அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
மக்கள் யாருடைய பக்கம்? மக்களின் பக்கம் யார்? April 7, 2025 — கருணாகரன் — உள்ளுராட்சி சபைத் தேர்தலையொட்டி வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் அரசியற் கூட்டுகள் சில புதிதாக உருவாகியுள்ளன. இந்தக் கூட்டுகளின் பிரதான நோக்கம் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியைத் தடுப்பதாகும். இரண்டாவது, தமிழ்த்தேசிய அரசியலை அல்லது பிராந்திய அரசியலை (சமூகப் பிராந்திய அரசியல் (Socio-regional politics) மற்றும் புவியற் பிராந்திய அரசியல் 9 Geo-regional politics) மேலும் தொடர்வது. பிராந்திய அரசியலைத் தக்க வைத்துக் கொள்வதன் மூலமே அரசியல் அரங்கில் தம்மை நிலைப்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை. இதற்காக அவை தமது கொள்கை (அப்படி ஏதேனும் இருந்தால்) கோட்பாடு, உடன்பாடு, முரண்பாடு எல்லாவற்றையும் கடந்து கூட்டு வைத…
-
- 0 replies
- 331 views
-
-
அருந்ததி ராயுடன் பேசுவது மனசாட்சி யுடன் உரையாடுவதுபோல. உரையாடல் மிக நெருக்கமானதாக இருக்கும். ஆனால், உண்மையை எதிர்கொள்ளும் திராணி வேண்டும். தன்னுடைய 'தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ தமிழ் மொழிபெயர்ப்பு நூலான - 'சின்ன விஷயங்களின் கடவுள்’ - வெளியீட்டுக்காக சென்னை வந்திருந்த அருந்ததியைச் சந்தித்தேன். ''இன்றைய அருந்ததி ராய் உருவாக, சின்ன வயது வாழ்க்கை எந்த அளவுக்கு அடிப்படையாக இருந்தது என்று சொல்ல முடியுமா?'' ''நான் ஒரு வயதுக் குழந்தையாக இருந்தபோது என் பெற்றோருக்கு விவாகரத்து ஆனது. கலப்புத் திருமணம் செய்து அந்தக் கணவனையும் பிரிந்த ஒரு பெண், தன் கிராமத்துக்கு மீண்டும் திரும்பும்போது நம் சமூகம் எப்படி வரவேற்கும் என்று சொல்ல வேண்டுமா என்ன? எல்லோராலும் நிராகரிக்கப்பட்ட நிலைய…
-
- 6 replies
- 1.8k views
-
-
உதட்டில் ஐக்கியம்; மனதில் குரோதம் -இலட்சுமணன் தமிழ்த் தேசிய அரசியல் சூழ்நிலையானது, மிகவும் மோசமானதொரு வரலாற்றுச் சிக்கலுக்குள் சிக்குண்டு போயுள்ளது. தமிழ்த் தேசியத்தின் அரசியல் விடுதலை தொடர்பாக, கடந்த 22 ஆண்டுகளாக அஹிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் பல்வேறு போராட்டங்களை நிகழ்த்தி, தனது உரிமையை நிலைநிறுத்தப் போராடி இருக்கிறது தமிழினம். இத்தகைய போராட்டச் சூழலில், எண்ணங்களில் தோன்றாததும் நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாத, ‘சுயநல அபிலாசைகள்’ தமிழ் அரசியலில் இன்று முனைப்புப் பெற்றுள்ளன. தமிழரின் அரசியல் விடுதலை தொடர்பாக, பல்வேறு துயர்நிறைந்த அனுபவங்களை, வரலாற்று ரீதியாக அனுபவித்த இனத்துக்குச் சாபக்கேடானதோர் அரசியல் சூழல் தோற்றம் பெற்றுள்ளது. இந்…
-
- 0 replies
- 406 views
-
-
பேச்சாளர்களின் பட்டியலில் கலாநிதி தயான் ஜெயதிலகவின் பெயர் காணப்பட்ட போது, இதற்கான அனுமதியை வழங்குவதற்கு மங்கள மறுத்தார். இக்கருத்தரங்கானது அதிபர் செயலகத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டது என்பதைக் கூட மங்கள தனது கவனத்திற் கொள்ளவில்லை. இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. கருத்தரங்கு ஒன்றை நடத்துவதற்கு லக்ஸ்மன் கதிர்காமர் நிறுவகத்தின் மண்டபம் ஒன்றை தந்துதவுமாறு சில வாரங்களுக்கு முன்னர் கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டது. மைத்திரிபால சிறிசேன அந்தக் கருத்தரங்கின் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் இக்கர…
-
- 0 replies
- 379 views
-
-
நினைவு கூர்தல் – 2020 நிலாந்தன் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு மேலாக இதே தலைப்பில் நினைவுகூர்தல் தொடர்பாக எழுதிவருகிறேன். ஆனால் தாயகத்தில் நினைவு கூர்தல் தொடர்பில் கடந்த 11 ஆண்டுகளாக குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பெரிய திருப்திகரமான மாற்றங்கள் ஏதும் ஏற்பட்டிருப்பதாக தெரியவில்லை. நினைவுகூர்தலை அதன் கோட்பாட்டு அர்த்தத்தில் அதன் ஆழமான பொருளில் விளங்கி முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் கடந்த 11 ஆண்டுகளாக குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒரு வளர்ச்சியை அடைந்திருப்பதாக தெரியவில்லை. முதலாவதாக நினைவுகூர்தல் என்றால் என்ன ? அது தனிய கொல்லப்பட்ட மக்களை நினைவு கூர்வது மட்டும் அல்ல. கொல்லப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெறுவதற்கான ஒரு போராட்டத்திலிருந்து பிரிக்கப்படவியலாத ஒரு பகுதியே ந…
-
- 0 replies
- 470 views
-
-
சமூக இடைவெளியும் சமூகங்களின் இடைவெளியும் காரை துர்க்கா / 2020 ஜூன் 09 எங்கள் வாழ் நாளில், காலத்துக்குக் காலம், புதிது புதிதாகப் பெயர்கள் வருகின்றனளூ உதடுகளில் வாழ்கின்றனளூ மறைந்து விடுகின்றன. அந்தவகையில், தற்போதைய கொரோனா வைரஸ் பேரிடர் காலத்தில், 'சமூக இடைவெளி' என்ற சொல், அடிக்கடி எல்லோராலும் பயன்படுத்தப்படுகின்ற பிரபல்யமான சொல்லாகப் பரிணமிக்கின்றது. அதாவது, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து எம்மையும் எம்மைச் சுற்றி உள்ளவர்களையும் பாதுகாக்கும் பொருட்டு, தனிநபர்கள் தங்களுக்கிடையே பேணிக்கொள்ள வேண்டிய இடைவெளியே (தூரம்) 'சமூக இடைவெளி' ஆகும். ஆனாலும், எங்கள் சமூகத்தில், 'சமூக இடைவெளி' பிரமாணத்துக்கு ஏற்றவாறு பேணப்படுகின்றதா என்பது, முற்றிலும் கேள்விக்குரியதாகவே காணப்…
-
- 0 replies
- 415 views
-
-
பிரித்தானியாவின் வட அயர்லாந்து மீதான சட்ட அதிகார எல்லையை முடிவுக்குக் கொண்டுவர முயன்று கொண்டிருந்த சின் பெயின் (Sinn Fein), ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக பிரித்தானிய வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்ததையடுத்து, ஐக்கிய அயர்லாந்து உருவாக்கத்துக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளது. இதன் அங்கமாகவே, குறித்த வாக்களிப்பு முடிவு தொடர்பான செய்திகள் வெளிவந்து குறுகிய நேரத்துக்குள்ளேயே, வட அயர்லாந்தின் ஜனநாயக திடசங்கற்பத்தை ஆங்கில வாக்குகள் தடம்புரள வைத்துள்ளன. இது, ஐக்கிய அயர்லாந்தின் தேவையை மீளவும் கோடிட்டு காட்டுகிறது என சின் பையினின் தலைமைத்துவம் தெரியப்படுத்தியுள்ளது. வட அயர்லாந்தின் 56% மக்கள் ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றித்திற்குள் தொடர…
-
- 0 replies
- 578 views
-
-
மகிந்த சிந்தனை வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும் இராணுவப் பின்னணியுள்ள ஒருவர் அடுத்த ஜனாதிபதியானால், இராணுவ சர்வாதிகாரம் ஏற்படும் அபாயம் இருக்கிறது. * அதிகாரங்கள் ஒரே இடத்தில் குவிந்தால் மோசடிக்கு இடம் ஏற்படும் * மாகாணசபை முறையை இந்தியா திணிக்கவில்லை *பண்டாரநாயக்க காலத்திலிருந்து விவாதிக்கப்பட்ட விடயம் அதிகாரப் பகிர்வு * மாகாண சபையை ஒழிப்பதால் சிங்கள முஸ்லிம் இளைஞர்களுக்கும் தவறான செய்தியாகிவிடும் * மகிந்த சிந்தனையில் அளித்த வாக்குதியை நிறைவேற்றுகஇராணுவப் பின்னணியுள்ள ஒருவர் அடுத்த ஜனாதிபதியானால், இராணுவ சர்வாதிகாரம் ஏற்படும் அபாயம் இருக்கிறது. 1978 ஆம் ஆண்டு அரசமைப்பில் மக்களின் இறைமையின் செயற்பாடானது பிரிக்கப்பட்டுவிட்டது. அது நாடாளுமன்றத்துக்…
-
- 1 reply
- 567 views
-
-
கொவிட்-19: அதிகரிக்கும் தொற்று சொல்வது என்ன? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 ஜூலை 02 முடிந்தது என்று நம்புவதற்கு தான், எல்லோருக்கும் விருப்பம். ஆட்சியாளர்களும் இவ்வாறே இதை, மக்களும் நம்ப வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், யாதார்த்தம் என்னவோ வேறுபட்டதாக இருந்து விடுகிறது. ‘முடிந்தது’ என்றும் ‘ஒழித்து விட்டோம்’ என்றும், பெருமைப் பேச்சுகள் ஒருபுறம் பேசப்பட்டாலும், இன்னொருபுறம் அழிவு மெதுமெதுவாக முன்னகர்ந்து, ஒரு பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை, நாம் கண்முன்னால் காண்கின்றோம். ஆனால், அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் நாமும் இல்லை. அதை வெளிப்படையாக, மக்களுக்குச் சொல்லும் மனநிலையில், அரசாங்கங்களும் இல்லை. உயிர்களுக்கும் இலாபத்துக…
-
- 0 replies
- 589 views
-
-
13 ஒழிக்கப்படுமா.? வெறுமையாகுமா.? எதிர்பார்த்தபடி – சொல்லியபடி 19 ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிக்கும் திட்டம் நிறைவுக்கு வருகின்றது. வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 20 ஆவது திருத்தத்திற்கு இனி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறவேண்டியது மட்டுமே மீதமுள்ளது. 150 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள ராஜபக்ச அரசாங்கத்திற்கு இது ஒன்றும் கடினமான வேலையல்ல. 20 ஆவது திருத்தம் நடைமுறைக்கு வந்ததும் புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்குவதே கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் திட்டம். இதற்கு அவர்கள் முன்வைக்கும் கோஷம் அது ‘ஒரே நாடு; ஒரே சட்டம்’ என்பதுதான். அனைத்து மக்களுக்கும் ஒரே சட்டம் என்பது மேலோட்டமாகப் பார்த்தால் சரியானதாக – நன்மையானதாக – அனைத்து மக்களுக்கும் பொதுவானதாகத் தோன்றல…
-
- 0 replies
- 528 views
-
-
மாவீரர் தினமும் வடக்கும் கிழக்கும் அடக்குமுறைகளும் ஆதிக்க கெடுபிடிகளும் எங்கு இறுகிப் போகின்றதோ அங்கெல்லாம் முரண்பாடுகளும் மோதல்களும் புரட்சி உணர்வுகளும் வெடித்து வெளிக்கிளம்புகின்றன என்பதற்கு வடக்கில் இம்முறை அமைதியாகவும் அடக்கமாகவும் நினைவு கொள்ளப்பட்ட மாவீரர் தினம் சிறந்த உதாரணமாகும். ஆயிரம் ஆயிரம் அக்கினிப்பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக துருவ தாரகைகளாக எமது விடுதலை வானை அழகுபடுத்திய, இனத்தின் இருப்புக்காக இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த அணி திரளுங்கள் என வடக்கின் பாராளுமன்ற உறுப்பினரான சிறீதரன் மாவீரர் தினத்தை முன்னிட்டு பாராளுமன்றில் அ…
-
- 0 replies
- 431 views
-
-
ஈழத்தமிழர் மனிதஉரிமைகள் குறித்த சிறப்பான அணுகுமுறை தேவை 12 Views இம்மாதம் 9ஆம் திகதி அனைத்துலக மன்றத்தின் ‘இனஅழிப்பால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்ணியத்துடன் நினைவு கூரும் அனைத்துலக நாளாக’ இக்குற்றச் செயல் இடம்பெறாது முன்கூட்டியே தடுப்பதை வலியுறுத்தும் நோக்கில் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. மறுநாள் 10ஆம் திகதி உலகின் முக்கியமான நாள், ‘அனைத்துலக மனித உரிமைகள் தினம்.’. ஆயினும் இந்த அனைத்துலக மரபுசாசனங்களுக்கோ அல்லது அனைத்துலக சட்டங்களுக்கோ, முறைமைகளுக்கோ சிறிதளவேனும் மதிப்பளிக்காது ஈழத்தமிழர்களைச் சிறீலங்கா இனஅழிப்புச் செய்து, இன்று இனத்துடைப்புச் செய்து வருவது உலகறிந்த உண்மை. சிறீலங்கா தனது ஈழத்தமிழின அழிப்பின…
-
- 0 replies
- 470 views
-
-
http://tamilworldtoday.com/archives/4860 http://tamilworldtoday.com/home பூகோள அரசியல் சூட்சுமங்களுடன் பின்னிப்பிணைந்த இலங்கைத் தீவுக்காக 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்ற கால அடையாள வர்ணிப்பு அப்படியே சற்று மாற்றிப்போட்டால், 'விக்கிலீக்ஸ்' முதல் கேர்ணல் ஹரிகரன் வரையான புள்ளிகள் பழைய புகுதல் தொடர்பான விடயதானங்களை வழங்குவது புரிகிறது! 87 இல் உருவாக்கப்பட்ட இந்தோ-ஶ்ரீலங்கா ஒப்பந்தத்தின் பின்னணியில் புலிகளுக்கு இந்தியா நிதியுதவி செய்ததாகக் கூறும் விக்கிலீக்சின் செய்தி மற்றும் புலிகளுக்கு இந்தியா ஆயுதப் பயிற்சி அளித்த அளித்த விடயம் குறித்து கோத்தாபயவே விசாரணை நடாத்தலாம் என்ற ஹரிகரனின் எள்ளல் செய்தி வரை சில விடயங்கள் புலப்படுத்தப்படுகின்றன. அதாவது 2009 இற்க…
-
- 0 replies
- 531 views
-
-
நினைவுத்தூபி அழிப்பு: அறத்தின் மீதான ஆக்கிரமிப்பு -புருஜோத்தமன் தங்கமயில் போர் வெற்றி வாதத்துக்கு எதிராக முளைக்கும் சிறிய புல்லைக்கூட, விட்டு வைத்துவிடக் கூடாது என்பது ராஜபக்ஷர்களின் ஒரே நிலைப்பாடு. அதுபோல, பௌத்த சிங்கள மேலாதிக்க மனநிலையைக் கேள்விக்கு உள்ளாக்கும் எந்தவோர் அம்சத்தையும், நாட்டின் எந்தப் பாகத்திலும் அனுமதித்துவிடக் கூடாது என்பது, தென் இலங்கையின் குறிக்கோள். அப்படியான நிலையில், இறுதிப் போர் கொடூரங்களை நினைவுறுத்திக் கொண்டு நிற்கும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி(கள்), தென் இலங்கையின் கண்ணில் விழுந்த பெரிய துரு(க்கள்). அந்தத் துருக்களை அகற்றிவிட வேண்டும் என்பதற்காக சாம, தான, பேத, தண்டம் என்ற நான்கு வழிகளையும், தென் இலங்கையும் அதன் ஆட்சியாள…
-
- 0 replies
- 753 views
-
-
ராஜீவ் கொலை யாருக்கு துன்பியல் சம்பவம்? சில சதிக்கோட்பாடுகள்! வரலாற்றின் வழிநெடுகே, எப்போதோ நடந்த ஒரு சம்பவம் எப்போதோ நடக்கப் போகும் மற்றொரு சம்பவத்தை பாதித்தோ, வடிவமைத்தோ வரலாற்றின் போக்கையே மாற்றிவிடுவதை நாம் பார்க்கிறோம். முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்கள், இந்திய விடுதலைப் போர், ஜெர்மனியில் ஹிட்லரால் கையாளப்பட்ட யூத அழிப்பு என இவை அனைத்துமே வேறு எங்கோ எப்போதோ நடந்த சம்பவங்களின் எதிரிவினைகள் தான். சமகாலத்தில் சொல்லவேண்டுமானால் அமெரிக்காவில் நிகழ்ந்த ரெட்டை கோபுர இடிப்பு சம்பவத்தைச் சொல்லலாம். சி.ஐ.ஏ தன் சுயநலத்திற்காக பின்லாடனையும் அவர் பயங்கரவாதத்தையும் ஆதரித்து வளர்த்தெடுக்கும் போது, ஒருநாள் அமெரிக்காவிற்கும் அவரால் ஆபத்து வரும் என சற்றும் எதிர்பார்த்திருக்கவ…
-
- 57 replies
- 7.6k views
-
-
இருட்டு அறையில் கருப்பு பூனையை தேடிக்கொண்டிருக்கிறார்-பா.உதயன் அனைவருக்குமான அரசு தாம் என்று சொல்பவர்கள் எந்த அபிவிருத்தியும் முதலீடும் செய்ய வேண்டுமானால் முதலில் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல வேண்டும். ( winning the hearts and minds of tamil people ) யுத்த வடுக்கள், காயங்கள், காணாமல் போனோருக்கான நீதிகள் இப்படி அடிப்படை உரிமைகளையாவது கொடுக்க முன்வர வேண்டும். அரசியல் ஸ்திரத்தன்மையை (Political Stability) அன் நாட்டில் முதலில் கட்டி எழுப்பவேண்டும். இவை ஒன்றும் இல்லாமல் எவரையும் பேச்சுக்கு அழைப்பதும் அபிவிருத்தி செய்ய வாருங்கள் என்பதும் இலங்கையில் முதலீடு செய்யுங்கள் என்பதும் வெறும் கண்துடைப்பாகும். சர்வதேச சமூகத்தையும் அத்தோடு அப்பாவித் தமிழரை ஏமாற்றும் செயலுமாகும். …
-
- 1 reply
- 458 views
-
-
-
- 41 replies
- 2.6k views
-
-
அ.தி.மு.க அரசியல்: பிரதமர் நரேந்திர மோடி விரும்பும் ராஜீவ் வழிமுறை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் வேளை; இன்னொரு புறம், திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழா; மூன்றாவது பக்கம், திராவிடக் கட்சிகள் தமிழகத்தின் ஆட்சியைப் பிடித்த, பொன் விழா ஆகும். ஆனால், இந்த விழாக்களை எல்லாம், இப்போது அ.தி.மு.கவுக்குள் நடந்து கொண்டிருக்கும் ‘பேட்டிப் போர்’ மற்றும் ‘அறிக்கைப் போர்’ ஆகியன மிஞ்சி விட்டன. எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை, ஒவ்வொரு மாவட்டத்திலும் கொண்டாடிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, இது எதிர்பாராத சோதனை. ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்கொண்டு வந்த எடப்பாட…
-
- 0 replies
- 478 views
-
-
இருவேறு வெளியுறவு அணுகுமுறைகள்? நிலாந்தன். தமிழ் கட்சிகள் இந்தியாவை நோக்கி தயாரித்த ஆவணம் இனிமேல்தான் இந்திய தூதரகத்திடம் கையளிக்கப்படும் என்று தெரிகிறது. அது கையளிக்கப்படுவது என்பது ஒரு சம்பிரதாயபூர்வ நிகழ்வு. இங்கு அதைவிட முக்கியமானது என்னவெனில் பெரும்பாலான தமிழ் கட்சிகள் ஒன்றுகூடி இந்தியாவை தமிழ் மக்களுக்கு ஆதரவாக தலையிட வேண்டும் என்று கேட்டிருப்பது தான். இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெளியே நிற்கிறது. அக்கட்சியானது கூட்டுக் கோரிக்கை முன் வைக்கப் பட வேண்டும் என்பதனை எதிர்க்கிறதா? அல்லது அக்கோரிக்கையாக 13 ஆவது திருத்தம் முன்வைக்கப்படுவதை எதிர்க்கிறதா ? என்பதனை உத்தியோகபூர்வமாக தெளிவுபடுத்த வேண்டும். அதாவது இந்தியாவுடன் என்கேஜ் பண்ண வேண்டும் என்ற வெளியுற…
-
- 0 replies
- 648 views
-
-
ஈழத்தமிழ் நோக்கு நிலையிலிருந்து இந்தியாவை அணுகுவது! - நிலாந்தன். February 13, 2022 கடந்த ஞாயிற்றுக்கிழமை சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் “நாங்களும் இந்தியாவின் தலையீட்டைக் கோரித்தான் நிற்கிறோம்” என்று கூறுகிறார். அவருடைய கட்சி கிட்டு பூங்காவில் ஒழுங்குபடுத்திய ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட பிரகடனத்திலும் இந்தியா ஒரு நட்பு சக்தி என்று கூறப்பட்டிருக்கிறது. இந்தியத் தலையீட்டைக் கேட்பது என்று முடிவெடுத்தால் ஆறு கட்சிகளின் கூட்டு அழைத்தபோது அதில் இணைந்து கூட்டுக்கோரிக்கையின் வடிவத்தை மாற்றியிருந்திருக்கலாந்தானே? மேலும், 13க்கு எதிராக அக்கட்சி மக்கள் மத்தியில் தெரிவிக்கும் கருத்துக்…
-
- 0 replies
- 392 views
-
-
இலங்கையின், பொருளாதாரத்தினைப் பிடித்துள்ள... சீனாவின் பொறி? தவறான பொருளாதார திட்டமிடல் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் தோல்வியடைந்துள்ளது. இதனால் சீனாவின் மூலோபாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த இலங்கைத் தீவு நாடு கடன்களின் பொறியில் சிக்கியுள்ளது. கொரோனா தொற்றுநோய் மற்றும் ரஷ்யா – உக்ரைன் போரின் அதிர்ச்சிகளுக்குப் பிறகு, சீனாவின் கடன் இராஜதந்திரம் இலங்கையின் வெளிநாட்டுக் கடன்களை அதிகரித்து நெருக்கடியை அதிகப்படுத்தியது. ஏற்கனவே, இலங்கை அந்நியச் செலாவணி நெருக்கடியில் சிக்கிய நிலையில், தொற்றுநோயின் பொருளாதார வீழ்ச்சியைச் சமாளிக்க 10 ஆண்டுகளுக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சலுகைக் கடன்களை வழங்க சீனா முன்வந்தது. இத்தொகையுடன் சீனக் கடன்கள் 6.5 ப…
-
- 0 replies
- 400 views
-
-
அகதிகளாகும் இலங்கையர்! காத்திருக்கும் ஆபத்து
-
- 0 replies
- 359 views
-
-
சிறுபான்மைகளுக்குள் பகைமை பெரும்பான்மையின் ஆளுமை 1946 ஆம் ஆண்டு செர் ஐவர் ஜெனிங்ஸ் இயற்றிய சோல்பரி யாப்பில் ஒரு ஷரத்து இவ்வாறு இடம்பெற்றிருந்திருக்க வேண்டும். அதாவது சிறுபான்மைகளின் பூரண சம்மதமும் அவர்களின் அடிப்படை உரிமைகளின் உள்ளடக்கமும் பல்லின நீதியரசர்களின் அங்கீகாரமுமின்றி யாப்பை மாற்ற முடியாது. என்று அமைத்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், சிறுபான்மைக் காப்பீட்டுச் சட்டமான 29 ஆம் ஷரத்து நிலைத்து இருந்திருக்கும். எனினும், பாராளுமன்றத்தால் யாப்பை இரத்தாக்க முடியாது என்று மட்டுமே ஐவர் ஜெனிங்ஸ் குறிப்பிட்டிருந்தார். அதனால் தான் 1972 ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு வெளியே …
-
- 0 replies
- 546 views
-
-
21’ எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள்; துரோகங்கள்! நஜீப் பின் கபூர் “இங்கு அரசியல் மற்றும் கட்சி யாப்புக்கள்; தலைவர்கள் தன்னலத்தை மையமாக வைத்தே உருவாக்கப்படுகின்றன” பொதுவாக நாடுகளின் அரசியல் யாப்பு என்பது அந்த நாட்டு மக்களினதும் தேச நலனையும் மையமாக வைத்து வடிவமைக்கப்படுகின்ற வழிகாட்டலாகத்தான் இருக்க வேண்டும். இதற்குச் சமாந்திரமான இன்னும் பல விளக்கங்கள் சொல்லப்படலாம். அவை என்ன வார்த்தைகளில் உச்சரிக்கப்பட்டாலும் பொதுவான கருத்து இப்படியாகத்தான் அமைய முடியும். அரசர்கள் நம்…
-
- 1 reply
- 549 views
-
-
உள்ளூராட்சித் தேர்தல் ‘பலப்பரீட்சை’ - 2018 ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம் நடக்கப்போகும், உள்ளூராட்சித் தேர்தலை எல்லா கட்சிகளுமே ஒரு பலப்பரீட்சையாகத் தான் பார்க்கின்றன. வடக்கு, கிழக்கில் மாத்திரமன்றி தெற்கிலும் கூட அதேநிலைதான். இந்த உள்ளூராட்சித் தேர்தல் பல்வேறு கட்சிகளுக்கும் கூட்டணிகளுக்கும் பலத்த சோதனையையும் கூட ஏற்படுத்தியிருக்கிறது. நேரடித் தெரிவு மற்றும் விகிதாசாரத் தெரிவு முறை என்பன, இணைந்த கலப்பு முறையில் நடைபெறும் முதலாவது தேர்தல். புதிய தேர்தல் முறையின் சாதக பாதகங்களை அனுபவபூர்வமாக அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் அறிந்து கொள்ளும் வாய்ப்பும் இதன் மூலம்தான் கிடைக்கப் போகிறது. …
-
- 0 replies
- 310 views
-