அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
தனித்து விடப்பட்ட புத்தர் -முகம்மது தம்பி மரைக்கார் மாயக்கல்லி மலையில் புத்தர் சிலையோடு அவர்கள் வந்தபோது, அச்சம் சூழ்ந்து கொண்டது. வணங்குவதற்கு யாருமற்ற ஓர் இடத்தில் கடவுளின் சிலையை வைத்துவிட்டுச் செல்வதற்குப் பின்னால் வேறு காரணங்கள் இருந்தன. 'பகைமையை பகைமையால் தணிக்க முடியாது, அன்பினால் மட்டுமே பகைமையைத் தணிக்க முடியும்' என்று சொன்ன புத்தபெருமானின் சிலையை, பகையை ஏற்படுத்தும்படியாக பயன்படுத்துவது என்பது மிகப்பெரும் முரண்நகையாகும். அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். மாணிக்கமடு கிராமமானது, இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளது. அங்கு தமிழ் மக்கள் வாழ்கின்றனர…
-
- 0 replies
- 417 views
-
-
நம்பிக்கை வீணடிக்கப்படுமா? இனப்பிரச்சினைக்கு எத்த கைய தீர்வு காணப்படும் என்பது தெளிவில்லை. ஆயினும், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் களை வீழ்த்துகின்ற தந்திரோ பாய ரீதியில் அரசாங்கம் செயற் பட முற்பட்டிருக்கின்றதோ என்ற சந்தேகமும் எழுந்திருக்கின்றது. ஏதோ ஒரு வகையில் - இரா ஜதந்திர வியூகங்களின் மூலம் அரசியல் ரீதியாக அழுத்தங் களைப் பிரயோகித்து, தான் விரும்புகின்ற முறையில் ஓர் அரசியல் தீர்வை வழங்கி இனப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு விடலாம் என்ற போக்கில் அர சாங்கம் செயற்பட முற்பட்டிருப் பதை உணர முடிகின்றது. நாட்டில் உறுதியான அரசியல் போக்கை ஏற்படுத்தி சமாதானத்தையும், ஐக்கி…
-
- 0 replies
- 278 views
-
-
வேலையில்லாப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி - அதிரதன் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளிகள் எப்போது வைக்கப்படும்? இதனை யார்தான் வைப்பார்கள் என்பது இப்போதைக்கு கேள்விதான். இளைஞர்கள் நாட்டின் எதிர்காலம், முதுகெலும்பென்றெல்லாம் சொல்லப்பட்டு வருகின்ற நேரத்தில் இப்போதும் தொடர்ந்த வண்ணமிருக்கின்ற இளம் பட்டதாரிகளின் முயற்சிகளுக்குப் பதில் என்ன? இதுதான் இந்தப் பத்தியின் கரு. வடக்கு, கிழக்கில் பட்டதாரிகளின் போராட்டங்கள், காணி மீட்புப் போராட்டம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் என்று பல வடிவங்களில் நடைபெறும் போராட்டங்களுக்கு 2015 இல் தொடங்கி வைக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் வழி விட்டுக் கொடுத்திருக்க…
-
- 0 replies
- 314 views
-
-
யாழ்ப்பாணத்தில் சீனத் தடுப்பூசி! – அகிலன் 65 Views யாழ்ப்பாணத்தில் சீனத் தடுப்பூசியான ‘சினோ பார்ம்’ தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் ஞாயிற்றுக் கிழமை ஆரம்பிக்கப்பட்டு விட்டது. முதற்கட்டமாக 50 ஆயிரம் தடுப்பூசிகள் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்தியத் தயாரிப்பு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள தடங்கலை அடுத்து, முற்றுமுழுதாக சீனத் தடுப்பூசிகளையே நம்பியிருக்க வேண்டிய நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் யாழ்ப்பாணத்துக்கும் சீனத் தடுப்பூசி அனுப்பப்படுவது ஆச்சரியமானதல்ல. ஆனால், இதிலும் அரசியல் ஒன்றிருப்பதாகவே உள்ளகத் தகவல்கள் சொல்கின்றன. தடுப்பூசி வழங்கலில் யாழ். மாவட்டம் அடுத்த கட்டத்திலேயே இருந்தது. அதாவது அடு…
-
- 0 replies
- 660 views
-
-
ஈழத்தமிழரின் தமிழக மயக்கம்: தெளியாத போதை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஈழத்தமிழர்களின் தமிழக மயக்கம் புதிதல்ல. கடந்த அரை நூற்றாண்டில் அது வெவ்வேறு வடிவங்களை எடுத்திருக்கிறது. தமிழகத்தின் மீதும் குறிப்பாக, தமிழக அரசியல் மீதும் வைக்கப்பட்ட நம்பிக்கைகள், தொடர்ச்சியாகப் பொய்ப்பிக்கப்பட்ட போதும், ‘சூடுகண்டாலும் அஞ்சாது, அடுப்பங்கரை நாடும் பூனை’ மனநிலையில், தொடர்ந்து நம்பிக்கை வைப்பதை இன்றும் காணுகிறோம். எம்.ஜி. இராமச்சந்திரனில் தொடங்கி, சீமான் வரை, ஈழப்போராட்டத்தை சரிவர விளங்காத, அணுக இயலாத, தங்கள் சுயஅரசியலுக்குப் பயன்படுத்தியோரை நம்பி, சீரழிந்தவர்கள் ஈழத்தமிழர்கள். இன்றும் அந்தநிலை வெவ்வேறு வடிவங்களில் தொடர்கிறது. இந்தத் ‘தமிழக மயக்கம்’ வெறுமனே அரசியலுடன் மட்டுப்ப…
-
- 32 replies
- 2.9k views
-
-
விக்னேஸ்வரனின் பதவியேற்பும் விமர்சனத்திற்குள்ளாகிவரும் கூட்டமைப்பின் முக்கூட்டு அணுகுமுறையும் - யதீந்திரா வடக்கு மாகாணசபையின் ஆரம்பமே சர்ச்சைகளுடனும், அதிக வாதப்பிரதிவாதங்களுடனும் ஆரம்பித்திருக்கிறது. வடக்கு மக்களால் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரன், மகிந்த ராஜபக்சவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டமையே மேற்படி வாதப்பிரதிவாதங்களினதும், சர்ச்சைகளினதும் அடிப்படையாகும். சம்பந்தன் எவ்வாறு அத்தகையதொரு முடிவை எடுக்க முடியும். வடக்கு மக்கள் அத்தகையதொரு ஆணையை விக்னேஸ்வரனுக்கு வழங்கியிருக்கவில்லை. மாறாக, அரசுக்கு எதிராகவே மக்கள் வாக்களித்திருந்தனர். எனவே சம்பந்தன், சுமந்திரன் மற்றும் புதிதாக இணைந்திருக்கும் விக்னேஸ்வரன் ஆ…
-
- 0 replies
- 468 views
-
-
யாப்புருவாக்கம் பிழைத்தால் – கடவுளிடமா கேட்பது? நிலாந்தன்:- கடந்த பன்னிரண்டாம் திகதி கிளிநொச்சியில் கூட்டுறவாளர் மண்டபத்தில் சம்பந்தர் ஆற்றிய உரை கவனிப்புக்குரியது. அதே நாளில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை கட்டியணைத்தபடி சம்பந்தர் கூறிய ‘கடவுளிடம் கேளுங்கள்’ என்ற வாக்கியம் பிரசித்தமாகிய, கவனிக்கப்பட்ட அளவிற்கு சம்பந்தரின் உரை கவனிக்கப்படவில்லை. அந்த உரையில் அவர் கூறியவை புதியவை அல்ல. கடந்த ஆண்டு மன்னாரில் இடம்பெற்ற ‘தடம் மாறுகிறதா தமிழ்த் தேசியம்?’ கருத்தரங்கில் அவர் தெரிவித்தவற்றின் விரிவாக்கமே அந்த உரை. குறிப்பாக நாடாளுமன்றம் அரசியலமைப்புப் பேரவையாக மாற்றப்பட்ட பின்னிருந்து அதிலும் குறிப்பாக யாப்புருவாக்கப் பணிகளில் கூட்டமைப்பு ஒரு பங்…
-
- 0 replies
- 394 views
-
-
அர்ச்சனைத்தட்டு ராஜதந்திரம்? நிலாந்தன். December 19, 2021 கொழும்பிலுள்ள சீனத் தூதுவர் தலைமையிலான ஒரு குழு கடந்த 15 ஆம் திகதி புதன்கிழமை வடக்கிற்கு வருகை தந்தது. அவர்கள் எங்கே போனார்கள் யாரை கண்டார்கள் போன்ற விபரங்கள் ஏற்கனவே செய்திகளாக வந்துவிட்டன. இச்செய்திகளுக்கு அப்பால் இதுபோன்ற விஜயங்களின் ராஜதந்திர இலக்குகளை-diplomatic objectives-உய்த்துணரும் விதத்தில் அண்மைக்கால சம்பவங்கள் சிலவற்றை தொகுத்து காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். தமது வருகை ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று என்றும் பெருந்தொற்று நோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது என்றும் சீனத் தூதுவர் கூறியுள்ளார். எனினும் அவர் வடக்கிற்கு வருகைதந்த காலகட்டம் எதுவென்று பார்…
-
- 0 replies
- 516 views
-
-
ஆப்கானிஸ்தான்: தென்னாசியாவின் புதிய மையப்புள்ளி புதிய நெருக்கடிகள், புதிய தேவைகளை உருவாக்குகின்றன; புதிய தேவைகள், புதிய பங்காளிகளை உருவாக்குகின்றன; புதிய பங்காளிகள், புதிய திட்டங்களை உருவாக்குகிறார்கள்; புதிய திட்டங்கள், புதிய பிரச்சினைகளை உருவாக்குகின்றன; மொத்தத்தில், நெருக்கடிகள் பிரச்சினைகளையும் பிரச்சினைகள் நெருக்கடிகளையும் தோற்றுவிக்கின்றன. இவ்வாறு, தோற்றுவிக்கப்படுபவைகளில் பெரும்பாலானவை, தேவையின் அடிப்படையில் இருப்பதில்லை. ஆனால், நெருக்கடிகள் சில தவிர்க்கவியலாத நடவடிக்கைகளுக்கு வித்திடுகின்றன. அவை வினையை அறுவடை செய்கின்றன. கடந்த வாரம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நீண்ட காலமாக எத…
-
- 0 replies
- 467 views
-
-
தமிழர்களை ஏமாற்றும் இந்தியாவும் பயன்படுத்தும் இலங்கையும்
-
- 0 replies
- 603 views
-
-
இலங்கை அரசியலில் ராஜபக்ஷேக்கள் பெரும் செல்வாக்கை பெற்றது எப்படி? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 28 ஏப்ரல் 2022, 06:22 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷவும் இருந்துவருகின்றனர். 2005ல் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி ஆனார் என்றாலும் அந்நாட்டில் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு, ராஜபக்ஷே குடும்பத்தின் செல்வாக்கு இலங்கையில் மிகப் பெரிய அளவில் அதிகரித்தது. இலங்கை தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்தாலும், மஹிந்தவும் கோட்டாபயவும் ஆட்சியில் நீடிக்கவே செய்கின்றனர். இலங்கையில்…
-
- 4 replies
- 605 views
- 1 follower
-
-
தெற்காசியாவின் லெபனானாக இலங்கை மாறுவதை மேற்குலகம் தடுக்க வேண்டும் மட் கொட்வின், இலங்கைக்கு தேவைப்படுவது பொறுப்புமிக்க அரசாங்கமும் நிலையான சர்வதேச முதலீடுமாகும். ஒரு காலத்தில் இலங்கையின் மிக முக்கியமான இருதரப்பு பங்காளியாக இருந்த பிரிட்டன் , அமெரிக்கா, இந்தியா மற்றும் ஏனைய “குவாட் நாடுகளுடன்” இணைந்து நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கும், சீனாவின் மீதான முதலீட்டு சார்புக்கு ஒரு ஒத்திசைவான போட்டியான மாற்று வழியை வழங்குவதற்கும் அவசர இடையீட்டு நிதியை வழங்க வேண்டும். 00000000000000 இலங்கையில் உணவு, எரிபொருள் விலைகள் வானுயர அதிகரித்துச் செல்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பட்டினியிலி…
-
- 0 replies
- 229 views
-
-
முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களின் சூத்திரதாரிகள் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான கடும்போக்குவாதிகளின் திட்டமிட்ட இனவாத தாக்குதலின் உச்ச நிலையினையே கண்டி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல் சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இத்தாக்குதல்களை மேற்கொண்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வழங்காது போனால் முஸ்லிம்கள் மீண்டும் மீண்டும் பாதிக்கப்படுவார்கள் என்பதனை அரசாங்கம் புரிந்து கொள்ளல் வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள மேற்படி தாக்குதல்கள் யாவும் நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை ஆதரவு…
-
- 0 replies
- 634 views
-
-
தேர்தலுக்கு பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள்... கஜேந்திரகுமார்
-
- 0 replies
- 362 views
-
-
http://www.pathivu.com/?ucat=sirappu_paarvai :|
-
- 4 replies
- 1.7k views
-
-
தேரும் தேசியமும் - நிலாந்தன் தென்மராட்சியில் வரணியில் ஒரு கோயிலில் கனரக வாகனத்தின் உதவியோடு தேர் இழுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் போதியளவு ஆட்கள் இல்லாத காரணத்தால், வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க வேண்டியிருந்ததாகவும், அவ்வாறு வேறு சமூகங்களுக்கு, அதாவது சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க விரும்பாத ரீதியில் நிர்வாகம் தேரை இழுப்பதற்கு கனரக வாகனத்தைப் பயன்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இச் சம்பவம் இணையப் பரப்பில் குறிப்பாக முகநூலில் கடும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே அண்மையில் சிவசேனா என்ற ஓர் அமைப்பு பசு வதை தொடர்பாக சர்ச்சையைக் கிளப்பிய அதே தென்மராட்ச…
-
- 0 replies
- 814 views
-
-
மாவையின் முதலமைச்சர் கனவு பலிக்குமா? புருஜோத்தமன் தங்கமயில் / 2018 ஜூன் 20 புதன்கிழமை, மு.ப. 01:14 Comments - 0 வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக வர வேண்டும் என்பது மாவை சேனாதிராஜாவின் ஒரு தசாப்த காலக் கனவு. இறுதி மோதல்களுக்குப் பின்னரான, அரசியல் கள யதார்த்தங்களை உள்வாங்கி, மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்தது முதல், முதலமைச்சர் கனவு மாவையிடம் நீடிக்கின்றது. தமிழ்த் தேசிய அரசியலில் தற்போது இயங்கிக் கொண்டிருப்பவர்களில், இரா.சம்பந்தனுக்குப் பிறகு, சிரேஷ்ட நிலையில் இருப்பவர் மாவை ஆவார். அவருக்கு, 50 ஆண்டுகளை அண்மித்த, கட்சி அரசியல் அனுபவம் உண்டு. சுமார் 20 ஆண்டுகளாக நாடாளுமன்றத்திலும் அங்கம் வகிக்க…
-
- 0 replies
- 380 views
-
-
சர்ச்சையில் சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பொதுவேட்பாளராக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நிறுத்தப்படுவாரா என்று ஊகங்கள் உலாவிக் கொண்டிருந்த போது, அமைச்சர் சரத் பொன்சேகாவிடம், ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அவர், “சங்கக்கார நல்ல மனிதர்; திறமையான கிரிக்கெட் வீரர் தான். ஆனால், அவருக்கு அரசியல் தெரியாது; நானே, அரசியலுக்கு வந்து, ஐந்தாறு ஆண்டுகளுக்குப் பின்னர் தான், அரசியலைக் கற்றுக் கொண்டேன்” என்று பதிலளித்திருந்தார். இவ்வாறு கூறியிருந்தாலும், அவர் இப்போதும் கூட, அரசியலைச் சரிவரக் கற்றுக் கொள்ளவில்லை என்பதே உண்மை. …
-
- 0 replies
- 455 views
-
-
அதிகார போதையில் தடுமாறும் மைத்திரி - புருஜோத்தமன் தங்கமயில் 2018 ஒக்டோபர் 31 புதன்கிழமை, மு.ப. 12:17Comments - 0 நாட்டு மக்களின் இறைமை மீண்டும் ஒருதடவை கேலிப்பொருளாகியுள்ளது. மக்கள் ஆணையைப் பெற்று, ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன, அதே மக்களின் ஆணையைப்பெற்று, ஜனநாயக மரபுகளுக்கும் அரசமைப்புக்கும் உட்பட்டு, ஆட்சியமைத்த அரசாங்கமொன்றைப் பலவந்தமாகப் பதவி நீக்கியிருக்கின்றார். இது, அரசமைப்பு மீதான அச்சுறுத்தல் மாத்திரமல்ல, மக்களின் இறைமையைப் பாதுகாக்கின்ற, பொறிமுறைகள் மீதான தாக்குதலும் ஆகும். மக்களின் இறைமையைப் பாதுகாக்கும் பொறிமுறைகளில், நாடாளுமன்றமும் நீதித்துறையும் சட்டத்தின் ஆட்சியும் பிரதானமானவை. ஜனாதிபதிப் பதவியும் அதன் ஒரு வடிவமே. …
-
- 0 replies
- 555 views
-
-
இமாலயப் பிரகடனமும் மகா சங்கமும் – நிலாந்தன். இமாலயப் பிரகடனத்தை செய்த உலகத் தமிழர் பேரவையானது,அது தொடர்பாக விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.அந்த அறிக்கையில் பின்வரும் தகவல்கள் காணப்படுகின்றன…. பிரகடனக்குழு மல்வத்த பீடாதிபதியை சந்தித்தபோது அவர் பின்வருமாறு கூறியுள்ளார்…“கடந்த காலங்களில் கட்சிகளுக்கிடையில் உருவாக்கப்பட்ட பல்வேறு உடன்படிக்கைகள் இல்லாமல் போவதற்கு வீதிக்கு இறங்கிய பௌத்த பிக்குகள்தான் காரணமென்று தமிழ் பிரதிநிதிகள் கூறியது உண்மைதான் (இந்தச் சந்திப்பின் ஒவ்வொரு கூட்டத்திலும் GTF பிரதிநிதிகள் பலதைக் குறிப்பிட்டிருந்தனர். “பண்டா – செல்வா ஒப்பந்தம்”, “டட்லி – செல்வா ஒப்பந்தம்”, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடனான “போர்நிறுத்த ஒப்பந்தம்” மற்றும் அரச…
-
- 3 replies
- 660 views
-
-
-
- 0 replies
- 469 views
- 1 follower
-
-
தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையை, அரசாகவும் அரசியலாகவும் கொண்டதன் விளைவா? April 28, 2019 தீபச்செல்வன்.. ஏப்ரல் 21 இலங்கையின் வரலாற்றில் ஓர் கறுப்பு நாள். யேசு பிரான் உயிர்த்ழுந்த நாளில் பிரார்த்தனைகளுடன் இருந்த மக்கள், ஆயிரமாயிரம் கனவுகளுடன் பாடல்களைப் பாடிய குழந்தைகள் என 360பேர் பலியெடுக்கப்பட்டுள்ளனர். யேசுவின் முகத்தின்மீது, மாதா சொருபம்மீது குருதி தெறிந்திருந்த அந்தக் காட்சியே பெரும் மனிதப் பலியின் கொடூரத்தால் இருதயத்தை வலிக்கச் செய்கிறது. எவரும் கற்பனை செய்திராத இக் கொடுஞ் செயல் நமக்கு பல விடயங்களை உணர்த்துகிறது. இலங்கை அரசைப் பொறுத்தவரையிலும், இலங்கை இராணுவத்தைப் பொறுத்தவரையிலும் ஈழத் தமிழ் மக்கள்தான் எதிரிகள் என்று நினைத்த வண்ணமுள்…
-
- 0 replies
- 409 views
-
-
பெண் உடலை கட்டுப்படுத்துவதிலிருந்து வெளிப்படும் தீவிரவாதம் பட மூலம், REUTERS புர்காவைப் பெண்கள் விரும்பி அணிகிறார்கள் என்பதிலெல்லாம் எனக்குத் துளியும் உடன்பாடு இருந்ததில்லை. இப்போதும் இல்லை. பெண் உடல் மீதான ஆண் ஆதிக்கத்தின் வெளிப்பாடு மட்டுமே இந்த புர்கா. இந்த உடை எப்படி அடிப்படைவாதத்தின் கூறாக இருந்து வந்திருக்கிறது என்பதற்கு புர்கா/ நிகாப் தடை ஒரு நல்ல எடுத்துக்காட்டு. 2016 செப்டம்பர் 23ஆம் திகதி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா வெளியிட்ட ஒரு பத்வாவில் “நிகாப் முஸ்லிம் பெண்கள் மீது விதிக்கப்பட்டது” என்றது. (பத்வா இல. 008/F/ACJU/ 2009). அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் இந்த பத்வா, நிகாப் அணியாத பெண்களை விபச்சாரிகள் என்று சொல்லவைத்தது. அதே ஜம்மியத்துல் உலமாத…
-
- 8 replies
- 1.6k views
-
-
-
விக்னேஸ்வரனும் தீர்ப்பும் என்.கே. அஷோக்பரன் / 2019 ஓகஸ்ட் 12 திங்கட்கிழமை, மு.ப. 01:20 Comments - 0 இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால், அண்மையில் அரசமைப்பு ரீதியாகவும் தமிழர் அரசியல் தொடர்பிலும் இனப்பிரச்சினைத் தீர்வுடன் தொடர்பு மிக்கதுமானதொரு தீர்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது. இந்தத் தீர்ப்புக்குள் பொதிந்துள்ள அரசமைப்பு முக்கியத்துவம், வௌிப்பார்வைக்குப் பலருக்குப் புலப்படாது போயிருக்கலாம். அது, இந்தத் தீர்ப்பின் முக்கியத்துவத்தை, தனிநபர்களின் அரசியல் பிரச்சினையாகப் பார்க்கும், அணுகும் போக்கை ஏற்படுத்தியிருக்கலாம்; ஆனால், இவற்றைத் தாண்டி, இந்தத் தீர்ப்பு, இந்த நாட்டின் அரசமைப்பையும் அதிகாரப் பகிர்வுக் கட்டமைப்பையும் அரசியலையும் குறிப்பாக, இனப்பிரச…
-
- 0 replies
- 430 views
-