Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. கருவில் கரையும் புதிய அரசமைப்பு: கதறும் சம்பந்தனும் சுமந்திரனும் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜனவரி 09 புதன்கிழமை, மு.ப. 10:52 “புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. தென்இலங்கையின் அரசியல் சூழலும் அதற்கு உகந்த ஒன்றாக இல்லை. அப்படிப்பட்ட நிலையில், சம்பந்தனும் சுமந்திரனும் புதிய அரசமைப்பு தொடர்பில், வெளிப்படுத்திவரும் நம்பிக்கைப் பேச்சுகள் எதை நோக்கியது?” என்று வெளிநாட்டுத் தூதரக அதிகாரியொருவர் இந்தப் பத்தியாளரிடம் கடந்த வாரம் கேட்டார். புதிய அரசமைப்புக்கான முயற்சிகள், கிட்டத்தட்ட முழுமையாகவே முடங்கிவிட்டன. மைத்திரியின் ‘ஒக்டோபர் 26’ சதிப்புரட்சிக்குப் பின்னராகப் பிறந்திருக்கின்ற 2019, தேர்தல்களின் ஆ…

  2. “இலவச கல்வி தருகிறார்கள். மகா பொல புலமை பரிசில் பணம் தருகிறார்கள். தின்னும் நிவாரண அரிசியிலிருந்து அனைத்தையும் இலவசமாக தரும் சிறிங்கா அரசாங்கத்தினை எதிர்க்கவும் புறக்கணிக்கவும் பிரசாரம் செய்துகொண்டு வெளிநாட்டிலிருக்கும் உங்களுக்கு தாயத்திலுள்ள மக்களின் யதார்த்தநிலை பற்றி என்ன தெரியும்” தாயகத்தின் நிலமை குறித்தும் தாயகத்தின் விடுதலை குறித்தும் இறுக்கமாக நடக்கும்; விவாதங்களின் நீட்சியில் புலம்பெயர்ந்துவாழும் தமிழ்மக்களின் வாயை அடைப்பதற்காக எதிர்தரப்பினால் முன்வைக்கப்படும் ஒற்றை வாக்கியம் இதுவாகும். இந்த ‘எதிர்த்தரப்பு’ அநேக தருணங்களில் தாயகத்திலிருந்து பேசும் குரலாக இருப்பதே இல்லை. மாறாக, தாயக மக்களுக்காக கரிசனைப்படுவதுபோன்ற போர்வையில் புலம்பெயர்ந்த மண்ணிலேயே இருந்துகொ…

    • 5 replies
    • 517 views
  3. 20 MAY, 2024 | 02:46 PM (டி.பி.எஸ். ஜெயராஜ்) இலங்கையில் உத்தியோகபூர்வ சனத்தொகை கணக்கெடுப்பு 2012ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. அந்த கணக்கெடுப்பின் பிரகாரம், இலங்கையின் பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்கள் சனத்தொகையில் 74.9 சதவீதத்தினராக இருந்தனர். எண்ணிக்கையில் இரண்டாவது பெரிய இனத்தவர்களான இலங்கைத் தமிழர்கள் 11.1 சதவீதத்தினராக இருந்தனர். மூன்றாவது பெரிய இனத்தவர்களான இலங்கை முஸ்லிம்கள் 9.3 சதவீதத்தினராகவும் நான்காவது பெரிய இனத்தவர்களான 'மலையகத் தமிழர்கள்' என்று அறியப்படும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் 4.1 சதவீதத்தினராகவும் இருந்தனர். எண்ணிக்கையில் சிறுபான்மை இனத்தவர்களான இலங்கைத் தமிழர்களும் முஸ்லிம்களும் இந்திய தமிழர்களும் சனத…

  4. 'தேசபக்திக்கும் இனவாதத்துக்குமிடையிலான எல்லையினை நிர்ணயித்தல்' (Demarcating Patriotism and Racism) 'தேசபக்திக்கும் இனவாதத்துக்குமிடையிலான எல்லையினை நிர்ணயித்தல்' (Demarcating Patriotism and Racism ) என்னும் கட்டுரையினை 'சிலோன் டுடே' (Cedylon Today) பத்திரிகையில் அமா ஹெச். வன்னியராச்சி ( Ama H. Vanniarachchy) எழுதியிருக்க்கின்றார். நல்லதொரு கட்டுரை. தற்போதுள்ள சூழலில் அனைவரும் வாசிக்க வேண்டிய கட்டுரை. இக்கட்டுரை சிங்களக் கவிஞை சந்திரசிறி சுதுசிங்கவின் (Sandarasee Sudusinghe ) புதிதாக வெளியான கவிதைத்தொகுதியான 'எரிந்த சிறகுகள்' ('ஹினி வான்டு பியாபத்' - Gini Wandu Piyapath) பற்றியது. இக்கவிதைகள் இலங்கையில் இன்னும்…

  5. எழுக தமிழ் – 2019: மக்கள் திரண்டாலும் கட்சிகள் திரளுமா? நிலாந்தன் “நமக்கிடையே இருக்கின்ற அரசியல் பேதங்களும் ஒற்றுமையீனங்களும் கருத்து மோதல்களும் எங்கள் இனத்திற்கு ஆபத்தாக முடியுமென்பதால், மீண்டும் மீண்டும் நாம் கேட்பது அரசியல் பேதங்களை மறந்து தமிழ் அரசியல் கட்சிகள் அத்தனையும் ஒன்றுபட்டு, மக்கள் இயக்கமாகிய தமிழ் மக்கள் பேரவை முன்னெடுக்கும் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியில் பங்கேற்க வேண்டும் என்பதாகும்.இந்த ஒற்றுமை ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் பேரணியில் பேரலையாக ஒன்றுபட வைக்கும் என்பது எம் அசைக்க முடியாத நம்பிக்கை……… அன்பார்ந்த தமிழ் மக்களே! பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பு தமிழர் தாயகத்திற்குள் ஊடுருவி விட்டது. ஏற்கனவே படைத் தரப்பால் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை விடுவ…

  6. மூக்குடைபட்ட ‘எழுக தமிழ்’ கே. சஞ்சயன் / 2019 செப்டெம்பர் 23 திங்கட்கிழமை, மு.ப. 11:48 தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் ஆறு முக்கிய பிரச்சினைகளை முன்வைத்து, சர்வதேச கவனத்தை ஈர்க்கும் நோக்கில், யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (16) ‘எழுக தமிழ்’ நிகழ்வு நடத்தப்பட்டு இருக்கிறது. மூன்றாவது தடவையாக, நடந்திருக்கிறது இந்த நிகழ்வு. தமிழ் மக்கள் பேரவையின் முக்கிய பங்காளியாக இருந்த, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, முதல் இரண்டு தடவைகளும், இந்த நிகழ்வை ஒழுங்கமைப்பதில், முதுகெலும்பாக இருந்தது. அப்போது, ‘எழுக தமிழ்’ நிகழ்வைத் தமக்கு எதிரான பேரணியாகப் பார்த்து, அதைத் தோற்கடிக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயன்றது. ஆனால், இந்தமுறை நிலைமை தலைகீழாக மாறியிருந்தது. …

  7. ஜனாதிபதித் தேர்தலும் தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவும் தமிழ்த்­த­ரப்பு நோக்கு நிலையில் நவம்பர் மாத ஜனா­தி­பதி தேர்தல் மூன்று நிலை­களில் அர­சியல் ரீதி­யான கொள்கை நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருக்­கின்­றது. இந்த மூன்று நிலை­களும் தேர்தல் களத்தில் தீவி­ர­மாக முட்டி மோதி முடி­வு­களை வெளிப்­ப­டுத்தக் காத்­தி­ருக்­கின்­றன. அந்த முடி­வு­களும் அதன் பின்­ன­ரான விளை­வு­களும் இலங்­கையின் அடுத்த கட்ட அர­சியல் நிலை­மை­களில் பெரும் தாக்­கத்தைச் செலுத்தப் போகின்­றன. அதற்­கான அறி­கு­றி­களை தேர்­த­லுக்கு முன்­ன­ரான நிலை­மைகள் வெளிப்­ப­டுத்தியுள்­ளன. இந்தத் தாக்­கங்கள் நாட்டின் எதிர்­கால நிலை­மை­களைப் பிர­கா­ச­மாக்கும் என்று கூற முடி­யா­துள்­ளது. ஜனா­தி­பதித் தேர்­தலில் வேட்­பா­ள…

  8. அமெரிக்கா மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் தமது நிறுவனங்களை அனைத்துலக வர்த்தக அபிவிருத்தியில் முன்னேற்றுவதற்கும் தமக்கான மூலோபாயத் திட்டங்கள் மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் ஆகியவற்றுக்கும் உந்துசக்தியாக விளங்கும் Armitage International என்கின்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் றிச்சார்ட் ஆர்மிரேஜ். வியட்னாமுக்கு எதிரான யுத்தத்தின் போது இளமைத் துடிப்புள்ள வீரம்மிக்க ஒரு அமெரிக்க கடற்படை அதிகாரியாக பங்குகொண்டிருந்தார். அன்றிலிருந்து அவர் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றார். இவரது வளர்ச்சியின் பெறுபேறாக, அமெரிக்க அதிபர் றொனால்ட் றீகனின் ஆட்சிக்காலத்தில் றிச்சார்ட் ஆர்மிரேஜ் அமெரிக்காவின் உதவிப் பாதுகாப்புச் செயலராகவும் பின்னர் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் ப…

  9. ஆயுதப் போராட்டமும் தமிழர் அரசியலும் ஒரு நேர்காணல் தொடர்பான சர்சைகளை முன்வைத்து… - யதீந்திரா ஆயுதப் போராட்டம் தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் மீண்டும் எழுந்திருக்கின்றன. அது சரியானதா அல்லது தவறானதா என்னும் வாதங்கள் முகநூல்களில் நிரம்பி வழிகின்றன. கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் நேர்காணல் ஒன்றைத் தொடர்ந்துதான் இவ்வாறான வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. சுமந்திரனின் கருத்துக்கள் எவையும் புதியவையோ அல்லது ஆச்சரியமானவையோ அல்ல. அவர் இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இவ்வாறான கருத்துக்களை தெரிவித்திருக்கின்றார். முன்னர் தமிழில் தெரிவித்ததை இப்போது சிங்களத்தில் தெரிவித்திருக்கின்றார். இது ஒன்றுதான் வேறுபாடு. ஆயுதப் போராட்டம் தொடர்பில் ஒருவரிடம் மாறுபட்…

    • 1 reply
    • 1.3k views
  10. தேர்தல் களம் தமிழ்த் தேசிய அரசியலுக்கான பரீட்சைக் களமா? - யதீந்திரா நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தமிழ்த் தேசிய கட்சிகளை பொறுத்தவரையில் ஒரு பரிட்சைக்களமாகும். இந்தத் தேர்தல் முடிவுகள் சிலருக்கு தெளிவான செய்தியாகவும், சிலருக்கு அவர்களது அரசில் வாழ்வின் அஸ்தமனமாகவும் போகலாம். அது யார் – யார் என்பதை தேர்தல் முடிவுகள் கூறும். தேர்தல் களத்தை பொறுத்தவரையில் வடக்கு கிழக்கு என்று பிரித்தே நோக்க வேண்டும். ஏனெனில் வடக்கையும் கிழக்கையும் தங்கள் வாக்குகளின் பலத்தால் இணைக்கக் கூடிய மாற்று கட்சிகள் எவையும் இல்லை. ஒப்பீட்டடிப்படையில் வாக்குகளால் வடக்கு – கிழக்கையும் இணைக்கக் கூடிய ஒரேயொரு கட்சி இலங்கை தமிழரசு கட்சி மட்டும்தான். அவர்களுக்குத்தான் வடகிழக்கு என்னும் அடிப்படையில் ஒரு…

  11. தளம் 3: ஈழத் தமிழ் அரசியல் நேற்று - இன்று - நாளை ஈழத் தமிழர் அரசியல் பல்வேறு அரசியல் இயக்கங்களைத் தன்னகத்தே கொண்டது. வெளியிலிருந்து வரும் பேரினவாத ஒடுக்குமுறை, ஏகாதிபத்திய தலையீடுகள், வல்லரசுகளின் மேலாதிக்கம் முதல் தன்னுள்ளே இயங்கும் ஒடுக்குமுறைகள், சாதியம், பெண்ணடிமைத் தனம் என்பவற்றுடன் ஏனைய தேசிய இனங்களுடனான உறவும் முரணும் எனப் பலதரப்பட்ட, சிக்கலான அரசியல் இயக்கங்களை ஈழத் தமிழ் அரசியல் உள்ளடக்குகிறது. இந்த அரசியலின் பல்வேறு பரிமாணங்கள் பற்றிய உரையாடலாக இன்றைய தளம் அமையும் என நிகழ்ச்சியின் மட்டுறுத்துநர் மு. மயூரன் வழங்கிய அறிமுகத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் முதலில் சட்டத்தரணி என்.கே.அஷோக்பரன், சட்டத்தரணியும் யாழ், பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளருமா…

  12. மீண்டும் ஒருமுறை ஜெனிவாவை நோக்கி, பலரது கவனமும் திரும்பத் தொடங்கியுள்ளது. அடுத்த மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 22ஆவது கூட்டத்தொடர், இலங்கைக்கு சவால்மிக்கதாகவே இருக்கும் என்ற கருத்து, பல மாதங்களாகவே அடிபட்டு வந்தது தான். இப்போது, எதிர்பார்க்கப்பட்டதை விட இன்னமும் கடினமான – இறுக்கமான சூழல் இருக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 19ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை, இலங்கை மதித்து நடந்து கொண்டதா, அதை நிறைவேற்றியதா என்பதை விளக்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கை தான், இறுக்கம் நிறைந்ததாக இருக்கும் என்று முன்னர் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது அதற்கும் மேலாக, இன்னொரு புதிய தீர்மானத்தை எ…

  13. வட ஆபிரிக்காவில் படுகொலைத் திட்டத்தை அமெரிக்கா விரிவாக்குகிறது ஒபாமா நிர்வாகமானது அல்ஜீரியா மற்றும் பிற வடமேற்கு ஆபிரிக்க நாடுகளில் அதனுடைய டிரோன் திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து விவாதித்து வருகிறது என்று செய்தி ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவம் மற்றும் CIA ஆல் “கொலை செய்யப்பட வேண்டியவர்கள் பட்டியலை” விரிவுபடுத்தப்படுவதற்கான தயாரிப்பு யோசனைகளுக்கு இடையே இன்னும் பாதுகாப்பான முறையில் நிறுவனமயப்படுத்துவதற்கான உலகப் படுகொலைத் திட்டம் நடைபெறுகின்றன. சனிக்கிழமை வெளிவந்த Wall Street Journal இன் முதல் பக்க அறிக்கையின் தலையங்க அறிவிப்பின்படி, “அமெரிக்கா ‘கொலை செய்யப்பட வேண்டியவர்கள் பட்டியலை’ விரிவுபடுத்தும் முயற்சியான” டிரோன் விரிவாக்கத் திட்டத்தின் உடனடி இலக்கு…

  14. பாகிஸ்தானிலும் சீனாவிற்கு அமெரிக்கா ஆப்புவைக்க முடியுமா? உலகின் எரி­பொருள் விநி­யோகம் தடை­யின்றி நடப்­ப­தற்கு பல­நா­டு­களும் தமது பாது­காப்புச் செலவில் பெரும்­ப­கு­தியை ஒதுக்­கி­யுள்­ளன. ஐரோப்­பிய ஒன்­றி­யமும் ஐக்­கிய அமெ­ரிக்­காவும் தமக்­கான எரி­பொருள் விநி­யோகம் தடை­யின்றி நடப்­பதை உறுதி செய்­துள்­ளன. உல­கி­லேயே எரி­பொருள் விநி­யோகத் தடையால் பெரிதும் பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய நாடு­க­ளாக ஆசிய நாடுகள் இருக்­கின்­றன. எரி­பொருள் பாவ­னையைப் பொறுத்த வரை சீனா உல­கி­லேயே இரண்­டா­வது பெரிய நாடாகும். சீனாவின் இருப்­பிற்கு தடை­யற்ற எரிபொருள் வழங்கல் முக்­கி­ய­மாகும். சீனாவின் மாற்று வழிகள் மலாக்கா நீரிணை, ஹோமஸ் நீரிணை, செங்­கடல் ஆகி­ய­வற்றில்…

  15. சித்திரவதைகள் தொடர்கின்றனவா? திருமலை நவம் முழுப்­பூ­ச­ணிக்­காயை ஒரு தட்­டு­ச் சோற்றில் மறைக்க முற்­ப­டு­வது போல் இன்­றைய நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது முன்­னைய ஆட்­சி­யா­ளர்­களின் அத்­து­மீ­றல்­க­ளையும் குற்றத் தொகுப்­பு­க­ளையும் குல­நாச செயல்­க­ளை யும் மறைக்க முயல்­வது எவ்­வ­ளவு காலத்­துக்கு உள்­நாட்டு அரங்­கி லும் சர்­வ­தேச அள­விலும் செல்­லு­ப­டி­யாகப் போகி­றது என்­பதும் ஒரு விப­ரீ­த­மான எதிர்ப்­பார்ப்­புத்தான். சித்­தி­ர­வ­தைகள் கடத்­தல்கள், காணாமல் ஆக்­கப்­ப­டுதல், இரக­சிய தடுப்பு முகாம்கள்,மனித உரிமை மீறல்கள், போர்க் குற்­றங்கள், பாலியல் வன்­மங்கள் என்ற மனித நாக­ரி­கத்­துக்கு அப்­பாற்­பட்ட கேவல வித்­தை­களில் ஈடு­படும் எந்­த­வொரு ந…

  16. சுமந்திரனின் மாற்றம்... -கபில் “ஆயுதப் போராட்டத்தை, ஆதரிக்கவில்லை என்று கூறிவந்த- அந்த வழிமுறையை நிராகரிப்பதாக கூறிவந்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நினைவேந்தல் களத்துக்கு வந்தமை ஆச்சரியமான மாற்றம் தான்” மாவீரர் நாள் நினைவேந்தல் கடந்த பல ஆண்டுகளைப் போலன்றி, இந்தமுறை மீண்டும், வீட்டு முற்றங்களுக்குள்ளேயோ, அல்லது வீடுகளுக்குள்ளேயோ முடக்கப்பட்டிருக்கிறது. 2009இல் இருந்து- விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், போராட்டம் சார்ந்த நினைவேந்தல் நிகழ்வுகளைப் பகிரங்கமாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஆங்காங்கே சிலர் உதிரிகளாக நினைவேந்தல்களை நடத்தினாலும், அவை கூட்டுத் திரட்சியாக இருக்கவில்லை. 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் தொடங்கி, 2019 ஆட்சி …

  17. வெள்ளைக்கொடி - ஃபிரான்ஸிஸ் ஹாரிசன் தமிழில்: ஆர். சிவகுமார் தன்னுடைய உயிரைக் காத்துக்கொள்ள வேண்டி, தான் யாரைப் பாதுகாத்திருக்க வேண்டுமோ அவரையே காட்டிக் கொடுத்த ஆள் காட்டியாக தான் மாறியதை விளக்கிக் கொண்டிருந்தார் அந்தப் பருத்த, குட்டையான தமிழர். அவர் அணிந்திருந்த முக்காடுடன் கூடிய மெல்லிய, கறுப்பு நிற மேல் சட்டைக்குள் தன் உடலை அப்படியும் இப்படியுமாகப் பதற்றத்துடன் திருப்பினார். அந்தப் பனிக் காலத்தின் மிகக் குளிரான நாள்கள் ஒன்றில் அவர் அணிந்திருந்த மேலாடை வானிலைக்குக் கொஞ்சமும் பொருத்தமாக இல்லை. விக்டோரியா ரயில் நிலையத்தின் உணவகம் ஒன்றில் நாங்கள் காஃபி குடித்துக் கொண்டிருந்தோம். உணவகத்தின் ஆள் அரவமற்ற ஒரு தாழ்வாரத்தில், திறந்த வெளியில் கடுங்குளிரைத் தாங்கிக்கொண்டு உட்க…

  18. தொல்பொருள் போர்வையில் வடக்கு கிழக்கை ஆக்கிரமிக்க திட்டமா? வடக்கு கிழக்கில் உள்ள தொல்­பொருள் வல­யங்­களைப் பாது­காக்கப் போகிறோம் என்ற போர்­வையில் அர­சாங்கம் இன­வாத சக்­தி­களின் துணை­யுடன் பாரிய ஆக்­கி­ர­மிப்பு வேலைத்­திட்டம் ஒன்றைத் தொடங்­கி­யி­ருக்­கி­றதா எனும் சந்­தேகம் கடந்த சில வாரங்­க­ளாக வலுப்­பெற ஆரம்­பித்­துள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, நீதி மற்றும் புத்­த­சா­சன அமைச்சர் விஜே­தாச ராஜ­பக் ஷ, ஆரம்ப கைத்­தொழில் அமைச்சர் தயா கமகே மற்றும் பொது பல சேனாவின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரர், மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரா­தி­பதி அம்­பிட்­டியே சும­ண­ரத்ன தேரர் ஆகியோர் இது தொடர்பில் நடாத்­திய கூட்­டங்­களும் வெளி­யிட்ட கருத்­துக…

  19. முஸ்லிம் எதிர்ப்பு அரசியலின் இழிநிலை -மொஹமட் பாதுஷா முஸ்லிம் சமூகம் ஒன்றிணைந்த செயற்பாட்டையும் காத்திரமான அரசியல் நகர்வுகளையும் வேண்டி நிற்கின்ற ஒரு கால கட்டத்தில், முஸ்லிம் கட்சிகளுக்கு இடையிலான எதிர்ப்பு அரசியல் மிகவும் சிறுபிள்ளைத்தனமான வழித்தடத்தில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. பெரிய புத்திசாலிகள் என்று நினைத்துக் கொண்டு அறிவிலித்தனமான, பக்குவப்படாத வேலைகளை மேற்கொள்கின்ற அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள், தொண்டர்கள், கட்சி ஆதரவாளர்களின் செயற்பாடுகளால் முஸ்லிம் அரசியலானது ஓர் அடிகூட முன்நகராமல் இன்னும் ஆரம்பித்த இடத்திலேயே நிற்கின்றது. அத்துடன், முஸ்லிம் மக்களுக்கான அரசியலாக அது தம்மைப் புடம்போட்டுக் கொள்ளவும் இல்லை. முஸ்லிம்கள் இணக்க அரசியலுக்குப்…

  20. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை பின்னணி தொடர்பான சர்ச்சைகள்…? - யதீந்திரா பொத்துவில் தொடங்கி பொலிகண்டிரை பேரணி, சற்றும் எதிர்பாராத வகையில் பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரள்வதற்கு காரணமானது. பொத்துவிலில் விரல்விட்டு எண்ணக் கூடிய நிலையிலிருந்த பேரணி, பொலிகண்டியில் பல்லாயிரக்கணக்கானவர்களோடு நிறைவுற்றது. 2009இற்கு பின்னர் இடம்பெற்ற ஜனநாயக எதிர்ப்பு நடவடிக்கைகளோடு ஒப்பிட்டால் இது உச்சமானது. ஆனால் பேரணி மெதுவாக நகரத் தொடங்கிய போது கூடவே, இதன் உரிமையாளர்கள் தொடர்பான கேள்விகளும் சர்ச்சைகளும் இணைந்துகொண்டது. இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறும் போது இது ஓரளவு எதிர்பார்க்கக் கூடிய ஒன்றும்தான். இந்த ஏற்பாட்டிற்கு பின்னால் சிவில் சமூக அமைப்புக்க…

    • 1 reply
    • 491 views
  21. சந்தி சிரிக்கும் முஸ்லிம் அரசியல் ! - பைஸ் - உண்­மையில் இங்கு கவலை என்­ன­வெனில் முஸ்லிம் சமூகம் இன்று ஏரா­ள­மான பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கி­யுள்­ளது. அவற்­றுக்குத் தீர்வு காணவோ அல்­லது அவை பற்றி சண்டை பிடிக்­கவோ எவரும் முன்­வ­ர­வில்லை. மாறாக தத்­த­மது தனிப்­பட்ட நலன்­க­ளுக்­காக போரா­டு­வ­தி­லேயே அனை­வரும் கண்­ணுங்­க­ருத்­து­மாக இருக்கிறார்கள். தனி நபர் விடயங்களில் காட்டும் அக்கறையை சமூக விவகாரங்களில் காட்டினால், அவற்றுக்காக சண்டை பிடித்திருந்தால் இன்று எவ்வளவோ உரிமைகளை சமூகம் வென்றெடுத்திருக்கும். இலங்கை முஸ்­லிம்­களின் அர­சியல் உரி­மை­களை வென்­றெ­டுக்கும் நோக்கில் ஆரம்­பிக்­கப்­பட்ட முஸ்லிம் தனித்­துவக் கட்­சியின் இன்­றைய நிலை சந்தி ச…

  22. ஜெனிவா பிரேரணையும் இந்தியாவும் - யதீந்திரா கடந்த ஒரு சில மாதங்களாக ஜெனிவாவை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட உரையாடல்கள் முடிவுக்குவந்திருக்கின்றன. எதிர்பார்த்தது போன்று வாக்கெடுப்பில் பிரேரணை வெற்றிபெற்றிருக்கின்றது. வெற்றிபெறக் கூடிய நிலைமை இருந்ததால்தான், பிரித்தானியா பிரேரரணையை வாக்கெடுப்புக்கு சமர்ப்பித்திருந்தது. முதலாவது பார்வையில் கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் அதன் முதலாவது ராஜதந்திர தோல்வியை பதிவு செய்திருக்கின்றது. ஆனால் அரசாங்கம் ஒரே நேரத்தில் இரண்டு தோல்விகளை ஒரே களத்தில் சந்தித்திருக்கின்றது. பிரேரணையின் போதான வாக்கெடுப்பின் போது, இலங்கையின் உடனடி அயல்நாடும், பிராந்திய சக்தியுமான இந்தியா வாக்கெடுப்பை தவிர்த்திருக்கின்றது. இது ரா…

  23. அரசாங்கம் பேச்சுவார்த்தைக்குத் தயாராகிறதா? நிலாந்தன்! பசில் ராஜபக்ஷ நிதியமைச்சராக வந்தபின் தொடர்ச்சியாக புதிய நகர்வுகளை முன்னெடுத்து வருகிறார்.ஒரு மாற்றத்தின் அலை ஏற்பட்டிருப்பதாக ஒரு தோற்றம் கட்டியெழுப்பப்படுகிறது. மாற்றத்தின் முகமாக மேற்கின் முன்னும் இந்தியாவின் முன்னும் ஐநாவின் முன்னும் தமிழ் மக்களின் முன்னும் பசில் நிறுத்தத்தப்பட்டிருக்கிறார். அரசாங்கம் எந்தெந்த முனைகளில் நெருக்கடிகளை எதிர்கொள்கிறதோ அல்லது எந்தெந்த முனைகளில் இறங்கி வந்து சுதாரிக்க வேண்டி இருக்கிறதோ அந்தந்த முனைகளில் மாற்றத்தின் முகவராக பசில் இறக்கப்க்கப்பட்டிருக்கிறார். முதலாவதாக மேற்கு நாடுகள்.அவர் ஒரு அமெரிக்கப் பிரஜை. நிதியமைச்சு வழங்கப்பட முன்பு அவர் அமெரிக்காவுக்கு போனார்.அங்கே அவருக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.