அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
முக்கியமானதொரு காலகட்டத்தில், நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்களின் நம்பகத்தன்மை குறித்த கேள்வி எழுந்துள்ளது. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவால், சுதந்திரமாகச் செயற்பட்டு தமது முடிவைத் தீர்மானிக்கும் சூழல் உள்ளதா? அது நியாயமாகச் செயற்படத்தக்க நிலையில் உள்ளதா? என்பன இப்போதுள்ள முக்கியமான கேள்விகளாக உள்ளன. இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வு, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலமே வரவேண்டும் என்ற இறுக்கமான நிலைப்பாட்டை, அரசாங்கம் கொண்டிருக்கின்ற நிலையில் தான் இந்த கேள்வி எழுந்துள்ளது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான தெரிவுக்குழுவில் உறுப்பினர்களை நியமிக்க இதுவரை எதிர்க்கட்சிகள் முன்வரவில்லை. இந்தநிலையில், தலைமை நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையை விசாரிக்க நாடாளுமன்றத் தெரி…
-
- 2 replies
- 961 views
-
-
தோல்வி நிலையென நினைத்தால் .... கடந்து சென்ற 2009 மே மாதத்தில், ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டம் ஒரு பெரிய பின்னடைவைச் சந்தித்தது. எனினும் அந்த விடுதலைப்போராட்டம் தோற்றுவிட்டது என்பது அதன் கருத்தல்ல.ஏனெனில் ஒரு விடுதலைப்போராட்டம் அது அடையவேண்டிய குறிக்கோளை அடையும்வரை முடிந்துவிட்டதாகக்கருதமுடியாது.அதனுடைய பாதையில் அது பல பின்னடைவுகளைச் சந்திக்கலாம்.அவற்றை எவரும் தோல்வியாகவோ அல்லது எல்லாம் முடிந்துவிட்டதாகவோ எடுத்துக்கொள்வதில்லை.மேலும் 'விடுதலை' என்பது எல்லா மனிதர்களினதும் பிறப்புரிமை,அடிப்படை உரிமை.எந்த மனிதரும் அடிமைத்தனத்தை விரும்பி ஏற்றுக்கொண்டதாக வரலாறு இல்லை.எல்லா மனிதரும் தம்மால் இயன்ற வழிவகைகள் மூலம் விடுதலையைப்பெறவே முயன்றுகொண்டிருக்கிறார்…
-
- 1 reply
- 1.2k views
-
-
தோல்வி நெருக்கடி தற்காலிக ஒற்றுமை-நிலாந்தன் மகாதேவா
-
- 0 replies
- 692 views
-
-
தோல்வி பயத்தில் ஓடி ஒளியும் ரணில் - ராஜபக்ஷர்கள் புருஜோத்தமன் தங்கமயில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி நடத்த முடியாது என்று தேர்தல் ஆணைக்குழு, உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துவிட்டது. தற்போது ஆட்சியிலுள்ள ரணில் -ராஜபக்ஷ அரசாங்கம், எந்தவொரு தேர்தலையும் உடனடியாகச் சந்திப்பதற்கு தயாராக இல்லை. அதனால், தேர்தல்களை நடத்தாமல் இழுத்தடிப்பது அல்லது ஒத்திப்போடுவதற்கான சதித்திட்டங்களை மேற்கொள்வது என்ற எண்ணத்தோடு இயங்கி வருகின்றது. அதன் ஒரு கட்டம்தான், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான நிதியை, திறைசேரி விடுவிக்காமல் அலைக்கழிப்பதனூடு நிகழ்ந்திருக்கின்றது. நாட்டில் ஆட்சி மாற்றமொன்றை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதுவும், தேர்தல்கள் மூலமா…
-
- 1 reply
- 907 views
-
-
தோல்விகளை மறைப்பதற்காக கதவடைப்பு போராட்டமா? புருஜோத்தமன் தங்கமயில் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா அச்சுறுத்தல்களினால் நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், அவருக்காக நீதி கோரி தமிழ்த் தேசியக் கட்சிகள் கதவடைப்பு போராட்டத்தினை 20ஆம் திகதி நடத்தத் தீர்மானித்திருக்கின்றன. நீதிபதி சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட அழுத்தங்கள் அச்சுறுத்தலுக்கு எதிராக தமிழ்க் கட்சிகள் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் மனிதச் சங்கிலிப் போராட்டத்தினை நடத்தின. ஆனால், அந்தப் போராட்டத்தில் சில நூற்றுக்கணக்கானவர்களே கலந்து கொண்ட பின்னணியில், அது தோல்விகரமான போராட்டம் என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. மக்களை போராட்டக்களத்தினை நோக்கி அழைத்து வருவதற்கான திராணியை தமிழ்க் கட்சிகள் இழந்துவிட்டன …
-
- 0 replies
- 605 views
-
-
தோல்வியடைந்த நாடாகுமா இலங்கை- பா.உதயன் தேனும் பாலும் ஓடும் என்று போட்டு விட்டோம் ஓட்டு எல்லாம் இப்போ தெருவில நிற்கிறோமே தெரியாம தெரிஞ்சு விட்டோமே நாங்கள் படும் பாடு இப்போ போரை விட மோசமாச்சு யுத்த வெற்றி எல்லாம் இப்போ செத்து போன கதையா போச்சு பாகற்காய் கூட இப்போ பவுண் விலையாய் போச்சு நாடு கூட தம்பி நாறும் கதையாச்சு கட்டி இருக்கும் கோவணமும் உருவிப் போட்டான்கள் கையை விரித்து கடனுக்காய் காக்க வைச்சாங்கள் பாவம் சனங்கள். இராஜதந்திரரீதியாக காய்களை நகர்த்தி எல்லா இராஜதந்திரத்திலும் பெரும் கெட்டிகாரர்கள் சிங்கள ஆளும் வர்க்க தலைவர்கள் எனவும் தமிழர்களை விட பெரும் கெட்டித்தனம் படைத்தவர்கள் என்று எம்மில் உள்ள அரசியல் ஆய்வளர்கள் பலர…
-
- 2 replies
- 745 views
-
-
தோல்வியின் பின்னர் – எங்கிருந்து தொடங்குவது : சபா நாவலன் ஒடுக்கப்ப்பட தமிழ்ப் பேசும் மக்கள் அறுபது வருட கால அவலத்தின் ஒட்டுமொத்த ஒருங்குபுள்ளி போல அமைந்தது தான் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை. அந்தப் புள்ளியிலிருந்து மீண்டும் ஆரம்பிக்கும் தேசியவாத அரசில் மறுபடி ஒரு முறை அழிவுகளை நோக்கி இழுத்துச் செல்லப்படக் கூடாது என்பதில் சமூக அக்கறையும் மக்கள் பற்றும் மிக்க ஒவ்வொரு மனிதனும் கவனம் கொள்கிறான். 70களின் ஆரம்பப் பகுதிகளில் தமிழ்த் தேசிய வாத அரசியல் தமிழ்ப் பேசும் மக்களின் வன்முறை சார்ந்த போராட்டமாக உருவாக ஆரம்பித்தது. தமிழ் மேலாண்மையை அரசியலாக முன்வைத்து உருவான தேசிய வாத்தின் தத்துவார்த்த, சிந்தனைக் கூறுகள், ஏனைய இனக்குழுக்களையும், தேசிய இனங்களையும் தமக்குக் கீழான…
-
- 1 reply
- 671 views
-
-
புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஓகஸ்ட் 28 புதன்கிழமை, பி.ப. 12:31 கடந்த வாரம், நல்லூர் கந்தசுவாமி கோவிலில் வழிபாடுகளை முடித்துக் கொண்டு, மூன்றாவது, ‘எழுக தமிழ்’ பேரணிக்கான பிரசாரப் பயணத்தை சி.வி. விக்னேஸ்வரன் ஆரம்பித்தார். அவரோடு, சுரேஷ் பிரேமசந்திரனும் இருந்தார். முதலாவது, ‘எழுக தமிழ்’ பேரணி, 2016 செப்டெம்பரில் நடைபெற்றது. மூன்றாவது, ‘எழுக தமிழ்’ பேரணி, செப்டெம்பர் மாதம் ஏழாம் திகதி நடைபெறவிருக்கிறது. ஆக, ‘எழுக தமிழ்’ போராட்ட வடிவத்துக்கான வரலாறு, மூன்று வருடங்கள் மட்டுமே! ஆனால், இந்த மூன்று வருடங்களுக்குள், அந்தப் போராட்ட வடிவத்தின் அடையாளமும் அதற்கான அர்ப்பணிப்பும் எவ்வளவுக்கு வலுவிழந்து இருக்கின்றது என்பதைக் கவனித்தாலே, தமிழ்த் தேசிய அரசிய…
-
- 0 replies
- 856 views
-
-
தோல்வியில் முடிந்த ஒபரேசன் பாராளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேம ஜயந்தவும், வெளியிட்ட கூட்டு அரசாங்கம் இன்னமும் தொடர்கிறது என்ற அறிவிப்புடன், ஆட்சிக் கவிழ்ப்புக்கான ஒப்பரேசன் முடிவுக்கு வந்திருக்கிறது. மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக உள்ளே இருந்தும், வெளியே இருந்தும் தீட்டப்பட்ட திட்டங்களும், மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும், தோல்வியில் முடிந்திருக்கின்றன. உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகிய பின்னரான ஒரு வாரகாலத்தில் கொழும்பு அரசியல் களம் பெரும் பரபரப்பிலு…
-
- 0 replies
- 490 views
-
-
தோல்வியில் முடிந்த ஒப்பரேசன்- 2 பெப்ரவரி 10ஆம் திகதி நடந்த உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர், கொழும்பு அரசியல் இரண்டாவது அரசியல் குழப்பத்தை தாண்டியிருக்கிறது. இந்த இரண்டு குழப்பங்களுமே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அதிகாரத்தில் இருந்து அகற்றும் நோக்கம் கொண்டவை. இந்த இரண்டு குழப்பங்களினதும் மூலம், ஒரே இடத்தில் இருந்து தான் ஆரம்பிக்கப்பட்டது. ஒரே இடத்தில் இருந்து தான் இது இயக்கப்பட்டது. ஆனால், இந்த இரண்டு ஒப்பரேசன்களுமே தோல்வியில் முடிந்திருக்கின்றன. உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, ஆட்சியைக் கைப்பற்றும் தீவிர முனைப…
-
- 0 replies
- 486 views
-
-
தோல்வியுற்ற அரசாகுமா? - கே.சஞ்சயன் காலிமுகத்திடலில் கூட்டு எதிரணியினர் நடத்திய மேதினப் பேரணியில் திரண்டிருந்த மக்கள் கூட்டம், அரசியல் மட்டத்தில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் எழுச்சி கொள்கிறாரா? அரசியல் ரீதியாகப் பலம் பெற்று வருகிறாரா என்ற கேள்விகள், எல்லா மட்டங்களிலும் எழுந்திருக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பலம் பெறுவதானது, வெறுமனே ஆட்சி மாற்றம் ஒன்றுக்கான அச்சுறுத்தலாக மாத்திரமன்றி, தற்போதைய அரசியல் சீர்திருத்த முயற்சிகளுக்கும் கூட ஆபத்தானது என்ற பார்வை பரவலாக இருக்கின்றது. மஹிந்த ராஜபக்ஷவின் மேதினக் கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையான மக்கள் அணிதிரண்டமையா…
-
- 2 replies
- 664 views
-
-
தோல்வியை நோக்கிய பயணத்தில் தாமரை மொட்டுத் தரப்பு!! தோல்வியை நோக்கிய பயணத்தில் தாமரை மொட்டுத் தரப்பு!! நிறைவேற்று அரச தலைவர் நடைமுறையை ஒழிப்பதற்காக அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்ற, அதனை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கும் பொறுப்பை ஜே. வி. பியின் தலைவர் அனுரகுமார திஸநாயக பொறுப்பேற்றுள்ளார். குறித்த பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற ப் பட்டதும் தற்போதைய நாடாளுமன்றத்தை உ…
-
- 0 replies
- 473 views
-
-
தோல்வியை நோக்கிய பயணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் நடத்தி வந்த பேச்சுக்கள் முடங்கிப் போயுள்ள நிலையில், தெரிவுக்குழுவுக்குள் கூட்டமைப்பை இழுப்பதற்கான அரசதரப்பு நகர்வுகளும் தோல்வியில் முடிந்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்குள் வந்தால் தான் இனிமேல் அவர்களுடன் பேச்சுக்களை நடத்த முடியும் என்று அரசாங்கம் கூறியுள்ள நிலையில் அடுத்த கட்டப்பேச்சுகள் எப்போது என்று யாருமே கேள்வி கேட்பதும் இல்லை. பதில் கொடுப்பதும் இல்லை. இந்தக் கட்டத்தில் கடந்த வாரம் ஐதேகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்தியிருக்கிறது. இதன்போது கூட்டமைப்பு அங்கம் வகிக்காத தெரிவுக்குழுவில் தாம் அங்கம் வகிக்கப் போவதில்லை என்று ஐதேக கூறியுள்ளது. அ…
-
- 0 replies
- 477 views
-
-
நசுக்கப்படும் மனித உரிமை : சட்டங்களை கடந்து போராட தமிழ் தலைமைகள் தயாரா.? ஒரு இனத்தின் மீது இன்னொரு ஆதிக்க இனம் ஒடுக்கு முறையை மேற்கொள்ளுகின்ற போது சட்டங்கள் மேலாதிக்கம் கொண்டவர்களின் அதிகாரமாகவே துலங்குகிறது. இது இலங்கையில் மாத்திரமல்ல, இலங்கை போன்ற இன மேலாதிக்க நாடுகள் பலவற்றிலும் இருக்கின்ற நடைமுறை. ஆனாலும் தேச விடுதலை, சமூக விடுதலை என சிந்திக்கும் மக்கள் தரப்பினரும் அவர்களின் ஆளுமை மிக்க தலைவர்களும் அதனைக் கடந்து ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். உண்மையிலே சட்டங்களுக்காக மக்கள் இல்லை. மக்களுக்காகவே சட்டங்கள் இயற்றப்பட்டன. இந்த எண்ணப்பாங்கில்தான் நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்கள் கூட உருவாக்கப்பட்டன. மக்களிடம் அதிகாரம் இருக்கவும் அவர்கள் அதனை பாதுகாக்கும…
-
- 0 replies
- 1.2k views
-
-
நச்சு அரசியல் கலாசாரத்தின் எழுச்சி உலகளாவிய ஊடகப் பரப்பை, அண்மைக்காலத்தில் அவதானித்து வந்தவர்களுக்கு, “கடும்போக்கு வலதுசாரி அரசியலின் எழுச்சி” என்பது, அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட சொற்றொடராக இருக்குமென்பது தெரிந்திருக்கும். ஐக்கிய அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் தொடக்கம், ஐக்கிய இராச்சியத்தில் பிரெக்சிற் (ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுதல்), பிரான்ஸிலும் ஜேர்மனியிலும் இன்னோரன்ன ஐரோப்பிய நாடுகளிலும் கடும்போக்கு வலதுசாரிகளின் எழுச்சி, இந்தியாவின் நரேந்திர மோடியின் கட்சிக்கு அதிகரித்துவரும் செல்வாக்கு என, கடும்போக்கு வலதுசாரி அரசியலின் செல்வாக்கு அதிகரிப்புக்கான உதாரணங்கள், தாராளமாக இருக்கின்றன. …
-
- 0 replies
- 427 views
-
-
நடக்கப்போவது என்ன தேர்தல்? எம்.எஸ்.எம். ஐயூப் நாட்டில் முதலில் நடக்கப்போவது ஜனாதிபதித் தேர்தலா பொதுத்தேர்தலா என கயிறுழுப்பு ஒரு புறம் நடந்து கொண்டிருக்க மறுபுறத்தால் மீண்டும் நாட்டிலும் ஆட்சியிலும் ராஜபக்ஷ குடும்பத்தின் அதிகாரத்தை நிலை நாட்டுவதற்கான திரை மறைவு வேலைகள் தீவிரம் பெற்று வருகின்றன. மொட்டை மீண்டும் மலர வைத்து ராஜபக்ஷ குடும்பத்தை மீண்டும் ஆட்சி பீடமேற்ற தற்போது மீண்டும் நாடு திரும்பியுள்ளார் 7 மூளைக்காரரான பசில் ராஜபக்ஷ. தேர்தல் மேகங்கள் கருக்கட்டியுள்ள நிலையில், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பியுள்ளதால், தங்களின் ஆட்சியை மீள உருவாக்க முடியும், அதிகாரங்களை மீளப்பெற முடியும் என்று பொதுஜன பெரமுனவில் …
-
- 0 replies
- 250 views
-
-
நடந்து முடிந்த மூன்று கூட்டங்களைப் பற்றி ஆதரவாகவும் எதிராகவும் இங்கு பலர் களமாடியிருந்ததைத் காணக்கூடியதாக இருந்தது. இதை மிகவும் ஆழமாக அழகாக ஊடகவியலாளரும் விரிவுரையாளரும் ஆகிய நிக்ஸன் அமிர்தநாயகம் உரையாடுகிறார்.
-
- 0 replies
- 637 views
- 1 follower
-
-
நடந்தது என்ன? திடீர் மாற்ற அரசியலில் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் என்ன?
-
- 0 replies
- 466 views
-
-
-
- 0 replies
- 608 views
-
-
நடுக்கடலில் நாதியற்று ஒரு இனம் – எஸ்.ஜே.பிரசாத் (சிறப்பு கட்டுரை) 2015 ரோஹிங்யா இனம் அழிக்கப்படுகிறதா மியன்மாரில். குழந்தை பாலுக்கு அழலாம், பால் கொடுக்க தாய் அழலாமா? அழுதுகொண்டுதான் இருக்கிறார்கள் ரோஹிங்யாக்கள்… என்னசெய்வதென்று தெரியவில்லை அவர்களுக்கு. படகில் ஏறினார்கள்… துடுப்பை போட்டார்கள் ஆனால் எங்கு போவது… தெரியாது! ஒரு இனம்… நடுக்கடலில் நாதியற்று தத்தளித்துக்கொண்டிருக்கிறது. யாரும் அவர்களை கவனிப்பதாக இல்லை… அவர்களை ரோஹிங்யாக்கள் என்கிறார்கள். ஆம்… மியன்மாரில் ஒரு இனத்துக்கு எதிரான கலவரம் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்தக் கூட்டம் படகுகள் ஏறி புறப்பட்டது… ஆனால் எங்கு போவதென்று அவர்களுக்கு தெரியாது. எங்கேயாவது போவோம் தப்ப…
-
- 3 replies
- 1.4k views
-
-
நடுத்தர வயதினரின் அரசியல்? - நிலாந்தன் அண்மையில் மருத்துவ நிபுணரான ஒரு நண்பர் கேட்டார்“என்னுடைய பிள்ளை தான் ஏன் வெளிநாடு போகக்கூடாது என்று கேட்டால், அந்தப் பிள்ளைக்கு நீ ஏன் நாட்டிலேயே இருக்க வேண்டும் என்று நான் கூறுவதற்கு பொருத்தமான காரணம் ஏதும் உண்டா?” என்று. இந்தக் கேள்வி யாழ்ப்பாணத்தின் படித்த நடுத்தரவர்க்கப் பெற்றோர் பலர் மத்தியில் உண்டு. இக்கேள்விக்குப் பொருத்தமான விடை எத்தனை தமிழ் அரசியல்வாதிகளிடம் உண்டு? பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஒரு புலப்பெயர்ச்சி அலை ஓடிக்கொண்டிருக்கிறது. சிங்கள மக்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் ஆயிரக்கணக்கானவர்கள் புலம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். அண்மையில் மே 18ஐ முன்னிட்டு “தமிழ் ம…
-
- 1 reply
- 390 views
-
-
நடுவுக்கு நகருமா நடுவப் பணிமனை? இலங்கையில் இனங்களுக்கு இடையிலான நெருக்கடி நிலை, பலதசாப்தங்கள் கழிந்தும், தொடர்ச்சியாக அதே கொதிநிலையில் உள்ளது. ஆட்சியாளர்களும் கடந்த கால வரலாற்றை படிப்பினையாகக் கொண்டு, எதிர்கால சந்ததியினருக்காகச் சிறந்த தேசத்தை உருவாக்க, நிகழ்காலத்தில் விருப்பமின்றியே உள்ளனர், என்பதையே நடப்பு நிகழ்வுகள் எடுத்து உரைக்கின்றன. இனப்பிரச்சினைக்குப் பல்வேறு காலங்களிலும் பல தரப்பாலும் பல தீர்வுத் திட்டங்கள் முன் மொழியப்பட்ட போதும், அவை அனைத்தும் தோல்வியைத் தழுவியதே நாம் அனைவரும் கடந்து வந்த கசப்பான வரலாறு ஆகும். இவ்வாறு இருந்த போதிலும், 1987 ஆம் ஆண்டு, இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலம், ஈழத்தமிழர்களின் ஒட்டு மொத்தமான சம்மதம…
-
- 0 replies
- 293 views
-
-
நடைமுறை அரசுகள் பண்டாரவன்னியன் ஆட்சிக்காலத்திற்குப்பிறகு கிட்டத்தட்ட நானூறு வருடங்களுக்குப்பிறகு வன்னிநிலப்பரப்பானது தமிழர்களின் ஆளுகைக்குள் கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களுக்கும்மேலாக தொடர்ந்து இருந்துவருகின்றது. ஆனாலும் வன்னியை ஒரு நாடாக தமிழர்கள் கூட கூறுவது குறைவாகவேயுள்ளது. இது ஏன்? நானூறுவருடங்களுக்குள் உலக நடைமுறையும் மிகப் பெரும் மாற்றங்களைக்கண்டுள்ளதுவே இதற்கான காரணமாகும். அதாவது இன்றைய உலகஒழுங்கில் ஒருநாடு நாடாகக்கொள்ளப்படுவதற்கு அது மற்றைய நாடுகளினால் அங்கீகரிக்கப்படுவது அவசியமாகிறது. தமிழீழத்தைப்போன்ற மேலும் பல நாடுகள் அல்லது தேசிய இனங்கள் அன்னிய ஆக்கிரமிப்பால் சிதைவடைந்து மீண்டும் ஒரு நாடாக முயன்றபோதும் உலகநாடுகளின் ஆதரவு அல்லது அங்கீகாரம் இல்லா…
-
- 3 replies
- 2.7k views
-
-
நடைமுறையில் உயிர்ப்பிக்கப்படாத எந்தவொரு கொள்கையும் சாத்தானுக்கு சேவகம் செய்வதாகவே முடியும். மூத்த அரசியல் ஆய்வாளர் திரு. மு. திருநாவுக்கரசு அவர்கள்
-
- 0 replies
- 272 views
-
-
[size=5]நந்தி விலகிவிட்டது நந்தனுக்கு தரிசனம் வாய்க்குமா?[/size] [size=4]குடியரசுத் தலைவர் தேர்தலைப் பொறுத்தவரை காங்கிரஸுக்கு என்று ஒரு பண்பாடும் உண்டு. அது, "ரப்பர் ஸ்டாம்ப்' தலைவர்களைக் குடியரசுத் தலைவர் ஆக்குவது என்பதுதான். ஆனால், அதையும் மீறி 2 முறை "எதிர்ப்புக் குரல்' மிக்க தலைவர்களைக் காங்கிரஸ் நிறுத்தியிருக்கிறது. 1969இல் நீலம் சஞ்சீவ ரெட்டி நிறுத்தப்பட்டார் என்றால், இப்போது பிரணாப் முகர்ஜியும் தனக்கென சில கருத்துகளை உடைய குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் என்று சொல்லலாம். 1969இல் ஜாகிர் உசேன் மறைவினைத் தொடர்ந்து, நீலம் சஞ்சீவ ரெட்டியை வேட்பாளராக நிறுத்தியது காங்கிரஸ். அவர் "சொன்ன பேச்சைக் கேட்கமாட்டார்'' என்பதை உணர்ந்த இந்திரா காந்தி, அவரை எதிர்த…
-
- 0 replies
- 2.2k views
-