையும் அவனது தேசிய அடையாளத்தையும் உலகறியச் செய்தான் தனி மனிதனாக ந…

    • 0 replies
    • 644 views
  16. கொரோனாச் சந்தைகளும் தமிழ் அரசியல்வாதிகளும்! நிலாந்தன்! June 13, 2021 கிளிநொச்சியைச் சேர்ந்த ஓர் ஊடகவியலாளர் சொன்னார்.திரு நகரிலும் உதய நகரிலும் கொரோனாச் சந்தைகள் இயங்குவதாக.பிரதான சந்தைகள் மூடப்பட்ட காரணத்தால் தற்காலிக கள்ளச் சந்தைகளாக இவை இயங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.சிலசமயங்களில் உதயநகர் சந்தையில் படைத்தரப்பும் வாகனத்தை நிறுத்திவிட்டு பொருள் வாங்குவதை தான் கண்டதாகவும் சொன்னார். இதைப்போலவே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒர் ஊடகவியலாளர் சொன்னார் கொக்குவில் இந்து பள்ளிக்கூடத்தின் மைதான வீதியில் காலை வேளைகளில் ஒரு மீன் சந்தை இயங்குவதாகவும் அது மிகவும் நெரிசலான ஒரு சந்தை என்றும்.யாழ்ப்பாணம் பாசையூர் சந்தையும் இயங்குகிறது. இடையில் போலீசா…

  17. அரசியல் நெருக்கடியால் இலங்கை செலுத்தப் போகும் விலை! இலங்கையில் தற்போது தீவிரம் பெற்றிருக்கும் அரசியல் அதிகார நெருக்கடி நிலைமையின் பாரதூரத்தை ‘ 30 வருடகால யுத்த காலத்தில் செய்ய முடியாமற்போனதை 3 கிழமைகளில் செய்துவிட்டனர்’ எனப் பகுதித்தறிவுடன் சிந்திக்கும் பலருடனான கலந்துரையாடல்களின் மூலமாக உணர்ந்துகொள்ளமுடிகின்றது. தற்போது இலங்கையின் அரசியல் நெருக்கடி ஒரு மாதத்தை கடந்து முடிவின்றி சென்றுகொண்டிருக்கின்றது. ஒக்டோபர் 26ம் திகதி ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கி அமைச்சரவையைக் கலைத்து மஹிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக நியமித்தமை தொடக்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட நடவடிக்கைகளும் அதனைத் தொடர்ந்து இலங்கையின் பாராளுமன்றத்தில் நடந்தே…

  18. தமிழ்த் தேசியப் பேரியக்கம் – மு.திருநாவுக்கரசு “கட்சி அரசியலை விட்டு எமது தமிழ் மக்கள் பேரவையை ஒரு உண்மையான மக்கள் பேரியக்கமாக மாற்ற உள்நாட்டு, வெளிநாட்டு தமிழ் மக்களை ஒன்றிணைத்து அரசாங்கத்துடன் எமக்கேற்ற தீர்வு ஒன்றினை முன்வைத்துப் பெற முயற்சிப்பது” என்று தனக்கு இருக்கக்கூடிய நான்கு தெரிவுகளில் நான்காவதாக இத்தெரிவை திரு.விக்னேஸ்வரன் முன்வைத்தார். இதுவே தனது அரசியல் பயணத்திற்கான தெரிவென்றும் பிரகடனப்படுத்தினார். மேற்படி தனது நிலைப்பாட்டை கடந்த வாரம் தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் அதன் இணைத் தலைவர்களில் ஒருவரான வடமாகாண முதலமைச்சர் திரு.விக்னேஸ்வரன் அறிக்கை வாயிலாக தெரிவித்தார். தளபதிகளும், பிரதானிகளும் குதிரை ஏற…

  19. Started by akootha,

    நேர்பட பேசு : 20 பங்குனி 2013 http://www.youtube.com/watch?v=4q7h0lPFNZU

    • 2 replies
    • 643 views
  20. கலியுகம் இப்பொழுதே வந்து விட்டதா? Maatram Translation on June 13, 2021 AP Photo/Eranga Jayawardena via Yahoo News “வார இறுதியின் போது பிணந்தின்னிக் கழுகுகள் ஜனாதிபதி மாளிகைக்குள் வந்து இறங்கியுள்ளன…” – கபிரியல் கார்சியா மார்கோஸ், ‘The Autumn of the Patriarch’ என்ற நூலில் அது ஒரு விஞ்ஞானப் புனைகதை திரைப்படத்தில் வரும் காட்சியைப் போல் தெரிகிறது; அல்லது உலக முடிவின் ஒரு கண நேர தோற்றப்பாடாக தென்படுகிறது. கழிவுகள் குவிந்து கிடக்கும் ஒரு கடற்கரை கால் தொடக்கம் தலை வரையில் பாதுகாப்பு ஆடைகளை அணிந்து கொண்டவர்கள் சிறு பிளாஸ்ரிக் துகள்களை கோணிப் பைகளில அள்ளிப் போடுகின்றார்கள். சிசிபஸ் மீண்டும் மீண்டும் மலையை மேலே தள்ளிச் சென…

  21. இஸ்ரேலிய அடிப்படைவாதிகள் பாலஸ்தீனர்களுடன் நிரந்தரமான அமைதி ஒப்பந்தம் ஒன்றை எழுதி அதில் முறைப்படி கையொப்பமிடுவது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளனர். மேற்கண்ட கருத்தை இப்போதைய இஸ்ரேலிய பிரதமரான பென்ஜமின் நெட்டன்யாகுவின் அரசுக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டிருக்கும் முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் அவிக்டோர் லிபர்மான் தெரிவித்துள்ளார். நிரந்தரமான சமாதான ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதைவிட தற்காலிகமான சமாதான ஒப்பந்தம் ஒன்றை எழுதி அதில் கையெழுத்திட்டால் இஸ்ரேலிய யூத அடிப்படைவாதிகளை சமாதானம் செய்ய முடியும் என்று கருத்து வெளியிட்டுள்ளார். ஊல்ரா நாஷனல் கட்சியைச் சேர்ந்த இவர் கடந்த தை 22ம் திகதி தமது கட்சிக்கு அதிக ஆதரவு கிடைக்காததைத் தொடர்ந்து சிறிய மாற்றமடைந்துள்ளமை தெரிகிறது. வர…

    • 0 replies
    • 643 views
  22. இந்திய கொல்லைப்புறத்தில் அகலக் கால் பதிக்கிறது சீனா இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8ஆம் திகதி, ரூபா 500 மற்றும் ரூபா 1000 நாணயத்தாள்கள் செல்லுபடியற்றன என அறிவிக்கப்பட்டதன் பின்னர், நாட்டின் பொருளாதாரத்தை எண்ணியல் (டிஜிற்றல்) மற்றும் பணமில்லா பொருளாதாரமாக மாற்றுவதற்கான இந்தியாவின் முயற்சி தொடர்பில் பெரும்பாலான இந்தியர்கள் கவனத்தைக் குவித்திருந்தனர். இந்தத் தருணத்தில், இதற்கு ஒப்பான முக்கியத்துவம் கொண்ட இந்தியாவின் மூலோபாயத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் செய்தி ஊடகங்களில் ஓரங்கட்டப்பட்டிருந்தது. சீனா, தனது அதிகரித்து வரும் பூகோள நலன்களை விரிவுபடுத்தும் அதேவேளையில், இந்தியப் பிராந்தியத்த…

  23. குரங்காட்டி அரசியல் ? - நிலாந்தன் குரங்குகளை சீனாவுக்கு விற்கும் விடயம் இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் செயலுக்குப் போகவில்லை. ஆனால் குரங்குகள் நாட்டின் தலைப்புச் செய்திகளாகிவிட்டன. கடந்த வாரம் இலங்கைத்தீவில் அதிகம் மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டது குரங்குகளுக்கா? இலங்கையில் மொத்தம் 30 லட்சம் குரங்குகள் உள்ளதாக கணிப்பிடப்படுகிறது. ஆனால் இக்குரங்குகள் அண்மை ஆண்டுகளில் விவசாயத்துக்கு பெருநாசத்தை விடுவிப்பதாக விவசாயிகள் முறையிடுகின்றார்கள். குறிப்பாக ஆற்றங்கரைகளில் பயிர் செய்பவர்கள் குரங்குகளினால் அதிகம் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இதனால் விவசாயிகளில் ஒரு பகுதியினர் யானை வேலியை அமைத்து வருவதாகவும் ஒருமுறை அந்த வேலியில் முட்டினால் குரங்கு மீண்டும…

    • 1 reply
    • 643 views
  24. பி.பி.சி. உலக சேவையைச் சேர்ந்த நண்பர் ஒருவர் கிழக்கிலங்கையில் தமிழ் முஸ்லிம் உறவுகள் குறித்த ஒரு நிகழ்ச்சிக்காக கிழக்கில் முஸ்லிம்களைப் பேட்டி கண்டிருந்தார். பல தரப்பட்ட மட்டங்களிலும் அவர் முஸ்லிம்களுடன் உரையாடியிருந்தார். இது தொடர்பில் யாழ்ப்பாணத்திற்கும் வந்தபோது அவர் சொன்னார் ''முஸ்லிம்கள் மிகவும் அரசியல் மயப்படுத்தப்பட்ட சமூகமாகக் காணப்படுகிறார்கள்... படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று எல்லாத் தரப்பினருடனும் நான் கதைத்தேன். தமது சமூகத்தைப் பாதிக்கக்கூடிய விவகாரஙகளில் எதைக் கதைக்க வேண்டும் எதைக் கதைக்கக்கூடாது என்பதில் அவர்கள் மிகவும் அரசியல் மயப்பட்டவர்களாகக் காணப்படுகின்றார்கள்...' என்று. அண்மையில் அளுத்கம மற்றும் பேருவளையில் நடந்த சம்பவங்களின் பின், இணையப் பரப்ப…

    • 0 replies
    • 643 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.